ஸஃபர் மாதம் சகலம் நிறைந்த மாதம்… 18-08-23
ஸஃபர் மாதம் சகலம் நிறைந்த மாதம்…
أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹 🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ الله ﷺ 🌹
بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3) ۞)} -[سورة العصر 103 الآية 1-3] – صدق الله العظيم / قال رسول الله ﷺ « عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ: “” لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ ”. » [إلخ], الى آخره, (. رواه الْبُخَارِيِّ.5707 ) أو كما عبر الرسول صلى الله عليه وسلم
[தலைப்பின் விளக்கம் : ‘ஸஃபர் மாதம் சகலம் நிறைந்த மாதம்… ” ஸஃபர் மாதம் சகலம் [எல்லாம்; அனைத்து] நிறைந்த மாதம்.… தமிழ் அகராதியில் ” சகலம் ” என்பதற்க்கு:- எல்லாம் நிறைந்த + அனைத்தும் உள்ளடக்கிய என்ற அர்தமாகும்.
✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ صفر ] ஸஃபர் மாதத்தின் முதல் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
✍🏻 கண்ணியமிக்கவர்களே! இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் அனேகரிடத்தில் ஸஃபர் மாதம் பீடை மாதம் என்றும், அம்மாதத்தில் திருமணம், சுப நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்றும் தீய எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது, அண்ணல் நபி ﷺ அவர்களின் காலத்திலிருந்து இப்போது வரைக்கும் அத்தீய பழக்கம் நின்ற பாடில்லை. ஆக அல்லாஹ்வும், ﷻ அல்லாஹ்வின் திருத்தூதரும் ﷺ இதற்க்கு தரும் தீர்வினை மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம்மைப்போன்ற நல்லடியார்களின் மீது தலையாக கடமையாகும்.
✍🏻 அன்புள்ளவர்களே! தலைநகர் சென்னையில் முக்கிய பகுதியில் முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு திருமண மஹாலின் வாடகை விசாரித்தேன். ₹ ரூ 60,000 என்றார்கள். ஆனால் அனைத்து செவ்வாய்கிழமைகள் மற்றும் ஸஃபர் மாதம் மட்டும் ₹ ரூ 40,000 என்றார்கள். ஏன்? என்று கேட்டபோது ஸஃபர் மாதத்திலும், செவ்வாய்கிழமைகளிலும், நம்மவர்கள் திருமணம் வைப்பதில்லை என மஹாலின் மேலாளரிடமிருந்து பதில் வந்தது.
மற்றவர்கள் ஆடி மாதத்தை பீடை மாதமாக எண்ணி அதில் நல்ல காரியங்கள் செய்வதை புறக்கணிப்பதற்கும், நம்மவர்கள் ஸஃபர் மாதத்தைப் புறக்கணிப்பதற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை.
நம்மிடமிருந்து அறியாமைக்கால (ஜாஹிலிய்யா) கலாச்சாரம் முற்றாக ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இது ஒரு பெரிய சான்றாகும். நமது பாக்கியமிக்க முன்னோர்களான நல்லோர்கள் வெற்றியின் மாதம் எனப் பெயரிட்ட மாதத்தை பீடை மாதமாகவும் , ஸஃபர் என்றால் சைபர் மாதம் என்று கருதுபவர்கள் இன்றும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். இஸ்லாம் சடங்கு, சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் ஆகிய அனைத்திற்கும் எதிரானது என்பதை எப்போதுதான் புரியப்போகிறார்களோ? என்னவோ?
- ✍🏻 ஆக நாம் இந்த ஸஃபர் மாதத்தின் சிறப்புகளை பற்றியும்,
- ஸஃபர் மாததில் நடந்த வரலாற்று முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும்,
- எல்லாம் அல்லாஹ்வினால்தான் ஆகும் என்ற அகிதாவை வலியுருத்தும் இறைவசனங்களைப் பற்றியும்,
- ஸபர் மாதம் பீடை மாதம் அல்ல என்பதைப் பற்றியும், இன்றைய இன்றைய ஜுமுஆவுடைய உரையில் முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்……!!!
✍🏻 அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நம் அனைவருக்கும் ஈமானை இழக்கின்ற இத்தகைய மூட நம்பிக்கைகளை விட்டொழித்து, நேரான பாதையில் செல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ! ஆமீன்.
- பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣
{وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3) ۞)} -[سورة العصر 103 الآية 1-3] – صدق الله العظيم
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(அல்குர்ஆன் :103:1-3)
திருமறையில் உள்ள சூராக்களில் சிறியவைகளில் ஒன்று மேலே தரப்பட்டுள்ளது. இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் ‘இந்த சூராவைத் தவிர வேறு ஒரு ஆதாரமும் அல்லாஹ்வினால் அவனது படைப்பினங்களுக்கு இறக்கப்பட வில்லையாயினும் இதுவே போதுமானதாக இருக்கும்’ என்று சொல்லும் அளவிற்கு கருத்துச் செறிவு மிக்கது.
