நபியவர்களின் பிறப்பு 29-09-22



வசந்த காலம் வந்துவிட்டது..
ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
‘ரபீஉன்’ என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது.
அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் ‘ரபிஉல் அவ்வலில்’ பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும்,வெற்றியையும்,மகிழ்ச்சியையும்,மனநிறைவையும், பிரகாசத்தையும் கொண்டுவந்தார்கள்.

பிறப்பதற்கு முன்பே பிரகாசமாய்...
''அரபுப் பாலைவனத்தில் அரிய மாணிக்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது;
அதன் ஒளி அகிலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது ''
என்றான் ஆங்கிலக் கவிஞன்.
ஆம் உண்மைதான். ஆதம் அலைஹிஸ் சலாம் மண்ணிற்கும் தண்ணீருக்குமிடையில் இருக்கும்போதே ஒளியாக பிரகாசித்த பெருமானாரின் ஜோதி, பிறப்பின்போதும் காட்சி வழங்கி, வாழ்க்கையில் பல கட்டங்களில் பலருக்கும் பயன் தந்தது.

وَعَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ " كَانَتْ رَوْحُهُ نُورًا بَيْنَ يَدَيِ اللَّهِ تَعَالَى، قَبْلَ أَنْ يَخْلُقَ آدَمَ بِأَلْفَيْ عَامٍ، يُسَبِّحُ ذَلِكَ النُّورُ، وَتُسَبّحُ الْمَلَائِكَةُ بِتَسْبِيحِهِ، فَلَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ، أَلْقَى ذَلِكَ النُّورَ فِي صُلْبِهِ "، فَقَالَ رَسُولُ اللَّهِ صلي الله عليه وسلم: " فَأَهْبَطَنِي اللَّهُ إِلَى الْأَرْضِ فِي صُلْب آدَمَ، وَجَعَلَنِي فِي صُلْبِ نُوحٍ، وَقَذَفَ بِي فِي صُلْبِ إِبْرَاهِيمَ، ثُمَّ لَمْ يَزَلِ اللَّهُ تَعَالَى يَنْقُلُنِي مِنَ الأَصْلَابِ الْكَرِيمَةِ، وَالْأَرْحَام الطَّاهِرَةِ، حَتَّى أَخْرَجَنِي مِنَ أَبَوَيَّ، لَمْ يَلْتَقِيَا عَلَى سِفَاحٍ قَطُّ (الشفا باحوال المصطفي)


ஆதம் அலைஹிஸ்ஸலாமைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்னாரின் ஒளி அல்லாஹ்வை துதித்தவண்ணம் இருந்தது. ஆதமைப் படைத்து அவர்களின் முதுகந்தண்டில் அந்த நூரை செலுத்தினான். அதன் பிறகு அதன் நிலையை அண்ணலாரே விவரிக்கிறார்கள்: ஆதமின் முதுகந்தண்டின் மூலம் அல்லாஹ் என்னை புவியில் இறக்கினான். அதன் பின் நூஹ் அலைஹிஸ் ஸலாம், இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் இப்படியாக சங்கைக்குரியவர்களின் முதுகந்தண்டுகளிலும் பரிசுத்த கருவறைகளிலும் இறக்கி. பின்னர் என் பெற்றோர்கள் மூலம் என்னை அவதரிக்கச் செய்தான். அவர்கள் தீய நடத்தை உள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை 

நபி பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அப்துல் முத்தலிபின் உடல் அமைப்பைக் கண்டு எமன் நாட்டு யூதப் பண்டிதர் ஒருவர் உம் ஒரு கையில் ஆட்சியையும் மறு கையில் நபித்துவத்தையும் காண்கிறேன் என்று முன்னறிவிப்பு செய்த நிகழ்ச்சி:
عن ابن عباس ، عن أبيه ، قال : قال عبد المطلب : « قدمت اليمن في رحلة الشتاء ، فنزلت على حبر من اليهود ، فقال لي رجل من أهل الزبور : يا عبد المطلب : أتأذن لي أن أنظر إلى بدنك ؟ فقلت : انظر ما لم يكن عورة . قال : ففتح إحدى منخري فنظر فيه ، ثم نظر في الآخر ، فقال : أشهد أن في إحدى يديك ملكا ، وفي الأخرى نبوة ،وأرى ذلك في بني زهرة ، فكيف ذلك ؟ فقلت : لا أدري . قال : هل لك من شاعة ؟ قال : قلت : وما الشاعة ؟ قال : زوجة . قلت : أما اليوم فلا . قال : إذا قدمت فتزوج فيهن . فرجع عبد المطلب إلى مكة ، فتزوج هالة بنت وهب بن عبد مناف ، فولدت له : حمزة ، وصفية . وتزوج عبد الله بن عبد المطلب ، آمنة بنت وهب ، فولدت رسول الله صلى الله عليه وسلم
நான் ஏமனில் தங்கிருந்போது ஒரு வேதப் பண்டிதர் என் உடல் அமைப்பை ஆராய்ந்துவிட்டு, “அப்துல் முத்தலிபே! உமது ஒரு கையில் அரசாட்சியையும் மறுகையில் நபித்துவத்தையும் நான் காண்கிறேன். அது பனூ ஸஹ்ரா குடும்பத்திலிருந்து ஏற்படலாம் என்று கருதுகிறேன்” என்றார். “அது எப்படி?” என்று நான் கேட்டேன்.
“எப்படி என்று தெரியாது. ஆனால் இது நடக்கும். உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
“தற்போது இல்லை.”
“அப்படியானால் நீர் ஊர் திரும்பியதும் அந்தக் குடுபத்தில் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளும்.”
அப்துல் முத்தலிப் மக்கா திரும்பி ஹாலா பின்த் வஹ்ப் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்கள்.......... அப்துல்லாஹ் அவர்கள் திருமணம் செய்த ஆமினா பின்த் வஹ்ப் அவர்கள் பனூ ஸஹ்ரா குடும்பத்தில் உள்ளவர்கள்தான்.

