Skip to main content

நான் விடுமுறை காலங்களை வீணாக்கமாட்டேன்… 26-04-2024

நான் விடுமுறை காலங்களை வீணாக்கமாட்டேன்…

அல்லாஹ்வின் ﷻ பேரருளால்  [ شوال]   ஷவ்வால் மாதத்தின்  மூன்றாம் வார‌   ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்

சிறந்த தலைமுறையை கொண்டிருக்கிற ஓர் சமூகமே உயர்ந்த சமூகமாக இவ்வுலகில் பரிணமிக்க முடியும்.

இன்றைய நவீன உலகில் வாழும் மனித சமூகத்திற்கு முன்னால் இருக்கிற மிகப்பெரும் சவாலே இது தான்.

குறிப்பாக இஸ்லாமிய சமூகம் நல்லதோர் தலைமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில்கலைகலாச்சாரம்கல்விபண்பாடுசூழல்ஒழுக்கம் என அனைத்தும் மாசுபட்டு இருக்கிற காலச்சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

அநாகரீகம் நாகரீகமாகவும்பாவம் நன்மையாகவும்அலட்சியம் ஆரோக்கியமாகவும்ஒழுக்கச்சீரழிவுகள் உயர்பண்பாடாகவும்கலாச்சார சிதறல்கள் மதிப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிற ஓர் அபாயகரமான பாதையில் எம் சமூகத்தின் தலைமுறையினர் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இஸ்லாத்தின் போதனைகளைவழிகாட்டும் நெறிமுறைகளை வணக்க வழிபாடுகளோடு நிறுத்திக்கொண்டதன் விளைவாகநடைமுறை வாழ்க்கைக்கும்யதார்த்தமான உலகிற்குமான பண்பியல்களை அறியாத ஓர் மலட்டுச் சமூகத்தை சமீப காலமாக இஸ்லாமிய உலகு கண்டுகொண்டிருக்கிறது.

எனவேஇனிவரும் காலங்களில் இது போன்ற மலட்டுச் சமூகம் உருவாகாமல் பாதுகாக்கவும்உருவாகியிருக்கிற மலட்டுச் சமூகத்தை செப்பனிடவும் தீவிர நடவடிக்கைகளில் இஸ்லாமிய சமூகம் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய பொன்னான தருணம் இது.

ஒரு தலைசிறந்த சமூகத்தின் உருவாக்கம் என்பதும்ஒரு தலைசிறந்த மனிதனின் உருவாக்கம் என்பதும் சிறுபிராயத்திலிருந்தேகுழந்தைப் பருவத்திலிருந்தே துவங்கப்பட வேண்டும்.

இதோ கோடை விடுமுறை வந்து விட்டதுநம் வீட்டு குழந்தைகள்சிறார்கள் இது நாள் வரை பள்ளிக்கூடம்டியூஷன்ஸ்பெஷல் கிளாஸ்எக்ஸ்ட்ரா கிளாஸ் என ஒரு நீண்ட கல்விச் சூழலில் பயணித்து வந்திருக்கின்றார்கள்.

இப்போதுகிடைத்திருக்கிற விடுமுறை எனும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி அவர்களை செப்பனிடும் வகையிலே இஸ்லாமியமயமாக்கும் முயற்சியிலே பெற்றோர்களும் சமூகமும் ஈடுபட முன்வர வேண்டும்.

எப்படி நாம் ரமழானை தக்வாவின் பயிற்சிக் கூடமாக பயன் படுத்துகிறோமோ அது போன்று இந்த விடுமுறை நாளை சிறந்த தலைமுறையை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ()

சுவையாக உண்ணுங்கள்பருகுங்கள்ஓய்வு நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”                           ( அல்குர்ஆன்: 69:24 )

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று உருவாக்கப்படும் சிறந்த குழந்தைகளே நாளைய சிறந்த தலைமுறையினர்இன்று நன்கு கவனிக்கப்படும் விழுதுகளே – வேர்களேநாளைய விருட்சங்கள் – பயன்கள் பல தரும் மரங்கள்என்பதை மறந்து விடக்கூடாது.

எனவேநாம் நம்முடைய குழந்தைகளைசிறார்களை இஸ்லாமிய ஒளியில் வார்த்தெடுப்போம்.

குழந்தைகளை நல்வழிப்படுத்தும் பணி எப்போது துவங்கப்பட வேண்டும்?

பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களின் 15 வயதிலிருந்து 25 வயதுக்கிடையில் தான் ஏற்படுகிறது.

இது முற்றிலும் தவறான ஒன்றாகும்ஏனெனில்இஸ்லாம் புதுமணத் தம்பதியர்களாக இணையும் அந்த தருணத்திலேயே துவங்கிவிடுவதாகக் கூறுகின்றது.

ஆரம்பமாகஅவர்கள் நல்ல குழந்தைகளைபேறுபெற்ற நன்மக்களை பெற்றெடுக்க வேண்டும் என ஆசிக்குமாறும்அதையே பிரார்த்தனையாக வல்ல ரஹ்மானிடம் கேட்குமாறும் தூண்டுகிறது.

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ ()

இறைவாஎனக்கு சந்ததியை வழங்குவாயாகஅந்த சந்ததி உத்தமர்களில் ஒருவராக இருக்கவேண்டும்.”                                ( அல்குர்ஆன்: 37:100 )

இபாதுர்ரஹ்மான் – ரஹ்மானின் அடியார்களின் சிறப்புப் பண்புகளில் ஒன்றாக குர்ஆன் விமர்சிக்கும் போது

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ()

எங்கள் இறைவனேஎங்கள் துணைகளையும்எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாகமேலும்எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!.”                                                ( அல்குர்ஆன்: 25:74 )

திருமணத்தன்றைய முதலிரவில் இருந்து எப்பொழுதெல்லாம் குழந்தை ஆசையோடு இல்லற வாழ்க்கைக்குள் தம்பதியர்கள் நுழைகின்றார்களோ அப்பொழுதெல்லாம் இப்படியான ஒரு பிரார்த்தனையைச் செய்யுமாறு ஏவுகிறது.


அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகின்றேன்இறைவாஎங்களை விட்டு ஷைத்தானை விலக்குவாயாகஎங்களுக்கு நீ வழங்கப்போகும் குழந்தைச் செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்குவாயாக!” இந்த துஆவைக் கொண்டு துவங்கப்பட்ட உறவின் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகுமானால் ஒருக்காலமும் ஷைத்தான் அந்த குழந்தையை நெருங்கமாட்டான்” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.

அடுத்து குழந்தை பிறந்து பேச ஆரம்பித்ததிலிருந்து 7 –வயது வரை உள்ள பருவம்ஏழு வயதிற்குள் அல்லாஹ்வைப் பற்றியுண்டான அறிவிலிருந்து துவங்கிஷரீஆவின் ஏவல்விலக்கல்ஹராம்ஹலால் வரை உண்டான அனைத்து விஷயங்களையும் அந்த குழந்தைக்கு ஓர் பெற்றோர் புகட்டி விட வேண்டும்.


ஏனெனில்நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்: “பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்தின் மீதே பிறக்கின்றனஎனினும்அவர்களின் பெற்றோர்களே அந்தக் குழந்தைகளை யூதனாகவோமஜூஸியாகவோகிறிஸ்துவனாகவோ மாற்றிவிடுகின்றார்கள்.”              ( நூல்இப்னு கஸீர் )

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை அடைந்து விட்டால் தொழுமாறு ஏவுங்கள்அவர்கள் பத்து வயதை அடைந்து விட்டால் தொழுகைக்காக அடியுங்கள்” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.

