தொழுகை 11 -12-21, 15-11-2024

 தொழுகை 

ان الصلاة كانت علي المؤمنين كتابا موقوتا

நிச்சயமாக தொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிப்பிடப்பட்ட ஒரு கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 4 ;103)

ثلاثة لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت كفؤا

நபி ﷺ அவர்கள் ஹள்ரத் அலி ரலி அவர்களைப் பார்த்து சொன்னார்கள் மூன்று விஷயங்களை பிற்படுத்தாதே. 1, நேரம் வந்து விட்டால் தொழுகையை. 2, மரணித்து விட்டால் அடக்கம் செய்வதை. 3, பெண்ணிற்கு தகுந்த ஜோடி அமைந்து மணமுடிப்பதை. (திர்மிதி : 1075)

இஸ்லாம் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒவ்வொரு நேரங்களைக் குறிப்பிட்டு அந்தந்த நேரங்களில் அதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.இஸ்லாம் குறிப்பிட்டுச் சொன்ன அந்த நேரங்களில் தொழாமல் காரணமில்லாமல் அதை பிற்படுத்துவது அதை தள்ளிப்போடுவது அதில் அசட்டை செய்வது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல, நாம் சரியாக தொழுதோம் என்பதற்கு அடையாளமும் அல்ல.

குர்ஆனில் 60க்கும் மேற்பட்ட வசனங்களில் அல்லாஹ் தொழுகையைப் பற்றி சொல்கிறான்.அதில் எந்த இடத்திலும் தொழுங்கள் என்றோ தொழுவார்கள் என்றோ சொல்ல வில்லை.

 يقيمون الصلاة واقيموا الصلاة நீங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள், அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள் என்று தான் இறைவன் கூறுகிறான். 

எனவே சரியான நேரங்களில் தொழாமல் தேவையில்லாமல் பிற்படுத்தித் தொழுதால் அல்லது அவ்வாறு பிற்படுத்தித் தொழுவதையே வாடிக்கையாக ஆக்கிக் கொண்டால் அது தொழுகை என்ற பெயரில் மட்டும் தான் இருக்குமே தவிர அது உண்மையான தொழுகையாக இருக்காது.

அவர் தொழுதார் என்று தான் சொல்ல முடியுமே தவிர இறைவன் தொழ சொன்னதைப் போன்று அவர் தொழுகையை நிறைவேற்றினார் என்று சொல்ல முடியாது.

எனவே தொழுதால் மட்டும் போதாது நேரம் தவறாமல் பொறுமையோடு இறைவன் விரும்பும் விதத்தில் தொழ வேண்டும் 

 صَلُّوا كما رَأَيْتُمُونِي أُصَلِّ،  .

நான் எப்படி தொழுவதாக நீங்கள் பார்த்தீர்களோ அப்படியே தொழுகுங்கள்.என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள். (புகாரி : 7246)

தொழுகை என்றால் முதலில் உடல், உடை, இடம் இம்மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்,ஒழு சரியான முறையில் செய்திருக்க வேண்டும்,அதிலுள்ள சுன்னத் முஸ்தஹப்புகளை பேண வேண்டும்,

தக்பீர் தஹ்ரீமா என்றாலே ஹராமாக்கப்பட்ட தக்பீர் என்று பொருள் அதாவது தொழுகைக்கு வெளியில் எதுவெல்லாம் ஹலாலாக இருந்ததோ அவை எல்லாம் இந்த ஒற்றை வார்த்தை அல்லாஹூ அக்பர் என்று கூறிவிட்டால் ஹராமாகி விடுகிறது

அதை தொடர்ந்து தொழுகைக்குள் உள்ள  கிராஅத் பிழையில்லாமல் ஓத வேண்டும், ருகூஃ, சுஜூதுகளை நிதானத்தோடு செய்ய வேண்டும்,கவனம் சிதறாமல் எந்த அல்லாஹ்வை நாம் தொழுகிறோமோ அந்த அல்லாஹ்வை நாம் பார்ப்பதைப் போன்று தொழ வேண்டும், இல்லையென்றால் அவன் நம்மைப் பார்க்கிறான் என்ற உணர்வோடு தொழ வேண்டும்,நேரம் தவறாமல் தொழ வேண்டும்,ஜமாஅத்தோடு தொழ வேண்டும்,எல்லாவற்றுக்கும் மேலாக பணிவோடு தொழ வேண்டும், இத்தனை அம்சங்களும் இணைந்தது தான் தொழுகை. 

அந்த  தொழுகை எப்படி பட்டதாக இருக்க வேண்டும் என்றால் அதோ அவர் இரண்டு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் அமர்ந்து இருக்கிறாரே அவர்தான் என்று கூறவேண்டும் அதே போன்று (தஹ்மீது) அதாவது ருகூவிலிருந்து நிமிர்ந்து நேராக நின்று ஸஜ்தாவிற்கு செல்ல இருக்கிறாரே அவர்தான் என்று கூறும் அளவிற்கு நிதானமாக நம் தொழுகை இருக்க வேண்டும்.
இஸ்லாம் கற்றுத்தருவதும் இந்த தொழுகையைத்தான்.

அல்லாஹ் குர்ஆனில் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று சொல்வது இந்த தொழுகையைத்தான்.நபி ﷺ அவர்கள் நான் தொழுவதைப் போன்று தொழுகுங்கள் என்று சொன்னதும் இந்த தொழுகையைத்தான். இன்றைக்கு நாம் எல்லாருமே தொழுகிறோம்.ஆனால் நம்மில் எத்தனை பேரின் தொழுகை அல்லாஹ் பொருந்திக்கொண்ட தொழுகையாக நபி ﷺ விரும்பிய தொழுகையாக இருக்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்....) அவர்கள் கூறுகிறார்கள்::::!
தொழுகை விஷயத்தில் மக்கள் ஐந்து வகையாக இருக்கிறார்கள். 

1, தண்டனைக்குரியவர், 2, கேள்வி கேட்கப்படுபவர். 3, பாவங்கள் மன்னிக்கப்படுபவர். 4, கூலி வழங்கப்படுபவர். 5, இறை நெருக்கத்தைப் பெறுபவர்.

1, சரியாக ஒழு செய்யாமல் தொழுகையின் நேரங்களைப் பேணாமல் அதன் வாஜிபுகளை ஃபர்ளுகளைப் பேணாமல் தொழுபவர் தண்டனைக்குரியவர்.

2, மேற்சொன்ன விஷயங்கள் சரியாக இருக்கும். ஆனால் தொழுகையில் உலக விஷயங்களை சிந்தித்துக் கொண்டு, அதனால் மன ஓர்மையின்றி மனக்குழப்பங்களோடு தொழுவார். இவர் அல்லாஹ்விடம் அதற்காக கேள்வி கேட்கப்படுவார்.

3, தொழுகையில் வெளிச்சிந்தனைகள் வராமல் இருக்க ஷைத்தானோடு கடுமையாக போராடுவார்.இதன் காரணத்தால் இவரின் பாவங்கள் அந்த தொழுகை  இல்லாமல் ஆக்கி விடுகிறது.

4, தொழுகையின் முஸ்தஹப்புகளை சுன்னத்துக்களை வாஜிபுகளை ஃபர்ளுகளை தொழுகையின் அத்தனை அம்சங்களையும் முறையாக செய்ய வேண்டும் என்பதில் அவரின் முழுக்கவனமும் இருக்கும். அவருக்கு அந்த தொழுகைக்குண்டான முழு கூலியும் வழங்கப்படும்.

5, மேற் சொன்ன அனைத்தும் இருப்பதோடு இறைச்சிந்தனை மட்டுமே அவர் உள்ளத்தில் இருக்கும்.படைத்தவனை பார்க்கிறோம் என்ற உயரிய உணர்வோடு அவர் தொழுகை அமைந்திருக்கும்.இவர் இறை நெருக்கத்தைப் பெற்றவர் ஆவார்.     

