ரஜப் மாதமும் பரக்கத்தும் (old version) 12-01-24 03-01-25



 

பரக்கத்தான வாழ்வைத் தந்தருள்வாய் யாஅல்லாஹ்!!!

 

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான சங்கை நிறைந்த ரஜப் மாதத்தின் முதல் ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

ரஜப் மாதம் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுமந்து நிற்கும் ஒரு மாதம் ஆகும்.

இந்த உம்மத்திற்கு தொழுகையும்ஜகாத்தும் கடமையாக்கப்பட்ட   மாதம் ஆகும்.

இந்த மாதத்தில் தான் கஅபாவை கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று இந்த உம்மத்திற்கு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான்.

பெருமானார் {ஸல்அவர்கள் இறைவனை தரிசித்துஉரையாடி மகிழ்ந்த மிஃராஜ் பயணம் நிகழ்ந்த மாதமாகும்.

மாநபி {ஸல்அவர்களோடு தோழமை கொண்டிருந்த நபித்தோழர்கள் பலரும்மேதகு ஷாஃபிஈ (ரஹ்மாதகு கஸ்ஸாலி (ரஹ்போன்ற மார்க்க விற்பன்னர்களும்அஷ்ஷைகு காஜா முயீனுத்தீன் அஜ்மீரி (ரஹ்போன்ற இறை நேசச் செல்வர்களும்மஹ்மூத் கஜ்னவீ போன்ற நீதிவழுவா ஆட்சியாளர்களும் இந்த உலகை விட்டு விடை பெற்றுச் சென்ற மாதமாகும் 

எனவே மாண்புடைய மாதமான இந்த ரஜப் மாதத்தை அல்லாஹ்வின் மாதம் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).

الشيخ الألباني 3094

‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ரஜப் மாதம் பெயர் காரணம்

‘ ரஜப் ‘ என்பது தர்ஜீப் என்ற மூலச் சொல்லில் இருந்து வெளியானது . அதன் பொருள் ‘ மரியாதை செய்தல் ‘ என்பதாகும் . இதற்கு அல்அஸப் ( வேகமான நீரே டம் ) என்றும் சொல்லப்படும் . ஏனென்றால் இந்த முபாரக்கான மாதத்தில் தௌபா செய்பவர்களுக்கு ரஹ்மத்துக்களை அதிகமாக வழங்குவதோடு , மேலும் வணக்கசாலிகளின் இபாதத்துக்கள் அதிகமாக ஒப்புக் கொள்ளப்படுகிறது . இதற்கு அல்அஸம் ( செவிடு ) என்றும் சொல்லப்படும் . ஏனென்றால் இதில் யுத்தங்களின் சப்தங்கள் அறவே கேட்கப்படமாட்டாது.

( முகாஷஃபதுல் குலூப் , பக்கம் 301 )

இந்த மாதத்திற்கு ‘ ஷஹ்ரே ரஜம் ‘ என்றும் சொல்லப்படும் . ஏனெனில் இந்த மாதத்தில் முஸ்லிம்களுக்கு நோவினை அளிக்காமல் இருப்பதற்காக ஷைத்தானை கல்லால் அடிக்கப்படுகிறது.

( குன்யதுல் தாலிபீன் , பாகம் 1 , பக்கம் 319 , 320 )

ரஜப் உடைய மூன்று எழுத்துக்களின் சிறப்புக்கள்......

ரஜப் உடைய மூன்று எழுத்துக்களின் சிறப்புக்கள்

ரஜப் என்பதில் மூன்று எழுத்துக்கள் உள்ளன அதாவது ரா ஜீம் பா  ரா என்பது ரஹ்மத், ஜீம் என்பது அடியானுடைய குற்றம், பா என்பது நன்மை போன்றதாகும் . அல்லாஹ் தனது அடியானின் பாவத்தை தனது ரஹ்மத் மற்றும் ஆதரவுக்கிடையில் ஆக்கி விடுகிறான்.

