haj part 2 09-06-2023

ஹஜ் எனும் வணக்க வழிபாடு


 அல்லாஹ்வுக்காக மட்டுமே அந்த ஹஜ்ஜை செய்ய வேண்டும். வேறு எந்த சிறு குறைபாடுகள் நிகழ்ந்தாலும் அது ஹஜ்ஜாகவே கருதப்படாது.

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ

ஹஜ்ஜையும்உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.
அல்குர்ஆன்: 2: 196 )

அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவர் ஹஜ் செய்வாரானால் அதன் விளைவாக அவருக்கு கிடைக்கும் சிறப்பும் அந்தஸ்தும் நாம் அறிந்ததே!

ஏனெனில்ஹஜ் என்பது குறிப்பிட்ட சில மாதங்களின்குறிப்பிட்ட சில நாட்களின்குறிப்பிட்ட சில  அமல்களின் அணிவகுப்பு ஆகும்.  நன்மைகளின் குவியல் ஆகும்.

اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ  وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى  وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்எனவேஅவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால்ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம்கெட்ட வார்த்தைகள் பேசுதல்சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாதுநீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது)தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 2: 187 )

சுமார் 20 க்கும் மேற்பட்ட அமல்கள் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அமல்கள் என ஹஜ் என்பது ஒரு முஸ்லிமின் வாழ்வில் பரக்கத்தை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும் மகத்துவமான அமலாகும்.

ஹஜ்ஜில் இடம் பெற்றுள்ள ஒரு சில அமல்களின் சிறப்புகளை நாம் பார்ப்போம்.

1. தல்பியா (எனும் ஏகத்துவம் மிளிரும் தனித்துவம் மிக்க) வழிபாடு வார்த்தை.

تفسير البغوي "معالم التنزيل"

 وَأَذِّنْ فِي النَّاسِ 

أي: أعلمْ ونادِ في الناس،

 بِالْحَجِّ ، فقال إبراهيم: وما يبلغ صوتي؟ فقال: عليك الأذانُ وعلينا البلاغ، فقام إبراهيم على المقام فارتفع به المقامُ حتى صار كأطول الجبال، فأدخل أصبعيه في أذنيه وأقبل بوجهه يمينًا وشمالًا وشرقًا وغربًا، وقال: يا أيها الناس، ألا إن ربكم قد بنى لكم بيتًا، وكتب عليكم الحج إلى البيت، فأجيبوا ربكم، فأجابه كل من كان يحج من أصلاب الآباء وأرحام الأمهات: لبيك اللهم لبيك، قال ابن عباس: فأول من أجابه أهل اليمن، فهم أكثر الناس حجًّا.

(அவரை நோக்கி) ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள்.(அவர்கள்)  கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்.இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள். ( அல்குர்ஆன்: 22: 27 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த கட்டளையை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறிய போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! என்னுடைய சப்தம் எப்படி எல்லோரின் காதுகளிலும் சென்று சேரும்என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ் நீங்கள் உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை எத்தி வையுங்கள்! கொண்டு போய் சேர்ப்பது நம் வேலை" என்றான். பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் அபூகுபைஸ் மலை மீது ஏறி நின்று நான்கு திசைகளிலும் திரும்பி திரும்பி ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள்.

இது ஆத்ம உலகில் இருந்தஇருக்கிற ஆன்மாக்களை நோக்கி விடுக்கப்பட்ட அழைப்பாகும். இந்த ஆன்மாக்கள் எல்லாம் இதைக் கேட்டன. எந்த ஆன்மா இதை கேட்டதோ அவர்களுக்கு மட்டும் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது. ஆண்களின் முதுகந்தண்டில்பெண்களின் கற்பப்பையில் இருந்தவர்களிலும் இதைக் கேட்டவர்கள் பதில் சொன்னார்கள். யார் எத்தனை முறை பதில் சொன்னார்களோ அத்தனை முறை அவர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது. ஒருமுறை சொன்னவருக்கு ஒரு முறை.இரு முறை அல்லது அதிகமாக சொன்னவர்களுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்ய முடிகிறது என்று கூறும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள : இதிலிருந்து தான் தல்பியா (லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க) முழக்கம் பிறந்தது. அன்று அவர்கள் பதில் சொன்னதின் வார்த்தை வடிவம் தான் இந்த தல்பியா  என்று தொடர்ந்து விவரிக்கிறார்கள். மேலும்யமன் வாசிகளே முதன் முதலாக இந்த அழைப்பிற்கு பதிலளித்தார்கள். ஆகவே தான் ஹஜ் செய்பவர்களில் அதிக எண்ணிக்கையில் யமன் வாசிகள் இருக்கின்றார்கள். ( தஃப்ஸீர் தப்ரிபக்வீமஆலிமுத் தன்ஜீல்இப்னு கஸீர்குர்துபி )

ஹாஜிகளின் இன்றைய,அன்றைய தல்பியா முழக்கதின் மூலாதாரம் இந்த மூல முதல் பதில் வாசகம் தான்.முதலில் லப்பைக்க என்று தல்பியா முழங்கி பதில் சொன்னவர்கள் யமன் வாசிகள் என்றும் எனவே தான் அவர்கள் உலக மக்களில் அதிக ஹாஜிகளாக இருக்கிறார்கள் என்றும் ரிவாயத்தில் [அறிவிப்பில்] வந்துள்ளது.

தல்பியாவை உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும்தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸாயிப் பின் கல்லாத் (ரலி) நூல்கள் : ஹாகிம்பைஹகீ.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்:-

இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரிமுஸ்லிம்அஹ்மத்அபுதாவுத்நஸயீதிர்மிதீஇப்னுமாஜா.

நான் அரஃபாவிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள். அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) நூல் : இப்னுகுஸைமா

எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓதவேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளதோ அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.

தல்பியாவின் சிறப்பு...

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க வல் முல்க் லா ஷரீக லக்.

அல்லாஹுவே ! இதோ உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்இதோ வந்துவிட்டேன்இதோ நான் வந்துவிட்டேன். உனக்கு இணையேதுமில்லைஇதோ வந்துவிட்டேன். நிச்சயமாக புகழும்அருளும்,ஆட்சியும் உனக்கே உரியனஉனக்கு இணையேதுமில்லை.

و حَدَّثَنِي ‏ ‏عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْيَمَامِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ يَعْنِي ابْنَ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو زُمَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏كَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ قَالَ فَيَقُولُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكُمْ ‏ ‏قَدْ قَدْ ‏ ‏فَيَقُولُونَ إِلَّا شَرِيكًا هُوَ لَكَ تَمْلِكُهُ وَمَا مَلَكَ يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ ‏ ‏بِالْبَيْتِ

இணைவைப்பாளர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, “லப்பைக்லா ஷரீக்க லக்” (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்)” என்பார்கள். (ஏனெனில்,) இணைவைப்பாளர்கள் தொடர்ந்து, “இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால்உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்அவனுக்கு நீ எசமானன். அவன் எவருக்கும் எசமான் அல்லன்அல்லது அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ فَإِنَّ ‏ ‏سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَخْبَرَنِي عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُهِلُّ ‏ ‏مُلَبِّدًا ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ لَا يَزِيدُ عَلَى هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَإِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏كَانَ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَرْكَعُ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏رَكْعَتَيْنِ ثُمَّ إِذَا اسْتَوَتْ بِهِ النَّاقَةُ قَائِمَةً عِنْدَ ‏ ‏مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ كَانَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يُهِلُّ ‏ ‏بِإِهْلَالِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَيَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ ‏ ‏وَالرَّغْبَاءُ ‏ ‏إِلَيْكَ وَالْعَمَلُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத் திருந்த நிலையில் லப்பைக்அல்லாஹும்ம லப்பைக்லப்பைக்லா ஷரீக்க லக்க லப்பைக்இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க வல் முல்க்லா ஷரீக்க லக்” என்று கூறியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது தல்பியாவில்) இதைவிடக் கூடுதலாக வேறெதையும் கூற மாட்டார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் துல்ஹுலைஃபா பள்ளியின் அருகில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்ததும் தல்பியா கூறி இஹ்ராம் பூணுவார்கள்” என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுவார்கள் என்றும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியவாறே (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) தல்பியா கூறி இஹ்ராம் பூணுவார்கள். லப்பைக்அல்லாஹும்ம லப்பைக்லப்பைக் வ ஸஅதைக். வல்கைரு ஃபீ யதைக்லப்பைக்வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல் எனக் கூறுவார்கள்” என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குறிப்பிடுவார்கள் என்றும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் (ரலி) கூறுகிறார்கள்.

حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا مِنْ مُسْلِمٍ يُلَبِّى إِلاَّ لَبَّى مَنْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتَّى تَنْقَطِعَ الأَرْضُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا ».

எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள்மரங்கள்களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)நூல்: திர்மிதீ 758

2. தவாஃப் எனும் ஒப்பற்ற அமல்..

தவாஃப் நிறைவேறுவதற்கு பெருந்தொடக்கு மற்றும் சிறுதொடக்கிலிருந்து சுத்தமாகியிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

ஏனெனில் தவாஃபு என்பது தொழுகையைப் போன்றதாகும்ஆயினும் தவாஃபில் பேசுவதற்கு அனுமதியுள்ளது.

 கஃபாஇடது புறமாக இருக்குமாறு அதை ஏழு முறை வலம் வர வேண்டும். ருக்னுல் யமானிக்கு நேராக வந்ததும் இயன்றால் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி வலக்கையால் அதைத் தொட்டுக்கொள்ள வேண்டும்முத்தமிட வேண்டியதில்லை.

அது சிரமமாகத் தெரிந்தால் அதை விட்டுவிட்டு தவாஃபைத் தொடர வேண்டும். அதை நோக்கி சைகை செய்யவோ தக்பீர் கூறவோ கூடாது. ஆனால் ஹஜருல் அஸ்வதைப் பொருத்தவரை நாம் ஏற்கனவே கூறியிருப்பதைப் போல அதைக் கடக்கும்போதெல்லாம் தொட்டு முத்தமிட்டு தக்பீர் கூற வேண்டும். அல்லது சைகை செய்து தக்பீர் கூற வேண்டும்.

ஆண்கள் தவாஃபுல் குதூமில் முதல் மூன்று சுற்றுக்களில் நெருக்கமாக அடிகளை எடுத்துவைத்து சற்று வேகமாக விரைவது விரும்பத்தக்கது. அதுபோல ஆண்கள் தவாஃபுல் குதூமின் எல்லா சுற்றுக்களிலும் மேலாடையின் வலது பாகத்தை இடது கையின் அக்குள் வழியாக எடுத்து அதை இடது தோளின் மீது போட்டு வலது புறத்தைத் திறந்து வைத்திருப்பதும் விரும்பத்தக்கதாகும்.

இந்தச் சுற்றுக்களில் இயன்றவரை திக்ரு மற்றும் துஆக்களை அதிகமதிகம் ஓதிக்கொள்வதும் நல்லது. தவாஃபின் போது விரும்பிய துஆக்களைதிக்ருகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.  அத்துடன் அனைத்து சுற்றுகளிலும் ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்குமிடையே

  رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْآخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّار

'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்'| என்ற துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்.

ஏழாவது சுற்றின் முடிவில் ஹஜருல் அஸ்வதைத் தொட்டோ முத்தமிட்டோ சைகை செய்தோ தக்பீர் கூறி தவாஃபை முடித்ததும் மேலாடையைச் சரிசெய்து வலது தோளையும் மறைத்து அணிந்துகொள்ள வேண்டும்.

وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل كل يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين للطائفين وأربعين للمصلين وعشرين للناظرين". قال المنذري في الترغيب والترهيب رواه البيهقي بإسناد حسن

நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்: பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும்கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும்,  கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.” ( நூல்: பைஹகீ )

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ ، عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ رَسُول اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يَقُولُ : مَنْ طَافَ بِالْبَيْتِ ، وَصَلَّى رَكْعَتَيْنِ ، كَانَ كَعِتْقِ رَقَبَةٍ.

யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

1)மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும்  தவாஃபுல் குதூம்

2) பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ் ஸியாரா

3) மக்காவை விட்டும் ஊர் திரும்பும் போது கடைசியாகச் செய்ய வேண்டிய தவாஃபுல் விதாஃ

இவை தவிர விரும்பிய நேரமெல்லாம் நபிலான- உபரியான- தவாஃப்கள் செய்யலாம்.

فقد أخرج أهل السنن وابن خزيمة وابن حبان عن جبير بن مطعم رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "يا بني عبد مناف، لا تمنعُنَّ أحدًا طاف بهذا البيت، وصلى أيَّ ساعة شاء من ليل أو نهار"؛ (صحيح الجامع:7900)

அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும்தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875

இந்த நபி மொழியிலிருந்து எந்த நேரமும் தவாஃப் செய்யலாம் என்பதை நாம் அறியலாம்.

மேலும்தவாஃப் என்றாலே முறை கஅபாவை வலம் வருவது தான்.  நபியவர்கள் அப்படித்தான் செய்துள்ளார்கள். எனவேஎப்போதுதவாஃப் செய்தாலும் இந்த வகையில் செய்வது தான் சரியானது.

முதன் முதலாக தவாஃப் செய்தவர்கள்?

فقد ذكر الإمام القرطبي قولين في هذه المسألة: القول الأول: أن أول من أسس البيت الحرام هم الملائكة ثم طافوا به. القول الثاني: أن أول من أسسه آدم عليه الصلاة والسلام ثم طاف به أيضاً، وذكر الإمام ابن كثير في تفسيره ما معناه: أن الله تعالى أرسل جبريل إلى آدم يأمره ببناء الكعبة فبناها، ثم أُمِرَ بالطواف بها وقيل له أنت أول الناس وهذا أول بيت وضع للناس

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் முதன் முதலாக தவாஃப் செய்தது யார் என்பது குறித்து இரு கருத்துக்களை தங்களுடைய தஃப்ஸீரிலே குறிப்பிடுகின்றார்கள்.

1)முதன் முதலாக வானவர்களை கொண்டு அல்லாஹ் கஅபாவிற்கு அஸ்திவாரம் அமைத்து பின்னர் அதை தவாஃப் செய்யுமாறு ஆணையிட்டான். அவர்கள் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

2) அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிடம் அனுப்பி கஅபாவிற்கு அஸ்திவாரம் அமைக்கச் சொன்னான். ஆதம் (அலை) அவர்கள் அஸ்திவாரம் அமைத்ததும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் "நீங்களே இந்த பூமியின் முதல் மனிதர்இந்த கஅபாவே மனிதர்கள் இறைவனை வணங்கி வழிபட அமைக்கப்பட்ட முதல் ஆலயம் . எனவேமுதல் மனிதரான நீங்கள் கஅபாவைச் சுற்றி முதலில் வலம் வாருங்கள்! இது அல்லாஹ்வின் கட்டளை" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஆதம் (அலை) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.

وفي رواية عند الطبراني في الكبير والحاكم والبيهقي بلفظ: "الطواف بالبيت صلاة، ولكن الله أحل فيه المنطق، فمن نطق فلا ينطق إلا بخير"؛ (صحيح الجامع: 3954)

தவாஃப் என்பது தொழுகையைப் போன்றதாகும். என்றாலும் அல்லாஹ் தவாஃபிலே பேசுவதை அனுமதித்துள்ளான். எனவே,  தவாஃபின் போது ஒருவர் பேசினால் நல்லதை மட்டுமே பேசட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

وروى النسائي (2922) ، وأحمد (15423) عَنْ طَاوُسٍ ، عَنْ رَجُلٍ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( إِنَّمَا الطَّوَافُ صَلَاةٌ ، فَإِذَا طُفْتُمْ ، فَأَقِلُّوا الْكَلَام)

தவாஃப் என்பது தொழுகையைப் போன்றதாகும். எனவே தவாஃப் செய்யும் போது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ورواه الترمذي (960) عَنْ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( الطَّوَافُ حَوْلَ البَيْتِ مِثْلُ الصَّلَاةِ ، إِلَّا أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ ، فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلَا يَتَكَلَّمَنَّ إِلَّا بِخَيْرٍ) .

