Skip to main content

விடுமுறைக்குப் பின் நம் இல்லங்கள்.


இல்லத்தை இறையில்லமாக்கிடுவோம்!!””

 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹


அன்புள்ளவர்களே! ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது.

  • கடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடுதான்.
  • அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான்.
  • பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான்.
  • ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும், பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு.
  • வெளி வாழ்க்கையில் இன்னலையும், சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.

வசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், பிளாட்பாரங்களிலும், மூலை முடுக்குகளிலும், குப்பை மேடுகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும், ஆடு, மாடுகளுடனும், தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.  இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்.

ஆக இப்படிபட்ட இல்லத்தை எவ்வளவு பாக்கியமாக கருதி அமல் செய்ய வேண்டும்.

அன்புள்ளவர்களே!  இவ்வுலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கலாம், ஆனால் அல்லாஹ் விரும்புவது / நேசிப்பது நல்லடியார்களை மட்டும்தான். அது போல இவ்வுலகில் கோடிக்கணக்கான வீடுகள் இருக்கலாம், ஆனால் அல்லாஹ் விரும்புவது / நேசிப்பது நல் அமல்கள் செய்யக்கூடிய வீடுகளை மட்டும்தான்.

அல்லாஹ் மறுமை நாளில் நீ இந்த உலகில் எத்தனை வீடுகள் கட்டினாய் என்று கேட்கமாட்டான். நான் உனக்கு அழகான வீடு, மனைவி, பிள்ளைகள் கொடுத்தேனே அதனை எப்படி பயன்படுத்தினாய்? என்றுதான் கேட்பான்.

✍🏻 நம் இல்லத்தை இறையில்லமாக ஆக்குவது எப்படி? 

✍🏻 ஒரு முஃமினீன் வீடு எப்படி இருக்க வேண்டும்?  எப்படி இருக்க கூடாது? 
✍🏻 ஸ‌கினத் எனும் நிம்மதி/ மலக்குகள் நம் வீட்டிற்கு வர என்ன அமல் செய்ய வேண்டும். என்பதை அறிந்து அமல் செய்வது இன்றைய ஜுமுஆ உரையில்  முழுமையாக தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும் 

அல்லாஹ் பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் அதன் வழிபடி வாழ அருள்புரிவானாக! ஆமீன்  என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى ♣  

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).. அல்குர்ஆன் 24:27.

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

عَنْ قَتَادَةَؒ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: اِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوْا عَلي اَهْلِهِ، وَاِذَا خَرَجْتُمْ فَاَوْدِعُوْا اَهْلَهُ السَّلاَمَ

நீங்கள் யார் வீட்டுக்காவது சென்றால், அந்த வீட்டாருக்கு ஸலாம்” சொல்லுங்கள்! (வீட்டைவிட்டு) வெளியேறும் போதும் அவ்வீட்டாருக்கு ஸலாம்” சொல்லி விடைபெறுங்கள்” (முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்)

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

【நம் இல்லத்தை இறையில்லமாக ஆக்குவது எப்படி?】

அன்புள்ளவர்களே!  நம் இல்லத்தை; இறைவனுக்கும் – இறைத்தூதருக்கும் பிடித்த இல்லமாக ஆக்குவதற்க்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு சில கடமைகள் உள்ளன. அவைகளை செய்தால் தான் நம் குடும்பம் இறை பொருத்தம் பெறும். / ஈருலகிலும் நிம்மதி பெறும். இன்ஷா அல்லாஹ்.

  • அதாவது கணவன் ‍- மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன.
  • மனைவி – கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன.
  • கணவன் ‍- மனைவியும் – இணைந்து தம் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன.

இக்கடமைகளை சரியாக நிறைவேற்றினால்  குடும்பம் சரியாகும். இதில் பிழையிருந்தால் அடுத்தடுத்து பிழை வந்து கொண்டேதான் இருக்கும்.

கணவர் ‍- மனைவி – பிள்ளைகள் – என மூவருக்கும் மூன்று கடமைகள் உள்ளன. அவைகளை சீராக செய்தாலே நம் குடும்பத்தில்

  • எந்த ஒரு சண்டைகளும்,
  • எந்த ஒரு பிரச்சனையும்,
  • எந்த ஒரு கவலையும்,
  • எந்த ஒரு மனகசப்பும் ஏற்படாது.
  • மறுமையிலும் இக்கேள்வி கணக்கிலிருந்து தப்பித்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ். அவைகளைப்பற்றி பார்ப்போம் வாருங்கள்…

【கணவன் ‍- மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்!】

கவனமாகக் கேளுங்கள். பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனேனில், அவர்கள் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதை தவிர உங்களுக்கு அவர்களிடம் எந்த வேறு அதிகாரமும் இல்லை. ஆனால், அவர்கள் பகிரங்கமாக வெட்கக் கேடான காரியம் செய்தால் அவர்களைத் தனியாக விட்டுவிடுங்கள், (அவர்களுடன் சேர்ந்து உறங்காதீர்கள், அவர்களை வீட்டிலேயே இருக்கச் செய்யுங்கள்) தேவைப்பட்டால் இலேசாக அடியுங்கள், அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால் (அநியாயமாக) வீண் சாக்கு போக்குகளை தேடாதீர்கள், கவனமாகக் கேளுங்கள்! உங்களுக்குரிய உரிமை உங்கள் மனைவியர் மீது இருப்பது போன்றே மனைவியரின் உரிமை உங்கள் மீதும் இருக்கிறது. நீங்கள் வெறுக்கும் நபர்கள் உங்களுடைய படுக்கையறைக்கு வராமல் இருக்கவும், நீங்கள் வெறுக்கும் மனிதர்களை உங்கள் வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் மனைவியர்கள் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும், கவனமாகக் கேளுங்கள்! உணவு, உடை ஆகியவற்றில் உங்கள் மனைவியர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுவது உங்களுடைய தகுதிக்குத் தக்கவாறு உங்கள் மனைவியருக்கு உணவு, உடைக்குரிய ஏற்பாடு செய்வது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யவேண்டியகடமையாகும்” என ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அஹ்வஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. (நூல்: அஹ்மது)அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