( முகாஷஃபதுல் குலூப் , பக்கம் 301 )

அனைத்திற்கும் புனிதம் உள்ளது

கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் படைப்பினங்களில் மனிதனை சிறந்த படைப்பாக்கி வைத்திருக்கிறான்  மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’ என்று அந்த ரசூல்மார்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரைத் தெரிவு செய்து அவர்களில் மிக மிகச் சிறப்பான நபியாக ரசூலாக அடியாராக அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.

இவ்வாறே இடங்களைப் படைத்த அல்லாஹ் மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா, பைத்துல் முகத்தஸ் ஆகிய இடங்களை ஏனைய சகல இடங்களைவிடவும் கண்ணியப்படுத்தி வைத்தான். இது போல கால நேரங்களைப் படைத்த அல்லாஹ் வெள்ளிக்கிழமையை நாட்களின் தலைவனாகவும் மாதங்களில் முஹர்ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப், ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான்.

 “சங்கையான நான்கு மாதங்கள்” என அல்லாஹ் அல்குர்ஆனில் போற்றிப் புகழும் நான்கில் ஒரு மாதம் தான் நாம் அடைந்திருக்கும் இந்த உன்னதமான பாக்கியம் நிறைந்த ரஜப் மாதம் ஆகும் 

ரமலான் மாதத்திற்கு பயிற்சி மாதமே இந்த ரஜப் மாதமாகும் 

ரமலான் மாதத்தில் நமக்கு பயிற்சி களமாக இந்த ரஜப் மாதம் திகழ்கிறது. காரணம் ரமலான் மாதத்தில் நிறைய நற்காரியங்களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் எல்லா அமல்களையும் இந்த மாதத்தில் பழகிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும்.

ஹழ்ரத் ஸய்யிதுனா அல்லாமா ஸஃப்பூரி ரஹ் கூறுகிறார்கள்.

ரஜப் மாதம் விதையிடுதல் , ஷஃபான் மாதம் நீர்ப்பாய்ச்சுதல் மேலும் ரமழான் அறுவடை செய்யும் மாதமாகும் . எனவே யார் ரஜப் மாதத்தில் இபாதத்தின் விதையை விதைக்கவில்லையோ , ஷஃபான் மாதத்தில் கண்ணீரின் மூலம் அதற்கு நீர் புகட்ட வில்லையோ அவர் ரமழான் மாதத்தில் ரஹ்மத்தை எவ்வாறு அறுவடை செய்ய முடியும் ? மேலும் குறிப்பிடுகிறார்கள் , ரஜப் மாதம் உடலையும் , ஷஃபான் மாதம் உள்ளத்தையும் மேலும் ரமழான் மாதம் ரூஹையும் சுத்தப்படுத்துகிறது .

( நு z ஸ்ஹதுல் மஜாலிஸ் , பாகம் 1 , பக்கம் 209 )

ரஜப் மாதத்தின் 27 ம் நாளுடைய நோன்பிற்கு அதிக சிறப்புண்டு . எவ்வாறெனில் , ஹழ்ரத் ஸய்யிதுனா ஸல்மானுல் ஃபாரிஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் . அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் நபிகள் பெருமானார் அன்னவர்கள் கூறினார்கள்,

” ரஜப் மாதத்தில் ஒரு பகலும் , இரவும் உள்ளது , யார் அந்த பகலில் நோன்பும் , இரவில் நின்று வணங்கவும் ( இபாதத்தும் ) செய்கிறாரோ அவர் நூறு வருடம் நோன்பு நோற்றவரையும் , நூறு வருடம் நின்று வணங்கியவரையும் போலாவார் . மேலும் இது ரஜப் மாதத்தின் இருபத்தேழாம் நாளாகும் .

” ( ஷு – அபுல் ஈமான் , பாகம் 3 , பக்கம் 374 , ஹதீஸ் 3811 )


ரஜப் மாதத்தில் கவலைகளை நீக்குவதன் சிறப்பு

ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் பின் Z ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் . “ யார் ரஜப் மாதத்தில் ஒரு முஸ்லிமுடைய கவலையை நீக்குகிறாரோ , அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகையை வழங்குவான் , அது கண்ணுக்கு எட்டிய தூரம் விசாலமாக இருக்கும் . ரஜப் மாதத்தை நீங்கள் சங்கைப்படுத்துங்கள் , அல்லாஹ் உங்களை ஆயிரம் கராமாத்துக்களுடன் சங்கைப்படுத்துவான்.