ஏழு வயதானவுடன் தொழு என்று ஏவ வேண்டுமானால் தொழுகையைப் பற்றி அந்தக் குழந்தை தெரிந்திருக்க வேண்டும்அத்தோடு ஏன் தொழுகிறோம் என்கிற அறிவும் அந்தக் குழந்தைக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.

ஆககுழந்தை பேச ஆரம்பித்ததிலிருந்து ஏழு வயதுக்குள் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஷரீஆவின் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

மர்யம் (அலைஅவர்களின் விவகாரம் குறித்த நீண்ட விளக்கத்தில் மர்யம் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடும் போதுஅந்தச் சமூகம் ஏதேனும் கேள்வி கேட்டால் தொட்டிலில் கிடக்கும் குழந்தையை கைகாட்டுமாறு அல்லாஹ் மர்யம் (அலைஅவர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.

அது போன்றே அவர்களின் சமூகம் வினா எழுப்பமர்யம் (அலைஅவர்கள் தொட்டிலில் கிடந்த குழந்தையான ஈஸா (அலைஅவர்களை நோக்கி கையை காண்பித்தார்கள்.

அப்போதுஈஸா (அலைஅவர்கள்….

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا () وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا () وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا () وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا ()

நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன்அவன் எனக்கு வேதம் அருளினான்என்னைத் தூதராகவும் ஆக்கினான்பெரும் பாக்கியமுடையவனாகவும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே!

தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்கு கட்டளை பிறப்பித்துள்ளான்நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!

மேலும்என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாகவும் என்னை ஆக்கியுள்ளான்மேலும்முரடனாகவும்துர்பாக்கியமுள்ளவனாகவும் என்னை அவன் ஆக்கவில்லை”.  ( அல்குர்ஆன்: 19: 29- 32 )

எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஈஸா (அலைஅவர்களை அல்லாஹ் பேச வைத்தான் என்பதை இதற்கு முன்னுள்ள வசனங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனாலும்அவர்கள் அந்தச் சூழ்நிலையையோஅல்லது தங்களின் அற்புதப் பிறப்பு குறித்தோ அவர்கள் பேசவில்லை.

அல்லாஹ் இங்கே மறைமுகமாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றான் “ஒரு குழந்தை பேச ஆரம்பித்தவுடன் தான் அல்லாஹ்வின் அடிமை என்பதில் துவங்கி இஸ்லாத்தின் உயர் கடமைகள்பெற்றோர் நலன் பேணுதல் ஆகியவை குறித்து நன்றாக போதிக்கப்பட வேண்டும்” என்று.

ஃபிர்அவ்ன் உடைய மகளுக்கும்மனைவிக்கும் சிகை அலங்கார பணி செய்த மாஷிதா (ரலிஅவர்கள் வரலாறு வனப்பானதோர் எடுத்துக்காட்டாகும்.

அவர்கள் பெயர் அறியப்படாவிட்டாலும் அவர்கள் செய்த பணியின் பெயராலேயே அவர்கள் வரலாற்றில் அறியப்படுகின்றார்கள்.

عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لما أسري بي، مرت بي رائحة طيبة، فقلت: ما هذه الرائحة؟ قالوا: ماشطة بنت فرعون وأولادها،

இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் “ நான் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்ட போது பைத்துல்முகத்தஸின் அருகே நறுமணம் கமழ்வதை உணர்ந்தேன்அப்போது இங்கே நறுமணம் கமழ்வது ஏன்என ஜிப்ரயீல் (அலைஅவர்களிடம் வினவினேன்.

அதற்குஜிப்ரயீல் (அலைஅவர்கள் “இந்த நறுமணம் ஃபிர்அவ்னுடைய அரண்மனையில்ஃபிர்அவ்னுடைய மகளுக்கும்மனைவிக்கும் சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்ணாக வேலை செய்த மாஷிதா அவர்களின் கப்ரிலிருந்தும், அவர்களின் குழந்தைகளின் கப்ருகளில் இருந்தும் வருகின்றது.

சத்திய சன்மார்க்கத்திற்காக பல்வேறு சித்ரவதைகளையும்கொடுமையையும் ஃபிர்அவ்ன் அப்பெண்மணிக்கு இழைத்தான்அப்பெண்மணி பொறுமையை மேற்கொண்டு சத்திய தீனில் உறுதியாகவும் இருந்த காரணத்திற்காக அல்லாஹ் இத்தகையப் பேற்றை வழங்கியிருக்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

                                                      ( நூல்இப்னு கஸீர் )

وقال أبو جعفر الرازي، عن الربيع بن أنس، عن أبي العالية قال: كان إيمانُ امرأة فرعونَ من قبل إيمان امرأة خازن فرعون، وذلك أنها جلست تمشط ابنة فرعون، فوقع المشط من يدها، فقالت تعس من كفر بالله؟ فقالت لها ابنة فرعون: ولك رب غير أبي؟ قالت: ربي ورب أبيك ورب كل شيء اللهُ. فلطمتها بنتُ فرعونَ وضربتها، وأخبرت أباها، فأرسل إليها فرعون فقال: تعبدين ربا غيري؟ قالت: نعم، ربي وربك ورب كل شيء الله. وإياه أعبد فعذبها فرعون وأوتد لها أوتادًا فشد رجليها ويديها وأرسل عليها الحيات، وكانت كذلك، فأتى عليها يومًا فقال لها: ما أنت منتهية؟ فقالت له: ربي وربك وربُ كل شيء الله. فقال لها: إني ذابح ابنك في فيك إن لم تفعلي. فقالت له: اقض ما أنت قاض. فذبح ابنها في فيها، وإن روح ابنها بشرها، فقال لها: أبشري يا أمه، فإن لك عند الله من الثواب كذا وكذا. فصبرت ثم أتى [عليها] فرعون يومًا آخر فقال لهامثل ذلك، فقالت له، مثل ذلك، فذبح ابنها الآخر في فيها، فبشرها روحه أيضًا، وقال لها. اصبري يا أمه فإن لك عند الله من الثواب كذا وكذا. قال: وسمعت امرأة فرعون كلامَ روح ابنها الأكبر ثم الأصغر، فآمنت امرأةُ فرعونَ، وقبض الله روح امرأة خازن فرعون، وكشف الغطاء عن ثوبها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى رأت فازدادت إيمانًا ويقينًا وتصديقًا، فاطَّلع فرعون على إيمانها، فقال للملأ ما تعلمون من آسية بنت مزاحم؟ فأثنوا عليها، فقال لهم: إنها تعبد غيري. فقالوا له: اقتلها. فأوتد لها أوتادًا فشد يديها ورجليها، فدعت آسية ربها فقالت: { رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ } فوافق ذلك أن حضرها، فرعون فضحكت حين رأت بيتها في الجنة، فقال فرعون: ألا تعجبون من جنونها، إنا نعذبها وهي تضحك، فقبض الله روحها، رضي الله عنها  .

இமாம் அபூ ஜஅஃபர் அர்ராஸி (ரஹ்அவர்கள் அபுல் ஆலியா (ரஹ்அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் ஃபிர்அவ்னுடைய மகளுக்கு சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த போது கையில் இருந்து தவறி சீப்பு கீழே விழுந்ததுஅதை மாஷிதா (ரலிஅவர்கள் “பிஸ்மில்லாஹ்” கூறி எடுத்தார்கள்.

