விடுமுறைக்குப் பின் 05-06-2026
இ بسم الله الرحمن الرحيم விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பம்- மாணவர்களுக்கு சில அறிவுரைகள் பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் முடிந்து ஸ்கூல் துவங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு சில அறிவுரைகள் கூறுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். 1. பள்ளிப் படிப்பும் அவசியம். எனினும் அதை விட அவசியம் மதரஸா படிப்பு. அதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். 2. அதுபோல் என்ன தான் ஸ்கூலில் அதிகமான home work தந்திருந்தாலும் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதை மறந்து விடக்கூடாது. 3. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மாணவர்களுக்கு பெரும்பாலும் ஜும்ஆ கிடைப்பதில்லை. சம்பந்தப் பட்ட பெற்றோர் ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசி குறைந்த பட்சம் ஸ்கூலில் ஜும்ஆ தொழ ஏற்பாடு செய்ய வேண்டும். 4. ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மக்தப் மதரஸாவுடன் இணைந்து சிறந்த ஆசிரியர் மூலமாக ஸ்கூல் டியூஷன் ஏற்பாடு செய்தால் டியூஷனை காரணம் காட்டி பிள்ளைகள் தொழுகையை விடுவதையும் மதரஸாவுக்கு வராமல் இருப்பதையும் சீர் செய்ய முடியும். 5.வசதியுள்ளவர்கள் நிறைந்த மஹல்லாக்களில் மஸ்ஜிதுடன் இணைந்...