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்...) அவர்கள் சொன்ன இந்த ஐந்து வகை தொழுகையாளிகளில் நாம் எந்த வகை தொழுகையாளியாக இருக்கிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தொழுகை நம்மீதான நேரம் நிர்ணயிக்கப்பட்ட கட்டாய கடமையாகும்

إن الصلاة كانت على المؤمنين كتاباً موقوتاً) [النساء:103. 

முஸ்லிம்களில் யாருக்கும் தொழுகையை விடுவதில் விதி விலக்கு இல்லை, ஏழை, பணக்காரன், வயோதிகன், இளைஞன், ஆண்கள் பெண்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், முதலாளிகள், ஆட்சியாளர்கள், குடிமக்கள் என்  அனைவர் மீதும் குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொழுகையை தவறவிடுகிறவரை திருகுர்ஆன் கடுமையாக எச்சரித்துள்ளது.

فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غياً) [مريم:59]

غياً என்பது நரகத்தின் அடி ஆழத்தில் இருக்கிற பகுதி. நரக வாசிகளின் சீழ் மற்றும் வாந்திகளால் நிரம்பியது. 

عن عبد الله بن مسعود : ( فسوف يلقون غيا ) قال : واد في جهنم ، بعيد القعر ، خبيث الطعم

عن أبي عياض في قوله : ( فسوف يلقون غيا ) قال : واد في جهنم من قيح ودم (இப்னுகஸீர்)

أضاعوا الصلاة என்பதற்கு அறவே தொழாமல் இருப்பவர் என்று அர்த்தமல்ல. நேரம் தவறித் தொழுபவர் என்று பொருள்.

أن عمر بن عبد العزيز قرأ : ( فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ) ، ثم قال : لم تكن إضاعتهم تركها ، ولكن أضاعوا الوقت .

தொழுகையை தாமதப்படுத்துவதில் ஹதீஸ்களின் எச்சரிக்கை!!!!!!!!

நோன்பு ஹஜ் போன்ற கடமைகள் இயலாத நிலையில் விட்டுவிட அனுமதியுண்டு, ஆனால் பைத்தியமாகி விட்டால் அல்லது கோமா நிலையில் இருந்தால் மட்டுமே தொழுகை கடமையாகாது.
நோயாளியின் மீதும் தொழுகை கடமை தான் என்று சட்டநூல்கள் நமக்கு கற்றுத் தருகின்றன

فإن قدر على القيام صلى قائمًا، وإن عجز عنه صلى قاعدًا، وإن عجز عن القعود صلى على جنب، وإن عجز أومأ برأسه، فإن عجز أومأ بطرفه, ولا تسقط الصلاة عنه ما دام عقله ثابتًا.

நேரம் இல்லை, நிறைய வேலை என்று சொல்லி தொழுகையை நாம் தவிர்ப்போம் என்றால் அதன் தரம் எத்தகையது என்பதை நாம் எண்ணிப்பார்க்க கடமைப் பட்டிருக்கின்றோம்

அலுவலகப் பணிகள், வியாபார நெருக்கடிகள் என்று எந்தக் காரணமும் தொழுகையை விடுகின்ற விஷயத்திலோ தாமதப்படுத்துகின்ற விஷயத்திலோ அறவே ஏற்புடையது அல்ல.

சோம்பல் அல்லது அலட்சியம் வேலை பளு காரணமாக தொழுகையை தவற விடுவோம் எனில் அல்லது தாமதப் படுத்துவோம் எனில் அது மார்க்கத்தின் பார்வையில் எத்தகைய குற்றமாகும் என்பதை முஃமின்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சொர்க்கவாசிகள் தங்களுக்கான இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கிடையில் உலகில் தங்களோடு வாழ்ந்த பலர் தம்மோடு இல்லை என்பதை உணர்வார்கள். அவர்கள் நரகத்தில் இருப்பதை அறிவார்கள். நரகத்தின் மேலே ஒரு நிழல் போல நின்று நரகில் கிடக்கிற தம் தோழர்ர்களிடம் நீங்கள் நரகம் சென்றதேன் என வினவுவார்கள். அதற்கு அம்மக்கள் கூறும் பதிலில் முதன்மையானது. நாங்கள் தொழுகையை சரியாக கடை பிடிக்க வில்லை என்பதாக இருக்கும்.

அந்தக் காட்சியை திரு‌ குர்ஆன் அழகாக எடுத்துரைக்கின்றது

إِلَّا أَصْحَابَ الْيَمِينِ(39)فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ(40)عَنْ الْمُجْرِمِينَ(41)مَا سَلَكَكُمْ فِي سَقَرَ(42)قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ(43)وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ(44)وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ(45)وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ(46)حَتَّى أَتَانَا الْيَقِينُ(47)فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ(48)

அறவே தொழாதவர் விஷயத்தில் சில சட்ட அறிஞர்களின் கருத்துக்கள் மிகக் கடுமையானவை.
சட்ட அறிஞர்களில் சிலர் இப்படியும் சொல்வதுண்டு.
தொழுகையே இல்லாதவர் உம்ரா ஹஜ்ஜு செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

சில காரியங்களை விரைவாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக்கூறும் இஸ்லாம்  முதலாவதாக அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய தொழுகையை பற்றி கூறுகிறது அரேபியாவில் ஒரு மனிதர் நான் உம்ராவுக்கு போகிறேன். என் மனைவியும் உடன் வருகிறாள். அவள் தொழுவதில்லை ., அவளுடைய உம்ரா செல்லுமா என  கேள்வி கேட்ட போது என் கருத்தின் படி அது செல்லாது என பத்வா வழங்கினார்கள் என்றால் தொழுகை எவ்வளவு அவசியமானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழுகை அறவே இல்லாத கணவனுடன் அல்லது மனைவியுடன் சேர்ந்து வாழ்வது கூடாது என்றும் கூட சட்ட அறிஞர்களில் ஒரு சாரார் கூறுவதுண்டு.........

وإذا استمرت الزوجة على ترك الصلاة لم يحل لك البقاء معها ؛ لأنه لا يجوز إبقاء المسلم على كافرة تحته ؛ لقوله تعالى : ( وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ ) الممتحنة

தொழுகை இல்லாதவரை திருமணம் செய்தால் அது செல்லாது என்றும் சிலர் பத்வா கொடுத்தது உண்டு.

இமாம் ஹன்பலி (ரஹ்....) தொழுகை இல்லாதவனை முர்தத் என்று சொல்கிறார்கள்

தொழுகையே தீனின் அடிப்படை – அதுவே ஒருவர் முஸ்லிம் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் என்பதே இதற்கு காரணம்.

 அல்லாஹ் இப்படிப்பட்ட சங்கை மிக்க இமாம்கள் மீது கிருபை செய்வானாக!

• اختلف العلماء فيمن ترك الصلاة تكاسلا بشكل متعمد
- الحنابلة قالوا : هو كافر مرتد عن الاسلام..وحكمه انه يقتل وألا يغسل ولا يكفن ولا يدفن في مقابر المسلمين.

 قال الشافعية والمالكية : انه يستتاب وان لم يتب يقتل حدا لا كفرا.
وقال سيدنا ابو حنيفة رحمه الله : هو فاسق ليس كافرا – والفسق هي مرتبة بين الايمان والكفر كالزاني المحصن – فانه يحبس ويضرب حتى يتوب او يموت في السجن

தொழுகையை அறவே விடுவதோ, அல்லது தாமதப்படுத்துவதோ பெரும் குற்றம் என்பதை உணர்வதற்கான பாடங்களை நமது முன்னோர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் அழுத்தமாக உணர்த்துகின்றன.

