ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)



Thursday, November 27, 2025
சிறந்தவர்களில் சிறந்தவர் சித்தீகுல் அக்பர் (ரலி)
 


இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலத்தை அலங்கரிக்கும் நபர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள். உலகில் தோன்றிய மானுடர்களில் நபி முகம்மது (ஸல்) அவர்களுக்கு அடுத்தபடியாக சிறந்தவராகத் திகழ்ந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் வசனங்களிலும், சஹாபாக்களின் வாக்குமூலங்களிலும், உலமாக்களின் நூல்களிலும் அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறப்பு தெளிவாகத் தோன்றுகிறது. 

ஈமானில் உறுதியும், தியாகத்தில் உன்னதமும், தாழ்மையில் உச்சமும், உண்மையில் உறுதியும் என அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டவர்கள் அபூபக்கர் (ரலி). இஸ்லாமின் ஆரம்பகாலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக நின்ற முதல் நபர்களில் ஒருவராகவும், அவரையடுத்த கலீபாவாகவும், இஸ்லாமிய உலகை நிலைநிறுத்திய தலைவராகவும் மதிக்கப்படுகிறார்.
அவரின் ஒவ்வொரு செயலிலும் உண்மையுடனும் ஈகையுடனும் நிரம்பிய அன்பையும் தாழ்மையையும் காணலாம். அவர் பெற்ற சிறப்பு, பதவி, புகழ் ஆகியவை அவருடைய ஐயமற்ற உண்மைத்தன்மை, அல்லாஹ் மீதான ஆழ்ந்த நம்பிக்கை, நபி (ஸல்) அவர்களுக்கான அளவிட முடியாத அன்பு ஆகியவற்றின் பலனாகும்.
அவர்களின் மறைவு தினம் பற்றி வரலாற்று ஆசிரியர்களிடத்தில் பல கருத்துகள் இருந்தாலும் ஜமாதில் ஆகிர் மாதம் என்பதில் மாற்று கருத்தில்லை. எனினும் பிறை 13 என்று பல வரலாறுகளில் காண்கிறோம். எனவே இவ்வார ஜும்ஆவில் உலக முஸ்லிம் சமூகத்தால் எப்போதும் சிறந்தவராக மதிக்கப்படுகின்ற அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் சுருக்கமாகப் பார்ப்போம்.


பிறப்பும் வளர்ப்பும்
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரண்டரை வருடத்திற்கு பிறகு கி பி 573 ல் மக்காவில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்கள்.

அபூபக்கர் என்பது அவர்களின் காரணப் பெயராகும். அவரது இயற் பெயர் அப்துல்லாஹ் பின் அபீகுஹாபா உஸ்மான் என்பதாகும்.

அபூபக்கர் ரலி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதலாமவர் என்றாலும் அவரது தந்தை அபூகுஹாபா இஸ்லாமை ஏற்றுக் கொள்ள 21 வருடம் பிடிந்தது, மக்கா வெற்றியின் போதுதான் அபூகுஹாபா இஸ்லாமை தழுவினார். அபூ குஹாபா நீண்ட காலம் வாழ்ந்தார். அபூபக்கர் ரலி அவர்கள் வபாத்தான பிறகு அவரது சொத்துக்களுக்கும் வாரிசானார். ஆனால் அந்த சொத்துக்களை குடும்பத்தினருக்கு கொடுத்து விட்டார். 97 வது வயதில் அவர் வபாத்தானார்.

அபூகுஹாபா முஸ்லிமாக ஆனதன் மூலம் தந்தை மகன் பேரர் என மூன்று தலைமுறையிலும் நபித்தோழமையை பெற்ற ஒரே சஹாபியாக அபூபக்கர் ரலி திகழ்கிறார்கள். அபூபக்கர் ரலி அவர்களின் பேரர் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்களும் நபித்தோழரே.

· அபூகுஹாபா (ரலி
· அபூபக்கர் (ரலி)
· அப்துர் ரஹ்மான் பின் அபீபக்கர் (ரலி
· அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி
அனைவரும் சஹாபாக்கள்.

