நபியை திட்டியவர்கள் மோசமான முடிவை சந்திப்பார்கள் 10-06-22
THURSDAY, JUNE 9, 2022
அவர்கள் மோசமான முடிவுகளைத் தான் சந்திப்பார்கள்
إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ
(நபியே) உம்மை பரிகாசம் செய்வோர் குறித்து (தண்டனையளிக்க) நிச்சயமாக நாம் உமக்கு போதுமானவர்களாக இருக்கின்றோம். திருக்குர்ஆன்:- 15:95
அன்று முதல் இன்று வரை நீண்டகாலமாக இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்புணர்வை விதைக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் முனைப்புடன் செய்து வருகின்றனர். முஸ்லிம்களை தீவிரவாதச் செயல்பாட்டுடன் தொடர்புபடுத்தி, சினிமாக்களைத் தயாரித்து வந்தனர். இஸ்லாத்தின் போதனைகளைக் குறித்து தவறான கருத்துக்களை நாவல்களாக வெளியிட்டு வந்தனர். இதன் தொடரில் இறைத்தூதர்களில் தலைமையாகவும், இறுதியாகவும் மதிக்கப்படக்கூடிய நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்து வசைப்பாடி கேலிச்சித்திரங்களை வேண்டுமென்றே வரைந்து, முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி, தவறான சித்தரிப்புகளை மேற்கொண்டு, குழப்பங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ) உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தனது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தம் உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும். அறிவிப்பாளர்:- தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் நூல்:- முஸ்லிம்-78
கடந்த மே மாதம் 27 ம் தேதி டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் சர்ச்சை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா அங்கே பேசப்பட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தன்னுடைய வெறுப்புணர்வை கக்கும் வகையில் நாம் நம் உயிரை விட மேலாக மதிக்கின்ற நபி பெருமானார் ஸல் அவர்களை மரியாதைக் குறைவாக அவமதிக்கும் முகமான வார்த்தைகளை சொல்ல அது இப்போது உலகம் முழுக்க இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் கொந்தளிப்பு ஈரான் கத்தார் குவைத் ஓமன் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வரை வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் தொடர்புகளும் இருக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து 60 சதவீதம் கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது. மட்டுமல்லாது குவைத்,ஓமன், பஹ்ரைன்,ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் இந்தியர்களின் பெரும் பெரும் சூப்பர் மார்க்கெட்களும் ஹோட்டல்களும் இயங்கி வருகின்றன. 2019- 2020 ல் ஐக்கிய அமீரத்திற்கு மட்டும் 222000 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தில் 6 இலட்சம் கோடி அரபு நாடுகளிலிருந்து வருகிறது.இப்படி வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத் தொடர்பு மிக அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அந்த நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்படும்.
ஆனால் தற்போது அங்கிருக்கிற குப்பைத் தொட்டிகளில் மோடியின் புகைப்படத்தை ஓட்டும் அளவுக்கு அங்கே எதிர்ப்புக்கள் அதிகமாகி இருக்கிறது. முஹம்மது நபி ஸல் அவர்களின் மீது அவதூறான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிற இந்திய நாட்டின் தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பிழைப்பைத் தேடி வந்து இங்கு வேலை செய்கிற இந்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லப்படும் அளவிற்கு அரபு நாடுகளில் அதற்கு கடும் எதிர்ப்பு கிழம்பி விட்டது. வளைகுடா நாடுகளில் மொத்தம் 84 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.ஐக்கிய அமீரகத்தில் 34.25 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் செய்த இந்த காரியத்தால் அவர்கள் அத்தனை பேருடைய வாழ்வும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கே மிகப்பெரும் தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்திய நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது. இப்போது இந்த பிரச்சனையால் இந்திய நாட்டின் பொருளாதாரம் இன்னும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என நாட்டின் நடுநிலையாளர்கள் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி ஸல் அவர்களை அவமதிக்கும் விதமான கருத்துக்களை அவர்கள் சொல்வது இது முதல் முறையல்ல. தொடர்ந்து அவ்வப்போது இதுமாதரி கருத்துக்களை கூறி நாட்டு மக்களின் கோபத்தை தூண்டும் வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் பேசிய வார்த்தையைப் பார்த்து உலகத்தின் பல்வேறு அரபு நாடுகள் தங்களின் கண்டனக் குரலை பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் கதிகலங்கிப் போன அவர்கள் பா.