இதைக்கவனித்த ஃபிர்அவ்னுடைய மகள் “பிஸ்மில்லாஹ்” வின் பொருள் குறித்து விளக்கம் கேட்ட போதுஏகத்துவ விளக்கத்தையும்தான் மூஸா (அலைஅவர்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பதையும் விவரமாகக் கூறினார்கள்.

ஆணவம் பிடித்தவனின் மகளல்லவாஓங்கி ஓர் அடி அடித்து விட்டுதம் தந்தையிடம் வந்து “தந்தையேநம் அரண்மனையிலேயே உம்மை இறைவனாக ஏற்றுக்கொள்ளாத ஒரு பெண்மணி இருக்கிறாள்” என்று கூறி நடந்த சம்பவத்தைக் கூறினாள்.

இது கேட்டு வெகுண்டெழுந்த ஃபிர்அவ்ன்மாஷிதா (ரலிஅவர்களை அழைத்து “என் அல்லாத வேறொரு கடவுள் இருக்கின்றானாமேஅவனைத்தான் நீ வணங்குகின்றாயாமேஇது உண்மையா?” என்று கேட்டான்.

அதற்குமாஷிதா (ரலிஅவர்கள் “ஆம்என்னுடையஉம்முடையஇந்த பேரண்டம் முழுவதிலுமுள்ள அனைத்தினுடைய ஏக இறைவனாக அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான்அவனையே நான் வணங்குகின்றேன்இனிமேலும் நான் வணங்குவேன்!” என்று பதிலளித்தார்கள்.

இது கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஃபிர்அவ்ன் கயிற்றாலும்சங்கிலியாலும் கட்டிப்போட்டு கடும் சித்ரவதைகளைச் செய்தான்இனிமேலும்உன் மார்க்கத்திலும் கொள்கையிலும் நீ உறுதியோடு இருந்தால் நிறைய இழப்புக்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தான்.

இறைநம்பிக்கையும்ஏகத்துவ எழுச்சியும் இதயத்தில் நங்கூரமாய் பாய்ந்திருந்த காரணத்தால் மாஷிதா (ரலிஅவர்கள் அந்த சித்ரவதைகளைத் தாங்கிக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் மாஷிதா (ரலிஅவர்களின் இரண்டு ஆண்குழந்தைகளில் மூத்த ஆண்குழந்தையை அவர்களின் கண்முன்னே போட்டு கொடூரமாக அறுத்தான்.

தன் குழந்தை தன் கண்முன்னால் அறுக்கப்படுவதைப் பார்த்த மாஷிதா (ரலிஅவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த போது அறுக்கப்படும் அந்த சிறுவயது பாலகன் “உம்மாவேஅல்லாஹ்விடத்தில் உமக்கு பெரும் கூலி இருக்கின்றது என்பதை சோபனமாகப் பெற்றுக் கொள்!” என்று கூறினான்.

அடுத்த நாள் அவர்களின் கண்முன்னால் இரண்டாவது பாலகனும்அறுபடவே முன்பு போலவே இந்தப் பாலகனும் தன் தாய்க்கு சோபனம் கூறினான்.

உம்மாவேபொறுமையை மேற்கொள்ளுங்கள்அல்லாஹ்விடத்தில் இன்னின்ன அளவு உங்களுக்கு நற்கூலி வழங்கப்படும்” என்று.

இறுதியாகஃபிர்அவ்ன் மாஷிதா (ரலிஅவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தான்.

சத்திய சன்மார்க்கத்தில் நிலைத்திருப்பதற்காக மாஷிதா (ரலிஅவர்கள் வீர மரணத்தை விரும்பி தழுவினார்கள்.

மாஷிதா (ரலிஅவர்களின் நிலைகுலையாமைமற்றும் இஸ்திகாமத் அங்கு நடந்த கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னின் மனைவியான ஆசியா அவர்களின் மனதில் ஏகத்துவ சிறகை முளைக்கச் செய்தது.

அன்னை ஆசியா (ரலிஅவர்கள் ஒரு நாள் உறக்கத்தில் கனவில் மாஷிதா (ரலிஅவர்கள் சுவனத்தில் வீற்றிருக்கக் கண்டார்கள்.

இந்தக் காட்சி அவர்களின் ஈமானை இன்னும் உறுதிப்படுத்தியதுஇவர்கள் ஈமான் கொண்டிருக்கிற விஷயமும் ஃபிர்அவ்னுக்குத் தெரிய வரவே சித்ரவதைகளையும்கொடுங்கோன்மைகளையும் அரங்கேற்றினான்.

கொஞ்சம் கூட இசைந்து கொடுக்காமல்சத்திய சன்மார்க்கத்திலேயே நிலைத்து நின்றார்கள்.

ஒரு கட்டத்தில் கொடுமைகள் அதிகரிக்கவேஅல்லாஹ்விடம் கையேந்தி “இறைவாஎனக்காக உன்னிடத்தில் – சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாகமேலும்ஃபிர்அவ்னை விட்டும்அவனுடைய கொடுமையை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாகமேலும்கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!” என்று இறைஞ்சினார்கள்.

இறுதியாகஅன்னை ஆஸியா (ரலிஅவர்களும் ஷஹீத் வீரமரணத்தைத் தழுவினார்கள்அவர்களின் உயிர் பிரியும் போது அவர்களுக்காக அல்லாஹ் கட்டி வைத்திருக்கிற சுவனத்து மாளிகையைக் கண்டு ஆனந்தப்பட்டவர்களாகசிரித்த நிலையிலேய உயிரைத் துறந்தார்கள்.

                                                     ( நூல்இப்னு கஸீர் )

தன் தாய் தான் அறுபடுகிற போது சஞ்சலப்பட்டு இஸ்லாத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த இரு குழந்தைகளும் தன் தாய்க்கு சோபனம் சொன்னார்கள் என்றால் அந்தத் தாய் அந்தக் குழந்தைகளுக்கு எந்த அளவு அந்த சிறு வயதிலேயே இறைநம்பிக்கையை ஊட்டியிருக்க வேண்டும் என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

அடுத்து ஏழு வயதிலிருந்து பதினைந்து வரையிலான பருவம்குழந்தைகள் விஷயத்தில் கண்டிப்பும் கவனமும்விழிப்புணர்வும் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான பருவமும் கூட.

இங்கு நாம் சரியாக அவர்களை கண்காணிக்கவில்லைகண்டிக்கவில்லை என்றால் இனி ஒரு போதும் அவர்களைச் சரி செய்யவோநல்வழிப்படுத்தவோ முடியாது.

நபித்தோழர்களில் பலர் இந்த வயதில் தான் பல துறைகளில் சாதனை படைத்து சிறந்த முன் மாதிரியை விட்டுச் சென்றிருக்கின்றனர்.

இன்றைய காலத்து நமது சிறார்கள் விளையாட்டுக்காகவும்வேடிக்கைக்காகவும் புறப்பட்டுச் செல்கிற இதே பருவத்தில் வாளேந்தி யுத்தகளத்திற்குச் செல்லவும் தயங்கவில்லை நபிகளார் காலத்து சிறார்கள்.

இமாம் புகாரி (ரஹ்), இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) ஆகியோர் தங்களின் பதினைந்து வயதுகளில் ஹதீஸ்கலையில் பிரபல்யமானவர்களாக மதிக்கப்பட்டனர்.

அம்ர் இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களை நஜ்ரான் வாசிகளுக்கு மார்க்கப் போதனைகளுக்காகவும், இமாமத்திற்காகவும் நபி {ஸல்} அவர்கள் தேர்ந்தெடுத்த போது அவர்களின் வயது 11.