என்னே அருமையான இஸ்லாமிய தலை முறை ? 

மக்காவின் சிறப்பான குடும்பத்தில் அபூபக்கர் ரலி வளர்ந்தார்கள் , தனது பன்பான நடவடிக்கையினால் அனைவரிடமும் மரியாதையும் அன்பும் பெற்றவராக இருந்தார்கள்.


முதல் ஹஜ்ஜின் தலைவர்

அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமை திறன் அறிந்தே ஹிஜ்ரி 9 ம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப்பட்ட போது அந்த ஹஜ்ஜை அபூபக்க ர் ரலி அவர்களின் தலைமையில் நிறைவேற்ற பெருமானார் (ஸல்) தோழர்களை அனுப்பி வைத்தார்கள்.

பெருமானார் (ஸ்ல) அவர்களின் மரணத்தில் வெளிப்பட்ட அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமை
இன்றளவும் உலகம் வியந்து நிற்கிற ஆளுமை திறன் அது. ஒரு சமூதாயத்தை சிதறுண்டு போகாமல் காத்த அதிசயம் அது. ஒரு சமயத்தை சலனப்பட விடாமல் பாதுகாத்த அற்புதம் அது.

தனது ஈமானில் ஒரு போதும் சலனப்படாத அந்த மகா ஆளுமை ஒரு கண நேரத்தில் சமுதாயத்தின் சலனத்தை போக்கிய விதம் மகா ஆச்சரியமானது.

உலகின் மகத்தான மனிதர்களின் من اعظم رجال العالم ) ( வரிசையில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை சேர்க்கிற ஆய்வாளர்கள் குறீப்பிடுகிற முதல் காரணம் இது.

பெருமானாரின் மரணத்தை சமூகத்திற்கு சரியாக புரிய வைத்ததார் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்
அந்த கால கட்டத்தில் அபூபக்கர் ரலி அவர்கள் பேசிய வார்த்தை ஆய்வாளர்கள் பொன்னெழுத்துக்களாக் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என விவரிக்கிறார்கள். எவ்வளவு நிதர்சனமான உண்மை இது. .


உலக பற்றற்றவர்
في روض الأفكار قال في فردوس العارفين قال علي لأبي بكر بم بلغت هذه المنزلة حتى سبقتنا قال بخمسة أشياء أولها وجدت الناس صنفين طالب الدنيا وطالب الآخرة فكنت أنا طالب للمولى الثاني ما شبعت من طعام الدنيا منذ دخلت في الإسلام لأن لذة المعرفة شغلتني عن لذة الدنيا الثالث ما رويت من شراب الدنيا منذ دخلت في الإسلام لأن محبة الله شغلتني عن لذيذ شراب الدنيا الرابع كلما استقبلني عملان عمل الدنيا وعمل للآخرة اخترت عمل الآخرة الخامس صحبت النبي فأحسنت صحبته..(نزهة المجالس 2/143)

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் எங்களை விட எல்லா விதத்திலும் நீங்கள் முந்தியது எதனால்..? என்று கேட்ட பொழுது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: படைப்பினங்களை இரண்டு பிரிவினர்களாக நான் பார்த்தேன். உலகத்தை தேடக்கூடியவர்களாகவும் மறுமையை தேட கூடியவர்களாகவும். நான் அல்லாஹ்வை தேடக்கூடியவராக ஆனேன், நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து அல்லாஹ்வை அறிவதின் சுவையில் நான் ஈடுபட்ட காரணத்தினால் உலகத்து உணவின் சுவையை நான் அறிந்ததில்லை. அல்லாஹ்வுடைய பிரியத்தை கொண்டு நான் தாகம் தீர்ந்ததின் காரணத்தினால், உலகத்தின் குடி பானங்களின் கொண்டு நான் தாகம் தீர்ந்ததில்லை. உலகம் சார்ந்த காரியம் மறுமை சார்ந்த காரியம் இரண்டும் எனக்கு முன்னால் வந்தால் மறுமையை சார்ந்த காரியத்தை நான் தேர்வு செய்வேன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் தோழமையில் இருந்தேன். அதை மிக அழகாகிக் கொண்டேன்.. (நுஜ்ஹத்துளல் மஜாலிஸ்,ரவ்லுல் அஃப்கார்)