ஜ.க அனைத்து மதங்களையும் மதிக்கிறது.எந்த மதத்தின் சித்தாந்தம் மீதும் நடத்தப்படும் அவமரியாதையை பா.ஜ.க பொறுத்துக் கொள்ளாது என்றெல்லாம் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். நபி ஸல் அவர்கள் மீது அவதூறான வார்த்தைகளை பதிவு செய்த நுபுர் ஷர்மாவை செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்தும் அதற்கு ஆதாரவாக ட்வீட் செய்த நவீன் ஜிண்டாலை பா.ஜ.க வின் கட்சியிலிருந்தும் நீக்கி அறிக்கையை வெளியிட்டார்கள்.இது ஒரு வாரமாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அரபு நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகள் நீங்கி அவர்களை சமாதானம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நேரடியாக மன்னிப்பு கேட்பது தான் சரியான அனுகுமுறை என்று பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஷரீஅத்தின் பார்வையில் நபி ஸல் அவர்களுக்கு தன் கரங்களால் தன் சொற்களால் தன் செயல்களால் நோவினைகள் கொடுப்பவர்களின் நிலை என்ன ? அவர்களுக்கு அல்லாஹ்வுடைய கோபத்தின் வெளிப்பாடாக அவன் கொடுத்த தண்டனைகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
قال ابن المنذر أجمع عوام أهل العلم على أن حدّ من سب النبي صلى الله عليه وسلم القتل. وممن قاله مالك، والليث، وأحمد، وإسحاق، وهو مذهب الشافعي
ஒருவன் நபியை திட்டினால் அவனுக்கான தண்டனை அவனைக் கொல்வது தான் என்பது அநேக உலமாக்களின் கருத்தாக இருக்கிறது.
அபூஜஹ்ல்
இறைநம்பிகையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். திருக்குர்ஆன்:- 33:6
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்று கொண்டிருந்தபோது என் வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்தேன். என்னருகே (இருபக்கங்களிலும்) இளம் வயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் (முஆத் பின் அம்ர் -ரலி, முஆத் பின் அஃப்ரா - ரலி) நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தி, ( يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ ) "என் பெரிய தந்தையின் சகோதரரே! (என மரியாதை நிமித்தம் அழைத்து) நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?" என்று கேட்டார். நான், "ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை?" என்று கேட்டேன்.
அதற்கு அச்சிறுவர், ( أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا ) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது. (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார்.
இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் என்னைத் தொட்டுணர்த்தி முதலாமவர் கூறியதைப் போன்றே கூறினார்.
சிறிது நேரம்தான் கழிந்திருக்கும் அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, "அதோ தெரிகிறானே? அவன்தான் நீங்கள் விசாரித்த உங்கள் ஆள்" என்றேன்.
உடனே அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நோக்கிச் சென்று தம்மிடருந்த வாட்களால் அவனை வெட்டிக் கொன்றனர். பிறகு, அண்ணலாரிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தனர். அப்போது அண்ணலார், ( أَيُّكُمَا قَتَلَهُ ) "உங்களில் யார் அவனைக் கொன்றார்?" என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் "நான்தான் கொன்றேன் என்று பதிலளித்தனர். அண்ணலார் அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, ( كِلاَكُمَا قَتَلَهُ ) "நீங்கள் இருவருமே அவனைக் வெட்டிக்கொன்றிருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3141, முஸ்லிம்-3605 அல்பிதாயா வந்நிஹாயா
ஒருமுறை குரஃபா (ரலி) அவர்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்தவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களை திட்டினார். குரஃபா (ரலி) அவர்கள் திட்டியவர் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்கள். அந்த கிறிஸ்தவர் வேகமாக சென்று அப்பகுதியின் ஆட்சியாளர் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் முறையிட்டார். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், குரஃபா (ரலி) அவர்களை வரவழைத்து விசாரித்தார்கள். நடந்ததை எல்லாம் அவர்கள் சொன்னார்கள்.
அதைக் கேட்ட அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "(இஸ்லாமிய ஆட்சியின்கீழ் வரி செலுத்தி பாதுகாப்பு பெற்று வாழும்) திம்மிகளிடம் நாம் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம்" என்றார்கள்.
