நிம்மதியை பெற்றுத் தரும் நிதானம் 20-01-2023
நிம்மதியை பெற்றுத்தரும் நிதானம்!!!..
நம் வாழ்வு நபிமார்களைப்போல, வலிமார்களைபோல ஜொலிக்க வேண்டுமா? அவர்கள் பயன்படுத்திய; அவர்களை பக்குவப்படுத்திய நிதானம் எனும் நற்குணம் நம்மிடம் வர வேண்டும் அப்போதுதான் நம் வாழ்வு நிம்மதி பெறும்.
[உதாரணமாக قال الله تعالى] ! அல்லாஹ் [ﷻ] மூஸா (عَلَيْهِ السَّلاَمُ) அவர்களை பார்த்து கூறுகின்றான் “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். [20:43] فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى “நீங்கள் இருவரும் அவனிடம் (நிதானமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.[20:44]
அல்லாஹ் [ﷻ] நம் நபி ﷺ அவர்களை பார்த்து கூறுகின்றான்” فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ நபியே! அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் நிதானமில்லாமல் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; [3:159] ஆக நிதானத்தின் மூலம் தான் எல்லா நபிமார்களும் வென்றுள்ளார்கள். என்பது மேலுள்ள குர்ஆனின் வசனத்தின் மூலம் தெரிய வருகிறது. நாமும் நம் வாழ்க்கையில் வெல்ல வேண்டுமெனால் நிதானம் இல்லாமல் வெல்ல முடியுமா?
அன்புள்ளவர்களே! நம் வாழ்வு நிதானம் இல்லாமல் அவசரதோடு செய்தின் மூலம் நம் வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடுகிறது அவசரம் ஷைத்தானின் குணமாக இருக்கிறது. اَلعَجلَةُ مِنَ الشَّيطَان. ஷைத்தானின் குணம் நம்மிடம் இருந்தால் நாம் எப்படி இறைபொருத்தத்தை அடைய முடியும்?
♣ [நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم] ♣”.
[ நிதானம் ஓர் தலைசிறந்த நற்குணம் :-]
அன்புள்ளவர்களே! தானத்திலே சிறந்து நிதானம் என்று பழமொழி கூறுவார்கள்!
உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்; அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ முடியும். அல்லாஹ் தனது அடியார்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்.
நம்முடைய மார்க்கத்தில் ஒவ்வொரு அமலும் நிதானதை கற்றுத்தருகிறது. ஒரு மனிதர் ஒழுச் செய்யத் தெரியாமல் ஒழுச் செய்த பொழுது நாயகம் ஸல் அவர்கள் தாங்களின் பேரனை அழைத்து நிதானமாக ஒழுச் செய்யும் முறையை கற்றுக் கொடுத்தார்கள்..
ஒருமுறை பஹ்ரைனில் இருந்து இருபது, முப்பது ஒட்டகங்களில் பயணம் செய்து, மிகப் பெரிய குழு ஒன்று மதீனாவுக்கு வந்தது. அண்ணல் நபி [ஸல்] அவர்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பதே அந்தக் குழுவின் நோக்கம் . மதீனாவின் எல்லையை அடைந்ததுமே , ஒட்டகங்களை வேகமாகச் செல்லும்படி முடுக்கி விட்டார்கள். புழுதியை கிளப்பிக் கொண்டு அவை விரைந்தோடின . அண்ணல் நபிகளார் தங்கியிருக்கும் இடம் வந்ததும் திபுதிபுவென்று ஒட்டகங்களை இருந்து குதித்து அவரைக் காண நெருக்கியடித்துக் கொண்டு ஓடினர் . அவர்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து வந்திருந்ததால் , ஆடைகள் புழுதிபடிந்து , கசங்கி இருந்தன . தலைமுடி பரட்டையாகக் காட்சியளித்தது . அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அண்ணலாரின் திருமுகத்தை கண்டு மகிழ்ந்தனர் . அதே சமயம்- அந்தக் குழுவின் தலைவராக வந்த முன்ஜித் பின் ஆயித் என்பவர் கொஞ்சமும் அவசரப்படவில்லை. ஆரவாரம் செய்யவில்லை . அமைதியாக ஒட்டகங்களை கட்டிப் போட்டார். களைப்புடன் இருந்த அந்த வாயில்லாப் பிராணிகளுக்கு நீர் புகட்டினார் . அவற்றுக்குத் தேவையான தீவனங்களை இட்டார் .