அண்ணலாரின் மீது அதீத அக்கறை

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ عَازِبٍ سَرْجًا بِثَلاثَةَ عَشَرَ دِرْهَمًا. قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ: مُرِ الْبَرَاءَ فَلْيَحْمِلْهُ إِلَى مَنْزِلِي، فَقَالَ: لَا، حَتَّى تُحَدِّثَنَا كَيْفَ صَنَعْتَ حِينَ خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنْتَ مَعَهُ؟ 

قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: خَرَجْنَا فَأَدْلَجْنَا، فَأَحْثَثْنَا يَوْمَنَا وَلَيْلَتَنَا، حَتَّى أَظْهَرْنَا، وَقَامَ قَائِمُ الظَّهِيرَةِ، فَضَرَبْتُ بِبَصَرِي: هَلْ أَرَى ظِلًّا نَأْوِي إِلَيْهِ؟ فَإِذَا أَنَا بِصَخْرَةٍ، فَأَهْوَيْتُ إِلَيْهَا فَإِذَا بَقِيَّةُ ظِلِّهَا، فَسَوَّيْتُهُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفَرَشْتُ لَهُ فَرْوَةً، وَقُلْتُ: اضْطَجِعْ يَا رَسُولَ اللهِ، فَاضْطَجَعَ، ثُمَّ خَرَجْتُ أَنْظُرُ: هَلْ أَرَى أَحَدًا مِنَ الطَّلَبِ؟ فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ، فَقُلْتُ: لِمَنْ أَنْتَ يَا غُلامُ؟ فَقَالَ: لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ. فَسَمَّاهُ فَعَرَفْتُهُ، فَقُلْتُ: هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ؟ قَالَ: نَعَمْ. قَالَ: قُلْتُ: هَلْ أَنْتَ حَالِبٌ لِي؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْهَا، ثُمَّ أَمَرْتُهُ فَنَفَضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ فَنَفَضَ كَفَّيْهِ مِنَ الْغُبَارِ، وَمَعِي إِدَاوَةٌ عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَحَلَبَ لِي كُثْبَةً مِنَ اللَّبَنِ، فَصَبَبْتُ (١) عَلَى الْقَدَحِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَافَيْتُهُ وَقَدِ اسْتَيْقَظَ، فَقُلْتُ: اشْرَبْ يَا رَسُولَ اللهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ، ثُمَّ قُلْتُ: هَلْ أَنَى الرَّحِيلُ (١) . 

قَالَ: فَارْتَحَلْنَا، وَالْقَوْمُ يَطْلُبُونَا، فَلَمْ يُدْرِكْنَا أَحَدٌ مِنْهُمْ إِلَّا سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ عَلَى فَرَسٍ لَهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا. فَقَالَ: " لَا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا " حَتَّى إِذَا دَنَا مِنَّا فَكَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قَدْرُ رُمْحٍ أَوْ رُمْحَيْنِ أَوْ ثَلاثَةٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا. وَبَكَيْتُ، قَالَ: " لِمَ تَبْكِي؟ " قَالَ: قُلْتُ: أَمَا وَاللهِ مَا عَلَى نَفْسِي أَبْكِي، وَلَكِنْ أَبْكِي عَلَيْكَ...(مسند أحمد )

ஆஜிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு விளக்கை 13 திர்ஹத்திற்கு விலைக்கு வாங்கினார்கள்.. "உங்களுடைய மகனார் பர்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இதை என்னுடைய வீட்டிற்கு கொண்டு வரச் சொல்லுங்கள்" என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு சொன்ன பொழுது, ஆஜிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "நீங்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஹிஜ்ரத்துடைய பயணத்தில் நடந்த நிகழ்வுகளை எங்களுக்கு அறிவிக்கின்ற வரையிலும் நான் அந்த விளக்கை உங்கள் வீட்டிற்கு எடுத்து வர மாட்டேன்" என்று உரிமையுடன் கூறினார்கள்.. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அந்த ஹிஜ்ரத்துடைய சம்பவத்தை விளக்கினார்கள்." ஓர் இடத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. ஒரு ஆடு மேய்ப்பரிடத்தில் நான் ஆட்டுப்பாலை வாங்கி அதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் குடித்தார்கள். நிரம்ப குடித்தார்கள். நான் போதுமாக்கிக் கொள்கின்ற அளவுக்கு.. மீண்டும் பயணம் தொடர்ந்தது. ஸுராக்கா என்ற நபர் எதிரிகளின் சார்பாக எங்களை பிடிக்க வந்தவர் எங்களை நெருங்கி வந்துவிட்டார். நான் அழுதேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். " ஏன் அழுகின்றீர்கள்? அழ வேண்டாம்" என்று கூறினார்கள். நான் சொன்னேன் "யாரசூலுல்லாஹ்! நான் எனக்காக அழவில்லை. உங்களுக்காக அழுகின்றேன்.. (முஸ்னத் அஹ்மது,.)

إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا..

அந்த நேரத்தில் அந்த நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)த ன்னுடைய தோழருக்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறினார்கள்..

இந்த வசனத்தின் விரிவுரையில் இமாம்கள் கூறுகிறார்கள்.. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கவலைப்பட்டார்களே தவிர பயப்படவில்லை. ஒரு மனிதன் தன் உயிர் போய் விடுமோ என்ற நிலையில் பயப்படுவான்.. தன்னுடைய நேசர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்ற நிலையில் கவலைப்படுவான்.. நமது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்காக பயப்படவில்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து தான் கவலைப்பட்டார்கள் என்று இமாம்கள் கூறுவார்கள்..

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரத்துடைய நாட்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருந்த அந்த அமலினுடைய நன்மையை மட்டும் எனக்கு தந்தால் போதும். நானும் என்னுடைய குடும்பத்தார்களும் வாழ்நாள் முழுக்க செய்த எல்லா நல் அமல்களின் நன்மைகளையும் நான் கொடுத்து விடுவேன்.. (ரஸீன்)

பூமான் நபிக்கு கட்டுப்படுவதில்..

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاتِي. قَالَ: " قُلِ: اللهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ..(مسند أحمد )

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் "எனக்கு ஒரு துஆவை சொல்லித் தாருங்கள்! அதை நான் தொழுகையில் ஓதுகிறேன்" என்று கேட்ட பொழுது.. யா அல்லாஹ் நான் அதிகமான பாவங்கள் செய்து விட்டேன்..பாவங்களை மன்னிப்பவன் உன்னை தவிர யாரும் இல்லை.. என்னை மன்னிப்பாயாக உன்னுடைய ரஹ்மத்தை எனக்கு தருவாயாக.. என்ற கருத்தில் ஒரு பிரார்த்தனையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.. (முஸ்னத் அஹ்மது)

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்திற்கு முன்பும் கூட ஒரு நேரமும் சிலை வணங்கியது இல்லை.. ஒரு நேரமும் மது அருந்தியது இல்லை.. மது அது அறிவை மங்கச் செய்துவிடும் என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் முதல் முதலில் மக்களுக்கு விளக்கம் கொடுத்தார்கள். அதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அங்கீகரித்தார்கள்.. அந்த அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி ஒரு துஆவை கற்றுக்க் கொடுத்த பொழுதும் கூட அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமல் செய்தவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்... இந்த நிகழ்வில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் என்ற நிலையை உணர்த்திக் காட்டுகிறார்கள்..

