Skip to main content

மழை நீர் சேகரிப்பு

மழை நீர் சேகரிப்பு 

  அல்லாஹ்வின் ﷻ பேரருளால் ஜமாத்துல் அவ்வல்   மாதத்தின்   நான்காம்   வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். 

  ‘வாராது வந்த மாமணியே!’ என வடகிழக்குப் பருவமழையை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம். இந்த தருனத்தில் அளவுக்கதிமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அது பேரிடராக மாறிவிடுகின்றது. இந்த வெள்ளப் பெருக்கினால் ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் அழிந்து விடுகின்றன. பயிர்கள் சேதமாகி விவசாயம் பாழாகி விடுகின்றது.

மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு என்று நாட்டின் கட்டமைப்பு நிலைகுலைந்து போய்விடுகின்றது. பல்லாயிரம் கோடி அளவில் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு விடுகின்றது. அரசாங்கமே மீண்டு எழ முடியாத அளவுக்கு அதன் பாதிப்பு அமைந்து விடுகின்றது.

  • ஆக இந்த மழைக்காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? இந்த மழைக்காலத்தில் வந்துள்ள பருவ மழையை எப்படி பயனாக்கிட வேண்டும், இந்த மழைக்காலத்தில் சிரமப்படுவோருக்கு நாம் எப்படியெல்லாம்  உதவி செய்திட வேண்டும் ?  என்பதனைப்பற்றி இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்….
  • பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-قال الله تعالى ♣ 

【அல்லாஹ்வே ! வானத்தினின்றும் மழை பொழியச்செய்கிறான்.  】

【.

الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். [திருக்குர்ஆன் 2:22..]

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

【நபி ﷺ  அவர்கள் மழையைக் காணும் போது! 】

 நபியவர்கள் பயனில்லா / கெடுதியைத்தரும்  மழையை விட்டும் ஓவ்வொரு நேரமும் பாதுகாப்பு வேண்டியுள்ளார்கள்.

 عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أُمْطِرَ قَالَ ‏ “‏ اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا نَافِعًا ‏”‏ ‏.‏

عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ “” صَيِّبًا نَافِعًا “”

நபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால், ‘ஸய்யிபன் நாஃபிஅன்’ (பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள் (புஹாரி 1032)

قَالَ فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا “”. قَالَ فَلَقَدْ رَأَيْتُ السَّحَابَ يَتَقَطَّعُ يَمِينًا وَشِمَالاً يُمْطَرُونَ وَلاَ يُمْطَرُ أَهْلُ الْمَدِينَةِ

[அந்த ஜுமுஆவில்) ‘அந்த மனிதரோ’ அல்லது ‘மற்றொரு மனிதரோ’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இ(ந்த மழை மேகத்)தை எங்களைவிட்டு (வேறு பகுதிக் குத்) திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப் புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக)! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். [புகாரி 1015]

السلام عليكم السؤال : ” اللهم صيباً نافعاً ” ما معنى هذه الكلمة ؟
الجواب : وعليكم السلام ورحمة الله وبركاته
هذا يُقال في دُعاء طلب المطر ” الاستسقاء ” .
ومعنى ” صَـيِّـبًا ” : أي : مُنْهَمِرًا مُتَدَفِّـقًا . كما قال ابن الأثير .
والنَّافِع عكس الضَّارّ ؛ لأن مِن المطر ما يَكون نافِعًا ، ومنه ما يَكون ضَارًّا ، فشُرِع للمسلم أن يَدعو بالمطر الكثير النافع غير الضَّار .
وهو في معنى ما جاء في دعائه صلى الله عليه وسلم : اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مَرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلا غَيْرَ آجِلٍ . رواه أبو داود . ومعنى ” مَرِيعًا ” : هو الْمُخْصِب . كما قال ابن الجوزي .
أي كثير الْخصب ، وهو ما يَنْبُت به نَبَات الربيع الكثير . والله تعالى أعلم .

【மழைத் தண்ணிரை சேமிப்பதும் பாதுகாப்பதும் நமது கடமை .】

 மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் குடிநீர் மிக முக்கியமான ஒன்று. உணவு ஒருவேளை இல்லாவிட்டாலும் கூட இருந்து விடலாம்; தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம். மனித சமுதாயத்துக்கு அத்தியாவசியத் தேவையான தண்ணீரை நாம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்? எந்தமாதிரியான வேலைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதையெல்லாம் உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய தருணம் இது. தண்ணீரின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி அறியாமல் நாம் எங்கெல்லாம் தண்ணீரை வீணாக்குகிறோம் தெரியுமா? தண்ணீர் வீணாவதைத் தடுப்பதுடன், அதனை எவ்வாறெல்லாம் சேமிக்க முடியும் என்பதை இங்கே பார்ப்போம்….

