திபாவளி நம்மிடம் பேசுகிறது 10-11-2023, 1-11-2024 17-10-2025
திபாவளி நம்மிடம் பேசுகிறது…
أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹 🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ الله ﷺ 🌹
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை வரவேற்க நம் இந்து சமய சகோதரர்கள் மட்டும் அல்லாது கிறிஸ்தவ சமய சகோதரர்களும் மேலும் மற்றய சமூகத்து மக்களும் தயாராகின்றனர் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய சமூகமும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?.
இவ்வுலகில்
- நன்மை ❈ தீமை
- நல்லவர் ❈ கெட்டவர்
- மேடு ❈ பள்ளம்
- கீழே ❈ மேலே
என ஒவ்வொன்றிற்க்கும் எதிர்மறை இருப்பது போல
- நல்ல [நன்மை] பண்டிகைகள் ❈ தீய [பாவ] பண்டிகைகள் என்பதிலும் எதிர்மறை இருக்கின்றன.
- எப்படி நல்லவர்களை / நன்மையானவைகளை பார்த்தால் நன்மை செய்வோமோ? அது போல நாம் நல்ல [நன்மை] பண்டிகைகளை கொண்டாட வேண்டும். [உதாரணம் : இரு பெருநாட்கள்]
- எப்படி தீமைகளை / தீமையானவர்களை கண்டு ஒதுங்குவோமோ ? அது போல நாம் தீய [பாவ] பண்டிகைகளை விட்டும் வெறுத்து ஒதுங்க வேண்டும். அதுதான் நமக்கும், நம் குடும்பத்திற்க்கும், நம் மார்கத்திற்க்கும் நாம் கொடுக்கும் மரியாதையும் , கண்ணியமும் ஆகும்.
‘நாம் வருடா வருடம் தீபாவளி கொண்டாடக்கூடாதென எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும், அத்தீமை நின்ற பாடில்லை மக்கள் அதை விட்டபாடில்லை.
- ஆசைக்குதானே ஒரே ஒரு பொட்டு பட்டாசை வெடித்து வடுகிறேன்.
- சின்னப்புள்ளதான பட்டாசு வெடிக்கட்டும்.
- ஓசி வெடிதானே வேஷ்டா போகும் . என இப்படி சின்ன.. சின்ன… காரணங்களைச் சொல்லி.. சொல்லி..
- நாம் பட்டசை வெடிப்போம். சின்ன இன்பத்திற்க்கு பதிலாக நாளை நம் விலை மதிப்பில்லா ஈமானையும், இறையன்பையும் இழந்து விடுகிறோம்.
✍🏻 ஆக இன்றைய தினத்தில் இது பற்றி நாம் சற்று விபரமாக தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்
தீபாவளிவுடைய நாளில்
✍🏻 ஒரு முஃமீன் எப்படி நடந்து கொள்வார்?
✍🏻 ஒரு முஃமீன் எப்படி நடந்து கொள்ளமாட்டார்?
✍🏻 ஒரு முஃமீன் எப்படி மக்களை அத்தீமையிலிருந்து பாதுகாக்க பாடுபடுவார்?
✍🏻 தீமையான பண்டிகைகள் சம்பந்தமாக அண்ணல் நபி ﷺ அவர்களின் எச்சரிக்கைகளைப் பற்றியும்,
✍🏻 வீண்விரயம் சம்பந்தமாக வரும் இறைமொழி & நபிமொழிகள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
✍ அல்லாஹு சுப்ஹானஹுத் தஆலா தீபாவளி எனும் “தீமை”ப் பண்டிகையை விட்டும் நம்மையும், நம் குடும்பத்தையும், நம் சமுதாயத்தையும் பாதுகாத்து அருள்புரிவானாக! ஆமீன்.
- பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள் .அல்குர்ஆன் 25:67
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ : رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.அபூதாவூத் 4606,
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
【தீபாவளி நம்மிடம் பேசுகிறது…】
தீபாவளி பண்டிகை முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், சில செய்திகளை சொல்லி விட்டு சொன்றுள்ளது அவற்றை சற்று விரிவாக பார்போமா! வாருங்கள்…..
