ஹஜ்ஜுக் கடமையைத் தள்ளிப் போடாதீர். 15-12-2023

ஹஜ்ஜுக் கடமையைத் 
தள்ளிப் போடாதீர்.
**************************************

அல் ஹம்துலில்லாஹ் ❗

அல்லாஹ்வின் கிருபையால் நம் நாட்டில் நம் மாநிலத்தில் இந்திய ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செய்யக்கூடியவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பல மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் குறிப்பாக நம் மலை மாவட்டத்திலும் மிக ஆர்வத்தோடும் தக்வாவோடும் பல சகோதரர்கள் ஹஜ்ஜூக்கு விண்ணப்பத்து வருகிறார்கள்
அல் ஹம்துலில்லாஹ் ❗

  விண்ணப்பித்த அனைவருக்கும் அல்லாஹ் உயர்வான அந்த ஹஜ்ஜூடைய பாக்கியத்தை நஸீபாக்குவானாக ஆமீன்

விண்ணப்பிக்காதவர்களுக்கும் 
அல்லாஹ் தன் வல்லமையை கொண்டு அந்த உயர்வான பாக்கியத்தை நஸீபாக்குவானாக ஆமீன்


فِيْهِ اٰيٰتٌ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:97)

واتم الحج والعمره لله

ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுங்கள்

அல்லாஹ்‌ இந்த ஹஜ்ஜின் மூலம் தன் அடியானிடம் எதை எதிர்பார்க்கிறான் 

அவன் வைத்திருக்கும் காசு பணத்தை எனக்காக செலவு செய்கிறானா என்பதற்காகவா ?

அல்லது தன் தொழில் வியாபாரத்தை விட படைத்த ரப்பாகிய என்னை சந்திக்க விரும்புகிறானா என்று சோதிப்பதற்காகவா ? 

பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி பழகி அங்கே புழுதிக்காற்றில் படுக்க தயாராகிறானா ? 

என பல கேள்விகளை முன் வைத்து விட்டு நாம் ஹஜ் ஏன் நம்மீது கடமை என்று திரும்பி பார்த்தால் மற்ற கடமைகளைப்போல ஹஜ்ஜிலும் இறைவன் நம்மிடம் இறையச்சத்தைத்தான் எதிர்பார்க்கிறான் என் அடியான் என்னை எவ்வளவு பயப்படுகிறான் எனக்காக எதையெல்லாம் தியாகம் செய்ய துணிகிறான் என்பதைத்தான் இறைவன் உற்று நோக்குகிறான்

اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ  وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது;  நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 2:197)


ஆரோக்கியம் இருக்கும்போதே செய்ய வேண்டியவைகளில் ஹஜ்ஜுக் கடமை முக்கியமானது

عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ : اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ : شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ (مصنف ابي شيبة)

நபி ஸல் அவர்கள் ஒருவருக்கு உபதேசம் செய்தார்கள். ஐந்துக்கு முன்பு ஐந்தை ஙனீமத் (போன்ற)தாக ஆக்கிக் கொள். உனக்கு முதுமை வரும் முன்பே உன்னுடைய இளமையையும், உனக்கு நோய் வரும் முன்பு உன்னுடைய ஆரோக்கியத்தையும் உனக்கு ஏழ்மை வரும் முன்பு உன்னுடைய செல்வ நிலையையும் உனக்கு ஓய்வில்லாத நேரம் வரும் முன்பு உனது ஓய்வான நேரத்தையும் உனக்கு மவ்த் வரும் முன்பு உன்னுடைய ஹயாத்தையும் நல்ல சந்தர்ப்பமாக ஙனீமத் (போன்று) பயன்படுத்திக் கொள்.                                                 

வயதான காலத்தில் ஹஜ், உம்ராவுக்கு செல்லும் பலர் திருப்தியாக வணக்கங்களை நிறைவேற்றுவதில்லை

