பராஅத்தும் பாவமன்னிப்பும்..(3-3-23)
பராஅத்தும் பாவமன்னிப்பும்
பராஅத்தை முன்னிட்டு நாம் செய்ய வேண்டிய முக்கியமான அமல்களில் அன்று இரவு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பதும் அன்று பகலில் நோன்பும் முக்கியமான ஒன்றாகும். ஷஃபான் 15-ம் நாளின் நோன்புக்கு முன்பு பிறை, 13, 14 ஆகிய நோன்புகளையும் சேர்த்து வைத்தால் பராஅத் நோன்பு, மற்றும் அய்யாமுல் பீழ் நோன்புகள் என இரண்டையும் சேர்த்து கடைபிடித்த நன்மைகளைப் பெறலாம்.
ஒரு முஸ்லிம் அவ்வப்போது தனது பாவங்களுக்காக தவ்பா செய்யா விட்டால் உள்ளம் துருப்பிடித்து விடும். காரணம் வருடம் முழுவதும் பாவத்தில் மூழ்கி கிடக்கிறான் கடல் நுரைகள் போல பாவங்கள் குவிந்து கிடக்கின்றன இருந்த போதிலும் அதை நான் மன்னிக்கிறேன் என்னிடம் இந்த புனித நாட்களிலாவது சரனடைந்து விடு என்கிறான் இறைவன்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رض عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ.. وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (احمد)عَنْ أَبِى هُرَيْرَةَ رض أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِى قَلْبِهِ فَإِنْ تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُهُ فَإِنْ زَادَ زَادَتْ فَذَلِكَ الرَّانُ الَّذِى ذَكَرَهُ اللَّهُ فِى كِتَابِهِ ( كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ(المطففين14) ابن ماجة
ஒரு அடியான் ஒரு பாவம் செய்தால் அவனது உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி ஏற்பட்டு விடுகிறது. அவன் தவ்பா செய்தால் அது நீங்கி விடுகிறது. தவ்பா செய்யாமல் தொடர்ந்து பாவம் செய்தால் துருப்பிடித்து திருந்தாத உள்ளமாக ஆகி விடும்.
தொடர் பாவங்களால் உள்ளம் முத்திரையிடப்படுவதை அல்லாஹ் குர்ஆனில் பல உவமைகளுடன் விபரிக்கிறான்
خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ (7) البقرة - أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (108)النحل - وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا (125)الانعام - كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ (14)المطففين
1.முத்திரையிடுதல்- சீல் வைத்து விட்டால் வெளியில் இருந்து எதுவும் உள்ளே போகாது. எத்தனை உபதேசங்கள் கேட்டாலும் பலன் இருக்காது 2. அச்சுப்பதித்தல்-print செய்யப்பட்டால் நீக்க முடியாது குறிப்பாக நாணயங்களில் print செய்யப்பட்டு விட்டால் நீக்க முடியாது 3.இறுகிய உள்ளமாக ஆக்கி விடுதல் 4. துருப்பிடித்து விடுதல்
பாவ மன்னிப்பு பல பிரச்சினைகளைத் தீர்க்கும்
பஞ்சம் நீங்க, கவலைகள் தீர, குழந்தை பாக்கியம் பெற ,வீடு,தோட்டம் செழிக்க இஸ்திஃபார் தான் சிறந்த வழி
நபி நூஹ் அலை அவர்களை அவர்களுடைய சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்தியபோது அல்லாஹ் 40 வருடங்கள் அவர்களுக்கு மழையை நிறுத்தி விட்டான். பெண்களை மலடிகளாக அல்லாஹ் ஆக்கி விட்டான். கால்நடைகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. அப்போது அவர்கள் நபி நூஹ் அலை அவர்களிடம் முறையிட, நபி நூஹ் அலை அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பான். மழை பொழிய வைப்பான். குழந்தை பாக்கியங்களைத் தருவான். தோட்டங்களை உருவாக்கி ஆறுகளை அல்லாஹ் ஓடச் செய்வான் என நபி நூஹ் அலை அவர்கள் கூறினார்கள்.
ஒருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மழை இல்லாததால் ஏற்பட்ட பஞ்சத்தை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் பஞ்சம் நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் வறுமையை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் வறுமை நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக துஆச் செய்யுங்கள்என முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் தன் தோட்டம் வரண்டு கிடப்பதை முறையிட்டபோது அல்லாஹ்விடம்நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். உடன் இருந்தவர்கள் எல்லாவற்றுக்கும் இஸ்திஃபாரைக் கூறுகிறீர்களே என்று கேட்டபோது இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் நான் என் சொந்தக் கருத்தில் எதையும் கூறவில்லை. நபி நூஹ் அலை அவர்கள் தனது சமூக மக்களிடம் கூறியதையே நான் கூறுகிறேன் என்றார்கள்.