நான் தான் தீபாவளி
| நான் பிறந்த இடம் அயோத்தி என் மூலம் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நான் ஒரே நாளில்தான் வருவேன். வந்தால் உங்களின் பணம், நேரம், அமல்கள் என எல்லாவற்றையும் அழித்து விடுவேன். மற்ற நாட்களில் [எனது நண்பன்] ஷைத்தான் உங்களை பாவத்தில் ஈடுபடுத்த கஷ்டப்படுவான். ஆனால் தீபாவளியன்றோ நீங்களாகவே சந்தோஷமாக, துணிந்து பாவம் செய்வீர்கள். அன்று [எனது நண்பன்] ஷைத்தானுக்கு முழு நேரம் ஓய்வு தான். தீபாவளியான என்னை கொண்டாடினால்.. இறையன்பையும், இறைத்தூதரின் அன்பையும் இழப்பீர்கள் + அவர்களின் கோபத்தையும் பெறுவீர்கள். 6 என்னை தடுக்காவிட்டால்… ஓவ்வொரு வருடமும் வருவேன். நீங்கள் கஷ்டப்பட்டு சேகரித்த உங்களின் பணம், நேரம், அமல்கள் எல்லாத்தையும் ஒன்று விடாமல் அழித்து விடுவேன். 7 எனக்கு ஆச்சரியமாக இருக்கும் விஷயம் என்னவென்றால் நோயாளிகளை,முதியோர்களை குழந்தைகளை கஷ்டப்படுத்த வருகிற என்னைபோய் நீங்கள் புத்தாடை, பலகாரங்கள் வானவேடிக்கைகளை கொண்டு வரவேற்கிரீர்களே. அதை நினைத்தால் .. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது |
【தீபாவளிவுடைய நாளில் ஒரு முஃமீன் எப்படி நடந்து கொள்வார்? 】
அண்ணல் நபி ﷺ அவர்களின் வாழ்வில் எத்தனையோ படிப்பினைகள் அடங்கியிருக்கின்றன. அவர்களைவிடச் சிறந்த முன் மாதிரி வேறு யாரும் இருக்க முடியாது.
நபி சொன்ன, வாழ்ந்த வாழ்க்கையின் பிரகாரம் நாம் வாழ முயற்சிக்க வேண்டும். நபி சொல்லாத வாழ்க்கையை , சந்தோஷத்தை புறந்தள்ளி விட வேண்டும்.
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ
ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்”(திர்மிதீ 2317]
மேற்கூறிய ஹதிசை ஆராயும் போது தீபாவளி பண்டிகை நம் இஸ்லாமியர் வாழ்விற்க்கு தேவையற்றது , அதை விட்டும் தவிர்ந்திருத்தல் மிக சிறப்பானதாகும்.
இந்த ஹதீஸின் கருத்து, தீபாவளி பண்டிகை நாளில் வீணான செயல்களைவிட்டு விலகியிருப்பதும், ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளமாகும். அச்செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பது ஒருவரிடமுள்ள இஸ்லாத்திற்கு அழகும், பொலிவுமாகும் என்பதாம்.
وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ ۛۚ وَاَحْسِنُوْا ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். {அல்குர்ஆன் 2:195..}
وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ{ உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் } என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து என்னவென்றால் இது போன்ற
வெடி வெடித்தல், வெடி வெடிக்க துணை போதல் உதவி செய்தல் . Etc……. இவையெல்லாம் உலக வாழ்வில் நாம் நம் கையால் அழிவை தேடும் காரணிகளாகும்.
وَاَحْسِنُوْا என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து அர்த்தம் என்னவென்றால்:
மேற் சொன்ன விஷயங்களை தவிர்தாலே நன்மை செய்வோராக ஆகலாம். இன்ஷா அல்லாஹ்.
【தீபாவளிவுடைய நாளில் ஒரு முஃமீன் எப்படி நடந்து கொள்ளமாட்டார்? 】
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் வெறுக்கும் செயலில அப்படி என்ன நமக்கு சந்தோஷம் இருக்கிறது?