பிறந்த அன்று...
மக்காவில் வாழ்ந்த ஒரு யூதன் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த அன்றிரவு குறைஷிகளின் கூட்டத்தில் வந்து இன்றிரவு உங்களில் யாருக்காவது ஒரு குழந்தை பிறந்துள்ளதா? என்று கேட்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒன்றும் நாங்கள் அறியவில்லையே/ என்றார்கள் குறைஷிகள். அவன் கூறினான்: நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். இன்றிரவு உங்களில் ஒரு நபி பிறந்துள்ளார். அவரின் இரு புஜங்களுக்கிடையில் ஒரு அடையாளம் இருக்கும். அதில் சில ரோமங்கள் இருக்கும்.....
இதைக்கேட்டு அவர்கள் ஆச்சரியத்துடன் கலைந்து சென்றனர். தங்கள் இல்லம் சென்று மனைவிமார்களிடம் இதுபற்றி விசாரித்தபோது அப்துல்லாஹ்விற்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும் முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த யூதனிடம் தெரிவிக்கப்பட்டபோது அவன் வந்து பார்த்தான். அந்த குழந்தையின் முதுகில் நபித்துவ முத்திரையின் அடையாளம் இருப்பதைக் கண்டு மயக்கம்போட்டு விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்து கூறினான்;
அல்லாஹ்வின்மீது ஆணையாக! நபித்துவம் பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து எடுபட்டுவிட்டது. குறைஷிகளே! உங்களுக்கு ஒரு மகத்தான ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போகிறது; அந்த செய்தி கிழக்கிலிருந்து மேற்குவரை பரவப் போகிறது. (دلايل النبوة للبيهقي)

நபியின் நட்சத்திரம் உதயமானதைக் கூட நன்கு அறிந்திருந்த யூத அறிஞர்கள் 

عن حسان بن ثابت ، قال : « إني لغلام يفعة ابن سبع سنين أو ثمان ، أعقل كل ما رأيت وسمعت ، إذا يهودي بيثرب يصرخ ذات غداة (1) : يا معشر يهود فاجتمعوا إليه وأنا أسمع ، قالوا : ويلك ما لك ؟ قال : طلع نجم أحمد الذي ولد به في هذه الليلة »(المطالب العالية لابن حجر العسكلاني)

ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கூறுகிறார்கள்:
நான் ஏழு எட்டு வயது சிறுவனாக- சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடிய பருவத்தில் இருக்கும்போது ஒருநாள் ஒரு யூதன் யத்ரிபின் (மதீனாவின்) வீதியில் நின்று அலறினான்: ''ஓ யூதர்களே!''
''என்ன ஆயிற்று உனக்கு? (ஏன் இப்படி கத்துகிறாய்?) என்று மற்ற யூதர்கள் ஒன்று கூடி வினவினர்.
'' இந்த இரவில் பிறக்கும் 'அந்த குழந்தைக்கான' வின்மீண் வானில் தோன்றிவிட்டது'' என்றான்.

ஆமினாவின் பிரசவத்தை நேரில் கண்ட ஒரு பெண்மணியின் வாக்குமூலம்:

அன்று இரவில் இல்லத்திலிருந்த அனைத்தும் ஒளிர்ந்தன; வின்மீண்கள் எங்கே அவை என்மீது விழுந்து விடுமோ என்று நான் எண்ணுகிற அளவுக்கு மிக நெருக்கமாக வந்தன:

عن عثمان بن أبي العاص ، قال : حدثتني أمي ، أنها شهدت ولادة آمنة بنت وهب رسول الله صلى الله عليه وسلم ، ليلة ولدته . قالت : « فما شيء أنظر إليه في البيت إلا نور ، وإني لأنظر إلى النجوم تدنو حتى إني لأقول : ليقعن علي »

பிறக்கும்போதே கண்மூடிப் பழக்கத்தை மண்மூடிப் புதைத்த மாநபி:
பிறந்த குழந்தை கண் திறந்ததும் வானைப் பார்க்கக்கூடாது என்று குழந்தையை சட்டியைக் கொண்டு மூடி வைப்பர். அதுபோலவே இந்த குழந்தையையும் மூடிவைத்துவிட்டு காலையில் வந்து பார்த்தபொழுது என்ன அதிசயம் அந்த சட்டி இரண்டாகக் உடைந்து கிடந்தது நபியவர்களோ விழி திறந்தவர்களாக வானை நோக்கியவர்களாக இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டனர்.

பிறப்பு வியப்பு :
 காலிரண்டும் முந்தினதாகவும், வானத்தை பார்த்தவர்களாகவும், புன் சிரிப்புடையவர்களாகவும் கண்களில் சுருமா வும் எண்ணையும் போடப்பட்டவர்களாகவும் அவர்கள் உதித்தார்கள். இன்னும் மற்றவர்கள் காணக்கூடாதென்பதற்காக அவர்களின் இடது கரத்தால் தன் இரகசிய இடத்தை மறைத்தவர்களாவும், கத்னா செய்யப்பட்டவர்களாகவும் இன்னும் அல்லாஹ் ஒருவனே என்று சைக்கினை செய்வதற்காக தன் வலது கரத்தின் கலிமா விரலை உயர்த்தினவர்களாகவும் அவர்கள் பிறந்தார்கள்.
கடைசி நபி பிறந்தவுடன்,
Ø இணை வைப்போர்களால் வணங்கப்பட்ட சிலைகள் குப்புற வீழ்தன.
Ø சைத்தான்களின் தலைவன் இப்லீஸின் சிம்மாசனம் உடைந்தது. அவன் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டான்.
Ø உண்மை வந்து விட்டது என அறிவிக்கும் சைகையாக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட, வற்றிருந்த ஸமாவா எனும் சிற்றாறு பொங்கி ஓடத் துவங்கியது.
Ø பொய் அழிந்து விடும் என அறிவிக்கும் சமிக்கையாக காபிர்களால் பயன்படுத்தப்பட்ட, ஸாவா விலிருந்த ஓடிக்கொண்டிருந்த புஹைரா எனும் சிறு கடல் வற்றியது.  
Ø ஆட்சி கைமாறி விட்டது என அறிவிக்கும் சைக்கினையாக கிஸ்ரா வின் கோட்டைகளும் 14 கொத்தலங்களும் தரையில் உடைந்து வீழ்தன.
Ø ஆயிரக்கணக்கான வருடங்களாக அணையாமல் இருந்த, பாரிஸீகளால் வணங்கப்பட்டுக் கொண்டிருந்த தீ அணைந்து விட்டது.
Ø சாஸ்திரிகளின் தவம் இயற்றும் மாளிகைகள் உடைந்தன
.சைத்தானும் அதன் குட்டிகளும் அண்டம் இழந்தன