‘மனிதன் நிச்சயமாக நஷ்டத்தில் இருக்கிறான்’ என்ற வசனத்தில் நஷ்டம் என்று குறிப்பிடப்படுவது உலக காரியங்களிலோ பொருளாதார ரீதியாகவோ ஏற்படும் இழப்பை அல்ல என்பதை நாம் தெளிவாக உணரலாம்.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (9:36) என்கிறது திருமறை.
இஸ்லாமிய மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமிய மாதங் களில் இரண்டாவது ‘ஸபர்’ மாதம் ஆகும்.
ஸபர் மாதம் ‘ஸபர் முளப்பர்’ என்ற அடைமொழி வார்த்தையுடனும் அழைக்கப்படுகிறது. அதன் பொருள்: ஸபர் ஒரு வெற்றி மாதம் என்பதாகும். ‘ஸபர்’ [صفر) என்ற அரபி வார்த்தை இரண்டு விதமாக உச்சரிக்கப்படுகிறது.
1. ஸபர் (பிரயாணம்), 2. சொபர் (காலி செய்தல்).
பண்டைய அரபிகள் இந்த மாதத்தில் வீட்டை காலி செய்து, போருக்காகவும், வியாபார நிமித்தமாகவும் பிற இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். எனவே இந்த மாதத்திற்கு பிரயாணம் செய்தல், காலி செய்தல் என்ற இருவேறு பெயர்கள் வரக்காரணமாயிற்று. வரலாற்று நெடுகிலும் ஸபர் மாதத்தில் பிரயாணங்களும், யுத்தங்களும் அதிகம் நடந்திருக்கின்றன.
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ ”.
”தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு.. [புகாரி 5707]
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
✍🏻 கண்ணியமிக்கவர்களே!இஸ்லாத்தில் இதுபோன்ற எந்த ஒரு மூடநம்பிக்கைகளும் இல்லை என்பதை நாயகத் திருமேனி ரசூலே ஸல் அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்து அந்த ஜாஹிலியா காலத்து கொள்கைகளை விட்டு மக்களை காப்பற்றினார்கள். மேலும் ஸபர் , ஷவ்வால் போன்ற மாதங்களை வெறுப்போடு பார்க்கும் குணத்தை களைய பெருமானார் எடுத்த நடவடிக்கைகள் :
ولا صفر على الصحيح أن أهل الجاهلية كانوا يتشاءمون بشهر صفر ويقولون: أنه شهر مشؤوم؛ فأبطل النبي -صلى الله عليه وسلم- ذلك، وبين أنه لا تأثير له وإنما هو كسائر الأوقات التي جعلها الله فرصة للأعمال النافعة، وهذا الاعتقاد الجاهلي لا يزال في بعض الناس إلى اليوم؛ فمنهم من يتشاءم بصفر، ومنهم من يتشاءم ببعض الأيام كيوم الأربعاء أو يوم السبت أو غيره من الأيام، فلا يتزوجون في هذه الأيام. يعتقدون أو يظنون أن الزواج فيها لا يوفق، كما كان أهل الجاهلية يتشاءمون بشهر شوال فلا يتزوجون فيه، وقد أبطل النبي -صلى الله عليه وسلم- هذا الاعتقاد؛ فتزوج عائشة -رضي الله عنها- في شوال، وتزوج أم سلمة -رضي الله عنها- في شوال.
பெருமானார் [ஸல்] அவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு நுழைந்தவர்களுக்கு மத்தியில் எழுந்த ஒரு சில மூடநம்பிக்கை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தது பற்றி:-
عَنِ الزُّهْرِيِّ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا خَرَجَ إِلَى خَيْبَرَ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى : (اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ ) وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ ” . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو وَاقِدٍ اللَّيْثِيُّ اسْمُهُ الْحَارِثُ بْنُ عَوْفٍ . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ .
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [திர்மிதி 2180]
பெருமானார் ஸல் அவர்கள் ஒரு أعرابي -யின்மூட நம்பிக்கையை கலைந்து அங்கே அல்லாஹ்வின் நம்பிக்கையை விதைத்தார்கள்:-
عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “” لاَ عَدْوَى، وَلاَ صَفَرَ، وَلاَ هَامَةَ “”. فَقَالَ أَعْرَابِيٌّ يَا رَسُولَ اللَّهِ فَمَا بَالُ الإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ، فَيُخَالِطُهَا الْبَعِيرُ الأَجْرَبُ فَيُجْرِبُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” فَمَنْ أَعْدَى الأَوَّلَ “”.
