மனைவியிடம் பொருமை கொள்ளும் கனவனின் சிறப்புகள் 09-09-22

மனைவியிடம் பொருமை கொள்ளும் கனவனின் சிறப்புகள்

பெரு மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே உயர்வான மகத்துவமிக்க சூரியன் உதிக்கும் நாளிலேயே மிகச்சிறந்த நாளான ஜும்மாவுடைய நாளில் நாம் எல்லாம் அமர்ந்திருக்கின்றோம்
 அமர்ந்திருக்கும் நம் அமர்வுகளை அல்லாஹ் கபூல் செய்த அருள்வானாக ஆமீன்


அல்லாஹ் சிலருக்கு அவனது நாட்டத்தின் படி சிறந்த நற்குணமுள்ள மனைவியை அமைத்துத் தருவான். அதன் மூலம் அந்தப் பெண் அந்த ஆணுடைய இம்மை மறுமை வெற்றிக்குக் காரணமாக அமைந்து விடுவாள்.

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ (ابن ماجة

ஆனால் எல்லோருக்கும் அவ்வாறு அமைவதில்லை. மனைவி நல்லவளாக அமையாததை வைத்து அவரது இறையச்சத்தை எடை போட முடியாது. நபிமார்களில் சிலருக்குக்கூட மனைவி நல்லவராக அமையவில்லை

ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ‌ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ‏
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
(அல்குர்ஆன் : 66:10)


மேற்படி நபிமார்களின் மனைவிகள் கணவருக்கு துரோகம் செய்தார்கள் என்பதை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. விபச்சாரம் போன்றதை அவர்கள் செய்யவில்லை. நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி தன் கணவரைப் பற்றி அவர் ஒரு பைத்தியம் என்று கூறித் திரிந்தார். நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி தன் கணவரை சந்திக்க வரும் அழகான ஆண்களைப் பற்றி அந்த ஊரின் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் தகவல் சொல்பவளாக இருந்தாள்.        

 

நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவியிடமும் ஆரம்பத்தில் நாவடக்கமற்ற குணம் இருந்தது. பிறகு தன்னைத் திருத்திக்கொண்டு கணவருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்.அல்லாஹ் குழந்தையையும் தந்தான்

فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 21:90)



நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவியிடம் இருந்த குறையை நாம் சீர் செய்தோம் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு இரு விளக்கங்கள். 1.மலட்டுத் தன்மையை நீக்கினோம். 2.குணத்தைத் திருத்தினோம் என இரு விளக்கங்கள் இருந்தாலும் இரண்டும் ஒன்றிணைய வாய்ப்புண்டு. எப்போது அந்தப் பெண்ணிடம் நாவின் பேணுதல் வந்து விட்டதோ அப்போதும் குழந்தை பாக்கியமும் கிடைத்தது என்றும் பொருள்.

மனைவியின் ஒரு குணம் பிடிக்கா விட்டாலும் மற்றொரு நல்ல குணத்தைப் பொருந்திக் கொண்டு வாழ்வது நல்லது

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ (مسلم )

ஹழ்ரத் அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் ஒரு முஃமினான ஆண் ஒரு முஃமினான பெண்ணை அவளது நடத்தையில் ஒருவருக்கு விருப்பமில்லையென்றாலும் மற்றொன்றை ஏற்றுக்கொண்டாலும் அவளை நோவினை செய்யக் கூடாது (முஸ்லிம்)

பிடிக்காத தீய குணம் என்பதன் அளவுகோல் என்ன?