இன்னொரு வகையில் நமது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கச் செய்யவும் இவை உதவுகின்றன

அல்லாஹ் கிருபை செய்வானாக!

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை மஃரிபு தொழுகைக்குப் பின் தலைவலி அதிகரித்தது. காய்ச்சல் அதிகரித்து மயங்கினார்கள்.

இஷா தொழுகைக்கு வெகு நேரமாகியும் வரவில்லை. உள்ளே என்ன நிலைமை என்பதை தெரியாமல் பெண்களும் குழந்தைகளும் தூங்கி விட்டனர் 

யாரஸுலல்லாஹ் என சஹாபாக்கள் வெளியிலிருந்து அழைத்துக் கொண்டிருந்தனர்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி.....
) அவர்கள் கூறுகிறார்கள்.

நான் உள்ளே சென்று பார்த்தேன். பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டு போர்வை போர்த்துக் கொண்டு படுத்திருந்தார்கள். நான் மெதுவாக தொட்டுப் பார்த்தேன், இரண்டு போர்வைகளுக்கு மேலே அவர்களுடைய உடலின் சூடு கொதித்தது.

அப்போது கண் விழித்த பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்ட முதல் கேள்வி. மக்கள் தொழுது விட்டார்களா ?
أصلى الناس
எனக்கென்ன ஆனது ? என் மகள் பாத்திமா எங்கே ? மனைவி ஆயிஷா எங்கே ? என்று கேட்கவில்லை.

சஹீஹ் முஸ்லிமில் அந்த சூழ்நிலையை விவரிக்கிற அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

عن عبيد الله بن عبد الله قال دخلت على عائشة فقلت لها ألا تحدثيني عن مرض رسول الله صلى الله عليه وسلم قالت بلى ثقل النبي صلى الله عليه وسلم فقال أصلى الناس قلنا لا وهم ينتظرونك يا رسول الله قال ضعوا لي ماء في المخضب ففعلنا فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال أصلى الناس قلنا لا وهم ينتظرونك يا رسول الله فقال ضعوا لي ماء في المخضب ففعلنا فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال أصلى الناس قلنا لا وهم ينتظرونك يا رسول الله فقال ضعوا لي ماء في المخضب ففعلنا فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال أصلى الناس فقلنا لا وهم ينتظرونك يا رسول الله قالت والناس عكوف في المسجد ينتظرون رسول الله صلى الله عليه وسلم لصلاة العشاء الآخرة قالت فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر أن يصلي بالناس فأتاه الرسول فقال إن رسول الله صلى الله عليه وسلم يأمرك أن تصلي بالناس فقال أبو بكر وكان رجلا رقيقا يا عمر صل بالناس قال فقال عمر أنت أحق بذلك قالت فصلى بهم أبو بكر تلك الأيام ثم إن رسول الله صلى الله عليه وسلم وجد من نفسه خفة فخرج بين رجلين أحدهما العباس لصلاة الظهر وأبو بكر يصلي بالناس فلما رآه أبو بكر ذهب ليتأخر فأومأ إليه النبي صلى الله عليه وسلم أن لا يتأخر وقال لهما أجلساني إلى جنبه فأجلساه إلى جنب أبي بكر وكان أبو بكر يصلي وهو قائم بصلاة النبي صلى الله عليه وسلم والناس يصلون بصلاة أبي بكر والنبي صلى الله عليه وسلم قاعد 

ஹழரத் உமர் ரலி அவர்கள் சுபுஹ் தொழுகைக்காக நின்றார்கள். அவரை கொலை செய்யும் திட்டத்தோடு உள்ளே காத்திருந்தான் அபூலுஃலு ஆ எனும் மஜூஸீ. ஒரு மாதம் முழுக்க விஷம் தேய்க்கப்பட்ட ஒரு கத்தி அவனிடம் இருந்தது. போதிய விளக்கு வெளிச்சம் இல்லத்ததால் யாருக்கும் அவனையோ அவனுடைய திட்டம் பற்றியோ தெரியவில்லை. முதல் ரக்க அத் நடந்தது.. தொழுகைக்கு ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள், சதிகாரன் தாமதித்தான். இரண்டாவது ரக்க் அத் தொடங்கிய போது உமர் ரலி மீது பாய்ந்த அபூலுஃலுஆ உமர் ரலி அவர்களின் நெஞ்சில் ஒரு குத்து விலாவில் ஒரு குத்து வயிற்றில் ஒரு குத்து என மூன்று இடங்களில் குத்தினான். வயிற்றில் குத்திய போது கத்தியால் வயிற்றை கிழித்தும் விட்டான். குடல் கீழே சரிந்தது உமர் ரலி அவர்கள் மயங்கிச் சரிந்தார்கள். கண் விழித்ததும் அவர்கள் கேட்ட முதல் கேள்வி . மக்கள் தொழுது விட்டார்களா?
அவர்களுக்கு வயிற்றில் ஏற்ப்பட்ட காயம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள். எனது கை வயிற்றுக்கு உள்ளே சென்றது. மக்கள் தொழுவிட்டார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உமர் அவர்கள் அடுத்து கேட்டது தனது நிலையைப் பற்றியோ தன்னை குத்தியவனைப் பற்றியோ அல்ல.

வரலாற்றின் அந்த உணர்வெழுச்சி மிக்க பக்கங்களை புரட்டிப் பாருங்கள்..

தொழுகையை இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது, ஆனால் நம்மில் அதிகமானோர் தொழுவதே கடமைக்காகத்தான், இன்னும் அதிகமானோர் அது கடமை என்பதைக்கூட உணராமல் சிந்திக்காமல் வார முஸல்லியாக விஷேச தின முஸல்லியாக பெருநாள் முஸல்லியாக இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ல்்  இருக்கிறது

وما خلقت الجن والانس الا ليعبدون
மனிதன் மற்றும் ஜின் இனத்தை என்னை வணங்குவதற்காகவே தவிர படைக்க வில்லை. (அல்குர்ஆன் : 51 ; 56)

அல்லாஹ் நம்மைப் படைத்த நோக்கமும் நாம் இந்த உலகத்தில் பிறந்த நோக்கமும் தொழுவது தான்.

 நாம் படிப்பதோ வேலைக்கு போவதோ கல்யாணம் செய்வதோ பிள்ளைகளை பெற்றுக் கொள்வதோ வியாபாரம் செய்வதோ குடும்பத்தைக் கவனிப்பதோ சமூகத்தைக் கவனிப்பதோ சாப்பிடுவதோ தூங்குவதோ குளிப்பதோ இவை அனைத்தும் வாழ்வின் இரண்டாம் பகுதி தான். 

இந்த வசனத்தின் படி வாழ்வின் மிக முக்கியமான முதல் பகுதி வணக்கம் தான்.ஆனால் நாம் அதிகமாக அந்த இரண்டாம் பகுதியை கையில் எடுத்துக் கொண்டு முதல் பகுதியை கோட்டை விட்டு விடுன்றோம். இது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதை நாம் இந்த தருணத்தில் யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

தொழுகையில் நிறைய நன்மைகள் இருப்பதாக எண்ணற்ற பிரயோஜனங்கள் இருப்பதாக குர்ஆனும் ஹதீஸும் நமக்கு கூறுகிறது.

اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين
அவனை (மனிதனை) ஒரு தீங்கு தொட்டு விட்டால் பதறுகிறான். அவனை ஒரு நன்மை கிடைத்து விட்டால் (அது பிறருக்கு கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.தங்கள் தொழுகையின் மீது நிலைத்திருக்கிற தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்ஆன் : 70 ; 19,20,21,22,23)

இன்றைக்கு வாழ்க்கை என்றால் பதட்டம் என்றாகி விட்டது.எங்கும் பதட்டம்,எதிலும் பத்தட்டம், பதட்டமில்லாதவர்களைப் பார்ப்பது மிக மிக அரிதாகிப்போனது.ஆனால் அந்தப் பதட்டம் தொழுகையாளி களுக்கு இருக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்.எனவே வாழ்க்கையில் நிம்மதியும் அமைதியும் தொழுகையில் தான்  இருக்கிறது.