தொற்றுநோய் கிடையாது, ஸபர் பீடையும் கிடையாது, ஆந்தை சகுனமும் இல்லை- என்று சொன்னார்கள். அப்போது, கிராமவாசி ஒருவர் ‘அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவைகளின் நிலை என்ன? (தொற்று நோய் இல்லையா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படி என்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயை) தொற்றச் செய்தது யார்? என்று திருப்பிக் கேட்டார்கள். [புகாரி 5770]
மக்கள் அவர்களாகவே ஒரு சில விஷயங்களை தன் மீது விதித்து கொண்டு செய்வதை பெருமானார் ஸல் அவர்கள் தடுத்துள்ளார்கள்:
عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُوتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ. فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ، فَجَاءَتْ فَقَالَتْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ. فَقَالَ وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ هُوَ فِي كِتَابِ اللَّهِ فَقَالَتْ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُ فِيهِ مَا تَقُولُ. قَالَ لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ، أَمَا قَرَأْتِ {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا}. قَالَتْ بَلَى. قَالَ فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ. قَالَتْ فَإِنِّي أَرَى أَهْلَكَ يَفْعَلُونَهُ. قَالَ فَاذْهَبِي فَانْظُرِي. فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا، فَقَالَ لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعْتُها.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று கூறினார்கள்.6 இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி), ‘நபி( ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்’ என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!’ என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறினார்கள். [புகாரி 4886]
[ஷாபிஈ [ரஹ் ] அவர்களின் ஒரு கவிதை:- ]
نعيب زماننا والعيب فينا وما لزماننا عيب سوانا
குறையை நம்மிடம் வைத்துக்கொண்டு நாம் காலத்தை பழி கூறிக்கொண்டிருக்கிறோம். நம் காலத்திற்கு நம்மை தவிற வேறு குறை இல்லை – என்ற அவர்களின் கவிதை மூட நம்பிக்கையை குழி தோண்டி புதைக்கும் வண்ணம் உள்ளது.
ஸபர் மாதத்தை அபசகுனமாக பார்ப்பதை விட்டுவிட்டு அதை வெற்றி மாதமாக கருதி, அதில் சாதனைகளை படைக்க களத்தில் குதிப்போம். சாதனைகளை படைப்போம்!
[காலத்தை ஒரு போதும் திட்டுவது கூடாது மேலும் அது அல்லாஹ்வை குறை கூறுவதாகும்:- அது சம்மந்தமாக வருகிற ஹதீஸ்கள்:-]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: ” قَالَ اللَّهُ تَعَالَى: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ الْأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ” مُتَّفَقٌ عَلَيْهِ) رواه البخاري ومسلم
وجاء الحديث بألفاظ مختلفة منها رواية مسلم : ( قال الله عز وجل : يؤذيني ابن آدم يقول : يا خيبة الدهر ، فلا يقولن أحدكم : يا خيبة الدهر ، فإني أنا الدهر أقلب ليله ونهاره فإذا شئت قبضتهما ) ومنها رواية للإمام أحمد : ( لا تسبوا الدهر فإن الله عز وجل قال : أنا الدهر الأيام والليالي لي أجددها وأبليها وآتي بملوك بعد ملوك
இந்த ஹதீஸில் அல்லாஹ் يؤذيني என்று என்னை வேதனை படுத்துகிறார்கள் என்று சொல்வதின் விளக்கமாகிறது:- يؤذيني : أي ينسب إليَّ ما لا يليق بي . என்பதாகும்.
அல்லாஹு தஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஆதமின் மகன் என்னை நோவினைபடுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான்.ஆனால் நான்தான் காலமாக (காலத்தை உருவாக்குபவனாக) இருக்கிறேன். நான்தான் இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். (மிஷ்காத்)
تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய். 3:27.
இரவு பகல் மாறி மாறி வருவது காலத்தின் சுழற்சிக்குக் காரணமாகும். இவ்வாறு மாறி மாறி வரச் செய்பவன் அல்லாஹு தஆலாவாக இருப்பதால் காலத்தை ஏசுவதை தன்னையே ஏசுவதாக,தன்னையே நோவினை செய்வதாகக் குறிப்பிடுகின்றான்.
உண்மையில் பீடை என்பதும் துர்சகுனம் என்பதும் இறைவன் படைத்த காலத்தில் இல்லை. மாறாக நமது செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளின் காரணத்தால் காலம் நமக்கு பீடையாக, துன்பம் தரக்கூடியதாக காட்சி தருகிறது. ஆனால் மார்க்கம் காட்டும் வழியில் நமது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால் என்னாளும் நன்னாளே என்பதை உணரலாம்.