விபச்சாரம் போன்றதைப் பொருந்திக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை

أي ليس لمؤمن أن يبغض زوجته المؤمنة ، لأنه إن وجد منها خلقًا يكرهه ، كسوء خلق ، رضي منها خلقًا يحبه ، كالعفاف والمعاونة ، ونحو ذلك .( تطريز رياض الصالحين

அதாவது, ஒரு விசுவாசிக்கு தன் விசுவாசியான மனைவியை வெறுக்க உரிமை இல்லை, ஏனென்றால் அவன் அவளை வெறுக்கும் மனப்பான்மையைக் கண்டால், கெட்ட பழக்கவழக்கங்கள், கற்பு மற்றும் உதவி போன்ற அவர் நேசிக்கும் நடத்தையில் மகிழ்ச்சி அடைவார். எனவே தன் மனைவியை வெருக்கக்கூடாது

சின்ன விஷயங்களுக்கெல்லாம் தலாக் என்ற முடிவு கூடாது

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلَاقُ (ابوداود

 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்:  அல்லாஹ் ஆகுமாக்கி வைத்ததில் மிகவும் வெறுக்கத்தக்கது  தலாக் கூறுவதாகும் 

சின்ன விஷயங்களுக்கெல்லாம் தலாக் என்ற முடிவெடுப்பது ஷைத்தானை ஊக்கப் படுத்துவதாகும்

عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ (مسلم

சுருக்கம்.- இப்லீஸ்களின் மாநாடு தண்ணீர் மீது நடைபெறும். அந்த மாநாட்டில் ஒவ்வொரு ஷைத்தானும் தங்களுடைய சேவையை? மாநாட்டில் சொல்லிக் காட்டுவார்கள். அவர்களில் மிகவும் பாராட்டுக்குரியவன் யாரென்றால் எந்த ஷைத்தான் ஒற்றுமையோடு இருக்கும் இருவரைப் பிரித்து வைத்தானோ அவன் தான். அவனை தலைமை ஷைத்தான் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான்.

ஷைத்தான்களை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பொறுப்பற்ற மனைவியிடம் நாம் பொறுமை கொள்ள வேண்டும்

وقال صلى الله عليه وسلم : " خيركم خيركم لأهله " وفي رواية خيركم ألطفكم بأهله " وكان رسول الله صلى الله عليه وسلم شديد اللطف بالنساء وقال صلى الله عليه وسلم " أيما رجل صبر على سوء خلق امرأته أعطاه الله الأجر مثل ما أعطى أيوب عليه السلام على بلائه وأيما امرأة صبرت على سوء خلق زوجها أعطاها الله من الأجر مثل ما أعطى آسية بنت مزاحم امرأة فرعون " . (تفسير الحاوي- احياء علوم الدين

நபி ஸல் அவர்கள் மனைவிகளிடம் மிக அன்பாக நடந்து கொள்பவர்களாக இருந்தார்கள்.

 மேலும் நபி ஸல் கூறினார்கள். எவர் தன் மனைவியின் தீய குணத்தின் மீது பொறுமை கொள்வாரோ அவருக்கு அல்லாஹ் நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோயின்மீது பொறுமை கொண்டதற்காக என்ன நற்கூலி வழங்கினானோ அத்தகைய நற்கூலியை வழங்குவான்.

 அதேபோல எந்தப் பெண் தன்னுடைய கணவனின் தீய குணத்தின் மீது பொறுமை கொள்வாரோ அவருக்கு அல்லாஹ் ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா அம்மையாருக்கு வழங்கிய நற்கூலி போன்று நற்கூலி வழங்குவான். நூல்- தஃப்ஸீருல் ஹாவீ                                   

தன்னுடைய மனைவி பொருப்பற்றவள் என்பதை முறையிட வந்தவருக்கு உமர் ரழி கூறிய அறிவுரை


 உமர் ரழி அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர் ரழி அவர்களின் நிலையே இவ்வாறென்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார்.

 அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள். மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள். என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள் செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என் மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய் அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப் பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.                                                              

قال الامام الغزالي رحمه الله "الصبر علي لسان النساء مما يمتحن به الاولياء (احياء علوم الدين

இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறினார்கள். மனைவியின் கெட்ட குணத்தின் மீது பொறுமை கொள்வது என்பது இறைநேசர்களை அல்லாஹ் தன்னுடைய நெருக்கத்தைப் பெற வைப்பதற்கு ஏற்படுத்தும் சோதனை

