நரக விடுதலையைக் கேட்போம்! நரக விடுதலைக்காக செயலாற்றுவோம்!!
THURSDAY, 13 APRIL 2023
நரக விடுதலையைக் கேட்போம்!
நரக விடுதலைக்காக செயலாற்றுவோம்!!
நரக விடுதலை வேண்டும்
அல்லாஹ்வின் அளவிலா கருணையினால் ரமலான் மாதத்தின் பிந்திய பகுதியை அடைந்திருக்கிறோம்.அல்ஹம்து லில்லாஹ்!இனி எஞ்சியுள்ள நாட்களையும் பூரண உடல் சுகத்துடனும்,நிறைவான அமலுடனும் கழிக்க அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் தவ்பீக் செய்வானாக!ஆமீன்.
ரமலானின் பிந்திய நாட்கள் நரக விடுதலையின் நாட்களாகும்.
நரகம்
திருக்குர்ஆனில் நரகம் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்ட அளவிற்கு வேறு எது குறித்தும் எச்சரிக்கைப்படவில்லை.
நரகத்தின் அத்துனை நிலைகளையும்,தன்மைக
ளையும் கண்ணுக்கு முன் கொண்டுவரும் காட்சிகள் திருக்குர்ஆனில் ஏராளமாக உள்ளன.
திருக்குர்ஆனில் نار என்ற வார்த்தை 121 வசனங்களில் இடம் பெறுகிறது.
جهنم என்ற வார்த்தை 77 வசனங்களில் இடம்பெறுகிறது.அதை போல سعير வார்த்தை 26 வசனங்களில் இடம்பெறுகிறது.
இவ்வாறு நரகம் குறித்த வார்த்தைகள் அதிகமாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதின் மூலம் அதன் ஆபத்துக்களை உணர்ந்து கொள்ள முடியும்.
பாவத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்ட கண்மணி முஹம்மது ஸல் அவர்கள் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடாத நாட்கள் இல்லை.அப்படியானால் நம் போன்றவர்களின் நிலை குறித்து என்ன சொல்வது?
நரகம் அச்சத்தின் மொத்த உருவம்.மரணத்தையே மரணமாக்கிவிடும். பார்ப்பவர்களின் பார்வைகளையும் இதயங்களையும் குழை நடுங்கச்செய்து விடும்.
அல்லாஹ்வின் கோபத்தின் மொத்த காட்சிகள்.நெருப்பே நெருப்பிலிருந்து பாதுகாப்பு தேடும் விந்தை!
ஒவ்வொரு மனிதனுக்கும் சுவர்க்கம் மற்றும் நரகத்தின் முன் காட்சிகள் (டிரைலர்) மரணத்திலும் மண்ணரையிலும் காட்டப்படும்.
நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு சுவனத்தில் நுழையும் அந்த நாள் உண்மையில் வெற்றிக்குறிய நாளாகும் என்று திருக்குர்ஆன் புகழ்ந்து கூறுகிறது.
பொதுவாக நரகம் குறித்து எச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு முஃமினுக்கு ஷைத்தான் ஒரு வித மோசடியான நம்பிக்கையை தருவான்.அது என்னவென்றால் என்றாவது ஒரு நாள் சுவனம் சென்று விடலாம் தானே!
ஆம்! முஃமினான யாவரும் இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோம்.ஆனால் நரகத்தின் குறைந்த பட்ச நாள் என்பது ஒரு ஹுக்ப்.حقب
ஒரு حقب என்பது நாற்பது ஆண்டுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அப்படியானால் நரகத்தில் கால்வைத்துவிட்ட ஒருவர் அதிலிருந்து வெளியேர குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகள் ஆகும்.(அந்த கொடிய நரகை விட்டும் அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.)
لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியி
ருக்கும் நிலையில்
இதனால் தான் ஸஹாபாக்களும் ஸாலிஹீன்களும் நரகத்தை நினைக்கும் போதெல்லாம் அழுது கண்ணீர் வடிப்பார்கள்.