( குன்யதுத் தாலிபீன் , பாகம் 1 , பக்கம் 324 , முஃஜமுஸ் ஸஃபர் லிஸ் ஸல்ஃபி , பக்கம் 419 , எண் 1421 )


பஸராவை சேர்ந்த ஒரு பெண்மணி தனது மரணத்தருவாயில் தன் மகனிடம் நான் ரஜப் மாதத்தில் அணிந்து கொண்டு அமல் செய்ய துணியைக் கொண்டு எனக்கு கஃபன் செய்யுங்கள் என்று வஸிய்யத் செய்தார். மரணத்தின் பின் அவருடைய மகன் வேறொரு துணியை கொண்டு கஃபன் செய்து நல்லடக்கம் செய்தார் . அங்கிருந்து வீடு திரும்பியதும் எந்த துணியைக் கொண்டு அவர் கஃபன் செய்தாரோ அந்த துணி தனது வீட்டில் இருப்பதைக் கண்டு நடுங்கினார் . பின்பு தனது தாய் வஸிய்யத் செய்த துணியை அச்சத்துடன் தேடியபோது அது அங்கே இருக்கவில்லை . இதற்கிடையில் மறைவான ஓர் அசரீரி கேட்டது , “ உனது கஃபனை திரும்பவும் பெற்றுக் கொள் , ( அவர் வஸிய்யத் செய்த ) அதே துணியைக் கொண்டு நாம் அவரை கஃபனிட்டோம் . ( ஏனென்றால் ) யார் ரஜப் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ , நாம் அவரை கப்ரிலே கவலையில் ஆழ்த்த மாட்டோம் .

” ( நு z ஸ்ஹதுல் மஜாலிஸ் , பாகம் 1 , பக்கம் 208 )

إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).


நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்காக அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.’


இந்த ரஜப் மாதம் துவங்கி விட்டால் “அல்லாஹ்வேரஜப் மாதத்தில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாகஇன்னும் ஷஅபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாகமேலும்ரமழான் மாதத்தை அடையும் நற்பேற்றை எங்களுக்கு வழங்கியருள்வாயாக!” என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்குமாறு இந்த உம்மத்தை மாநபி {ஸல்தூண்டிய மாதமாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கும் நம் குடும்பத்தாருக்கும்  உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பரக்கத் செய்வானாகஆமீன்!

பரக்கத்தான வாழ்வு அமைவதென்பது ஒவ்வொரு முஃமினுக்கும் இந்த உலகில் வழங்கப்படுகிற அருட்கொடைகளில் ஆக உயர்ந்த அருட்கொடையாகும்.

ஆகவே தான் பெருமானார் {ஸல்அவர்கள் நாம் பெரிதும் கவனமெடுக்காத சாதாரண விஷயங்களின் ஊடாகக் கூட பரக்கத்தை இறைவனிடம் கேட்கத் தூண்டி இருப்பதைக் காணமுடிகின்றது.

தொழுகைக்காக இன்ன பிற வழிபாடுகளுக்காக நாம் உளூ செய்கிறோம்அப்படி நாம் உளூ செய்கிற போது உளூவின் ஆரம்பத்தில் இறுதியில் ஓத வேண்டிய துஆக்களை மாநபி {ஸல்அவர்கள் கற்றுத் தந்தது போன்று உளூவின் இடையே ஓதுகிற துஆவையும் கற்றுத்தந்துள்ளார்கள்.

 اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي 

அல்லாஹ்வேஎன் பாவத்தை மன்னித்து விடுவாயாகஎன் வீட்டை ( உன் அருளால்விசாலமாக்குவாயாகஇன்னும் என் வாழ்வாதாரத்தில் பரக்கத் செய்வாயாக!!                                ( நூல்முஸ்னத் இப்னு அபீ ஷைபா )

பரக்கத் என்றால் என்ன ?