[மேலே சொன்ன மூடநம்பிக்கையான விஷயங்களை விட்டு தவிர்ந்து அல்லாஹ்வை நம்பி வாழ்வோருக்கு கிடைக்கும் பலாபலன்கள்:-]
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَامِرٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ لاَ رُقْيَةَ إِلاَّ مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ. فَذَكَرْتُهُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ فَقَالَ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ، فَجَعَلَ النَّبِيُّ وَالنَّبِيَّانِ يَمُرُّونَ مَعَهُمُ الرَّهْطُ، وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ، حَتَّى رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ، قُلْتُ مَا هَذَا أُمَّتِي هَذِهِ قِيلَ هَذَا مُوسَى وَقَوْمُهُ. قِيلَ انْظُرْ إِلَى الأُفُقِ. فَإِذَا سَوَادٌ يَمْلأُ الأُفُقَ، ثُمَّ قِيلَ لِي انْظُرْ هَا هُنَا وَهَا هُنَا فِي آفَاقِ السَّمَاءِ فَإِذَا سَوَادٌ قَدْ مَلأَ الأُفُقَ قِيلَ هَذِهِ أُمَّتُكَ وَيَدْخُلُ الْجَنَّةَ مِنْ هَؤُلاَءِ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ، ثُمَّ دَخَلَ وَلَمْ يُبَيِّنْ لَهُمْ فَأَفَاضَ الْقَوْمُ وَقَالُوا نَحْنُ الَّذِينَ آمَنَّا بِاللَّهِ، وَاتَّبَعْنَا رَسُولَهُ، فَنَحْنُ هُمْ أَوْ أَوْلاَدُنَا الَّذِينَ وُلِدُوا فِي الإِسْلاَمِ فَإِنَّا وُلِدْنَا فِي الْجَاهِلِيَّةِ. فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَخَرَجَ فَقَالَ هُمُ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَلاَ يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ”. فَقَالَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ” نَعَمْ ”. فَقَامَ آخَرُ فَقَالَ أَمِنْهُمْ أَنَا قَالَ ” سَبَقَكَ عُكَّاشَةُ ”.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, ‘அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. 28 – அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள். [புகாரி 5705]
இந்த ஹதீஸின் இறுதியில் பெருமானார் கூறும்போது :- என் உம்மத்திலிருந்து 70000 நபர்கள் கேள்வி கணக்கு இன்றி சொர்க்கம் நுழைவார்கள் என்று சொல்லி அவர்கள் யார் என்று விவரிக்கும் போது “அவர்கள் மந்திரிக்காதவர்கள்; சகுனம் பார்க்காதவர்கள்; இறைவனின்மீது முழுநம்பிக்கை வைத்து செயலாற்றுபவர்கள்۔ ” என்று சொன்னார்கள் அப்போது உக்காஷா ரலி அவர்கள் அதில் நான் இருக்கின்றேனா என்று வினவியபோது பெருமானார் அவர்கள் ஆம் என்று சொன்னார்கள் .
வல்ல ரஹ்மான் நம்மை மூட நம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி அவன் மீது முழுமையான ஈமான் வைத்து, உண்மையான ஈமானுடன் மரணிக்கும் பாக்கியத்தை அனைவர்க்கும் தந்தருள்வானாக !! ஆமீன் !
عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ أَجْرُ شَهِيدٍ. رواه الطبراني
“எனது சமுதாயம் சீர்கெட்ட நேரத்தில் எனது வழிமுறையை எவர் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்வாரோ, அவருக்கு ஷஹீதுடைய நன்மை கிடைக்கும்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தப்ரானீ, தர்ஙீப்)
[ஸபர் மாதத்தைப் பீடையாக கருதுவது மாற்றாரின் செயலாகும்:-]
✍🏻 கண்ணியமிக்கவர்களே! மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவன் கொடுத்திருக்கும் இஸ்லாம் எனும் வாழ்க்கைத் திட்டத்தையே மனிதர்களாகிய நாம் பின்பற்ற வேண்டும். இதற்கு மாற்றமாக, மனிதகளால் உருவாக்கப்பட்ட கொள்கைக் கோட்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பவர்கள் என்று எல்லா வகையான மக்களும் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட, திரிக்கப்பட்ட இடைச்செருகல் செய்யப்பட்ட சட்டங்களும் இருந்தன.
இவ்வாறான மக்களின் மூடநம்பிக்கைகள், கற்பனைகள், கட்டுக்கதைகள் நிறைந்த காரியங்கள், முஸ்லிம் சமுதாயத்தில் கலந்துவிடக் கூடாது என்பதில் நபிகளார் கவனமாக இருந்தார்கள். இஸ்லாத்தைப் போன்று அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் எப்போதும் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கும் வகையில், பல்வேறு காரியங்களில் அவர்களுக்கு மாறு செய்யும்படி கட்டளையிட்டார்கள். அவற்றை அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
✍🏻 கண்ணியமிக்கவர்களே! இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர்.
ஸபர் மாதத்தில் கல்யாணம்போன்ற நல்ல காரியங்களைத் தள்ளிவைத்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும், சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.
وَعَنْهَا قَالَتْ: تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟ . رَوَاهُ مُسلم
பீடை மாதம் என்பது கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் 2782]
ஜாஹிலிய்யா காலத்தில்வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்)அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ ”.
தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு.. [புகாரி 5707, 5717]
قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».
நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் [முஸ்லிம் 4590]
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي خُطْبَتِهِ يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ يَقُولُ ” مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلاَ هَادِيَ لَهُ إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلَّ ضَلاَلَةٍ فِي النَّارِ ” . ثُمَّ يَقُولُ ” بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ ” . وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ وَعَلاَ صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ ” صَبَّحَكُمْ مَسَّاكُمْ ” . ثُمَّ قَالَ ” مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضِيَاعًا فَإِلَىَّ أَوْ عَلَىَّ وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ ” .
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்)அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்)புதிதாகஉருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும்பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். [ நஸயீ 1578]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்டநாளாகக் கருதாமல், மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப்பெறுவோமாக!
எந்தவொரு வணக்க வழிபாடும் பிற மதத்தவரின் வணக்கத்திற்கு ஒப்பாக ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதில் அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் ஆக நமது வாழ்வில் மார்க்க செயல்களின் மீது பிற மத்தினரைப் பின்பற்றுவது போன்ற சாயல்கூடப் படிந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிற மதத்தினரின் கொள்கைகளுக்கு மாற்றமாக நடப்போமாக!
