seamippu பெண்கள் பயான் 09 11-10-23
11-10-23 புதன் பெண்கள் பயான்
🌹🌹🌹🌹🌹🌹
🌹தலைப்பு:-
*உலக சிக்கன நாள் அக்டோபர்-30*
🌸 *கோர்வை:-*
சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான்.
நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை.
சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும்.
கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும்.
மனிதனை படைத்த அல்லாஹ், மனிதனின் வாழ்வில் அத்துணை பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தனது மார்க்கமான இஸ்லாத்தில் குர்ஆன்-மற்றும் நபிமொழிகள் வாயிலாக இந்த விசயத்திற்கும் வழிகாட்டியுள்ளான்.
பொதுவாக இஸ்லாம் வணக்கமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதில் நடுநிலை பேண சொல்லும் மார்க்கமாகும்.
🌹 *செலவு செய்வதில் சிக்கனம்:-*
🌻 *அல்லாஹ் கூறுகின்றான்:-*
(وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَاماً) [الفرقان:67].
இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
[அல்-குர்ஆன் 25:67 ]
இந்த வசனத்தில் அல்லாஹ், நாம் எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறான். நம்முடைய தேவைகளுக்காக செலவு செய்வதை மார்க்கம் தடுக்கவில்லை. ஆனால் அதில் வீண் விரையம் வந்துவிடக்கூடாது.
மேலும் கஞ்சத்தனமாக இல்லாமல் நடுநிலையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்காட்டுகின்றான் .
இது தான் இஸ்லாம் போதிக்கும் சிக்கனம்
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது:-*
🌿 “(அல்லாஹ் உங்களிடத்தில்) செவியுற்றவற்றை யெல்லாம் கூறுவதையும் அதிகமாகக் கேள்வி கேட்பதையும் பணத்தைவீணாகச் செலவு செய்வதையும்வெறுக்கின்றான்.”
(புகாரி, முஸ்லிம்)
ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பாலோரின் நிலை என்ன..?
'வைச்சா குடுமி; இல்லைன்னா மொட்டைஎன்பார்களே அதுபோன்று, ஒன்று ஆடம்பரம் என்ற பெயரில் வீண் விரயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சிக்கனம் என்ற பெயரில் வடிகட்டிய கஞ்சர்களாக இருக்கிறார்கள்.
வசதி படைத்த முஸ்லிம்களின் வீடுகளில் தேவைக்கதிகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை விரையமாக்கப்படுகிறது.
இதுபோக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தங்களின் 'பணத்திமிரை' ஊரறிய செய்ய தேவைக்கு அதிகமாக உணவுகள், ஆடம்பர செலவுகள், மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனுஷ்டானங்கள் இவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் வீண்விரையம் செய்யப்படுகிறது.
இப்படி வீண்விரையம் செய்பவர்கள் பற்றி இதோ
🌻 *அல்லாஹ் கூறுகின்றான்:-*
وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنًا
இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)
(அல்குர்ஆன் : 4:38)
🌻 *அல்லாஹ் கூறுகின்றான்:-*
اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 17:27)
இறைவனின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வீண்விரையம் தவிர்ப்போம். நம்முடைய தேவைகளை கணக்கிட்டு தேவையான உணவுகளை தயாரிப்போம். திடீர் என்று ஒரு விருந்தாளி வந்தாலும் அவர்களுக்கென மாற்று உணவு தயாரிக்க இப்போதுள்ள நவீன காலத்தில் உடனே சாத்தியமானதுதான். அப்படி இல்லையென்றால் கூட ஒருவர் உணவு இருவருக்கு போதுமானது என்ற நபிமொழிக்கு ஏற்ப நம்முடைய உணவை பங்கிட்டு வழங்கினால் அதில் அல்லாஹ் நிச்சயமாக பரக்கத் செய்வான்.
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது*
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்''
அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி)
(நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824).
மேலும் வசதி படைத்தவர்க்ள அணியும் ஆடைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபயோகித்த ஆடைகளை தேவையுடையவர்களை தேடி வழங்கினால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்; நாம் அணிந்த ஆடையை சாதரண ஒருவன் அணிவதா..? என்ற கர்வத்துடன் தூக்கி குப்பையில் வீசினால் இதுவும் வீண் விரயமாகும். இதுவும் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியதாகும்.