وَقَالَ: لَسْتُ تَارِكًا شَيْئًا كَانَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ بِهِ إِلَّا عَمِلْتُ بِهِ، إِنِّي أَخْشَى إِنْ تَرَكْتُ شَيْئًا مِنْ أَمْرِهِ أَنْ أَزِيغَ...(مسند أحمد )

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்"நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எந்த ஒரு காரியத்தையும் நான் செய்யாமல் இருந்தால் நான் மதம் மாறி போவதை பயப்படுகின்றேன்..(முஸ்னத் அஹ்மது)

அளவு கடந்த அன்பு

عَنْ أَوْسَطَ بْنِ عَمْرٍو، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَنَةٍ، فَأَلْفَيْتُ أَبَا بَكْرٍ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْأَوَّلِ، فَخَنَقَتْهُ الْعَبْرَةُ ثَلاثَ مِرَارٍ، ث..(مسند أحمد )

அவ்ஸத் இப்னு அம்ர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து ஒரு வருடம் கழித்து நான் மதீனாவிற்கு வந்தேன்..அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.. மக்களுக்கு நம்பரில் நின்று உபதேசம் செய்கின்றார்கள்.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயரை சொல்கின்ற பொழுது மூன்று முறை அழுகையினால் அவர்களடைய தொண்டை இறுகிக் கொண்டது.. (முஸ்னத அஹ்மது)

فعن عائشة رضي الله عنها قالت:«أنفق أبو بكر رضي الله عنه على رسول الله أربعين ألفاً»[4].

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக 40,000 தங்க காசுகளை செலவு செய்தார்கள்..

فقال: «إن أَمَنَّ الناس عليَّ في صحبته وماله أبو بكر، ولو كنت متخذاً خليلاً لاتخذت أبا بكر خليلاً..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் தன்னுடைய பொருளாலும், தன்னுடைய தோழமை யாரும் எனக்கு மக்களில் பேருபகாரம் செய்தவர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான்.. நான் உலகத்தில் யாரையாவது தோழராக எடுப்பதற்கு அல்லாஹ் எனக்கு அனுமதி தந்தான் என்று சொன்னால் நான் அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் தான் நண்பராக எடுத்துக் கொள்வேன்..(புகாரி)

خَطَبَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَقالَ: إنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بيْنَ الدُّنْيَا وبيْنَ ما عِنْدَهُ فَاخْتَارَ ما عِنْدَ اللَّهِ، فَبَكَى أبو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عنْه، فَقُلتُ في نَفْسِي ما يُبْكِي هذا الشَّيْخَ؟ إنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بيْنَ الدُّنْيَا وبيْنَ ما عِنْدَهُ، فَاخْتَارَ ما عِنْدَ اللَّهِ، فَكانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ هو العَبْدَ، وكانَ أبو بَكْرٍ أعْلَمَنَا..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமயம் உங்களுக்கு மத்தியில் "அல்லாஹ் ஒரு அடியாருக்கு உலகத்தை தேர்வு செய்கின்றீர்களா? அல்லது என்னிடத்தில் வருகின்றீர்களா? என்று விருப்பம் தெரிவிக்க சொன்னான். அந்த அடியார் அல்லாஹ்விடம் சொல்வதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டார்" என்று கூறினார்கள்.. இதைக் கேட்டதும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகம் அழுதுவிட்டார்கள்.. நபித்தோழர்கள் அதற்கான விளக்கத்தை கேட்ட பொழுது, அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் "அந்த அடியார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்..". சஹாபிகள் கூறினார்கள் "எங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் பிரியமானவர், அவர்களை மிகவும் விளங்கியவர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான்...(ஸஹீஹுல் புஹாரி)

அன்னாரின் மீது அல்லாஹ்வின் அன்பு 

عن ابن عباس قال. كان أبو بكر مع النبي صلى الله عليه وسلم في الغار فعطش عطشا شديدا فشكا إلى النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم: إذهب إلى صدر الغار فاشرب. قال أبو بكر:

فانطلقت إلى صدر الغار فشربت ماء أحلى من العسل وأبيض من اللبن وأذكى رائحة من المسك ثم عدت إلى النبي صلى الله عليه وسلم فقال: شربت؟ قلت: نعم. قال: ألا أبشرك يا أبا بكر؟