பரக்கத் என்ற வார்த்தையை நாம் விளங்கிக் கொண்ட விதம் பிழையானதும் தவறானதுமாகும். ஆம்! எல்லாவற்றிலும் அதிகமாக இருப்பதையே இங்கே நாம் பரக்கத் என்று நம்புகின்றோம்.

அதிகமாக சம்பாதிப்பதுஅதிகமாக வியாபாரம் நடப்பதுஅதிகமாக லாபம் ஈட்டுவதுஅதிகமாக சாப்பிடுவதுஓய்வு நேரங்கள் அதிகமாக கிடைப்பதுஅதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதிக வாகனம் வைத்திருப்பது, நிறைய தோட்டம் துரவுகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பது இது தான் பரக்கத் என்று நாம் நினைத்து வருகிறோம்.

ஆனால் உண்மையில் இஸ்லாம் வகுத்திருக்கும் அளவு கோலில் எல்லாவற்றிலும் அதிகமாக  இருப்பது என்பது பரக்கத்திற்கான அறிகுறியே அல்ல.

மாறாக, நாம் வாழ்க்கையில் பெற்ற எல்லா அருட்கொடைகளிலும் பிறரை விட குறைவாக நாம் பெறுகிற போதும் நம்முடைய மனம் நிறைவாக இருப்பதற்குப் பெயர் தான் பரக்கத் ஆகும்.

ஆகுமான வழியில் செய்யப்படும் தொழில் மூலம் குறைவாக வருமானம் கிடைத்தாலும் வாழ்க்கையின் எல்லா தேவைகளும் அதன் மூலம் பூர்த்தியாகும் என்றிருந்தால் அது வருமானத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும்.

.குறைவாக வியாபாரம் நடந்து மனதில் எவ்வித சஞ்சலமும் ஏற்படாமல், பிற வியாபாரிகள் பெறுகிற லாபம் பொறாமையையும் ஏற்படுத்தாமல் இருந்து, கிடைத்த லாபத்தை பொருந்திக் கொள்கிற மனம் வந்தால் அது வியாபாரத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும்.

குறைந்த அளவுள்ள உணவு பல பேரின் பசியை போக்குவதற்கு போதுமானதாக அமைந்து விட்டால் அது உணவில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும்.

  குறைவான காலத்தில், குறைவான நேரத்தில் நாம் எதிர்பார்த்திடாத அதிக காரியங்கள் நடைபெறுமானால் அது நேரத்தில் ஏற்படும் பரக்கத் ஆகும். குறைவான ஆயுட்காலம் பெற்றிருக்கிற நாம் குறைவான காலமே வாழ்ந்தாலும் செயற்கரிய பல சாதனைகளை நிகழ்த்த முடியுமானால் அது ஆயுட்காலத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும் 

சுருங்கக் கூற வேண்டுமானால், பரக்கத் என்பது அல்லாஹ் ஓர் அடியானுக்கு வழங்குகிற மறைமுக அருளாகும். பரக்கத் எனும் பேரருள் இருப்பதை ஒரு முஃமின் முழுமையாக நம்ப வேண்டும்.

ஏனெனில், அது காட்சிப் பொருள் அல்ல. அனுபவித்து உணர வேண்டிய அற்புதமான ஒன்றாகும் 

தம்மிடம் அதிகமாக இருப்பதை அடையாளப்படுத்தியவர்களெல்லாம் அழிந்து போனதாக அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது. சில போது சிலருக்கு அதிகமாக வழங்கப்படுவதே அழிவிற்கான அடையாளம் தான் என்று அல்குர்ஆன் சான்று பகர்கின்றது.

அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் முற்காலத்தில் வாழ்ந்த இரண்டு மனிதர்கள் குறித்து பேசும் இறைவன் அவர்களிடையே நடந்த உரையாடலைப் பதிவு செய்திருக்கின்றான்.

அதில் ஒரு மனிதனின் அழிவுக்கு அவன் அடையாளப்படுத்திய அதிகமான பொருட்செல்வங்களும், மக்கள் செல்வங்களுமே காரணம் என்று குறிப்பிடுகின்றான்.