ولقد نعلم انك يضيك صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين
அவர்கள் சொன்ன வார்த்தைகளால் உமது உள்ளம் நெருக்கடியாவதை நாம் அறிவோம்.எனவே நீங்கள் உங்கள் இறைவனை புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்பவர்களில் நீங்களும் ஆகி விடுவீராக. (அல்குர்ஆன் : 15 ;97,98)

மன இறுக்கத்திற்கும் நிம்மதியின்மைக்கும் பதட்டமான சூழ்நிலைக்கும் அருமருந்தாக தொழுகையை இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இஸ்லாம் தொழுகைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போன்று வேறு எந்த காரியத்திற்கும் அந்தளவு முக்கியம் கொடுத்ததில்லை. இஸ்லாத்தில் எல்லா காரியத்திற்கும் சலுகை உண்டு. ஏதோ கட்டத்தில் அதை விட்டு விடுவதற்கு அனுமதி உண்டு.ஆனால் விடுவதற்கு அனுமதிக்கப்படாத ஒரே விஷயம் தொழுகை மட்டும் தான்.ஒரு மனிதன் பருவ வயதை அடைந்ததிலிருந்து அவன் மரணம் வரை எந்த சூழ்நிலையிலும் தொழ வேண்டும்.நின்று தொழ வேண்டும்,அதற்கு முடியாதவர்கள் உட்கார்ந்து தொழ வேண்டும், அதற்கு முடியாதவர்கள் படுத்துத் தொழ வேண்டும்,அதற்கும் முடியாதவர்கள் சைக்கினையால் தொழ வேண்டும். போர்க்களம் போன்ற பதட்டமான சூழ்நிலையில் கூட எப்படி தொழ வேண்டும் என்ற தெளிவை அல்குர்ஆனில் பார்க்க முடிகிறது. எனவே தொழுகையின் நிலையும் முறையும் மாறாமலேயே தவிர தொழுகையை விடுவதற்கு இஸ்லாம் அனுமதிக்க வில்லை.

அதனால் தான் நபி ﷺ அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிகின்ற அந்த கடைசி தருணத்தில் அவர்கள் தன் சமூகத்திற்கு வலியுறுத்திக் கூறிய மிக முக்கியமான விஷயமாக தொழுகை தான் இருந்தது. அருமை ஸஹாபா பெருமக்களின் சிந்தனையும் எண்ணமும் கவலையும் முழுக்க முழுக்க தொழுகையில் தான் இருந்திருக்கிறது.

إن يخرج وأنا فيكم ! فأنا حجيجه دونكم ، وإن يخرج ولست فيكم ، فامرؤ حجيج نفسه ، والله خليفتي على كل مسلم ، فمن أدركه منكم فليقرأ عليه فواتح سورة الكهف ، فإنها جواركم من فتنته . قلنا : وما لبثه في الأرض ؟ قال : أربعون يوما : يوم كسنة ويوم كشهر ، ويوم كجمعة ، وسائر أيامه كأيامكم فقلنا : يا رسول اللهِ : هذا اليوم الذي كسنة أتكفينا فيه صلاة يوم وليلة ؟ قال : لا ، اقدروا له قدره ، ثم ينزل عيسى بن مريم ، عند المنارة البيضاء شرقي دمشق فيدركه عند بًاب لد فيقتله

அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். (அபூதாவூது ; 4321)

கியாமத்தின் அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலைக் குறித்து நபி ﷺ அவர்கள் கூறும் போது, அந்த நேரத்தில் கூட ஸஹாபாக்களின் சிந்தனையும் எண்ணமும் தொழுகையைக் குறித்துத்தான் இருந்தது என்பதை இந்த ஹதீஸ் விவரிக்கிறது. 

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதியும் நீதத்தின் மறுஉருவமும் யாரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று அண்ணலம் பெருமானார் ﷺ அவர்களால் சோபனம் சொல்லப்பட்டார்களோ அத்தகைய ஹள்ரத் உமர் ரலி அவர்கள் எதிரியால் குத்தப்பட்டு அவர்கள் ஷஹீதாகுவதற்கு காரணமான அந்த எதிரியால் அவர்கள் தாக்கப்பட்டது தொழுகையில் தான் என்பது நமக்கெல்லாம் தெரிந்த செய்தி.அதில் நமக்குத் தெரியாத ஒரு செய்தி என்னவென்றால் மரணத்தின் விழிம்பில் இருந்த அவர்கள் அடிக்கடி மயக்கமுற்று விடுவார்கள். ஆனால் தொழுகை என்ற வார்த்தை அவரின் காதில் விழுந்தவுடன் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

قال مصعب : سمع عامر بن عبد الله المؤذن وهو يجود بنفسه ، فقال : خذوا بيدي فقيل : إنك عليل ، قال : أسمع داعي الله ، فلا أجيبه ، فأخذوا بيده ، فدخل مع الإمام في المغرب ، فركع ركعة ، ثم مات . المنتقي شرح مؤطا مالك
அமிர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் நோயுற்று எழுந்து நடப்பதற்கு இயலாதவர்களாக இருந்தார்கள்.அப்போது பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் என் கையைப் பிடித்து என்னை தொழுகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். நீங்கள் இயலாமல் இருக்கிறீரே என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ்வின் அழைப்பை நான் கேட்டு விட்டேன். எப்படி அதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியும் என்று சொன்னார்கள். அவரை அழைத்துச் சென்றார்கள். மக்ரிப் தொழுகையின் ஜமாஅத்தில் கலந்து கொண்டு ரூகூவிற்கு சென்றார்கள். அந்த நிலையிலேயே அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. (முன்தகா ஷரஹு முஅத்தா மாலிக்)

எனவே அருமை ஸஹாபாக்களைப் பொறுத்த வரை தொழுகை என்பது வெறும் கடமையல்ல. தொழுகையை அவர்கள் வெறும் கடமையாக மட்டும் பார்க்க வில்லை.அதை தங்கள் உயிராகக் கருதினார்கள்,தங்கள் உயிர் மூச்சாக நினைத்தார்கள்.அதன் ஆழத்தை விளங்கினார்கள், யாரும் எதிலும் காணாத இன்பத்தையும் சுகத்தையும் அவர்கள் தொழுகையில் கண்டார்கள். தொழுகை உயிர் மூச்சாக இருந்த காரணத்தினால் தான் ஹயாத்தாக இருக்கிறார்களா மரணித்து விட்டார்களா என்று தெரியாத அளவு மயக்கத்தில் இருந்த உமர் ரலி அவர்கள் தொழுகை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மயக்கம் தெளிந்தார்கள்,மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் கூட தொழ வேண்டும் என்று ஆசைப்பட்டு தொழச்சென்று அந்த தொழுகையிலேயே தன் உயிரை விட்டார்கள்.

தொழுகை என்பது வெறும் கடமையென்று தொழாமல் அதில் உள்ள இன்பத்தை உணர்ந்து தொழ வேண்டும்.உண்மையில் ஒருவர் தொழுகையில் இன்பத்தை உணர்ந்து விட்டால் ஒருக்காலும் அந்த தொழுகையை விட மாட்டார்.அப்படியே விட்டு விட்டாலும் அதை சாதாரணமாக நினைக்க மாட்டார்.