அன்றாடம் நமது துணிகளைத் துவைப்பதற்காக, நாம் குறைந்தபட்சம் இரண்டு பக்கெட் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். ஆனால், வாரம் ஒருமுறை துணிகளைத் துவைக்கும்போது. மொத்தமாக நான்கு அல்லது ஐந்து பக்கெட் தண்ணீரை வைத்து எல்லா துணிகளையும் துவைத்து முடித்து விடலாம். இதனால், ஓரளவு தண்ணீரை சேமிக்க முடியும்.

துணிகளை அலசும்போது, கடைசியாக அலசக்கூடிய இரண்டு பக்கெட் தண்ணீரை கழிவறைகளில் ஊற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், தண்ணீர் உபயோகத்தை ஓரளவுக்குக் குறைக்க முடியும்.

மின் மோட்டார் மூலம் சிண்டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றுவதாக இருந்தால், மோட்டார் ஆன் செய்யும் நேரத்தைக் குறித்து வைத்து, குறிப்பிட்ட நேரம் வரை இயக்கி, எவ்வளவு நேரம் தேவையோ, அந்த நேரம் முடிந்ததும் மின் மோட்டாரை அணைத்து விட வேண்டும். இப்படிச் செய்வதால், டேங்க் நிரம்பி, அதில் இருந்து தண்ணீர் வெளியே வழியாமல் தடுக்கலாம். சிலர், மோட்டார் ஆன் செய்ததை மறந்துவிட்டு, நீண்ட நேரம் கழித்து, தொட்டி நிரம்பி வழிவது கூட தெரியாமல் இருப்பர். இதனால், தண்ணீர் வீணாகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே, தண்ணீரை வீணாக்காமல் இருக்க குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மோட்டாரின் சுவிட்சை ஆஃப் செய்து விட வேண்டும்.

மழைநீர் சேமிப்பை தமிழகம் மட்டுமல்லாது அனைத்துப் பகுதிகளிலுமே ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கான விழிப்பு உணர்வை துண்டுபிரசுரங்கள் மூலம் தீவிரப்படுத்தி உள்ளது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தற்போதும் எவ்வளவு பேர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம் என்பது கேள்விக்குறியே. அப்படி, கடைப்பிடிக்காதவர்கள் இனிமேலாவது மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவசியம் அத்தகைய வசதிகளை வீடுகள், அலுவலகங்களில் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

தண்ணீர் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகள், வழிநெடுகிலும் பெருமளவு தண்ணீரை வீணாக சாலையில் ஊற்றிச் செல்வதைக் காண்கிறோம். சாலைகளில் கொட்டிச் சென்றுள்ள தண்ணீரை வைத்தே அந்த லாரி சென்றுள்ள இடத்தை சரியாகக் கண்டுபிடித்து விட முடியும். அந்த அளவுக்கு தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் லாரிகள் அனைத்துமே இதே நிலையில்தான் செல்கின்றன. எனவே, லாரிகளில் வழிய, வழிய தண்ணீர் நிரப்புவதைத் தவிர்த்து, சிறிதளவு குறைவாக தண்ணீர் பிடித்தால், சாலைகளில் வீணாகும் தண்ணீரைத் தவிர்க்கலாம்.

குடிதண்ணீருக்காக அரசு என்னதான் மாற்று ஏற்பாடுகளைச் செய்தாலும், மக்களாகிய நாமும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். ஓரளவு இருக்கும் நிலத்தடி நீரையும் வீணாக்காமல் பயன்படுத்தினால், இந்த கோடையை பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் கழிக்கலாம். தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புஉணர்வை மக்களுக்கு அரசும் எடுத்துரைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும். குடிநீரைச் சிக்கனமாகவும், வீணடிக்காமலும் பயன்படுத்துவோம். அரசின் விழிப்புணர்வு திட்டங்களுக்கு உதவி, வாழ்வை வளமாக்குவோம்!

“நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணமாகும்.