وصححه الألباني في " صحيح الترمذي"

கஅபாவைச் சுற்றி வலம் வருவது தொழுகைக்கு நிகராகும். நீங்கள் அந்த நேரத்தில் பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். தவாஃபின் போது ஒருவர் பேசினால் நல்லதை மட்டுமே பேசட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

وروى أبو داود (1888) ، والترمذي (902) عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( إِنَّمَا جُعِلَ الطَّوَافُ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَرَمْيُ الْجِمَارِ لِإِقَامَةِ ذِكْرِ اللَّهِ ) .

நிச்சயமாக கஅபாவைச் சுற்றி வலம் வருவதும் ஸஃபா மர்வா இடையே தொங்கோட்டம் ஓடுவதும் ஷைத்தானுக்கு கல் எறிவதும் அல்லாஹ்வின் நினைவை நிலை நிறுத்துவதற்காக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

رواه الإمام أحمد (4462) -واللفظ له- ، والترمذي (959) ، والنسائي (866) عن ابن عمر رضي الله عنهما ، قال عن استلام الحجر الأسود والركن اليماني في الطواف : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ اسْتِلَامَهُمَا يَحُطُّ الْخَطَايَا ) .

قَالَ : وَسَمِعْتُهُ يَقُولُ : (مَنْ طَافَ أُسْبُوعًا ، يُحْصِيهِ ، وَصَلَّى رَكْعَتَيْنِ : كَانَ لَهُ كَعِدْلِ رَقَبَةٍ) .

قَالَ : وَسَمِعْتُهُ يَقُولُ : (مَا رَفَعَ رَجُلٌ قَدَمًا وَلَا وَضَعَهَا : إِلَّا كُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ ، وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ) . حسنه أحمد شاكر والأرناؤؤط في تحقيق المسند .

ولفظ الترمذي : (لَا يَضَعُ قَدَمًا وَلَا يَرْفَعُ أُخْرَى : إِلَّا حَطَّ اللَّهُ عَنْهُ خَطِيئَةً ، وَكَتَبَ لَهُ بِهَا حَسَنَةً). وصححه الألباني في "صحيح الترمذي" .

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-  தவாஃபின் போது ருக்னுல் யமானியில் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவது தொடர்பாக நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது "ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவதால் பாவங்கள் அழிக்கப்படுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எவர் கணக்கிட்டு ஏழு முறை தவாஃப் செய்து விட்டு இரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மை கிடைக்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"தவாஃப் செய்வதற்காக ஒரு காலை உயர்த்தி இன்னொரு காலை பூமியில் ஒருவர் வைக்கும் முன்பாக பத்து நன்மைகள் அவருக்கு எழுதப்படுகிறது. பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்றும்,

தவாஃப் செய்வதற்காக ஒரு காலை உயர்த்தி இன்னொரு காலை பூமியில் ஒருவர் வைக்கும் முன்பாக அவரின் ஏட்டில் இருந்து ஒரு பாவத்தை அல்லாஹ் அழிக்கிறான். ஒரு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான்" என்று

நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலமாக திர்மிதீநஸாயீஅஹ்மத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

      3) ஹரம் ஷரீஃபின் சிறப்பு:-

مسند البزار = البحر الزخار (10/ 77)
4142- حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا مُحَمد بن يزيد بن شداد، قَال: حَدَّثنا سَعِيد بن سالم القداح، قَال: حَدَّثنا سَعِيد بْنُ بَشِيرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيد اللَّهِ، عَن أُمِّ الدَّرْدَاءِ، عَن أَبِي الدَّرْدَاءِ، رَضِي اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: فَضْلُ الصَّلاةِ فِي المسجد الحرام على غيره مِئَة أَلْفِ صَلاةٍ وَفِي مَسْجِدِي أَلْفُ صَلاةٍ وَفِي مسجد بيت المقدس خمسمِئَة صَلاةٍ.

السنن الصغير للبيهقي {ط العلمية} (1/ 456)
1821- وَرُوِّينَا فِي حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ وَجَابِرٍ مَرْفُوعًا : فَضْلُ الصَّلاَةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى غَيْرِهِ مِئَةُ أَلْفِ صَلاَةٍ ، وَفِي مَسْجِدِي هَذَا أَلْفُ صَلاَةٍ وَفِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِئَةِ صَلاَةٍ

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாகஅன்னை உம்முத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்­ஜிதுல் ஹராமில் தொழு­வது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்­ளியில் (மஸ்­ஜி­துன்ந­பவியில்) தொழு­வது 1000 மடங்­காகும். பைதுல் மக்­திஸில் தொழு­வது 500 மடங்கு சிறந்தது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அல் பஸ்ஸார் )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் நபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி 1190 )

1) முதல் இறையில்லம்..

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும்பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

அபூதர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்பட்ட மஸ்ஜித் எதுஎன்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து எதுஎனக் கேட்ட போது (ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்.” (புஹாரி: 3425)

இந்த இறை வசனம் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் உலகில் அமைக்கப்பட்ட முதல்  மஸ்ஜித் எனும் சிறப்பு புனித  பைத்துல்லாஹில் ஹரமுக்கு இருக்கின்றது.

2) இறைத் தூதர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித்

இன்று பூமியில் இருக்கும் மஸ்ஜித்களில் இறைத்தூதர்களால் கட்டப்பட்ட நான்கே நான்கு மஸ்ஜித்கள் மட்டுமே உள்ளன.

1)மஸ்ஜிதுல் ஹராம்.
2)மஸ்ஜிதுன் நபவி.
3)பைதுல் முகத்தஸ்.
4)மஸ்ஜிதுல் குபாஇவற்றில் மஸ்ஜிதுன் நபவிகுபா மஸ்ஜித் என்பன நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்டன.

3) நன்மை நாடி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மஸ்ஜித்:

மஸ்ஜிதுல் ஹராம்மஸ்ஜிதுன் நபவிமஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜித்களைத் தவிர (அதிக நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளக் கூடாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஹுரரா(ரழி) ( நூல்: புகாரி )

4) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதி:

தஜ்ஜாலின் பித்னா குறித்து நபியவர்கள் அதிகமதிகம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவ்வாறு எச்சரிக்கப்படும் போது பல செய்திகளையும் கூறிவிட்டு,

நான்கு மஸ்ஜித்கள் (இருக்கும் பகுதி) தவிர மற்றைய பகுதியெல்லாம் அவனது அதிகாரம் வியாபித்திருக்கும். அந்த நான்கு மஸ்ஜித்களாவனமஸ்ஜிதுல் ஹராம்மஸ்ஜிதுர் ரஸுல்மஸ்ஜிதுல் அக்ஸாதூர் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுனாதா இப்னு அபூ உமையா(ரஹ்) நூல்: அஹ்மத்: 24083--23683

(ஷுஅய்ப் அல் அர்னாஊத் இந்த அறிவிப்பை ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள்.)

எனவேதஜ்ஜாலின் பித்னாவிலிருந்து பாதுகாப்புப் பெற விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு இடமாகவும் இது திகழ்கின்றது.

5) அருள்வளம் மிக்க  பகுதி:-

மேலும்உலகிலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் விட மஸ்ஜிதுல் ஹராம் ''அருள்வளமிக்கது'' (அல்குர்ஆன் 3:96) என்று இறைவன் கூறியிருப்பதுஎல்லாப் பள்ளிகளிலும் தொழுவதைவிட மஸ்ஜிதுல் ஹாராமில் தொழுவது நன்மையை அதிகரிக்கும் என்றே நாம் விளங்கியுள்ளோம்!