[பீடையான நம் நிலையும், ஸஹாபாக்களின் உறுதியான இறைநம்பிக்கையும்]
✍🏻 கண்ணியமிக்கவர்களே! ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.
இஸ்லாத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக அமைத்துக் கொடுத்த அண்ணலாரின் அன்புத்தோழர்களில் மிக முக்கியமானவர்கள் யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி). இந்த குடும்பமே தன் இன்னுயிரை ஈந்து இஸ்லாத்தை காத்தது.
ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் யாஸிர் (ரலி). அவர் தன் சொந்த நாட்டை விட்டு வந்து மக்காவில் குடியேறினார். அக்கால கட்டத்தில் குரைஷி குலத்தலைவர்களின் முக்கியமானவரான அபூஹுதைபா அல்மக்ஸுமி என்பவரிடம் அடைக்கலம் பெற்று மக்காவில் தங்கினார்.
அவருடைய நன்னடத்தையால் கவரப்பட்ட அபூஹுதைபா, தன் ஆளுமையின் கீழிருந்த அடிமைப்பெண்களில் ஒருவரான சுமையா என்பவரை யாஸிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இல்லறத்தை நல்லறமாய் நடத்தி வந்த தம்பதியருக்கு அம்மார் (ரலி) தவப்புதல்வராய் பிறந்தார்.
இவர்கள் மூவரும் அண்ணல் நபிகளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக்கொள்கையை ஏற்றனர். அல்லாஹ் ﷻ ஒருவனே இறைவன், அவனது தூதர் முஹம்மது நபிகள் (ஸல்) என்பதை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய வழியில் வாழ்ந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமையா (ரலி) ஆவார்.
ஏக இறைவனை ஈமான் கொண்டதால் அரேபிய குரைஷியர்களால் யாஸிர் (ரலி), சுமையா (ரலி) இருவரும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள்.
தனது பெற்றோரின் ஈமானில் எள்ளளவும் குறையாத உறுதி மிக்கவராக அம்மார் (ரலி) திகழ்ந்தார். இந்த உறுதியை குலைக்க குரைஷியர்கள் முயன்றனர். கடும் தண்டனைகளும், சித்ரவதைகளும் செய்து அம்மார் (ரலி) அவர்களை கொடுமைப்படுத்தினார்கள். அம்மார் (ரலி) அவர்களைத் தீயிலிட்டு பொசுக்கினார்கள். தீயின் கங்குகளால் உடலை சூடு வைத்து கதற வைத்தனர்.
ஒரு முறை அண்ணலார் (ஸல்) அவர்கள் அவ்வழியே செல்லும் சந்தர்ப்பத்தில் அம்மார் (ரலி) அவர்கள் படும் வேதனையை சகிக்க முடியாதவர்களாக அவர்கள் தலையை கோதி விட்டவர்களாக, “ஏ! அக்னியே அம்மாரை எரித்து விடாதே, இப்ராகிம் நபிகளுக்கு இறைவன் கட்டளைப்படி நிம்மதியூட்டும் குளிர்ச்சியாக மாறியது போல், அம்மாருக்கும் குளுமையையும் சுகத்தையும் கொடுத்து விடு” என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
ஒரு நாள் குரைஷியர்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அம்மார் (ரலி) முதுகு முழுவதும் பயங்கரமாய் சூடு போட்டனர். ரண களமான முதுகை கொதிக்கும் பாலைவன மணலில் கிடத்தி வேதனையை அதிகரிக்கச் செய்தனர். அதோடு, முதுகை உயர்த்தி விடாமல் இருப்பதற்காக சுடுகின்ற பாறை கற்களை அம்மார் (ரலி) நெஞ்சில் வைத்து சித்ரவதை செய்தனர்.
வேதனை தீரும் முன்பே அவர்களை எழுப்பி தலையை தண்ணீரில் அமுக்கி மூச்சு திணற திணற துடிதுடிக்கச் செய்தனர். அதன் பின் சவுக்கால் அடித்து துவைத்து கிட்டத்தட்ட மரணவாயிலின் அருகாமைக்கு கொண்டு சென்றனர்.
தலை முடியை பிடித்து இழுத்து இப்போதாவது, ஏக இறை கொள்கையை விட்டு விடு என்று துன்புறுத்தினார்கள். கிட்டத்தட்ட சுயநினைவை இழந்து விட்ட நிலையில், உயிர் போய் விடுமோ என்று அஞ்சிய அம்மார் (ரலி) நிராகரிப்புச் சொற்களை வாயால் கூறினார்.
இதையடுத்து குரைஷியர்கள் அவரை உயிரோடு விட்டனர்.
நிர்பந்தத்தின் காரணமாக இந்த செயலை அம்மார் (ரலி) செய்தார். ஆனால் அவரது *இதயத்தில் எந்தவித இணைவைத்தல் வேறுபாடும் இல்லாமல் அல்லாஹ் ﷻ மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.*
சிறிது நேரம் செல்ல, மெல்ல மெல்ல சுய நினைவு திரும்பியவர்களாக, உடம்பில் சிறிது தெம்பு வந்ததும், தன்னிலைக் குறித்து மிகவும் வருந்தினார்கள்.