நபி பிறந்தபொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்களின் தாயார் கண்ட அதிசயக் காட்சியை அவர்களே வர்ணிக்கிறார்கள்:
அந்த குழந்தை பிறந்து என் கரத்தில் வந்தபோது அந்த இல்லத்தின் மூலையிலிருந்து ஒரு அசரீரி முழங்கியது: “உம் இறைவன் உமக்கு அருள் புரிவானாக! ''
அதன் பின் அங்கு பிரகாசம் தோன்றியது. அதன் ஒளியில் சிரியாவின் கோட்டைகளெல்லாம் காட்சி அளித்தது

பிறந்தவர்களில் சிறந்தவர்:
எல்லா நபிமார்களையும் பிறந்ததற்கு பிறகு புகழ்ந்துப் போற்றுகின்ற அல்லாஹ் முத்தான முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்.

ஈசா நபியைப் பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னையை ஊரார் தூற்றியபோது அன்னையின் பரிசுத்த தன்மையை நிரூபிக்கும் வகையில் அவர்கள் தொட்டிலில் பேசியதை அற்புதமாக குறிப்பிடுகிறான்:

قال اني عبد الله آتاني الكتاب وجعلني نبيا
மூசா நபியை பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னை அந்த குழந்தையை ஒரு மரப் பேழையில் வைத்து நைல் நதியில் விட்டபோது அதைப் பத்திரமாகப் பாதுகாத்து கரைசேர்த்த அற்புதத்தைச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறான்۔
நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்۔ அது எப்போது?
அதுதான் அனைத்துலகுக்கும் முதல் மீலாது மாநாடு.
அல்லாஹ் நடத்திய முதல் மீலாது மாநாடு:
ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்ம உலகில் வைத்து ஒரு மாபெரும் மீலாது மாநாடு நடந்தது. நடத்தியவன் யார் தெரியுமா? அல்லாஹ். மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் யார் தெரியுமா? உலகைத்திருத்தவந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகள். சில ஆயிரம் பேர் கலந்துகொண்டாலே மாநாடு என்றால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்நிகழ்வு மாநாடுதானே?
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா?

واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)
பின்னால் ஒரு நபி வருவார். அவரை நீங்கள் நம்பவேண்டும்; அவருக்கு உதவியாக இருக்கவேண்டும்; என்று கேட்டதோடு மட்டுமின்றி இதில் நீங்கள் கையெழுத்திடுகிறீர்களா?என்றான். அனைவரும் இதை ஆமோதிக்கிறோம் என்றனர். அப்படியா இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்.” என்று தீர்மானம் போட்டு, அதை மிஃராஜ் இரவில் நடத்திக்காட்டினான். பைத்துல் முகத்தஸில் அனைத்து நபிமார்களும் கூடியிருக்க ஜிப்ரீல் அலை பாங்கு சொல்ல அதில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னபோது அனைவரும் அதை ஆமோதித்தனர்.

ஆதம் நபி முதல் அனைத்து நபிமாருக்கும் நமது நபியின் வருகை குறித்து அல்லாஹ் முன்னறிவிப்பு செய்திருக்கிறான்.

ஆதம் அலைஹிஸ் ஸலாம் : தன் தவறுக்கு வருந்தி பல வருடம் அழுதுகொண்டிருக்கும்பொழுது ஒருநாள் நினைவு வந்தது சொர்கத்தின் வாசலில் அல்லாஹ்வின் பெயெரோடு இன்னொரு பெயரையும் பார்த்தோமே அந்த முஹம்மதின் பொருட்டால் பாவமன்னிப்பு கேட்டால் என்ன? உடனே அவ்வாறு கேட்டார்கள்.
அல்லாஹ் வினவினான்:'' இதுவரை வராத அந்த முஹம்மதை உமக்கு எப்படி தெரியும்?''
''யா அல்லாஹ்..உன் பெயருடன் அவரின் பெயரை இணைத்திருக்கிறாயென்றால் நிச்சயம் உனக்கு நெருக்கமானவராக பிரியமானவராகத்தான் இருக்கவேண்டும்' என்று புரிந்துகொண்டேன்.'' ''ஆமாம், ஆதமே! அவர் அவர் இருதியாக வரவிருக்கும் இறைத்தூதர். அவர் பொருட்டால் உம்மை மன்னித்தேன்'' என்றான்.

நூஹ் அலை:
950 வருடம் பிரச்சாரம் செய்தும் 80 பேரைத் தவிர யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரச்சாரத்தின்போது அந்த மக்கள் நூஹ் நபியை நோக்கி கல் வீசி தொல்லை கொடுத்தனர்.'' யா அல்லாஹ்! எனது பணி தொய்வின்றித் தொடரவேண்டும். எனது சொல் மக்களைத் தொடவேண்டும்; ஆனால் அவர்களின் கல் என்னைத் தொடக்கூடாது. ஆகவே என்னை அவர்களின் கண்களை விட்டும் மறைத்துவிடு''
அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அன்றிலிருந்து அவர்கள் பிரச்சாரம் செய்தால் குரல் கேட்கும்; ஆள் தெரியாது. அப்படியும் அவர்கள் விடவில்லை. குரல் கேட்ட திசையை நோக்கி கல் வீசினர். மனம் நொந்த நபி அல்லாஹ்விடம் அழுதனர்:

رب لا تذر علي الارض من الكافرين ديارا
''இறைவா! காஃபிர்களில் யாரையும் பூமியில் விட்டுவைக்காதே''
அல்லாஹ் அதை ஏற்று சுனாமியை அனுப்பி காஃபிர்கள் அனைவரையும் அழித்தான். விசுவாசிகள் மட்டும் கப்பலில் காப்பாற்றப்பட்டனர். அதன் பிறகு அல்லாஹ் கூறினான்: நூஹே! களிமண் கொண்டு மண்பாண்டங்கள் செய்வீராக! பல நாள் பாடுபட்டு பல மண்பாண்டங்கள் செய்தார்கள்.'' நூஹே! இப்பொழுது நீரே அவற்றை உம் கையால் உடைத்துவிடுவீராக''.
''யா அல்லாஹ்.. என்ன இது? எத்தனை நாட்கள் ஈடுபட்டு எவ்வளவு பாடுபட்டு இவற்றை உருவாக்கினேன். அவற்றை எனது கையினாலே அழிக்குமாறு கூறுகிறாயே?''
''நூஹே! இந்த மக்களை எவ்வளவு பாடுபட்டு படைத்தேன். அத்தனைபேரையும் அழிக்குமாறு இறைஞ்சிவிட்டீரே? நூஹே! பின்னால் ஒரு நபி வருவார். அவரது மக்களும் அவருக்கு எத்தனையோ தொல்லைகள் தருவர். ஆனாலும் ஒரு தடவைகூட அவர் 'யா அல்லாஹ் இந்த மக்களை அழித்துவிடு' என்று இறைஞ்சமாட்டார்.' இந்த மக்களை மன்னித்துவிடு; இவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இவர்களின் சந்ததிகளாவது ஏற்றுக்கொள்வர்' என்றுதான் கூறுவார்.''
நமது நபி வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் வருகை குறித்து நூஹ் அலைஹிஸ் சலாமுக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டான்.

இப்ராஹீம் அலை:
 நமது நபி வருவதற்கு சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே இப்ராஹீம்( அலை) இப்படி துஆ செய்தார்கள்:
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك۔۔۔۔
எப்படிப்பட்ட இப்ராஹீம் நபி தெரியுமா?
அல்லாஹ் அவர்களுக்கு வைத்த அனைத்து சோதனைகளிலும் பரீட்சைகளிலும் 100/100 மார்க் வாங்கியவர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: யா அல்லாஹ் நான் போதாது; என்னைவிட சிறந்த நபியை இறுதி காலத்தில் அனுப்பு. 

மூசா அலை: 
மூசா (அலை) ஒருமுறை இறைஞ்சினார்கள்: யா அல்லாஹ்! மஃது இப்னு அத்னான் என்ற கிளையாரில் நாற்பது பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் அழித்துவிடு''
''மூசா! நபிமாரின் துஆவை நான் ஏற்பது வழக்கம்தான். ஆனால் உமது இந்த வேண்டுகோளை மட்டும் நான் ஏற்பதாக இல்லை. ஏனெனில் அந்த கிளையாரிலிருந்துதான் எனது ஹபீப் (ஸல்) பிறக்கப் போகிறார். மூஸா! உமக்கு எதைப் பிரியப்படுவீரோ அதை எனது ஹபீபுக்கும் விரும்புவீராக! ஏனெனில் அவரது உம்மத்தின் சிபாரிசுகொண்டுதான் உமது உம்மத் சொர்க்கம் நுழையும்.''
''யா அல்லாஹ்! அப்படியானால் இந்த கலீமுக்கும் (அல்லாஹ்விடம் வசனித்தவர்) அந்த ஹபீபுக்கும் என்னதான் வித்தியாசம்?''
''மூசா! தூர்சினாய் மலையிலே நின்று அல்லாஹ்வின் பேரொளியைப் பார்க்க ஆவலாய்க் காத்துக் கிடந்து கடைசியில் காணமுடியாமல் எழுபதாயிரம் திரைகளுக்கப்பாலிலிருந்தும் பார்க்கமுடியாமல்(فخر موسي صعقا) மயங்கி விழுந்தவர்தான் இந்த கலீம்.
ஹபீப் என்றால் யார் தெரியுமா? தூங்கிக் கிடந்த தூதுவரை துயிலெழுப்பி ஏழு வானம் வரை உபசரிப்போடு அழைத்து வந்து நேருக்கு நேராய் சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர்தான் அந்த ஹபீப்'' என்று அல்லாஹ் விளக்கம் சொன்னான். அதனால்தான் மூசா அலை இந்த உம்மத்தில் பிறக்கவேண்டுமென்று ஆசைப்பட்டனர்.

முன் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட முத்தான நபி:
 ஏதஸ்ஸ மின்னந்தரே மிலேச்ச ஆச்சார்யண ஸமன்வித மஹாமத் இதுக்கியாத சிஷ்ய சாகா சமன்வித...
ஓர் அன்னிய நாட்டில் ஓர் சீர்த்திருத்தவாதி தன் சீடர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார். (பவிஷ்ய புராணம்: பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 5-8)

அந்த சீர்திருத்தவாதி மற்றும் அவரைப் பின்பற்றுவோரின் தன்மை குறித்து இவ்வாறு உள்ளது:
 லிங்க சேதி சிகா ஹீன சமச்சுருதாரி சதா ஷக உச்சலாபி ஸாவ பட்ஷீ பவிஷ்யதி ஜனோமம...
அவர்கள் லிங்க சேதம் சுன்னத் செய்திருப்பார்கள்; தலையில் குடுமி இருக்காது; தாடி வைத்திருப்பார்கள்; சப்தம் போட்டு (பாங்கு சொல்லி) அழைப்பார்கள். முஸ்லிம் என்று அறியப்படுவார்கள். (பவிஷ்ய புராணம்: பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 25)

பைபிளில் பெருமானார்:
ஏசுனாதர் தன் சீடர்களுக்கு சொன்னதாக பைபிளில் (யோவான் அதிகாரம் 16 வசனம் 7-13 வரை) வந்துள்ளது:
 ''நான் உங்களுக்கு சொல்வது உண்மை. நான் போவதே உங்களுக்கு நல்லது. போகாவிடில் தேற்றரவாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்..''.
 ''நான் உங்களுக்கு சொல்லவேண்டியவை இன்னும் பல உண்டு.ஆனால் அவற்றை உங்களால் தாங்க முடியாது. உண்மையின் ஆவியானவர் வந்தபின் உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் பேசுவதை தாமாக பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார். வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.''