ஹஸன், ஹுஸைன் (ரலி – அன்ஹுமா) இருவரும் ஒருமுறை நபி {ஸல்} அவர்கள் சபையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அண்ணலாரிடத்தில் ஸதகாவாக சிறிதளவு பேரீத்தம் பழம் கொண்டுவரப்பட்டது.

அதில் ஒன்றை எடுத்து இருவரில் ஒருவர் வாயில் போட்டு விடவே, அண்ணலார் வாயில் கைவிட்டு அதை வெளியே எடுத்து வீசிவிட்டு தர்மப்பொருள் நம் குடும்பத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அது ஹராமாகும்” என்று கூறினார்கள்.

இதன் விளைவாக இருவரும் புடம் போட்ட தங்கமாக வாழ்வில் ஜொலித்ததை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபி {ஸல்} அவர்கள் தனதருமை மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டிற்கு பேரக்குழந்தைகளைக் காணச் சென்றிருந்தார்கள்.

இருவரும் இல்லை. மகளிடம் விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி {ஸல்} அவர்கள் பேரக்குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள். மதீனாவின் எந்த ஒரு பகுதியிலும் இருவரையும் காணவில்லை.

மதீனாவிற்கு வெளியே பாலைவனத்தை நோக்கி நபி {ஸல்} அவர்கள் ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம் விசாரித்த வண்ணம் சென்றார்கள்.

ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி {ஸல்} அவர்களின் முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து என்ன ஏது? என்று விசாரித்தார். நபி {ஸல்} அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.

அப்போது, நாயகமே! கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும் இருப்பார்கள். சற்று முன்னர் தான் இங்கு அவர்களை நான் கண்டேன்” என்று கூறிய அவர் அல்லாஹ்வின் தூதரே! ஒரு விஷத்தை நான் உங்களிடம் நான் சொல்லலாமா” என வேண்டினார்.

நபி {ஸல்} அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார் “அல்லாஹ்வின் தூதரே! சற்று முன்னர் தான் இருவரும் இங்கே வந்தனர். அவர்கள் முகத்தில் நான் பசியின் ரேகை படர்ந்திருந்ததை பார்த்து விட்டு, என் ஆட்டிலிருந்து பால் கறந்து தரவா? என்று இருவரிடமும் கேட்டேன்.

அப்போது, அவர்கள் இருவரும் ”நீங்கள் இந்த மந்தையின் உரிமையாளரா?” என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியென்றால் உங்கள் உரிமையில் இல்லாத இந்த மந்தையில் உள்ள ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று கூறி மறுத்து விட்டு, அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர்.

நபி {ஸல்} அவர்கள் அந்த தோடத்திற்கு வந்து பார்க்கின்றார்கள். அங்கே ஓர் மரத்தின் நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இருவரையும் எழுப்பி, வாரி அணைத்து முத்தமிட்டு இருதோள்புஜங்களிலும் இருவரையும் சுமந்தவர்களாக தங்களது மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து “ஃபாத்திமாவே! உம் தந்தை முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றாய்! என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்.   ( நூல்: துர்ரியத்துத் தாஹிரா )

அடுத்து, இந்தப் பருவத்திலேயே நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தந்திட வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, சகமுஸ்லிம்கள் ஆகியோரின் உரிமைகள் என்ன? யார் யாரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறார்களும் மூன்று நேரங்களில் உங்களிடையே வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும்.

அதிகாலைத் தொழுகைக்கு முன்னர்; மதிய வேளையில் உங்கள் ஆடைகளின் மீது நீங்கள் கவனம் இல்லாமல் இருக்கும் போது; இஷா தொழுகைக்குப் பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்க வேண்டிய நேரங்களாகும்.
                                                       ( அல்குர்ஆன்: 24:58 )
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களின் தனிப்பெரும் நேசத்திற்குரிய இளம் நபித்தோழர்களில் ஒருவர்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், ஜாபிர் (ரலி) அவர்களும் உரையாடிய நெகிழ்ச்சியான சம்பவம்…

عن جابر بن عبد الله قال: خرجت مع رسول الله صلى الله عليه وسلم إلى غزوة ذات الرقاع من نخل على جمل لي حفيف فلما قفل رسول الله صلى الله عليه وسلم قال: جعلت الرفاق تمضي وجعلت أتخلف حتى أدركني رسول الله صلى الله عليه وسلم فقال: ما لك يا جابر؟ قال: قلت: يا رسول الله أبطأ بي جملي هذا قال: أنخه قال: فأنخته وأناخ رسول الله صلى الله عليه وسلم ثم قال: أعطني هذه العصا من يدك أو اقطع لي عصا من شجرة قال: ففعلت قال: فأخذها رسول الله صلى الله عليه وسلم فنخسه بها نخسات ثم قال: اركب فركبت فخرج والذي بعثه بالحق يواهق ناقته مواهقة.
قال: وتحدثت مع رسول الله صلى الله عليه وسلم فقال لي: أتبيعني جملك هذا يا جابر؟ قال: قلت: يا رسول بل أهبه لك قال: لا ولكن بعنيه قال: قلت: فسمنيه يا رسول الله قال: قد أخذته بدرهم قال: قلت: لا إذن تغبنني يا رسول الله! قال: فبدرهمين قال: قلت: لا قال: فلم يزل يرفع لي رسول الله صلى الله عليه وسلم في ثمنه حتى بلغ الأوقية قال: فقلت: أفقد رضيت يا رسول الله؟ قال: نعم قلت: فهو لك قال: قد أخذته قال: ثم قال يا جابر هل تزوجت بعد؟ قال: قلت: نعم يا رسول الله قال: أثيباً أم بكراً؟ قال: قلت: لا بل ثيباً قال: أفلا جارية تلاعبها وتلاعبك! قال: قلت: يا رسول الله إن أبي أصيب يوم أحد وترك بنات له سبعاً فنكحت امرأة جامعة تجمع رءوسهن وتقوم عليهن

தாதுர் ரிகாஃ ஹிஜ்ரி நான்கில் பனூ ஃகத்ஃபான் கிளையாரை எதிர்த்துப் போரிட மாநபி {ஸல்அவர்களின் தலைமையில் நபித்தோழர்கள் சென்றனர்.                                                                                                                                                                  
பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லைமுஸ்லிம்கள் வெற்றியோடு திரும்பினார்கள். போர் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர்.                                                                                                                                              
இறுதியாகஅல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களும் ஜாபிர் {ரலிஅவர்களும் எஞ்சியிருந்தனர்.                                                                                                        

மெதுவாகப் பேச்சை துவக்கினார்கள் பெருமானார் {ஸல்அவர்கள் என்ன ஜாபிர்ஏன் இவ்வளவு தாமதம்?” அதுவாஅல்லாஹ்வின் தூதரே!கிழட்டு ஒட்டகம் ஆதலால் தான் தாமதம் என்றார்கள் ஜாபிர் {ரலி}.                                                                                                                                   
கீழிறங்கி என்னிடம் தாருங்கள் என்று ஜாபிரிடம் கூறிவிட்டுஅதை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் ஒட்டகத்தின் மீதேறிபிஸ்மில்லாஹ் கூறி தடவிக்கொடுத்தார்கள்.                                                    

ஒட்டகம் வேகமாகச் செல்ல ஆரம்பிக்கின்றதுஅதன் பின்னர் அல்லாஹ்வின் ரஸூல் ஜாபிர் அவர்களிடம் ஒட்டகத்தைக் கொடுத்தார்கள்.                                                                                                                                                          
அதன் மீதேறி அமர்ந்த ஜாபிர் {ரலிஒட்டகம் வேகமாகச் செல்வதைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.                                                           
                                                               