பிறகு தாம் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் ஓரிடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்தார். குளித்து முடித்தார் .. இருப்பதில் நல்ல ஆடை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டார்,, நறுமணம் பூசினார்,, தலையை ஒழுங்காக வாரிக் கொண்டார். பிறகு நிதானமாகவும் , கண்ணியமாகவும் அண்ணல் நபிகளாரைச் சந்திக்க வந்தார். அண்ணல் நபிகளாருக்கு முன்ஜிரின் நிதானமும் , மிடுக்கும் மிகவும் பிடித்து விட்டன. அவரிடம் அண்ணலார் கூறினார் ,,- உங்களிடம் இரண்டு பண்பு நலன்கள் இருக்கின்றன. அவற்றை இறைவனும் விரும்புகிறான். முதலாவது பொறுமை, இரண்டாவது நிதானம் .”
عَنْ مُعَاذٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لِلْاَشَجِّ – اَشَجِّ عَبْدِ الْقَيْسِ -: اِنَّ فِيْكَ لَخَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللهُ: اَلْحِلْمُ وَاْلاَنَاةُ. رواه مسلم
அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர் பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது: (அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன 1. அறிவாற்றல் 2. நிதானம். முஸ்லிம் 25
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ ﷺ: اَوْصِنِيْ قَالَ: لاَ تَغْضَبْ، فَرَدَّدَ مِرَارًا، قَالَ: لاَ تَغْضَبْ. رواه البخاري
ஒருவர் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களிடம், எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்” என்று வேண்டினார், நீர் கோபப்படாதீர் [நிதானமாக இருப்பீராக]” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள், அம்மனிதர் மீண்டும் மீண்டும் அதே வேண்டுகோளை விடுத்தார், நபி ﷺ அவர்கள் ஒவ்வொரு முறையும் கோபப்படாதீர்” [நிதானமாக இருப்பீராக] என்றே பதில் சொன்னார்கள். (புகாரி)
ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், நிதானத்துடன் “அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். நூல்: புகாரி : 220
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், நிதானமாக எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.” நூல்: புகாரி : 6124
【 நபியின் வாழ்வு நிதானமானது 】
┈•••❈• ❀ ••❈•••┈
عَنْ اَنَسٍ ؓ قَالَ: خَدَمْتُ النَّبِيَّ ﷺ عَشْرَ سِنِيْنَ بِالْمَدِيْنَةِ وَاَنَا غُلاَمٌ لَيْسَ كُلُّ اَمْرِيْ كَمَا يَشْتَهِيْ صَاحِبِيْ اَنْ يَكُوْنَ عَلَيْهِ، مَاقَالَ لِيْ فِيْهَا اُفٍّ قَطُّ، وَمَا قَالَ لِيْ لِمَ فَعَلْتَ هذَا اَمْ اَلاَّ فَعَلْتَ هذَا. رواه ابوداؤد
நான் நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். நான் வயதில் சிறியவனாக இருந்ததால் என்னுடைய வேலையாவும் நபி ﷺ அவர்களின் விருப்பப்படி இருக்கவில்லை. சிறு வயதின் காரணமாக என்னால் பல தவறுகள் நிகழ்ந்துவிடும், (ஆனால் இந்தப் பத்து வருடக் காலத்தில்) நபி ﷺ அவர்கள் என்னை சீ” என்று கூடச் சொன்னதில்லை. இந்த வேலையை ஏன் செய்தாய்?” என்றோ, ஏன் இந்த வேலையைச் செய்யவில்லை?” என்றோ ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை” எப்போதும் என்னிடம் நிதானமாக நடந்து கொள்வார்கள் (அபூதாவூத்)
【 நிதானதை பயிற்சி தரும் இஸ்லாம்】
┈•••❈• ❀ ••❈•••┈
ஒரு மனிதர் ஒழுச் செய்யத் தெரியாமல் ஒழுச் செய்த பொழுது நாயகம் ﷺ அவர்கள் தங்களின் பேரனை அழைத்து நிதானமாக ஒழுச் செய்யும் முறையை கற்றுக் கொடுத்தார்கள்..