 மூஸா (அலை) கூறியதாக ஒரு வசனம் பைபிளில் உண்டு. (உபாகமம் 18 அதிகாரம் 18 வசனம் 15):
''உன் தேவனாகிய கர்த்தர் உன் மக்களில் நின்றும் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்கு செவிமடுப்பாயாக''
இவ்வாறு தங்களின் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருப்பதை வேதக்காரர்கள் நன்கு அறிவார்கள்

الذين آتينهم الكتاب يعرفونه كما يعرفون ابنائهم

 ''ஒரு தந்தை தன் பிள்ளையை நன்கு அறிவதைப்போ வேதக்காரர்கள் நபியை நன்கு அறிவார்கள்.''

இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை வரலாற்றைப் வாசிக்கிற எல்லோரும் அறிவார்கள்.
  
அப்துல்லாஹ் இப்னு சலாமின் வாக்குமூலம்:
அப்துல்லாஹ் இப்னு சலாம். யூதப் பண்டிதர். வேத ஞானங்களைக் கரைத்துக் குடித்தவர். நபி மதினாவுக்கு வந்தபோது உடனே இஸ்லாத்தை தழுவினார். அதன் பிறகு சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தியும் சொல்லப்பட்டார். உமர்(ரலி) அவர்கள் ஒருமுறை கேட்டார்கள். வேதக்காரர்களாகிய நீங்கள் உங்கள் மகனை அறிவதைப் போல இந்த நபியை நன்கு அறிவீர்களா? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்: '' ம்ம்.. அதைவிட அதிகமாகவே அறிவோம்.
சிரியா துறவியின் வாக்குமூலம்:
சிரியாவில் ஒரு துறவியை சந்தித்து சில அரபுகள் பேசிக்கொண்டிருந்தபோது ''உங்கள் குலத்திலிருந்துதான் இறுதி நபி வருவார்; அவர் பெயர் முஹம்மது. அவரைப் பின்பற்றினால் வெற்றிபெறுவீர்கள்'' என்று அவர் சொன்னதைக் கேட்டு நாடு திரும்பிய அவர்கள் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கெல்லாம் ''முஹம்மது'' என்று பெயர் வைத்தனர். [ المعجم الكبير للإمام الطبراني ح/273- ج 17/111

 அக்தம் இப்னு சைஃபி

நபியவர்களின் வருகை குறித்து கேள்விப்பட்ட அக்தம் இப்னு சைஃபி தமீமி என்பவர் அதுபற்றி விசாரித்து வர தன் மகனை அனுப்பினார். திரும்பி வந்து மகன் கூறினார்: அவர் நற்குணங்களை ஏவுகிறார்; தீமைகளை தடுக்கிறார்'' என்று. உடனே அக்தம் தன் மக்களை ஒன்றுகூட்டி மக்களே! இவர்தான் நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இறுதி நபி. இவர் மீதுள்ள அன்பினால்தான் சுஃப்யான் பின் மஜாஷிஃ தன் மகனுக்கு முஹம்மது என்று பெயரிட்டார். أسقف نجران என்பவர் இந்த நபியின் வருகை குறித்துத்தான் அடிக்கடி பேசுவார். எனவே இவரை பின்பற்றுவதில் நீங்கள் முதன்மையாளரகளாக இருங்கள். பிந்திவிடாதீர்கள்.
 [ الإصابة في تمييز الصحابة للإمام ابن حجر 1/211 ]

        
முன்னெப்போதையும் விட அதிகமாக முஹம்மது என்பவர் யார் என்று அறிந்து கொள்ள உலகின் முக்கால் பங்கு மக்கள் இப்போது முயன்று கொண்டிருக்கிறாகள்.

இந்த பூமியில் பாதம் பதித்தவாகளில் முஹம்மது நபியைப்போல் இன்னொருவர் பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதுமில்லை.  

மனித சமூகத்தின் மீது மகத்தான செல்வாக்கை செலுத்தும் ஆற்றல் பெற்ற தலைவா முஹம்மது (ஸல்) அவாகளைப் போல இன்னொருவா கிடையாது என்று வரலாறு அறிமுகப்படுத்துகிறது. ஜான் வில்லியம் தராப்பா அவருடைய புகழ் பெற்ற ஐரோப்பாவில் அறிவு வளாச்சியின் வரலாறு என்ற நூலில் முஹம்மது மனித இனத்தின் மீது மகத்தான ஆதிக்கத்தை செலுத்தும் அதிகாரம் படைத்தவராக இருந்தா என்று குறிப்டுகிறா.
he has exercised the greatest influence upon the human race,"

மிகப் புகழ் பெற்ற வரலாற்றாசியா ஸ்டான்லீ லேன் புல் வெற்றியாளாகளின் வரலாற்றுப் பதிவேடுகள் அனைத்திலும் இவருக்கு நிகராக பெருஞ்சாதனை படைத்தவா வேறு எவுரும் இல்லை என்று குறிப்பிடுகிறா
. Through all the annals of conquest there is no triumphant entry comparable to this one.";

இன்றைய மனித சமூகத்தின் வளாச்சி எந்த அளவு பிரம்மாண்டமானதோ அதை விட முஹம்மது (ஸல்)அவாகளின் செல்வாக்கு புகழும் பிரம்மாண்டமானது.