மீண்டும் பேச்சைத் தொடர்கின்றார்கள் நபி {ஸல்அவர்கள் ஜாபிர் திருமணம் முடித்து விட்டீர்களா?”                                                                                                
                                                                                               
ஆம்என்றார் ஜாபிர் {ரலி}. ”கன்னிப் பெண்ணாவிதவைப் பெண்ணா?”  என்று நபிகளார் கேட்டார்கள்.  அதற்கவர் விதவைப் பெண்ணை திருமணம் செய்திருக்கின்றேன்” என்றார்கள்.                                                           
               
ஏன் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாமேமண வாழ்வு மகிழ்ச்சி மிக்கதாய் அமைந்திருக்குமே? “ என்று மாநபி {ஸல்அவர்கள் கேட்டார்கள்.                                                                                                                                                                                                           
ஜாபிர் {ரலிசொன்னார்கள் இல்லை அல்லாஹ்வின் தூதர் அவர்களேஎனக்கு ஒன்பது சகோதரிகள்தந்தை உஹதில் ஷஹீதாகி விட்டார்கடனும் ஏராளமாய் இருக்கின்றது.                                                                          
               
இந் நிலையில் நான் என் என் சகோதரிகளின் ஒத்த வயதினில் உள்ள ஒரு கன்னிப் பெண்ணை  திருமணம் செய்தேனென்றால் அது நன்றாக இருக்காது, மேலும், என் சகோதரிகள் விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் விதவைப் பெண்னை மணம் முடித்திருகின்றேன்”. என்று கூறினார்கள்.

                                    ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )

எவ்வளவு பொறுப்பான ஓர் பதிலை ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஆகவே, அந்தந்தப் பருவங்களில் எப்படி குழந்தைகள் வளர்க்கப்பட  வேண்டுமோ அப்படி வளர்க்கப்பட்டு விட்டால் நல்லதோர் தலைமுறை இந்த சமூகத்தில் உருவாக்கம் பெறுவார்கள்.

 மழை காலங்களில் மழை நீரை சேகரித்தால் கோடைகாலத்தில் அம்மழை நீர் பயனுள்ளதாக இருப்பது போல். நாம் இந்த 50 நாட்களான கோடை விடுமுறையை நல்ல முறையில் இறை பொருத்தம் பெற செலவு செய்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தது போல ஆகிவிடும். 1. மாங்காய் காலத்தை வீணாக்கவில்லை அல்லாஹ்வின் கேள்வியிலிருந்து தப்பித்து கொள்ளலாம் 2. மாங்காய் மார்க்க கல்வியை அதிகமாக கற்றோம் என்ற மன திருப்தி அடையலாம்..

கோடை விடுமுறையை பயன்படுத்தும் நம் மாணாக்கர்களுக்கு “‘விலை மதிப்பில்லா நம் நேரங்களை'” பயன்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். என்று மாணாக்கர்களுக்கு  எப்போதும்  அறிவுறுத்திக் கொண்டிருக்க‌ வேண்டும்.

இக்கோடை விடுமுறையில் நல்ல முறையில் குர்ஆனை ஓதியும், ஸுரா மனனம் செய்தல், நபிலான வணக்கங்கள், நபிலான தொழகைகள், தொழுகை முறை, குர்ஆன் ஒதும் பயிற்சி, இஸ்லாமிய சட்டங்கள், நபி மொழி, இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள் இது போன்றவைகளை கற்று அல்லாஹ்விடம் இறை நெருக்கத்தை பெற முயற்சி செய்வோமாக‌!!!. ஆமின்.

காலங்களையும், நேரங்களையும் [50 நாட்களை] பயனுள்ளதாக ஆக்க அல்லாஹ் அருள் புரிவானாக!! ஆமீன்

 عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.

எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமஸ்வூத் பத்ரீ  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் , திர்மிதீ 2671 )

روى البخاري (71) ، ومسلم (1037) عن مُعَاوِيَةَ بن أبي سفيان رضي الله عنهما قال: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ).

எவருக்கேனும் அல்லாஹ் நன்மையை நாடினால், தீனுடைய விளக்கத்தையும் (நல்ல எண்ணங்களையும்) அவர் உள்ளத்தில் உதிக்கச் செய்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி  71 முஸ்லிம் 1037 )

இந்த கோடைவிடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்துவதும், வீணாக ஆக்குவதும் உங்களின் முயற்சியில்தான் உள்ளது.

தமிழ் அகராதியில் வீண் என்பதற்க்கு:- தனக்கும் பயன் இல்லாதது; அடுத்தவர்களுக்கும் பயன் இல்லாதது, அநாவசியமானது, என்பதாக‌ அர்த்தமாகும்.

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى ♣

:1 ﻭَﺍﻟْﻌَﺼْﺮِۙ
:2 ﺍِﻥَّ ﺍﻟْﺎِﻧْﺴَﺎﻥَ ﻟَﻔِﻰْ ﺧُﺴْﺮٍۙ
3 ﺍِﻟَّﺎ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺍٰﻣَﻨُﻮْﺍ ﻭَ ﻋَﻤِﻠُﻮﺍ ﺍﻟﺼّٰﻠِﺤٰﺖِ ﻭَﺗَﻮَﺍﺻَﻮْﺍ ﺑِﺎﻟْﺤَﻖِّ ۙ ﻭَﺗَﻮَﺍﺻَﻮْﺍ ﺑِﺎﻟﺼَّﺒْﺮِ

காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). [அல்குர்ஆன் 103:1-3]

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

【 ““நிச்சயமாக மனிதன் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி இருக்கின்றான்:-】

 عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ، الصِّحَّةُ وَالْفَرَاغُ

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு (புஹாரி6412) 

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

【நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் ஆவோம்…..】

 நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள். தம்முடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தன்னுடைய மனைவி, மக்களுக்கு பொறுப்பாளி. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி. அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.  புகாரி-2409 

وعن ابن عمَر رضي اللَّه عنهما قال: سَمِعتُ رَسُولَ الله ﷺ يقول: كُلُّكُمْ راعٍ، وكُلُّكُمْ مسئولٌ عنْ رعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ ومسئولٌ عَنْ رَعِيَّتِهِ، والرَّجُلُ رَاعٍ في أَهْلِهِ ومسئولٌ عَنْ رَعِيَّتِهِ، والمَرْأَةُ راعِيةٌ في بَيْتِ زَوْجِهَا ومسئولة عَنْ رعِيَّتِهَا، والخَادِمُ رَاعٍ في مالِ سيِّدِهِ ومسئولٌ عَنْ رَعِيَّتِهِ، فكُلُّكُمْ راعٍ ومسئولٌ عنْ رعِيَّتِهِ متفقٌ عَلَيهِ.

நாம் அனைவரும் நமது குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாக இருக்கிறோம். குழந்தைகளுக்கு உலகக் கல்வி கற்றுக் கொடுத்தோம் தவறில்லை. அவர்களுக்கு மார்க்கம் சம்பந்தமாக நாம் எவ்வளவு கற்றுக் கொடுத்திருக்கிறோம்? அல்லது அவர்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாமலேயே மரணித்து விட்டால் அல்லாஹ் ﷻ நம்மை விசாரிக்க மாட்டான் என்று எண்ணி கொண்டிருக்கிறோமா?