நல்லவர்களும் பயந்தார்கள்
ومر الحسن البصري رحمه الله بشاب وهو مستغرق في ضحكه جالس مع قوم، فقال له الحسن: "يا فتى هل مررت بالصراط؟ قال: لا، قال: فهل تدري إلى الجنة تصير أم إلى النار؟ قال: فما هذا الضحك؟ فلم ير الشاب ضحكًا مرة أخرى
ஹழ்ரத் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் சிரித்துக்கொண்டிருந்த ஒரு வாலிபரை கடந்து சென்றபோது அந்த வாலிபரை நோக்கி, இளைஞனே! ஸிராத் பாலத்தை நீ கடந்து விட்டாயா?என்று கேட்டார்.
அதற்கு அந்த வாலிபர்- இல்லை என்று பதில் கூறினார்.
நீ சுவனம் செல்வாயா?நரகம் செல்வாயா?என்பதை நீ அறிந்துவிட்டாயா? என்று மீண்டும் ஹஸன் ரஹ் அவர்கள் கேட்க, அவ்வாலிபர் இல்லை என கூறினார்.
அப்படியானால் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது?என்று கண்டித்தார்கள்.
وكان ميسرة يقول إذا أوى إلى فراشه: "ليت أمي لم تلدني، فقالت له أمه حين سمعته مرة من المرات: يا ميسرة! إن الله قد أحسن إليك، هداك إلى الإسلام؟ قال: أجل. ولكن الله تعالى بيَّن الله لنا أنا واردون على النار، ولم يبين لنا أنا صادرون منها"
மைஸரா ரலி அவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும்போது என் தாய் என்னை பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாமே!என்று கூறினார்களாம்.
இதை பலதடவை கேட்ட அவர்களின் தாய் ஒரு தடவை,மகனே!இப்போது என்ன கெட்டுவிட்டது? அல்லாஹ் உனக்கு அழகான வாழ்வை தந்திருக்கிறான்.இஸ்லாத்தை தந்திருக்கிறான் என்று கூறியபோது,ஹழ்ரத் மைஸரா ரலி அவர்கள் தாயே!உண்மைதான்.ஆனால் அல்லாஹ் நரகத்தை கடந்து தான் சுவனம் செல்ல வேண்டும் கூறுகிறானே.அதை நினைத்தால் எனக்கு பயமாக உள்ளது என்று கூறினார்கள்
وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்
وقال معاذ بن جبل:" إن المؤمن لا يسكن روعه حتى يترك جسر جهنم وراءه
நரகத்தின் பாலத்தை கடக்கும் வரை ஒரு முஃமினின் பயம் நீங்காது என்று ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
وتفقد أحوال رعيته يوماً فمر بعجوز، فقالت:" يا هذا ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله خيراً، قال: ولمَ؟ فقالت: والله ما نالني من عطائه منذ تولى أمر المسلمين، قال عمر: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟ فقالت: سبحان الله! والله ما ظننت أن أحداً يلي على الناس ولا يدري ما بين مشرقها ومغربها، فبكى عمر وقال: واعمراه! كل أحد أفقه منك يا عمر حتى العجائز؟ ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر فإني أرحمه من النار، فقالت: لا تستهزئ بنا يرحمك الله، فقال: لست بهزاء، فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً، فبينما هو كذلك إذ أقبل علي وعبد الله بن مسعود، فقالا: سلام عليك يا أمير المؤمنين! فقالت العجوز: واسوأتاه! شتمت أمير المؤمنين في وجهه، فقال لها عمر: ما عليكِ يرحمك الله، ثم طلب رقعة من جلد، وكتب فيها: بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى به عمر من فلانة ظلامتها منذ ولي إلى يوم كذا وكذا بخمسة وعشرين ديناراً؛ فما تدعي عند وقوفه في الحشر بين يدي الله، فـعمر منه بريء، شهد على ذلك علي وابن مسعود"[سمط النجوم العوالي (3/68)]
ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் தன் ஆட்சியின் நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.அப்போது வயதான மூதாட்
டியிடம் உமர் ஆட்சி எப்படி இருக்கிறது?என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் அவருக்கு கைரான கூலி வழங்காமல் இருப்பானாக!என்றார்கள்.
அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்?என வினவினார்கள்.அவர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி.
உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?என்று ஜனாதிபதி கேட்டபோது,
அப்பெண்,சுப்ஹானல்லாஹ்!மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா.என்று கேட்டபோது உமர் ரலி அழுதுவிட்டு, உமரே!உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உண்டு என்றார்கள்.