‘உயிரை துச்சமாக மதித்து, ஏக இறைவனுக்காக தங்களது உயிரையே கொடுத்த பெற்றோருக்கு பிறந்த நான், எனது உயிரைப் பெரிதாய் எண்ணி எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டேன்’ என்று மிகவும் வருந்தினார்.
இந்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா? என்று மனம் பதைபதைத்தவர் களாக அண்ணலாரிடம் ஓடோடி சென்று நடந்ததை ஒன்று விடாமல் விவரித்துச் சொன்னார்கள்.
அம்மார் (ரலி) அவர்களை ஆறுதலாய் அரவணைத்துக் கொண்ட அண்ணலார், ‘உயிர் இறைவன் அளித்த அமானிதம். அதனைக்காப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இறைவன் விரைவில் உங்களுக்கு நிவாரணத்தை தருவான்’ என்றார்கள்.
அண்ணலாரின் கூற்றை ஆமோதிப்பது போல உடனே அல்லாஹ்விடம் இருந்து இறைச்செய்தியும் இறங்கியது.
مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْۢ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّۢ بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ
‘எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.’. (திருக்குர்ஆன் 16:106)
கலவரச் சூழலில் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளத்து நம்பிக்கையில் சிறிதளவும் சலனமில்லாமல் வாயால் மட்டும் அந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பேசுவது குற்றமல்ல என்று இந்த வசனம் பேசுகிறது.
அண்ணலார் இந்த இறைச்செய்தியை அறிவித்ததும் அம்மார் (ரலி) அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விட்டன. தன்னை இறைவன் பொருந்திக் கொண்டான். தன் பொருட்டு இறைச்செய்தியை அறிவித்து விட்டான். இப்பெரும்பேறு யாருக்கு கிடைக்கும்? என்று மனம் மகிழ்ந்தார்கள்.
ஆனால் அதன் பின் எதிர்கொண்ட எத்தனையோ வேதனைகளை துச்சமாக மதித்தார்களே ஒழிய ஈமான் இழந்து வாய்மொழியில் கூட நிராகரிப்பை சொல்லவில்லை.
காலங்கள் கடந்தன. இஸ்லாமிய சுதந்திர காற்று மக்கா முழுவதும் வியாபிக்கத் தொடங்கியது. உமர் கத்தாப் (ரலி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாமியக் கொள்கைகள் மக்கா நகர் முழுவதும் வெளிப்படையாக உலா வரத் தொடங்கியது.
அண்ணலாருக்கும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனா செல்ல வேண்டிய கட்டாயம். அம்மார் (ரலி) அவர்களும் மதீனாவில் குடியேறினார்கள்.
அதன் பின் பிரகடனப்படுத்தப்பட்ட அத்தனை போர்களிலும் முன்னிலை வீரராக பங்கேற்று மிகவும் உக்கிரமுடன் போராடினார்கள் அம்மார் (ரலி).
இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி காலத்திலும் ‘யமாமா’, பாரசீக, ரோமபுரி வல்லரசுகளுடன் தொடுக்கப்பட்ட பெரும் போர்களிலும் அம்மார் (ரலி) அவர்கள் பங்கேற்றார். பெரும் வெற்றியை ஈட்டுவதற்கு பெரும் துணையாகவும் இருந்தார்.
ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.
யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி) ஆகிய மூவருமே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மக்கள். முதன்மையாக இஸ்லாத்தை ஏற்றதும், அவர்கள் செய்த தியாகங்களும் பின்னால் வந்து இணைந்து கொண்ட மற்ற சஹாபாக்களுக்கே ஒரு பாடமாக, ஓர் அற்புதமான அத்தாட்சியாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.
[ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி மன இஷ்டப்படி இவ்வுலகில் வாழ்ந்தால்:-]
وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاء مَّنثُورًا
‘அவர்கள் செய்த அமல்களின் பக்கமாக நாம் முன்னோக்கினோம். (அவை பயனற்றதாக இருந்ததால்) அதனை பரத்தப்பட்ட பஞ்சுகளாக மாற்றினோம் (25: 23)
اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ (3)} الأعراف: 3
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7:3)
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(1) سورة الأنفال
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல்குர்ஆன் 8:1)
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ(13) سورة النساء
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)
[அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாதவனுடைய நிலை என்ன?]
✍🏻 அன்புள்ளவர்களே! இஸ்லாத்தின் அடிப்படையாக உள்ள, இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றாதவனை திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ(14) سورة النساء
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:14)
[வரலாற்று ஒளியில் ஸஃபர் மாதம்:-]
✍🏻 கண்ணியமிக்கவர்களே! ♣ இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது நாயகத்தின் ஹிஜ்ரத் பயணமாகும். இஸ்லாம் இவ்வுலகில் உறுதியாக கால் பதிக்க இறைவனின் நாட்டத்தோடு நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தே காரணம் என்றால் அது மிகையல்ல. நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் உத்தம தோழர் ஹள்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களோடு ஸஃபர் மாதம் 27 – ஆவது நாளில்தான் அத்தகைய புனிதமிக்க தியாகப் பயணமான ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
♣ முஸ்லிம்கள் மக்காவில் இருந்த வரை பொறுமையை மேற்கொள்ளுங்கள் என்பதாக அநியாயக்காரர்களுக்கு எதிராக கைகள் கட்டப்பட்டிருந்த ஸஹாபாக்களுக்கு எதிரிகளின் அத்துமீறலை தடுக்கும் புனிதப் போரான ஜிஹாத் செய்யும் அனுமதியை திருக்குர்ஆனின் 22 -வது அத்தியாயம் 39 -வது இறைவசனத்தின் மூலம் முதன் முதலில் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில்தான் அல்லாஹுதஆலா வழங்கினான்.