உங்களில் மிகச் சிறந்தவர் தன் மனைவிமார்களுடன்நன்முறையில் நடந்து கொள்பவரே” (முஸ்னத் அஹ்மத்)

【மனைவி – கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்】

அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளாள்’ என நான் கேட்டதற்கு, ‘அவளின் கணவருக்கு’ என நபி ﷺ  பதிலளித்தார்கள்.’ ( ஹாகிம்)

‘சிறந்த பெண் யாரென்றால் நீ அவளைப் பார்க்கும் போது அவள் உன்னை சந்தோஷப்படுத்துவாள்; நீ அவளுக்கு ஆணையிட்டால், அவள் உனக்கு கட்டுப்படுவாள்; நீ அவளை விட்டும் மறைந்துவிட்டால், அவள் உனது செல்வத்தையும், அவள் தமது கற்பையும் பாதுகாப்பாள்  (நஸயீ)

‘ஒரு பெண் ஐவேளைத் தொழுகைகளையும், ரமலான் மாத நோன்பையும் நிறைவேற்றி, தமது கற்பையும் பாதுகாத்து, கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், அவள் சொர்க்கத்தில் தான் நாடிய எந்தவாசல் வழியாகவும் நுழையலாம்  (அஹ்மது)

【பெற்றோர்கள்  தம் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் 】

عَنْ اَبِيْ سَعِيْدٍ وَابْنِ عَبَّاسٍ ؓ قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنْ اِسْمَهُ وَاَدَبَهُ، فَاِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ، فَاِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَاَصَابَ اِثْمًا فَاِنَّمَا اِثْمُهُ عَلَي اَبِيْهِ

எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் அவருக்கு மணமுடித்து வைக்கவும் (பைஹகீ)

عَنْ اَيُّوْبَ بْنِ مُوْسَيؒ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ  اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ اَفْضَلَ مِنَ اَدَبٍ حَسَنٍ. رواه الترمذي

ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விடச் சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது” (திர்மிதீ)

【வீடு என்பது இறைவனின் அருட்கொடை!】

வீட்டை இறைவனின் அருட்கொடை என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? இதோ வீடு எனும் அருளைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:

وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْۢ بُيُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَـكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُيُوْتًا تَسْتَخِفُّوْنَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ اِقَامَتِكُمْ‌ۙ وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَاۤ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰى حِيْنٍ‏

அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான்.அல்குர்ஆன் 16:80.

【ஒரு முஃமினீன் வீடு எப்படி இருக்க வேண்டும்?】

அன்புள்ளவர்களே!  இன்று நம் குடும்பத்தில் ஒற்றுமையாக மன மகிழ்சியாக வாழ்வது போல; மறுமையிலும் நாம் நம் குடும்பத்தோடு, மன மகிழ்வோடு வாழ்வதற்க்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ரஸுலும், சொன்ன முறைப்படி நம் இல்லத்தை அழகாக்கி வாழ்வோமாக!.

அன்புள்ளவர்களே!   ஒரு முஃமினின் வீடு / முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்?

  • ஒரு முஃமினின் வீடு அல்லாஹ்வும், அவனது ரசூலும் பிரியப்படும் வீடாக இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு அல்லாஹ்வும், அவனது ரசூலும் கட்டளைகளை நிறைவேற்றும் வீடாக இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு மலக்குகள் வந்து போகும் வீடாக இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு அந்த குடும்பத்திற்க்காக துஆ செய்யும் வீடாக‌  இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு நல்லடியார்கள் வந்து போகும் வீடாக இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு எல்லா நல்லமல்கள் நடைபெறும் வீடாக இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு எல்லோராலும் புகழ்படும் வீடாக இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு ஸதகா செய்தல் / விருந்தினரை கண்ணியமளித்தல்/ இபாதத் செய்தல் நிறைந்த வீடாக இருக்க வேண்டும்.
  • ஒரு முஃமினின் வீடு ஷைத்தான் பயப்படும் வீடாக இருக்க வேண்டும்.

அன்புள்ளவர்களே!   ஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம். 

ஒரு முஃமினுடைய வீடு இறைவனை நினைவு கூரும் இல்லமாக இருக்க வேண்டும். அங்கு இறை வசனங்கள் ஓதப்பட வேண்டும். மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.

وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.அல்குர்ஆன் 33:34

இறைவன் நினைவு கூரப்படும் இல்லத்திற்கும் இறை நினைவை இழந்த இல்லத்திற்கும் இறைத்தூதர் காட்டும் உவமையைப் பாருங்கள்.

  عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ

நபி ﷺ  அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது. [முஸ்லிம் 1429]

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் தொழுகை நடைபெறாது. அங்கு குர்ஆன் ஓதப்படாது. மார்க்க ஞானங்கள் பேசப்படாது. ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் இறந்தவர்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனவர்கள்.

நாம் உயிரோடு இருந்தும் நம்முடைய வீட்டில் இறைவன் நினைவு கூரப்படவில்லையென்றால், அங்கு மார்க்க ஞானங்கள் போதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய வீடும், கப்ருஸ்தானும் ஒன்று தான். ஒரு சிறிய வித்தியாசம் அங்கு உயிரிழந்தவர்கள் உள்ளார்கள். இங்கு உயிர் இருந்தும் உயிரற்றவரை போன்று இருக்கிறார்கள்.

இன்று நம்முடைய வீடுகள் இறைவனை நினைவு கூரும் இல்லங்களாக உள்ளதா? அல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதா? நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நம்முடைய வீடுகளில் மார்க்கம் தடுத்த இசைப்பாடல்கள் ஆடியோ, வீடியோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் எல்லா நேரங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றன, ஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களும், குடும்பத்தை சிதைக்கும் மூடநம்பிக்கைகளை போதிக்கும் நாடக தொடர்களும் தான் நம்முடைய வீட்டுத் தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய வீடு இருந்தால் அது இறை நினைவை ஏற்படுத்துமா? நம்முடைய பிள்ளைகள் இறையச்சமுடைய பிள்ளைகளாக உருவாவார்களா?

இன்றைக்கு அதிகமான பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே காதல் என்ற போதையில் மூழ்குவதற்குக் காரணம் நம்முடைய வீட்டுச் சூழல்தான். அது இறை நினைவை மறக்கச் செய்து இறை மறுப்பின் வாசல்களை திறந்து விடக்கூடியதாக உள்ளது.

நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்க என்ன செய்யலாம்? இதோ இறைத்தூதரின் வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

நம் வீடு & பிற வீடுகளின் அனுமதி கேட்டு நுழைவ‌து கடமையான செயல்:-

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).அல்குர்ஆன் 24:27.

عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍؒ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ سَاَلَهُ رَجُلٌ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ اَسْتَاْذِنُ عَلَي اُمِّيْ؟ فَقَالَ: نَعَمْ فَقَالَ الرَّجُلُ: اِنِّيْ مَعهَا فِي الْبَيْتِ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِسْتَاْذِنْ عَلَيْهَا فَقَالَ الرَّجُلُ: اِنِّيْ خَادِمُهَا، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِسْتَاْذِنْ عَلَيْهَا اَتُحِبُّ اَنْ تَرَاهَا عُرْيَانَةً؟ قَالَ: لاَ، قَالَ: فَاسْتَاْذِنْ عَلَيْهَا.

யாரஸூலல்லாஹ்! ﷺ என் தாயாருடைய வீட்டுக்குள் செல்ல என் தாயாரிடம் அனுமதி கேட்க வேண்டுமா?” என்று ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் வினவினார், ஆம்” என்று பதில் அளித்தார்கள். நானும் என் தாயும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறோம்! என்று கூறினார், அனுமதி வாங்கிக் கொண்டே செல்” என நபி ﷺ  அவர்கள் கூறினார்கள். நான் தான் அவருக்குப் பணிவிடை செய்கிறேன்” (தனால் அடிக்கடி சென்றுவர வேண்டியுள்ளது) என்று மீண்டும் வினவினார். நீர் அனுமதி வாங்கிக் கொண்டே செல்வீராக! ஆடையற்ற நிலையில் உமது தாயாரை நீர் பார்க்க விரும்புவீரா?” என்று ரஸூலுல்லாஹி ﷺ  அவர்கள் கேட்க, விரும்பமாட்டேன்” என்றார் அவர். அப்படி யென்றால் அனுமதி வாங்கிக்கொண்டு செல்லும்!” என நபி ﷺ அவர்கள் சொன்னார்கள். (முத்தா இமாம் மாலிக்)

– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِذَا دَخَلَ الْبَصَرُ فَلاَ اِذْنَ. رواه ابوداؤد

வீட்டுக்குள் பார்வை சென்றுவிட்டால், அனுமதி கேட்பதில் அர்த்தம் இல்லை! அனுமதி கேட்பதில் எந்தப் பலனும் இல்லை” (அபூதாவூத்)

நம் வீடு & பிற வீடுகளின்  நுழையும் போதும் & வெளியேறும் ஸலாம் சொல்லுவது பரக்கத் ஆகும் :-

عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ لِيْ رَسُوْلُ اللهِ ﷺ: يَا بُنَيَّ! اِذَا دَخَلْتَ عَلَي اَهْلِكَ فَسَلِّمْ يَكُوْنُ بَرَكَةً عَلَيْكَ وَعَلي اَهْلِ بَيْتِكَ

என் அருமை மகனே! நீர் உமது வீட்டில் நுழையும்போது வீட்டாருக்கு ஸலாம் சொல்லும்! இது உமக்கும், உமது வீட்டாருக்கும் பரக்கத் உண்டாகக் காரணமாக இருக்கும்” (திர்மிதீ)”

عَنْ قَتَادَةَؒ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: اِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوْا عَلي اَهْلِهِ، وَاِذَا خَرَجْتُمْ فَاَوْدِعُوْا اَهْلَهُ السَّلاَمَ. رواه عبدالرزاق