【 பேச்சில் நிதானம் வேண்டும்】
┈•••❈• ❀ ••❈•••┈
அன்புள்ளவர்களே! நம் பேச்சில் யேசித்து நிதானமாக பேச வேண்டும். அவசரப்பட்டு பேசி பின்னால் வருந்தக்கூடாது. அவசரப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டு பின்னால் யேசிக்ககூடாது.
عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثاً حَتَّي تُفْهَمَ. رواه البخاري (الحديث)
ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு சொல்லை விளங்கிக் கொள்வதற்காக நிதானமாக மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்” (புகாரி)
عَنْ عَمْرِو بْنِ الْعَاصِؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: لَقَدْ اُمِرْتُ اَنْ اَتَجَوَّزَ فِي الْقَوْلِ فَاِنَّ الْجَوَازَ هُوَ خَيْرٌ. رواه ابو داؤد
எனக்கு சுருக்கமாகப் பேசக் கட்டளையிடப்பட்டுள்ளது, ஏனேனில் சுருங்கப் பேசுவதே சிறந்தது” (அபூதாவூத்)
【நபி (ஸல்) அவர்களின் பேச்சு கற்றுத்தரும் நிதானம்】
عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ أَلاَ يُعْجِبُكَ أَبُو فُلاَنٍ جَاءَ فَجَلَسَ إِلَى جَانِبِ حُجْرَتِي يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، يُسْمِعُنِي ذَلِكَ وَكُنْتُ أُسَبِّحُ فَقَامَ قَبْلَ أَنْ أَقْضِيَ سُبْحَتِي، وَلَوْ أَدْرَكْتُهُ لَرَدَدْتُ عَلَيْهِ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ كَسَرْدِكُمْ.
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.) ஸஹீஹ் புகாரி 3567.
عَنْ عَائِشَةَ ؓ اَنَّ يَهُوْدَ اَتَوُا النَّبِيَّ ﷺ فَقَالُوْا: اَلسَّامُ عَلَيْكُمْ فَقَالَتْ عَائِشَةُ: عَلَيْكُمْ وَلَعَنَكُمُ اللهُ وَغَضِبَ اللهُ عَلَيْكُمْ، قَالَ: مَهْلاً يَاعَائِشَةُ! عَلَيْكِ بِالرِّفْقِ، وَاِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ، قَالَتْ: اَوَلَمْ تَسْمَعْ مَاقَالُوْا؟ قَالَ: اَوَلَمْ تَسْمَعِيْ مَاقُلْتُ؟ رَدَدْتُ عَلَيْهِمْ فَيُسْتَجَابُ لِيْ فِيْهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ.
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யூதர்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அஸ்ஸாமு அலைக்கும்” (உமக்கு மரணம் உண்டாகுக) என்று கூறினர். நான் அவர்களுக்கு பதில் தரும் வகையில், உங்களுக்கே மரணம் வரட்டும்!, மேலும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டாகட்டும்! என்று சொன்னேன். ஆயிஷாவே! பொறு! மென்மையைக் கடைப்பிடி! கடுமை, தகாத வார்த்தையைத் தவிர்த்துக்கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்கள் சொன்னதைத் தாங்கள் கேட்கவில்லையா?’ என நான் கேட்டேன், ”அவர்களுக்கு பதிலாக நான் என்ன சொன்னேன் என்று நீ கேட்கவில்லையா? (உங்கள் மீதே வரட்டும்) என்று அவர்களின் சொல்லை அவர்கள் மீதே திருப்பிவிட்டேன். அவர்கள் மீது நான் இட்ட சாபம் ஏற்றுக் கொள்ளப்பட்டது, அவர்கள் என் மீது இட்ட சாபம் ஒப்புக் கொள்ளப்படவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6024).