ஒருவர் இறைநேசரை சந்திக்க அவருடைய வீட்டுக்கு செல்கின்றார் அங்கு அவருடைய மனைவி இருக்கின்றார் அவரிடத்திலே  இறைநேசரைப் பற்றி விசாரிக்கின்றார் அவர் மிகவும் அந்த இறைநேசரை வசைப்பாடி அவர் வீட்டிற்கு பின்னால் ஏதாவது செய்து கொண்டிருப்பார் என்பதாக கூறுகின்றார் அப்போது அந்த நபர் பின்னால் இருக்கும் இறைநேசரை சந்திக்க செல்கின்றார் சந்திக்கும் சமயத்தில் அவரிடத்தில் கேட்கிறார் இறைநேசத்தைப்பெற்ற   உங்களுக்கு வானத்தில் பறந்து செல்லும் அளவுக்கு உண்டான கராமத்தை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான் இறந்தபோதிலும் தங்கள் மனைவி தங்களை இவ்வாறாக அவமதிக்கின்றார்களே என்று கேட்கும் சமயத்தில் அவள் இவ்வாறாக அவமதிப்பதின் காரணமாகத்தான் அல்லாஹ் எனக்கு இந்த கராமத்துகளை வழங்கி தன்னுடைய நேசத்தையும் வழங்கி இருக்கின்றான் என்று கூறினார்களாம்

கணவன் மனைவி சேர்ந்து வாழ நினைத்தாலும் அதற்குத் தடையாக பெற்றோர்கள்

سأل الإمام أحمد رجل فقال : إن أبي يأمرني أن أطلق امرأتي ، قال : لا تطلقها ، قال : أليس عمر أمر ابنه عبد الله أن يطلق امرأته ، قال : حتى يكون أبوك مثل عمر . (إيقاظ الأفهام في شرح عمدة الأحكام )

இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து என் மனைவியை தலாக் கூறும்படி என்னுடைய தந்தை என்னை வற்புறுத்துகிறார். நான் என்ன செய்யட்டும் என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் உன் தந்தை பேச்சைக் கேட்டு அவளை நீ தலாக் சொல்லக்கூடாது என்று கூறினார்கள். அதற்கு அவர் ஏன் உமர் ரழி அவர்கள் தன்னுடைய மகனிடம் அவரது மனைவியை தலாக் கூறும்படி வற்புறுத்தவில்லையா என்றார். அதற்கு இமாம் அவர்கள் உமர் ரழி அவர்களின் அந்தஸ்தில் உன்னுடைய தந்தை இருந்தால் நீ கூறும் வாதத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள். 

 

மற்றொரு சம்பவத்தில் உமர் ரழி அவர்களிடமே இதுபோல் வழக்கு வரும். முதலில் மகன் வந்து சொன்னதும் தந்தையை அழைத்து வரச்சொல்லி விசாரிப்பார்கள். அப்போது அவர் நபி இப்றாஹீம் அலை தன் மகனிடம் அவரது மனைவியை தலாக் கூறும்படி வற்புறுத்த்தவில்லையா என்று கேட்பார். அதற்கு உமர் ரழி அவர்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அந்தஸ்தில் உன்னுடைய தந்தை இருந்தால் நீ கூறும் வாதத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்பார்கள்.

 

ஏதேனும் பிரச்சினை வரும்போது யாரேனும் ஒருவர் தாழ்ந்து போவது தவறில்லை. குறிப்பாக கணவன் தாழ்ந்து போகலாம். பொதுவாக தோற்றுப் போவதில் மனிதனுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் மனைவியிடம் தோற்றுப் போவதில் மகிழ்ச்சி அடையலாம்.நபி ஸல் அவர்களுக்கும் ஆயிஷா ரழிஅவர்களுக்கும் நடந்த இரண்டாவது ஓட்டப் பந்தயம் போல.

கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்காக அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது

قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم (الكتاب : عشرة النساء للنسائي)

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். 

உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.                                              

 ‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

 வாழ்க்கைக்கு கணவன்-மனைவி உறவு முக்கியமானது.