நீங்கள் யார் வீட்டுக்காவது சென்றால், அந்த வீட்டாருக்கு ஸலாம்” சொல்லுங்கள்! (வீட்டைவிட்டு) வெளியேறும் போதும் அவ்வீட்டாருக்கு ஸலாம்” சொல்லி விடைபெறுங்கள்” (முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்)

நம் வீடு & பிற வீடுகளின்  நுழையும் போதும் & வெளியேறும் போதும் துஆ ஓதுதல் சுன்னத் ஆகும்  :-

عَنْ أَبِي مَالِكِ نِ اْلاَشْعَرِيِّ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ فَلْيَقُلْ: اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لْيُسَلِّمْ عَلَي أَهْلِهِ

ஒருவர் தம் வீட்டில் நுழையும் போது, (اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا) யா அல்லாஹ்! வீட்டினுள் நுழைவது, மற்றும் வீட்டிலிருந்து வெளியேறுவதின் நலவை உன்னிடம் நான் கேட்கிறேன். நான் வீட்டில் நுழைவதையும் வெளியேறுவதையும் என்னுடைய நன்மைக்குக் காரணமாக ஆக்குவாயாக! அல்லாஹுதஆலா வின் பெயராலேயே நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம் அல்லாஹுதஆலா வின் பெயராலேயே வீட்டைவிட்டு வெளியேறினோம். எங்கள் இரட்சகனாகிய அல்லாஹுதஆலா வின் மீதே நாங்கள் தவக்குல் (நம்பிக்கை) வைத்தோம்’ என்ற துஆவை ஓதியபின், வீட்டாருக்கு ஸலாம் கூறிவிட்டு நுழையவும்”  (அபூதாவூத்)

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது

اللَّهُمَّ إني أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அழ்லிம அவ் அவ் உழ்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைய்ய. [அபூதாவுத்],]

அண்ணல் நபி ﷺ அவர்கள் வீட்டிலிருந்து வெளியே புறப்படும்போது பிஸ்மில்லாஹி தவகல்து அலல்லாஹ் லா ஹெளல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று ஓதுவார்கள்.

عَنْ جَابِرِ بنِ عَبْدِ اللهِ َؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ: لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ طَعَامِهِ قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ. رواه مسلم

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்” என்று சொல்கிறான். முஸ்லிம் 4106

நம் வீடு & பிற வீடுகளின்  நுழையும் போதும் & வெளியேறும் போதும் இரண்டு ரக்அத் நஃபில் தொழுதல்  :-

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِذَا دَخَلْتَ مَنْزِلَكَ فَصَلِّ رَكَعَتَيْنِ تَمْنَعَانِكَ مَدْخَلَ السُّوءِ، وَإِذَا خَرَجْتَ مِنْ مَنْزِلِكَ فَصَلِّ رَكْعَتَيْنِ تَمْنَعَانِكَ مَخْرَجَ السُّوءِ. رواه البزار

நீர் உமது வீட்டில் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழுது கொள்வீராக. இந்த இரு ரக்அத்தும் நீர் வீட்டில் நுழைந்த பின் ஏற்படும் தீங்கிலிருந்து உம்மைக் காக்கும். இவ்வாறே வீட்டைவிட்டு வெளியேறும் முன் இரண்டு ரக்அத் தொழுது கொள்வீராக. இந்த இரு ரக்அத்தும் வீட்டைவிட்டு வெளியேறிய பின் ஏற்படும் தீங்கிலிருந்து உம்மைக் காக்கும்” 

【நம் இல்லாத்தை இறை நினைவோடு இனிதாக்கிடுவோம்】

வீட்டில் குர்ஆன் ஓதுதல் :-

عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ

மய்யித்துகளை அடக்கம் செய்யும் இடமாக உங்கள் வீடுகளை ஆக்கிவிடாதீர்கள்; அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டு வீடுகளைச் செழிப்பாக்குங்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுமோ அவ்வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.  முஸ்லிம் 1430

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளிலே சூரத்துல் பகராவை ஓதுங்கள். எந்த வீட்டிலே சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான். ஹாகிம் 2063

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجَرْمِيِّ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ الْجَرْمِيِّ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِأَلْفَيْ عَامٍ أَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ خَتَمَ بِهِمَا سُورَةَ الْبَقَرَةِ وَلَا يُقْرَأَانِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شَيْطَانٌ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான். அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான். அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான். திர்மிதி 2807

மேற்கண்ட ஹதீஸ்கள் வீட்டில் குர்ஆன் ஓதுவதன் மூலம் நம்முடைய வீடுகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. குர்ஆன் ஓதப்படாத வீடுகள் சவக்குழிகளுக்குச் சமம் என்று நபி ﷺ எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் நம்முடைய வீடுகளில் குர்ஆன் ஓதுவதின் மூலம் ஷைத்தானுடைய வழிகேடுகளை விட்டும் நம்முடைய வீடுகளுக்கு இறைவன் பாதுகாப்பைத் தருகின்றான். நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்கும்.

நம் இல்லம் – ஓர் மத்ரஸா:-

அன்புள்ளவர்களே!  நம் வீடு அமல்களால் அழகு பெற‌  வீட்டுத்தஃலிம், குர்ஆன் ஹல்கா, போன்றவைகளை நடத்துதல்.

