அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025
அற்புதங்கள் நிறைந்த ஆஷுரா தினம்…
بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز; {وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ} -[سورة المنافقون – الآية 10] – صدق الله العظيم / قال رسول الله ﷺ «عَنْ أَبِي هُرَيْرَةَ، – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ ”» [إلخ], الى آخره, (رواه مسلم.) أو كما عبر الرسول صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ المُحَرَّم ] முஹர்ரம் மாதத்தின் இரண்டாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் .
இன்றைய ஜுமுஆடைய பேருரையில் இன்றைய நாளான [முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும்] அற்புதங்கள் நிறைந்த ஆஷுரா தினத்தைப்பற்றி இன்றைய ஜுமுஆ உரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……!!!
பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன்
இந்த மாதமும் புனிதமானது [முஹர்ரம் மாதம்]
இன்றைய நாளும் புனிதமானது [வெள்ளிக்கிழமை]
இந்த இடமும் புனிதமானது [பள்ளிவாசல்]
இந்த நேரமும் புனிதமானது [ஜுமுஆவுடைய நேரம்]
இதனோடு சேர்ந்து நாமும் புனிதமான ஆஷுராவுடைய நோன்பை வைத்துள்ளோம்.
இதனையெல்லாம் ஒன்று சேர்ந்து நமக்கு கிடைத்திருப்பது மிகப்பெரும் பாக்கிமல்லவா?
அபூபக்கர் ரலி அன்ஹு அவர்களை போல் நோன்பிலும் எல்லா அமல் செய்வோம்!]:-
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: “قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ»” (رواه مسلم).
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் 1865.]
ஆக ஆஷுராவுடைய நோன்பை வைக்க உள்ள நாம் மீதமுள்ள எல்லா அமல்களையும் செய்து சொர்க்கவாசியாக ஆகிடுவோம்.
♣ அரபி அகராதியில் ” عاشوراء ” என்பதற்க்கு:-
ஆஷூரா – عَاشُورَاءَ என்ற அரபிச் சொல்லுக்கு ‘பத்தாவது’ என்று பொருளாகும். இதனடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 10 – ம் நாள் ஆஷூரா ஆகும்.
ஆஷூரா அன்று நடந்த சம்பவங்களில் சில...
بِعشر كرامات. الأول: مُوسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ نصر فِيهِ، وفلق الْبَحْر لَهُ، وغرق فِرْعَوْن وَجُنُوده. الثَّانِي: نوح عَلَيْهِ السَّلَام اسْتَوَت سفينته على الجودي فِيهِ. الثَّالِث: يُونُس، عَلَيْهِ السَّلَام، أنجي فِيهِ من بطن الْحُوت. الرَّابِع: فِيهِ تَابَ الله على آدم عَلَيْهِ السَّلَام، قَالَه عِكْرِمَة. الْخَامِس: يُوسُف عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ أخرج من الْجب فِيهِ. السَّادِس: عِيسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ ولد فِيهِ، وَفِيه رفع. السَّابِع: دَاوُد، عَلَيْهِ السَّلَام، فِيهِ تَابَ الله عَلَيْهِ. الثَّامِن: إِبْرَاهِيم، عَلَيْهِ السَّلَام، ولد فِيهِ. التَّاسِع: يَعْقُوب، عَلَيْهِ السَّلَام، فِيهِ رد بَصَره. ذكر بَعضهم من الْعشْرَة: إِدْرِيس، عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ رفع إِلَى مَكَان فِي السَّمَاء، وَأَيوب، عَلَيْهِ السَّلَام، فِيهِ كشف الله ضره، وَسليمَان عَلَيْهِ السَّلَام، فِيهِ أعطي الْملك (عمدة القاري شرح صحيح البخاري ، ١٦٧/١١)
முஹர்ரம் பத்தாம் நாள் ஆஷுரா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மா தினமாகும்.
ஆதம்- ஹவ்வா அலைஹிமிஸ்ஸாம் ஆகியோர் படைக்கப்பட்டதும் இந்நாளில்தான்,
அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான், இந்நாளில்தான். அவ்விருவரும் சுவர்க்கம் சென்றதும் இந்நாளில்தான்.
அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
அன்றுதான் நபீ மூஸா (அலை); நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
அன்றுதான் சர்வாதிகாரி நும்ரூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்.
யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும், அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் (அலை) அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது.
தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
அன்றுதான் சுலைமான் நபி அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததும் அவர்களுக்கு ‘கலீல்’ என்னும் பட்டம் இறைவனால் சூட்டப்பட்டதும், அவர்கள் நம்ரூத் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலையானதும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டதும்,
அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (ரளி) அஹ்லுல்பைத் என்றழைக்கப்படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல் இறுதி நாள் (கியாமத்) இந்த ஆஷூராவுடைய ஒரு வெள்ளிக் கிழமையில் தான் வரும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الْجُمُعَةِ)) (صحيح مسلم)
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 7
அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் மாதம்:-
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل“ ((رواه مسلم)).
நபி ﷺ அவர்களிடம் “கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள், “கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்” என்று விடையளித்தார்கள். முஸ்லிம் (2158)
♣ ஆஷூரா நோன்பின் சிறப்புகள்:-[ باب فضل صوم عاشوراء ]
நபி ﷺ அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الكَعْبَةُ [ص:149]، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். புகாரி 1592
குறிப்பு : மேல் கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விடயம், ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது அதிக நன்மையை எதிர்பார்க்கக் கூடிய பாவங்களை போக்கக்கூடிய சுன்னத் என்பது எடுபடவில்லை, நபி ﷺ அவர்கள் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர சுன்னத்து என்பதையல்ல. அது இதுவரையும் சுன்னத்தாகவே இருக்கின்றது என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்
அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி ﷺ அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி ﷺ அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
[ஆஷூரா நோன்பு ஏன்?]
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
நபி ﷺ அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபி ﷺ அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
நபி ﷺ அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், “இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் நபிصلى الله عليه وسلم அவர்கள் மரணித்துவிட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி), முஸ்லிம்)
مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا اليَوْمَ، يَوْمَ عَاشُورَاءَ، وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. [ புகாரி 2006]
صيام يوم عاشوراء احسب على الله ان يكفر السنة التى قبله. (مسلم- 1163
அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ” நபி ﷺ அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ” கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஆஷூரா நன்மைகள்.
َ عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عَلِيٍّ يَسْأَلُهُ عَنْ شَهْرٍ يَصُومُهُ، فَقَالَ لَهُ عَلِيٌّ: مَا سَأَلَنِي أَحَدٌ عَنْ هَذَا بَعْدَ إِذْ سَمِعْتُ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ: أَيُّ شَهْرٍ يَصُومُهُ مِنَ السَّنَةِ؟ فَأَمَرَهُ بِصِيَامِ الْمُحَرَّمِ وَقَالَ: ((إِنَّ فِيهِ يَوْماً تَابَ اللَّهُ عَلَى قَوْمٍ وَيَتُوبُ فِيهِ عَلَى قَوْمٍ)). [سنن الدارمي
ஹஜ்ரத் அலீ ரலி அவர்களிடம் ஒரு மனிதர் வந்து நோன்பு நோற்க உகந்த மாதம் எது என வினவினார். அதற்கு அலி ரலி அவர்கள் இது சம்பந்தமாக நபி ﷺ அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டு அதற்கு அவர்கள் பதிலளித்ததை நான் செவியுற்ற பின்பு யாரும் என்னிடம் இதுவரை கேட்கவில்லை (நீங்கள் தான் முதலில் கேட்கிறீர்கள்) நபி ﷺ அவர்களிடம் வருடத்தில் நோன்பு நோற்பதற்கு தகுதியான மாதம் எது? என அந்த மனிதர் கேட்க அவருக்கு முஹர்ரம் மாதத்தில் நோன்பிருக்கும் படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள் மேலும் “அந்த மாதத்தில் தான் அல்லாஹ் ஒரு கூட்டத்தினரின் பிழையை பொறுத்தான். இன்னும் ஒரு கூட்டத்தினரின் பிழையை பொறுத்துக் கொள்ளவிருக்கிறான்” என்றும் நபிகள் ﷺ அவர்கள் கூறினார்கள்.
عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم ” من وسع علي عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته” قال سفيان انا قد جربناه فوجدناه كذالك.