அதற்கு குரஃபா (ரலி) அவர்கள், "நஊதுபில்லாஹ்! (அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாக!) அதற்காக இறைத்தூதர் நபிகள் (ஸல்) அவர்களை பகிரங்கமாகக் கேவலப்படுத்தித் திட்டுகின்ற உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லையே. அவர்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் என்னவென்றால், 'தங்களுடைய திருச்சபைகளுக்குள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு எதிராகப் பகைவர்கள் வந்தால் அவர்களுக்காக நாம் போய்ப் போராடுவோம். பாதுகாப்போம். அவர்களால் சுமக்க இயலாத சுமைகளை அவர்கள் மீது சுமத்த மாட்டோம்' இவ்வாறுதானே அவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது" என்று கேட்டார்கள். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் "ஆம்! நீங்கள் சொல்வது சரிதான்" என்று ஏற்றுக்கொண்டார்கள். நூல்:- உசுதுல் ஙாபா, அல்ஃபாரூக்
நபியே! இறைநம்பிக்கையாளர்களிடம்) நீங்கள் கூறுங்கள்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருட்களும் நஷ்டமாகிவிடுமோ என பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும் உங்களுக்கு மிக விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதை விடவும் உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் இறை நம்பிக்கையாளர்களல்ல நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில்செலுத்துவதில்லை. திருக்குர்ஆன்:- 9:244
அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கண்பார்வையற்ற ஒருவர் இருந்தார். அவருக்கு ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அப்பெண் மூலம் அவருக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தனர். அவள் எப்போதும் அண்ணலாரை திட்டிக்கொண்டும் வசைபாடிக்கொண்டும் இருந்தாள்.
அவர் சொல்கிறார், அதாவது அவள் என்னுடைய குழந்தைக்கு தாயாவாகவும் எனக்கு அடிமையாகவும் இருந்தாள். மேலும், அவள் அன்பானவளாகவும் மென்மையானவளாகவும் இருந்தாள். ஒரு நாள் நான் (அவளிடம்) அண்ணலாரைப் பற்றி நினைவுகூர்ந்தேன். அவள் வழக்கம்போல் அண்ணலாரை திட்டத் தொடங்கினாள் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் அவளை கண்டித்தும் அவள் திருந்தவில்லை. நான் அவளைத் தடுத்தேன். அவள் அதைத் தவிர்த்துக் கொள்ளவில்லை. எனவே, நான் குத்து வாளை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தி அவளைக் கொன்று விட்டேன்.
அவர் மறுநாள் காலையில் அண்ணலாரின் சபைக்கு நடுநடுங்கியவராக வந்து நடந்தவற்றை விவரித்தார். அப்போது அண்ணலார் ( أَلَا اشهَدُوا اَنَّ دَمَهَا هَدَرٌ ) “(மக்களைப் பார்த்து) அவர் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டார். அவளுடைய இரத்தம் (உயிர் கொல்லப்பட) தகுதியானது தான் (அதற்குப் பதிலாக அவரை கொல்ல வேண்டியதில்லை) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- உஸ்மான் பின் ஷஹ்ஹாம் (ரஹ்) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3795, நஸாயீ-4002
ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் ஒரு திருமுடியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, "எவரேனும் எனது முடியிலிருந்து ஒரு முடிக்கேனும் அவமரியாதை செய்வாரேயானால், அவர் சொர்க்கம் செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- ஜாமிஉஸ் ஸஙீர்
கொடியோன் அபூலஹப்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபியே) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள். (திருக்குர்ஆன்:-26:214) என்ற வசனம் அருளப் பெற்றபோது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சஃபா மலைக்குன்றின் மீதேறி நின்றுகொண்டு, "இன்ன இன்ன குலத்தாரே! வாருங்கள்" என்று அழைத்ததும் அங்கு அனைவரும் ஒன்று கூடினர்.