6) பாவம் செய்ய தடையும்மீறினால் தண்டனை என எச்சரிக்கையும்...

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும்அல்லாஹ்வின் பாதையை விட்டும்மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும்மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 6882 )

4) ஹஜருல் அஸ்வத் கல்...

ஹஜருல் அஸ்வத் இதன் பொருள் கருப்புக்கல்’ என்பதாகும். இது கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது. அரைவட்ட வடிவில் உள்ள இது ஆறு அங்குல உயரமும்எட்டு அங்குல அகலமும் உள்ளதாகும். இது தண்ணீரில் மிதக்கும் தன்மை உடையதாகும்.

ஹஜருல் அஸ்வத் என்னும் கல்லுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் கஅபாவை தவாப் செய்ய (சுற்றி வருவதற்காக) ஒரு துவக்க அடையாளமாகவே ஹஜ்ருல் அஸ்வத் கல் உள்ளது.

ஏனெனில்கஅபாவை தவாப் செய்யும் ஹாஜிகள் முதலில் ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து தவாப் (வலம் வருதல்) செய்ய ஆரம்பம் செய்வார்கள்!

இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடட்டும்இயலாவிட்டால் தூரத்திலிருந்தே ஹஜருல் அஸ்வத் கல்லை நோக்கி கைகளால் சைகை செய்தும் தவாபைத் தொடங்குவார்கள்! (நூல் : புகாரி : 1603 | திர்மிதி : 793)

நபி (ஸல்) அவர்கள் இதனை முத்தமிட்டுள்ளார்கள். மேலும் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு தம் கைத்தடியால் தொட்டு கைத்தடியின் நுனியை முத்தமிட்டுள்ளார்கள்.

ஒரு முஸ்லீமைப் பொறுத்த வரை அது ஒரு கல் நபி (ஸல்) அவர்கள் கூறிய சிறப்பு தவிர்த்து அதனால் எங்களுக்கு எந்த வித நலவும் அல்லது தீங்கும் அந்த கல்லால் செய்து விட முடியாது! அதனால் தான் உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:- "உமர் (ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டு விட்டுநீ தீங்கோநன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன்! நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன் என்றார்கள். ( நூல் : புகாரி : 1597 )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- " மறுமை  நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும்பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை (அல்லாஹ்) எழுப்புவான்! யார் இதை முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும்!

(நூல் : இப்னு மாஜா : 2944 | திர்மிதி : 961)

ஹஜருல் அஸ்வத் வரலாறு...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்! இது பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. ( நூல் : திர்மிதி :  877 ) (தரம் : ஸஹீஹ் : இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) : ஃபத்ஹுல்-பாரி : 3 / 462)

இன்னொரு அறிவிப்பில்

 “வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக்கொண்டுவந்தனர். அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் (ஆதாரம் திர்மிதி).

இந்தக்கல் ஒளி வீசக்கூடியதாக இருந்தது என்று அது ஒளி பாய்ந்த இடங்கள் வரை புனிதபூமி (ஹரம்) என்று நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தின் போது இது அபுகுபைஸ் மலையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டிய பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள். அது கஃபாவை தவாஃப் செய்வதற்கு துவக்க இடமாக ஆக்கப்பட்டுள்ளது.

பிறகு பனூ ஜுர்ஹும் கூட்டத்தார் மக்காவை காலி செய்த பொழுது இதை ஜம்ஜம் கிணற்றுக்குள் போட்டு புதைத்து விட்டு சென்றனர். பின்னர் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டும் பொழுது இதனை கண்டு பிடித்து எடுத்து கஃபாவில் இதற்குறிய மூலையில் பதித்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு 35 வயதானபொழுது கஃபா புனர் நிர்மானம் செய்யப்பட்ட சமயம் இந்தக்கல்லை அதற்குறிய இடத்தில் எடுத்து வைக்கும் சிறப்பு நபி (ஸல்) அவர்களுக்கே கிடைத்தது.

ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு ஏற்பட்ட இரண்டு விபத்துகள்...

ولم يعتر الحجر الأسود نقل أو تغييب من عهد قصي إلى بناء عبد الله بن الزبير وهو أول من ربط الحجر الأسود بالفضة عندما تصدع من الأحداث التي جرت عام (64 هـ) حيث احترقت الكعبة بسبب الحرب بين ابن الزبير الذي تحصَّن داخلها ، وقائد يزيد - الحصين بن النمير- الذي رمى الكعبة بالمنجنيق ، وتطايرت النار وأحرقتها، وتكررت الفعلة سنة (73 هـ) على يد الحَجّاج ، ثم أضاف إليه الخليفة العباسي هارون الرشيد تنقيبه بالماس وأفرغ عليه الفضة 

ولعل أفظع ما مرّ على الحجر الأسود حادثة القرامطة الذين أخذوا الحجر وغيبوه 22 سنة ، وردّ إلى موضعه سنة 339 هـ ، فلقد غزى أبو طاهر القرمطي القطيف واحتلها واحتل مكة المكرمة وانتهب الحجر الأسود 317هـ وفي 318هـ تقريبا سن الحج إلى الجش بالأحساء بوضع الحجر الأسود في بيت كبير في قرية الجش وأمر القرامطة سكان منطقة القطيف بالحج إلى ذلك المكان ، ولكن الأهالي رفظوا تلك الأوامر ، فقتل القرامطة أناساً كثيرين من أهل القطيف ولا زالت بعض آثار ذلك البناء باقية وهي عين الجعبة ( الكعبة) وفي ذلك يقول شاعرها المعاصر

ولو لم تكن من رياض الخلود *** لما زارها الحجر الأسود

ويقال أن أبا طاهر نقل الحجر الأسود إلى الكوفة خلال عام 330 هـ ولكنه أعيد ثانية إلى الأحساء

قال ابن كثير : وفي سنة تسع وثلاثين وثلثمائة في هذه السنة المباركة في ذي القعدة منها رد الحجر الأسود المكي إلى مكانه في البيت ، وقد بذل لهم ( أي القرامطة ) الأمير بجكم التركي خمسين ألف دينار على أن يردوه إلى موضعه فلم يفعلوا ، ثم أرسلوه إلى مكة بغير شيء على قعود فوصل في ذي القعدة من هذه السنة ولله الحمد والمنة وكان مدة مغايبته عندهم ثنتين وعشرين سنة ففرح المسلمون لذلك فرحا شديدا )

ஹிஜ்ரி 64 இல் ஏற்பட்ட ஒரு விபத்தில் நெருப்பால் இந்தக் கல் மூன்று துண்டுகளாக உடைந்தது. அதை அப்துல்லாஹ் இபுனு ஜுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கம்பியால் பிணைத்து இதற்குரிய இடத்தில் பிணைத்தனர்.

ஹிஜ்ரி 319 -ல் இருந்து ஹஜ்ரி 339 வரை சுமார் 20 ஆண்டுகள் கராமித்தாக்கள் தான் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை வைத்து இருந்தார்கள்! 20 ஆண்டுகளாக மக்காவில் ஹஜ்ருல் அஸ்வத் கல் இருக்க வில்லை.

அக்ஸா என்ற பகுதியை ஷியாக்களின் ஒரு பிரிவிரான கராமித்தாக்கள் சில காலம் ஆட்சி செய்து வந்தனர்! இவர்கள் தான் மக்காவில் மஸ்ஜித் ஹராமுக்கு உள்ளே நுழைத்து யுத்தம் செய்து மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி ஹஜ்ருல் அஸ்வத் கல் இருந்து இடத்தில் இருந்து அதை பெயர்த்து எடுத்து விட்டார்கள்! பின்பு தங்களின் ஆட்சி செய்யும் பகுதிக்கு எடுத்து சென்று விட்டார்கள்.

அதன் பின்பு ஷியாக்கள் எடுத்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லை உடைத்து விட்டார்கள்! பின்பு முஸ்லீம் சமூகம் கராமித்தாக்கள் உடன் போரிட்டு ஹஜ்ருல் அஸ்வத் கல்லை திரும்ப எடுத்தார்கள்! அப்போது அது துண்டுகளாக உடைந்து இருந்தது.