பார்க்க அல் கஹ்ஃப் அத்தியாயம் வசனம் 32 முதல் 43 வரையாகும்

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُون 

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்தபோது  அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றாமல் விட்டபோது (முதலில் ரிஜ்கின் -வாழ்வாதாரத்தின்அனைத்து வாசல்களையும் நாம் அவர்களுக்கு திறந்து விட்டோம்.

பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த போது (நம் வேதனையைக் கொண்டுஅவர்களை திடீரென பிடித்துக் கொண்டோம்.அப்போது அவர்கள் நம்பிக்கையிழந்தவர்களாக ஆகிவிட்டனர். ( அல்குர்ஆன்6 ; 44 )

பரக்கத்திற்காகப் பிரார்த்தனை செய்தல்...

பிரார்த்தனை செய்யுங்கள்! என்று எந்தத் தோழர் கோரிக்கை வைத்தாலும் அல்லது எவருக்காவது மனமுவந்து நபி {ஸல்} அவர்கள் பிரார்த்தனை செய்தாலும் நபி {ஸல்} அவர்கள் இன்னின்னவருக்கு அதிகமான செல்வத்தை வழங்குவாயாக என்று கேட்கமாட்டார்கள். மாறாக, அவருக்கு நீ எதைத் தந்தாயோ அதிலே பரக்கத் செய்வாயாக என்று தான் நபி {ஸல்} அவர்கள் பிரார்த்தனை புரிவார்கள்.

பரக்கத் எனும் பேரருளின் முக்கியத்துவத்தை மாநபி {ஸல்} அவர்களின் இந்த நடைமுறையில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا فَلَمْ يُعْطِهِمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي وَقَالَ سَنَغْدُو عَلَيْكَ فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “என் தந்தையார் உஹுதுப் போரின்போதுஅவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனேநான் நபி {ஸல்} அவர்களிடம் சென்றேன்.

(விஷயத்தைக் கூறினேன்.) நபி {ஸல்} அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர்.

ஆகவேஅவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி {ஸல்} அவர்கள் கொடுக்கவில்லை. மாறாகநாம் உன்னிடம் காலையில் வருவோம் என்று என்னிடம் கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள்.

பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்துஅவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகுநான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன்.

(முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன.                                                    ( நூல் : புகாரி 2395 )

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ قَالَ مَا هَذَا قَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபி {ஸல்} அவர்கள்இது என்னஎன்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்துஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன் என்று பதிலளித்தார்கள் 

நபி {ஸல்} அவர்கள்பாரக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை வழங்குவானாக! என்று பிரார்த்தித்து விட்டுஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள்! என்று சொன்னார்கள்.               ( நூல் : புகாரி, 5155 )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا حَرَمِيٌّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி{ஸல்} அவர்களிடம்அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபி {ஸல்} அவர்கள்அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் பரகத் அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரி, 6344  

حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى – قَالَ – فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِىَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِى النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى – قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّى وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ – ثُمَّ أُتِىَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِى عَنْ يَمِينِهِ – قَالَ – فَقَالَ أَبِى وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِى مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலிஅறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம். அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபி {ஸல்} அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டபோது நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்வே இவர்களுக்கு வழங்கியவற்றில் இவர்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் இவர்களை மன்னித்து இவர்களுக்கு அருள் புரிவாயாக என்று கேட்டார்கள். ( நூல் : முஸ்லிம் )

بَاب حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي سَمِعْتُ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنْ الْبَرَكَةِ تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ عَنْ يُونُسَ

அல்லாஹ்வே! மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதைவிட இரண்டு மடங்கு மதினாவிற்கு பரக்கத் செய்வாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.                                    ( நூல் : புகாரி 1885 )

மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது நபியவர்களும்ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர் தோழர்களும் உண்ணுவதற்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். உள்ளூர்வாசிகளான அன்ஸாரிகளும் கஷ்டப்பட்டார்கள்.

இந்த மக்களுக்கு அதிகமான செல்வத்தை வழங்குமாறு நபி {ஸல்} அவர்கள் பிரார்த்தனை செய்யவில்லை. மாறாக மதீனா மக்கள் பயன்படுத்தும் அளவுப் பாத்திரங்களில் அல்லாஹ்வே பரக்கத் செய்! என்றுதான் பிரார்த்தனை செய்தார்கள்.