• ﺳﻠﻴﻤﺎﻥ عليه السلام ﻳﻀﺮبُ ﺃﻋﻨﺎقَ ﺧﻴﻠﻪ ﻭﺳﻮقَها؛ لأنها ﺷﻐﻠَﺘﻪ ﻋﻦ ﺻﻼﺓ ﺍﻟﻌﺼﺮ ﴿ حَتَّى تَوَارَتْ بِالْحِجَابِ ﴾ [ص: 32]؛ إﻧَّﻬﺎ الصلاة.
அஸர் தொழுகை தவறுவதற்கு காரணமாக இருந்த அத்தனை குதிரைகளையும் சுலைமான் நபி அலை அவர்கள் குர்பானி கொடுத்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

عنِ النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أنَّهُ قالَ يومَ الأَحزابِ : حَبَسونا عَن صلاةِ الوُسطى صَلاةِ العَصرِ حتَّى غربتِ الشَّمسُ ، ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا قالَ شعبةُ : ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا لا أَدري أفي الحديثِ هوَ أم ليسَ في الحديثِ أشُكُّ فيهِ .
அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி : 2931)

என்றைக்குமே தங்கள் வாழ்வில் யாரையும் பத்வா செய்து பழக்கப்படாத அருமை நாயகம் ﷺ அவர்கள் அஸர் தொழ விடாமல் தடுத்த அவர்களை பத்வா செய்தார்கள் என்றால் தொழுகையின் மீது அவர்களுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்க்க முடிகின்றது.
 
தொழுகையின் சுவையை, ருசியை, கனத்தைக் கூட்டுவதற்கு மூன்று குறிப்புகள்.

(1) தொழுவதற்காக நிற்கின்ற போது அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கிற உணர்வையும் எண்ணத்தையும் மனத்தில் இருத்திக் கொண்டு நில்லுங்கள். தேர்வறையில் மாணவனுக்கு முன்னால் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஆசிரியர் அமர்ந்துவிடுவாரேயானால் அந்த மாணவன் இங்குமங்கும் பராக்குப் பார்ப்பதற்கும், பிற மாணவர்களுடன் பேசுவதற்கோ, கால் சட்டைப் பையிலிருந்து பிட்டுகளை எடுத்து வீட்டிலிருந்து எழுதி வந்ததைப் பார்த்து எழுதுவதற்கோ துணிவானா, என்ன? நிச்சயமாக மாட்டான்.
அந்த மாதிரியான மன ஓர்மையையும் அச்சத்துடன் கூடிய பொறுப்பு உணர்வையும்தாம் நாம் இறைவனுக்கு முன்னால் தொழுகைக்காக நிற்கின்ற போது வளர்த்துக் கொள்ள வேண்டும்.

‘இஹ்ஸான் என்றால் என்ன?’ என நபிகளாரிடம் வினவப்பட்ட போது, ‘அல்லாஹ்வைப் பார்த்தவாறு வழிபாடு செய்யுங்கள். அந்த உணர்வு கிடைக்கவில்லையெனில் அல்லாஹ் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கிற உணர்வோடு வழிபடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். என்னுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கின்றான். தனிமையிலும் வெளிப்டையாகவும் நான் செய்கின்ற அனைத்தையும் அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அது மட்டுமல்ல, அதையும் தாண்டி எந்த எண்ணத்துடன் நான் எதனையும் செய்கின்றான் என்பதையும் என்னுடைய உள்நோக்கங்களையும் அவன் அறிந்தே இருக்கின்றான் என்கிற திடமான நம்பிக்கையும் உணர்வும் மனிதனின் மனத்தை நிறைக்கின்ற போது தொழுகையில் அவனுடைய இலயிப்பும், ஈடுபாடும், மன ஓர்மையும் கூடி விடுகின்றன.

(2)இதுதான் என்னுடைய இறுதித் தொழுகையாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்கிற எண்ணத்துடன் தொழ வேண்டும்.

ஒரு முறை ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, ‘இறைவனின் தூதரே! எனக்கு அறிவுரை ஒன்றை சுருக்கமாகக் கூறுங்கள்’ என்று விண்ணப்பித்தார். ‘தொழுகைக்காக நிற்கின்ற போது இதுதான் உங்களின் இறுதித் தொழுகை என்கிற எண்ணத்துடன் தொழுங்கள்’ என்று நபிகளார்(ஸல்) பதிலளித்தார்கள்.

எந்த இடத்தில், எந்த நேரத்தில் தாம் இறக்கப் போகின்றோம் என்பது எந்தவொரு மனிதருக்கும் தெரியாது. நாம் எல்லோருமே நம்மைச் சுற்றிலும் ஏராளமானோரை இழந்திருக்கின்றோம். முதியவர்கள் இறக்கின்றார்கள். ஆண்கள் மரணித்திருக்கின்றார்கள். பெண்கள் மரணித்திருக்கின்றார்கள். இளவல்கள், மாணவர்கள், வணிகர்கள், ஆலிம்கள், சாமானியர்கள் என எல்லாத் தரப்பினரும் இறக்கின்றார்கள். நோயாளிகளும் இறக்கின்றார்கள். உடல்நலத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்களும் இறக்கின்றார்கள். தீராத நோய்க்காளாகி தவிப்பவர்களும் இறக்கின்றார்கள். நோய் நொடி இல்லாமல் திடகாத்திரமாக இருப்பவர்களும் திடீரென இறக்கின்றார்கள்.

ஆக, யார் எப்போது எந்த இடத்தில் எந்த நிலையில் இறக்கப் போகின்றார் என்பதை எவருமே அறிய மாட்டார்கள். எனவே நாம் ஒவ்வொரு முறை தொழுகைக்காக நிற்கின்ற போது இதுதான் நம்முடைய இறுதி தொழுகை; இதற்குப் பிறகு இப்படி தொழுவதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற எண்ணத்துடனும் உணர்வுடனுமே தொழ வேண்டும். இது தொழுகையில் நம்முடைய மனம் ஒன்றிப் போவதற்கும் முழுமையான விழிப்பு உணர்வுடனும் மன ஓர்மையுடனும் தொழுவதற்கும் உதவும்.

(3)தொழுகையில் எவற்றையெல்லாம் ஓதுகின்றோமோ அவற்றை நல்ல முறையில் விளங்கிக் கொண்டு தொழ வேண்டும். எந்த அத்தியாயத்தை ஓத இருக்கின்றோமோ அதன் மொழிபெயர்ப்பையும் முதலிலேயே மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். தொழுகையில் அவற்றை ஓதுகின்ற போது எதனை ஓதுகின்றோம் என்கிற தெளிவு கிடைக்கும். புரியாமல் ஓதுகின்ற போது மனம் இங்குமங்கும் அலைபாய்வதற்கான சாத்தியம் இருக்கின்றது. புரிந்து ஓதினோம் எனில் இன்ஷா அல்லாஹ் மன ஓர்மை கிடைக்கும்.
உண்மையில் சொல்லப்போனால் இறைவனிடம் மன்றாடுவதற்கான வடிவம்தான் (முனாஜாத்) தொழுகை. இறைவனிடம் மன்றாடுபவருக்கு தாம் இறைவனிடம் என்னென்ன விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நபிகளார்(ஸல்) ஒரு முறை மக்களுக்கு முன்னால் உரையாற்றுகையில், ‘உங்களில் எவர் தொழுகைக்காக இறைவனுக்கு முன்னால் நின்றாலும் அவர் உண்மையில் இறைவனிடம் மன்றாடுபவர் ஆவார். எனவே, தாம் இறைவனிடம் என்ன மன்றாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் நல்ல முறையில் அறிந்திருக்க வேண்டும்’ என்றார்கள். (அஹ்மத் 4928)

நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் குர்ஆன் ஓதுகின்ற போது அவர்கள் ஆழமான உணர்வுகளுக்கும் மன எழுச்சிகளுக்கும் ஆளாவார்கள். சுவனம் பற்றிய வசனங்களை ஓதுகின்ற போது அவர்களின் மனம் குதூகலத்தால் திளைக்கும். மகிழ்ச்சியும் பரவசமும் அவர்களைத் தொற்றிக் கொள்ளும். நரகத்தைப் பற்றிய வசனங்களை ஓதுகின்ற போது அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். துடிதுடித்துப் போவார்கள்.