   உலக வரலாற்றில் மனித குலத்தின் மீது அளப்பெரிய செல்வாக்கு செலுத்தியவாகளில் 100 நபாகளை வாசைப்படுத்திய மைக்கேல் ஹாட் என்ற அமொக்க அறிஞா அதில் முதலிடத்தை பெருமானா (ஸல்) அவாகளுக்கு வழங்கயிருக்கிறார் என்பது இன்றைக்கு பழைய செய்தியாக இருக்கலாம். அத்தொடால் இரண்டாவது இடத்தை ஐசக் நியுட்டனுக்கு அவா வழங்கியுள்ளா. அதற்கு அவா கூறும் காரணம். மனித குலத்தின் இன்றைய வியத்தகு முன்னேற்றங்கள் அனைத்துக்குமு நியுட்டனின் கண்டுபிடிப்புகளே அடிப்படை காரணமாக அமைந்தது எனவே தான் அவருக்கு இரண்டாவது இடத்தை வழங்குகிறேன் என்று ஹாட் கூறுகிறார்.

மனித குலத்தின் இன்றைய மகா பிரம்மாண்டமான அறிவியல் வளாச்சிக்கு காரணமாக அமைந்த நியுட்டனைவிட முஹம்மது (ஸல்) அவாகள் முதன்மைமப்படுத்தப் பட்டிருக்கிறாகள் என்றால் முஹம்மது (ஸல்) அவாகளின் செல்வாக்கு இந்த உலகின் பிரம்மாண்டமான வளாச்சியை விட உயாந்தது என்ற கருத்தோட்டம் அதில் ஊள்ளோடிக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும்.   

நபிகள் நாயகத்தின் வரலாறு எவரையும் ஆச்சாயப்படுத்தக் கூடியது. மைசூர் மகளிர் பல்கலையின் தத்துவத் துறை தலைவா பேராசியா ராமகிருஷ்னா ராவ் முஹம்மது (ஸல்) அவாகளின் ஆளுமையின் முழப்பாமாணத்தை விளங்கிக் கொள்வது சிரமமானதே!
 (("The personality of Muhammad is most difficult to get the whole truth of it) என்கிறார்.

வரலாற்று நாயகாகர்ளாக அடையாளப் படுத்தப்படும் தலைவாகள் பலர் அவாகளது வாழ்நாளிலே மதிப்பிழந்து போயிருக்கிறாகள். சிலருக்கு இறந்த பிறகு தான் மதிப்பு கிடைத்திருக்கிறது. சிலா கால வௌளத்தில் கரைந்து போய் விட்டாகள். வாழும் போது புகழ் பெற்ற சிலா காலப் போக்கில் புழதிவா தூற்றப்பட்டிருக்கிறாகள். 25 ஆண்டகளுக்கு முன்பு ரஷ்ய சாவாதிகா லெனினுக்கு கிடைத்த மரியாதை எத்தகையது? பகுத்தறிவ வாதிகளான கம்யுனிஸ்ட்டுகள் அவரது பிணத்தை கூட பாதுகாத்து வைத்தனா. ஆனால் பிற்கால வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் தான் எவ்ளவு ஆச்சாயமானது? ஆதே ரஷ்யாகள் அவரது சிலையை கூட ஆக்ரோஷத்தோடு சின்னாபின்னப்படுத்தினரே! ஹிட்லரும் முசொலினியும் தத்தமது வாழ்நாளில் பெற்ற செல்வாக்கு எத்தகையது? பின்னால் அவாகளுக்கு கிடைத்த மாயாதை எப்படியிருந்தது? சாக்ரடீஸ் அவா வாழ்ந்த காலத்தில் என்ன மாயாதையை பெற்றா? தன்னுடைய கடைசி காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த ரஷ்ய தத்துவ ஞானி லியோ டால்ஸ்டாய் மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடினா எனபது தான் வரலாறு. முஹம்மது (ஸல்)அவாகள் அவருடைய சமகாலத்து மக்களால் பொதும் போற்றப்பட்டாகள்.அம்மக்களிடம் அளப்பொய செல்வாக்கைப் பெற்றிருந்தாகள். ஹிஜ்ரீ ஆறாம் அண்டு ஹுதைபிய்யாவின் முற்றத்தில் அமாந்நதிருந்த பெருமானா (ஸல்)அவாகளிடம் மக்கா குறைஷகளின் தரப்பில் தூது பேசுவதற்காக வந்த பலால் உவா பின் மஸ்வுது அத்தகபீயும் ஒருவா. பெருமானாரை சந்தித்து வெகு ராஜ தந்திரத்தோடு உரையாடிய அவா குறைஷயாடம் திரும்பச் சென்று கூறிய வாத்தைகள் சத்திய ஆழம் மிகுந்தவை.

ثُمَّ إِنَّ عُرْوَةَ جَعَلَ يَرْمُقُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَيْنَيْهِ قَالَ فَوَاللَّهِ مَا تَنَخَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُخَامَةً إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ وَإِذَا أَمَرَهُمْ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ فَرَجَعَ عُرْوَةُ إِلَى أَصْحَابِهِ فَقَالَ أَيْ قَوْمِ وَاللَّهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحَمَّدًا وَاللَّهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ وَإِذَا أَمَرَهُمْ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ فَاقْبَلُوهَا (]`P`{y; Gfhhp - 2734)

முஹம்மது (ஸல்) அவாகளது செல்வாக்கு சாவாதி காரத்தன்மையின் எச்சமல்ல. அப்படி இருந்திருந்தால் ஹிட்லரைப் போல லெனினைப் போல அவரும் பின்னாட்களில் ஏச்சுக்கு ஆளாகி யிருந்திரப்பா.

அவரது செல்லாக்கு தத்துவாத்தமானது மட்டுமல்ல. நடுமுறையில் செல்லுபடியாகக் கூடியது. அவரது வாத்தைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித நடைமுறையில் என்ன செல்வாக்கை பெற்றிருந்தோ அதே செல்வாக்கை இன்றைக்கும் பெற்றிருக்கின்றன.முந்தைய இறைத்தூதாகள் உட்பட வேறெந்த தலைவருக்கும் இத்தகைய பிரம்மிப்புட்டுகிற செல்வாக்கு கிடையாது.