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொல்லாத செயலில் அப்படி என்ன நமக்கு சந்தோஷம் இருக்கிறது ? இப்படி செய்தால் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரின் பொருத்தமும் நமக்கு கிடைக்குமா?
நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட காத்திருக்கும் நம் சகோதர, சகோதரிகளுக்கு, ஸஹாபாக்கள் எப்படியெல்லாம் தீய பாவத்தை விட்டும் ஒதுங்கி நின்றார்கள் / எப்படியெல்லாம் தீய பாவத்தை வெறுத்தார்கள் என்பதனை ஸஹாபாக்களோடு.. நம்மை ஒப்பீடு செய்து பார்ப்போம் வாருங்கள்……
ஸஹாபாக்கள் வணக்க வழிபாடுகள்….
1 சஹாபாக்கள் சின்ன சின்ன நஃபிலான வணக்கங்களின் மூலம் கூடுதல் நன்மைகளை பெற்று இறை நேசத்தையும் அதிக தரஜாக்களையும் பெற்றார்கள்.
ஆனால் நாம் சின்ன சின்ன பாவங்களின் மூலம் கூடுதல் தீமைகளை பெற்று இறைசாபத்தை பெற்றுவருகிறோம்.
2 சஹாபாக்கள் போட்டி போட்டு அமல் செய்வார்கள். நாம் போட்டி போட்டு பாவக்கடலிலே மூழ்கி கிடக்கிறோம்.
3 சஹாபாக்கள் ஒரு சிறு அமலும் விடுபடாமல் 100- க்கு 100 பேணுதாலாக அமல் செய்வார்கள்.
சிறு பாவத்திலும் கொஞ்சமும் தீமை விடுபடாமல் 100- க்கு 100 சதவீத தீமை செய்கிறோம்.
4 சஹாபாக்கள் ஆகா… இவர் இப்படி அமல் செய்கிறாரே இவர் நம்மை விட நன்மையில் முந்திவிடுவாரோ… [என்று தேட்டம் இருந்தது ] இவன் மட்டும் பாவம் செய்யுரான். நான் செய்தால் தவறா என்னை மட்டும் குறை கூறுகிறீர்கள் நானும் பாவம் செய்யுவேன். [என்று மிக அலட்சியமாக பதில் கூறக்கூடிய நிகழ்வுகளை பார்க்கிறோம்]
5 சஹாபாக்கள் ஆகா… ஒரு சின்ன தப்பு பண்ணிவிட்டோமே இதன் மூலம் நம்முடைய நல் அமல்கள் அழிந்துவிடுமோ. [என்ற பயம் அவர்கள் இடம் இருந்தது ] இது சின்ன தப்புதானே இது நம்மள என்ன செஞ்சிட போகுது அப்பரம் பாத்துகிடலாம்…. [பயமே இல்லை ]
6 சஹாபாக்கள் பாவம் செய்ய எண்ணம் வந்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள்
ஆனால் நாம் பாவம் செய்ய எண்ணம் வந்தால் அதனை ஆசையோடு துணிந்து செய்கிறோம்.
7 சஹாபாக்கள் தமது சொத்து, சுகம், ஆசையை விடவும், நாயகத்தை நேசித்தார்கள்…
ஆனால் நாம் நமது சொத்து, சுகம், ஆசையை பாவத்தில் செலவளித்து நாயகம் நம்மை வெறுக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறோம்.
8 இந்த அலங்கார உலகத்திலே தன் நஃப்ஸை கட்டுப்படுத்த சிரமமாக இருக்கும் ஆனால் அதற்க்கும் பரிசாக சுவனம் கிடைக்கும்
தீபாவளி பண்டிகை பார்பதற்க்கு கண்குளிர்சியாக இருக்கும் ஆனால் தன் நஃப்ஸை கட்டுப்படுத்தவில்லையெனில் அதற்க்கு பரிசாக நரகம் கிடைக்கும்
9 சஹாபாக்கள் காலத்தில் மது ஹரமானதும் மது ஆறு தெருவில் ஓடியது, வட்டி ஹரமானதும் அவ்வட்டிதள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் வீண் விரயம் ஹராம் என தெறிந்திருந்தும் அதனை மிக சர்வ சாதாரணமாக செய்து வருகிறோம்.