அன்புள்ள  பெற்றோர்களே! மத்ரஸாவில் படிக்கும் நம் பிள்ளைகளிடத்தில் நீ எத்தனை சூராக்களை படித்திருக்கிறாய்? அத்தனை சூராக்களையும் சொல்லு பார்க்கலாம் என பாடங்களை கேளுங்கள் & பாடங்களை கற்றுக் கொடுங்கள்.

ஏன் இந்த ஸூரா மனன பாடங்களை கேட்க்க வேண்டும். ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் சொன்ன்னார்கள்

عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الإِبِلِ فِي عُقُلِهَا ‏”‏‏.‏

குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும். [புஹாரி 5033]

திருக்குர்ஆன் ஒதிவதினால் நம் வீட்டில் எப்பொழுதும் நல்ல சூழ்நிலை ஏற்படும்! பரக்கத் ஏற்படும்! அல்லாஹ்வின் சகினத் வரும்! [அமைதி] வீட்டில் ஷைத்தானின் தொல்லைகள் இருக்காது! இந்த குர்ஆன் நமக்கு இன்ஷாஅல்லாஹ் பரிந்துரைச் செய்யும் [மறுமையில்] இன்னும் நிறைய சிறப்புகள் இருக்கிறது . சொல்லிமாளாது……

சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல் :-

 ،  عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.  புகாரி 432

– حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ : حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ : حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم اتَّخَذَ حُجْرَةً- قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ – مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى فِيهَا لَيَالِيَ فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ : قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ الْمَكْتُوبَة

நபி ﷺ அவர்கள் “மக்களே! (உபரியான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர!” என்று கூறினார்கள்.  புகாரி 731

பெண்கள் கடமையான தொழுகைகளை வீட்டில் தொழுவதுதான் சிறந்ததாகும் என நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஆண்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில்தான் தொழ வேண்டும். ஆனால் சுன்னத்தான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் மிகச் சிறந்ததாகும்.

மேலும் நம்முடைய வீட்டில் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதன் மூலம் நம்முடைய குழந்தைகள் அதனைப் பார்த்து அவர்களும் தொழுகை முறையை அறிந்து கொள்வதற்கும், தொழுகையின் பால் நாட்டம் கொள்தவற்கும் தோதுவானதாக அமையும். இதன் மூலம் நம்முடைய இல்லம் இறை நினைவு நிறைந்த வீடாக மாறும்.

சிறுவர்களுக்கு தொழுகை பயிற்சி கற்றுக் கொடுத்தல் :-

அன்புள்ள பெற்றோர்களே!  நாம் தொழும் போது நம் வீட்டு சிறு பிள்ளைகளை அழைத்து நான் எப்படி தொழுகிறேன் பார்! என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக நம் பிள்ளைகளுக்கு தொழுகும் பயிற்சியை கற்றுக் கொடுக்க வேண்டும்..

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِين وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ ‏“‏ ‏.‏

உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ (அபூதாவுத் 495).

வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் போது ஒழுவோடு செல்லுதல்  :-

 عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَلاَ أَدُلُّكُمْ عَلَي شَيْءٍ يُكَفِّرُ الْخَطَايَا، وَيَزِيدُ فِي الْحَسَنَاتِ؟ قَالُوا: بَلي، يَارَسُولَ اللهِ، قَالَ: إِسْبَاغُ الْوُضُوءِ أَوِالطُّهُورِ فِي الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلي هذَا الْمَسْجِدِ، وَالصَّلاَةُ بَعْد َالصَّلاَةِ، وَمَامِنْ أَحَدٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا حَتَّي يَاْتِيَ الْمَسْجِدَ فَيُصَلِّي مَعَ الْمُسْلِمِينَ أَوْمَعَ اْلإِمَامِ ثُمَّ يَنْتَظِرُ الصَّلاَةَ الَّتِي بَعْدَهَا إِلاَّ قَالَتِ الْمَلاَئِكَةُ: اَللّهُمَّ اغْفِرْلَهُ اَللّهُمَّ ارْحَمْهُ

உங்களுடைய பாவங்களை அழித்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் ஒரு செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கேட்ட பொழுது யாரஸூலல்லாஹ், அவசியம் அறிவித்துத் தாருங்கள்!” என்று ஸஹாபாக்கள் வேண்டினார்கள். மனம் விரும்பாத பொழுது (குளிர் காலத்தில்) நல்ல முறையில் உளூச் செய்வது, பள்ளியை நோக்கி அதிகமாக நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பிறகு மறுதொழுகைக்காக காத்திருப்பது, எவர் தமது வீட்டில் உளூச் செய்து பள்ளிக்குச் சென்று முஸ்லிம்களுடன் ஜமாஅத்தாகத் தொழுதுவிட்டு, அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பாரோ அவருக்காக மலக்குகள், யா அல்லாஹ், அவரை மன்னிப்பாயாக! யா அல்லாஹ், அவர் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்கின்றனர்” (இப்னு ஹிப்பான்)

வீணாக வெளியில் செல்லாமல் வீட்டில் தங்கியிருப்பது நன்மையான செயல் :-

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ مَا النَّجَاةُ؟ قَالَ: اَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلي خَطِيْئَتِكَ. رواه الترمذي

ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யாரஸூலல்லாஹ்! ﷺ ஈடேற்றம் பெற வழி என்ன?” என்று நபி ﷺ அவர்களிடம் நான் வினவினேன், உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். வீட்டில் தங்கியிரும் (வீணாக வெளியில் செல்ல வேண்டாம்). உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிரும்!” என்று நபி ﷺ அவர்கள் பதில் சொன்னார்கள். (திர்மிதீ)

【 ஒரு முஃமினீன் வீடு எப்படி இருக்க கூடாது?