பெண்ணே!உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்றுகிறேன்.என்றார்கள். அதைக்கேட்ட அப்பெண்,என்னை கேலி செய்யாதீர் என்றாள்.அதற்கு உமர் ரலி, இல்லை, நான் கேலி செய்யவில்லை,உண்மையை தான் பேசுகிறேன் என்றபோது -ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக பெற்றுக்கொண்டார்கள்.
அப்போது எதார்த்தமாக அப்பக்கம் வந்த அலி ரலி,மற்றும் இப்னு மஸூத் ரலி ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே!அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்.
அதை செவியுற்ற அந்த மூதாட்டி,இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களையா திட்டிவிட்டேன்.என்று பயந்து நடுங்கினாள்.
உடனே ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.அதில் எழுதப்பட்ட விஷயம்-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல் இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 15 தீனார் பெற்றுக்கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி, அலி ரலி மற்றும் இப்னு மஸ்வூத் ரலி ஆகிய இருவரையும் சாட்சியாக்கினார்கள்.
روى الإمام أحمد أن رَسُول اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ : " مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكاً قَطُّ ؟ قَالَ : مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ
மிஃராஜில் நபி ஸல் அவர்கள் கண்ட காட்சிகளில் ஒன்று:மீகாயீல் சிரிப்பதில்லை.அதைப்பற்றி நபி ஸல் அவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்களி டம் கேட்டபோது,நரகம் படைக்கப்பட்டதிலிருந்து மீகாயீல் சிரிக்கவே இல்லை என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள்.
ومن حديث أبي بكر بن عياش قال [ صليت خلف فضيل بن عياض صلاة المغرب وإلى جانبي علي ابنه فقرأ الفضيل ألهاكم التكاثر فلما بلغ لترون الجحيم [ التكاثر الذي 6 ] سقط علي مغشيا عليه وبقي الفضيل لا يقدر يجاوز الآية ثم صلى بنا صلاة خائف قال ثم رابطت عليا فلما أفاق إلا في نصف الليل ]
அபூபக்கர் இப்னு இயாஷ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் ஒருநாள் புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களுக்கு பின்னே மஃரிப் தொழுகையை தொழுது கொண்டிருந்தேன்.அப்போது என் பக்கத்தில் அவர்களின் மகனார் அலி ரஹ் அவர்கள் நின்றார்கள்.
புழைல் ரஹ் அவர்கள் சூரா தகாஸுர் ஆரம்பித்து ஓதினார்கள்.அதில் لترون الجحيم நிச்சயமாக நீங்கள் நரகத்தை காண்பீர் என்ற வசனத்தை ஓதியதும் அவர்களின் மகன் அலி அவர்கள் மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்கள்.
இமாம் அவர்களோ அல்லாஹ்வின் அச்சத்தால் அந்த ஆயத்தை கடக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு அந்த தொழுகையை முடித்தார்கள்.
மயக்கமுற்ற அவர்களின் மகனார் நடு இரவில் தான் மயக்கம் தெளிந்தார்.
فقال: زدنا يا كعب،
قال: قلت: «يا أمير المؤمنين، لو فتح من جهنم قدر منخر ثور بالمشرق ورجل بالمغرب لغلى دماغه حتى يسيل من حرها» فأطرق عمر مليا ثم أفاق فقال: زدنا يا كعب، قال: قلت: " يا أمير المؤمنين، إن جهنم لتزفر يوم القيامة زفرة ما يبقى ملك مقرب، ولا نبي مرسل إلا خر جاثيا على ركبتيه، حتى أن إبراهيم عليه السلام خليله ليخر جاثيا ويقول: نفسي نفسي، لا أسألك اليوم إلا نفسي " قال: فأطرق عمر مليا،
حلية الأولياء (5/368) ، الزهد والرقائق (1/75)
ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கஃப் ரலி அவர்களிடம் உபதேசம் செய்யச்சொன் னார்கள்.அப்போது கஃப் ரலி செய்த உபதேசம் இது:
கிழக்கு திசையில் இருக்கும் நரகம் இலேசாக திறக்கப்பட்டால் அதன் உஷ்னத்தால் மேற்கில் இருக்கும் மனிதனின் மூலை உருகிவிடும் என்றார்கள்
இன்னும் சொல்லுங்கள் என்று உமர் ரலி அவர்கள் கூறியபோது-
நரகம் நாளை மறுமையில் இலேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது, இறைவனுக்கு நெருக்கமான மலக்கும்,ரஸூல் மார்களும் மண்டியிட்டு உட்கார்ந்து விடுவார்கள்.அல்லாஹ்விடம் இந்த நரகத்தை விட்டும் தன்னை காப்பற்றச்சொல்லி வேண்டுவார்கள்.எந்தளவென்றால் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் கூட தனக்காக வேண்டுவார்கள்.என்று கஃப் ரலி அவர்கள் கூறியபோது உமர் ரலி தன் தலையை தொங்கவிட்டு நீண்டநேரம் இருந்தார்கள்.