10 சஹாபாக்கள் அல்லாஹ்வின் அன்பை குறைக்கும் எந்த ஒரு சிறு தீமையும் செய்யவில்லை அந்த ஆசையுமில்லை. நம் ஆசையும் சந்தோஷமும் பாவம் செய்வதிலும் அல்லாஹ்வின் அருளை இழப்பதிலும் தான் உள்ளது..
11 ஷைத்தான் ஸஹாபாக்களை பார்த்தால் பயப்படுவான். நம்மை பார்த்தால் தோழமை கொள்கிறான்.
ஆக நாம் நம் ஆசையை, நஃப்ஸை கட்டுப்படுத்தி, ஸஹாபாக்களை போல பேணுதலாக வாழுவோமாக!
【தீபாவளிவுடைய நாளில் ஒரு முஃமீன் எப்படி மக்களை அத்தீமையிலிருந்து பாதுகாக்க பாடுபடுவார்? 】
நாம் தீமை நிறைந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும், நம் சிறார்களையும் அத்தீமையிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் நாம் தாம் அதற்க்கு பொருப்பாளி. இது தொடர்பாக மறுமையில் விசாரிக்கப்படுவோம்.
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ۞). (المؤمنون:٣
இன்னும் அவர்கள் வீணானவற்றைப் புறக்கணித்து இருக்கிறவர்கள் (அல்முஃமினூன்:3)
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ لاَ يَشْهَدُوْنَ الزُّوْرَ وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّواْ كِرَامًا۞). (الفرقان:٧٢
இன்னும் அவர்கள் எத்தகையோறென்றால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; வீணான(விஷயத்தின்) பக்கம் அவர்கள் நடந்து சென்றால் கண்ணியமானவர்களாக (அதை விட்டும் ஒதுங்கிச்) செல்வார்கள் (அல்ஃபுர்கான்:72)
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ مَنْ رَأَى مُنْكَرًا فَاسْتَطَاعَ أَنْ يُغَيِّرَهُ بِيَدِهِ فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْفَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ” .
உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால்
தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும். திர்மிதி (2173),
【தீபாவளி பிற சமுதாயக் கலாச்சாரம்…】
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் முஸ்லிம்களில் பலர் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த தீபாவளி பண்டிகையை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை / கொண்டாட்டம் பிற மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதை நாம் கொண்டாடக் கூடாது.
ஒரு உண்மையான முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.
«عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ” .
ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார்.( அபூதாவூத் 1514 , 4031)
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?
【தீபாவளி நமக்கல்ல..】
நம்முடைய மாற்று மத சகோதரர்கள் தீபாவளிக் கொண்டாட்ட்த்திற்காக தயாராகி வருகிறார்கள்.
பட்டாசு வெடிப்பப்து வாணவேடிக்கைகள் செய்வது அவர்களது கொண்டாட்டம். அது அவர்கள் வணக்கம்.
உலகில் சிலை வணக்கம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கேலிக் கூத்துக்கள் நடந்ததும்- நடப்பதும் வாடிக்கை. ஆபாசம், ஆட்டம் பாட்டம், தேவையன்றி சப்தமெழுப்ப இசைக்கருவிகள் பயன் படுத்தி வாணவேடிக்கைகள் செய்தல் பணத்தை ஒரு பயனும் இல்லாத வழிகளில் செலவழித்தல் இவை அனைத்தும் சிலை வணக்கத்தின் ஒரு பகுதியே ஆகும்!.
திருக்குர்ஆன் சொல்வது போல எந்த ஆதரமும் இன்றி செய்யப்படும் இது போன்ற நடவடிக்கைகள் சிலை வணக்கத்திற்கு மக்களை தூண்டும் ஷைத்தான் அழகுபடுத்திக் காட்டும் நடவடிக்கைகளாகும்.