அண்ணலார், ( أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً تَخْرُجُ مِنْ سَفْحِ هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ) "இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப்படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால் அதை நீங்கள் நம்புகிறீர்களா சொல்லுங்கள்?" என வினவினார்கள். மக்கள், "ஆம்" (நம்புவோம்) என்று கூறினர். அப்போது அண்ணலார், ( فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ ) "நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்" (அதாவது முஸ்லிமாகி விடுங்கள்; நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறுவீர்கள்.) என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) கொடியோன் அபூலஹப், ( تَبًّا لَكَ مَا جَمَعْتَنَا إِلاَّ لِهَذَا ) "நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?" என்று (வசை வார்த்தை) கூறினான். அப்போதுதான் அல்லாஹுத்தஆலா (அபூலஹபை சபித்து) திருக்குர்ஆனின் 111 ஆம் அத்தியாயத்தை அருளினான். நூல்:- புகாரீ-4770, முஸ்லிம்-355
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி விமர்ச்சிக்கும்போது அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அல்லாஹ், அண்ணலாரை விமர்ச்சிப்பவர்களை விடுவதில்லை. தக்க பதிலடி கொடுத்து விடுவான்.
கொடியோன் அபூலஹபை சபித்தது அல்லாஹ் மட்டுமல்ல. இந்த அத்தியாயம் அருளைப்பெற்ற பிறகு, அதை ஓதுவதின் மூலம் உலக முஸ்லிம்கள் அனைவரும் சுமார் 1400 வருடங்களாக அவனை சபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஏசி பேசி, கேலி கிண்டல் செய்தவனெல்லாம் ஈடுசெய்யமுடியாத பெரும் இழப்பையும் இழிவையும் தான் சந்தித்தான் என்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.
இஸ்லாத்தையும் அதன் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களையும் புரிந்து கொண்ட நல்ல உள்ளம் படைத்த அனைவரும் "கருத்து சுதந்திரம்" என்ற பெயரில் புரியப்படும் மேற்குலகின் கேலிச்சித்திரம், வசைப்பாடுதல் என்ற இழி செயலை வன்மையாக கண்டிக்கின்றனர்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து வசைப்பாடுதல், கேலிச்சித்திரங்களை வேண்டுமென்றே வரைந்து, அவர்களை அவமதித்து முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் சீண்டுபவர்கள் இனிமேல் இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபடாமல் இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில், இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் ஏகன் அல்லாஹுத்தஆலாவின் கோபத்திற்கும் நல்லடியார்களின் சாபத்திற்கும் ஆளாகி, உலகிலேயே அல்லாஹ்வின் வேதனையை பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போவார்கள்.
ولما سئل الإمام أحمد عن رجل من أهل الذمة شتم النبي صلى الله عليه وسلم ماذا عليه؟ قال: إذا قامت عليه البينة يقتل من شتم النبي صلى الله عليه وسلم مسلمًا كان أو كافرًا
ஒரு திம்மி நபியை திட்டினால் அவனுக்கான தண்டனை என்ன என்று அஹமது ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஒருவன் நபியைத் திட்டினான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவனாக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும் என்று கூறினார்கள்.
நபியைத் திட்டுபவன் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரும் குற்றம் என்பது தான் ஷரீஅத்தின் பார்வை. மட்டுமல்ல அவ்வாறு நபியைத் திட்டியவனை அதற்காக ஒருவர் கொன்று விட்டால் அவ்வாறு கொன்றவர் மீது கொலைக்குற்றம் கிடையாது.
عن ابْنُ عَبَّاسٍ أَنَّ أَعْمَى كَانَتْ لَهُ أُمُّ وَلَدٍ تَشْتُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقَعُ فِيهِ فَيَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَيَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ- قَالَ- فَلَمَّا كَانَتْ ذَاتَ لَيةٍ جَعَلَتْ تَقَعُ فِي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَشْتِمُهُ فَأَخَذَ الْمِغْوَلَ فَوَضَعَهُ فِي بَطْنِهَا وَاتَّكَأَ عَلَيْهَا فَقَتَلَهَا فَوَقَعَ بَيْنَ رِجْلَيْهَا طِفْلٌ فَلَطَخَتْ مَا هُنَاكَ بِالدَّمِ فَلَمَّا أَصْبَحَ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَمَعَ النَّاسَ فَقَالَ: ((أَنْشُدُ اللَّهَ رَجُلاً فَعَلَ مَا فَعَلَ لِي عَلَيْهِ حَقٌّ إِلاَّ قَامَ)). فَقَامَ الأَعْمَى يَتَخَطَّى النَّاسَ وَهُوَ يَتَزَلْزَلُ حَتَّى قَعَدَ بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَا صَاحِبُهَا كَانَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَأَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ وَلِي مِنْهَا ابْنَانِ مِثْلُ اللُّؤْلُؤَتَيْنِ وَكَانَتْ بِي رَفِيقَةً فَلَمَّا كَانَتِ الْبَارِحَةَ جَعَلَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَخَذْتُ الْمِغْوَلَ فَوَضَعْتُهُ فِي بَطْنِهَا وَاتَّكَأْتُ عَلَيْهَا حَتَّى قَتَلْتُهَا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَلاَ اشْهَدُوا أَنَّ دَمَهَا هَدَرٌ)).