♣ அதே வருடம் ஸஃபர் மாதம் பன்னிரண்டாம் நாள் இஸ்லாமின் முதல் ஜிஹாத் நடைபெறவிருந்த அப்வா எனுமிடத்திற்கு முஸ்லிம்கள் சென்றார்கள். ஆனால் யுத்தம் நடைபெறவில்லை. இப்பயணத்தில் பனூ ழமிரா எனும் கூட்டத்தாருடன் நபியவர்கள் ஒப்பந்தம் செய்து மதினா திரும்பினார்கள்.
♣ நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்ததும் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான். அப்பொழுது பாத்திமா (ரலி) அவர்களுக்கு வயது 19.அலீ (ரலி) அவர்களுக்கு 24 – வயது.
♣ யமாமாவின் அதிபதி துமாமா பின் உஸால் (ரலி) (ثمامة بن اثال) அவர்கள் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஹர்ரம் அல்லது ஸஃபர் மாதத்தில் தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். துமாமா ஒரு படை நடவடிக்கையில் கைதியாக பிடிக்கப்பட்டார்கள். அவர் மதீனாவுக்கு கொண்டு வரப்பட்டு மஸ்ஜிதுந்நபவீயின் தூணில் கட்டிவைக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை அவிழ்த்து விடுமாறு உத்தரவிட்டார்கள். துமாமா (ரலி) அவர்கள் விடுதலையாகிச் சென்று குளித்துவிட்டு மீண்டும் நபியவர்களிடம் வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
♣ ஹிஜ்ரி 7 – ஆம் ஆண்டு முஹர்ரம் ஸஃபர் மாதத்திற்கிடையில் ஏமனிலிருந்து (دوس) தூஸ் கபீலாவினர் நபியவர்களிடம் வந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே! இந்த சந்திப்பின் மூலம்70 அல்லது 80 (دوس) தூஸ் குடும்பத்தைச் சார்ந்த 400 – பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
♣ ஹிஜ்ரி 8 – ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் அம்ர் பின் ஆஸ் (ரலி) காலித் பின் வலீத் (ரலி) உதுமான் பின் அபீதல்ஹா (ரலி) ஆகியோர் மதீனா வந்து நபியவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
♣ ஹிஜ்ரி 9 – ஆம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் ஏமனில் இருந்து பனு உத்ரா என்ற கோத்திரத்தைச் சார்ந்த 12 -பேர் கொண்ட ஒரு குழு வந்தது. இக்குழுவினர் அனைவரும் நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு திரும்பினர். (நூல்: முஃமின்கே மாஹோஸால்)
♣ மதினாவிலிருந்து எட்டு நாள் தொலைதூரத்தில் உள்ள பலமான கோட்டை நகரம் கைபர். அங்கு வசித்து வந்த யூதர்கள் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்ததார்கள். ஆகையால் ஹிஜ்ரி 7 -ல் முஹர்ரம் மாதத்தின் இறுதியில் நாயகம் (ஸல்) அவர்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டார்கள். நீண்ட முற்றுகைக்குப் பிறகு ஸஃபர் மாதத்தில் கோட்டை வெற்றிகொள்ளப்பட்டது.
♣ அதே வருடத்தின் ஸஃபர் மாதத்தில்தான் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையேயுள்ள “வாதியே குரா ” எனும் ஊரில் உள்ள யூதர்களின் சூழ்ச்சியை முறியடிப்பதற்காக அவர்களை எதிர்த்து வெற்றி கண்டு பெரும் கனீமத் பொருட்களுடன் நாயகமும், அவர்களின் தோழர்களும் வெற்றி வீரர்களாக மதினா திரும்பினார்கள்.
♣ ஹிஜ்ரி 5 – ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் (கி.பி 626 ஜுன்) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். (முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்)
♣ ஹிஜ்ரி 7 -ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். கைபர் யுத்தத்தில ஸபிய்யா கைதியாக பிடிக்கப்பட்டார். தலைவரின் மகளாக இருந்ததால் யூதர்கள் மணமகிழ்ந்து இஸ்லாத்தை தழுவலாம் அல்லது முஸ்லிம்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளலாம்,என்பதற்காக திருமணம் செய்து கொண்டார்கள்..