இத்தகைய திருவிழாக்கள் பன்டிகைகளைக் கண்டு மனதில் வெருப்பு கொள்வதும் விலகி நிற்பதும் ஈமானிய குணமாகும்.
நமது ஈமான் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
ஓரிறைக்கொள்கையை ஆனித் தனமாக எடுத்துரைத்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்களின் முன்னிலையில் தன்னுடைய ஈமானை இப்படிப் பிரகடணப்படுத்தினார்கள்.
إِنِّي وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ
ஷாபி மத்ஹபில் தொழுக்க்கு தக்பீர் கட்டியவுடன் இது ஓதப்படுகிறது. தொழுகையை தொடங்குவதற்கு முன் அல்லாஹ்விற்கு அடியார்கள் கொடுக்கிற உறுதிமொழியாக இது அமைந்திருக்கிறது.
குர்பானி கொடுப்பதற்கு முன்னதாக இதை ஓதுகிறோம்,
இந்த வாசகத்தில் உள்ள ஹனீபன் என்ற வாசகம் மிக முக்கிய கவனத்திற்குரியது.
அசத்தியமான அனைத்து வழிகளை விட்டு விலகி சத்தியமான வழியின் பால் முழுச் சார்பு கொண்டவனாக அல்லாஹ்வை வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும்.
வஜ்ஜஹத்துவில் இடம் பெற்றுள்ள இரண்டு வாசகங்கள் ஹனீபன் என்பதன் பொருளை விளக்குகின்றன,
- وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ
- وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
இஸ்லாம் முஸ்லிம்களிடம் இரண்டு அம்சங்களை எதிர்பார்க்கிறது
- அவர்கள் முஸ்லிம்களாக நடக்க வேண்டும்
- அவர்களிடம் முஷ்ரிகின் அம்சங்கள் இருக்க கூடாது.
முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு உன்னதமான உயர்வான – இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகிற ஒரு தூய சமூகத்தை உருவாக்க நினைத்தார்கள். அந்த சமூகத்தில் பிற மதங்களின் அர்த்தமற்ற இறை விருப்பத்திற்கு மாறான கோட்பாடுகள் அனைத்திலிருந்தும் தன்னுடைய சமுதாயம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று விரும்பினார்கள் வலியுறுத்தினார்கள்
عن المسور بن مخرمة رضي الله عنهما، أن رسول الله صلى الله عليه وسلم قال: هدينا مخالف لهديهم يعني: المشركين.- حاكم
வணக்க வழிபாடுகளில் தொடங்கி தாடி மீசை வைப்பதில் தொடர்ந்து ஆடை அணிவது வரை அனைத்து விஷயங்களிலும் காஃபிர்கள் முஷ்ரிக்குகளின் அடையாளங்களை விட்டு விலகி இருக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும் என வலியுறுத்தினார்கள்.
உதாரணமாக நிறைய விஷயங்களை சுட்டிக் காட்ட முடியும்
முஹர்ரம் 9 ம் நாளில் நோன்பு பிடிக்க பெருமானார் (ஸல்) சொன்னது யூதர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக!
روى عبد الله بن عباس رضي الله عنهما قال : حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا : يا رسول الله، إنه يوم تعظمه اليهود والنصارى، فقال رسول الله صلى الله عليه وسلم : “فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع” . قال : فلم يأتِ العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم
நரை முடிக்கு சாயம் பூச பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதும் யஹூதிகளுக்கு. மாற்றமாக செயல் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே!
ففي الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: ((أن اليهود والنصارى لا يصبغون فخالفوهم
عن أبي أمامة رضي الله عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم على مشيخة من الأنصار بيض لحاهم فقال: يا معشر الأنصار، حمروا وصفروا، وخالفوا أهل الكتاب فقلنا: يا رسول الله، إن أهل الكتاب يتسرولون ولا يتزرون، فقال: تسرولوا واتزروا، وخالفوا أهل الكتاب- رواه أحمد
இந்த நபிமொழியில் யூதர்கள் சுர்வால் – பேண்ட் – மட்டுமே அணிகிறார்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றமாக பேண்டும் அணியுங்கள், வேட்டியும் கட்டுங்கள் என்ற அறிவுரையும் சேர்ந்திருக்கிறது.