நபி ஸல் அவர்களின் பள்ளிவாசலில் சுபுஹு பாங்கு சொல்லும் பணியில் இருந்த நபி நேசரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரழி அவர்களுக்கு ஒரு அடிமைப்பெண் இருந்தாள். அவள் நபியை தரக்குறைவாக திட்டும் பழக்கமுள்ளவளாகவும் இருந்தாள். அதை இந்த ஸஹாபி கண்டித்தும்,எச்சரித்தும் வந்தார்கள். அவள் ஒவ்வாரு நாளும் தான் உறங்கும் போது படுக்கையில் நபியை திட்டக்கூடியவளாக இருந்தாள்.ஒரு நாள் இந்த ஸஹாபி,இன்றைய தினம் இவள் நபியைத் திட்டினால் இவளை வெட்டி விட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்கள். அவர்கள் அன்று உறங்கும் போது வழமைப்போல் அவள் திட்ட ஆரம்பித்தாள். அவள் தூங்கியதும் கோடாரியை எடுத்து அவளின் வயிற்றில் வேகமாக வெட்டிக்கொன்றார். காலையில் இந்த தகவலறிந்த நபி ஸல் மக்களைத்திரட்டி "இறைவன் மீது ஆணையாக, கொலையாளி நடந்ததை ஒப்புக் கொள்ளட்டும்.இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்கள். அப்போது அந்த கண்தெரியாத ஸஹாபி மக்களை தாண்டி வந்து நபியிடம் நடந்ததை கூறினார்.நபியே!அவள் மீது எனக்கு தனிப்பட்ட பகையேதுமில்லை. வீட்டில் அவள் என் இனிய தோழி.ஆனால் அவள் உங்களை கேவலமாக திட்டுவதை நான் எச்சரித்தும்,கண்டித்தும் பார்த்தேன். அவள் கேட்க வில்லை.அதனால் தான் இன்றும் உங்களை திட்டினால் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்ற உறுதியோடு இருந்து அவளைக் கொன்றேன் என ஒப்புக்கொண்டார்கள்.அதற்கு நபி(ஸல்)இந்தக் கொலை அல்லாஹ்,ரஸுலுக்கான கொலை.இக்கொலை அல்லாஹ்,ரஸுலுக்காக நடந்ததால் அவருக்கு தண்டனை கிடையாது என வழக்கை தள்ளுபடி செய்தார்கள். (அபூதாவூத்:4363)
நபியின் மீது அவதூறுகளை சொன்னவர்கள் மிகவும் மோசமான முடிவுகளை சந்தித்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாறு சான்றாக இருக்கிறது.