【 தொழுகை கற்றுத்தரும் நிதானம்】
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ وَقَالَ “” ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ “”. فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ “” ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ “” ثَلاَثًا. فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي. فَقَالَ “” إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا “”.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார். நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி 757
أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “” إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ عَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا “”.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.’ ஸஹீஹ் புகாரி 908
【 குர்ஆன் ஓதுதல் கற்றுத்தரும் நிதானம்】
وَقَالَ تَعَالي: (يَا أَيُّهَا الْمُزَّمِّلُ ۞ قُمِ الَّيْلَ إِلاَّ قَلِيلاً ۞ نِّصْفَهُ أَوِانْقُصْ مِنْهُ قَلِيلاً ۞ أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلاً ۞ إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلاً ثَقِيلاً ۞ إِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِيَ أَشَدُّ وَّطْاً وَأَقْوَمُ قِيلاً ۞ إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحاً طَوِيلاً۞). المزمل:٧-١
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் (தொழ) நிற்பீராக – சிறிது நேரம் தவிர – அதில் பாதி, அல்லது அ(ப்பா)தி(யி)லிருந்தும் சிறிது குறைத்துக் கொள்வீராக!, அல்லது அதைவிட (சற்று நேரத்தை) அதிகமாக்கிக் கொள்வீராக! (அதில்) குர்ஆனை (த் தெளிவாக) நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (அல்முஸ்ஸம்மில்: 1–7)
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يُقَالُ يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ اِقْرَأْ وَارْقَ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ان الذي ليس في جوفه من القران …رقم:٢٩١٤
(கியாமத் நாளில்) குர்ஆன் உடையவரிடம், சிறப்புமிக்க குர்ஆனை ஓதிக் கொண்டே செல்! சுவனத்தின் படித்தரங்களில் ஏறி நிறுத்திக் கொண்டே செல்! உலகில் நிறுத்தி, நிதானமாக ஓதிக் கொண்டிருந்ததுபோல், இங்கும் நீர் நிறுத்தி ஓது! நீர் கடைசி ஆயத்தை ஓதி முடிக்கும் இடம் தான் உமது தங்குமிடம்” என்று சொல்லப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (திர்மிதீ)
【ஸதகா கற்றுத்தரும் நிதானம்】
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا
(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (நிதானமில்லாமல் அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர். 17:29.
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். 25:67.
【உபதேசிதலில் நிதானம்】
அன்புள்ளவர்களே! நமக்கு பேச வாய்ப்பு கிடைத்து விட்டது என்பதற்க்காக பேசாமல் பிறர் நிலமை அறிந்து நிதானமாக பேச வேண்டும்.
اِذْهَبَاۤ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى ۖۚ
நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். 20:43
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
நீங்கள் இருவரும் அவனிடம் (நிதானமான , சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” 20:44
【 கடின நோயின் போது நிதானம்】
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நண்பரொருவர் நோயுற்றிருப்பதாக செய்தி அறிந்து, அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்ற அவர்கள், ”நண்பரே! நீங்கள் ஏதும் பிரார்த்தனை புரிந்தீர்களா? யென அவரிடம் கேட்டார்கள். ” யா அல்லாஹ்! மறுமையில் நீ எனக்கு வேதனை தரவிருந்தால் அவற்றை இவ்வுலகத்திலேயே எனக்கு சேர்த்துத் தந்திடுவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்ததாக அவர் பதிலளித்தார். அதைச் செவியுற்ற பெருமானார் (ஸல்) அவர்கள், ” நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள். அதனால்தான் இவ்வாறு கடும் பாதிப்புக்குல்லாகியிருக்கிறீர்கள். நீங்கள், இரட்சகா! எனக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லதைத் தந்தருள்வாயாக! என துஆச் செய்திருக்க வேண்டாமா?” என கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆக வேண்டும் என்றிருந்தால்,
اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي
நிதானமாக “இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும். புகாரி-6351
قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى. قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي. قَالَ “” إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ “”. فَقَالَتْ أَصْبِرُ. فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ، امْرَأَةٌ طَوِيلَةٌ سَوْدَاءُ عَلَى سِتْرِ الْكَعْبَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று என்னிடம், கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக [நிதானமாக] இருக்கலாம்.
(இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். ( புகாரீ 5652)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (;மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)’ என்று கூறினார்கள்.
أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “” لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ “”. قَالُوا وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ “” لاَ، وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ فَسَدِّدُوا وَقَارِبُوا وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ “”.
மக்கள், ‘தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்பாடுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் கடின நோயின் போது மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்’ என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி 5673..
【துஆ கேட்பதில் நிதானம்】
عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ؓ قَالَ: بَيْنَا رَسُولُ اللهِ ﷺ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّي فَقَالَ: اَللّهُمَّ اغْفِرْلِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ، قَالَ: ثُمَّ صَلَّي رَجُلٌ آخَرُ بَعْدَ ذلِكَ فَحَمِدَ اللهَ وَصَلَّي عَلَي النَّبِيِّ ﷺ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: أَيُّهَا الْمُصَلِّي اُدْعُ تُجَبْ. رواه الترمذي
ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் பள்ளிக்கு வந்து தொழுதார். தொழுத பிறகு, யாஅல்லாஹ், என்னை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்தார். இதைக் கேட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், தொழுகையாளியே, நீர் துஆக் கேட்பதில் அவசரப்பட்டுவிட்டீர், நீர் தொழுது முடித்ததும், முதலில் அல்லாஹ்வை அவனது அந்தஸ்துக்குத் தக்கவாறு புகழ்வீராக! அடுத்து என் மீது ஸலவாத் சொல்லியபின் துஆச் செய்வீராக!” என்று சொன்னார்கள். ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், மற்றொருவர் தொழுதார், அவர் தொழுது முடித்துவிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னார்’. நபி (ஸல்) அவர்கள் அவரிடம், இப்பொழுது துஆக் கேளும், ஏற்றுக் கொள்ளப்படும்’, என்று கூறினார்கள். (திர்மிதீ)
【 இபாதத்தின் போது நிதானம் வேண்டும்】
┈•••❈• ❀ ••❈•••┈
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ ”. فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ ” فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ ”. فَشَدَّدْتُ، فَشُدِّدَ عَلَىَّ، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجِدُ قُوَّةً. قَالَ ” فَصُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ وَلاَ تَزِدْ عَلَيْهِ ”. قُلْتُ وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ نِصْفَ الدَّهْرِ ”. فَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّصلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபி (அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!’ என்றார்கள். நூல்: புகாரி (1975)
அதிகமாக நோன்பு என்ற வணக்கத்தை செய்தவரை அழைத்து நபி ஸல் அவர்கள் பாராட்டவில்லை. மாறாக நிதானமில்லாமல் வணக்கத்தின் பெயரால் தன்னுடைய ஆரோக்கியத்தை கெடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ ” مَا هَذَا الْحَبْلُ ”. قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ ”.
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்க. அதற்கு மக்கள், ‘இது ஸைனபு(ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கர்ந்து விட வேண்டும்’ என்று கூறினார்கள். நூல்: புகாரி 1150
அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு நிகழச்சியும் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلاَ يَقْعُدَ وَلاَ يَسْتَظِلَّ وَلاَ يَتَكَلَّمَ وَيَصُومَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ ”.
நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்’ என்றார்கள். புகாரி
6704
【 பிறரை திட்டும் போது நிதானம் வேண்டும்】
┈•••❈• ❀ ••❈•••┈
அவர்களின் கடவுளை திட்டும் போது அல்லாஹ்வை திட்டுவார்கள்.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ، قَالُوْا: يَا رَسُوْلَ اللهِﷺ وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قاَلَ: نَعَمْ، يَسُبُّ اَبَا الرَّجُلِ، فَيَسُبُّ اَباَهُ، وَيَسُبُّ اُمَّهُ، فَيَسُبُّ اُمَّهُ. رواه مسلم،
மனிதன் தன் பெற்றோரைத் திட்டுவது, பெரும்பாவத்தைச் சார்ந்தது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ், மனிதன் தன் பெற்றோரையுமா திட்டுவான்?” என ஸஹாபாக்கள் (ரலி) வினவினர்.ஆம்” இவர் எவருடைய தந்தையைத் திட்டுகிறாரோ, அவர் பதிலுக்கு இவருடைய தந்தையைத் திட்டுவார். இவர் எவருடைய தாயைத் திட்டுவாரோ, அவர் பதிலுக்கு இவருடைய தாயைத் திட்டுவார்” (இவ்வாறு இவர் பிறருடைய தாய், தந்தையைத் திட்டி, தன்னுடைய தாய், தந்தையர் திட்டுப் பெறக் காரணமாகிறார்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)
【 மென்மை குணம்】
மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப்படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لاَ يُعْطِي عَلَى الْعُنْفِ وَمَا لاَ يُعْطِي عَلَى مَا سِوَاهُ ” .
நபி (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். [முஸ்லிம் : 5055]
عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ إِنَّ الرِّفْقَ لاَ يَكُونُ فِي شَىْءٍ إِلاَّ زَانَهُ وَلاَ يُنْزَعُ مِنْ شَىْءٍ إِلاَّ شَانَهُ ” .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” முஸ்லிம் : 5056
عَنْ جَرِيْرٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ.
எவர் மென்மை (யான தன்மை)யை விட்டும் பாக்கியமற்று விடுவாரோ அவர் (எல்லாவித) நலவுகளை விட்டும் பாக்கியமற்றுவிடுவார்’‘ (முஸ்லிம்)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِاللهِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: رَحِمَ اللهُ رَجُلاً سَمْحًا اِذَا بَاعَ وَاِذَا اشْتَرَي وَاِذَا اقْتَضَي.
விற்கும்போதும், வாங்கும்போதும், உரிமையைக் கேட்கும் போதும் மென்மையைக் கையாளுபவருக்கு அல்லாஹுதஆலா அருள் புரிவானாக!” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [புகாரி 2076)
عَنْ صُهَيْبٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: عَجَبًا لِاَمْرِ الْمُؤْمِنِ اِنَّ اَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذلِكَ لِاَحَدٍ اِلاَّ لِلْمُؤْمِنِ، اِنْ اَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَاِنْ اَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ.
முஃமினின் செயல்களே ஆச்சரியமானவைதான்! அவருடைய ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நிலையிலும் அவருக்கு மகத்தான நன்மையையே அளிக்கின்றன. இந்தப் பாக்கியம் முஃமினுக்கு மட்டுமே கிடைக்கிறது, அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சிக்குரிய காரியம் நிகழ்ந்தால் இரட்சகனுக்கு நன்றி செலுத்துகிறார். இந்த நன்றி செலுத்துதல் அவரது நன்மைக்குக் காரணமாகும், (இதில் அவருக்குக் கூலியுண்டு) அவருக்குத் துன்பம் வந்தால் பொறுமை மேற்கொள்வார். அவர் பொறுமையாக இருப்பதும் அவரது நன்மைக்குக் காரணமாகும், (அவரது பொறுமையிலும் கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்)
பிறமனிதர்களுடன் பழகும்போது மென்மையை கைக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். அடியார்களிடம் மென்மையை வெளிப்படுத்தும் கிருபையாளனான அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அழைக்கும் முஸ்லிம், மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடனும் மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வளவுதான் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் மென்மையை விட்டுவிடக்கூடாது.
، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم “” دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ “
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். [ புகாரி : 220 ]
மென்மையும், நளினமும், பெருந்தன்மையும் மூடிக்கிடக்கும் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்களாகும். முரட்டுத்தனத்தாலும், சிரமப்படுத்துவதாலும், மிரட்டுவதாலும் எதனையும் சாதித்துவிட முடியாது.
قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا “” يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا “”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யயாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.”[ புகாரி : 6124]
மென்மையையும், நளினத்தையும், முகமலர்ச்சியையும் மக்கள் நேசிப்பார்கள். கடுமையையும், முரட்டுத்தனத்தையும் மக்கள் வெறுப்பார்கள் என்பதுதான் நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்குக் காரணமாகும்.
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள் (அல்குர்அன் 3:159)
முஹம்மது நபி ﷺ , இயல்பிலேயே மென்மையானவர்கள். இலகிய குணமுடையவர்கள். அவர்கள் ஒருமுறை கடுகடுத்தார்கள். முகம் சுழித்தார்கள். அதற்காக அவர்கள் அல்லாஹ்வால் கண்டிக்கப்பட்டார். அவர்கள் யாருக்காக, ஏன் கண்டிக்கப்பட்டார்கள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
ஒரு கூட்டத்தாருடன் நபி ﷺ அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கண்பார்வை இல்லாத ஒரு மாற்றுத் திறனாளியான, ஏழையான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் [ ரலி] அவர்கள் அந்த வழியில் வந்தார்கள். முஹம்மது நபியின் குரலைக் கேட்ட அவர்கள் ஆர்வத்துடன் வந்து முஹம்மது ﷺ நபியுடன் பேச ஆரம்பித்தார்கள்.
அவரோ பார்வை அற்றவர். சூழ்நிலையை அவரால் புரிய முடியாது. முஹம்மது நபி யாருடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியாது. எனவே அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை, குறையும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான் முஹம்மது நபி, முகம் சுளித்தார்கள். இந்த மனிதர் இப்போது வந்து பேசிக் கொண்டிருக்கிறாரே! இவர் என்னுடன் எப்போது வேண்டுமானாலும் பேசலாமே… என்று அவர் பேச்சைப் புறக்கணித்தார்கள்.
முஹம்மது நபி முகம் சுளித்தது ﷺ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அல்லாஹ்வுக்குத் தெரியும் அல்லவா? உடனே முஹம்மது நபியைக் கண்டித்து திருமறை வசனங்கள் அருளப்பட்டன. பொதுவாக குர்ஆன் வசனங்கள் முஹம்மது நபியைப் பார்த்து அல்லாஹ் நேரிடையாகப் பேசுபவையாகவே அமைந்திருக்கும். ஆனால் முஹம்மது நபியைக் கண்டிக்கும் இந்த வசனங்கள் அவர்களைப் பார்த்துப் பேசுவதாக அமையாமல் மக்களைப் பார்த்து செய்தியைச் சொல்கிறது. முஹம்மது நபியைப் படர்க்கையாக வைத்து அல்லாஹ் பேசுகின்றான்.
عَبَسَ وَتَوَلَّىٰ (1) أَن جَاءَهُ الْأَعْمَىٰ (2) وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ (3) أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ (4) أَمَّا مَنِ اسْتَغْنَىٰ(5) فَأَنتَ لَهُ تَصَدَّىٰ (6) وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ (7) وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ (8) وَهُوَ يَخْشَىٰ (9) فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ(10) كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ (11) فَمَن شَاءَ ذَكَرَهُ (12) فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ (13) مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ (14) بِأَيْدِي سَفَرَةٍ (15)كِرَامٍ بَرَرَةٍ (16) قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
- அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
- அவரிடம் அந்த அந்தகர் [குருடர்] வந்தபோது,
- (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
- அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
- (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
- நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
- ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
- ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
- அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
- அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
- அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
ஒரு சாதாரண ஏழை மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே அல்லாஹ் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இதன் பிறகு அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் நாம் பார்க்க முடிகிறது.