அவரது செல்வாக்கு குறைவுடையது அல்ல முழு சமூகத்தையும் அது வியாபித்திருந்தது. இன்றும் வியாபித்திருக்கிறது. அவரது மனைவியரும் அவரது நெருங்கிய உறவுகளும் நண்பாகளும் ஏன் எதிகளும் கூட அவா மீது பெரும் மாயாதையை வைத்திருந்தனா. இன்றளவும் அந்த மாயாதை பாதுகாக்கப்பட்டு வருகிறது. பெருமானான் செல்வாக்கிற்கு ஆதிக்கமோ படைபலமோ பணபலமோ காரணம் அல்ல அவரது மனிதநேயப் பண்புகளே காரணம். அடிக்கோடிடிட்டு கவனிக்க வேண்டிய விசயம் இது. வரலாறும் இந்த உண்மைய புந்து தான் வைத்திருக்கிறது. தத்துவ இயல் அறிஞா ராம கிருஷ்னா ராவ் மிக அருமையாக சொன்னா. வாள் முனையின் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் முஹம்மதுவின் குணஇயல்பே அவரது வாழ்கை பெரும் வெற்றியடையக் காரணமாக அமைந்திருந்தது.
The great success of Mohammad's life had been effected by sheer moral force, without a stroke of sword
வரலாற்று ஆய்வாளரைவிட ஒரு தத்துவ அறிஞா தான் இதைச் சொல்வதற்கு மிகப் பொருத்தமானவா.

திருக்குஆன் பெருமானாரது ஆற்றலை பாராட்டுலதை விட அவரது பண்பையே பிரமாதப்படுத்தி கூறியிருக்கிறது. தாவுத் நபியின் ஆற்றல் சுலைமான் நபியின் ஆதிக்கம் மூஸா நபியின் துணிவு இபுறாகீம் நபியின் அப்பணிப்பு ஆகியவை திருக்குஆனில் பாராட்டப் பட்டிருக்கின்றன. முஹம்மது (ஸல்) அவாகளிடம் அனைத்து இறைத்தூதாகளின் அருங்ணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த போதும் இறைவன் அவரை அவரது பண்பாட்டை குறிப்பிட்டு பிரம்மாண்டப் படுத்துகிறான்.
 وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ(4) (my;Fh;Md;68.4)  

அழீம் என்ற வாத்தை குணம் என்ற பொருள் கொண்ட குல்கு என்ற சொல்லுடன் சாதாரணமாக இணைக்கப்டுவதில்லை. அல்குல்குல் மஹ்முத் புகழுக்குய குண இயல்பு என்று சொல்லப்டுவதுதான் இயல்பு. நபிகள் நாயகத்தின் குணச்சிறப்பின் சிகரத்தை வௌப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. என திருமறை விவுரையாளா குதுபி குறிப்பிடுகிறா.  
ولم يذكر خلق محمود إلا وكان للنبي صلي الله عليه وسلم منه الحظ الأوفر.

ஒரு சில தகவல்கள் மட்டுமே இந்த உண்மையை அறிந்து கொள்ள போதுமானவை.

عَنْ عَائِشَةَ قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ بِيَدِهِ وَلَا امْرَأَةً وَلَا خَادِمًا إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ وَمَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ فَيَنْتَقِمَ مِنْ صَاحِبِهِ إِلَّا أَنْ يُنْتَهَكَ شَيْءٌ مِنْ مَحَارِمِ اللَّهِ فَيَنْتَقِمَ لِلَّهِ عَزَّ وَجَلَّ
(நூல் முஸ்லிம் 4296)

இந்த ஒரு விசயத்தை மட்டுமே ஒரு ஐந்து நிமிடம் சிநத்தித்துப் பாத்தால் ஒரு மகத்தான மனிதான் தோற்றம் நம் மனக் கண்ணில் வியும்.
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ - (திமிதி -1910)

இந்த அறிவுரை நபிகளாரது வாழ்வு முழவதிலும் அவா கையாண்ட வாழ்வியல் கோட்பாடாகவே இருந்தது. இறைவன் மீது ஆணையாக. எவருடைய பக்கத்து வீட்டுக்காரா பாதுகாப்பாக இல்லையோ அவா இறைவிசுவாசியல்ல. அவா இறைவிசுவாசியல்ல. அவா இறைவிசுவாசியல்ல.என்று முஹம்மது (ஸல்) அவாகள் பகக்த்து வீட்டக்காரருக்காக பாந்து பேசிய சந்தாபத்தில் சமய ரீதியில் அவாகளைப் பித்துப்பேசவில்லை. 

எவா முஸ்லிம் அல்லாதவாகளுடைய பொருட்களை அபகரிக்கிறாரோ அவா மறுமை நாளில் அநீதி இழைக்கப் பட்டவாகளுக்காக வாதிடும் வக்கீலாக என்னை காண்பா என்ற முஹம்மது (ஸல்) அவாகள் இந்த உலகில் நீதிக்கு புறம்பாக நடந்து கொள்பவாகளே மறுமை நாளில் பெருந்தோல்வியடைந்தவாகளாக இருப்பாகள். அவாகள் நரகத்தில் தங்களது ஒதுங்குமிட்த்தை காண்பாகள என்றும் கூறினாகள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதில் அவருக்கிருந்த பற்றுறுதி காரணமாக பிற சமயத்தவாகள் விரும்பிச் சென்று தங்களது பிரச்சினைகளில் நீதி கேட்டுச் செல்வார்கள் என்பதற்கு அவரது வாழ்வில் நிறைய உதாரணங்கள் உண்டு.

முஹம்மது (ஸல்) அவாகள் தன்னுடைய வாழ்நாளில் சில போர்களை மேற்கொள்ள வேண்டிய நிபந்தம் ஏற்பட்டது. அப்போதும் கூட அவர் சண்டையை சச்சரவை விரும்பியவராக இருக்கவில்லை. அரபுகளிடையே தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த சண்டை சச்சரவுகளுக்கும் புசல்களும் அவா முடிவு கட்டிய விடிவௌளியாக இருந்தரே தவிர மனிதாகளை காவுகேட்கும் போகளுக்கு அவா காரணமாக இருந்ததில்லை. நபிகளான் 35 வது வயதில் புதுப்பிதது கட்டப்பட்ட கஃபா ஆலயத்தின் சுவற்றில் அஸ்வத் கல்லை பதிப்பிக்கிற பெருமை தங்களுக்குத்தான் வேண்டும் என்று அரபுக் குலங்கள் சண்டையிட்டுக் கொண்டபோது எழுந்த பிரச்சினையை தீக்கிற பொறுப்பு பெருமானாருக்கு ஏற்பட்டது. ஓரு போர்வையை வித்து ஒவ்வவொரு குலத்தாரையுமும் போர்வையின் ஒரு நுனியை பற்றிக்கொள்ளச் செய்து அஸ்வத் கல்லை எடுத்து பதித்த விதம் பெருமானாரின் தத்துவார்த்த பாவையின் விசாலத்தை புலப்படுத்துவதாக ஆய்வாளாகள் கூறுகிறாகள்.