மேலும் ஆஷூராவுடைய தினத்தில் யார் தன் குடும்பத்தினருக்கு விசாலமாக செலவு செய்வாரோ அவருக்கு வருடம் முழுவதும் அல்லாஹ் பொருளாதாரத்தை விசாலப் படுத்தி வைப்பான். என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
முஹர்ரம் பிறந்தவுடன் இரண்டு நோன்புக்கு தயாராகி விடு!
· عَنْ الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ قَالَ انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي زَمْزَمَ فَقُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ صَوْمِ عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَالَ نَعَمْ – مسلم
2087. அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ”ஸம்ஸம்” கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ”ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ”முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!” என்று சொன்னார்கள். ”இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, ”ஆம்” என்று அவர்கள் விடையளித்தார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13.]
சஹாபாக்களின் ஆர்வம், குழந்தைகளும் நோன்பு.
· فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: ” من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم” قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.
ருபய்யிவு பின்து முஅவ்வித் என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் ஆஷூரா தினத்தின் காலைப் பொழுதிலே அன்சாரிகளின் கிராமத்திற்கு ஆள் அனுப்பி “யார் காலையில் நோன்பு நோற்காத நிலையில் எழுந்தாரோ அவர் மீதமுள்ள பகல் நேரம் முழுவதும் நோன்பு நோற்றவற்றைப் போல ஆகியிருக்கட்டும். யார் காலையில் நோன்பு நோற்றிருந்த நிலையில் எழுந்தாரோ அவர் நோன்பிருக்கட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள். அதற்குப் பிறகு நாங்கள் ஆஷூராவுடைய தினத்தில் நோன்பு நோற்பவர்களாகவும் எங்களுடைய சிறு பிள்ளைகளை நோன்பிருக்கச் செய்பவர்களாகவும் ஆகியிருந்தோம். மேலும் நாங்கள் உரோமத்தில் விளையாட்டுப் பொருட்களை செய்து வைத்துக் கொண்டு பசியால் அழுகும் குழந்தைகளுக்கு அதைத் தருவோம் இவ்வாறே நோன்பு திறக்கும் நேரம் வரை…..ஆகியிருக்கும். ( நூல்- புகாரி)
முஹர்ரம் 9-ம் நாள் நோன்பு வைக்க தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் முஹர்ரம் 10/11-ம் நாள் நோன்பு நோற்பது கூடும். ஏனெனில் யூதர்களுக்கு மாறு செய்வதற்காக வேண்டித்தான் ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத் என்றார்கள். எனவே 9-ம் நாள் தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் அந்த மாறு செய்வதை 10/11-ம் நாளிலும் செய்யலாம் “எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே மிகச் சிறந்த முறையாகும்
நபி ﷺ அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
இரண்டு நாள் தொடர்ந்து நோன்பு வைக்க வேண்டும். உதாரணம் [ 9, 10 அல்லது 10, 11] ஒரு நாள் மட்டும் நோன்பு வைப்பது மக்ருஹ் ஆகும்.
முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும்; அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி ﷺ அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை. நபி ﷺ அவர்கள், “அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்” என்று ஏன் கூறினார்கள்? அதற்கு நபி ﷺ அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَيْكُمْ سُلْطٰنًا مُّبِيْنًا
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; 4:144.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். 5:51.
யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர். இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி ﷺ அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர். அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி ﷺ அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 – அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள். இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி ﷺ அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ”.
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். புகாரி 5892
இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களின் சிறப்புகள்.
சுவனத்து இளைஞர்களின் தலைவர்.
மணம்தரும் நறு மலர்.
ஹுஸைன் என்னிலிருந்தும் நான் ஹுஸைன் யிலிருந்தும் இருக்கின்றோம்.
ஹுசைனை யார் நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிப்பான்.
யார் என்னையும், இந்த இருவரையும், இவர்களின் தந்தை, மற்றும் தாயையும் யார் நேசிப்பரோ அவரும் நானும் சுவனத்தில் ஒரே இடத்தில் இருப்போம்.
யா அல்லாஹ் இவர்களை நான் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக, யார் இவர்களை நேசிக்கின்றாரோ அவரை நானும் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக.
எனக்கு பின்னால் இரண்டை விட்டு செல்கின்றான். அதை பின்பற்றி நடக்கும் காலம் எல்லாம் வழி தவற மாட்டீர்கள். 1. இறை வேதம் 2. எனது குடும்பத்தவர்கள். என்னிடம் ஹவுளுள் கவுசரில் என்னிடம் சேர்க்கும் வரை இவர்கள் உங்களை விட்டு இவர்கள் பிரிய மாட்டார்கள். இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். நேரமும் காலமும் பத்தாது.