அல்லாஹ்வுக்கு நெருக்கமான வானவர்களும்,நபிமார்களும்,ஸஹாபிகளும், ஸாலிஹீன்களும் இந்தளவிற்கு பயந்து நடுங்கினார்கள் என்றால் அப்படிப்பட்ட நரகத்தை பற்றி என்ன சொல்வது?
வாருங்கள் அதை சுற்றிப்பார்போம்....இல்லை...இல்லை...எட்டிப் பார்ப்போம். பரவசம் அடைவதற்கல்ல,பாதுகாப்பு தேடுவதற்கு.
நரகம் உருவான வரலாறு:
أُوقد على النار ألف سنة حتى احمرت، ثم أوقد عليها ألف سنة حتى ابيضت، ثم أوقد عليها ألف سنة حتى اسودت؛ فهي سوداء مظلمة
நரகம் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அப்போது அது சிகப்பு நிறத்தில் தோற்றம் தந்தது.
பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு தீ மூட்டப்பட்டது. அப்போது அது வெண்மை நிறத்தில் தோற்றம் தந்தது.
பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அது கடும் இருளான கருப்பு நிறத்தில் மாறிவிட்டது.
மூவாயிரம் ஆண்டுகள் தீ மூட்டப்பட்ட ஒரு நெருப்புக்குண்டத்தை பற்றி எப்படி வர்ணிக்க முடியும்?
அந்த நெருப்பும் உலக நெருப்பும்:
عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: «ناركم هذه التي يوقد ابن آدم جزء من سبعين جزءًا من حر جهنم،
ஆதம் அலை அவர்கள் பயன்படுத்திய நெருப்பு அதில் எழுபதில் ஒரு பகுதிதான்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
قال صلى الله عليه وسلم :" اشتكت النار على ربها, فقالت رب أكل بعضي بعضاً, فأذن لها بنفسين: نفس في الشتاء ونفس في الصيف, فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير
நெருப்பு அல்லாஹ்விடம் முறையிட்டது.ரப்பே!என்னில் சிலது சிலதை சாப்பிடுகிறது என்றபோது இரண்டு தடவை மூச்சு விட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி வழங்கினான்.குளிர் காலத்தில் ஒரு தடவையும் கோடைகாலத்தில் ஒரு தடவையும்.அதையே நீங்கள் கோடைகால கடும் வெப்பமாகவும் குளிர் கால கடும் குளிராகவும் உணர்கிறீர்கள் என்று ஸல் அவர்கள் கூறினார்கள்.
قال النبي صلى الله عليه وسلم : (( يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة ، فيُصبغُ في النار صبغة . ثم يقال : يا ابن آدم ! هل رأيت خيراً قط ؟ هل مرَّ بك نعيم قطُّ ؟ فيقول : لا والله يا رب
நாளை மறுமையில் உலகின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்தவனை கொண்டுவரப்பட்டு நரகில் ஒரு தடவை முக்கப்படும்.இப்போது சொல் உலகில் ஏதும் இன்பம் அனுபவித்தாயா?என்று கேட்கப்படும்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக!இல்லை என்பான்.
قَالَ صلى الله عليه وسلم : " يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا " [ رواه مسلم
நாளை மறுமையில் நரகம் எழுபதாயிரம் கடிவாளம் இடப்பட்டு,அதன் ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் பிடித்து இழுத்துக்கொண்டு வருவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நரகத்தின் ஆளம்:
رواه أبو هريرة رضي الله عنه قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم , إذ سمع وجبة (أي سقطة) فقال النبي صلى الله عليه وسلم :" تدرون ما هذا؟ قلنا: الله ورسوله أعلم. قال: هذا حجر رمي به في النار منذ سبعين خريفاً, فهو يهوى في النار إلى الآن" [مسلم]
நபி ஸல் அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்தபோது ஒரு கல் விழும் சப்தம் கேட்டோம்.அப்போது ஸல் அவர்கள் இது என்ன தெரிகிறதா?என கேட்டார்கள் நாங்களோ,அல்லாஹ்வும் அவனின் தூதரும் மிக அறிந்தவர்கள் என்றோம்.