 இது சம்பந்தமாக பலரும் பல அனுபவங்களைக் கூறியுள்ளனர். இஹ்ராமின் போது தலையை மூடக் கூடாது. ஆனால் வயதானவர்களில் சிலர் அங்குள்ள ஏ.சி ஆகியவற்றின் குளிர் தாங்க முடியாமல் தலையை மூடி  விடுகின்றனர். தவாஃப், ஸயீ உட்பட பல வணக்கங்களை சேரில் அமர்ந்த படி நிறைவேற்ற வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. அதுவும் கூடும் என்றாலும் அதில் திருப்தி இருப்பதில்லை. சில ஹாஜிகள் முஸ்தலிஃபா வரை நடக்க முடியாமல் முஸ்தலிஃபாவுக்கு வர முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளது.           

 வயதானவர்களால் வேகமாக நடக்கவும் முடியாது.அடிக்கடி சிறுநீர் உபாதைகள் ஏற்படும். இதனால் அவர்களுடன் குரூப்பாக செல்பவர்களில் பலருக்கும் சிரமம் ஏற்படும். இவர்களுக்காக அனைவரும் காத்திருக்க வேண்டியிருக்கும் முக்கியமான ஜியாரத்திற்குரிய இடங்களைப் பார்க்கச் செல்லும்போது வயதானவர்களில் பலர் வாகனங்களிலேயே அமர்ந்து கொள்கின்றனர். அவ்வளவு தூரம் பயணம் செய்து, பணம் செலவழித்து சென்றும் கூட அல்லாஹ்வின் நினைவுச் சின்னங்களை அருகில் சென்று பார்க்க முடியாமல் தூரத்தில் இருந்த படி பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். சில வயதானவர்கள் இளைஞர்களை விடவும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அது விதி விலக்காகும்.  

ஹஜ் கடமையான பிறகும் அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துபவர்களைப் பற்றி எச்சரிக்கை

عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ{ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا }رواه الترمذي

யார் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான பொருளாதார தயாரிப்பையும், கஃபா வரை செல்வதற்கான போக்குவரத்துக்கான தயாரிப்பையும் பெற்றுக் கொண்ட பிறகும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ எப்படி இறந்து போனாலும் அதைப் பற்றிக் கவலையில்லை.

விளக்கம்- இந்த உம்மத்தில் ஒருவர் கூட நரகம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே காலமெல்லாம் கவலைப் பட்ட நபி ஸல் அவர்கள் இவ்வளவு வெறுத்துக் கூறினார்கள் என்றால் ஹஜ் எவ்வளவு முக்கியமான கடமை என நாம் உணர வேண்டும்.

عن الحسن البصري قال: قال عمر بن الخطاب: لقد هممت أن أبعث رجالا إلى هذه الأمصار فينظروا كل من كان له جَدةٌ فلم  يحج، فيضربوا عليهم الجِزْية، ما هم بمسلمين. ما هم بمسلمين . (تفسير القرطبي)

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது நான் அனைத்து ஊர்களுக்கும் ஆட்களை அனுப்பி யாரெல்லாம் வசதியிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருக்கிறார்களோ அவர்களின் மீது ஜிஸ்யா விதிக்கலாம் என என் மனம் நாடுகிறது.ஏனெனில் அவர்கள் உண்மை முஸ்லிம்கள் கிடையாது. (எனவே இஸ்லாமிய நாட்டில் வாழும் திம்மிகளின் மீது விதிக்கப்படும் ஜிஸ்யாவுக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் தான்) என்றார்கள்.       

ثُمَّ هُوَ (أي الحج ) وَاجِبٌ عَلَى الْفَوْرِ عِنْدَ أَبِي يُوسُفَ رَحِمَهُ اللَّهُ .وَعَنْ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ مَا يَدُلُّ عَلَيْهِ . (هداية