 குடும்பத்திற்கு அடித்தளமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்-மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன்-மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

 ஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

 அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம், குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்-மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.

 தற்சமயம் ஏற்பட்டுள்ள பலவாறான மாற்றங்கள் இவைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. 

இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழக்கூடிய பல இளம் தம்பதிகளை நாம் பார்க்க முடிகிறது.

 ‘கண்ணியமானவன், சங்கையானவன் மனைவிக்குக் கண்ணியம், சங்கை செய்வான். சாபத்திற்குரியவன் மனைவியை கேவலப்படுத்துவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். 

மனைவியை கேவலப்படுத்துபவன் சாபத்திற்கு உரியவன் என்பதே இதன் பொருள். 

தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு தலைசிறந்த உதாரணமாக ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் ரலி அவர்கள் திகழ்ந்தார்கள்.

தன் மரணப்படுக்கையில் அபுபக்கர் (ரலி) கூறியது நாம் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது. ‘என் மரணத்திற்கு பிறகு என் ஜனாஸாவை (உடலை) என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்ட வேண்டும்’. ‘ஏன்?’ என்று கேட்டார்கள் தோழர்கள். ‘என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்’ என்று பதிலளித்தார்கள். தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

 ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதி விலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கணவன் கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை. 

 ‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். 

உதாரணமாக மனைவியிடம் முன் கோபம் இருக்கலாம். அதே நேரத்தில், அவள் பத்தினியாக இருப்பதில் தீவிரமாக இருப்பாள்; அல்லது கணவனின் நலனில் அக்கறை உள்ள நல்ல தோழியாக இருப்பாள்; அல்லது நல்ல அழகியாக இருப்பாள். 

அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை.

 மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும். 

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். திருக்குர்ஆன்:- 30:21


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனுடன் அன்பால் கட்டிப்புரண்டு அவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றிக் கிடப்பவளை அல்லாஹ் நேசிக்கின்றான். நூல்: தைலமீ

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்புடன் பார்த்துக் கொண்டால் இறைவன் இவர்கள் மீது தன் அருளான பார்வையை செலுத்துகிறான். கணவன் மனைவியின் கையை அன்புடன் பிடித்தால் இருவரின் விரல்களுக்களிடையே அவர்களின் பாவங்கள் கொட்டிவிடுகிறது. அறிவிப்பாளர்:- அபூசயீது அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனைவிக்கு சிறந்தவனே, மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்கு சிறந்தவனாக இருக்கிறேன். கண்ணியத்திற்குரியவனே, பெண்களை கண்ணியமாக நடத்துவான். இழிவானவன் பெண்களை இழிவாக நடத்துவான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்புடன் பார்த்துக் கொண்டால் இறைவன் இவர்கள் மீது தன் அருளான பார்வையைச் செலுத்துகிறான். கணவன், அவள் கையை அன்புடன் பற்றினால் இருவரின் விரல்களிடையே அவர்களின் பாவங்கள் உதிர்ந்துவிடுகிறது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ                                   

 
வழங்கப்பெற்ற வரம்  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا ) (தமது ஆருயிர் மனைவி) "கதீஜா (ரலி) அவர்களின் அன்பு எனக்கு வழங்கப்பெற்ற வரம் ஆகும்" என்று கூறினார்கள். நூல் முஸ்லிம்-4821

இதுதான் இந்த நபிமொழியின் கருத்து என நபிமொழி விரிவுரையாளர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

இருபத்தைந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்திவந்தார்கள்.

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் தோழிகளுக்கு அதிலிருந்து ஒரு பங்கை அன்பளிப்பாக அனுப்பத் தவறியதில்லை. நூல்:- புகாரீ-3816, முஸ்லிம்-4820, திர்மிதீ-3800


அண்மையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனைவியுடன் அதிகமாகப் பேசுவது மனிதனின் இயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனைவியுடன் பேசுவதால் 80% பேருக்கு மன உளைச்சல் குறைவதாகவும், 90% பேருக்கு மாரடைப்பு குறைவதாகவும், அதனால் ஆயுள் கூடுவதாகவும் அந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவியின் அன்பு                                                                                

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நாட்களில் நோயுற்று மரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து சகித்து கொள்ள முடியாத அண்ணலாரின் அன்பு மனைவி அன்னை சஃபியா (ரலி) அவர்கள் "யா அல்லாஹ்! நீ அண்ணலாரை என்ன வேதனையளிக்க நினைக்கிறாயோ அதனை நீ எனக்கு கொடுத்து விடு! அண்ணலாரின் புனித ஆன்மாவை நீ இலேசாக கைப்பற்றிக் கொள்!" என்று பிரார்த்தித்தார்கள். 