كان رجُلٌ يكتُبُ للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم وكان قد قرَأ البقرةَ وآلَ عِمرانَ عُدَّ فينا ذو شأنٍ وكان النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يُمِلُّ عليه { غَفُورًا رَحِيمًا } فيكتُبُ: ( عَفُوًّا غَفُورًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ ) ويُملي عليه { عَلِيمًا حَكِيمًا } فيكتُبُ: ( سَمِيعًا بَصِيرًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ أيَّهما شِئْتَ ) قال : فارتدَّ عنِ الإسلامِ فلحِق بالمُشرِكينَ فقال : أنا أعلَمُكم بمُحمَّدٍ ـ صلَّى اللهُ عليه وسلَّم ـ إنْ كُنْتُ لَأكتُبُ ما شِئْتُ فمات فبلَغ ذلك النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم فقال : ( إنَّ الأرضَ لنْ تقبَلَه ) قال : فقال أبو طَلحةَ : فأتَيْتُ تلكَ الأرضَ الَّتي مات فيها وقد علِمْتُ أنَّ الَّذي قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كما قال فوجَدْتُه مَنبوذًا فقُلْتُ : ما شأنُ هذا ؟ فقالوا : دفَنَّاه فلَمْ تقبَلْه
ஒருவர் நபிக்காக வஹி எழுதக் கூடியவராக இருந்தார். எங்களிடத்தில் அவருக்கு சிறந்த அந்தஸ்தும் இருந்தது ஆனால் திடீரென்று அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இணை வைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டார். அங்கே சென்று எனக்கு நபியைப் பற்றி நன்கு தெரியும்.அவர் சொல்வது இறைச் செய்தியல்ல. நான் விரும்பியதை எழுதக்கூடியவனாக இருந்தேன். அதைத் தான் அவர் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். இது நபிக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் அவர் இறந்து போன பொழுது அவரை பூமி ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்கள். அபூதல்ஹா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அவர் எந்த ஊரில் மரணித்தாரோ அந்த ஊருக்கு நான் சென்றிருந்தேன். நபியவர்கள் சொன்னதைப் போன்றே அவனுடைய சடலம் பூமிக்கு மேலே கிடந்தது. என்னவென்று கேட்ட பொழுது அவ்வூர் மக்கள் இந்த மையத்தை நாங்கள் அடக்கம் செய்தோம் ஆனால் பூமி அதை ஏற்க மறுத்து விட்டது என்று கூறினார்கள்.(இப்னு ஹிப்பான் ; 744)
وقال السهيلي : ويوم يعض الظالم على يديه هو عقبة بن أبي معيط ، وكان صديقا لأمية بن خلف الجمحي ويروى لأبي بن خلف أخي أمية ، وكان قد صنع وليمة فدعا إليها قريشا ، ودعا رسول الله صلى الله عليه وسلم فأبى أن يأتيه إلا أن يسلم . وكره عقبة أن يتأخر عن طعامه من أشراف قريش أحد فأسلم ونطق بالشهادتين ، فأتاه رسول الله صلى الله عليه وسلم وأكل من طعامه ، فعاتبه خليله أمية بن خلف ، أو أبي بن خلف وكان غائبا . فقال عقبة : رأيت عظيما ألا يحضر طعامي رجل من أشراف قريش . فقال له خليله : لا أرضى حتى ترجع وتبصق في وجهه وتطأ عنقه وتقول كيت وكيت . ففعل عدو الله ما أمره به خليله ; فأنزل الله عز وجل : ويوم يعض الظالم على يديه . قال الضحاك : لما بصق عقبة في وجه رسول الله صلى الله عليه وسلم رجع بصاقه في وجهه وشوى وجهه وشفتيه ، حتى أثر في وجهه وأحرق خديه ، فلم يزل أثر ذلك في وجهه حتى قتل
உக்பா பின் அபீ முஐத் என்பவன் ஒருநாள் குறைஷிகளுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்த விருந்திற்கு நபியவர்களையும் அழைத்தான். நபியவர்கள் நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் தான் உன் அழைப்பிற்கு நான் பதிலளிப்பேன் என்று சொன்னவுடன் குறைஷிகளில் முக்கியஸ்தர்களில் ஒருவர் தன் விருந்துக்கு வராமல் இருப்பதை அவன் கண்ணியக் குறைவாக நினைத்தான். எனவே நபியவர்களும் தன் விருந்துக்கு வர வேண்டும் என்பதற்காக ஷஹாதத் கலிமாவை கூறி விட்டான். நபியவர்களும் அங்கு விருந்துக்கு சென்றார்கள். ஆனால் இதை கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் உமையா பின் கலஃப் என்பவன் அவனைக் கடிந்து கொண்டான். ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான். குறைஷிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என் விருந்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. எனவே அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு கலிமா சொல்லி விட்டேன் என்று சொன்னான். இருந்தாலும் நீ செய்தது மிகப் பெரிய தவறு. எனவே நீ செய்த தவறுக்காக முஹம்மது நபியின் மீது காறி உமிழ வேண்டும். நீ அவ்வாறு செய்யாத வரை உன்னை பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான். இவனும் நண்பனுடைய பேச்சைக் கேட்டு அவனை திருப்தியடையச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அவன் சொன்னதைப் போன்றே நபியின் முகத்தில் காறி உமிழ்ந்தான். ஆனால் அந்த எச்சிலை அவன் மீதே அல்லாஹ் திருப்பி விட்டான். அந்த எச்சில் அவன் முகத்தையும் அவன் உதடுகளையும் அவன் கன்னத்தையும் கறித்து அவன் முகத்தை அலங்கோலப் படுத்தியது. அவன் மரணிக்கும் வரை அதன் அடையாளங்கள் அவன் முகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. (தஃப்ஸீர் குர்துபி)
மக்கா நகரில் வலீதுப்னு முகீரா என்ற கொடியவன் இருந்தான். "ஒரு தடவை நபி ஸல் அவர்களை பைத்தியக்காரர் எனக் கூறி விட்டான்.!" அந்த ஒரு வார்த்தையைக் கண்டித்து "அல்லாஹூ தஆலா கோபம் கொண்டு அவனைப் பற்றி கடுமையான வார்த்தைகளால் குர்ஆன் வசனத்தை இறக்கி விட்டான்."