( ثُمَّ هُوَ  (أي الحج ) وَاجِبٌ عَلَى الْفَوْرِ عِنْدَ أَبِي يُوسُفَ ) حَتَّى إنْ أَخَّرَ بَعْدَ اسْتِجْمَاعِ الشَّرَائِطِ أَثِمَ ، رَوَاهُ عَنْهُ بِشْرٌ وَالْمُعَلَّى ( وَعَنْ أَبِي حَنِيفَةَ مَا يَدُلُّ عَلَيْهِ ) أَيْ عَلَى الْفَوْرِ وَهُوَ مَا ذَكَرَهُ ابْنُ شُجَاعٍ عَنْهُ أَنَّهُ سُئِلَ عَمَّنْ لَهُ مَالٌ أَيَحُجُّ بِهِ أَمْ يَتَزَوَّجُ ؟ فَقَالَ : بَلْ يَحُجُّ بِهِ ، وَذَلِكَ دَلِيلٌ عَلَى أَنَّ الْوُجُوبَ عِنْدَهُ عَلَى الْفَوْرِ .  . (شرح الهداية

இமாமுல்அஃழம் கருத்துப்படி ஹஜ்ஜுக்கான வசதி வந்தவுடன் அந்த வருடமே ஹஜ் செய்வது வாஜிபாகும். அரபு நாடுகளில் ஒரு ஆண் திருமணம் செய்ய வேண்டுமானால் ஹஜ்ஜுக்கு ஆகும் செலவு அளவுக்கு அவருக்கு செலவு உண்டு. அதை மனதில் வைத்து ஒருவர் இப்னு ஷுஜாஃ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது. வசதி வந்தவுடன் திருமணம் முதலில் கடமையா ஹஜ் முதலில் கடமையா என்று கேட்க, ஹஜ் செய்வது முதல் கடமை என்றார்கள்.

ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வருவதற்கு முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு காலம் வரும். அப்போது மக்கள் ஹஜ் செய்ய விரும்பினாலும்  ஹஜ் செய்ய கஃபா இருக்காது

عن الحارث بن سويد ، قال : سمعت عليا ، رضي الله عنه ، يقول :  حجوا قبل أن لا تحجوا، فكأني أنظر إلى حبشي أصمع أفدع بيده  مِعْوَل يهدمها حجرا حجرا ، فقلت له شيء تقوله برأيك أو سمعته من رسول الله صلى الله عليه وسلم قال :  لا والذي فلق الحبة ، وبرأ  النسمة ، ولكني سمعته من نبيكم صلى الله عليه وسلم  رواه الحاكم في المستدرك (معولகோடாலி  أفدعமெலிந்த கால்கள் கொண்ட)

عن ابن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  استمتعوا من هذا البيت ، فإنه قد هُدِم مرتين ، ويُرفع في الثالثة رواه ابن حبان

கருத்து- ஹஜ் செய்ய முடியாமல் போகும் சூழல் வரும் முன்பு ஹஜ் செய்யுங்கள். ஏனெனில் கால்கள் சிறுத்த நீக்ரோ மனிதர்கள் கோடாரியால் கஃபாவின் கற்களை பெயர்த்து எடுப்பதை என் கண்ணால் பார்ப்பது போன்று உள்ளது என கவலையுடன் கூறினார்கள்.

 இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது கஃபா இருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இரண்டு முறை இடிக்கப்படும். மூன்றாவது முறை அது உயர்த்தப்பட்டு விடும் என்றார்கள்

கஃபா உயர்த்தப்பட்டு எப்போது ஹஜ் செய்ய முடியாத நிலை உருவாகுமோ

அப்போது உலகமும் அழிக்கப்பட்டு விடும்.

جَعَلَ اللَّه الْكَعْبَة الْبَيْت الْحَرَام قِيَامًا لِلنَّاسِ" أَيْ يَدْفَع عَنْهُمْ بِسَبَبِ تَعْظِيمهَا السُّوء كَمَا قَالَ اِبْن عَبَّاس : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض  (تفسير ابن كثير

கண்ணியப்படுத்த வேண்டியவைகளை கண்ணியப்படுத்திக் கொண்டிருப்பது இந்த பூமிக்கு பாதுகாப்பாகும். கஃபாவை மக்கள் கண்ணியப்படுத்துவதால் பல்வேறு சோதனைகளை விட்டும் பாதுகாக்கப்படுகின்றனர். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள். ஒருவர் கூட ஹஜ் செய்யாத சூழ்நிலை ஏற்படும்போது அல்லாஹ் உலகத்தை அழித்து விடுவான்.