அதற்கு நபி ஸல் அவர்கள் இது எழுபது ஆண்டிற்கு முன் நரகை நோக்கி வீசப்பட்ட கல்லாகும் இப்போது தான் அதை அடைந்திருக்கிறது என்றார்கள்.
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ
நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
நரகத்தின் வேதனைகள்:
பசி.தாகம்.பயம்.நெருக்கடி.உஷ்னம்.கடும் புகை போன்ற பல்வேறு தண்டனைக்கு உட்படுத்தப்படும்.
وروى ابن عباس موقوفًا: "إذا جاع أهل النار استغاثوا من الجوع، فأغيثوا بشجرة الزقوم فأكلوا منها ".
நரகவாசிகளுக்கு பசி வந்து கத்தும்போது அவர்களுக்கு கள்ளி மரம் உணவாக வழங்கப்படும்.
يقول الرسول صلى الله عليه وسلم عن الزقوم: «لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معايشهم؛ فكيف بمن تكون طعامه؟!».
ஒரு சொட்டு கள்ளிமரம் துன்யாவில் பட்டுவிட்டால் ஒட்டுமொத்த துன்யாவும் கெட்டுவிடும்.அதையே உணவாக சாபிட்டால் என்னாகும்?
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ ﴿٤٣﴾ طَعَامُ الْأَثِيمِ ﴿٤٤﴾ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿٤٥﴾ كَغَلْيِ الْحَمِيمِ
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). பாவிகளுக்குரிய உணவு. அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். வெந்நீர் கொதிப்பதைப் போல்.
مِّن وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّاءٍ صَدِيدٍ ﴿١٦﴾ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ
அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّـهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
ரமலானின் ஒவ்வொரு இரவுகளும் நரகிலிருந்து விடுதலை செய்யப்படும் இரவாகும்.
நபி ஸல் அவர்கள் ரமலான் காலத்தில் நான்கு விஷயங்கள் அதிகமாக செய்யச்சொன்னார்கள்
1.ஷஹாதத் கலிமா இஸ்திஃபார் 3.சுவனத்தை வேண்டுதல் 4.நரகை விட்டும் பாதுகாப்பு தேடல்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثًا قَالَتِ الْجَنَّةُ : اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ ، وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ مِنَ النَّارِ ثَلاَثاً قَالَتِ النَّارُ : اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ " [ رواه أحمد وابن ماجة بإسناد صحيح
யார் அல்லாஹ்விடம் மூன்று தடவை சுவனத்தை வேண்டுவாரோ, யா அல்லாஹ்! அவரை சுவனத்தில் நுழைத்துவிடு என்று சுவனம் அவருக்காக துஆச்செய்யும்.அவ்வாறு மூன்று தடவை யார் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுவாரோ யா அல்லாஹ் அவரை நரகை விட்டும் பாதுகாப்பாயாக என நரகம் அவருக்காக துஆச்செய்யும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நரகம் யாருக்காக?
அடிப்படையில் நரகம் என்பதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனை நிராகரிப்பவர்களுக்காகவே படைத்துள்ளான்.
وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَۚ
தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன்: 3: 131 )
ஷைத்தானுக்காகவும், ஷைத்தானைப் பின் பற்றுபவர்களுக்காகவும் நரகத்தைப் படைத்துள்ளான்.
لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِيْنَ
“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்) ( அல்குர்ஆன்: 38: 85 )
இப்போது அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை நோக்கி கூறுவதைக் கவனியுங்கள்!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். ( அல்குர்ஆன்: 3: 102 )
நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ
இறைநம்பிக்கை கொண்டவர்களே ஷைத்தானை நீங்கள் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் அல்லாஹ் தடுத்திருப்பதை செய்யுமாறும், அறுவெறுப்பான காரியங்களை செய்யுமாறும் தூண்டுவான். ( அல்குர்ஆன்: 24: 21 )
எனவே, நரகில் வீழ்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற இறைவனின் அறிவுரை:-
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
( அல்குர்ஆன்: 66: 6 )
அல்லாஹ்வை மறுப்பவர்களுக்காகவும், ஷைத்தானுக்காகவும், ஷைத்தானைப் பின் பற்றுவோருக்காகவும் படைக்கப்பட்டுள்ள நரகத்திற்கு துரதிஷ்டவசமாக அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் பல செய்த நல்லடியாரும் செல்வார் என நபி {ஸல்} அவர்கள் கூறுகின்ற செய்தியை நாம் மறந்து விடக் கூடாது.