قال الشعبي:خرج عُمَر رض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوا مارأيناك استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي
உமர் ரழி அவர்கள் மழைத் தொழுகைக்கான குத்பாவின் போது இஸ்திஃபாருடைய வாசகங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. திரும்பி வருவதற்குள் அல்லாஹ் மழையை இறக்கினான். உமர் ரழி அவர்களிடம் சிலர் நீங்கள் மழைக்கான பிரார்த்தனை எதுவுமே கேட்கவில்லையே எவ்வாறு மழை பெய்தது என்று கேட்க, அதற்கு உமர் ரழி நான் அல்லாஹ்விடம் மழைவருவதற்கு முன் அதன் அறிகுறியாக தோன்றும் நட்சத்திரங்களுக்கு ஒப்பான இஸ்திஃபாரை வைத்து அல்லாஹ்விடம் மழையை வேண்டினேன். அல்லாஹ் மழையை இறக்கினான் என்றார்கள்
عَنِ الأَوْزَاعِيِّ"خَرَجَ النَّاسُ إِلَى الاسْتِسْقَاءِ، فَقَامَ فِيهِنَّ بِلالُ بْنُ سَعْدٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا مَعْشَرُ مَنْ حَضَرَ، أَلَسْتُمْ مُقِرِّينَ بِالإِسَاءَةِ ؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُمَّ إِنَّا نَسْمَعُكَ تَقُولُ: " مَا عَلَى الْمُحْسِنِينَ مِنْ سَبِيلٍ " وَقَدْ أَقْرَرْنَا بِالإِسَاءَةِ فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَاسْقِنَا، وَرَفَعَ يَدَيْهِ وَرَفَعُوا أَيْدِيَهُمْ، فَسُقُوا". (تفسير ابن ابي حاتم
திமிஷ்க் நகரில் ஏற்பட்ட பஞ்சத்திற்காக மக்கள் மழைத்தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களின் இமாம் பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் அல்லாஹ்வைப் புகழந்த பின் மக்களை நோக்கி மக்களே நீங்கள் உங்களின் பாவத்தை அல்லாஹ்விடம் முறையிட மாட்டீர்களா என்று கேட்க, அதற்கு மக்கள் நாங்கள் முறையிடுகிறோம் என்றார்கள். அப்போது பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் யாஅல்லாஹ் உனது குர்ஆனில் நல்லோர்களுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் தவ்பாவைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளாய் நாங்கள் எங்களுடைய பாவங்களை உன்னிடம் முறையிடுகிறோம் எங்களை மன்னித்து மழையை இறக்கு என்று கேட்டார்கள். இமாம் அவர்களும் கையை உயர்த்தினார்கள். மற்றவர்களும் கையை உயர்த்தினார்கள். அல்லாஹ் மழையை இறக்கினான்
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (ابوداود
யார் இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வாரோ அவருக்கு எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலையை அல்லாஹ் தருவான். எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் நீக்குவான். அவர் அறியாப் புறத்தில் இருந்து அவருக்கு இரணம் வழங்குவான்.
عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لَا يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ أَنْتَ مِنْ الِاسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً (ابن ماجة)
கருத்து-ஹுதைபா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம் திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள்
كان الإمام أبو حنيفة إذا أشكَلت عليه مسألة قال لأصحابه: "ما هذا إلا لذنبٍ أحدثتُه"، وكان يستغفر، وربما قام وصلى، فتنكشف له المسألة، ويقول: "رجوتُ أني تِيبَ علَيَّ"؛ (الجواهر المضية - محيي الدين الحنفي - ج- 2 - ص- 478).
இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் நான் செய்த பாவத்தின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று கூறி இஸ்திஃபார் செய்வார்கள். சில நேரங்களில் அதற்காக தொழுது தவ்பா செய்வார்கள். அதன் பின்பு அந்த சிக்கல் நீங்கும். அப்போது இமாம் என் தவ்பா ஏற்கப்பட்டதன் அடையாளமாக இந்த சிக்கல் நீங்கி இருக்கலாம் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறுவார்கள்.
قال علي بن خشرم: "رأيت وكيع بن الجراح وما رأيتُ بيده كتابًا قط، إنما هو يحفظ، فسألتُه عن دواء الحفظ، فقال: تركُ المعاصي، ما جرَّبْتُ مِثلَه للحفظ"؛ (تهذيب التهذيب - لابن حجر العسقلاني - ج- 2 - ص- 129).
வகீஃ ரஹ் அவர்களை நான் கையில் கிதாப் இல்லாமலேயே மனப்பாடமாக பல விஷயங்களைக் கூறுவதை அவர்களின் மனன சக்திக்கான காரணத்தை நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பாவங்களை விடுவது தான் மனன சக்திக்கு முக்கியக்காரணம் என் அனுபவத்தில் இதை விட முக்கியக் காரணத்தை கண்டதில்லை என்றார்கள்.
قال مالك بن أنس للشافعي: "إن اللهَ ألقى على قلبك نورًا، فلا تُطفئه بظُلمة المعصية"؛ (تهذيب الأسماء - للنووي - ج- 1 - ص- 47).
قال الشافعي: شكوتُ إلى وكيعٍ سوءَ حِفظي فأرشَدني إلى ترك المعاصي وأخبَرني بأن العلمَ نورٌ ونورُ الله لا يُهدى لعاص(ديوان الشافعي
மனப்பாடம் என்பது அல்லாஹ் உள்ளத்தில் உருவாக்கும் பிரகாசம். அதை உனது பாவத்தால் இருளாக்கி விடாதே என மாலிக் ரஹ் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். மேலும் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறும்போது நான் வகீஃ ரஹ் அவர்களிடம் என் மனன சக்தியின் குறைபாட்டை விபரித்த போது பாவங்களை விட்டு விடும்படி கூறியதுடன் மனனம் என்பது அல்லாஹ் ஏற்படுத்தும் பிரகாசம். பிரகாசத்தை அல்லாஹ் பாவிக்குத் தர மாட்டான்.
قال ابن عباس رضي الله عنه (إن للحسنة ضياء في الوجه ونوراً في القلب وسعة في الرزق وقوة في البدن ومحبة في قلوب الناس. وإن للسيئة سواداً في الوجه وظلمة في القلب ووهناً في البدن ونقصاً في الرزق وبغضاً في قلوب الناس).
இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். நன்மை செய்வதால் முகத்திலும், உள்ளத்திலும் ஒளி ஏற்படும். ரிஜ்கில் பரக்கத், உடல் வலிமை, மக்களின் பிரியம் ஆகியவை ஏற்படும். ஆனால் பாவம் செய்வதால் இதற்கு மாற்றமான நிலை தான் ஏற்படும்.
இஸ்திஃபாரின் பலனை அனுபவித்த நல்லடியாரின் வரலாறு
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். மிக களைப்பாக இருந்ததால் சற்று நேரம் ஓய்வெடுக்க ஒரு மஸ்ஜிதில் அனுமதி கேட்டார்கள். முஅத்தினுக்கு இவர்களை யாரென்று தெரியாததாலும் இமாம் அவர்களும் தங்களை அறிமுகப்படுத்தவில்லை என்பதாலும் அவர் இங்கெல்லாம் தங்க முடியாது என்று உறுதியாக க் கூறினார். இமாம் அவர்கள் அதிக களைப்பின் காரணமாக சற்று ஓரமாக படுத்தார்கள். அது கண்ட முஅத்தின் காலைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார். இமாம் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த போது ரொட்டி சுட்டு விற்பனை செய்யும் ஏழை ஒருவரைச் சந்தித்தார்கள். அவர் இமாம் அவர்களை நோக்கி நீங்கள் மிகவும் களைப்புடன் காணப்படுகிறீர்கள். என் வீட்டுக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அங்கு தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அந்த ஏழையின் செயல்பாடுகளை இமாம் அவர்கள் உற்று கவனித்தார்கள். ரொட்டி சுடும்போதெல்லாம் அவரின் நாவின் இஸ்திஃபார் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்த து. அதைக் கவனித்த இமாம் அவர்கள் நீங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்திஃபாரை மொழிந்து கொண்டே இருக்கிறீர்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா என்று கேட்க, அந்த ஏழை வியாபாரி நான் இதன் பலனை நிறைய அனுபவித்துள்ளேன். நான் கேட்கும் துஆக்கள் அனைத்தும் ஒப்புக் கொள்ளப்படுகிறது என்று கூறி விட்டு, பிறகு வருத்தத்துடன் நான் பல வருடமாக கேட்டும் ஒரே ஒரு துஆ மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என்றார். அது என்ன என்று இமாம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நான் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பல வருடங்களாக அவர்களைக் காண வேண்டும் என்று துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதுவரை நிறைவேறவில்லை என்று கூறிய போது இமாம் அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் நான் தான் அஹ்மதுப்னு ஹன்பல் அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களிடம் நானாக வரவில்லை. காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்றார்கள்.
இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொண்ட சமூகத்தை அல்லாஹ் ஆட்சியாளர்கள் மூலம் தண்டிக்க மாட்டான்
وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)الانفال
கருத்து – இரண்டு விதமான பாதுகாப்புகள் இருக்கும் வரை அல்லாஹ் நம்மை சோதிக்க மாட்டான் 1. நபி ஸல் அவர்கள் நம்மோடு இருப்பது. 2.இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வது முந்தியது சாத்தியமில்லை என்றாலும் பிந்தியது சாத்தியம்.
தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும்.
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.
(எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் தொடர்களைப் போன்றாகும்.) ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.
கீழ்காணும் பாவிகள் திருந்தி தவ்பா செய்யாத நிலையில் பராஅத் இரவிலும் இவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படாது
عن معاذ بن جبل رض عن النبي صلى الله عليه وسلم قال:يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن (صحيح ابن حبان) -وزاد البيهقي "ولا إلى قاطع رحم ولا مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر"وهو ضعيف
பாவ மன்னிப்புக் கேட்காமல் தொடர்ந்து பாவம் செய்வதால் பாதிப்புகள்.
1, மறதி ஏற்படும்
قال عبدالله بن مسعودٍ رضي الله عنه: "إني لأحسب أن الرجلَ ينسى العلم قد علِمه بالذنب يعمَله"؛ (جامع بيان العلم - لابن عبدالبر –
இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதன் தான் கற்ற கல்வியை அவன் செய்யும் பாவங்களால் மறந்து விட வாய்ப்புண்டு
عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ (بخاري) عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ الْإِبِلِ فِي عُقُلِهَا (بخاري) ) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ .- فضائل القرآن
ஒருவருக்கு குர்ஆன் மறந்து விட்டால் நான் மறந்து விட்டேன் என்று கூறாதீர்கள். மாறாக மறக்கடிக்கப்பட்டு விட்டது. ஒட்டகத்தை அவிழ்த்து விடப்பட்டால் பிடிக்க முடியாதது போல் குர்ஆன் ஓதி மறந்து விட்டால் எளிதில் மீட்க முடியாது
هذا ذم، وسببه ما فيه من الإشعار بعدم الاعتناء بالقرآن، إذ لا يقع النسيان إلا بكثرة التغافل وترك التعاهد، فإذا قال الإنسان نسيت آية كذا وكذا فقد شهد على نفسه بالتفريط، فيكون متعلق الذم ترك الاستنكار والتعاهد لأنه الذي يورث النسيان قاله القرطبي (: الفجر الساطع على الصحيح الجامع
குர்ஆனை நான் மறந்து விட்டேன் என்று ஒருவர் கூறுவது அவர் செய்த பாவத்திற்கு அவரே சாட்சி சொன்னவரைப் போன்றாகி விடுவார். என இமாம் குர்துபீ ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ،" " وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ "((7) العاديات) ، قَالَ: الْإِنْسَانُ شَاهِدٌ عَلَى نَفْسِهِ،
2, பாவங்களால் பரக்கத் நீங்கும்.
ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான் என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், (செழிப்பாகிறது) நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது அந்த கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின் அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்துவிடும்.
3, பாவங்களின் காரணமாக சொத்து சுகங்கள் அழியும்.
إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ (76) .......... فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ (79) وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ (80) فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ (81) وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَنْ مَنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ (82)القصص
பாவங்களின் காரணமாக வணக்க வழிபாட்டில் படிப்படியாக தடை ஏற்படும்.
அதாவது இன்று ஒரு பாவம் செய்தால் இன்று ஒரு வணக்கம் தடைபடும். நாளை ஒரு பாவம் செய்தால் நாளை ஒரு வணக்கம் தடைபடும். உதாரணமாக முதலில் நஃபிலான வணக்கம் தடைபடும். பின்பு சுன்னத்தான வணக்கங்கள் தடைபடும். அப்போதுதான் இது பாவத்தின் பாதிப்புகள் என்பது புரியும்.யாரேனும் ஷைகுமார்களிடம் பைஅத் வாங்கியிருந்தால் ஷைகுடனான தொடர்பு துண்டித்து விடும். பின்பு அன்றாட திக்ருகள் விடுபடும். பின்பு தஹஜ்ஜுத் விடுபடும். அதற்குப் பின்பு வெளிப்படையான அமல்களும் தடைப்பட்டுபோய் விடும்
மனித வாழ்க்கைக்கு நிம்மதி என்பது மிகவும் அத்தியாவசியமான தேவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
அந்த நிம்மதியைப் அடைந்து கொள்ள இன்றியமையாத மூன்று அம்சங்களை மனிதன் பெற்றிருப்பது அவசியமாகும் அவை.
1. வளமான (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரம். 2. அதை அனுபவிப்பதற்கு தேவையான ஆரோக்கியமான நீண்ட ஆயுள். 3. நோய் நொடிகள், கஷ்டங்கள், துன்பங்கள், ஆபத்துகள் இல்லாத சூழ்நிலை ஆகியவைகளாகும்.
ஒரு மனிதனுக்கு இம்மூன்றில் ஒன்று பூரணமாகக் கிடைத்து, மற்ற இரண்டும் கிடைக்கவில்லை என்றாலும், அல்லது, இம்மூன்றில் இரண்டு கிடைத்து ஒன்று கிடைக்கவில்லை என்றாலும் நிம்மதி என்பது கேள்விக்குறியே!
ஓர் இறைநம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் இம்மூன்றுமே கிடைக்கப் பெறுவது என்பது இறைவன் வழங்கும் இனிய அருட்கொடைகள் ஆகும்.
ஆகவே தான், பராஅத் இரவு அன்று இம்மூன்று அம்சங்களையும் முன்வைத்து, மூன்று யாசீன் ஓதி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் முறையிடும் அழகிய வழிமுறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இது கட்டாயமாக்கப்பட்டதல்ல. விரும்பியவர்கள் ஓதலாம். மூன்று யாசீன் ஓத முடியாதவர்கள் ஒரு யாசீன்கூட ஓதலாம். மக்ரிப் தொழுகைக்குப்பின் பஜ்ர் நேரம் வரும்வரை எப்போதுவேண்டுமானாலும் ஓதலாம். ஓதத் தெரியாதவர்கள் பிரார்த்தனையில் மட்டுமாவது ஈடுபடலாம். எதுவும் கட்டாயமல்ல.
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
நிச்சயமாக இதனை அருள்வளம் மிகுந்த ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன. திருக்குர்ஆன்:- 44:3,4
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَنْ قَرَأَ يس حِينَ يُصْبِحُ، أُعْطِيَ يُسْرَ يَوْمِهِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهَا فِي صَدْرِ لَيْلِهِ، أُعْطِيَ يُسْرَ لَيْلَتِهِ حَتَّى يُصْبِحَ )
யார் காலை நேரத்தில் யாசீனை ஓதுவாரோ அவரின் அன்றைய தினத்தின் காரியங்கள் (அனைத்தும்) மாலை வரை இலேசாக்கித் தரப்படும். யார் யாசீனை இரவின் ஆரம்பத்தில் ஓதுவாரோ அவரின் அன்றைய இரவின் காரியங்கள் (அனைத்தும் மறுநாள்) காலை வரை இலேசாக்கித் தரப்படும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- தாரிமீ
திருக்குர்ஆனின் விரிவுரையாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புனிதமிகு) ஷஅபான் பதினைந்தாம் நாள் இரவுக்கு நான்கு (சிறப்புப்) பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
1. ( لَيْلَةَ اَلرَّحْمَةِ ) அல்லாஹ்வின் பிரத்யேக ரஹ்மத் இறங்குவதால் "ரஹ்மத்தான இரவு" எனப்படுகிறது.
2. ( لَيْلَةَ اَلْمُبارَكَةَ ) (பரக்கத் எனும்) அருள்வளம் பொழியும் இரவு என்பதால் "முபாரக்கான இரவு" எனப்படுகிறது.
3. ( لَيْلَةَ اَلصَّكِّ ) விதி நிர்ணையிக்கப்படும் இரவு என்பதால் "சீட்டு வழங்கப்படும் இரவு" எனப்படுகிறது.