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ

இறைவாமதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத் அளிப்பாயாககுறிப்பாக அவர்களது ஸாஉமுத்து எனும் அளவுப் பாத்திரங்களில் நீ பரக்கத் அளிப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் ( நூல் : புகாரி 2130 )

பொருளாதாரத்தில் அல்லாஹ் வழங்குகிற பரக்கத்தால் ஏற்படும் நல்ல விளைவுகள்…    

خرج رسول الله- صلى الله عليه وسلم- إلى السوق ومعه ثمانية دراهم، فإذا جارية على الطريق تبكي، فقال لها: ما يبكيك؟ فقالت: بعثني أهلي بدرهمين لأشتري بهما حاجة فأضللتهما. (أي ضيعتهما) فأعطاها درهمين ومضى بستة، فاشترى بأربعة قميصا، ولبسه وانصرف وإذا بشيخ من المسلمين ينادي: من كساني كساه الله من خضر الجنة، فبادر رسول الله- صلى الله عليه وسلم- إلى خلع القميص وألقاه عليه، ثم ذهب إلى السوق فاشترى بدرهمين قميصا فلبسه، وفي طريق عودته منه رأى الجارية؛ حيث تركها تبكي، قال لها: ما يبكيك؟ فقالت: بأبي وأمي أنت يا رسول الله، طالت غيبتي عن أهلي وأخشى عقوبتهم، فقال لها: الحقي بأهلك. وجعل يتبعها حتى أتت دور الأنصار، وإذا رجالهم غائبون وليس فيها إلا النساء، فقال: السلام عليكن ورحمة الله، فسمعته النساء فعرفنه ولم يسمع مجيباً ثم عاد الثانية ثم الثالثة رافعاً صوته، فقلن بأجمعهن: السلام عليك يا رسول الله ورحمته وبركاته. فقال عليه الصلاة والسلام: أما سمعتن ابتداء سلامي؟
فقلن: بلى، ولكننا أحببنا أن نكثر لأنفسنا وذرياتنا من بركة تسليمك.
فقال: جاريتكن هذه أبطأت عنكن وخشيت العقوبة فهبن لي عقوبتها.
فقلن: وهبنا لك عقوبتها وقد أعتقناها لممشاها معك، فهي حرة لوجه الله.
فانصرف النبي صلى الله عليه وسلم وهو يقول: «ما رأيت ثمانية أعظم بركة من هذه الثمانية، أمن الله بها خائفاً، وكسا بها عاريين، وأعتق بها نسمة، 

பெருமானார் {ஸல்அவர்கள் ஒரு நாள் வீட்டிலிருந்து எட்டு திர்ஹம்களை எடுத்துக் கொண்டு ஆடை ஒன்றை வாங்குவதற்காக மதீனாவின் கடைவீதியை நோக்கி வருகின்றார்கள்.

வருகிற வழியில் ஒரு சிறுமி அழுது கொண்டு நிற்பதைக் கண்டு அருகில் சென்று ஸலாம் சொல்லி ஏன் அழுகின்றாய்என்று கருணையோடு கேட்டார்கள்.

பதில் ஸலாம் சொல்லிய பின் அந்தச் சிறுமி “என் எஜமானி அவர்கள் வீட்டுக்குத் தேவையான சாதனங்கள் வாங்க என்னிடம் நான்கு திர்ஹம்களை கொடுத்து அனுப்பினார்கள்வருகிற வழியில் எங்கோ அந்த திர்ஹம்கள் தொலைந்து விட்டது.

சாதனங்கள் வாங்காமல் சென்றால் என்னுடைய எஜமானி என்னை ஏசுவார்கள்” என்றாள்.

உடனே கருணை நபி {ஸல்அவர்கள் தங்களிடம் உள்ள எட்டு திர்ஹம்களில் இருந்து நான்கு திர்ஹம்களை அந்தச் சிறுமியிடம் கொடுத்து இதை வைத்து சாதங்களை வாங்கி உன் எஜமாயிடம் சென்று கொடுத்து விடு” என்று கூறி கடை வீதிக்கு சென்று விட்டார்கள்.