وعن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: ((أتدرون ما المفلس؟)) قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع فقال: ((إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا، فيعطى هذا من حسناته وهذا من حسناته، فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه، ثم طرح في النار)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.
ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும்..
அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் )
عن أبي هريرة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم :تحاجت الجنة والنار فقالت النار : أوثرت بالمتكبرين والمتجبرين ، وقالت الجنة : فما لي لا يدخلني إلا ضعفاء الناس وسقطهم وغرتهم . قال الله تعالى للجنة : إنما أنت رحمتي أرحم بك من أشاء من عبادي ، وقال للنار : إنما أنت عذابي أعذب بك من أشاء من عبادي ولكل واحدة منكما ملؤها فأما النار فلا تمتلئ حتى يضع الله رجله .
تقول قط قط قط ، فهنالك تمتلئ ويزوى بعضها إلى بعض ، فلا يظلم الله من خلقه أحدا ، وأما الجنة فإن الله تعالى ينشئ لها خلقا " . متفق عليه .
சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது, நரகம் கூறியது, அடக்கி ஆழ்பவர்களும் பெருமையடித்தவர்களைக் கொண்டு நான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளேன். சுவர்க்கம் கூறியது, பலஹீனர்களும், மனிதர்களால் மதிக்கப்படாதவர்களும், இயலாவாளிகளுமே என்னிடம் நுழைவார்கள். அல்லாஹ் சுவர்க்கத்திற்கு கூறினான், நீ என்னுடைய அருட்கொடையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு அருள்புரிவேன். அல்லாஹ் நரகத்திற்கு கூறினான், நீ என்னுடைய தண்டனையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவரையும் அவர்களைக் கொண்டு நிரப்புவேன். நரகமோ நிரம்பாது, அப்போது அல்லாஹ் தன் கால் பாதத்தை நரகத்தின் மீது வைப்பான், அப்போது அது போதும் போதும் போதும் எனக்கூறும், அதில் சிலது சிலதுடன் சேர்ந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் வர்ணித்துக் கூறும் சில மேன்மக்களின் பிரார்த்தனைகள்.
ரஹ்மானின் அடியார்கள்...
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும். ( அல்குர்ஆன்: 25: 65,66 )
சதாவும் இறை நினைவில் இருக்கும் அடியார்கள்...
الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
“எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்று அவர்கள் பிரார்த்திப்பார்கள். ( அல்குர்ஆன்: 3: 191,192 )
உலகத்தை மட்டுமே கேட்போருக்கு மத்தியில் வாழும் இறை அடியார்கள்...
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً و قِنَا عَذَابَ النَّارِ
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. ( அல்குர்ஆன்: 2: 201 ).
காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
روى الإمام أحمد أن رَسُول اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ : " مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكاً قَطُّ ؟ قَالَ : مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ
மிஃராஜ் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் கண்ட காட்சிகளில் ஒன்று, வானவர் மீகாயீல் (அலை) சிரிப்பதில்லை. அதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டபோது, நரகம் படைக்கப்பட்டதிலிருந்து மீகாயீல் (அலை) அவர்கள் சிரிக்கவே இல்லை என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு இந்த உம்மத்திற்கு நரகத்தைக் குறித்து அச்சமூட்டி இருக்கின்றார்கள் என்றால் உலகில் சூரியன் மூலம் ஏற்படும் உஷ்ணமும் மனிதனின் உடலில் காய்ச்சல் மூலம் ஏற்படும் உஷ்ணமும் நரக வெப்பத்தின் ஒரு பகுதி என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
وَنَافِعٌ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ
إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا ، عَنِ الصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )
عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي نَافِعٌ ، عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "காய்ச்சல் நரகத்தின் பெரு மூச்சினால் உண்டாகிறது. எனவே அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உஙகள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’’ என்று கூறினார்கள்.