அன்புள்ளவர்களே!   ஒரு முஃமினின் வீடு / முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க கூடாதென்றால்?

  • ஒரு முஃமினின் வீடு அல்லாஹ்வும், அவனது ரசூலும் கோபப்படும் வீடாக இருக்க கூடாது.
  • ஒரு முஃமினின் வீடு அல்லாஹ்வும், அவனது ரசூலும் கட்டளைகளை மறந்து வாழும் வீடாக இருக்க கூடாது.
  • ஒரு முஃமினின் வீடு மலக்குகள் சபிக்கும் வீடாக இருக்க கூடாது.
  • ஒரு முஃமினின் வீடு அந்த குடும்பத்திற்க்காக பத்துஆ செய்யும் வீடாக‌  இருக்க கூடாது.
  • ஒரு முஃமினின் வீடு எல்லா தீமைகள் / பாவங்கள் நடைபெறும் வீடாக இருக்க கூடாது.
  • ஒரு முஃமினின் வீடு எல்லோராலும் ஏசும்  வீடாக இருக்க கூடாது.
  • ஒரு முஃமினின் வீடு ஸதகா செய்தல் / விருந்தினரை கண்ணியமளித்தல்/ இபாதத் செய்தல் போன்றவைகள் நடைபெறாத‌ வீடாக  இருக்க கூடாது.
  • ஒரு முஃமினின் வீடு ஷைத்தான் தங்கி செல்லும்  வீடாக இருக்க கூடாது.

அன்புள்ளவர்களே!   ஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க கூடாது என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம். 

வீட்டில் இசைக்கருவிகள் மற்றும் இசைப்பாடல்கள் :-

இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் TV-களில் இசைப்பாடல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.  இவை மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டவையாகும்.

இந்த இசைக்கருவிகள் நம்முடைய வீடுகளில் இருந்தால் இசைப்பாடல்கள் நம்முடைய வீடுகளில் ஒலித்துக் கொண்டிருந்தால் அங்கு இறைவனின் அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள்.

 عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ-صلى الله عليه وسلم- قَالَ لاَ تَصْحَبُ الْمَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلاَ جَرَسٌ

நாயும், மணியோசையும் உள்ள வீட்டிற்க்கு (அருள்) வானவர்கள் வர மாட்டார்கள். முஸ்லிம் 4294

 عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ الْجَرَسُ مَزَامِيرُ الشَّيْطَانِ ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும். முஸ்லிம் 4295

நாயும் மணியோசையும் உள்ள வீட்டிற்க்கு வரமாட்டார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வீட்டில் உருவப்படங்கள் மற்றும் நாய்கள் :-

இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் உருவப்படங்களை மாட்டி வைத்துள்ளனர். இறந்து விட்ட தாய், தந்தையர்கள் மற்றும் முன்னோர்களின் உருவப்படங்களை மாட்டி வைப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். 

நம்முடைய வீடுகளில் இந்த உருவப்படங்கள் மற்றும் நாய்கள் இருப்பதன் மூலம் நம்முடைய வீட்டிற்கு இறைவனுடைய அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள். மேலும் இதற்காக மறுமையில் மிகப் பெரும் தண்டனைகளும் உள்ளன.

 عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ : سَمِعْتُ أَبَا طَلْحَةَ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ ، وَلاَ صُورَةُ تَمَاثِيل

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். புகாரி 3225

  عَنْ عَائِشَةَ قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مِنْ سَفَرٍ وَقَدْ سَتَّرْتُ عَلَى بَابِى دُرْنُوكًا فِيهِ الْخَيْلُ ذَوَاتُ الأَجْنِحَةِ فَأَمَرَنِى فَنَزَعْتُهُ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டு வாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்க விட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன்.  முஸ்லிம் 4281

வீட்டில் உருவப்படங்களும் நாய்களும் இருப்பது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்

  عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ فِى سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِى يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ « مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلاَ رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ « يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَا هُنَا ». فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ. فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَاعَدْتَنِى فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ ». فَقَالَ مَنَعَنِى الْكَلْبُ الَّذِى كَانَ فِى بَيْتِكَ إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, “அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்குமாறு செய்ய மாட்டார்கள்” என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

உடனே “ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை” என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்” என்று சொன்னார்கள்.  முஸ்லிம் 4272

فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ خَلْقًا كَخَلْقِى فَلْيَخْلُقُوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ لِيَخْلُقُوا شَعِيرَةً

அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் சிலவற்றைக் கண்டார்கள்.

அப்போது “எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகி விட்டவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு தானிய வித்தைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். முஸ்லிம் 4292

 عَنْ عَائِشَةَ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَنَا مُتَسَتِّرَةٌ بِقِرَامٍ فِيهِ صُورَةٌ فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ ثُمَّ قَالَ « إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُشَبِّهُونَ بِخَلْقِ اللَّهِ

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டு வாசலை) உருவப் படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்து விட்டார்கள்.

பிறகு “மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்” என்று சொன்னார்கள். முஸ்லிம் 4282

வீட்டில் உருவப்படங்கள் பொறித்த திரைச்சீலைகளைத் தொங்க விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வகையில் அந்த உருவங்கள் வீட்டில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது.