ஒரு கடையில் இரண்டு திர்ஹம் கொடுத்து ஒரு ஆடையை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள்வீட்டை அடைந்ததும் வீட்டு வாசலில் ஒரு ஏழை யாசகர் உடுத்த என்னிடம் ஆடையில்லைஎனக்கு அணிவதற்கு ஆடை வழங்கினால் அல்லாஹ் அவருக்கு ஆடை அணிவிப்பான்” என்று கூறினார்.

இது கேட்ட காரூண்ய நபி {ஸல்அந்த ஏழை யாசகருக்கு அந்த ஆடையை வழங்கினார்கள்மீதமிருக்கிற இரண்டு திர்ஹம்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மதீனாவின் கடை வீதிக்கு வந்துஅதே கடையில் இரண்டு திர்ஹம்களுக்கு ஆடை ஒன்றை வாங்கினார்கள்.

கடை வீதியில் வந்து கொண்டிருந்த போது வேறொரு ஏழை யாசகர்  “அணிவதற்கு என்னிடம் ஆடையில்லைஅணிவதற்கு யாராவது எனக்கு ஆடை வழங்கினால் அல்லாஹ் அவருக்கு ஆடை அணிவிப்பான்” என்று கூறினார்.

அதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த ஆடையை அந்த ஏழை யாசகருக்கு வழங்கி விட்டு கடை வீதியை விட்டு வெளியே வந்தார்கள்.

சற்று நேரத்திற்கு முன்பு அந்தச் சிறுமி எங்கு நின்று அழுது கொண்டிருந்தாலோ அதே இடத்தில் கையில் சாதனங்களோடு நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள் 

அந்த சிறுமியின் அருகே சென்று அன்பாக பேசிய அண்ணல் நபி {ஸல்அந்தச் சிறுமியிடம் இப்போது ஏன் நீ அழுது கொண்டிருக்கிறாய்என்று கேட்டார்கள்.

அதற்கு, “என் எஜமானி என்னை கடைக்கு அனுப்பி வெகு நேரமாகி விட்டதுநான் இவ்வளவு தாமதமாக சென்றால் காரணம் கேட்பார்கள்நான் நடந்தவற்றைச் சொன்னாள் என்னை ஏதாவது செய்து விடுவார்களோஎன்று நான் பயப்படுகின்றேன்” என்றாள் அந்தச் சிறுமிதொடர்ந்து அந்தச் சிறுமி அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களேஎன்னை என் எஜமானியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களைக் கூறி எனக்காக பரிந்துரை செய்வீர்களா?” என்று கேட்டாள்.

மாநபி {ஸல்சம்மதித்து விட்டுதாம் முன்னால் செல்வதாகவும்தமக்குப் பின்னால் நடந்து வருமாறும் வீடு வந்ததும் தம்மிடம் சொல்லுமாறும் அந்தச் சிறுமியிடம் கூறினார்கள்.

அந்தச் சிறுமி அடையாளம் காட்டிய வீடு ஒரு அன்ஸாரித் தோழருடையதுஅந்த வீட்டின் முன்பாக நின்று பெருமானார் {ஸல்அவர்கள் ஸலாம் கூறினார்கள்.

அந்த வீட்டில் இருந்த பெண்கள் ஸலாம் சொன்னவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் தான் என்பதை தெரிந்து கொண்டார்கள்பதில் ஸலாம் கூறவில்லை.

 இரண்டாவது முறையாக நபி {ஸல்அவர்கள் ஸலாம் கூறினார்கள்இப்போதும் பதில் ஸலாம் கூறவில்லைமூன்றாவது முறையாக ஸலாம் கூறியதும் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து அந்த பெண்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.

