மக்தப் மதரஸாக்களின் சிறப்பு

(403) பிள்ளைகளை மக்தப் மதரஸாவுக்கு 
அனுப்புவதின் அவசியம்
***********************************************************
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ(9سورة الزمر)  பாடசாலைக்கு காலையில் சென்று குர்ஆனின் ஒரு ஆயத்தை அர்த்தத்துடன் கற்பது 100 ரக்அத் தொழுவதை விட சிறந்தது

இவ்வாறு கல்வியின் சிறப்பு அதிகம் அதிகம் உள்ளது ஆனால் இன்று சமுதாயத்தில் கல்வி என்றாலே ஸ்கூலுக்கு செல்வதும் காலேஜ்களில் படிப்பதும் தான் என்று ஆகி விட்டது உண்மையில் இவைகள் தனது உலகத்தரத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்க்காக கற்றுக் கொள்ளும் தொழிற் பாடங்களாகும் உண்மையில் அல்லாஹ் ரசூலிடம் கல்வி என்பது நபி ஸல் அவர்கள் சொன்ன ஹதீஸின் அடிப்படையில் வாழ்வதாகும்

இன்று நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரிந்தவர்கள் எத்தனை பேர் மார்க்க சட்டதிட்டங்கள் தெரிந்தவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லை இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டுயூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டு வீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது.

குறிப்பு - குழந்தைகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களாகும் எனவே முதலில் அவர்களுக்கு அவர்களின் எஜமானை பற்றி கற்றுக் கொடுப்பது அவசியமாகும். மூன்று வயதாகி விட்டாலே கலிமாவை சொல்லிக் கொடுக்க வேண்டும்

மக்தப் அனுப்பாததால் வரும் தீமைகள்-
1.மக்தப் என்பது அகீதா சம்பந்தப்பட்ட விஷயங்களை போதிக்கும் இடமாகும். இன்று குழந்தைகளைமக்தப்களுக்கு அனுப்பாததால் காலை முதல் மாலை வரை காபிரான ஆசிரியர்களுடனும், காபிரான சக மாணவர்களுடனும் இருக்கும் இவர்களால் சிறிது நேரம் கூட நல்லோர்களான ஆலிம்களுடன் இருக்க முடியாமல் போகிறது இதனால் ஏற்படும் விளைவு சில இஸ்லாமிய மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கோயிலின் உண்டியலில் ஒரு ரூபாய் காசு போட்டுவிட்டு செல்கின்றான் ஏனப்பா ஒரு ரூபாய் கோயில் உண்டியலில் போட்டாய் என்று கேட்டால் இதில் காசு கோட்டால் நன்றாக பாடம் வரும்னு ஸ்கூல்ல சொன்னாங்க என்கின்றான், இன்னும் சில மாணவர்கள் அங்குள்ள சிலைகளை வணங்கவும் இது தான் எனக்கு கல்வி தருகிறது என்று நம்பவும் செய்கிறார்கள் இது ஒரு கற்பனை அல்ல பலர் தங்கள் கண்களால் கண்டுள்ள உன்மையாகும்.
2.இன்று ஸ்கூலுக்கு மட்டும் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களில் பலர் தங்கள் பிள்ளைகள் தங்களை மதிப்பதில்ல
ை என்று கூறுகின்றனர் இதற்கு முழு காரணம் பெற்றோர்கள் தான். ஏனெனில் அவர்கள் எந்த அளவுக்கு கண்டித்து தனது பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்புகிறார்களோ அதில் ஒரு பங்கு கூட மக்தப்களுக்கு அனுப்புவதற்காக கண்டிப்பதில்லை அவ்வாறு கண்டித்து அந்த பையனுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்திருந்தால் தாய் தந்தைக்கு எப்படி மரியாதை செய்ய வேன்டும் என்பதை அந்த பிள்ளை கற்றுக் கொண்டிருப்பான்
3. வேறு சிலர்கள் மக்தப்களுக்கு செல்லாததால் அவர்கள் சற்று பெரிதானதும் எது உன்மையான மார்க்கம் என்று பிரித்தறிய முடியாமல் வஹ்ஹாபிகள் கூறுவதையெல்லாம் அப்படியே நம்பி வஹ்ஹாபியாகி விடுகின்றனர்.
4. இன்னும் சிலர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களை கேலி செய்கின்றனர் பாருங்கப்பா எப்படீலாம் சட்டம்னு இதுவெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்று ஏலனம் பேசுகின்றனர்
5.இன்னும் சிலர் நபியவர்களின் உயரிய சுன்னத்துக்களை வெறுக்கின்றனர் தாடிவைப்பதை கேவலமாக கருதுகின்றனர் தொப்பி ஜுப்பா அணிவதை கவுரவ குறைவாக கருதுகின்றனர். மாறாக முழுக்க முழுக்க ஆங்கிலேய கலாச்சாரத்தை பிரியப்படுகின்றனர். நபியவர்கள் சொன்னார்கள். 
இவ்வாறு சிறு நீர்கழித்து எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று கூட தெரியாதவர்களின் வாழ்கை முறை அங்கம் அங்கமாக பின்பற்றப்படுகிறது. அவர்களின் பண்டிகைகளை இவர்கள் பண்டிகைப் போல் கொண்டாடுகின்றனர் இந்த செயல்பாடுகள் நீங்கி இஸ்லாம் உயர வேண்டும் என்றால் இஸ்லாத்தின் வருங்கால சமுதாயமான சிறுவர்கள் நெஞ்சில் இஸ்லாத்தின் உயர்வும், சுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கைகளும் ஆழப்பதிய வேண்டும் அதற்காக ஆர்வமுடன் மக்தப் அனுப்ப வேண்டும்
மார்க்கக் கல்வியைத் தேடி நாடு விட்டு மற்றொரு நாட்டுக்கு பிரயாணம் செய்யும் காலம்

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025