Posts

தியாகத் திருநாள் வந்தது.. தியாகத்தை வளர்க்கச் சொன்னது… 17-06-2024

✍ தியாகத் திருநாள் வந்தது.. தியாகத்தை வளர்க்கச் சொன்னது… بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ } -[سورة الحج – الآية 37] – صدق الله العظيم / قال رسول الله ﷺ «عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ “‏ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلاً أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلاَفِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا »‏‏ [إلخ], الى آخره, (رواه الترمذي ، وابن ماجه .) أو كما عبر الرسول صلى الله عليه وسلم ✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் புனித‌ [ ذو الحجة ] துல்ஹஜ் மாதத்தை அடைந்து; அதில் முதல் பத்து நாட்களான முத்தான பத்து நாட்களில் அதிகமான‌ நன்மையான அமல்களை செய்து,. நோற்று

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

THURSDAY 13 JUNE 2024   குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும், அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையால் வருடத்தின் மிகச்சிறந்த நாட்கள் என்று மார்க்கம் அடையாளப் படுத்தியிருக்கிற துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப நாட்களை அடைந்திருக்கிறோம்.அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற அதே வேளையில் நாம் இங்கே அந்த ஹஜ்ஜின் கடமைகளையும் அந்த புனித இடங்களையும் நினைத்துப் பார்த்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் அங்கே செல்ல வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தருவானாக இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் என்பது தனித்துவம் வாய்ந்தது. ஹஜ்ஜுடைய கடமைகளுக்கும் மற்ற கடமைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. தொழுகையை ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் தொழ முடியும். எங்கிருந்தாலும் ஒருவரால் நோன்பு நோற்க முடியும். ஜகாத் கொடுக்க முடியும். வருடத்தின் எந்த நாட்களிலும் தொழ முடியும். நோன்பு நோற்க முடியும், ஜகாத் கொடுக்க முடியும். ஆனால் ஹஜ்ஜுடைய கடமைகளை அந்த இடங்களில் தான் செய்

விடுமுறைக்குப் பின் நம் இல்லங்கள்.

இல்லத்தை இறையில்லமாக்கிடுவோம்!!””  أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹 அன்புள்ளவர்களே! ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. கடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடுதான். அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான். பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான். ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும், பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு. வெளி வாழ்க்கையில் இன்னலையும், சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கி