♣ அதே வருடத்தில் ஸஃபர் மாதத்தில்தான் (دوس) தவ்ஸ் கூட்டத்தை சேர்ந்த சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமில் இணைந்தார்கள். அதிகமான நபிமொழிகளை அறிவித்துள்ள ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த (دوس) தவ்ஸ் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
[நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாது:-]
✍🏻 கண்ணியமிக்கவர்களே! ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான் அப்வா அல்லது வத்தான் யுத்தத்திற்காக நபியவர்கள் புறப்பட்டார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவர்களை எதிர்கொள்வதற்காக நபியவர்கள் 60 – முஹாஜிரீன்களுடன் சென்றார்கள். இதில் அன்ஸாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுவே நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாதாகும். சண்டை எதுவும் நடக்கவில்லை. எதிரிகள் தப்பித்துவிட்டனர். எனினும் இந்த பயணத்தில் பனூளம்ரா என்ற கோத்திரத்தாருடன் நபியவர்கள் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
ஹிஜ்ரி 7 – ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் வாதில் குரா யுத்தம் நடந்தது. கைபர் யுத்தம் முடிந்து திரும்பும் போது இவர்களுடைய கோட்டை முற்றுகையிடப்பட்டது. இங்கும் இஸ்லாத்தை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்த யூதர்கள் இருந்தனர். நான்கு நாள் முற்றுகைக்குப் பின் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.
[மாற்றம் மலரட்டும்:-]
✍🏻 கண்ணியமிக்கவர்களே! இப்படி வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் ஸஃபர் மாதத்தில் அனுப்பப்பட்ட படைகள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி வாகை சூடியதால் அம்மாதத்திற்கே வெற்றியின் மாதம் என பெயரிடப்பட்டது.
நாயகம் (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் திருமணம் செய்திருக்கிறார்கள். தங்களது அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
எத்தனையே நபர்கள் அம்மாதத்தில் இஸ்லாமை ஏற்று வரலாற்று ஏடுகளில் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஸஃபர் மாதம் துற்மாதமாக இருந்திருந்தால் நாயகம் (ஸல்) அவர்களும்,அவர்களின் தோழர்களும் எந்த காரியத்தையும் அம்மாத்தில் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் மேற்கண்ட நிகழ்வுகளை கண்ணுறும்போது ஸஃபர் பீடை மாதம் அல்ல. அது வெற்றியின் மாதம் என்பது தெளிவாகிறது.
இதற்குப் பிறகும் ஸஃபர் மாதம் பீடை என்று கூறுபவர்கள் மாற்று மத கலாச்சாரத்திற்கு அடிபணிந்துவிட்டார்கள் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.
ஸஃபர் மாதத்தை தரித்திரமாக கருதுவோர் நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் தான் நோய்வாய்ப்பட்டார்கள் என்பதாக அதற்குக் காரணம் கூறுகிறார்கள். குறிப்பாக அம்மாதத்தின் கடைசி புதன் கிழமை நபியவர்களுக்கு தலைவலி ஏற்பட்டு அதன் முடிவில் ரபீவுல் அவ்வல் மாதம் பிறை 12 -ல் மரணித்தார்கள் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையை ஒடுக்கத்து புதன் என்று அதை ஒதுக்குவதுவம், அந்நாளில் தான் எல்லா முஸீபத்துகளும் உலகிற்கு இறங்குகிறது என்று கருதுவதும், அதை தடுக்கிறோம் என்ற பெயரில் மார்க்கம் கற்றுத்தராத பல்வேறு நூதன அனுஷ்டானங்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வதும் எப்படி மார்க்கமாக இருக்க முடியும் ?
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட நாளும், மாதம் தரித்திரம் என்றால் ஈருலகிற்கும் அருட்கொடையாக வந்துதித்த நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரிந்த ரபீவுல் அவ்வல் மாதமும், பிறை 12 -ம் நாளும் அதைவிட தரித்திரமும், பீடையும் நிறைந்ததா? நஊது பில்லாஹ் ! அல்லாஹ் ﷻ நம்மைக் காப்பானாக !
இதற்கு மேலும் உண்மையை உணர்ந்து மூடப்பழக்க வழக்கங்களை விட்டொழிக்க மனமில்லாதவர்கள் பின் வரும் இறைவனின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளட்டும்!.
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ
இறைநம்பிக்கையாளர்களே ! நீங்கள் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான்…
فَاِنْ زَلَـلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ
எனவே தெளிவான ஆதாரங்கள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் (அறியாமைக் கால பழக்கவழக்கங்களைப் பிடித்துக்கொண்டு சத்திய வழியிலிருந்து) சருகிவிடுவீர்களானால் (உங்களை தண்டிப்பதில்) அல்லாஹ் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 208,209]
【 சபதம் எடுங்கள்…】
✍🏻 கண்ணியமிக்கவர்களே! இன்ஷா அல்லாஹ் ﷻ இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும் ஸஃபர் மாதத்தை பீடையாக கருத மாட்டேன். எல்லா காலங்களிலும் ஒரே போல் அமல்செய்யுவேன் . என்று..
அல்லாஹ் ﷻ அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன். وآخر دعوانا أن الحمد لله رب العالمين
✍🏻✍🏻 நன்றியுரை :– ✍🏻✍🏻
எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் ﷻ இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் ﷻ மிக்க அறிந்தவன்.