  • தண்ணீரை
  •                                     தாத்தா  ஆற்றில் பார்த்தார் !
  •                                     அப்பா கிணற்றில் பார்த்தார் !
  •                                     நாம் குழாயில் பார்க்கிறோம் !

              எனவே , இனிவரும் எதிர்காலத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து , இளைய தலைமுறையாகிய நீங்கள் மரங்களை நட்டு மண்வளம் காத்து மழையைப் பெற்று வளம் பெற வேண்டும்.

ஒருசொட்டு நீர் இரண்டு மடங்கு வருவாய் தரும். உலகத்தில் 21 விநாடிகளுக்கு ஒரு குழந்தை தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் இளம் வயது முதலே தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.

கோவையில் பள்ளிகளில் ஒழுச் செய்த‌ தண்ணிரை பொது கால்வாயில் கலக்க விடாமல், பூமிக்குள் தண்ணிர் போகும் படி செய்து நிலத்தடி நீரை மேலாக்கம் செய்தது போல நாமும் தண்ணிரை சேமித்து பாதுகாப்போம் என உறுதி யொடுப்போமாக!!! ஆமீன்.

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என முக்கிய இடங்களில் எழுதி விழிபுணர்வு ஏற்படுத்துங்கள்.

தண்ணிர் மாபெரும் அருட்கொடை

 وَهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ‌ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ‏

இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம். 25:48.

لِّـنُحْیَِۧ بِهٖ بَلْدَةً مَّيْتًا وَّنُسْقِيَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِىَّ كَثِيْرًا‏

இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம். 25:49. 

اَوَلَمْ يَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَى الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ‌ؕ اَفَلَا يُبْصِرُوْنَ‏

அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? 32:27.

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْۢبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏

அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். 50:9.

மழைத் தண்ணீரை வீண் விரயம் செய்யாதீர்கள்

 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31.)

 اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:  كما قال النبي صلى الله عليه وسلم   

தர்மத்தில் சிறந்தது …

 أفضل الصدقة الماء

தண்ணீரை தானமாக கொடுப்பது தர்மத்தில் சிறந்தது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…


உயிரினங்கள் நிம்மதியாக உயிர் வாழ்வதற்கும் தன்ணீர் மிக அவசியமானது, எல்லா காரியங்களுக்கும் தண்ணீர் அவசியம்.

இஸ்லாம் தண்ணீர் விஷயத்தில் அலாதியான பொறுப்புணர்வை மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதிலும் தண்ணீரை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிக கவனத்தை கொடுத்துள்ளது.

ஓடும் நதியாய் இருந்தாலும் வீண் விரயம் செய்ய கூடாது …

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما (أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ : مَا هَذَا السَّرَفُ يَا سَعْدُ ؟ قَالَ : أَفِي الْوُضُوءِ سَرَفٌ ؟ قَالَ : نَعَمْ ، وَإِنْ كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ) . ابن ماجة(419

சொந்த தண்ணீரை ஒழு செய்யும் போது மூன்று தடவைக்கு மேல் பயன்படுத்துவது மக்ரூஹ் வெறுக்கத்தக்கது.

பொதுவான உபயோகத்திற்கு வைக்கப்பட்டிருக்கிற தண்ணீரை அளவுக்கு மேல் உபயோகிப்பது ஹராம் என்பது சட்ட அறிஞர்களின் கருத்து.

وحكم هذا الإسراف أنه مكروه إذا كان الماء مملوكا أو مباحا ، أما الماء الموقوف على من يتطهر. ومنه ماء المرافق العامة-فإن الزيادة فيه على الثلاث حرام ، لكونها غير مأذون فيها .

أخرج أحمد والنسائى وابن ماجه من طرق صحيحة أن أعرابيا سأل النبى صلى الله عليه وسلم عن الوضوء فأراه ثلاثا ثلاثا وقال “هذا الوضوء ، فمن زاد على هذا فقد أساء وتعدى وظلم “

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள் மூன்று தடவைக்குமேல் உளு  செய்யும் போது கழுவுகிறவன் பாவியாவான் எனஅஞ்சுகிறேன்.

 قال ابن المبارك : لا آمن إذا زاد فى الوضوء على الثلاث أن يأثم .

ஏதேனும் தேவையிருந்தால் தவிர மூன்று தடவைக்கு மேல் தண்ணீரை பயன் படுத்தக்கூடாது என  அறிஞர்கள் கூறுகிறார்கள்.