நம்முடைய வீடுகளில் செய்தித்தாள்கள் கிடக்கின்றன. அவற்றில் உருவப்படங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் அதிலுள்ள செய்திகளைப் படித்தவுடன் அதிலுள்ள உருவப்படங்களை மாட்டி வைப்பதோ கண்ணியப்படுத்துவதோ கிடையாது. அந்த செய்தித்தாள்களை மதிப்பற்ற முறையில் தான் பயன்படுத்துகின்றோம். நாம் சாப்பிடும் போது அவற்றை விரிப்பாக பயன்படுத்துகின்றோம். பல்வேறு விஷயங்களுக்காக அந்த செய்தி பேப்பர்களை கிழித்து விடுகின்றோம். ஒரு செய்திப் பேப்பரை பத்திரப்படுத்தினால் கூட அந்தச் செய்திக்காகத் தானே தவிர அதிலுள்ள உருவப்படத்தை கண்ணியப்படுத்துவதற்காக அல்ல. இது போன்று மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வண்ணம் உருவங்கள் நம்முடைய வீடுகளில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது. இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

  عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتِ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ فَهَتَكَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் எனது அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி ﷺ அவர்கள் கிழித்து விட்டார்கள்.  ஆகவே, அதிளிருந்து நான் இரு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன்.  அவை வீட்டில் இருந்தன.  அவற்றின் மீது நபி ﷺ அவர்கள் அமர்வார்கள்.  புகாரி 2479

அந்த மெத்தை இருக்கைகளில் அந்த உருவப்படங்கள் இருந்ததாக பின்வரும் ஹதீஸில் வந்துள்ளது.

 – ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَقَدْ اشْتَرَيْتُ نَمَطًا فِيهِ صُورَةٌ، فَسَتَرْتُهُ عَلَى سَهْوَةِ بَيْتِي، فَلَمَّا دَخَلَ، كَرِهَ مَا صَنَعْتُ، وَقَالَ: «أَتَسْتُرِينَ الْجُدُرَ يَا عَائِشَةُ؟» فَطَرَحْتُهُ فَقَطَعْتُهُ مِرْفَقَتَيْنِ، فَقَدْ رَأَيْتُهُ مُتَّكِئًا عَلَى إِحْدَاهُمَا، وَفِيهَا صُورَةٌ

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் பயணத்திலிருந்து திரும்பினார்கள். நான் உருவப்படமுள்ள ஒரு திரைச் சீலையை விலைக்கு வாங்கி எனது வீட்டிலுள்ள அலமாரி ஒன்றின் மீது திரையாக தொங்கவிட்டிருந்தேன். நபியவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது நான் செய்திருந்ததை வெறுத்தார்கள். “ஆயிஷாவே, சுவர்களை நீ மறைக்கின்றாயா?” என்று கேட்டார்கள். உடனே நான் அதைக் கழற்றி விட்டேன். அதனைக் கிழித்து நபியவர்கள் கைவைத்து சாய்ந்திருப்பதற்குரிய இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவங்கள் இருக்கும் நிலையிலேயே அந்த இரண்டு தலையணைகளில் ஒன்றிலே நபியவர்கள் சாய்ந்து இருந்ததை நான் பார்த்திருக்கின்றேன். நூல்: அஹ்மத் 24908

குழந்தைகள் விளையாடுவதற்குரிய பொம்மை உருவங்களை வீடுகளில் வைத்திருப்பதும் மார்க்கத்தில் குற்றமாகாது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ ، قَالَ : حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ ، أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ ، حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةِ تَبُوكَ ، أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ ، فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ ، فَقَالَ : مَا هَذَا يَا عَائِشَةُ ؟ قَالَتْ : بَنَاتِي ، وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ ، فَقَالَ : مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ ؟ قَالَتْ : فَرَسٌ ، قَالَ : وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ ؟ قَالَتْ : جَنَاحَانِ ، قَالَ : فَرَسٌ لَهُ جَنَاحَانِ ؟ قَالَتْ : أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلاً لَهَا أَجْنِحَةٌ ؟ قَالَتْ : فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ

நபியவர்களின் வீட்டிலேயே அலமாரியில் குழந்தைகள் விளையாடும் உருவப் பொம்மைகள் இருந்துள்ளன. நபியவர்கள் அதனைக் கண்டிக்கவில்லை. எனவே நம்முடைய வீடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொம்மைகளை வைத்திருப்பதில் தவறு கிடையாது.

இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு :-

  جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ ، أَوْ أَمْسَيْتُمْ – فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَحُلُّوهُمْ فَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللهِ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا وَأَوْكُوا قِرَبَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ وَخَمِّرُوا آنِيَتَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ وَلَوْ أَنْ تَعْرُضُوا عَلَيْهَا شَيْئًا وَأَطْفِئُوا مَصَابِيحَكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள். புகாரி-5623

 ، عَنْ سَالِمٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاََ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.  புகாரி-6293

இன்று நம்முடைய வீடுகளில் நாம் தூங்கச் செல்லும் முன் கேஸ் அடுப்புகளை அணைத்துள்ளோமா, தேவையில்லாமல் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்துள்ளோமா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது நபிவழியும், நமக்குப் பாதுகாப்பும் ஆகும்.