மரணம் பற்றிய முன்னறிவிப்பு தந்த நபியவர்கள்:-
அண்ணலாரை சந்திக்க ஒரு நாள் சென்றிருந்தேன் அண்ணலாரின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. நான் பதறிப்போய் என்னவானது அண்ணலாரை யாராவது தங்களுக்கு சினமூட்டி விட்டார்களா கண்களில் நீர் கசிகிறதே என வினவினேன்.அதற்கு அண்ணலார் அதெல்லாம் ஒன்றுமில்லை சற்று நேரத்திற்கு முன்பாக ஜிப்ரயீல் அலை அவர்கள் வருகை தந்தார் ஃபுராத் நதிக்கரையில் இமாம் ஹுசைன் (ரழி) அவர்கள் கொல்லப்படுவார் என்னும் தகவலை தெரிவித்தார்.அத்தோடு நில்லாமல் அந்நிலத்து மண்ணை வேண்டுமானால் நுகர்ந்து பார்க்கிறீர்களா என்று கேட்டார் சொன்னவர் ஒரு கைப்பிடி மண்ணை எனக்கு கொடுக்கவும் செய்தார் அதைக் கண்டவுடன் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்கள்.
முத்தான முஹர்ரம் பத்தாம் நாள்:-
***************************************
[قول النبي صلي الله عليه وسلم : وصيام يوم عاشوراء أني احتسب علي الله ان يكفر السنة التي قبله (روي في الجامع الصغير
இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்துவமே ஒரு வணக்கத்தை செய்து முடித்ததும் அடுத்த வணக்கத்தை நினைவூட்டி எல்லா நேரங்களிலும் நிலைகளிலும் அல்லாஹ்வின் தொடர்பில் அடியார்களை நிலைத்திருக்கச் செய்வதாகும்.
ஒரு ஹஜ்ஜூடைய காலம் முடிந்த மறு கணமே இஸ்லாமிய வருடத்தின் துவக்க மாதமான கண்ணியத்திற்குரிய முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களும் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் சிறப்பித்து கூறப்பட்டதாக அமைந்திருக்கிறது. அதிலும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் “ஆஷூரா தினம்” நோன்பு நோற்பது உள்ளிட்ட பல வணக்கங்களையும் , பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறத
ஆஷூரா தினத்தில் செய்யக் கூடாதவை
فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى (58) طه
ஆஷூரா தினத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை முதலில் கூறிய பின்பு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இரண்டாவதாக பார்ப்போம்
ஆஷூரா நாளில் ஷியாக்களும் பஞ்சா வழிபாடு செய்பவர்களும் நடத்தும் அனாச்சாரங்கள் இப்லீஸின் தூண்டுதலாகும்
யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது. கணவனை இழந்த மனைவியைத் தவிர
عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِى سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْىُ أَبِى سُفْيَانَ مِنَ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ رضى الله عنها بِصُفْرَةٍ فِى الْيَوْمِ الثَّالِثِ ، فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّى كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً ، لَوْلاَ أَنِّى سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا (بخاري) كتاب الجنائز
சிரியாவில் அபூ சுஃப்யான் அவர்கள் இறந்த செய்தி (சுஃப்யான் அவர்களின் மகளும் நபி ஸல் அவர்களின் மனைவியுமான) உம்மு ஹபீபா ரழி அவர்களுக்குத் தெரிய வந்த போது மூன்றாவது நாளில் மஞ்சள் கலர் திரவியத்தைக் கொண்டு வரச் சொல்லி அதை தன்னுடைய இரு கண்ணங்களிலும் முழங்கைகளிலும் தேய்த்துக் கொண்டார்கள். மேலும் கூறினார்கள். நிச்சயமாக (என்னுடைய தந்தை இறந்த துக்கம் மனதில் இருப்பதால்) இந்த வாசனைத் திரவியத்தை விட்டும் தேவையற்ற நிலையில் தான் நான் இருக்கிறேன். இருந்தாலும் நபி ஸல் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகின்ற ஒரு பெண் தன் கணவர் அல்லாத வேறு யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது என்று தடுத்துள்ளார்கள். கணவருக்காக மட்டும் நான்கு மாதங்கள் மற்றும் பத்து நாட்கள் துக்கம் கொண்டாட வேண்டும் (என கூறியதால் என் தந்தைக்காக நான் துக்கம் கொண்டாடவில்லை என்பதை வெளியில் காட்டுவதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டேன் என உம்மு ஹபீபா ரழி அவர்கள் கூறினார்கள்.)
மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடும் என்றிருந்தால் நாம் முதலில் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது நபி ஸல் அவர்களுக்காகத் தான். ஆனால் அப்படி எதுவும் ஷரீஅத்தில் இல்லை. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே கொடூரமாக கொலை செய்யப்பட்ட உஸ்மான் ரழி, மிஹ்ராபில் வைத்தே வெட்டப்பட்ட உமர் ரழி, வஞ்சித்துக் கொல்லப்பட்ட அலீ ரழி ஆகியோர் ஹுஸைன் அவர்களை விட மேலானவர்களாக இருப்பினும் அவர்களுக்காக யாரும் இவ்வாறு அனுஷ்டிப்பதில்லை.ஆகவே ஷியாக்கள் இன்று செய்யும் செயல்கள் ஷைத்தானால் உருவாக்கப் பட்டவையாகும்.
எத்தனையோ நபிமார்கள் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார்கள். அதற்காக யாரும் இவ்வாறு துக்கம் கொண்டாடியதில்லை
وقتل الحسين ليس هو بأعظم من قتل الأنبياء وقد قُدّم رأس يحيى عليه السلام مهراً لبغي وقتل زكريا عليه السلام وكثير من الأنبياء قتلوا كما قال تعالى : قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِنْ قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (183) آل عمران 183
ஒருவரின் இறப்பிற்காக ஒப்பாரி வைப்பதும் ஷரீஅத்தில் தடுக்கப்பட்டுள்ளது
عن أَبي مَالِكٍ الْأَشْعَرِيَّ رضي الله عنه قال أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ... النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ (مسلم) بَاب التَّشْدِيدِ فِي النِّيَاحَةِ- كِتَاب الْجَنَائِزِ –
ஒப்பாரி வைத்து அழும் பழக்கம் உள்ள பெண் இறப்புக்கு முன்பு தவ்பா செய்யா விட்டால் மறுமை நாளில் தார் பூசப்பட்ட நீண்ட அங்கி உடையவளைப் போன்றும் சொரி, சிரங்கால் உருவான உருக்குச் சட்டை அணிவிக்கப் பட்டவளைப் போன்றும் எழுப்பப் படுவாள். கருத்து- ரோடு போடுவற்குப் பயன்படும் தார் போன்ற திரவம் அது கொதிக்க வைக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் ஊற்றப்படும். அது நீண்ட அங்கியைப் போன்று இருக்கும். அவளுடைய உடலின் மேல் பகுதியில் உருவாக்கப்படும் சொரி, சிரங்கு அது நிரம்பியிருப்பதால் சொரி, சிரங்கால் உருவான உருக்குச் சட்டை அணிவிக்கப் பட்டவளைப் போன்று இருக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِي النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ (مسلم) بَاب إِطْلَاقِ اسْمِ الْكُفْرِ عَلَى الطَّعْنِ فِي النَّسَبِ وَالنِّيَاحَةِ - كِتَاب الْإِيمَانِ
மக்களிடம் பரவியுள்ள இரண்டு விஷயங்கள் குஃப்ராகும். (அதாவது குஃப்ருக்கு நெருக்கமானதாகும். சண்டை வந்தால்) எதிராளியின் பரம்பரையைத் திட்டுவது, இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது.