செருப்புடனும் மோஜாவுடனும் தொழலாம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதித்ததும் யஹூதிகளுக்கு மாற்றமாக செயல் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே!
وفي سنن أبي داوود والحاكم من حديث شداد ابن أوس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: ((خالفوا اليهود والنصارى فإنهم لا يصلون في نعالهم ولا خفافهم))
மீசைய கத்தரித்து தாடியை வளர்க்க பெருமானார் சொல்லும் போதும் இந்த யஹூதிகளுக்கு மாற்றமாக செயல் பட வேண்டும் என்ற அடிப்படையில் சொன்னார்கள்.
عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: خالفوا المشركين، وفروا اللحى وأحفوا الشوارب .
மாதவிடாய் பெண்ணுடன் பரிமாறும் விஷயத்திலும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய பெறுமானார் கூறினார்கள். அது யூதர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
فعن أَنسٍ رضي الله عنه : ( أَنَّ اليهُودَ كَانُوا إذا حَاضَتْ المرأَةُ فيهِمْ لم يُؤَاكِلُوهَا ولم يُجَامِعُوهُنَّ في البيُوتِ , فَسأَلَ أصحَابُ النبيِّ صلى الله عليه وسلم النبيَّ صلى الله عليه وسلم فَأنزلَ الله تَعَالَى : {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُواْ النِّسَاء فِي الْمَحِيضِ }إلى آخرِ الآيةِ , فقالَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم : اصنَعُوا كُلَّ شَيْءٍ إلاَّ النِّكَاحَ , فَبَلَغَ ذلك اليَهُودَ , فَقَالُوا : ما يُرِيدُ هذا الرَّجُلُ أَن يَدَعَ من أَمْرِنَا شيئاً إلاَّ خَالَفَنَا فيه )
தொழுகைக்கான அழைப்பில் யூத கிருத்துவர்களின் வழியை பின்பற்ற பெருமானார் விரும்பவில்லை
فعن ابن عُمَرَ : ( كان الْمُسلمُونَ حين قَدِمُوا الْمَدينَةَ يَجتَمِعُونَ فَيَتَحَـيَّـنُونَ الصَّلاةَ ليس يُنَادَى لها , فَتَكَلَّمُوا يَوْماً في ذلك , فقال بَعْضُهُمْ : اتَّخِذُوا نَاقُوساً مِثلَ ناقُوسِ النَّصَارَى , وقال بَعْضُهُمْ : بَلْ بُوقاً مِثْلَ قَرْنِ اليهُودِ , فقال عُمَرُ : أَولا تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بالصَّلاةِ ؟ فقال رسول اللَّهِ صلى الله عليه وسلم : يا بلالُ قُمْ فَنَادِ بالصَّلاةِ
பிற மதத்தவர்களின் வழிபாட்டுக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதற்காகவே சூரியன் உதிக்கிற மறைகிற நேரங்களில் தொழுவதை பெருமானார் தடுத்தார்கள்.
ونهى صلى الله عليه وسلم عن الصلاة وقت طلوع الشمس ووقت غروبها حسماً لمادة المشابهة للكفار ,
சஹர் சாப்பாட்டை வலியுறுத்தியதிலும் இதே மாற்றத்திற்காக வலியுறுத்தப்பட்டது.
ورغَّب صلى الله عليه وسلم في أكلة السَّحَرِ مُخالفةً لليهود والنصارى , فقال صلى الله عليه وسلم : ( فَصْلُ ما بينَ صيَامِنَا وصيَامِ أَهلِ الْكِتَابِ أَكلَةُ السَّحَرِ رواه الإمام مسلم 1096.