قلت: بلى يا رسول الله! قال: إن الله تبارك وتعالى أمر الملك الموكل بأنهار الجنة أن اخرق نهرا من جنة الفردوس إلى صدر الغار ليشرب أبو بكر فقلت: يا رسول الله! ولي عند الله هذه المنزلة؟ فقال النبي صلى الله عليه وسلم: نعم وأفضل، والذي بعثني بالحق نبيا لا يدخل الجنة مبغضك ولو كان له عمل سبعين نبيا.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிரா குகையில் இருந்த பொழுது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "குகையின் நடுப்பகுதிக்கு செல்லுங்கள்" என்று சொன்னார்கள். அங்கே சென்று ஒரு நீரூற்று வந்தது. அதிலிருந்து அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் தேனை விடவும் இனிப்பான, பாலை விடவும் வெண்மையான ஒரு நீரை தாகம் தீர குடித்தார்கள்.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "இந்த நீர் சொர்க்கத்தில் இருந்து உங்களுக்காக அல்லாஹ் வரச் செய்ததாகும். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கேட்டார்கள் "அல்லாஹ்விடம் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து இருக்கிறதா..? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "என் உயிர் எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் மீது கோபப்படக்கூடிய ஒருவன் 70 நபிமார்களுடைய நல் அமல்கள் அவனுக்கு இருந்தாலும் அவன் சொர்க்கம் நுழைய மாட்டான்" என்று கூறினார்கள்... (ஃபஜ்ருல் முனீர், தஃப்ஸீர் ரூஹுல் பயான்)

மதீனத்து நயவஞ்சகர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது இட்டுக்கட்டியவர்களும் சில சஹாபிகள் அது பற்றி விபரம் தெரியாமல் அவர்களும் அவதூறு பேசினார்கள்..அதில் மிஸ்தஹ் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற சஹாபியும் ஒருவர்.. இவர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உறவுக்காரராகவும் இருந்தார்கள். பொருளாதார ரீதியாக மிகவும் கடை நிலையில் இருந்தவர்.. மாதம் மாதம் அவர்களுக்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பண உதவி செய்து வந்தார்கள்.. இந்த அவதூறு பேச்சை செவியேற்ற உடன் அந்த பண உதவியை நிறுத்தி விட்டார்கள்.. அப்போது இந்த வசனம் இறங்கியது

 ولا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنكُمْ وَالسَّعَةِ أَن يُؤْتُوا أُولِي الْقُرْبَىٰ وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ ۖ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ 

உங்களில் சிறப்பு உடையவர்கள், வசதியுடையவர்கள் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் நாடு துறந்து வந்தவர்களுக்கும் உதவி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்! அவர்களை மன்னித்து விடுங்கள்.. அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் பிரியப்பட மாட்டீர்களா?..(அல் குர்ஆன்)

இந்த வசனத்தில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்பு கட்டளை விதிக்கின்றான்..    