கஃபா இடிக்கப்பட்டு ஹஜ் செய்ய முடியாத நிலை ஏற்படும் முன்பே அநியாயக்கார அரசர்களால் ஹஜ் செய்வதற்கு தடை ஏற்படும் என்ற முன்னறிவிப்பு

عَنْ أَبِى أُمَامَةَ قَالَ عن أبي أمامة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :« مَنْ لَمْ يَمْنَعْهُ مِنَ الْحَجِّ حَاجَةٌ ظَاهِرَةٌ أَوْ سُلْطَانٌ جَائِرٌ أَوْ مَرَضٌ حَابِسٌ فَمَاتَ وَلَمْ يَحُجَّ فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا (دارمي)

عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "تَعَجَّلُوا إلى الحَجِّ -يعني الفريضة-فإنَّ أحَدَكُمْ لا يَدْرِي مَا يَعْرضُ لَهُ رواه احمد

ஹஜ்ஜை விரைந்து நிறைவேற்றுங்கள். ஏனெனில் யாருக்கு எப்போது நடைபெறும் என யாரும் அறிய மாட்டீர்கள்

 

விளக்கம்- மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது என்ற கருத்தும் இதற்குள் அடங்கும். அத்துடன் நபி ஸல் அவர்கள் கூறியது போன்று இனி காலங்கள் செல்லச் செல்ல என்ன மாதிரியான புதிய சட்டங்களை சவூதி அரசு கொண்டு வரும் என்று தெரியவில்லை. பணமும் ஆரோக்கியமும் இருந்தாலும் கூட அவ்வளவு எளிதாக  ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாத அளவுக்கு பல தடைகளை சவூதி அரசாங்கம் ஏற்படுத்த வாய்ப்புண்டு. காரணம் இப்போதுள்ள மன்னர் மேற்கத்தியர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார். ஒரு காலத்தில் ரவ்ழாவை ஜியாரத் செய்யும் வழிகள் இலகுவாக இருந்தது. ஆனால் அதுவும் மிகவும் சிரமமாகி விட்டது. தவாஃப் செய்வதற்கான அனுமதியும்உம்ராவின் உடையுடன் தான் அனுமதிக்கப்படுகிறது இப்படியாக ஒவ்வொன்றாக அனுமதி மறுக்கப்படும் சூழ்நிலைகள் வரும் முன்பே ஹஜ்ஜை நிறைவேற்றி விட வேண்டும்.

கடமையை நிறைவேற்றுவதற்கு நம்முடைய தொழில்கள் தடைகளாக இருப்பது கூடாது

நம்மில் பலர் ஹஜ்ஜை நிறைவேற்றும் அளவுக்கு வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் 40 நாட்கள் ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பும் வரை வியாபாரம் பாதித்து விடும் அல்லது அலுவலக வேலைகள் நின்று விடும் என்று எண்ணி ஹஜ்ஜைத் தள்ளிப் போடுகின்றனர். அல்லாஹ், ரசூலை விட தொழிலை பெரிதாக கருதுபவர்களை அல்லாஹ் எச்சரித்துள்ளான்

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏

(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
(அல்குர்ஆன் : 9:24)

  ஹஜ்ஜுக்குச் செல்வதால் செலவாகும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு...

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّة (ترمذي

ஹஜ்ஜையும் உம்ராவையும் அடுத்தடுத்து நிறைவேற்றுங்கள். ஏனெனில் அவ்விரண்டும் வறுமையை போக்கி விடும். எவ்வாறு இரும்பின் துருவையும் தங்கத்தின் துருவையும் வெள்ளியின் துருவையும் கொல்லனின் உலை நீக்கி விடுமோ அவ்வாறு ஹஜ்ஜும் உம்ராவும் வறுமையை நீக்கி விடும்.                                     