இதனை அல்லாஹ் அண்ணலாருக்கு அறிவித்தவுடன், அண்ணலார் சஃபியா (ரலி) அவர்களை அழைத்து, "ஓ சஃபியா! எனக்கு சொர்க்கத்தின் நாற்பது ஆண்களின் சக்தி வழங்கப்படிருக்கிறது. வேதனையும் கூட நாற்பது ஆண்கள் தாங்கும் அளவுக்குத்தான் வழங்கப்படும் என்பதை விளங்கிக் கொள்! எனவே நீ எனக்காக பிரார்த்திப்பதாக இருந்தால் இறைவா! இவர்களுடைய வேதனையைக் குறைப்பாயாக! என்று பிரார்த்திருக்கலாமே" என்று கேட்டுக் கொண்டார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் அண்ணலாரை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தனர். அண்ணலாரோ தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைக்கு அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று கூறினார்கள். 

பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மீது அண்ணலார் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்வு. 

அலீ (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரின் மகளுடன் உங்கள் தொடர்பு எப்படி இருந்தது? விவரியுங்கள்" என்று கேட்டார். அலீ (ரலி) அவர்கள், "எனது மணப்பெண்ணும் மன அமைதியும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மகளே. அவளே எனது வாழ்வு. அவளே எனது மனைவி. அவளின் சதைத் துண்டு என் சதையுடனும் இரத்தத்துடனும் கலந்து விட்டது" என்று கூறினார்கள்.

நமக்கு தூரமானவர்களிடமிருந்து எளிதில் நாம் நல்ல பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து நம்மை எடை போடுகிறார்கள். எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. 

ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும், குறைகளையும் தெளிவாக அறிவார்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழ்களே உண்மையானது. ஊர் மக்கள் புகழும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி புகழுமபடியாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும் என்கிறது இஸ்லாம்.
   
சிகப்பு ஆடை அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் தன் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களுக்கு பிடித்துவிட்டது என்ற ஒரே காரணத்தால் அதை அடிக்கடி அணிவார்கள். 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது இறுதிகாலத்தில் ஒன்றை விரும்பினார்கள். அதாவது தனது நேசத்திற்குரியவர்களான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த இடத்திலேயே தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். காரணம் அந்த இரண்டு புனிதமான நபர்களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடம், ஆயிஷா (ரலி) அவர்களின் வீடாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் “அந்த இடத்தை நான் எனக்காக ஒதுக்கியிருந்தேன். தற்போது உமர் (ரலி) அவர்கள் கேட்கிறார் எனும்போது மனமகிழ்வோடு விட்டுக் கொடுக்கிறேன்” என்றார்கள்

ஏனெனில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "நானும், அபூபக்ரும், உமரும் இங்கே போனோம்; இங்கே இருந்தோம்; இப்படி இப்படியெல்லாம் நம்பிக்கை கொண்டோம்" என்று அடிக்கடி சொல்வதை நான் கேட்டுள்ளேன் அதனால் நபியவர்களின் அருகில் நான் அடக்கம் செய்யப்படுவதை விட அண்ணலார் மிகவும் விரும்பிய உமர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்படுவது தான் முறையானது. அண்ணலாரும் இதைத்தான் விரும்புவார்கள் என்று விவரித்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பிறகும் அவர்களின் விருப்பமே தனது விருப்பம் என்று எண்ணி வாழ்ந்தவர்கள்தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

அன்புள்ள மனைவி என்பவள் கணவர் உயிரோடு இருக்கும்போதும் அவருக்கு கட்டுப்பட்டு வாழ்வாள். அவர் இறந்த பிறகும் அவரது சொற்களுக்கு மதிப்புக் கொடுத்து அதையே பின்பற்றி வாழ்வாள். 