பிறமத்தவரின் சமய நடவடிக்கைகளை முஸ்லிம் கள் பின்பற்றக் கூடாது என்று பெருமானார் கடுமையாக எச்சரித்தார்கள்
عن عبد الله بن عمر رضي الله عنهما، قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم – سنن أبي داود – صححه ابن حبان. عن عبد الله بن عمرو رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم قال: ليس منا من تشبه بغيرنا، لا تشبهوا باليهود ولا بالنصارى – الترمذي
பிற நாடுகள் வெற்றி கொள்ளப்படும் போது அங்குள்ள சமய அடையாளங்கள் முஸ்லிம்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் உமர் ரலி எச்சரிக்கையாக இருந்தார்கள்.
عن عمر بن الخطاب رضي الله عنه أنه كتب إلى المسلمين المقيمين ببلاد فارس: (إياكم والتنعم وزي أهل الشرك
முஸ்லிம்கள் தங்களுடைய எந்த ஆவலை பூர்த்தி செய்யும் போதும் அதில் பிற மதக்கலப்புக்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்
فعن ثابت بن الضحاك رضي الله عنه قال : ( نَذرَ رَجُلٌ على عَهْدِ النبيِّ صلى الله عليه وسلم أن يَنحَرَ إِبلاً ببُوَانةَ ([81]) , فأَتَى النبيَّ صلى الله عليه وسلم فقالَ : إنِّي نَذرْتُ أنْ أنحَرَ إبلاً ببُوَانةَ , فقال النبيُّ صلى الله عليه وسلم : هَلْ كانَ فيها وثنٌ مِنْ أوثانِ الجاهليةِ يُعبَدُ ؟ قالوا : لا , قال : هلْ كانَ فيها عيدٌ مِنْ أعيادِهم ؟ قالوا : لا , قال النبيُّ صلى الله عليه وسلم : أَوْفِ بنَذرِكَ , فإنه لا وَفَاءَ لنذرٍ في معصية الله , ولا فيما لا يَملِكُ ابنُ آدَمَ رواه أبو داود ح3313 قال العلاَّمة علي القاري : ( وهذا كلُّه احترازٌ من التشبُّه بالكفَّار في أفعالهم )
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அறியாமைக் கால சமய நடைமுறைகளை கடை பிடிப்பதை பெருமானார் வன்மையாக கண்டித்தார்கள்
عن ابن عباس رضي الله عنهما أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال : ( أَبغضُ الناسِ إلى الله ثلاثةٌ : مُلْحِدٌ فِي الْحَرَمِ , ومُبْتَغٍ فِي الإسلامِ سُنَّةَ الجاهليةِ , وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بغيرِ حَقٍّ لِيُهْرِيقَ دَمَهُ – رواه البخاري 6882
பிற மத்த்தவரின் சமயத்திருவிழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதே : {وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ என்பதின் பொருள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்
: {وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَاماً }. قال بعضُ السلف : كابن عباس رضي الله تعالى عنهما, وأبو العالية , والضحاك بن مزاحم الهلالي, ومجاهد ت , وطاووس بن كيسان, ومحمد بن سيرين , والربيع بن أنس , وعبد الملك بن حبيب, وأحمد بن حنبل, وغيرهم : أنَّ المرادَ بالزور في هذه الآية : أعياد المشركين .
பிற மத்த்தவர்களின் திருவிழாக் காலங்களில் அவர்களுடைய சடங்குகளில் பங்கேற்பது அல்லாஹ்வுடைய கோபத்திற்கு காரணமாகி விடும் என்று உமர் (ரலி) எச்சரித்துள்ளார்கள்
قال عمر بن الخطاب رضي الله عنه : ( .. ولا تدخلوا على المشركينَ فِي كنائسهم يومَ عيدهم , فإنَّ السُّخطَةَ تَنْزِلُ عليهم – البيهقي في الكبرى
இந்தியா போன்ற பன்முக சமய நம்பிக்கைகளை கொண்ட நாட்டில் வாழ்கிற முஸ்லிம்கள் மார்க்கத்தின் இந்த அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். இல்லை எனில் நமது இஸ்லாமிய வாழ்வு கேள்விக்குறியதாகிவிடும்,
ஒரு பட்டாசு வெடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? என்று அலட்சியமாக கேட்பது இஸ்லாத்தின் நாடித்துடிப்பை புரிந்து கொள்ளாத கேள்வியாகவே அமையும். இஸ்லாமிய வாழ்வில் அக்கறை கொள்ளாத தன்மையாகிவிடும் (அல்லாஹ் நம்மை காப்பானாக!)