4. ( لَيْلَةَ اَلْبَراءَةِ ) இந்த இரவில் அதிகமான நரகவாசிகளுக்கு விடுதலையளிக்கப்படுவதால் "பராஅத் இரவு" எனப்படுகிறது. நூல்:- தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் ரூஹூல் மஆனி
அன்றைய இரவில்...
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا يَوْمَهَا. فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلاَ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلاَ مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلاَ مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلاَ كَذَا أَلاَ كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ )
ஷஅபான் பதினைந்தாம் நாள் இரவு வந்தால், அதன் இரவில் நின்று தொழுங்கள். அதன் பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவ்விரவில் சூரியன் மறைந்ததும் முதல் வானத்திற்கு இறங்குகிறான். "என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர் இல்லையா? அவருக்கு நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன். வாழ்வாதாரத்தைத் தேடுபவர் இல்லையா? அவருக்கு நான் வாழ்வாதாரம் வழங்குகிறேன். சோதனைக்குள்ளானவர் இல்லையா? அவருக்கு நிவாரணத்தை வழங்குகிறேன். இதைக் கேட்பவர் இல்லையா? இதைக் கேட்பவர் இல்லையா? என்று அதிகாலை தோன்றும் வரை கேட்டுக் கொண்டே இருக்கிறான்." அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1378, ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3542, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹூல் மஆனி
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( خَمْسُ لَيَالٍ لَا يُرَدُّ فِيهِنَّ الدُّعَاءُ: لَيْلَةُ الْجُمُعَةِ، وَأَوَّلُ لَيْلَةٍ مِنْ رَجَبَ، وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، وَلَيْلَةُ الْعِيدِ، وَلَيْلَةُ النَّحْرِ )
ஐந்து இரவுகளில் பிரார்த்திக்கும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. 1. ஜும்ஆ நாளின் இரவு. 2. ரஜப் மாத ஆரம்ப இரவு. 3. ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவு. 4. (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவு. 5. (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவு. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ, தாரீக் திமிஷ்க் இப்னு அசாகிர், முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 4/317
இதைப்போன்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
( إنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِي خَمْسِ لَيَالٍ فِي لَيْلَةِ الْجُمُعَةِ، وَلَيْلَةِ الْأَضْحَى، وَلَيْلَةِ الْفِطْرِ، وَأَوَّلِ لَيْلَةٍ مِنْ رَجَبٍ، وَلَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ ) .
1.ஜும்ஆ நாளின் இரவில், 2. (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவில், 3. (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவில், 4. ரஜப் மாத ஆரம்ப இரவில், 5. ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவில் ஆகிய ஐந்து நேரங்களில் கேட்கப்படும் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படும். நூல்:- அல்உம்மு-1/264
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவு தொழுதார்கள். அப்போது நீண்ட நேரம் (நெற்றியை தரையில் வைத்த நிலையில்) சிரவணக்கத்தில் (சுஜூதில்) இருந்தார்கள். அப்போது நான் நபியவர்கள் மரணித்து விட்டார்களோ என்று நினைத்து அவர்களின் காலின் பெருவிரலை அசைத்துப் பார்த்தேன். அது அசைந்தது. அப்போதுதான் நான் மகிழ்ச்சிடைந்தேன். பிறகு நபியவர்கள் சஜ்தாவில் (பின்வருமாறு) ஓதியதை கவனித்துக் கேட்டேன்.
( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ )
"அல்லாஹும்ம இன்னீ அஊது பிரிளாக்க மின் சகத்திக்க வமுஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க வஅஊது பிக்க மின்க்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக்க லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக்க"
பொருள்: இறைவா! உனது திருப்பொருத்தத்தைக்கொண்டு உனது கோபத்தை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உனது மன்னிப்பைக்கொண்டு உனது தண்டனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உன் (கண்டிப்பி)னை விட்டும் உன் (கருணையி)னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். உனது புகழ் கீர்த்தி மிக்கது. நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்.
நான் இரவில் செவியுற்றதை காலையில் நபியவர்களிடம் கூறினேன். நபியவர்கள், ( يَا عَائِشَةُ تَعَلَّمْتِهُنَّ ؟ "، فَقُلْتُ: نَعَمْ ) "ஆயிஷா! இந்த பிரார்த்தனையைக் கற்றுக் கொண்டாயா? என்று கேட்டபோது, நான் 'ஆம்' என்றேன். நபியவர்கள், ( تَعَلَّمِيهِنَّ وَعَلِّمِيهِنَّ، فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ عَلَّمَنِيهِنَّ وَأَمَرَنِي أَنْ أُرَدِّدَهُنَّ فِي السُّجُودِ ) "இந்த பிரார்த்தனையை தானும் கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுக் கொடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதைக் கற்றுக் கொடுத்து, (சஜ்தா எனும்) சிரவணக்கத்தில் இதைத் திரும்பத் திரும்ப ஓதுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள். நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3556
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( يَفْتَحُ اللَّهُ الخَيْرَ في أرْبَعِ لَيالٍ؛ لَيْلَةِ الأضْحى والفِطَرِ ولَيْلَةِ النِّصْفِ مِن شَعْبانَ وفي لَيْلَةِ عَرَفَةَ إلى الأذانِ )
அல்லாஹ் நான்கு இரவுகளில் நன்மையின் வாசலை (ஃபஜ்ரின்) பாங்கு வரை திறந்து வைத்திருக்கிறான். 1. (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவு. 2. (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவு. 3. ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவு. 4. அரஃபா நாளின் இரவு. அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
மண்ணறைவாசிகளைச் சந்தித்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் இரவு அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் நான் தேடினேன். அவர்களைத் தேடிக்கொண்டு வந்தபோது அவர்கள் 'அல்பகீஉ' எனும் பொது மையவாடியில் விண்ணை நோக்கி தலையை உயர்த்தியவாறு இருந்தார்கள்.