நம்முடைய குழந்தைகளை நோக்கி நீ டாக்டர் ஆக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும், இவ்வாறு சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்று அவர்கள் மீது உள்ள அக்கறையில் அன்றாடம் அறிவுரை கூறுகிறோம். தவறில்லை! ஆனால் அவர்களை நோக்கி, நீ மார்க்கத்தில் விளக்கம் பெற்றவனாக மாற வேண்டும், நீ தொழுகைகளை அன்றாடம் சரிவர கடைப்பிடிக்க வேண்டும் என்று மறுமைக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கிய பெற்றோரை நம்மால் அதிகம் காண முடியவில்லை.

திருமறைக் குர்ஆனை புரட்டிப் பார்க்கும்போது நமக்கு முன் வாழ்ந்த, அல்லாஹ்வால் புகழப்பட்ட ஏராளமான நபிமார்கள் & நல்லடியார்கள் தங்களுடைய குழந்தைகளுக்குப் பலதரப்பட்ட அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில் முக்கியமாக‌ “ஒழுக்கமான” குழந்தைகள் வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் விரும்பிக் கேட்டும் இருக்கிறார்கள்.

நபி நூஹ் (அலை)

11:42 وَهِىَ تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ‏

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகிவிடாதே!’’ என்று நூஹ் கூறினார். (அல்குர்ஆன்:11:42)

இப்ராஹிம் (அலை)

37:100 رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்க‌ள்.) (அல்குர்ஆன்:37:100)

இஸ்மாயில் (அலை)

19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ‌ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا‌ ۚ‏

19:55 وَكَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا‏

இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டு வீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

அவர் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவுபவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்க‌ள். (அல்குர்ஆன்:19:54, 55)

【இறையச்சமுடையவர்களின் வார்த்தைகள்…..】

25:74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!’’ என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன்:25:74)

இப்படி ஏராளமான நபிமார்கள், நல்லடியார்கள் தங்களுடைய குழந்தைகள் சரிவர வளரவேண்டும் என்றும், ஒழுக்கமிக்கவர்களாக மாற வேண்டும் என்றும், அவர்களுடைய இம்மை வாழ்வு மற்றும் மறுமை வாழ்வு ஆகிய இரண்டும் சீராக அமைவதற்காகவும் அவர்களுக்கு அற்புதமான அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள், அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து இருக்கிறார்கள்.

மேற்கண்ட வசனங்களை போல் நமது பிள்ளைகள் வர வேண்டுமென்றால் அவர்களுக்கு நேரத்திற்கேற்ற சரியான அறிவுரைகளும்.. பயிற்சிகளும்… தேவை.

இன்றைக்கு ஆண்ட்ராய்டு பிடியில் மாட்டி கொண்டிருக்கும் நம் சமுதாயத்தில் வாழக்கூடிய சிறு வயதுக் குழந்தைகளின் கரங்களில் தான் நாம் யோசித்துப் பார்க்க முடியாத அசிங்கங்களும் அனாச்சாரங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

புளுவேல் எனும் விளையாட்டின் மூலம் சிறார்க‌ள் வழிதவறிச் செல்வது நமக்கெல்லாம் ஆழ்ந்த வருத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.  ஆக இது போன்ற அவலங்கள் நடைபெறாமல் இருக்க‌ வேண்டுமென்றால்; நம் சிறார்க‌களுக்கு நபிகளாரின் அமுதமொழிகள், சிறுவர்களுக்கு நபிகளார் கொடுத்த பயிற்சிகள் சிலவற்றை சொல்லி கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்..

【தொழுகை பயிற்சி.…:-】

✍🏻 அன்புள்ளவர்களே! நம் சிறுவர்களுக்கு தொழுகை பயிற்சி கற்றுக் கொடுத்தல்: அன்புள்ள பெற்றோர்களே! இப்போது நம் பிள்ளைகளுக்கு விடுமுறை காலங்களாக இருப்பதினால்; பெண்களாகிய நாம்கள் நாம் ஐ- வேளை தொழுகையை வீட்டில் தொழுது வருகிறோம். நாம் தொழும் போது நம் வீட்டு சிறு பிள்ளைகளை அழைத்து நான் எப்படி தொழுகிறேன் பார்! என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக நம் பிள்ளைகளுக்கு தொழுகும் பயிற்சியை கற்றுக் கொடுங்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ ‏“‏ ‏.‏

உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத் 495).

குறிப்பு: தொழுகை விஷயத்தில் சந்தேகம் இருந்தால் உங்கள் மஹல்லா இமாம் அவர்களிடம் தெரிந்து விளக்கம் பெற்றிடலாம்.

இப்போது நம் பிள்ளைகளுக்கு விடுமுறை காலங்களாக இருப்பதினால்;  இக்காலங்களிலாவது பஜ்ர் தொழுகையை இமாம் ஜமாஅத்தோடு தொழ வாய்புகள் அதிகமாக உள்ளது.. மற்ற காலங்களின் என் மகன் ஸ்கூலுக்கு போக வேண்டும். லேட்டாகிவிடும் என்று சாக்கு போக்கு சொல்லிவிடுகிறோம். இப்போது வாய்ப்பு கிடைத்தும் நாம் செய்யாமல் இருப்பதை என்ன்வென்று சொல்வதோ?

மற்ற நாட்களில் நம்முடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக அவர்களைக் காலையில் ஃபஜ்ர் தொழுகைக்குக் கூட எழுப்பி விடாத பெற்றோர்களாகத் தான் நாம் இருக்கிறோம். இவ்வாறு சிறிய வயதில் நாம் கொடுக்கின்ற பயிற்சி தான் நாளைக்கு அவர்கள் சீரழியாமல் இருப்பதற்கான ஆயுதம் என்று சொல்லலாம். ஆனால் அந்தப் பொன்னான வாய்ப்புகளையெல்லாம் தவற விட்டுவிட்டு, கடைசியில் என்னுடய குழந்தைக்கு மறுமை சம்பந்தமாக எந்த ஒன்றையும் நான் சொல்லித் தரவில்லையே என்று புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை.

சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல் :-

 ،  عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.  புகாரி 432

மேலும் நம்முடைய வீட்டில் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதன் மூலம் நம்முடைய குழந்தைகள் அதனைப் பார்த்து அவர்களும் தொழுகை முறையை அறிந்து கொள்வதற்கும், தொழுகையின் பால் நாட்டம் கொள்தவற்கும் தோதுவானதாக அமையும். இதன் மூலம் நம்முடைய இல்லம் இறை நினைவு நிறைந்த வீடாக மாறும்.

【துஆ மனனப் பயிற்சி….:-】

சிறுவர்களிடத்தில் ஸூரா மனன பாடங்களை கேட்டல்: அன்புள்ள பெற்றோர்களே! நம் பிள்ளைகள் தினமும் மத்ரஸாவிற்க்கு வருகை தரும் போது உஸ்தாத் அவர்கள் நம் பிள்ளைகள் ஏற்கனவே மனனம் செய்ததை அடிக்கடி மனனம் செய்ய பயிற்சி கொடுப்பார்கள். இப்போது கோடை விடுமுறையில் இருக்கும் நம் பிள்ளைகளிடம்  மனனம் செய்த பாடங்களை ரிவிஸன் பன்னுங்கள் பெற்றோர்களே!

அன்புள்ள பெற்றோர்களே! இன்று நம் பிள்ளைகளிடத்தில் நீ எத்தனை சூராக்களை படித்திருக்கிறாய்? அத்தனை சூராக்களையும் சொல்லு பார்க்கலாம் என பாடங்களை கேளுங்கள். பாடங்களை கற்றுக் கொடுங்கள். 