【 அவசரம் ஷைத்தானின் குணம்】
اَلعَجلَةُ مِنَ الشَّيطَان جلد بازی شیطان کا کام ھے அவசரம் ஷைத்தானின் குணம்.
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍؕ سَاُورِيْكُمْ اٰيٰتِىْ فَلَا تَسْتَعْجِلُوْنِ
மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன் 21:37)
இன்றைய நவயுகத்தில் எங்கும், எதிலும் அவசரக்கோலம் காணப்படுகிறது. அதனால் விளையும் பாதிப்புகளுக்கும் குறைவில்லை.
வீதியில் செல்லும் பாதசாரிகளும், வாகனங்களும் குறிப்பிட்ட இலக்கை வேகமாக சென்றடைந்து விட வேண்டுமெனும் நோக்கில் அதிவேகமாகச் செல்ல முற்படும்போது ஆபத்துக்கள் சம்பவிக்கின்றன. இதை உணர்த்துவதற்காக சில ஊர்திகளின் பின் பகுதியில் ” பதறினாள் சிதறிவிடுவாய்” என்று எழுதப்படுகிறது.
ஒரு காரியத்தை நிர்வகிக்கும் ஒருவர், அக்காரியம் பற்றி அவசரமாக முடிவெடுத்தால் அவர் சந்திக்கும் திறமையற்று விடுகிறார். அதனால் பல தவறுகள் நிகழுகின்றன. பலர் பாதிப்புக்குல்லாக்கப்படுகிறார்கள். இதனால்தான் ”ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழி தோன்றியது.
வாழ்க்கைப் பிரச்சனையில் அவசர முடிவெடுக்கும் சிலர் தங்களையே மாய்த்துக் கொள்வதைக் காணுகிறோம். தேர்வில் தோல்வியைத் தழுவிய மாணவன், காதலில் தோல்வியுற்றதாக எண்ணும் காளையர், வறுமை சூழ்ந்ததால் வாழ்வில் தொளியுற்றதாக கருதுவோர் போன்று அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
காலையில் தொழாமல் எட்டு மணி வரை படுத்துறங்குபவர் அவசர அவசரமாக காரியங்களைச் செய்யத் துவங்குவதால் பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படுகிறது. ”சுப்ஹூ தொழுகாதவருக்கு எழுமுறை கேடு விளைகிறது” என்ற நபிமொழியும், ”சுப்ஹூக்கு பிறகும் தூங்குபவர் வறுமையைச் சந்திப்பார்” என்ற நாயக வாக்கும் அத்தகைய பின்விளைவுகளை சுட்டுவதாக அமைகின்றன.
அவசரத்தை வெறுத்தொதுக்கும் இஸ்லாம் நன்மையான காரியங்களில் விரைவாகச் செயல்படுவதை வரவேற்கிறது. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ” மறு உலக காரியங்கள் தவிர மற்ற அனைத்திலும் நிதானம் சிறப்பளிக்கும்” என்று கூறினார்கள். (மிஷ்காத்- பககம் 430)
நம் வாழ்வில் நிதானம் வேண்டும்!
தானம் கொடுக்க வேண்டும்!
நாணம் இருக்க வேண்டும்!
தானத்தில் சிறந்த தானம் நிதானம் / சமாதானம். என்று சொல்லுவார்கள் நம் மூத்தோர்கள். அப்படிப்பட்ட நிதானம் / சமாதானத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் நலவாக்கி தந்தருள் புரிவானாக! !!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன். (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ)
இன்னும் சொல்ல வேண்டியது நிறைவாய் உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன் வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******