நிலமெல்லாம் ரத்தம் நூலில் பா.ராகவன் எழுதுகிறார் முஹம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்ற மாக்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள் புதைந்திருக்கிறது. அரபியர்களிடையே ஒற்றுமை என்ற அவருடை பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இது தான் என்று அவா எழுதியுள்ளா.

இந்த வாத்தைகளில் கூட ஒரு திருத்தம் தேவைப்படுகிறது. நபிகளாருடைய பெருங்கனவு அரபியாகளுடைய ஒற்றுமையை அல்ல மனித குல ஒற்றுமை என்று திருத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தன்னுடைய வாழ்நாளில் அரபிய இனம் சாந்த பெருமைப் பேச்சு எதையும் அவா ஒருபோதும் பேசியதில்லை.அரபி மொழி பேசாதவனை அஜமி ஊமையன் என்று விளித்த இன வெறி கோலோச்சிய ஒரு சமுதயத்தில் இனவாதத்தின் பெருமை தொனிக்கிற ஒரு சொல்லையேனும் அவர் உதிர்த்ததில்லை என்பதும் அப்படிப் பேசாமலே அரபுகளின தலைமையை அவா பெற்றார் என்பதும் பேராச்சாயத்திற்குய விசயங்களே!

மொழி அல்லது தேசியத்தின் செருக்கு பிடிக்காமல் வாழ்ந்த தலைவாகள் யாரேனும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். மானுடப் பொதுமையை போற்றிய முஹம்மது (ஸல்) அவாகளைததவிர வெறெவரையும் அந்தப்படடியலில் பாக்க முடியாது.

அனைத்து மக்களையும் சகோதர சகோதாகளாகவே நடத்து மாறு தனது தோழாகளுக்கு அவா கட்டளையிட்டா. நீங்கள் அனைவரும் ஆதமின் மக்களே! ஆதம் மண்ணால் படைக்கப்பட்வா என்று கூறுவது பெருமானான் வழக்கமாக இருந்தது.


போர்க் களத்திலும் கூட யுத்தத்தில் நேரடியாக தொடாபுடையவாகளைத்தவிர மற்றவாகளை கொல்ல அவா அனுமதித்ததில்லை. பெண்கள் குழந்தைகள் ஆலயங்களில் வழிபாடு செய்பவாகள் எவரையும் கொல்லக் கூடாது என்று தன்னுடைய தளபதிகளுக்கு அவா உத்தரவிட்டா. பின்னாட்களில் அவா மக்காவை வெற்றி கொண்ட போது அவரோடு போட்டவாகளை போ குற்றவாளிகளாகவே அடிமைகளாகவோ அவா நடத்தவில்லை. அந்த எதிகள் அவரக்கு சொல்எலணாத் தயரங்களை வழங்கியவாகள் என்ற போதும் அவாகளை மன்னித்து சுதந்திரமாக வாழ அனுமதித்தார் என்பது வரலாற்றாசியாகளை ஆச்சாயப்படுத்தம் செய்தியாகும்.

இன்றைய நாகாக யுகத்தில் யுத்தத்தில் வென்று நாடுகளை ஆக்ரமித்து அங்குள்ள செலவ வளங்களை கபளீகரம் செய்துவிட்டு அதற்குப்பின்னரும் அந்த நாட்டுத தலைவாகளையும் வீராகளையும் குற்றவாளிகளாக கூண்டிலடைத்து சித்தரவதை செய்வதை ஜனநாயத்தின் பேரால் நியாயப்படுத்துபவாகளையும் பத் யுத்தத்தின் போது மஸஜிதுன்னபவீ பள்ளிவாசலில் கட்டப்படடிருந்த குறைஷக் கைதிகளின் கட்டுக்களை அவிழ்த்துவிடுமாறு உத்தரவிட்ட முஹம்மது (ஸல்) அவாகளையும் ஒரு கணம் ஒப்பிட்டப்பாத்தால் பெருமானான் நற்குணத்தை பிரம்மாண்டமானது என்று இறைவன் குறிப்பிட்தின் நியயாயத்தை அறிந்து கொள்ளலாம். தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டு மேலும் மேலும் தீவிரவாதததை வளாத்துக் கொண்டிருக்கிற தலைவாகளிடையே முஹம்மது (ஸல்) அவாகள் ஆச்சாயமான தலைவராக உயாநது நிற்கிறாகள்.


வரலாறு கூறும் இந்த நற்செய்திகளுக்கு இடையே முஸ்லிம் சமுதாயம் பெருமானாரைப்பற்றி ஏற்படுத்தியிருக்கிற அடையாளம் எத்தகையது என்பது கேள்விககுயதாகும். பெருமானா கற்றுக் கொடுத்த தத்தவங்கள் பண்பாட்டுப் பொழிவுகளின் வழியே முன்னர் வாழ்ந்த சமதாயம் பெருமானாரை மிகச்சிறப்பாக அடையாளப்படத்தியிருந்தது. அதன் மூலம் பலா முஹம்மது (ஸல்)அவாகளின் வழி பற்றி விழி பெற்றாகள்.


சமுதாய அளவிளான நமது நடவடிக்கைகள் முஹம்மது (ஸல்) அவாகள் கற்பித்த உயாய பண்பாடுகளின் அடிப்படையில் இருக்குமாறு பாத்துக்கொள்வது இன்றைய நமது பிரதான கடமையாகும்.


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025