அல்லாஹ் தொழுகையாளிகளின் முடிவை இரண்டுவிதமாக அல்குர்ஆனில் அடையாளப் படுத்திக் காட்டுகிறான்.

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2)

தங்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருக்கும் முஃமின்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள்.( அல்குர்ஆன்: 23: 1, 2 )

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5)

தங்கள் தொழுகையில் கவனமற்றவர்களாக இருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடுதான்.( அல்குர்ஆன்: 107: 4, 5 )

தொழுகையாளிகளில் சிலருக்கு வெற்றி கிடைக்கின்றது. சிலருக்கு நாசம் உண்டாகிறது.

தொழுகையாளிகளுக்கு வெற்றி கிடைப்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். ஆனால், தொழுகையாளிகளுக்கு நாசம் கிடைப்பது பார தூரமான ஒன்றாகும்.

எனினும், இரண்டுமே தொழுகையிலிருக்கும் தன்மையை பொறுத்தே அமைகின்றது. 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனிடம் இருந்து அடிமைத்தனம் வெளிப்பட வேண்டும் என்பதற்காக சில அமல்களை மனிதனுக்கு கடமையாக்கியுள்ளான்.

அந்த அமல்களில் மிகவும் முக்கியமானது தொழுகையாகும். அந்த தொழுகையை முறைப்படி, முழுமையாக நிறைவேற்றும் போது அந்த தொழுகை அல்லாஹ்வால் அங்கிகரிக்கப்பட்டு நன்மைகளை பெற்றுத் தரும் உயரிய நற்காரியமாக அமைந்து விடுகிறது.

மாறாக, முறை தவறி முறைகேடாக தொழுகையில் ஈடுபடுவோமேயானால் அந்த தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகி விடுகின்றது.

ஆதலால், அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாபத்தைப் பெற்றுத் தரும் சாதனமாகவும் அது மாறி விடுகின்றது.

முஹம்மது ஷாஃபி வாஹிதி மேலப்பாளையம்
இமாம், சுன்னத் ஜமாஅத் பள்ளி, குன்றத்தூர்,சென்னை.

(Move to ...)

(Move to ...)
MONDAY, JUNE 29, 2020
இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 1 ; தொழுகை

வாழ்க்கை என்பது அவசரத்திற்குரியதல்ல, பதட்டத்திற்குரியதல்ல. அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மைப் பொறுத்த வரை எதிலும் நிதானம் தேவை, பொறுமை தேவை,சிந்தனை தேவை.இஸ்லாம் நமக்கு இதைத்தான் பயிற்றுவித்திருக்கிறது,பழக்கப்படுத்தியும் இருக்கிறது.
எதையும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செய்வதற்கும் இஸ்லாம் வழிகாட்ட வில்லை, அதில் எடுத்தோம் கவுத்தோம் என்று அவசரமாக செயல்படுவதற்கும் இஸ்லாம் வழிகாட்ட வில்லை. நிதானம் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்று. ஆனால் அதே வேளையில் விரைவாக செய்ய வேண்டும்.குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும்,அதில் நேரம் தவறாமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் அடையாளப் படுத்தியிருக்கிற ஒரு சில காரியங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அதில் முதலாவது, அல்லாஹ் நமக்கு கடமையாக் கியிருக்கிற ஐவேளைத் தொழுகை.

ثلاثة لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت كفؤا
நபி ﷺ அவர்கள் ஹள்ரத் அலி ரலி அவர்களைப் பார்த்து சொன்னார்கள் ; மூன்று விஷயங்களை பிற்படுத்தாதே. 1, நேரம் வந்து விட்டால் தொழுகையை. 2, மரணித்து விட்டால் அடக்கம் செய்வதை. 3, பெண்ணிற்கு தகுந்த ஜோடி அமைந்து மணமுடிப்பதை. (திர்மிதி : 1075)

ان الصلاة كانت علي المؤمنين كتابا موقوتا
நிச்சயமாக தொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிப்பிடப்பட்ட ஒரு கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 4 ;103(

இஸ்லாம் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒவ்வொரு நேரங்களைக் குறிப்பிட்டு அந்தந்த நேரங்களில் அதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.இஸ்லாம் குறிப்பிட்டுச் சொன்ன அந்த நேரங்களில் தொழாமல் காரணமில்லாமல் அதை பிற்படுத்துவது அதை தள்ளிப்போடுவது அதில் அசட்டை செய்வது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல, நாம் சரியாக தொழுதோம் என்பதற்கு அடையாளமும் அல்ல.

குர்ஆனில் 60 ம் மேற்பட்ட வசனங்களில் அல்லாஹ் தொழுகையைப் பற்றி சொல்கிறான்.அதில் எந்த இடத்திலும் தொழுங்கள் என்றோ தொழுவார்கள் என்றோ சொல்ல வில்லை. يقيمون الصلاة واقيموا الصلاة நீங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள், அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். اقامة الصلاة என்ற வார்த்தையைத்தான் அல்லாஹ் பயன்படுத்துகிறான். اقامة الصلاة என்ற வார்த்தைக்கு பல விளக்கங்களும் வியாக்கியானங்களும் சொல்லப்பட்டாலும் அதற்கு அறிஞர்கள் சொல்லும் முக்கியமான விளக்கம் المحافظة في الصلاة في اوقاتها தொழுகையை அதற்கான நேரங்களில் தொழுவது என்று தான் சொல்கிறார்கள். எனவே சரியான நேரங்களில் தொழாமல் தேவையில்லாமல் பிற்படுத்தித் தொழுதால் அல்லது அவ்வாறு பிற்படுத்தித் தொழுவதையே வாடிக்கையாக ஆக்கிக் கொண்டால் அது தொழுகை என்ற பெயரில் மட்டும் தான் இருக்குமே தவிர அது உண்மையான தொழுகையாக இருக்காது.அவர் தொழுதார் என்று தான் சொல்ல முடியுமே தவிர இறைவன் சொல்வதைப் போன்று அவர் தொழுகையை நிறைவேற்றினார் என்று சொல்ல முடியாது.எனவே தொழுதால் மட்டும் போதாது நேரம் தவறாமல் தொழ வேண்டும்.

وصَلُّوا كما رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أحَدُكُمْ، ولْيَؤُمَّكُمْ أكْبَرُكُمْ. .
நான் எப்படி தொழுவதாக நீங்கள் பார்த்தீர்களே அப்படியே தொழுங்கள். (புகாரி : 7246)

தொழுகை என்றால் முதலில் உடல், உடை, இடம் இம்மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்,ஒழு சரியான முறையில் செய்திருக்க வேண்டும்,அதிலுள்ள சுன்னத் முஸ்தஹப்புகளை பேண வேண்டும்,கிராஅத் பிழையில்லாமல் ஓத வேண்டும், ருகூஃ, சுஜூதுகளை நிதானத்தோடு செய்ய வேண்டும்,கவனம் சிதறாமல் எந்த அல்லாஹ்வை நாம் தொழுகிறோமோ அந்த அல்லாஹ் நாம் பார்ப்பதைப் போன்று தொழ வேண்டும், இல்லையென்றால் அவன் நம்மைப் பார்க்கிறான் என்ற து யோசிக்க வேண்டிய விஷயம்.