இப்போது நம் பிள்ளைகளுக்கு விடுமுறை காலங்களாக இருப்பதினால்;  இக்காலங்களிலாவது நமது பிள்ளைகளுக்கு சுன்னத்தான துஆக்களை கற்றுக்கொடுப்போம்…

عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ قَالَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رضى الله عَنْهُمَا عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوِتْرِ ‏ “‏ اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ ‏”

ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வித்ரில் நான் ஓதவேண்டிய வார்த்தைகளை அவர்கள் எனக்கு கற்று தந்தார்கள்.அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத வகினீ ஷர்ர மா களைத்த. ஃப இன்னக்க தக்லி வலா யுக்லா அலைக்க. வ இன்னஹு ல யதுள்ளு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.

(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன். திர்மிதீ-464 (426)

பெரியவர்களாக வளர்ந்ததற்கு பின்னால் தவறான பாதைக்கு நம்முடைய குழந்தைகள் செல்லக்கூடாதென்றால் நபிகளாரை ﷺ போன்று இறைவனை துதிக்கின்ற துஆ க்களை அதிகமாக கற்று கொடுக்க வேண்டும்.

【இஸ்லாமிய ஒழுங்குகளை கற்று கொடுத்தல்…..:-】

 عَنْ عُثْمَانَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ “”

‘குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.’  [ஸஹிஹ் புஹாரி 5027] 

عن عمر بن أبي سلمة قال: كنتُ غُلاما في حَجْرِ رسول الله -صلى الله عليه وسلم-، وكانتْ يَدِي تَطِيشُ في الصَّحْفَة، فقالَ لِي رسول الله -صلى الله عليه وسلم-: «يا غُلامُ، سمِّ اَلله، وكُلْ بِيَمِينِك، وكُلْ ممَّا يَلِيكَ» فما زَالَتْ تِلك طِعْمَتِي بَعْدُ.

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. புகாரி-5376 

இன்றைக்கு தவறுகளுக்கு அடிப்படை காரணம் சிறிய வயதில் குழந்தைகளுக்கு எது ஹராம்? எது ஹலால்? என்று பெற்றோர்கள் பிரித்து சொல்லித்தராததுதான். இதோ நபிகளாரின் வழிமுறை…

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ فَيَجِيءُ هَذَا بِتَمْرِهِ وَهَذَا مِنْ تَمْرِهِ حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ، فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ ـ رضى الله عنهما ـ يَلْعَبَانِ بِذَلِكَ التَّمْرِ، فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً، فَجَعَلَهَا فِي فِيهِ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْرَجَهَا مِنْ فِيهِ فَقَالَ ‏ “‏ أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لاَ يَأْكُلُونَ الصَّدَقَةَ

மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களை கொண்டு வந்தததும் அது ஒரு பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவார்களான ) ஹசன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபிகளார் உடனே அதை வெளியே எடுத்து “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக்கூடாது என்பதை நீ அறியவில்லையா?’’ எனக்கேட்டார்கள். புகாரி-1485 

【நமது பிள்ளைகளும் நபிகளார் காலத்துப் பிள்ளைகளும்……:-】 

நம்மில் சிலர் நாங்கள் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று கூற வருகிறீர்களா? என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் நம்முடைய நோக்கம் அதுவன்று. மாறாக நம் குழந்தைகளை நபிகளார் காலத்துச் சிறிய வயது ஸஹாபாக்களைப் போன்று சரியாகத் தான் வளர்த்து இருக்கிறோமா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பீடு.

நபிகளார் காலத்தில் சிறு வயதினர் எப்படி வார்க்கப்பட்டார்கள் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  • குர்ஆனை அதிகம் மனனம் செய்த இப்னு அப்பாஸ் (ரலி)

جَمَعْتُ المُحْكَمَ في عَهْدِ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقُلتُ له: وما المُحْكَمُ؟ قَالَ: المُفَصَّلُ.

நான் அல்லாஹ்வின் தூதர் (வாழ்ந்த)காலத்திலேயே ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம் ‘அல் முஹ்கம்’ என்றால் என்ன என்று கேட்டேன் அவர்கள் ‘அல் முஃபஸ்ஸல்’ தான் (அல் முஹ்கம்) என்று கூறினார்கள். புகாரி-5036

நம்முடைய குழந்தைகளிடம் கேட்டால் எனக்கு இத்தனை படத்தில் உள்ள முழுப்பாடல்களும் தெரியும் என்று வேண்டுமானால் கூறுவதற்கு வாய்ப்பதிகம். ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ அல்முஹ்கம் என்று பெயரிடப்பட்ட அத்தியாயங்களை மனனம் செய்துள்ளார்கள்,

  • ஏழு வயதில் அனைவருக்கும் இமாமத் செய்த அம்ர் பின் ஸலிமா (ரலி)

திருக்குர்ஆனை அனைவரை விடவும் அதிகமாக மனனம் செய்து இமாம் என்ற கண்ணியத்தையும் பெற்று தம்முடைய தாய், தந்தையாருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த ஒரு (சிறிய) நபித்தோழரைப் பாருங்கள்.

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள்.

எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன்.

நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. புகாரி-4302 


 ஒரு தந்தைக்குத் தனது மகன் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான் என்பதோ அல்லது அவன் பெரிய வீடு கட்டிவிட்டான் என்பதோ மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை விட, அவனிடம் மார்க்கம் சம்பந்தமாக ஏதேனும் கேட்கப்பட்டால் அதற்குச் சரியான பதில் கூறுவான் என்பதே அவருக்கு அதிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ “مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ”ِ رواه الترمذي  1952و

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“ ஒரு தந்தை பிள்ளைக்கு அழகிய ஒழுக்கத்தை விட சிறந்த ஒரு வெகுமதியை தந்திட இயலாது.” (திர்மிதி-1952, )

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ. رواه ابوداؤد

உங்கள் குழந்தைகளை, ஏழு வயதில் தொழும்படி ஏவுங்கள், பத்து வயதில், தொழாவிட்டால் அடியுங்கள். மேலும், அவர்களை (சகோதர, சகோதரிகளைத்) தனித்தனிப் படுக்கைகளில் உறங்கவையுங்கள்” (அபூதாவூத் 495 )

உமர் (ரலி) அவர்களுடய எண்ணம் இவ்வாறே இருந்தது.

‘ஒரு மரம் உள்ளது. அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை. அம்மரம் இறை நம்பிக்கையாளனுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். மக்களின் சிந்தனை கிராமப்புறத்தில் உள்ள மரங்களின் பால் சென்றது. அது பேரீச்சை மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (நான் சிறுவனாக இருந்ததால் அதைக் கூற) வெட்கமடைந்தேன்.

அப்போது மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்களே கூறுங்கள்’ என்றனர். ‘அது பேரீச்சை மரம் தான்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தைக் கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் ‘நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்’ என்றார். புகாரி-131 

[இப்படி நிரந்தர உலகை நினைவுறுத்துவது தான் கோடை காலம்!]

இப்படி நிரந்தர உலகை நினைவுறுத்துவது தான் கோடை காலம்!

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا ، عَنِ الصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ

“வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-534 , முஸ்லிம் 72

இந்தக் கொடிய நரகத்திலிருந்து நிரந்தர சுவனபதி செல்வதற்காக இந்தக் கோடையிலிருந்து பாடம் கற்போமாக!