உடைந்து போன ஹஜ்ருல் அஸ்வத் கல்லின் பகுதிகளில் பெரியது பேரீத்தம் பழம் அளவு பெரியதாக இருக்கும்! மற்றவைகள் பேரீத்தம் பழ கொட்டை  அளவுக்கு சிறியதாக இருக்கும். நூல்: அல் பிதாயா வன் நிஹாயா, 11 /72 & 73 )

5) ஜம் ஜம் நீரின் சிறப்பு:-

நபிகளார் (ஸல்) கூறினார்கள்: இந்தத் தண்ணீர் அருள் வளம் (பரக்கத்) நிரம்பியதாகவும் உணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கின்றது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)நூல்ஸஹீஹ் முஸ்லிம் 6513,

மற்றோர் அறிவிப்பில், ‘பூமியில் உள்ள எல்லா நீரை விடவும் இந்த நீர் சிறந்தது’ என்றும் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)தப்ரானீ 11167, அஸ்ஸஹீஹா 1056)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஜம் ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது." நூல்அஹ்மத்:357, இப்னு மாஜா:3062)

இதன் பொருள் ஜம் ஜம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.

قال أبو عبد الله محمد بن علي الترمذي وحدثني ابي رحمه الله دخلت الطواف في ليلة ظلماء فاخذني من البول ماشغلني فجعلت اعتصر حتي اذاني وخفت ان خرجت من المسجد ان اطأ بعض تلك الاقدام وذلك ايام الحج فذكرت هذا الحديث فدخلت زمزم فتضلعت منه فذهب عني الي الصباح( تفسير قرطبي)

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது தந்தையின் மூலம் அறிவிக்கிறார்கள்:- ஒரு நாள் இருளான இரவில் தவாப் செய்ய ஹரம் ஷரீபுக்கு சென்றேன் அந்த சமயத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது நான் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டிருந்தேன் வெளியில் சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் அது ஹஜ்ஜூடைய காலம் என்பதாலும் அவ்வாறு செய்தேன் அப்போது இந்த ஹதீஸ் எனக்கு நினைவிற்கு வந்தது உடனே ஜம் ஜம் கிணற்றுக்குச் சென்று அதன் நீரை வயிறு நிரம்ப குடித்தேன் அதன் பரக்கத்தால் அடுத்தநாள் காலை வரை எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்படவில்லை என்றார்கள். ( நூல்:  தப்ஸீர் குர்துபி பாகம் 9 )

காழி அபூபக்ர் இப்னுல் அரபி அல் மாலிக்கி (ரஹ்) கூறினார்கள்:- “ஹிஜ்ரீ 489- ம் ஆண்டு நான் மக்காவில் இருந்தேன். ஜம்ஜம் தண்ணீரை அதிகளவில் அப்போது குடித்தேன். குடிக்கும் போதெல்லாம்இறைநம்பிக்கையும்கல்வியும் அதிகரிக்க வேண்டுமென நிய்யத்- எண்ணம் கொண்டேன். அதன் விளைவாகஅல்லாஹு தஆலா கல்வியை எனக்கு இலகுவாக்கி தன் பரக்கத் - அருள்வளத்தை திறந்து விட்டான்.

கற்றபடி செயலாற்ற இறையருளை வேண்ட மறந்து விட்டேன். நான் அவ்விரண்டையும் வேண்டியிருக்க வேண்டுமே! இரண்டையும் குறையின்றி அல்லாஹ் எனக்கு திறந்து விட்டிருப்பான். இப்போதுசெயலை விட அதிகமாக கல்வியில் எனது தேர்ச்சி அமைந்து விட்டது.” ( நூல்ரஹ்லத்துல் ஹிஜாஸிய்யாஹுழைகீ)

ஜம்ஜம் நீரை அமர்ந்து கொண்டும்.. நின்று கொண்டும் குடிக்கலாம்

أخرج بن ماجة عَنْ مُحَمَّدِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ جَالِسًا فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ مِنْ أَيْنَ جِئْتَ قَالَ مِنْ زَمْزَمَ قَالَ فَشَرِبْتَ مِنْهَا كَمَا يَنْبَغِي قَالَ وَكَيْفَ : قَالَ : إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ وَتَنَفَّسْ ثَلَاثًا وَتَضَلَّعْ مِنْهَا فَإِذَا فَرَغْتَ فَاحْمَدِ اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : "إِنَّ آيَةَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ إِنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ " .

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலிஅவர்களுடன் அமர்ந்திருந்த ஒரு சபையில் ஒரு மனிதர் வந்தார்வந்தவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்என்று இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் கேட்டார்கள்அதற்கவர், “நான் ஜம்ஜம் தடாகத்தில் இருந்து வருகின்றேன்” என்றார்அப்போதுஇப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் “அதைக் குடிக்கும் முறைப்படி குடித்தீரா?” என்று கேட்டார்கள்அதற்கவர், “எந்த முறைப்படி குடிக்க வேண்டும்?” என்று கேட்டார்அப்போது இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் “ஜம்ஜம் தண்ணீரை நீர் பருகினால் கிப்லாவை முன்னோக்குவீராகபிஸ்மில்லாஹ் சொல்வீராகமூன்று முறை சுவாசித்து குடிப்பீராகவயிறு நிரம்ப குடிப்பீராகபின்பு நீர் அல்லாஹ்வைப் புகழ்வீராக!” என்று கூறிவிட்டுநபி {ஸல்அவர்கள் நயவஞ்சர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் ஜம்ஜம் தண்ணீரை வயிறு நிரம்ப குடிக்க மாட்டார்கள்” என்று கூறியதாக கூறினார்கள் என முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்ர் (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்இப்னு மாஜா )

ஜம் ஜம் நீரை பிஸ்மில்லாஹ் சொல்லி குடிக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் குடிப்பது முஸ்தஹப்பாகும். நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏதுமில்லை. குடிக்கும் போது பின் வரும் துஆவை ஓதுவது சிறப்பாகும்.

اللهم اني اسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

அல்லாஹ்வே! நிச்சயமாக! நான் உன்னிடம் பலன் தரும் கல்வியையும், விசாலமான உணவையு(வாழ்வாதாரத்தையு)ம் எல்லா நோய்களிலிருந்து சுகத்தையும் வேண்டுகிறேன்!

நான் நபி(ஸல்) அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரில் ஒரு வாளி கொண்டு வந்தேன். அப்போது அவர்கள் அதை நின்று கொண்டு குடித் தார்கள். ( அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்புகாரீமுஸ்லிம் )

ஜம்ஜம் நீரை நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்பதில்லை. நபி(ஸல்) அவர்களைப் போல் நின்று கொண்டும் குடிக்கலாம் என்பதை அறிகிறோம்.

6) மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللهِ بْنِ أَبِي عَبْدِ اللهِ الأَغَرِّ ، عَنْ أَبِي عَبْدِ اللهِ الأَغَرِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ.

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி-1190 

ஹஜ் என்பது ஹஜ்ஜினுடைய காலங்களான ஷவ்வால்துல்கஅதாதுல்ஹஜ் பிறை 10 க்குள் இஹ்ராம் கட்டி துல்ஹஜ் மாதம் பிறை எட்டாம் நாளிலிருந்து பிறை பதிமூன்று வரை செய்யக் கூடிய வணக்கங்களாகும்.

பிறை 8 - ல் மினாவில் தங்குவதுபிறை 9 - ல் அரஃபாவில் தங்குவதுபிறை - அரஃபாவுடைய இரவிலிருந்து பிறை - 10 சூரிய உதயத்திற்கு முன்பு வரை முஜ்தலிஃபாவில் தங்குவதுமினாவில் கல்லெறிவதுகுர்பானி கொடுப்பதுதலை முடியை எடுப்பது  கஃபாவில் கடமையான தவாஃப் செய்வதுசயீ செய்வது ,பிறகு மூன்று நாட்கள் மினாவில் கல்லெறிவது உள்ளிட்ட அமல்களுக்கு சொல்லப்படும் பெயர்.