وقد ذكر العلامة ابن القيم الجوزية رحمه الله في كتابه "الوابل الصيب من الكلم الطيب" أن الناس في الصلاة على مراتب خمس هي "مُعاقَب، مُحاسَب، مُكفَّر عنه، مُثاب، مُقرَّب من ربه".
فالقسم الأول مُعاقَب وهو مرتبة الظالم لنفسه المفرط وهو الذي انتقص من وضوئها ومواقيتها وحدودها وأركانها، والقسم الثاني مُحاسَب وهو من يحافظ على مواقيتها وحدودها وأركانها الظاهرة ووضوئها لكن قد ضيع مجاهدة نفسه في الوسوسة فذهب مع الوساوس والأفكار.
وأما القسم الثالث هو مُكفَّر عنه وذلك من يحافظ على حدودها وأركانها وجاهد نفسه في دفع الوساوس والأفكار فهو مشغول بمجاهدة عدوه لئلا يسرق صلاته فهو في صلاة وجهاد .
والقسم الرابع مرتبة المُثاب من إذا قام إلى الصلاة أكمل حقوقها وأركانها وحدودها واستغرق قلبه مراعاة حدودها وحقوقها لئلا يضيع شيئا منها بل همه كله مصروف إلى إقامتها كما ينبغي وإكمالها واتمامها قد استغرق قلب شأن الصلاة وعبودية ربه تبارك وتعالى فيها.
والقسم الخامس هو مُقرَّب من ربه من إذا قام إلى الصلاة قام إليها كذلك ولكن مع هذا قد أخذ قلبه ووضعه بين يدي ربه عز وجل ناظرا بقبله إليه مراقبا له ممتلئا من محبته وعظمته كأنه يراه ويشاهده وقد اضمحلت تلك الوساوس والخطوات وارتفعت حجبها بينه وبين ربه فهذا بينه وبين غيره في الصلاة أفضل وأعظم مما بين السماء والأرض وهذا في صلاته مشغول بربه عز و جل قرير العين به
அல்லாமா இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; தொழுகை விஷயத்தில் மக்கள் ஐந்து வகையாக இருக்கிறார்கள். 1, தண்டனைக்குரியவர், 2, கேள்வி கேட்கப்படுபவர். 3, பாவங்கள் மன்னிக்கப்படுபவர். 4, கூலி வழங்கப்படுபவர். 5, இறை நெருக்கத்தைப பெறுபவர்.
1, சரியாக ஒழு செய்யாமல் தொழுகையின் நேரங்களைப் பேணாமல் அதன் வாஜிபுகளை ஃபர்ளுகளைப் பேணாமல் தொழுபவர் தண்டனைக்குரியவர்.
2, மேற்சொன்ன விஷயங்கள் சரியாக இருக்கும். ஆனால் தொழுகையில் உலக விஷயங்களை சிந்தித்துக் கொண்டு, அதனால் ஓர்மையின்றி மனக்குழப்பங்களோடு தொழுவார். இவர் அல்லாஹ்விடம் அதற்காக கேள்வி கேட்கப்படுவார்.
3, தொழுகையில் வெளிச்சிந்தனைகள் வராமல் இருக்க ஷைத்தானோடு கடுமையாக போராடுவார்.இவரின் பாவங்களை அந்த தொழுகை இல்லாமல் ஆக்கி விடும்.
4, தொழுகையின் முஸ்தஹப்புகளை சுன்னத்துக்களை வாஜிபுகளை ஃபர்ளுகளை தொழுகையின் அத்தனை அம்சங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதில் அவரின் முழுக்கவனமும் இருக்கும். இவர் கூலி வழங்கப்படுபவர்.
5, மேற் சொன்ன அனைத்தும் இருப்பதோடு இறைச்சிந்தனை மட்டுமே அவர் உள்ளத்தில் இருக்கும்.படைத்தவனை பார்க்கிறோம் என்ற உணர்வோடு அவர் தொழுகை அமைந்திருக்கும்.இவர் இறை நெருக்கத்தைப் பெற்றவர்.     

இமாம் இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் சொன்ன இந்த ஐந்து வகை தொழுகையாளிகளில் நாம் எந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தொழுகையை இஸ்லாம் கடையாக்கியிருக்கிறது, ஆனால் நம்மில் அதிகமானோர் தொழுவதே கடமைக்காகத்தான், இன்னும் அதிகமானோர் அது கடுமை என்பதைக்கூட உணராமல் சிந்திக்காமல் வார முஸல்லியாக விஷேச தின முஸல்லியாக பெருநாள் முஸல்லியாக இருப்பது வேதனை தரும் செய்தி.
وما خلقت الجن والانس الا ليعبدون
மனிதன் மற்றும் ஜின் இனத்தை என்னை வணங்குவதற்காகவே தவிர படைக்க வில்லை. (அல்குர்ஆன் : 51 ; 56)

அல்லாஹ் நம்மைப் படைத்த நோக்கமும் நாம் இந்த உலகத்தில் பிறந்த நோக்கமும் தொழுவது தான். நாம் படிப்பதோ வேலைக்கு போவதோ கல்யாணம் செய்வதோ பிள்ளைகளை பெற்றுக் கொள்வதோ வியாபாரம் செய்வதோ குடும்பத்தைக் கவனிப்பதோ சமூகத்தைக் கவனிப்பதோ சாப்பிடுவதோ தூங்குவதோ குளிப்பதோ இவை அனைத்தும் வாழ்வின் இரண்டாம் பகுதி தான். இந்த வசனத்தின் படி வாழ்வின் மிக முக்கியமான முதல் பகுதி வணக்கம் தான்.ஆனால் நாம் அதிகமாக அந்த இரண்டாம் பகுதியை எடுத்துக் கொண்டு முதல் பகுதியை கோட்டை விட்டு விடுகிறோம். இது எவ்ளோ பெரிய அநியாயம் என்பதை நாம் இந்த தருணத்தில் யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

தொழுகையில் நிறைய நன்மைகள் இருப்பதாக எண்ணற்ற பிரயோஜனங்கள் இருப்பதாக குர்ஆனூம் ஹதீஸும் நமக்கு கூறுகிறது.

اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين
மனிதன் அவசரக்காரணாக படைக்கப்பட்டுள்ளான்.அவனை ஒரு தீங்கு தொட்டு விட்டால் பதறுகிறான். அவனை ஒரு நன்மை தொட்டால் (அது பிறருக்கு கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.தங்கள் தொழுகையின் மீது நிலைத்திருக்கிற தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்ஆன் : 70 ; 19,20,21,22,23)

இன்றைக்கு வாழ்க்கை என்றால் பதட்டம் என்றாகி விட்டது.எங்கும் பதட்டம்,எதிலும் பத்தட்டம், பதட்டமில்லாதவர்களைப் பார்ப்பது மிக மிக அரிதாகிப்போனது.ஆனால் அந்தப் பதட்டம் தொழுகையாளி களுக்கு இருக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்.எனவே வாழ்க்கையில் நிம்மதியும் அமைதியும் தொழுகையில் இருக்கிறது.