உலகத்தில் நம்மைத் தாக்கும் நெருப்பு ஒரு முனையிலிருந்து தான் வரும். ஒரு திசையில் நெருப்பு வரும் போது மறு திசைக்கு ஓடி தப்பிக்க வழியுண்டு. ஆனால் மறுமையில் உள்ள அந்த நெருப்பு எல்லா முனைகளிலிருந்தும் தாக்கிக் கொண்டிருக்கும். மேலே, கீழே, வலம், இடம் என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருப்பு சூழ்ந்து முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்.

يَوْمَ يَغْشٰٮهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَيَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! “நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்” என்று (இறைவன்) கூறுவான்

நிரந்தர நரகத்தில் சேர்க்கும் கொடிய பாவமான இணை வைப்பு என்னும் பாவத்தை விட்டு நம்மையும் நம் சமுதாய மக்களையும் காப்பதற்கு நாளும் உழைப்போமாக!.

இந்தக் கொடிய நரகத்திலிருந்து நிரந்தர சுவனபதி செல்வதற்காக இந்தக் கோடையிலிருந்து பாடம் கற்போமாக! நிரந்தர நரகத்தில் சேர்க்கும் கொடிய பாவமான இணை வைப்பு என்னும் பாவத்தை விட்டு நம்மையும் நம் சமுதாய மக்களையும் காப்பதற்கு நாளும் உழைப்போமாக!.

[சுற்றுலா பற்றி இஸ்லாம்:]

இஸ்லாம் அற நெறி மார்கம் .எனவே தான் மதம் சார்ந்த வைகளை தாண்டி உலகிலும் வாழ வேண்டிய வாழ்க்கை கலையையும் போதிக்கின்றது . எனவே (கோடை விடுமுறை-)ஓய்வு நேரங்களை /நாட்களை எவ்வாறு கழிக்க வேண்டும் என்பதையும் சொல்லி தருகிறது .

இயற்கையான உணர்வுகளுக்கு இஸ்லாம் ஒரு போதும் தடை விதித்ததில்லை. மாறாக முறையாக அனுமதியளித்து ஒரு சில வரம்புகளையும் விதித்ததிருக்கிறது. இயந்திர வாழ்க்கை வாழும் மனிதனுக்கு ஓய்வு பெற்று சகஜ சூழலுக்கு அப்பாற்பட்டு உல்லாச உலா சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது மனித இயல்பு தான்.

அரசு சார்பிலேயே சுற்றுலாவுக்கென ஒரு இலாகா ஒதுக்கப்பட்டிருப்பதும், சுற்றுலா மையங்களின் சீரமைப்பு பணிக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதும் இன்ப உலாவின் மீது மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இயற்கையான தாகத்தை நிருபிக்கிறது.

அல்லாஹ்வின் வல்லமைகளை ரசிக்கவும், ருசிக்கவும் பூஞ்சோலை.  நீர்த்தேக்கம், நீரருவி, கடல், உயிரியல் பூங்கா, அகியவற்றிற்க்கு சென்று வர இஸ்லாம் அனுமதித்திருக்கிறது.

قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ بَدَاَ الْخَـلْقَ‌ ثُمَّ اللّٰهُ يُنْشِئُ النَّشْاَةَ الْاٰخِرَةَ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‌ۚ‏

“பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்”  என்று (நபியே!) நீர் கூறுவீராக. {அல்குர்ஆன் 29:20.}

اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌ ۚ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ‏

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன. {அல்குர்ஆன் 22:46..}

، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ، فَإِذَا قَضَى نَهْمَتَهُ مِنْ وَجْهِهِفَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ ‏”‏‏.‏

பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் அது தடுத்துவிடுகிறது. எனவே, பயணி தாம் நாடிச் சென்ற நோக்கத்தை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே தம் வீட்டாரை நோக்கி விரைந்து வரட்டும்! { புகாரி 5429}

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا ‏”‏‏.‏

அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும். { புகாரி 2996}

கூடி, கும்மாளமிட்டு, மார்க்க முறையின்றி சுற்றித் திரிந்து, வெறும் செலவும் களைப்பும் மட்டுமே மிஞ்சுகிற அர்த்தமற்ற சுற்றுலா முறையைக் கைவிட்டு பக்குவம் நிறைந்த படிப்பினைகள் மிகுந்த அறிவுக்கும் ஆன்மாவுக்கும் பயன்தரும் வண்ணம் நம சுற்றுலாக்களை அமைக்க முயல்வோமாக..!    ஆமீன்

கிரிக்கெட்:

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை! ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.

இப்படிப்பட்ட அதி முக்கியத்துவம்? வாய்ந்த கிரிக்கெட்டைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று ஆதாரத்துடன் பார்ப்போம். முதலில் இஸ்லாம் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எந்த ஒரு விளையாட்டுக்கும் எதிரி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِحِرَابِهِمْ دَخَلَ عُمَرُ، فَأَهْوَى إِلَى الْحَصَى فَحَصَبَهُمْبِهَا‏.‏ فَقَالَ ‏ “‏ دَعْهُمْ يَا عُمَرُ ‏”‏‏.‏ وَزَادَ عَلِيٌّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ فِي الْمَسْجِدِ‏.‏

“அபிசீனியர்கள் நபி (ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து (கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து அவற்றால் அவர்களை அடித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘உமரே! அவர்களை விட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள்” (புஹாரி: பாகம் 3, அத்தியாயம் 56, எண்: 2901)

ஆனால் எந்த வித பலனுமில்லாத நேரத்தை வீணடிக்கிற, அறிவுக்கு சம்பந்தமில்லாத, சூதாட்டத்தை ஊக்குவிக்கிற, நாட்டின் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியில் தடை போடுகிற, ஆபாசத்தை தூண்டுகிற (Cheer Girls), ஆரோக்கியத்துக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு விளையாட்டையும் இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்ட ஆபத்துதான் இந்த கிரிக்கெட் என்று சொன்னால் மிகையாகாது. கிரிக்கெட் எனும் மாயப்பேயினால் நிகழக்கூடிய ஆபத்துக்களை ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இளைஞர்களே! உங்கள் கால்கள் விளையாட்டு மைதானங்கள் (Stadium) பக்கம் செல்வதில் இருந்தும் தவிர்த்து பள்ளிவாசல்கள் பக்கம் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்!

இளைஞர்களே! உங்கள் முன் இந்த சமுதாயத்தை தட்டி எழுப்பக்கூடிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மறுமையில் உங்கள் பொறுப்புகளைப்பற்றி கண்டிப்பாக வினவப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!

இளைஞர்களே! கிரிக்கெட் வீரர்களை Roll Model- லாக ஆக்காமல் திருக்குர்ஆனில் 85வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிற ஓரிறைக் கொள்கையை மக்கள் முன்னியைலில் எடுத்து வைப்பதற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஈமானின் பக்கம் திரும்ப வைத்த இளைஞரை உங்களுடைய முன்மாதிரியாக (Roll Model) ஆக்கிக் கொள்ளுங்கள்.

[கிரிக்கெட் பார்பதினாலோ, விளையாடுவதினாலோ நமக்கு ஏற்படும் தீங்குகள்].

தொழுகையை விடக்கூடிய நிலை, வீண் செலவுகள் பண விரயம், பணம் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை, பொழுதுபோக்கு, சூதாட்டம், ஆடைகுறைப்பு அழகிகள்,

இறைவன் இந்த சமுதாயத்தை கிரிக்கெட் என்ற படுகுழியில் விழுவதில் இருந்தும் காப்பாற்றி கரை சேர்ப்பானாக!! ஆமீன்.


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்