7) அரஃபா தினம் & மைதானம் பற்றிய சிறப்பு..

அரஃபா தினத்தின் சிறப்பு குறித்து அல்குர்ஆனிலும், நபிமொழிக்  கிரந்தங்களிலும் ஏராளமான செய்திகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.

அரஃபா  பெயர்க்காரணம்…..

هناك عدّة أقوال فيما يخصّ سبب تسمية يوم عرفة بهذا الاسم، حيث قيل بأنّها سميت بذلك نسبة لتعارف سيدنا آدم على زوجته في تلك المنطقة، أما الرواية الثانية فهي تعريف جبريلُ إبراهيمَ بمناسك الحج، حيث ذكر الإمام القرطبي في التفسير وغيره: "وقالوا في تسمية عرفة بهذا الاسم لأنّ الناس يتعارفون فيه، وقيل لأنّ جبريل عليه السلام طاف بإبراهيم فكان يريه المشاهد فيقول له: أعرفت أعرفت؟ فيقول إبراهيم عرفت عرفت"، وقيل أيضاً أنّ الاسم بسبب تعارف الناس فيها، كما قيل بأّن الكلمة مقتبسة من العَرف وهو الطيب؛ كونها تعتبر هذه المنطقة مقدّسة، ولكن قد يكون تكون الرواية الأكثر تأكيداً هي راوية سيدنا آدم وزوجته.

நமது தந்தை ஆதம் {அலைஅவர்கள் சுவர்க்கத்தில் இருந்து தமது துணைவியாரோடு பூமிக்கு இறக்கப்பட்டதன் பின்னர் நீண்ட காலங்கள் பிரிந்து வாழ்ந்து  மீண்டும் ஒருவருக்கொருவர் சந்தித்து அறிமுகம் ஆனது அரஃபாத்தில் இருக்கும்  மலைக்குன்றின் அருகே தான்ஆகவேஅரஃபா என பெயர் வந்ததாக  கூறப்படுகின்றது.

நபி இப்ராஹீம் {அலை} அவர்களுக்கு ஹஜ்ஜின் கிரியைகளை  அல்லாஹ்வின் பேரில் கறுறுக் கொடுக்க வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள்  ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்த பின்னர் நீங்கள் அறிந்து கொண்டீர்களா?”  என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

இறுதியாக, அரஃபாவில் செய்ய வேண்டிய கிரியைகளை கற்றுக் கொடுத்த  பின்னர் மீண்டும்நீங்கள் அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு,  இப்ராஹீம் {அலை} அவர்கள் அரஃப்து நான் அறிந்து கொண்டேன் என பதில்  கூறினார்கள். ஆகவே, அரஃபா என பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுடைய காலத்தில் லட்சோப லட்ச முஸ்லிம்கள் இன, மொழி, நிற பேதமின்றி ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக் கொள்வதால்  அரஃபா என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

அரஃபா தினம் & மைதானம் ஓர் கண்ணோட்டம்

இது மக்காவிற்கு கிழக்கே 12 கல் தொலைவில் உள்ள மலையாகும். அதைச்சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும். அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும், 4 மைல் அகலமும் கொண்டதாகும்.

அரஃபா பெருவெளிக்கு அல் மஷ்அருல் ஹராம் புனித வழிபாட்டுத் தலம், ”அல் மஷ்அருல் அக்ஸா கோடியிலுள்ள வழிபாட்டுத்தலம், இலால் மணற்குன்று ஆகிய பெயர்களும் உண்டு.

அரஃபா பெருவெளியின் நடுப்பகுதியில் அமைந்துள்ள குன்றுக்கு ஜபலுர் ரஹ்மத்” – அருள் மலை என்று பெயர்.

أنه يوم عيد لأهل الموسم؛ فعن عمر بن الخطاب - رضي الله عنه - أن رجلاً من اليهود قال له: يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيداً!! قال: أي آية؟ قال: الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا (3) سورة المائدة. قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي - صلى الله عليه وسلم - وهو قائم بعرفة يوم جمعة"

ஒரு முறை யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் ஒரு வசனத்தை ஓதி வருகின்றீர்கள்!  அது மட்டும் எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்த நாளைப்  பெருநாளாக கொண்டாடி இருப்போம் என்று கூறினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் அது எந்த வசனம்? என்று கேட்டார்கள்.  அதற்கவர்கள் அல்மாயிதா அத்தியாயத்தின் 3ஆம் வசனத்தொடரில் இடம்  பெற்றிருக்கிற இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன் எனும் வசனம் என்றனர்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் அந்த வசனம் அருளப்பெற்ற நாளையும், அந்த வசனம் அருளப்பெற்ற இடத்தையும், அது அருளப்படும் போது மாநபி {ஸல்}  அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையும் நான் அறிவேன் என்று கூறிவிட்டு அது அரஃபா ( துல்ஹிஜ்ஜா 9 –ஆவது ) நாளன்று வெள்ளிக்கிழமை அருளப்பெற்றது.

அல்லாஹ் புகழுக்குரியவன்! அவ்விரு நாட்களுமே எங்களுக்குப் பண்டிகை நாட்கள் தான் என்று கூறினார்கள்.                   ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

أن يوم عرفة يوم أقسم الله به، والعظيم لا يقسم إلاّ بعظيم، فهو اليوم المشهود في قوله تعالى﴿ وَشَاهِدٍ وَمَشْهُودٍ ﴾ [البروج: 3].

قال أبو هُرَيْرَةَ رضي الله عنه: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: "الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ، وَالْيَوْمُ الْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ..."؛ رواه الترمذي وحسنه الألباني.

ويوم عرفة هو الوتر الذي أقسم الله به في قوله﴿ وَالشَّفْعِ وَالْوَتْر ﴾

الفجر: 3]، قال ابن عباس: "الشفع يوم الأضحى، والوتر يوم عرفة

அரஃபா நாளின் சிறப்புக்கு சிறப்பு சேற்கும் விதமாக அல்லாஹ்வின் இரண்டு வசனங்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஒன்று அல்புரூஜ் அத்தியாயத்தின் 3ஆம் வசனம், மற்றொன்று அல்ஃபஜ்ர்  அத்தியாயத்தின் 3ஆம் வசனம் இவ்விரு வசனத்திலும் அல்லாஹ் அரஃபா தினத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்.

வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக! மேலும், பார்க்கின்றவர்  மீதும், பார்க்கப்படும் பொருள் மீதும் சத்தியமாக!             ( அல்குர்ஆன்: 85: 2, 3 )

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமை நாள் ஆகும். மஷ்ஹூத்  பார்க்கப்படும்  நாள் என்பது அரஃபா நாள் ஆகும். பார்க்கின்ற நாள் என்பது ஜும்ஆ நாள் ஆகும் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                      ( நூல்: திர்மிதீ )

வைகறைப் பொழுதின் மீதும், மேலும், பத்து இரவுகளின் மீதும், ஒற்றை  மற்றும் இரட்டைகளின் மீதும் சத்தியமாக!”                 ( அல்குர்ஆன்: 89: 1 – 4 )

இப்னு அப்பாஸ் (ரலி) இந்த வசனத்திற்கு விளக்கம் தருகிற போது, “வைகறை பொழுது என்பது நஹ்ர் உடைய நாளின் வைகறையையும், பத்து  இரவுகள் என்பது துல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்களின் இரவுகளையும், இரட்டை என்பது ஈதுல் அள்ஹா உடைய நாளையும், ஒற்றை என்பது அரஃபா உடைய நாளையும் எடுத்துக் கொள்ளும்!” என்று விளக்கமளித்தார்கள்.            ( தஃப்ஸீர் இப்னு கஸீர் )

மன்னிப்பு மற்றும் நரக விடுதலையின் நாள்

أن يوم عرفة هو من أفضل الأيام عند الله... أنه يوم مغفرة الذنوب والعتق من النار والمباهاة بأهل الموقف، وهذا ما اخبر عنه الصادق المصدوق سيدنا محمد - صلى الله عليه وسلم -؛ فعَنْ جَابِرٍ