இந்த நற்குணம் தான் கணவன் மீது அதிகம் பிரியம் உள்ளவள் என்பதற்கு அடையாளமாகும். 

இந்த நற்குணம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள் அனைவரிடமும் நிரப்பமாக காணப்பட்டது. 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்கள் ஒட்டகத்தில் ஏறுவதற்காக தனது பாதத்தை கொடுத்து உதவி செய்து அவர்களை ஒட்டகத்தில் ஏற்றி விட்டிருக்கிறார்கள். 

எனவே மனைவியின் விருப்பத்திற்கேற்ப மார்க்கத்தின் வரம்பை மீறாமல், கணவன் இசைந்து போவதின் மூலம் இல்லறத்தில் இன்பம் காணலாம்.  

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "நான் மனைவியிடம் தோற்பதை விரும்புகிறேன்" என்று கூறினார்கள். 
எனவே மனைவியை அன்பால் ஆள வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல என்று விளங்க வேண்டும்.

அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஹம்னா பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் "உம்முடைய சகோதரர் இப்போரில் கொல்லப்பட்டு விட்டார்" என்று சொல்லப்பட்டது. அதற்கு அப்பெண் அல்லாஹ் அவருக்கு கருணை புரியட்டும்! "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்" என்று கூறினார். 

பிறகு "உம்முடைய கணவர் இப்போரில் கொல்லப்பட்டு விட்டார்" என்று அப்பெண்ணிடம் சொல்லப்பட்டதும், அதற்கு அப்பெண் "அல்லாஹ்...." என்று மட்டும் சொல்லி விட்டு அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் வாடிய முகத்தோடு அமர்ந்து விட்டார். இக்காட்சியைக் கண்ட கருணை நாயகம் (ஸல்) அவர்கள் "கணவன் மனைவிக்கிடையே ஒருவகையான பாசப்பிணைப்பு உண்டு. அது எதையும் எதிர்பார்த்து வருவதில்லை" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா, பைஹகீ

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவனொருவன் தன் மனைவியின் அன்பான அரவணைப்பில் வாழ்ந்து இறந்தானோ, அவன் அவள் கையால் குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட்டால் அவனுக்கு அல்லாஹ் அருள்புரிந்து விட்டான் என்று பொருளாகும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ

மனைவியின் மரணத்தின் போது உமர் முக்தார் (ரஹ்) அவர்கள் அழுதார்கள். எதை நினைத்து அழுகிறீர்கள்? என்று மக்கள் வினவினார்கள். என் மனைவி, நான் நுழைவதற்காக கூடாரத்தின் வாயிலை உயர்த்திப் பிடிப்பாள். “ஏன் இப்படி செய்கிறாய்? ” என்று நான் கேட்பேன். அதற்கு “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் நீங்கள் தலை குனியாதிருக்கத்தான்” என்று பதிலளிப்பாள் என்றார்கள்.   


பாத்திமா (ரலி) அவர்கள் தனது இறுதி நேரத்தில் “அஸ்மா பின் உமைஸ் (ரலி) அவர்கள் தனது அன்பு கணவர் அலீ (ரலி) அவர்களின் உதவியுடன் தன்னை குளிப்பாட்ட வேண்டும்” என்று (வஸிய்யத் எனும்) இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவ்விருவரும் தான் குளிப்பாட்டினர். நூல்:- தாரகுத்னீ-1851, பைஹகீ

இறந்த பின்பும் தன் வாழ்க்கைத் துணையின் மீது இத்தனை நேசம் செலுத்தும் ஒருவர், அவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு நேசித்திருப்பார்?

நமது வாழ்க்கைத் துணையை என்றென்றும் காதல் கொண்டு, கண்ணியப்படுத்தி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025