عن عَائِشَةَ رضي الله عنها قالت لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اذْهَبْ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ.. (بخاري)كتاب الجنائز
ஆயிஷா ரழி கூறினார்கள். மூத்தா போரில் ஜைதுப்னு ஹாரிஸா ரழி,மற்றும் ஜஃபர் இப்னு அபூதாலிப் ரழி, மற்றும் அப்துல்லாஹிப்னு ரவாஹா ரழி ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி நபி ஸல் அவர்களுக்குக் கிடைத்த போது நபி ஸல் அவர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தார்கள். நான் கதவு இடுக்கின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்துப் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள் என்று கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் அவரிடம் அப்பெண்களை அதை விட்டும் தடுக்கும் படி சொல்லி அனுப்ப, அவர் மீண்டும் திரும்பி வந்து, அந்தப் பெண்கள் தனக்குக் கட்டுப்படவில்லை என்றார். இரண்டாவது தடவையும் அவ்வாறே அனுப்ப, அப்போதும் அவர் திரும்பி வந்து அதே பதிலைக் கூறினார். பின்பு மூன்றாம் தடவையும் அவ்வாறே அனுப்ப, அப்போதும் அவர் திரும்பி வந்து அதே பதிலைக் கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் அவரிடம் நீர் சென்று அந்தப் பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கோபத்துடன் கூறினார்கள்.
وعن ابن عباس، قال: ((ماتت زينب بنت رسول الله - صلى الله عليه وسلم - ، فبكت النساء، فجعل عمر يضربهن بسوطه، فأخره رسول الله - صلى الله عليه وسلم - بيده، وقال: مهلاً يا عمر! ثم قال: إياكن ونعيق الشيطان، ثم قال: إنه مهما كان من العين ومن القلب، فمن الله عزوجل وما كان من اليد ومن اللسان فمن الشيطان " . رواه أحمد (مشكاة المصابيح)
நபி ஸல் அவர்களின் மகள் ஜைனப் ரழி அவர்கள் இறந்த போது சில பெண்கள் சப்தமிட்டு அழ ஆரம்பித்தார்கள். அப்போது உமர் ரழி அவர்கள் அப்பெண்களை சாட்டையால் அடிக்க முனைந்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் உமர் ரழி அவர்களை விலக்கி விட்டு, உமரே பொறுமை கொள்ளுங்கள் என்று கூறி விட்டு, பிறகு அப்பெண்களிடம் ஷைத்தானைப்போல் ஒப்பாரி வைப்பதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். என்று கூறினார்கள் மேலும் துக்கம் என்பது எதுவரை கண்களின் வழியாகவும் கல்பின் வழியாகவும் வெளிப்படுமோ அதுவரை அது அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். ஆனால் எப்போது கைகளின் வழியாகவும் நாவின் வழியாகவும் வெளிப்படுமோ அப்போது அது ஷைத்தானைச் சார்ந்ததாகும் என்று கூறினார்கள்.
ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதால் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க தினமாக கொண்டாடுவதும், அந்த நாளில் நெஞ்சில் அடித்துக் கொள்வதும், தீ மிதிப்பதும் இஸ்லாமிய நடைமுறை அல்ல.
عَنْ عَبْدِ اللَّهِ رضى الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ ، وَشَقَّ الْجُيُوبَ ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ (بخاري) باب لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ -كتاب الجنائز-
عن أَبي بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنْ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ (مسلم) باب تَحْرِيمِ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ-كتاب الايمان – وهكذا رواه البخاري في كتاب الجنائز -الحالقة:التى تحلق رأسها عند المصيبة-الشاقة: التى تشق ثوبها- الصالقة:التى ترفع صوتها عند المصيبة
அபூ மூஸா ரழி அவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட போது இலேசான மயக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்போது அவர்களுடைய குடும்பப் பெண்களில் ஒருவர் சப்தமிட்டு அழுதார். மயக்கத்தில் இருந்ததால் அவரால் அதை தடுக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்த மயக்கம் தெளிந்தவுடன் தன் குடும்பத்தாரிடம் நபி ஸல் அவர்கள் யாரை விட்டும் நீங்கி விட்டதாக அறிவித்தார்களோ அவர்களை விட்டும் நானும் நீங்கி விட்டேன். நபி ஸல் துக்கம் காரணமாக சப்தமாக அழுகின்ற, முடியை மழித்துக் கொள்ளுகின்ற, ஆடையைக் கிழித்துக் கொள்கின்ற பெண்களை விட்டும் தாம் நீங்கி விட்டதாக நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்
ஐந்து தெய்வக் கொள்கையை ஊக்குவிக்கும் பஞ்சா வழிபாடு
பஞ்சா என்றால் ஐந்து என்பதைக் குறிக்கும்.பிறர் எவ்வாறு பல தெய்வங்களை வழிபடுகிறார்களோ அதுபோல் முஸ்லிம்களிடம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஷைத்தானால் உருவாக்கப்பட்டது தான் இந்த பஞ்சா.. அதாவது அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற கொள்கையை முஸ்லிம்கள் மறந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலீ ரழி, பாத்திமா ரழி, ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹுஅன்ஹுமா ஆகிய ஐந்து பேரையும் ஐந்து விரல்களாக கற்பனை செய்து அதை வழிபடுவது தான் பஞ்சா என்பதாகும். சிலை வணக்கத்திற்கு ஒப்பான இந்த உருவ வழிபாட்டுக்கு ஒருபோதும் நாம் துணை போகக் கூடாது. உருவ வழிபாடு செய்த நிலையில் இறந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்
முஹர்ரம் மாதத்தில் ஷியாக்களைப் போல் நம்மில் சிலரும் பிறை 1 முதல் 10 வரை அசைவம் சாப்பிடக்கூடாது. கணவன்,மனைவி சேரக்கூடாது என்று கருதுகின்றனர். இதுவும் இஸ்லாத்தில் இல்லாத மூட நம்பிக்கையாகும்.