அடுத்து அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தும் கஞ்சத்தனம் செய்பவர்கள் பற்றி எடுத்துக்கொண்டால் இவர்கள் தங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் கூத்து சொல்லிமாளது. ஒரு சோப்பு வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு இத்துணை நாளைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கெடு விதிப்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னால், அந்த மனைவி ஏங்க! சோப்பு காலியாயிருச்சு என்று சொன்னால் அவ்வளவுதான் இவன் அதற்காக போடும் சத்தம் அடுத்த வீடுதாண்டி கேட்கும். சோப்பு என்பது கரையக்கூடியது அது என்ன கல்லிலா தயாரிக்கப்பட்டது அப்படியே இருப்பதற்கு..? அல்லது அது என்ன சாப்பிடக்கூடிய பொருளா..? மனைவி லேசா கடிச்சிருப்பா என்று சொல்வதற்கு ..? இது உதாரணம் தான்! இவ்வாறான கஞ்சர்களை, சாப்பிட்ட கையால் காக்கா விரட்டமாட்டன் என்பார்கள்ஏனெனில் இவன் கையில் ஒட்டியிருக்கும் சோத்து பருக்கை கீழே விழுந்து அதை காக்கா தின்றுவிடக்கூடாதாம்.
இவ்வாறு கஞ்சத்தனம் செய்பவர்களை பற்றி
🌻 *அல்லாஹ் கூறுகின்றான்:-*
هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ وَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّـفْسِهٖ وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 47:38)
தனது வருமானத்திற்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்கு செலவு செய்ய வேண்டும்.
கடன் வாங்கி தாரளமாக செலவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும்.
யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து
செலவிடட்டும்.
அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்தமாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியைஅல்லாஹ்
ஏற்படுத்துவான்.
*ரப்புல் ஆலமீன் அல்லாஹ் எச்சரிப்பது*
🌻 *அல்லாஹ் கூறுகின்றான்:-*
🌿“இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள்.
வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாகஅல்லாஹ் நேசிக்க மாட்டான்.”
(அல்அன்ஆம்: 141)
🌿"ஆதமுடைய
மக்களே!
ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம்செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவுகடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை
(அல்அஃராஃப்: 31)
இவையெல்லாம் நமக்கு சிக்கனமான வாழ்வை கற்பிக்கிறது
*பெண்பிள்ளைகளை கொடுத்து சிக்கனம் போதிப்பான்:-*
''எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள'' என்கின்ற நபிமொழியை எப்படி மறந்தீர்கள
🌻 *அல்லாஹ் கூறுகின்றான்:-*
'வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றைப் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும் பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயகாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய ஆற்றலுடையவன்)'.
(அஷ்ஷுரா-49.50).
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது*
எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள'
(அறிவிப்பவர்; ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
ஆதாரம்:-
புஹாரி, முஸ்லிம்).இமாம் திர்மிதியின் ஒரு அறிவிப்பில்,
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது*
மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்:
ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக 'அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.'
(ஆதாரம் முஸ்லிம்).
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது*
'எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்' என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:-
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, (இப்னு மாஜாஹ், ஹாகிம்,)
இமாம் முன்திர் அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது*
'எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்'.
(அறிவிப்பவர்:
அபூஸஈதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு,
(ஆதாரம் திர்;மிதி). இதை இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஸஹீஹ் என்கிறார்கள். '
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது*
'எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விட்டது' என்று நபிகளார் சொன்ன போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா? ஆம் இரண்டு இருந்தாலும் என்றார்கள் தோழர்கள கேட்டார்கள் ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே! என்ற உடன் ஆம் ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
(அறிவிப்பவர்:-
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு,
ஆதாரம்:
அஹ்மத். இதை இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி இன்னும் சிலர் ஸஹீஹ் என்கின்றார்கள்.
*யாஃகூப் பின் புக்த்தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்:*
'எனக்கு ஏழு பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். எனக்கு (என் மனைவிக்கு) ஒவ்வொரு முறையும் பெண் பிள்ளை பிறக்கும் போது என்னிடத்தில் அஹ்மத் இப்னு ஹன்பல் வந்து கூறுவார்கள்,
'யுஸுபின் தந்தையே!
நபிமார்களில் அதிகமானவர்கள் பெண் பிள்ளைக்குத் தான் தந்தையாக இருந்தார்கள்'.
நான் எதிர் பாராத சிறப்புகளெல்லாம் பெண் பிள்ளைகள் விடயத்தில் அடைந்தேன.
*ஓரு காட்டரபிப் பெண் தானொரு பிள்ளை பெற்ற போது இப்படிப் பாடினாள்:*
ஏன் எனக்கோர் அடிமை இல்லை
எனது வீடு பெருக்கி எனக்கு தனிமை போக்குவாள்
எனக்கு தலை வாந்து முடிசூட்டுவாள்
எனது முந்தானையை தரி செய்வாள்
அவளுக்கு எட்டு வயதாகும் போது
அவளை வலகரம் பிடித்து நான் கொடுப்பேன்
அவளுக்கு மர்வானையோ அல்லது முஅவியாவையோ மணம்முடித்து நான் கொடுப்பேன்
மதிக்க முடியா மஹர்தொகையை அவள் பெறுவாள்.