 قَالَ: قَالَ رَسُولُ اللهِ  - صلى الله عليه وسلم ِ مَا مِنْ أَيَّامٍ

أَفْضَلُ عِنْدَ اللهِ مِنْ أَيَّامِ عَشْرِ ذِي الْحِجَّة

 فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، هُنَّ أَفْضَلُ أَمْ عِدَّتُهُنَّ جِهَادًا فِي سَبِيلِ اللهِ، قَالَ: هُنَّ أَفْضَلُ مِنْ عِدَّتِهِنَّ جِهَادًا فِي سَبِيلِ اللهِ، وَمَا مِنْ يوْمٍ أَفْضَلُ عِنْدَ اللهِ مِنْ يوْمِ عَرَفَةَ يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيُبَاهِي بِأَهْلِ الأَرْضِ أَهْلَ السَّمَاءِ، فَيَقُولُ: انْظُرُوا إِلَى عِبَادِي شُعْثًا غُبْرًا ضَاحِينَ جَاؤُوا مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ يَرْجُونَ رَحْمَتِي، وَلَمْ يَرَوْا عَذَابِي، فَلَمْ يُرَ يَوْمٌ أَكْثَرُ عِتْقًا مِنَ النَّارِ مِنْ يوْمِ عَرَفَةَ))؛ صحيح ابن حبان

ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மாநபி {ஸல்} அவர்கள்  எங்களிடத்தில் உலகின் நாட்களில் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த நாட்கள்  துல்ஹஜ் உடைய முதல் பத்து நாட்களாகும் என்று கூறிய போது, சபையில் இருந்த ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில்  போராடுவதற்காக கழிக்கின்ற நாட்களை விடவுமா மிகச்சிறந்தது?” என்று கேட்டார்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் ஆம்!” என்று பதில் கூறிவிட்டு,  அல்லாஹ்விடத்தில் அரஃபா நாளை விடவும் மிகச் சிறந்த நாள் உலகின் நாட்களில் வேறெதுவும் இல்லை என்றார்கள்.

அந்நாளில், அல்லாஹ் உலகின் வானத்திற்கு வருகை தந்து, வானவர்களிடம் அரஃபா தினத்தன்று ஒன்று கூடியிருக்கின்றவர்களைப் பற்றி பெருமை பாராட்டி  பேசுகின்றான்.

இதோ! என் அடியார்களைப் பாருங்கள்! என்னுடைய அருளை ஆதரவு வைத்து வெகு தூரமான இடங்களில் இருந்து தலைவிரி கோலத்தோடு, புழுதி படிந்த நிலையில் இங்கு குழுமியிருக்கின்றார்களே!” என்று அல்லாஹ் கூறுவான் என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள் “(அன்றைய) அரஃபா நாளில் அல்லாஹ் நரகில் இருந்து  விடுவிப்பது போன்று வேறெந்த நாளிலும் விடுவிப்பதில்லை என்று கூறினார்கள்.                                  ( நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் )

ஹஜ் முழுமை பெற….

أن الله جعل الوقوف بعرفة ركن من أركان الحج بل هو أهمهما فقد قال - صلى الله عليه وسلم -: (الحج عرفة) قال ابن رشد: "أجمعوا على أنه ركن من أركان الحج، وأن من فاته فعليه حج قابل"، وقال ابن قدامة المقدسي: "والوقوف ركن لا يتم الحج إلا به إجماعاً".

அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 இல் மாலை வரைத்தங்க வேண்டும். இது ஹஜ்ஜின் முக்கிய கடமை (பர்ளு) ஆகும். எவரேனும் சிறிது நேரமாவது இங்கு தங்கவில்லை என்றால் ஹஜ் முழுமை பெறாது என்பதை உணர்த்தும் முகமாக ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவது தான்” என மாநபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.

ரப்பின் முதல் அறிமுகம் கிடைத்த இடம்...

أن الله أخذ فيه الميثاق؛ فعن ابن عباس عن النبي - صلى الله عليه وسلم - قال: (إن الله أخذ الميثاق من ظهر آدم بنعمان - يعني يوم عرفة -، وأخرج من صلبه كل ذرية ذرأها فنثرهم بين يديه كالذر، ثم كلمهم قُبلاً قال: أَلَسْتَ بِرَبِّكُمْ قَالُواْ بَلَى شَهِدْنَا أَن تَقُولُواْ يَوْمَ الْقِيَامَةِ إلى يقوله: بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ

سورة الأعراف(172-173)

 

அல்லாஹ் நுஃமான் எனப்படும் அரஃபா பெருவெளியில் ஆதம் {அலைஅவர்களின் முதுகுத்தண்டிலிருந்து உறுதிமொழி பெற்றான். அதாவதுஅவரது முதுகுத்தண்டிலிருந்து தான் படைத்த அனைத்து வழித்தோன்றல்களையும் வெளியோக்கினான். பிறகு தனக்கு முன்னால் அவர்களை அணுக்களைப் போன்று பரப்பினான்.

பின்னர்அவர்களை நோக்கி “ நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். ஆம்! நாங்கள் நீதான் எங்கள் இறைவன் என சாட்சியமளிக்கின்றோம்” என்றனர்” என மாநபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.         ( நூல்: இப்னு கஸீர் )

8) மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு

1727- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ نَافِعٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :

اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللهِ قَالَ اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللهِ قَالَ وَالْمُقَصِّرِينَ.

وَقَالَ اللَّيْثُ : حَدَّثَنِي نَافِعٌ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ مَرَّةً ، أَوْ مَرَّتَيْنِ.

قَالَ وَقَالَ عُبَيْدُ اللهِ ، حَدَّثَنِي نَافِعٌ وَقَالَ فِي الرَّابِعَةِ وَالْمُقَصِّرِينَ.

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி-1727 

ஒரு ஹஜ் அல்ல... மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய ஆசைப்படுவோம்!!!

ஹஜ்ஜுடைய வணக்கங்கள் மற்றும் வழிபாடுகள் அதன் மூலம் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் மற்றும் கூலிகளை கவனத்தில் கொண்டு மேன்மக்களான ஸலஃபுகள் வாழும் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் சிலர் அதை விட கூடுதலாக ஹஜ் செய்திருக்கின்றார்கள்.

எனவேநாம் தான் ஒரு முறை ஹஜ் செய்து விட்டோமே ஃபர்ளை நிறைவேற்றி விட்டோமே என்று இருந்து விடக் கூடாது. மாறாகஉளத் தூய்மையோடு அல்லாஹ்விடம் அழுது மன்றாடி மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய ஆசையுடன் துஆ செய்ய வேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வாய்ப்பளிக்கும் போது இரண்டாம் முறையாக மூன்றாவது முறையாக என்று ஹஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!      

الأصل أن كثرة الحج والعمرة مرغب فيها شرعا، وقد دلت على ذلك نصوص كثيرة منها:

 

அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹஜ் மற்றும் உம்ராவை அதிகமாக செய்வது குறித்து மார்க்கத்தில் அதிகம் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக பல்வேறு நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

حديث عبد الله بن مسعود قال: قال رسول الله صلى الله عليه وسلم: «تابعوا بين الحج والعمرة؛ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة».

தொடர்படியாக ஹஜ் மற்றும் உம்ரா செய்து வாருங்கள்! ஏனெனில்அவ்விரண்டும் வறுமையையும் பாவத்தையும் நம்மை விட்டு அகற்றி விடுகின்றது. பொற்கொல்லனின் நெருப்பு தங்கத்தின்  மீதும் வெள்ளியின் மீதும் இரும்பின் மீதும் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றி விடுவது போல. மேலும்ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தை தவிர கூலி வேறேதும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه».

உடலுறவு கொள்ளாமல்தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரிமுஸ்லிம்

وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: «العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلى الجنة».

ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரிமுஸ்லிம்அஹ்மத்நஸயீதிர்மிதீஇப்னுமாஜா.