وقال أحمد وإسحاق : لا يزيد على الثلاث إلا رجل مبتلى ” نيل الأوطار ج 1 ص 190″

தண்ணீர் தரப்பட்டது குறித்து மறுமையில் கேள்வி உண்டு என்கிறது நபி மொழி

عن أبي هُرَيْرَةَ إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي الْعَبْدَ مِنْ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ وَنُرْوِيَكَ مِنْ الْمَاءِ الْبَارِدِ ترمذي

தண்ணீரை விரயம் செய்வதை தடுப்பதை ஒரு மனிதாபிமான கடமையாக நாம் நிறைவேற்ற வேண்டும்.

தாகத்தால் தவித்துக்  கொண்டிருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பதை நாம் எப்படி கருதுவோமோ அது போல வீண் விரயம் ஆகிர தண்ணீரின் விஷயத்தில் செயல் பட வேண்டும்,

தண்ணீரை முறைகேடாக பயண்படுத்தக் கூடாது என்கிற அதே நேரத்தில் சிக்கணமாக பயன்படுத்துவதற்கான வழி யையும் இஸ்லாம் காட்டுகிறது.

وقد توضأ رسول الله صلى الله عليه وسلم بمد ، وتطهر بصاع وهو أربعة أمداد بمده
روت أم المؤمنين عائشة أنه صلى الله عليه وسلم كان يغتسل بقدر الصاع ويتوضأ بقدر المد


【 இம்மழை காலத்தில் சிரமப்படுவோருக்கு உதவிடுவோம்!!.】

பொதுவாகவே இஸ்லாம் சிரம்படுவோருக்கு உதவுதல் ஓர் அறச்செயலை நன்மாரயம் என்று கூறியுள்ளது. அப்படியென்றால் இம்மழை காலத்தில் சிரமப்படுவோருக்கு உதவிடுவோமா?

وَقَالَ تَعَالي: (وَتَعَاوَنُوا عَلَي الْبِرِّ وَالتَّقْوَي ص وَلاَ تَعَاوَنُوا عَلَي اْلإِثْمِ وَالْعُدْوَانِ۞). (المائدة:٢)

நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்துக்கும் அநியாயத்துக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளவேண்டாம். (அல்மாயிதா:2)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وَسَّعَ عَلَي مَكْرُوْبٍ كُرْبَةً فِي الدُّنْيَا وَسَّعَ اللهُ عَلَيْهِ كُرْبَةً فِي اْلآخِرَةِ، وَمَنْ سَتَرَ عَوْرَةَ مُسْلِمٍ فِي الدُّنْيَا سَتَرَ اللهُ عَوْرَتَهُ فِي اْلآخِرَةِ، وَاللهُ فِيْ عَوْنِ الْمَرْءِ مَاكَانَ فِيْ عَوْنِ اَخِيْهِ. رواه احمد

உலகில் துன்பத்தில் சிக்கியவரின் துன்பத்தை யார் நீக்குகிறாரோ, அவருடைய மறுமையின் துன்பத்தை அல்லாஹுதஆலா நீக்கிவைக்கிறான். உலகில் ஒருவர் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைத்தால், மறுமையில் அவருடைய குறையை அல்லாஹுதஆலா மறைத்துவிடுவான். ஒருவன் தன் சகோதரருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹுதஆலாவும் அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பான்” . (முஸ்னத் அஹ்மத்)

عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ مَشَي فِيْ حَاجَةِ اَخِيْهِ كَانَ خَيْرًا لَهُ مِنْ اِعْتِكَافِهِ عَشْرَ سِنِيْنَ، وَمَنْ اِعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللهِ جَعَلَ اللهُ بَيْنَهُ وَبَيْنَ النّارِ ثَلاَثَ خَنَادِقَ، كُلُّ خَنْدَقٍ اَبْعَدُ مَابَيْنَ الْخَافِقَيْنِ. رواه الطبراني