(என்னைக் கண்டதும்) அவர்கள், ( يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ) "ஆயிஷா! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உனக்கு அநீதி இழைத்துவிடுவார்கள் என நீ அஞ்சிக் கொண்டிருந்தாயா?" என்று கேட்டார்கள். நான், "இதுவெல்லாம் எனக்கில்லை. எனினும் தங்கள் மனைவியருள் ஒருரிடம் தாங்கள் சென்று விட்டீர்களோ என நான் எண்ணினேன்" என்று கூறினேன்.
அப்போது அண்ணலார், ( إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ ) “உயர்ந்தோன் அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் முதல் வானத்திற்கு இறங்கி, 'கல்பு' குலத்தாரின் ஆடுகளின் ரோமங்களை விட அதிகமான (மக்களுக்குப்) பாவமன்னிப்பு வழங்குகிறான்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-670, இப்னுமாஜா-1379, முஸ்னது அஹ்மத்-24825, முஸன்னப் இப்னு அபீஷைபா, அல்பஸ்ஸார், பைஹகீ-3545, முஸ்னது அப்து பின் ஹுமைத்-1509
பராஅத் இரவைப்போன்று இறைவனின் விஷேச கருணை இறங்கும் இரவுகளில் (கப்ரு ஸியாரத் எனும்) மண்ணறைவாசிகளைச் சந்தித்து அவர்களுக்காகப் பிரார்த்திப்பது விரும்பத்தக்க செயல் எனத் தெளிவாகிறது.
நோன்பில் கவனம்
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் ( يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ ) "நாயகமே! தாங்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்கும் அளவு வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே” என்று வினவினேன். அண்ணலார், ( ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ) "ரஜப் மாதத்திற்கும், ரமளான் மாதத்திற்கும் மத்தியில் உள்ள இந்த மாதத்தில் மக்கள் (நற்காரியங்கள் செய்யாமல்) பொடுபோக்காக இருக்கிறார்கள். இந்த மாதத்தில்தான் அகிலங்களின் அதிபதியிடம் (அல்லாஹ்விடம்) நல்லறங்கள் (அனைத்தும்) எடுத்துக்காட்டப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்ற நிலையில் என் நல்லறங்கள் எடுத்துக்காட்டப்படுவதை நான் விரும்புகிறேன்" என்றார்கள். நூல்:- நசாயீ-2317, முஸ்னது அஹ்மத்-20758, பைஹகீ-3540
அதாவு பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ وَذَلِكَ أَنَّهُ تُنْسَخُ فِيهِ آجَالُ مَنْ يَمُوتُ فِي السَّنَةِ ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போல் வேறு எந்த மாதத்திலும் நோற்பவர்களாக இருக்கவில்லை. அந்த ஆண்டு மரணிக்க உள்ளவர்களின் தவணை அம்மாதத்தில் மாற்றப்படுகிறது என்பதே இதற்குக் காரணம். நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா-9764, ஃபளாயிலுர் ரமளான்- இப்னு அபீதுன்யா, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி அவர்கள் (ஒருமுறை) ஷஅபான் முழுவதும் நோன்பு நோற்றார்கள். நபியவர்களிடம் இதைப்பற்றி வினவினேன். நபியவர்கள், ( إنَّ اللَّهَ يَكْتُبُ فِيهِ كُلَّ نَفْسٍ مَيِّتَةٍ تِلْكَ السَّنَةَ، فَأُحِبُّ أنْ يَأْتِيَنِي أجَلِي وأنا صائِمٌ ) "நிச்சயமாக அல்லாஹ் இந்த வருடத்தில் இறப்பவர்களைப் பற்றி இந்த மாதத்தில் தான் எழுதுகிறான். எனவே, எனது முடிவு (மரணம்) வரும் போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அபீயஅலா- 8/311, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( هَل تدرين مَا هَذِه اللَّيْل؟ يَعْنِي لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ ) (ஒருமுறை என்னிடம்) ஷஅபான் பதினைந்தாம் நாள் (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று அறிவாயா? என்று வினவினார்கள். நான், “அவ்விரவில் என்ன சிறப்பு இருக்கிறது?” கேட்டேன். அண்ணலார், ( فِيهَا أَنْ يُكْتَبَ كلُّ مَوْلُودٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا أَنْ يُكْتَبَ كُلُّ هَالِكٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا تُرْفَعُ أَعْمَالُهُمْ وَفِيهَا تَنْزِلُ أَرْزَاقُهُمْ ) “இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும், இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் நற்செயல்கள் உயர்த்தப்படும். இதில் தான் அவர்களின் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரங்கள் இறங்கும்” என்றார்கள். நூல்:- மிஷ்காத்-பக்கம்-115, பாபு கியாமு ஷஹ்ரு ரமளான்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( تُقْطَعُ اَلْآجالُ مِن شَعْبانَ إلى شَعْبانَ حَتّى أنَّ اَلرَّجُلَ لَيَنْكِحُ ويُولَدُ لَهُ وقَدْ خَرَجَ اِسْمُهُ في اَلْمَوْتى )
ஒரு ஷஅபான் மாதத்திலிருந்து மற்றொரு ஷஅபான் மாதம் வரை மனிதர்களின் வாழ்நாள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மனிதன் திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுக்க இருப்பான். அவன் பெயர் மரணிப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் தபரீ, பைஹகீ-3558, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹூல் மஆனி, இப்னு ஸன்ஜவீஹ், தைலமீ, ஃபத்ஹுல் கதீர் ஷவ்கானீ-4/801,