விளக்கம்- ஹாஜி ஒருபோதும் ஏழையாக மாட்டார் என்று தான் ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பினால் அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தைத் தருவான் என நம்பி இக்லாஸுடன் ஹஜ் செய்ய வேண்டும்.

ஹஜ்ஜுக்குச் செலவு செய்வது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதைப் போன்றாகும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّفَقَةُ فِي الْحَجِّ كَالنَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ (مسند أحمد

   வசதியிருந்தும் ஹஜ் செய்ய இயலாத தள்ளாத வயதை அடைந்தவர்களுக்காக பத்லீ ஹஜ்

 ஒருவருக்கு ஹஜ்ஜு கடமையாக இருந்து அதனை நிறைவேற்றுவதற்கு சக்தியற்றவராக இருந்தால் அல்லது மரணித்திருந்தால் அவருக்கான ஃபர்ளான ஹஜ்ஜை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றவர் நிறைவேற்றலாம். நஃபிலான ஹஜ் என்றால் அதைநிறைவேற்றுவதற்கான ஆரோக்கியம் அவரிடம் இருந்தாலும் இல்லா விட்டாலும்  அவர் சார்பாக பிறர் நிறைவேற்றலாம். ஆனால் பத்லீ ஹஜ் செய்ய யார் ஏவப்படுகிறாரோ அவரிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும்.

குறிப்பு-பத்லீ ஹஜ் செய்யச் சொல்லுபவரை ஆமிர் என்றும், அதை செய்கிறவரை மஃமூர் என்றும் சொல்லப்படும்.

தொழுகை, நோன்பு போன்ற அமல்களை ஒருவருக்காக மற்றவர் செய்ய முடியாது. கஃப்பாரா அல்லது ஃபித்யா மட்டும் தர முடியும். ஆனால் ஹஜ், உம்ரா, குர்பானி போன்ற சில அமல்களை ஒருவருக்காக மற்றவர் செய்யலாம்

பத்லீ ஹஜ் குறித்த ஹதீஸ்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ (بخاري

 ஃபழ்ல் என்ற சஹாபி நபி ஸல் அவர்ளுக்குப் பின்னால் அமர்ந்து வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது கஸ்அம் கிளைய் சார்ந்த ஒரு பெண்மணி வந்தார். அவரை ஃபழ்ல் ரழி பார்க்க, அந்தப் பெண்ணும் இவரைப் பார்க்க நேர்ந்தது. உடனே  நபி (ஸல்) அவர்கள் ஃபழ்ல் ரழி அவர்களின் பார்வையை வேறு பக்கமாக திருப்பி விட்டார்கள். அப்போது அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது கடமையாக்கிய ஹஜ் என்ற கடமை என் தந்தையின் மீது உள்ளது. ஆனால் அவர் வாகனத்தின் மீது உட்காருவதற்கும் சக்தியற்றவராக இருக்கிறார் எனவே அவருக்காக நான் ஹஜ்ஜு செய்யலாமா?  என்று கேட்ட போது, ஆம் ஹஜ்ஜு செய்வீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் - புகாரீ

பத்லீ ஹஜ்ஜுக்குரிய நிபந்தனைகள்

 அவரால் அறவே முடியாது என்ற நிலையில் மட்டுமே பிறரை  தனக்காக ஹஜ் செய்ய வைக்க முடியும். மேலும் பெரும்பாலான   இமாம்களின் கருத்துப் படி முதலில் தனக்காக ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்த  ஒருவர் தான் மற்றவருக்காக ஹஜ் செய்ய முடியும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شُبْرُمَةُ قَالَ قَرِيبٌ لِي قَالَ هَلْ حَجَجْتَ قَطُّ قَالَ لَا قَالَ فَاجْعَلْ هَذِهِ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ (ابن ماجة

 ஒரு மனிதர் ஹஜ்ஜின் போது லப்பைக அன் ஷுப்ருமா என்று கூறுவதைக் கேட்ட நபி ஸல் அவ்ரகள் யார் அந்த ஷுப்ருமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் தான் ஷுப்ருமா என்பவர். அவருக்காக நான் ஹஜ்ஜுச் செய்கிறேன் என்றார் அப்போது நபி ஸல் நீர் இதற்கு முன்  ஹஜ்ஜை நிறைவேற்றியிருக்கிறீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் முதலில் உமக்காக நீ  இந்த ஹஜ்ஜை ஆக்கிக் கொள். பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய் என்றார்கள்.