ஏன் நீங்கள் முதல் மற்றும் இரண்டாவது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை என்று மாநபி {ஸல்அவர்கள் கேட்கஅந்தப் பெண்கள் “அல்லாஹ்வின் தூதரேஅல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும்அபிவிருத்தியும் உங்கள் மீது நிலவட்டும்என்று துஆச் செய்வது நீங்களாயிற்றேஅது தான் உங்கள் துஆவை ஆதரவு வைத்துஉங்கள் துஆவின் மூலம் விளைகிற பரக்கத்தை ஆதரவு வைத்து உடனடியாக பதில் கூறாமல் சிறிது தாமதித்தோம்” என்று கூறினார்கள்.

பின்பு “கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கூறி இந்தச் சிறுமியின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று நபி {ஸல்அவர்கள் அந்த வீட்டுப் பெண்களிடம் கூறினார்கள்.

அப்போதுஅந்தப் பெண்கள் “இந்த உம்மத்தின் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் பாக்கியம் நிறைந்த உங்கள் பரிந்துரையை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்போம்” என்றார்கள்.

பின்பு அந்த்ப் பெண்கள் “அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியும்உங்களை கண்ணியம் செய்யும் பொருட்டாக அடிமைப் பெண்ணான அந்தச் சிறுமியை இதோஇப்போதே உரிமை விட்டு விடுகின்றோம்” என்று கூறினார்கள்.

அப்போது பெருமானார் {ஸல்அவர்கள் “இந்த எட்டு திர்ஹம்களில் உள்ள அதிகமான பரக்கத்தை விட வேறெந்த திர்ஹம்களிலும் நான் கண்டதில்லை.

இதோஇந்த திர்ஹம்கள் மூலம் ஒருவரின் பயத்தை அல்லாஹ் நீக்கி நிம்மதி வழங்கி இருக்கின்றான்ஆடையில்லா இரண்டு ஏழைகளுக்கு அல்லாஹ் ஆடை வழங்கியிருக்கின்றான்ஒரு அடிமையை அல்லாஹ் உரிமை விட்டிருக்கின்றான்” என்று கூறினார்கள். ( நூல்: Zஜாதுல் மஆத்புஸ்தானுல் ஃபுகராஃ வநுZஜ்ஹத்துல் குர்ராஃ )

ம்முடைய பொருளாதாரத்தில் அல்லாஹ் பரக்கத் வழங்கி விட்டான் என்றால் அந்த பொருளாதாரத்தின் மூலம் விளைகிற நலவுகளை வார்த்தையில் வடித்து விட முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் பெரும் சான்றாகும்.

 

பரக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வோம்!!

பரக்கத் எனும் மறைமுக அருள் ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமானால் அவர் அல்லாஹ்விடம் அதை வேண்டுவதுடன் சில தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நபி {ஸல்} அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

و حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنْ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் நபி {(ஸல்} அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்மீண்டும் (உதவி) கேட்டேன்வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்வழங்கிவிட்டுஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும்இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரக்கத் ஏற்படுத்தப்படும். யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரக்கத் ஏற்படுத்தப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது என்று கூறினார்கள். ( நூல் : புகாரி 1472 )

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَسَعِيدٍ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ سَأَلْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَأَعْطَانِى ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِى ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِى ثُمَّ قَالَ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِى يَأْكُلُ وَلاَ يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் : செல்வத்தை உரிய முறையில் யார் அடைகிறாரோ அவருக்கு அதில் பரக்கத் வழங்கப்படும். செல்வத்தை முறையற்ற வழிகளில் யார் அடைகிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார் என்று கூறினார்கள்.                                    ( நூல் : முஸ்லிம் )

حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ يُونُسَ حَدَّثَنِي أَبُو الْعَلَاءِ بْنُ الشِّخِّيرِ حَدَّثَنِي أَحَدُ بَنِي سُلَيْمٍ وَلَا أَحْسَبُهُ إِلَّا قَدْ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ وَوَسَّعَهُ وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَه 

அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியதில் சோதிக்கிறான். அல்லாஹ் பங்கிட்டுத் தந்ததை யார் பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் தந்தவற்றில் பரக்கத் செய்கிறான். மேலும் விசாலமாக்குகிறான். எவர் பொருந்திக் கொள்ளவில்லையோ அவருக்கு அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான். ( நூல்: அஹ்மத் 19398 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பரக்கத்தான வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025