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ عَلَى أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ، كَمَا يَغْلِي الْمِرْجَلُ وَالْقُمْقُمُ))
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும். என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி )
நரகிலிருந்து நம்மை ஈடேற்றம் பெறச் செய்யும் செயல்கள் எது?
1. இணை வைப்பு கலக்காத தூய இறைநம்பிக்கை..
لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. ( அல்குர்ஆன்: 5 72 )
2. பெரும்பாவங்களில் இருந்து விலகி வாழ்வதும், நல்லறங்களில் முன்னேறிச் செல்வதும்...
اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ
لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا ۚ وَهُمْ فِىْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ
لَا يَحْزُنُهُمُ الْـفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ؕ هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ
நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள். (இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்). ( அல்குர்ஆன்: 21: 101 - 103 )
3. தக்பீர் தஹ்ரீமாவுடன் நாற்பது நாட்கள் தொழுவது..
قال - صلى الله عليه وسلم
من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان : براءة من النار و براءة من النفاق
رواه الترمذي
"எவர் அல்லாஹ்வுக்காக நாற்பது நாட்கள் தொழுகையில் அதன் ஆரம்ப தக்பீருடன் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவாரோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு இரண்டு விஷயங்களில் இருந்து விடுதலையை வழங்குகின்றான். ஒன்று நரகத்தில் இருந்து. இன்னொன்று நயவஞ்சகத்தனத்தில் இருந்து" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
4. சுபுஹ் மற்றும் அஸர் தொழுகைகளை வாழ்நாள் முழுவதும் தவறாது தொழுவது...
قال - صلى الله عليه وسلم
لن يلج النار أحد صلَّى قبل طلوع الشمس وقبل غروبها - يعني الفجر والعصر
رواه مسلم ]
எவர் காலை மற்றும் மாலையின் இரு தொழுகையான சுபுஹ் மற்றும் அஸர் தொழுகைகளை பேணுதலாக தொழுது வருவாரோ அவரை ஒருக்காலமும் நரகம் தீண்டாது" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وهذا بأن تصليهما في أول الوقت ، وتحافظ على أداء السنة قبلهما
قال - صلى الله عليه وسلم - : { ركعتا الفجر خير من الدنيا و ما فيها } [ رواه مسلم ]
وقال - صلى الله عليه وسلم - : { رحم الله امرءًا صلَّى قبل العصر أربعا } [رواه أبو داود والترمذي
இந்த நபிமொழிக்கு விளக்கம் தரும் அறிஞர் பெருமக்கள் இரண்டு தொழுகைகளையும் அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவதோடு சுபுஹ் (2) மற்றும் அஸரின் (4) முன் சுன்னத் தொழுகைகளையும் பேணித் தொழுது வர வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
5. ளுஹர் தொழுகைக்கு முன் 4 ரக்அத்துகளும் ளுஹர் தொழுகைக்கு பிறகு 4 ரக்அத்துகளும் வாழ்நாள் முழுவதும் பேணுதலாக தொழுது வருவது.
قال - صلى الله عليه وسلم
من يحافظ على أربع ركعات قبل الظهر وأربع بعدها حرَّمه الله على النار
رواه أبو داود والنسائي والترمذي
"எவர் ளுஹர் தொழுகைக்கு முன் 4 ரக்அத்துகளும் ளுஹர் தொழுகைக்கு பிறகு 4 ரக்அத்துகளும் (வாழ்நாள் முழுவதும்) பேணுதலாக தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை தடை செய்து விட்டான் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
6. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது..
قال - صلى الله عليه وسلم
لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ، و لا يجتمع غبار في سبيل الله و دخان جهنم في منخري مسلم أبدا
رواه الترمذي والنسائي
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “கறந்த பால் எப்படி மடுவுக்குள் திரும்பிச்செல்ல முடியாதோ, அது போன்று தான் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்ணையும், அழுதவரையும் நரகம் தீண்டாது. அல்லாஹ்வின் பாதையில் கிளம்பும் புழுதியும், நரகத்தின் புகையும் ஒன்று சேராது.” ( நூல்: திர்மிதீ )
7. அல்லாஹ்விடம் நரக விடுதலை கேட்டு துஆ செய்வது..