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( فِي لَيْلَةِ اَلنِّصْفِ مِن شَعْبانَ يُوحِي اَللَّهُ تَعالى إلى مَلَكِ اَلْمَوْتِ بِقَبْضِ كُلِّ نَفْسٍ يُرِيدُ قَبْضَها في تِلْكَ اَلسَّنَةِ )
ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் உயிர்களைக் கைப்பற்றும் (மலக்குல் மவ்த் எனும்) வானவருக்கு, “வரும் ஆண்டில் யார் யாருடைய உயிர்களை கைப்பற்ற வேண்டும்” என்பதைப்பற்றிய இறைச்செய்தியை அல்லாஹ் அறிவிப்பான். அறிவிப்பாளர்:- ராஷித் பின் சஅத் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹூல் மஆனி
மன்னிக்கப்படாதவர்கள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ )
அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் தனது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். (தனக்கு) இணை கற்பிப்பவனையும் (பிற முஸ்லிமிடம்) பகைமைக்கொண்டிருப்பவனையும் தவிர, தன் படைப்புகளில் (தன் அடியார்களில்) மற்ற அனைவரையும் மன்னிக்கிறான். அறிவிப்பாளர்:- அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1380, பைஹகீ-3552, இப்னு ஹிப்பான், தப்ரானீ
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( يَطَّلِعُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا لِاثْنَيْنِ مُشَاحِنٍ وَقَاتِلِ نَفْسٍ )
வல்லமையும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் தனது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். தனது அடியார்களில் இருவரைத் தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1. (பிற முஸ்லிமிடம்) பகைமைக்கொண்டிருப்பவன். 2. தற்கொலை செய்துகொண்டவன். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்-6353, மிஷ்காத் பக்கம்-115 பாபு கியாமு ஷஹ்ரு ரமளான், தஃப்சீர் ரூஹூல் மஆனி
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ اطَّلَعَ اللَّـهُ رَبُّ الْعَالَمِينَ إِلَى خَلْقِهِ، فَيَغْفِرُ لِلْمُؤْمِنِينَ، وَيُمْلِي لِلْكَافِرِينَ، وَيَدَعُ أَهْلَ الْحِقْدِ بِحِقْدِهِمْ حَتَّى يَدَعُوهُ )
ஷஅபான் மாதம் பதினைந்தாவது இரவு வந்து விட்டால் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். (அவ்விரவில்) இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை மன்னிக்கிறான். இறைமறுப்பாளர்களுக்கு (திருந்த) அவகாசமளிக்கிறான். குரோதக்காரர்கள் அச்செயலைவிட்டும் தவிர்ந்துக்கொள்ளும்வரை (அவர்களின் பாவங்களை மன்னிக்காமல்) விட்டு விடுகிறான். அறிவிப்பாளர்:- அபீ ஸஅலபா அல்ஹுஷனீ (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3551, தப்ரானீ, கன்ஸுல் உம்மால், சஹீஹுல் ஜாமிஉ இமாம் அல்பானீ-1898
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَطْلُعُ عَلَى عِبَادِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِلْمُسْتَغْفِرِينَ، وَيَرْحَمُ الْمُسْتَرْحِمِينَ، وَيُؤَخِّرُ أَهْلَ الْحِقْدِ كَمَا هُمْ )
நிச்சயமாக வல்லமையும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் தமது அடியார்கள்மீது தனது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். எனவே, (அவ்விரவில்) பாவமன்னிப்புக் கோருபவர்களை மன்னிக்கிறான். அருள்வளம் தேடுவோருக்கு அருள்புரிகிறான். குரோதக்காரர்கள் மற்றும் அவர்களைப் போன்றோருக்கு (திருந்துவதற்கு) அவகாசமளிக்கிறான். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3554
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( أَتَانِي جِبرِيلُ عليه السلامُ فقال : هٰذِهِ لَيلةُ النِّصفِ مِن شَعبَانَ ، وَللهِ فِيهَا عُتقاءُ من النارِ بِعدَدِ شُعُورِ غَنَمِ كَلْبٍ ، لا يَنظرُ اللهُ فيها إلى مُشرِكٍ ، ولا إِلَى مُشَاحِنٍ ، وَلَا إِلَى قاطِعِ رَحِمٍ ، وَلَا إِلَى مُسْبِلِ ، وَلَا إِلَى عَاقٍّ لِوالِدَيْهِ ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ )
(ஒருநாள்) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, “(நாயகமே!) இன்றிரவு “ஷஅபான்” மாதம் பதினைந்தாம் நாள் இரவாகும். அல்லாஹ் மீதாணையாக! இந்த இரவில் “பனூகல்ப்” கூட்டத்தார்களின் ஆடுகளில் உள்ள ரோமங்களின் எண்ணிக்கையளவு நரகத்தில் உள்ளவர்களுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. (இந்தளவுக்கு கருணை உள்ளம் கொண்ட) அல்லாஹ் (தனக்கு) இணை கற்பிப்பவன், (பிற முஸ்லிமிடம்) பகைமைக்கொண்டிருப்பவன், உறவைத் துண்டித்து வாழ்பவன், (பெருமைகொண்டு) ஆடைகளை கரண்டைக்காலுக்கு கீழ் உடுத்துபவன், பெற்றோரைத் துன்புறுத்துபவன், தொடர்ந்து மது குடிப்பவன் ஆகியோரை (கருணைப் பார்வை) பார்க்கவே மாட்டான். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3556
வீண் வாதமே!