ولقد نعلم انك يضيك صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين
அவர்கள் சொன்ன வார்த்தைகளால் உமது உள்ளம் நெருக்கடியாவதை நாம் அறிவோம்.எனவே நீங்கள் உங்கள் இறைவனை புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்பவர்களில் நீங்களும் ஆகி விடுவீராக. (அல்குர்ஆன் : 15 ;97,98)

மன இறுக்கத்திற்கும் நிம்மதியின்மைக்கும் பதட்டமான சூழ்நிலைக்கும் அருமருந்தாக தொழுகையை இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இஸ்லாம் தொழுகைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போன்று வேறு எந்த காரியத்திற்கும் அந்தளவு முக்கியம் கொடுத்ததில்லை. இஸ்லாத்தில் எல்லா காரியத்திற்கும் சலுகை உண்டு. ஏதோ கட்டத்தில் அதை விட்டு விடுவதற்கு அனுமதி உண்டு.ஆனால் விடுவதற்கு அனுமதிக்கப்படாத ஒரே விஷயம் தொழுகை மட்டும் தான்.ஒரு மனிதன் பருவ வயதை அடைந்ததிலிருந்து அவன் மரணம் வரை எந்த சூழ்நிலையிலும் தொழ வேண்டும்.நின்று தொழ வேண்டும்,அதற்கு முடியாதவர்கள் உட்கார்ந்து தொழ வேண்டும், அதற்கு முடியாதவர்கள் படுத்துத் தொழ வேண்டும்,அதற்கும் முடியாதவர்கள் சைக்கினையால் தொழ வேண்டும். போர்க்களம் போன்ற பதட்டமான சூழ்நிலையில் கூட எப்படி தொழ வேண்டும் என்ற தெளிவை அல்குர்ஆனில் பார்க்க முடிகிறது. எனவே தொழுகையின் நிலையும் முறையும் மாறாமலேயே தவிர தொழுகையை விடுவதற்கு இஸ்லாம் அனுமதிக்க வில்லை.

அதனால் தான் நபி ﷺ அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிகின்ற அந்த கடைசி தருணத்தில் அவர்கள் தன் சமூகத்திற்கு வலியுறுத்திக் கூறிய மிக முக்கியமான விஷயமாக தொழுகை தான் இருந்தது. அருமை ஸஹாபா பெருமக்களின் சிந்தனையும் எண்ணமும் கவலையும் முழுக்க முழுக்க தொழுகையில் தான் இருந்திருக்கிறது.

إن يخرج وأنا فيكم ! فأنا حجيجه دونكم ، وإن يخرج ولست فيكم ، فامرؤ حجيج نفسه ، والله خليفتي على كل مسلم ، فمن أدركه منكم فليقرأ عليه فواتح سورة الكهف ، فإنها جواركم من فتنته . قلنا : وما لبثه في الأرض ؟ قال : أربعون يوما : يوم كسنة ويوم كشهر ، ويوم كجمعة ، وسائر أيامه كأيامكم فقلنا : يا رسول اللهِ : هذا اليوم الذي كسنة أتكفينا فيه صلاة يوم وليلة ؟ قال : لا ، اقدروا له قدره ، ثم ينزل عيسى بن مريم ، عند المنارة البيضاء شرقي دمشق فيدركه عند بًاب لد فيقتله

அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். (அபூதாவூது ; 4321)

கியாமத்தின் அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலைக் குறித்து நபி ﷺ அவர்கள் கூறும் போது, அந்த நேரத்தில் கூட ஸஹாபாக்களின் சிந்தனையும் எண்ணமும் தொழுகையைக் குறித்துத்தான் இருந்தது என்பதை இந்த ஹதீஸ் விவரிக்கிறது. 

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதியும் நீதத்தின் மறுஉருவமும் யாரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று அண்ணலம் பெருமானார் ﷺ அவர்களால் சோபனம் சொல்லப்பட்டார்களோ அத்தகைய ஹள்ரத் உமர் ரலி அவர்கள் எதிரியால் குத்தப்பட்டு அவர்கள் ஷஹீதாகுவதற்கு காரணமான அந்த எதிரியால் அவர்கள் தாக்கப்பட்டது தொழுகையில் தான் என்பது நமக்கெல்லாம் தெரிந்த செய்தி.அதில் நமக்குத் தெரியாத ஒரு செய்தி என்னவென்றால் மரணத்தின் விழிம்பில் இருந்த அவர்கள் அடிக்கடி மயக்கமுற்று விடுவார்கள். ஆனால் தொழுகை என்ற வார்த்தை அவரின் காதில் விழுந்தவுடன் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

قال مصعب : سمع عامر بن عبد الله المؤذن وهو يجود بنفسه ، فقال : خذوا بيدي فقيل : إنك عليل ، قال : أسمع داعي الله ، فلا أجيبه ، فأخذوا بيده ، فدخل مع الإمام في المغرب ، فركع ركعة ، ثم مات . المنتقي شرح مؤطا مالك
அமிர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் நோயுற்று எழுந்து நடப்பதற்கு இயலாதவர்களாக இருந்தார்கள்.அப்போது பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் என் கையைப் பிடித்து என்னை தொழுகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். நீங்கள் இயலாமல் இருக்கிறீரே என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ்வின் அழைப்பை நான் கேட்டு விட்டேன். எப்படி அதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியும் என்று சொன்னார்கள். அவரை அழைத்துச் சென்றார்கள். மக்ரிப் தொழுகையின் ஜமாஅத்தில் கலந்து கொண்டு ரூகூவிற்கு சென்றார்கள். அந்த நிலையிலேயே அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. (முன்தகா ஷரஹு முஅத்தா மாலிக்)

எனவே அருமை ஸஹாபாக்களைப் பொறுத்த வரை தொழுகை என்பது வெறும் கடமையல்ல. தொழுகையை அவர்கள் வெறும் கடமையாக மட்டும் பார்க்க வில்லை.அதை தங்கள் உயிராகக் கருதினார்கள்,தங்கள் உயிர் மூச்சாக நினைத்தார்கள்.அதன் ஆழத்தை விளங்கினார்கள், யாரும் எதிலும் காணாத இன்பத்தையும் சுகத்தையும் அவர்கள் தொழுகையில் கண்டார்கள். தொழுகை உயிர் மூச்சாக இருந்த காரணத்தினால் தான் ஹயாத்தாக இருக்கிறார்களா மரணித்து விட்டார்களா என்று தெரியாத அளவு மயக்கத்தில் இருந்த உமர் ரலி அவர்கள் தொழுகை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மயக்கம் தெளிந்தார்கள்,மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் கூட தொழ வேண்டும் என்று ஆசைப்பட்டு தொழச்சென்று அந்த தொழுகையிலேயே தன் உயிரை விட்டார்கள்.

தொழுகை என்பது வெறும் கடமையென்று தொழாமல் அதில் உள்ள இன்பத்தை உணர்ந்து தொழ வேண்டும்.உண்மையில் ஒருவர் தொழுகையில் இன்பத்தை உணர்ந்து விட்டால் ஒருக்காலும் அந்த தொழுகையை விட மாட்டார்.அப்படியே விட்டு விட்டாலும் அதை சாதாரணமாக நினைக்க மாட்டார்.

• ﺳﻠﻴﻤﺎﻥ عليه السلام ﻳﻀﺮبُ ﺃﻋﻨﺎقَ ﺧﻴﻠﻪ ﻭﺳﻮقَها؛ لأنها ﺷﻐﻠَﺘﻪ ﻋﻦ ﺻﻼﺓ ﺍﻟﻌﺼﺮ ﴿ حَتَّى تَوَارَتْ بِالْحِجَابِ ﴾ [ص: 32]؛ إﻧَّﻬﺎ الصلاة.
அஸர் தொழுகை தவறுவதற்கு காரணமாக இருந்த அத்தனை குதிரைகளையும் சுலைமான் நபி அலை அவர்கள் குர்பானி கொடுத்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

عنِ النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أنَّهُ قالَ يومَ الأَحزابِ : حَبَسونا عَن صلاةِ الوُسطى صَلاةِ العَصرِ حتَّى غربتِ الشَّمسُ ، ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا قالَ شعبةُ : ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا لا أَدري أفي الحديثِ هوَ أم ليسَ في الحديثِ أشُكُّ فيهِ .
அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி : 2931)

என்றைக்குமே தங்கள் வாழ்வில் யாரையும் பத்வா செய்து பழக்கப்படாத அருமை நாயகம் ﷺ அவர்கள் அஸர் தொழ விடாமல் தடுத்த அவர்களை பத்வா செய்தார்கள் என்றால் தொழுகையின் மீது அவர்களுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்க்க முடிகின்றது.
 
Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025