وعن أبي هريرة قال: سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال: «إيمان بالله» قال: ثم ماذا؟ قال: «الجهاد في سبيل الله» قال: ثم ماذا؟ قال: «حج مبرور».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அமல்களில் மிகச் சிறந்த அமல் எதுஎன்று ஒருவர் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது" என்றார்கள். மீண்டும் எது மிகச் சிறந்த அமல்என்று அவர் வினவவேஅல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நாட்டும் நோக்கோடு அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது" என்றார்கள். மீண்டும்  அவர் எது மிகச் சிறந்த அமல்என்று கேட்கவேநபி (ஸல்) அவர்கள் "ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.

وعن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت: يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد؟ قال: «لا لكن أفضل الجهاد حج مبرور».

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதை பெண்களாகிய நாங்கள் மிகச் சிறப்பான அமலாக கருதுகின்றோம்?" ஆகவேநாங்கள் ஜிஹாதில் பங்கேற்கலாமா?" என்று கேட்ட போது இல்லைஜிஹாதில் சிறந்தது ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் ஆகும்"  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

قال: فسافر الأسود ثمانين ما بين حجة وعمرة لم يجمع بينهما، وسافر عبد الرحمن بن الأسود ستين ما بين حجة وعمرة لم يجمع بينهما.

அஸ்வத் (ரஹ்) அவர்கள் 80 ஹஜ் மற்றும் உம்ரா செய்திருக்கின்றார்கள். அவர்களின் மகனார் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் 60 ஹஜ் மற்றும் உம்ரா செய்திருக்கின்றார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் தனித்தனியாக செய்திருக்கிறார்கள்.

- قال أبو إسحاق السبيعي: «جمع الأسود بن يزيد بين ثمانين حجة وعمرة، وجمع عمرو بن ميمون بين ستين حجة وعمرة».
- وقال ابن شوذب: «شهدت جنازة طاووس بن كيسان بمكة سنة ست ومائة فسمعتهم يقولون: رحمك الله يا أبا عبد الرحمن، حج أربعين حجة».

அபூ இஸ்ஹாக் (ரஹ்அவர்கள் கூறினார்கள்:-அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்80 ஹஜ் மற்றும் உம்ரா சேர்த்து செய்திருக்கின்றார்கள்.
அம்ர் இப்னு மைமூன் (ரஹ்அவர்கள் 60 ஹஜ் மற்றும் உம்ரா சேர்த்து செய்திருக்கிறார்கள்.

தாவூஸ் இப்னு கைஸான் (ரஹ்அவர்களின் ஜனாஸாவின் போது மக்கள் "அபூ அப்துர்ரஹ்மான் அவர்களேஅல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக40 ஹஜ் செய்திருக்கின்றீர்கள்"! என்று துஆ செய்து இரங்கல் தெரிவித்தனர் என இப்னு ஷூஃதப் (ரஹ்அவர்கள் கூறினார்கள்.

قال ابن أبي ليلى: وكان عطاء قد حج سبعين حجة، وعاش مائة سنة.

இப்னு அபீ  லைலா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நூறு ஆண்டுகள் வாழ்ந்த  அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் 70 ஹஜ் செய்துள்ளார்கள்.

- قال الحسن بن عمران – ابن أخي سفيان بن عيينة -: حججت مع عمي سفيان آخر حجة حجها سنة سبع وتسعين ومائة فلما كنا بجمع وصلى استلقى على فراشه، ثم قال: فد وافيت هذا الموضع سبعين عاما أقول في كل سنة: اللهم! لا تجعله آخر العهد من هذا المكان، وإني قد استحييت من الله من كثرة ما أسأل ذلك، فرجع فتوفي في السنة الداخلة يوم السبت أول يوم من رجب سنة ثمان وتسعين ومائة ودفن بالحجون... وتوفي وهو ابن إحدى وتسعين سنة

ஸுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்களின் சகோதரர் மகன் ஹசன் இப்னு இம்ரான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:- ஹிஜ்ரி 198 -ம் ஆண்டு எனது சிறிய தந்தையுடன் ஹஜ் செய்ய சென்றிருந்த போது ஒரு இடத்தில் தொழுது விட்டு படுக்கையில் அமர்ந்திருந்த என் சிறிய தந்தை இதோ இந்த இடத்திற்கு நான் 70 ஆண்டுகள் வந்து விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த இடத்தில் இருந்து அல்லாஹ்விடம் "அல்லாஹ்வே! இந்த ஆண்டோடு நான் ஹஜ்ஜை நிறைவு செய்யும் ஆண்டாக அமைத்து விடாதே!" என்று துஆ செய்வேன். ஆனால், "என் ரப்பிடம் நான் தொடர்ந்து இங்கு வர வேண்டும் என்று கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று கூறினார்கள். ஹஜ்ஜை முடித்து அங்கிருந்து ஊர் வந்த பிறகு ஹிஜ்ரி 199 -ம் ஆண்டு ரஜப் மாதத்தில் தங்களுடைய 91 வயதில் வஃபாத் ஆனார்கள்.

وقال سحنون الفقيه: كان عبد الله بن وهب قد قسم دهره أثلاثا: ثلثا في الرباط، وثلثا يعلم الناس بمصر، وثلثا في الحج، وذكر أنه حج ستا وثلاثين حجة.

அப்துல்லாஹ் இப்னு வஹப் (ரஹ்) அவர்கள் தங்களுடைய ஒரு வருஷத்தை மூன்று பகுதிகளாக பிரித்து விடுவார்கள். ஒரு பகுதி இரவு வணக்கங்களுக்காக. இரண்டாம் பகுதியை அவர்கள் வாழ்ந்த மிஸ்ரில் கல்விச் சேவைகளுக்காக. மூன்றாம் பகுதியை ஹஜ்ஜுக்காக. இப்படியாக அவர்கள் தங்களது வாழ்நாளில் முப்பத்து ஆறு ஹஜ் செய்திருக்கிறார்கள்.

- وعن محمد بن سوقة قال: قيل لمحمد بن المنكدر: تحج وعليك دَيْن؟ قال: الحج أقضى للدين ـ قال: يعني إذا حججت قضى الله عني ديني -.

முஹம்மது இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்களிடம் நீங்கள் உங்களுக்கு கடன் இருக்கும் நிலையில் ஹஜ் செய்கின்றீர்களேஎன்று கேட்கப்பட்ட போது நான் ஹஜ் செய்வதே கடனை அடைப்பதற்காக தான் என்றார்களாம். அதாவதுநான் ஹஜ் செய்வதால் அல்லாஹ் என் கடனை (அடைப்பதற்குரிய பொருளாதார வளத்தைஅந்த பொருளாதார வளத்தில் பரக்கத்தை தந்து) நிறைவேற்றி விடுகிறான்".இப்படியாக அவர்கள் தங்களது வாழ்நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹஜ் செய்திருக்கின்றார்கள்.

وممن ذكر أنه حج أكثر من أربعين حجة: سعيد بن المسيب، ومحمد بن سوقة، وبكير بن عتيق، وابن أبي عمر العدني، وسعيد بن سليمان، وجعفر الخلدي، والعباس بن سمرة أبو الفضل الهاشمي، وأيوب السختياني، وهمام بن نافع، ومكي بن إبراهيم وغيرهم كثير..

ஸயீத் இப்னுல் முஸய்யப்முஹம்மது இப்னு ஸவ்காபுகைர் இப்னு அதீக்இப்னு அபூ அம்ருல் அத்னீஸயீத் இப்னு ஸுலைமான்ஜஅஃபருல் குல்தீஅப்பாஸ் இப்னு ஸம்ரா அபுல் ஃபள்லுல் ஹாஷிமீஅய்யூப் அஸ் ஸக்தியானீஹுமாம் இப்னு நாஃபிஉமக்கீ இப்னு இப்ராஹீம் (ரஹிமஹுமுல்லாஹு அலைஹிம்) ஆகியோரும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹஜ் செய்திருக்கின்றார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு...

 

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025