இமாம் இப்னு ரஜப் அல்ஹம்பலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
( وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ كَانَ التَّابِعُونَ مِنْ أَهْلِ الشَّامِ؛ كَخَالِدِ بْنِ مَعْدَانَ، وَمَكْحُولٍ، وَلُقْمَانَ بْنِ عَامِرٍ، وَغَيْرِهِمْ يُعَظِّمُونَهَا، وَيَجْتَهِدُونَ فِيهَا فِي الْعِبَادَةِ، وَعَنْهُمْ أَخَذَ النَّاسُ فَضْلَهَا وَتَعْظِيمَهَا )
ஷாம் தேசத்தைச் சேர்ந்த இமாம் காலித் பின் மஅதான் (ரஹ்), இமாம் மக்ஹூல் (ரஹ்), இமாம் லுக்மான் பின் ஆமிர் (ரஹ்) போன்ற மிகப்பெரும் தாபியீன்கள் ஷஃபான் மாத நடுப்பகுதி இரவின்போது பெரும் முயற்சி எடுத்து வணக்க வழிபாடுகள் புரிந்து அதை கண்ணியப்படுத்துவார்கள். மக்களும் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்தே அந்நாளின் சிறப்பையும், கண்ணியத்தையும் தெரிந்து கொண்டனர். நூல்:- லதாயிஃபுல் மஆரிப் பக்கம்-161
(பராஅத் இரவு எனும்) ஷஅபான் மாத பதினைந்தாம் இரவில் விழித்திருந்து வணங்குவதை நன்மையைக்குரிய செயலாக கருதுவது (பித்அத் எனும்) அடிப்படையற்றவை என்று சிலர் வாதிடுகின்றனர்.
எந்த விஷயத்தைப் பற்றி ஆதாரம் குர்ஆனிலோ நபிமொழியிலோ, நபித்தோழர்களின் நடைமுறையிலோ, தாபியீன்களுடைய செயல்பாட்டிலோ இல்லாவிட்டால் மட்டுமே, அந்த விஷயத்தை மார்க்கத்தின் (தீனின்) பகுதியாக கருதுவது (பித்அத் எனும்) அடிப்படையற்றவை ஆகும்.
முஸ்லிம் சமுதாயத்தில் நபித்தோழர்களின் காலம், தாபியீன்கள் காலம், தபஅ தாபியீன்கள் காலம் ஆகிய காலத்தை "சிறந்த காலம்" என்று நபிமொழியில் வர்ணிக்கப்பட்டுள்ள இந்த காலத்தவர்கள் ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமானது. எனவே, இதை (பித்அத் எனும்) அடிப்படையற்றவை என்று கூறுவது எந்த வகையிலும் சரியல்ல.
பராஅத் இரவை குறித்து வரும் நபிமொழிகள் (ளயீஃப்) பலகீனமானது, (முர்ஸல்) அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழர் பெயர் விடுபட்டுள்ளது எனக்கூறி முற்றிலுமாக இந்த இரவின் சிறப்புகளை மறுப்பது சரியல்ல.
நபிமொழிதுறை வல்லுநர்கள், மார்க்கச் சட்ட நிபுணர்கள் ஆகியோரின் தீர்ப்பு என்னவென்றால், ஒரு நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரை கவனித்து பலகீனமானதாக இருக்கிறது. ஆனால், அதை உறுதிப்படுத்தும் வகையில் அதே கருத்தில் வேறு பல நபிமொழிகள் வந்தால் அந்த நபிமொழியின் பலகீனம் நீங்கி விடுகிறது.
இது சம்பந்தமாக கிட்டதட்ட இருபதிற்கும் மேற்பட்ட நபிமொழிகளும், பத்து நபித்தோழர்களின் அறிவிப்புகளும் வந்துள்ளன. 1.அபூபக்ர் (ரலி) 2.அலீ (ரலி) 3.ஆயிஷா (ரலி) 4.அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) 5.முஆத் பின் ஜபல் (ரலி) 6.அபூஹுரைரா (ரலி) 7. அபூ ஸஅலபா (ரலி) 8.அவ்ஃப் பின் மாலிக் (ரலி) 9.அபூ மூஸா அஷ்அரீ (ரலி) 10.உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள், மற்றும் (தாபிஈன்கள் எனும்) இரண்டாம் தலைமுறையினர், (தபவுத்தாபிஈன்கள் எனும்) மூன்றாம் தலைமுறையினர், இமாம்கள் நல்லோர்கள் இந்த இரவின் சிறப்புகளையும் அதில் வணக்க வழிபாடு செய்வதையும் சிறப்பித்து கூறியிருப்பதாலும் இஸ்லாமியர்கள் இந்த இரவை சிறப்பாகக் கருதி வணக்க வழிபாடு செய்கிறார்கள்.
பலவீனமான நபிமொழிகளைக் கொண்டு சட்டம் இயற்ற முடியாதே தவிர, வணக்க வழிபாடு செய்வது கூடும் என்பது நபிமொழித்துறை அறிஞர்களின் கருத்து.
எனவே, நடுநிலை சிந்தனைக்குரிய மார்க்க அறிஞர்கள் “இந்த இரவில் விழித்திருந்து வணக்கம் புரிவது நன்மைக்குரிய செயலாகும்” என்கிறார்கள்.
எனவே, நாம் இதுபோன்ற புனிதமிகு இரவுகளில் மனத்தூய்மையுடன் வணக்க வழிபாடுகள் புரிந்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!