இன்னொருவர் பாடும்போது:
என் பிள்ளை நான் நுகரும் ரோஸா மலராகும்;
நானும் அவள் அன்னையும் அவளுக்கே அர்ப்பணம்
ழூலம் ஆன் பின் அவ்ஸ் என்பவர் தனக்கு எட்டுப் பெண் பிள்ளைகள் என்றும் ஆண் பிள்ளைகளை விட அவர்கள் தனக்கு உவப்புக்குரியவர்கள் என்றார்கள்.
*ஒரு கவிஞன் ஒருவருக்கு பெண் பிள்ளை பிறந்த போது:*
அப்பெண் பிள்ளை மூலம் அல்லாஹ் உங்களுக்கு (பரக்கத்) அருள் செய்தான். அப்பெண்ணை (அல்லாஹ்) உங்களுக்கு அழகு படுத்திக் கொடுத்தான்.
(அல்லாஹ்).
அதிக நன்மையை அவர்கள் மூலம் ஏற்படுத்தினான். அவர்களை வெறுத்து விடாதீர்கள் அவர்கள் (எதிர்காலத) தாய்மார்கள். உங்கள் சகோதரிகள். அவர்கள் தான் சாச்சி(மார்)கள்;
அவர்கள் மாமி(மார்)கள்;
அவர்கள் தான் (மறுமையின்) நிரந்தர நல்லமல்கள்;
ஒரு சுதந்திர மனிதன் அவனது பல சந்தோஷங்களின் பின் நிம்மதி இழந்து விடுகிறான்.
ஒருஅடிமை பல இன்னலுக்குப் பின் வாழ்க்கையில் நிம்மதி அடைகிறான்.
இத்தனை சிறப்புக்கள் ஏன் பெண்பிள்ளைகளை குறித்தும் அதன் பெற்றோர்களை குறித்தும் வந்ததென்றால் நாம் அந்த பெண் பிள்ளைக்காக நம் செலவுகளை குறைப்போம் வீண்விரயம் தடுப்போம் சரியாக வாழுவோம்
எனவே அதன் மூலம் தன்னாலேயே அல்லாஹ்வின் திருப்தி பெற்ற அடியாராக இருஉலகிலும் திகழ்வோம் என்பதேயாகும்
🌺 *நபிகளார் ﷺ குறிப்பிடும் போது*
وروى الترمذي عن عبد الله بن سرجس أن النبي صلى الله عليه وسلم قال:
السمت الحسن والتؤدة والاقتصاد جزء من أربعة وعشرين جزءا من النبوة .
நடுநிலை சிக்கனமாக செலவு செய்வது நுபுவ்வத்தின் 40 ல் ஒரு ஒரு பங்கு
🍂 *மூத்த இமாம்களில் ஒருவரின் கருத்து*
وجاء عن غير واحد من السلف: الاقتصاد نصف المعيشة .
சிக்கனம் தான் வாழ்க்கையின் பாதி
🍂 *ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه*
وقال عبد الملك بن مروان لعمر بن عبد العزيز حين زوجه ابنته فاطمة: ما نفقتك ؟
فقال له عمر:
الحسنة بين سيئتين ،
ثم تلا قوله تعالى:
وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا.
சிக்கனம் என்பது இரண்டு தீமைகளான
வீண்விரயம்
கஞ்சத்தனம்
இவைகளுக்கு மத்தியிலுள்ள நன்மையாகும்
🍂 *ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் விளக்கம்:-*
ولأبي حامد الغزالي كلام نفيس في المقارنة بين البخل والجود، إذ يقول:
فالإمساك حيث يجب البذل بخل،
والبذل حيث يجب الإمساك تبذير،
وبينهما وسط وهو المحمود ،
وينبغي أن يكون السخاء والجود عبارة عنه -أي التوسط -، إذ لم يؤمر رسول الله صلى الله عليه وسلم إلا بالسخاء، وقد قيل له: وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ.
செலவு செய்வது வாஜிபான விஷயங்களுக்கு செலவு செய்யாமல் விடுவது கஞ்சத்தனம்
செலவு செய்வது கண்டிப்பாக கூடாத விஷயங்களுக்கு செலவு செய்வது
வீண்விரயம்
இந்த இரண்டிற்கும் மத்தியில் நம் செலவை நடுநிலையாக அமைப்பது புகழப்பட்ட காரியம்
மேலும் அதில் மற்றவர்களுக்கு கொடை கொடுக்கும் தான தர்மங்களும் அமைய வேண்டும்
எனவே, அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை அவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டு அனுபவிப்போம். மேலும் அவன் வழியில் செலவும் செய்வோம். நமது சந்ததிகளுக்காக சேமிக்கவும் செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய உள்ளத்தில் கஞ்சத்தனம் வந்துவிடாமலும், நம்முடைய செயலில் வீண் விரையம் வந்துவிடாமலும் பார்த்துக் கொள்வதோடு, அதற்காக அல்லாஹ்விடத்திலும் பிரார்த்திப்போம்
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