روي أن النبي صلى الله عليه وسلم دفع خاتمه إلى أبي بكر وقال: اكتب عليه: لا إله إلا الله، فدفعه أبو بكر إلى النقاش وقال: اكتب عليه: لا إله إلا الله، محمد رسول الله. فكتب عليه. فلما جاء به أبو بكر إلى النبي صلى الله عليه وسلم وجد عليه لا إله إلا الله محمد، رسول الله، أبو بكر الصديق. فقال: ما هذه الزيادة يا أبا بكر؟ فقال: ما رضيت أن أفرق اسمك عن اسم الله، وأما الباقي فما قلته فنزل جبريل وقال: إن الله سبحانه وتعالى يقول: إني كتبت اسم أبي بكر لأنه ما رضي أن يفرق اسمك عن اسمي، فأنا ما رضيت أن أفرق إسمه عن اسمك. نزهة المجالس للصفوري 2 ص 185..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மோதிரத்தை அபூபக்கர் அலி அல்லாஹ் அவர்களிடம் கொடுத்து, இதில் لا اله الا الله என்று பதித்து வாருங்கள்! என்று கூறினார்கள்.. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அதை எடுத்துச் சென்று ஆசாரியிடம் لا اله الا الله محمد رسول الله.. என்று பதித்து வந்தார்கள். அந்த மோதிரத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து கொடுத்தார்கள்.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள் என்ன இது..? அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் "யா ரசூலுல்லாஹ்!.. உங்கள் பெயரை அல்லாஹ்வின் பெயரை விட்டும் பிரிப்பதற்கு என் மனம் நாடவில்லை. எனவே முஹம்மது ரசூலுல்லாஹ் என்பதையும் நான் சேர்த்துக் கொண்டேன்" என்று சொன்ன பொழுது... நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள் "நான் அதைக் கேட்கவில்லை. அதற்கும் அதிகமாக أبو بكر الصديق.. என்று ஏன் பதித்தீர்கள்..? என்று கேட்க, நான் அவ்வாறு செய்யவில்லை. அது எனக்கு தெரியாது" என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.. உடனே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, யாரசூலல்லாஹ்! அல்லாஹ்வின் பெயரிலிருந்து உங்கள் பெயரை பிரிப்பதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனம் வரவில்லை. உங்கள் பெயரிலிருந்து அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரை பிரிப்பதற்கு அல்லாஹ்வுக்கு மனம் வரவில்லை. இதை செய்தது அல்லாஹ்தான்" என்று சொன்னார்கள்..(நுஜ்ஹத்துளல் மஜாலிஸ், தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஸாவீ)

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்யும் போது, அவரின் ஒவ்வொரு அடியும் உண்மை, அன்பு, தியாகம், தாழ்மை, தலைமைத் திறன் என முஸ்லிமுக்குத் தேவையான முழுமையான குணங்களை பிரதிபலிப்பதை காணலாம். உலகம் புகழ்பெறும் தலைவர்கள் பலர் இருந்தாலும், நபி (ஸல்) அவர்களால் நேரடியாகப் பாராட்டப்பட்டும், “உம்மத்தில் சிறந்தவர்” எனப் போற்றப்பட்டும் நிலைத்த சிறப்பைப் பெற்றவர் அபூபக்கர் (ரலி) அவர்கள் மட்டுமே.

அவரின் சிறப்பு பதவியில் அல்ல; பண்பில். அதிகாரத்தில் அல்ல; அடக்கத்தில். செல்வத்தில் அல்ல; சேவையில். நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்தபடியாக அவருக்கு வழங்கப்பட்ட உயர்ந்த மரியாதை, அவருடைய அசைக்க முடியாத ஈமான் மற்றும் உண்மையான இதயத்தின் வெளிப்பாட்டாகும்.

இன்றைய முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டுமெனில், அபூபக்கர் (ரலி) அவர்கள் காட்டிய நேர்மை, தாழ்மை, உறுதி, ஒற்றுமை, அல்லாஹ் மீதான நம்பிக்கை ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அவரின் வாழ்க்கை ஒரு வரலாறு மட்டுமல்ல; நம்மை வழிநடத்தும் ஒரு ஒளி விளக்கு ஆகும்.

ஆகையால், அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறப்பை அறிதல் என்பது அவர்களின் கடந்த காலத்தைப் புகழ்வது மட்டுமல்ல, நம்முடைய ஈமானையும் வாழ்வையும் மேம்படுத்தும் ஒரு வழிகாட்டுதலாகவும் விளங்குகிறது. அல்லாஹ் அருள் புரிவானாக!
முஃப்தீ சல்மான் ஃபாரிஸ் பாகவி at November 27, 2025
Share
No comments:

Post a Comment

Home
View web version
எங்களைப் பற்றி ....
முஃப்தீ சல்மான் ஃபாரிஸ் பாகவி
முஹம்மது பஷீர் மஹ்ழரி
Powered by Blogger.

Popular posts from this blog

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அல்குர்ஆனை அரணாக்குவோம்!!! 30-08-2024.