குழந்தைகளுக்காக எந்த சமாதானமும் ஏற்கத் தகுந்ததல்ல. இது நம்முடைய மார்க்கம் அனுமதிக்காத விஷயம் என்று குழந்தைகளுக்கு புரிய வைப்பது சிரமம் அல்ல. அக்கறை இருந்தால் போதுமானது.
காசு விரயம் என்பதற்கு அப்பால் இதில் சமய நம்பிக்கையின் கலப்பு நம் ஈமானை பாதித்து விடக் கூடியது என்பதையும் முஸ்லிம் உம்மத்தை தூய்மையானதாக உருவாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையையும் நினைத்துப் பார்க்கிற எவரும் பிற சமயத்தவரின் சடங்குகளிலிருந்து கூடுமானவரை தள்ளியே இருப்பார்கள்; இருக்க வேண்டும்.
【 தீபாவளியும் வீண் விரயமும்】
இன்று முஃமினாக இருக்கும் நாமே, பிறருக்கு முன் மாதிரியாக இருக்காமல் தீபாவளி கொண்டாட்டம் என்று நம் நேரம், பணம், இபாதத்தை வீண் விரயம் செய்கிறோமே!! பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.
وَلَا تُسْرِفُوْا ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)
وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31).
اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26,27)
வீண், விரயம் எதிலும் கூடாது, பணம், பொருள், நீர், பலம், நேரம், பேச்சு, உணவு, பானம், உடை, உறையுள், கட்டடம், சதக்கா என அனைத்திலும் வெகு அவதானம் தேவை. நல்லதுக்குக்கூட வரம்பு மீறி, தேவையின்றி செலவழிக்க முடியாது.
வுழு செய்யும் போது வுழுவின், ஒவ்வோர் உறுப்பையும் மும்மூன்று தடவைகள் கழுவிக்கொள்ள வேண்டும். வுழு நல்ல காரியம்தானே என்பதற்காக மூன்று தடவைகளுக்குமேல் ஓர் உறுப்பைக் கழுவுதல் கூடாது. அது இஸ்ராஃப்.
“வுழு செய்துகொண்டிருந்த ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘இது என்ன விரயம்’ எனக் கேட்டார்கள். ‘வுழுவில் விரயமுள்ளதா?’ என ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) வினவ ‘ஆம் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆற்றில் நீர் இருந்த போதிலும் சரியே’ என்றார்கள்.” ஸூனன் இப்னி மாஜஹ்)
【 தீபாவளி சுருக்க கவிதை,:】
- காசைக்கரியாக்கி ,
- காதை செவிடாக்கி,
- காற்றை மாசாக்கி,
- வீடுகளை எரித்து ,
- வீதிகளை குப்பையாக்கி
- குழந்தைகள் முதியோர்
- நோயாளிகளை துன்புறுத்தும்
- தீபா’வலி’ தேவையா?
- 100 கோடிக்கு குடிப்பதும்
- 1000 கோடிக்கு வெடிப்பதும்
- ஏழை நாட்டுக்கு தேவையா?
- குடிப்பதும் வெடிப்பதும்
- பண்டிகையல்ல!
- இறைவனை வணங்குதலும்
- இல்லாதவர்க்கு வழங்குதலுமே
- இஸ்லாம் கூறும் பண்டிகை!
- உண்ணுங்கள் பருகுங்கள்
- வீண் விரயம் செய்யாதீர்!
இறைத்தூதர் ﷺ அவர்களின் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தை ஓதி அன்னவர்களின் அன்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே நம்மையும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை நம் உயிரை விட நேசித்த கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக!!! ஆமீன்.
✍🏻✍🏻 நன்றியுரை:-
“ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.( புகாரி 3461)
எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.