மேற்கண்ட மார்க்க நெறிமுறைகளைத் தெரிந்து நம்முடைய இல்லங்களை முன்மாதிரி முஸ்லிம் இல்லங்களாக மாற்றி மறுமையில் சுவன வீட்டை அடைவோமாக.

【த‌ன் வீட்டாருடன் அழகிய நபி …】

நபியவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போதும், வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போதும் வீட்டிலுள்ளவர்களுக்கு ‘ஸலாம்’ கூறுவார்கள். அது வீட்டில் அனைவருக்கும் பரக்கத்தாகும் எனவும் கூறுவார்கள். இன்னும் அண்ணல் நபி ﷺ அவர்கள் வீட்டு அலுவல்களில் தாங்களும் பங்கு கொள்வார்கள். மேலும் வீட்டில் இருக்கும் போது வீணாக நேரத்தை கழிக்காமல் வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வர்கள். மேலும் மாவு பிசைவது போன்ற சமையல் வேலைகளும் செய்வார்கள். தங்கள் துணிமணிகள், காலணிகள் கிழிந்து இருந்தால் தாங்களே தைத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் பால் கறப்பார்கள் வீ;ட்டில் அதிக சால்னா வைக்கச்சொல்வார்கள். அப்போதுதான் பக்கத்து வீட்டினருக்கு கொடுக்க முடியும் என்பார்கள். யார் எந்த உதவியை நாடி தன்னிடம் வந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்தே அனுப்புவார்கள். மாறாக இல்லை என்றே சொல்ல மாட்டார்கள். நபியவர்கள் எல்லா நேரங்களிலும் மௌனமாகவே (இறை தியானத்திலே) இருப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பேசுவார்கள். அவசியம் இல்லையென்றால் பேச்சை விட்டு விடுவார்கள். மேலும் உங்களில் சிறந்தவர் உங்களது மனைவியிடத்தில் சிறந்தவரே. நான் எனது மனைவியிடத்தில் சிறந்தவனாக உள்ளேன் எனக்கூறுவார்கள்.

‘நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபி ﷺ  அவர்கள் வீட்டில் என்ன வேலை செய்து வந்தார்கள்?’ என்று கேட்டேன். ‘நபி ﷺ  அவர்கள் தம் வீட்டாருக்காக வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பைச் செவிமடுத்தால் தொழுகைக்காகப் புறப்பட்டு விடுவார்கள்’ புகாரி

【அண்டைவீட்டாருடன் அழகிய நபி …】

அன்புள்ளவர்களே! முஸ்லிமா? முஸ்லிமல்லாதவரா? என்று பாராமல் அண்டை அயலாருடன் அன்புடன் நடந்துகொள்வது நபியின் நற்குணமாக இருந்தது. 

عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اَكْمَلِ الْمُؤْمِنِيْنَ اِيْمَانًا اَحْسَنُهُمْ خُلُقًا وَاَلْطَفُهُمْ بِاَهْلِهِ

எவரது குணம் மிகவும் சிறந்ததோ, எவரது நடத்தை தம் வீட்டாருடன் மிக நளினமானதாக இருக்குமோ அவரே பரிபூரண விசுவாசம்” (திர்மிதீ)

“அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்!” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். புகாரீ (6019)

உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்னமை செய் நீ முஸ்லிமாவாய்” என்று நபிகளார் கூறினார்கள். இப்னுமாஜா (4207)

அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்! என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் (4758)

முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். புகாரீ (2566)

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர் சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் (66)

நல்லறங்கள் பல புரிந்தும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள் “இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள்.

இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.  அஹ்மத் (9298)

عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَيْسَ المُؤْمِنُ الَّذِيْ يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ

அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் வயிறு நிரம்பச் சாப்பிடுபவர் (முழுமையான) முஃமின் அல்ல”  (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித், பூயஃலா)

عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَازَالَ جِبْرِيْلُؑ يُوْصِيْنِيْ بِالْجَارِ حَتَّي ظَنَنْتُ اَنَّهُ سَيُوَرِّثُه

ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அண்டைவீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமையைப் பற்றி உபதேசித்தார்கள், (அந்த உபதேசத்தின் மூலம்) அண்டை வீட்டார் சொத்தில் பங்கு பெற உரிமை பெற்று விடுவாரோ என எண்ணலானேன்”  (புகாரி)

எவர் அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தவும்” என்று ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! அண்டை வீட்டாருக்குச் செலுத்தவேண்டிய கடமைகள் யாவை?” என ஸஹாபாக்கள் (ரலி) வினவினர். உங்களிடம் எதையேனும் அவர் கேட்டால் அவருக்கு அதைக் கொடுங்கள், உங்களிடம் அவர் உதவி வேண்டினால் அவருக்கு உதவி செய்யுங்கள், தேவைக்காக அவர் கடன் கேட்டால் அவருக்குக் கடன் கொடுங்கள், அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர் நோயுற்றால் அவரை நலன் விசாரியுங்கள், அவர் இறந்துவிட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்லுங்கள், அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவருக்கு ஆறுதல் கூறுங்கள், தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் (ஏனேனில், வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமலிருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரது வீட்டுக்கு அனுப்புங்கள். அவரது அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி அவரது வீட்டிற்குக் காற்று வராதபடிக் கட்டாதீர்” என ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

✍🏻✍🏻 நன்றியுரை:-  

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.( புகாரி 3461) 

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்