ஆஷூரா நாளின் சிறப்புகள், அன்றைய அமல்கள்
✨. ஆஷூரா இரவில் ஜம் ஜம் நீர்
ذكر ان الله عز وجل يخرق ليلة عاشوراء زمزم الى سائر المياه فمن اغتسل يومئذ أمن من المرض فى جميع السنة
(تفسير روح البيان ، ١١٢/٤)
ஆஷூரா தினத்தன்று இரவில், அல்லாஹு தஆலா உலகிலுள்ள எல்லா நீரிலும் ஜம்ஜம் நீரை ஓடச் செய்கிறான், அதனால் அன்று குளித்தால் வாழ்நாள் முழுவதும் எந்த நோயும் வராது. (நூல் : ரூஹுல் பயான், பாகம் : 4, பக்கம் : 112)
✨. குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வது
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ البيهقي في الشعب (٣٧٩٣)
ஆஷூரா தினத்தன்று தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தாராளமாக செலவு செய்தால் அல்லாஹ் அவருக்கு அவ்வருடம் முழுவதும் தாராளமாக இரணம் அளிப்பான். (அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல்குத்ரிய்யி (ரளி), நூல் : ஷுஃபுல் ஈமான் லில் பைஹகீ, ஹதீஸ் எண் : 3793)
✨. புத்தாடை, சுர்மா
يروي أن موسى عليه السلام كان يلبس فيه الكتان ويكتحل فيه بالإثمد (لطائف المعارف لإبن رجب ، صــ : ١١١)
ஆஷூரா தினத்தன்று மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கைத்தறி ஆடை அணிந்து, “இஸ்முத்” என்ற சுர்மா இடுவார்கள். (நூல் : லதாயிஃபுல் மஆரிஃப் லி இப்னி ரஜப் , பக்கம் : 111)
✨. ஆஷூரா அன்று செய்ய வேண்டிய அமல்
فعل عشر خصال يوم عاشوراء وقد عدها بعضهم اثنتي عشرة خصلة، وهي: الصلاة، والصوم، وصلة الرحم، والصدقة والاغتسال، والاكتحال، وزيارة عالم، وعيادة مريض، ومسح رأس اليتيم، والتوسعة على العيال، وتقليم الأظفار، وقراءة سورة الإخلاص – ألف مرة (إعانة الطالبين ، ٢٦٧/٢)
1. தொழுவது (நஃபிலான வணக்கங்கள் புரிவது) 2. நோன்பு நோற்பது 3. உறவுகளுடன் சேர்ந்திருப்பது 4. சதகா – தர்மம் செய்வது 5. குளிப்பது 6. சுர்மா இடுவது 7. உலமாக்களை சந்திப்பது 8. நோயாளியை நலம் விசாரிப்பது 9. அனாதையின் தலையை அன்புடன் தடவுவது 10. குடும்பத்தினருக்கு தாராளமாக செலவு செய்வது 11. நகம் வெட்டுவது 12. 1000 முறை “ஸூரத்துல் இக்லாஸ் – குல்ஹுவல்லாஹு அஹத்” ஸூராவை ஓதுவது (நூல் : இஆனத்துத் தாலிபீன், பாகம் : 2, பக்கம் : 267)
✍ இன்னும் சொல்ல வேண்டியது நிறைவாய் உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன் வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******