இன்னும் சில நிபந்தனைகள்

 உயிரோடு இருக்கும் நிலையில் அதை செய்ய வைத்தாலும் சரி, அல்லது அவர் இறக்கும் தருவாயில் வஸிய்யத் செய்து விட்டு இறந்திருந்தாலும் சரி இது கூடும்

.ஆணுக்கு ஆண் சார்பாகவும், பெண்ணுக்கு பெண் சார்பாகவும் என்றில்லாமல் யாரும் யாருக்காகவும் பத்லீ ஹஜ் செய்யலாம்.

ஆமிர் தனக்குப் பகரமாக இன்னார் தான் பத்லீ ஹஜ் செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தால் அவர் தான் அதை நிறைவேற்ற வேண்டும். அவர் குறிப்பிட்டு யாரையும் கூறாதிருந்தால் அவருக்குப் பகரமாக யார் வேண்டுமானாலும் பத்லீ ஹஜ்ஜு செய்யலாம்.

மஃமூர் அதாவது பத்லீ ஹஜ் செய்பவர் ஹஜ்ஜுடைய செயல்களை விளங்கிக் கொள்ளக் கூடிய விளக்கமுள்ளவராக இருக்க வேண்டும்.

 தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றாத ஒருவர்  பிறருக்காக ஹஜ்ஜு செய்வது ஷாஃபியீ  மத்ஹபில் அறவேகூடாது. ஹனஃபீமத்ஹபில் கூடும். எனினும்அது மக்ரூஹ் ஆகும்.

பிறருக்காக ஹஜ்ஜு செய்பவர் ஒருவருக்காக மட்டுமே  ஹஜ்ஜு செய்யமுடியும். இரண்டு பேருக்கு நிய்யத் செய்ய முடியாது.

மக்கா வரை போய் வருவதற்கான நடுத்தரமான செலவுக்கான பணத்தை ஹஜ்ஜுக்குச் செல்கின்ற மஃமூருக்கு ஆமிர் கொடுக்க வேண்டும்.

பத்லீ ஹஜ் செய்து முடித்த பின் ஆமிருடைய பணம் அல்லது பொருள் மீதியிருந்தால் அதை ஆமிரிடமோ அல்லது அவரின் வாரிசுகளிடமோ கொடுத்து விட வேண்டும். அதை தான் வைத்துக் கொள்ளக் கூடாது. எனினும் மீதியுள்ளதை மஃமூர் தன் விருப்பப்படி செலவு செய்ய அனுமதி அளித்தால் அது நல்லதாகும்.

ஆமிரின்  பொருளில் இருந்து ஹஜ் செய்வதாக இருந்தால் பொதுவாக ஆமிருடைய ஊரில் இருந்து புறப்பட்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். அவர் அனுமதித்தாலோ அல்லது வசதிக்கேற்ப வேறு ஊரில் இருந்து புறப்பட்டாலோ அந்த செலவுக்குள் முடியும் என்றிருந்தால் அவ்வாறு செய்யலாம்.

 ஹஜ்ஜுடைய செலவுகளில் அதிகமானதை ஆமிர் கொடுத்த பணத்தில் இருந்து செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் ஆமிருடைய பணம் குறைவாக இருந்து மஃமூரின் பணம் நிறைய இருந்தால் ஹஜ் நிறைவேறாது.

 பத்லீ ஹஜ்ஜில் ஹஜ்ஜுடைய நாளை எதிர் பார்த்து காத்திருக்கும் காலத்திலோ அல்லது ஹஜ்ஜு செய்து முடித்த பிறகுள்ள காலத்திலோ மஃமூர் தனக்காகவும். தன் உற்றார் உறவினர்களுக்காகவும் உம்ராக்களை செய்வதில் தவறேதும் இல்லை. 