قال - صلى الله عليه وسلم
ما سأل رجل مسلم الله الجنة ثلاثا إلا قالت الجنة : اللهم أدخله الجنة ، و لا استجار رجل مسلم الله من النار ثلاثا إلا قالت النار : اللهم أجره منِّي } [ رواه الإمام أحمد.
எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் மூன்று முறை யாஅல்லாஹ்! எனக்கு சுவனத்தை தா! என்னை சுவனத்தில் புகச் செய்வாக! என்று கேட்கிறாரோ சுவனம் அல்லாஹ்விடம் அல்லாஹ்வே! அவரை சுவனத்தில் நுழையச் செய்திடு! என்று கேட்காமல் இருப்பதில்லை. அதே போன்று எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் மூன்று முறை யாஅல்லாஹ்! எனக்கு நரகத்தை தடை செய்! என்னை நரகத்தில் இருந்து புகச் பாதுகாப்பாயாக! என்று கேட்கிறாரோ நரகம் அல்லாஹ்விடம் அல்லாஹ்வே! அவரை நரகத்தில் இருந்து காத்திடு! என்று கேட்காமல் இருப்பதில்லை!" என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(இந்த அமலை தான் நாம் ரமழானின் இந்த பத்து நாட்களில் அதிகமாக கேட்டு வருகிறோம்)
8. நோன்பு நோற்றல்..
قال - صلى الله عليه وسلم
الصوم جنة يستجن بها العبد من النار
رواه الطبراني
நோன்பு நரகில் இருந்து ஒரு அடியானை காக்கும் கேடயமாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ரமழான் நோன்பை முழுமையாக நோற்பதோடு இதர சுன்னத்தான நஃபிலான நோன்புகளையும் அதிகமாக நாம் நோற்று வர வேண்டும். வாரத்தில் திங்கள் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு, மாதத்தில் அய்யாமுல் பீழ் மூன்று நாட்கள் நோன்பு நோற்க இயன்ற அளவு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
9. சக முஸ்லிமின் மானம் கிழிக்கும் புறம் பேசுதலை புறம் தள்ளுவது...
قال - صلى الله عليه وسلم
من ذبَّ عن عرض أخيه بالغيبة كان حقا على الله أن يعتقه من النار } [ رواه الإمام أحمد والطبراني
"எவர் தன் சக முஸ்லிம் சகோதரன் ஒருவனின் மானம் காத்து, புறம் பேசாது இருக்கின்றாரோ அவரை கொடும் நரகில் இருந்து விடுவிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகும் " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
10. நமக்கு பிறந்த பெண் மக்களை, நம்முடன் பிறந்த சகோதரிகளை வளர்த்து அரவணைப்பது..
قال - صلى الله عليه وسلم
ليس أحد من أمتي يعول ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا كنَّ له سترا من النار
رواه البيهقي
وقال - صلى الله عليه وسلم
من كان له ثلاث بنات فصبر عليهن ، وأطعمهن ، وسقاهن ، وكساهن من جدّته كنَّ له حجابا من النار يوم القيامة
رواه الإمام أحمد وابن ماجه
"எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அல்லது மூன்று சகோதரிகள் இருந்து அவர்களுடன் அவர் அழகிய முறையில் நடந்து கொள்வாரோ அந்த மூன்று பெண் மக்களும் அல்லது அந்த மூன்று சகோதரிகளும் அவருக்கு நரகை விட்டும் திரையாக காத்து நிற்பார்கள்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இன்னொரு அறிவிப்பில்...
எவருக்கு மூன்று பெண்மக்கள் இருந்து (அவர்களை வளர்க்கும் விஷயத்தில் பொறுமை காத்து) அவர்களோடு பொறுமையாக நடந்து, அவர்களுக்கு அழகிய முறையில் உணவளித்து, குடிநீர் வழங்கி, ஆடை கொடுத்து அதற்காக வேண்டி கடும் சிரத்தை எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அந்த பெண்மக்கள் நரகில் இருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ, அஹ்மத், இப்னு மாஜா )
நாம் இந்த ரமழானில் நரக விடுதலையை வல்ல ரஹ்மானிடம் கேட்பதோடு நின்று விடாமல் நரகத்தில் இருந்து காக்கும், தடுக்கும், பாதுகாக்கும் அனைத்து நல்லறங்களையும் தூய்மையான எண்ணத்தோடு செய்து நரகத்தில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெற முயற்சி செய்வோமாக! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அதற்கு தவ்ஃபீக் செய்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!