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ (10) هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ (11) مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ (12) عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
அவன் பொய் சத்தியம் செய்யும் அற்பன். அவன் புறம் பேசி குறைக் கூறி கோள் சொல்லி திரிபவன். அவன் நன்மையான செயலை செய்ய விடாமல் தடுக்கும் பெரும்பாவி. அவன் கடின சுபாவ முள்ளவன் இழிவான வழியில் பிறந்தவன். (68 :10،11،12، 13)
ويروى أنه لما نزلت قال الوليد لأمه: إن محمدا وصفني بتسع صفات أعرفها غير التاسع منها فإن لم تصدقيني الخبر ضربت عنقك فقالت له
إن أباك عنين فخفت على المال فمكنت الراعي من نفسي فأنت منه
இந்தத் திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கியதும்... "வலீதுப்னு முகீரா வேகமாக வீட்டுக்குச் சென்று அவனுடைய தாயின் கழுத்தில் வாளை வைத்து "என்னைப் பற்றி முஹம்மத் சொன்னதெல்லாம் உண்மை தான். நான் அயோக்கியன் தான்!" ஆனால் "முஹம்மத் என்னை விபச்சாரத்தில் பிறந்தவன் என சொல்லி விட்டார். அவர் பொய் சொல்ல மாட்டார்." "உண்மையைச் சொல். நான் விபச்சாரத்தில் பிறந்தவனா? என் தந்தை யார்? முகீரா இல்லையா?" எனக் கேட்டான். "ஆமாம்..! நான் ஆட்டு இடையனை வைத்திருந்தேன். நீ அவனுக்கு பிறந்தவன் தான் என்ற உண்மையைக் கூறினாள்.
"அவன் மூக்கின் மீது மிக விரைவில் ஓர் அடையாளம் விடுவோம்! (68:16) என்றும் அல்லாஹ் ஆயத் இறக்கினான்.
அல்லாஹ் சொன்னதைப் போன்றே "பத்ருப் போரில் அவன் மூக்கில் வாள் முனைப்பட்டு பெரிய காயம் ஏற்பட்டதால் அவன் முகமும் விகாரமாகி விட்டது!" அதனால் "வலீதுப்னு முகீரா மக்களுக்கு முன் வெளியில் வர வெட்கப்பட்டு மனம் நொந்து இறந்து போனான்.! (குர்துபீ)
நபியின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் மிக மோசமான முடிவுகளைத்தான் இதுவரை சந்தித்திருக்கிறார்கள். நபியின் கண்ணியத்தை மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும் என்று எண்ணத்தில் அவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை. அவர்களும் நம்மைப் போன்று சாதாரண மனிதர் தான் என்று சொன்னவர்கள் சமூகத்தில் அசிங்கப்பட்டு நிற்பதை நாம் இன்றைக்கும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நபியின் மீது அவதூறுகளை அள்ளி வீசிய ஈனப்பிறவிகளுக்கு தக்க பாடத்தை விரைவில் கொடுத்து இனி வரும் காலங்களில் அவ்வாறு வாய் துறப்பதற்கு அச்சப்படும் நிலையை அவர்களுக்கு வழங்குவானாக!