ஆனால் இதற்கு ஆகும் செலவினை ஆமிருடைய கணக்கில் சேர்க்காமல் மஃமூரின் கணக்கில் தான் சேர்க்க வேண்டும். ஆமிர் விருப்பப்பட்டால் அவர் செலவில் கூடுதலான அமல்களை செய்யலாம்.

ஹஜ் செய்யும் ஆர்வம் இருந்தும் வசதி குறைவாக உள்ளவருக்கு உதவி செய்து ஹஜ் செய்ய வைப்பதின் நன்மை

عن زيد بن خالد الجهني رضي الله عنه، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  من فطر صائما ، أو أحَجَّ رجلا ، أو جهز غازيا أو خلفه في أهله فله مثل أجره (بيهقي

ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்து விட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது.

அந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்தனையோ பேர் ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்து அதற்காக தயாராகி கடைசி நேரத்தில் அந்த பாக்கியம் கிடைக்காமல் போன வரலாறுகள் உண்டு. ஜித்தா வரை சென்றவரும் கூட திருப்பி அனுப்பப் பட்டுள்ளார். எனவே ஹஜ்ஜுடைய பாக்கியத்திற்காக அல்லாஹ்விடம் துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவை 800 வருடங்கள் ஆட்சி புரிந்த எத்தனையோ மொகலாய மன்னர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கவில்லை.

அல்லாஹ் யாரை நாடினானோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கும்

இப்றாஹீம் அலை அவர்களின் அழைப்பு பதில் அளித்தவர்கள் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் பெற்றவர்கள்

عن ابن عباس قال : لما أمر الله إبراهيم أن ينادي في الناس بالحج صعد أبا قبيس فوضع أصبعيه في أذنيه ثم نادى : إن الله كتب عليكم الحج فأجيبوا ربكم  فأجابوه بالتلبية في أصلاب الرجال وأرحام النساء وأول من أجابه أهل اليمن فليس حاج من يومئذ إلى أن تقوم الساعة إلا من كان أجاب إبراهيم يومئذ (الدر المنثور

  அபூகுபைஸ் மலை மீது ஏறி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைப்புக் கொடுத்த போது பாங்கு சொல்வதைப் போன்று காதுகளில் கை வைத்து அழைப்புக் கொடுத்தார்கள். அவ்வாறு அழைப்புக் கொடுத்த போது அல்லாஹ் நாடியவர்கள் அதற்கு பதிலளித்தனர்.அப்போது இருந்தவர்கள் உட்பட அவரவர் முன்னோர்களின் முகுதுத்தண்டில் இருந்த படியும் பதிலளித்தனர் அவ்வாறு பதிலளித்தவர்கள் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் பெற்ற மக்களாவார்கள்.                                                                            

عن علي رفعه : لما نادى إبراهيم بالحج لبى الخلق فمن لبى تلبية واحدة حج واحدة ومن لبى مرتين حج حجتين ومن زاد فبحساب ذلك (الدر المنثور

இப்றாஹீம் அலை அவர்கள் அழைப்புக் கொடுத்தபோது ஒருமுறை பதில் கொடுத்தவர்கள் ஒருமுறையும் இருமுறை பதில் கொடுத்தவர்கள் இருமுறையும் பல முறை பதில் கொடுத்தவர்கள் பல முறையும் ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் பெற்றார்கள்

 

பெருமைக்காகவும் மிகவும் சொகுசாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் ஹஜ் செய்வது நபிவழி அல்ல.

عن ابن مسعود رض أن النبي صلى الله عليه وسلم قال لا تزول قَدَمَا ابنِ آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيم أفناه وعن شبابه فيم أبلاه وعن ماله من أين اكتسبه وفيم أنفقه وماذا عمل فيما علم (الترمذي)  عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ الزَّادُ وَالرَّاحِلَةُ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ قَالَ الشَّعِثُ التَّفِلُ... رواه ابن ماجة

எதனால் ஹஜ்ஜுக் கடமை ஏற்படும் என நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டபோது வாகனமும் உணவு ஏற்பாடும் என்றார்கள். ஹாஜி என்றால் யார் என்று புழுதி கலந்த உடையுடன் தலை விரி கோலமாக இருப்பவர் என்றார்கள். அரஃபாவில் பல ஹாஜிகளின் நிலை அவ்வாறு தான் இருக்கும்.

عن عمر بن عبد العزيز رحمة الله عليه قال "إن الله تعالى جعل هذا السفر نسكا ، وسيجعله الظالمون نكالا "(ابن عساكر)

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இந்த ஹஜ்ஜை வணக்கமாக ஆக்கியுள்ளான். ஆனால் அநியாயக்காரர்கள் அதனை தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

عن أنس رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يأتي على الناس زمان يَحُجُّ أغنياء الناس لِلنَّزَاهَة ، وأوساطهم للتجارة وقُرَّاؤُهم للرياء والسمعة وفقراؤهم للمسألة (كنز العمال) للنزاهةசுற்றுலாவுக்கு  

கடைசியில் ஒரு காலம் வரும். பணக்காரர்கள் சுற்றுலாவுக்குச் செல்வது போன்று ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். நடுத்தர மக்கள் வியாபார நோக்கத்தோடு ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். காரிகள் அதாவது ஆலிம்கள் விளம்பரம் மற்றும் பெருமைக்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். ஏழைகள் யாசிப்பதற்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள்.     

ஹஜ் என்பது ஒரு புனிதமான வணக்கம்
அத்தகைய புனிதமான வணக்கத்தை அல்லாஹ் விதித்த கட்டளைகளுக்கு உட்பட்டே நாம் நிறைவேற்ற வேண்டும்
அந்த வகையில் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் 

لا تسافر المرأة الا مع ذي محرم رواه البخاري 

ஒரு பெண் மஹ்ரமான ஆணின் துணை இல்லாமல் பிரயாணம் செய்ய வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்துள்ளார்கள்

சாதாரண பிரயாணத்திற்கே இவ்வாறு என்றால் ஹஜ் என்கிற புனிதமான வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு மஹ்ரம் துணையில்லாமல் சென்றால் அந்த நற்காரியத்தை அல்லாஹ் ஏற்க மாட்டான் 

 இப்போதுள்ள அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம் ஆனால் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை 

ஆனால் இன்றைக்கு பல பெண்கள் அரசாங்கமே அனுமதி கொடுக்கும் போது பெண்கள் ஏன் மஹ்ரம் துணையில்லாமல் செல்லக்கூடாது என்று நினைக்கிறார்கள் 


 அரசாங்கம் கச்சேரி, டான்ஸ், மது, சினிமா ஆகியவற்றுக்கெல்லாம் அனுமதி கொடுக்கும்

 அதற்காக அதை கூடும் என்று நாம் சொல்லிவிட முடியாது எனவே இந்த விஷயத்தில் பெண்கள் அல்லாஹ்விற்கு பயந்து நடக்க வேண்டும்

மஹ்ரம் இல்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வதை அறவே விட்டு விட வேண்டும் 
அவ்வாறு சென்றால் அந்த ஹஜ் கூடாது என்பதையும் பெண்கள் விளங்க வேண்டும் 

கடந்த வருடம் கேரளாவில் இருந்து பெண்கள் பெரும் குழுவாக ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பிய செய்தியை நாம் அறிவோம்

இத்தகைய வரம்பு மீறுதல் தடுக்கப் பட வேண்டும் 
இது சம்பந்தமாக மஹல்லா தோறும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

                                                                    
அல்லாஹ் நம் அனைவருக்கும் புனிதமான அந்த ஹஜ் பாக்கியத்தை ஷரீஅத்திற்கு உட்பட்டு உரிய முறையில் வாலிப பருவத்தில் இக்லாஸ் எனும் மனத்தூய்மையுடன் நிறைவேற்ற நற்கிருபை செய்தருள்வானாக ஆமீன்

Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்