யாரேனும் ஒருவர் தன் சகோதரரின் தேவைக்காக (உதவிட) நடந்து செல்வது பத்து ஆண்டுகள் பள்ளியில் தங்கி (இஃதிகாஃப்) இருப்பதைவிடச் சிறந்தது. ஒருவர் அல்லாஹுதஆலாவின் திருப் பொருத்தத்திற்காக ஒரு நாள் இஃதிகாஃப் இருந்தால், அவருக்கும், நரகத்திற்கும் இடையே மூன்று அகழிகளை அல்லாஹுதஆலா தடையாக ஏற்படுத்தி விடுகிறான். ஒவ்வொரு அகழியும் வானம், பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிக விசாலமனது” (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: عَلَي كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ، قَالُوْا: فَاِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ، قَالُوْا: فَاِنْ لَمْ يَسْتَطِعْ اَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَيُعِيْنُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوْفِ، قَالُوْا: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيَاْمُرْ بِالْخَيْرِ اَوْ قَالَ: بِالْمَعْرُوْفِ، قَالَ: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَاِنَّهُ لَهُ صَدَقَةٌ. رواه البخاري

முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் தர்மம் செய்வது அவசியம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது அவரிடத்தில் தர்மம் செய்ய எதுமில்லையென்றால் என்ன செய்வது?” என மக்கள் கேட்டார்கள். அத்தகையவர் தமது கரங்களால் உழைத்துத் தானும் பலனடைந்து தர்மமும் செய்யவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதும் அவருக்கு இயலவில்லை யென்றால்”, அல்லது (செய்ய முடிந்தும்) செய்ய வில்லையென்றால்? என மக்கள் கேட்டார்கள் துன்பத்தில் சிக்குண்ட தேவையுடையோருக்கு உதவி செய்யவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இதும் செய்யவில்லையென்றால்?” என மக்கள் கேட்டார்கள், எவருக்கேனும் நல்லதை ஏவவும்” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். இதும் செய்யவில்லை யென்றால்!” என்று மக்கள் கேட்க குறைந்த பட்சம் பிறருக்கு சிரமம் கொடுக்காமலாவது இருக்கட்டும், ஏனேனில், பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவருக்கு தர்மம் தான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)


வெள்ள நிவாரணப்பணியில் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சமூகமும் களமிறங்கினாலும் முஸ்லிம்களின் பொருளுதவியும் உடலுழைப்பும் உலக மீடியாக்களால் வெருக்கத்தக்க வகையில் இருந்தது, என்பது யாவரும்அறிந்தே!. சில இஸ்லாமிய இயக்கத்தினர் தங்களுடைய அடையாளப் பனியனுடனும் சீருடையுடனும் களமிறங்கினாலும் அமைப்பு சாராத ஏராளமான முஸ்லிம்கள் எந்த அடையாளமுமின்றி விளம்பரமுமின்றி வாரி வழங்கினார்கள்; வெள்ளத்தை வடித்தெடுத்தார்கள், என்பதை யாரும் மறுக்க முடியாது.


முன்னரே அறிவித்து விட்டு செய்யப்படும் உதவிகளுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் பேரவுகளின் போது உதவி செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. முன்பே திட்டமிட்டு வசூல் செய்து நிதி திரட்டி உதவி செய்வதற்கும் போர்க்கால நடவடிக்கையின்போது பிரதிபலன் நாடாமல் இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உடனடியாக கையிலிருக்கும் பணத்தை களத்திற்கு கொண்டுவருவதற்கும் களமிறங்கி மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கும் மத்தியில் பெரிய வித்தியாசம் உண்டு. இந்தப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னனியில் இருந்தார்கள். சுனாமியின் போதும், தானே புயலின் போதும் இப்போதைய இந்த மிக்ஜாம் புயலின் போதும் முஸ்லிம்கள் தான் உடனடியாக களத்தில் குதித்தனர். அதுவும் சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் உதவுபவர்களாக இருந்தார்கள், என்பதை மாற்றார்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.


இதற்குக் காரணம் அவர்களுடைய இறைநம்பிக்கையைத் தவிர வேறெதையும் சொல்ல முடியாது. எந்த உலகியல் லாபத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் இந்த உதவிகளை உண்மையான முஸ்லிம் செய்ய மாட்டார்

 சர்வதேச அளவில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். உண்மை அதுவல்ல, என்பதை இது போன்ற இயற்கைப் பேரிடர்கள் உணர்த்துகின்றன. ஆனாலும் காலம் கடந்தபின் இதையெல்லாம் மறந்து விட்டு சர்வதேச மீடியாக்கள் முஸ்லிம்களின் மீது அதே குற்றச்சாட்டை சுமத்தத்தான் போகிறது. எனினும் முஸ்லிம்கள் இதுபோன்ற மலிவான அரசியலுக்காகவெல்லாம் நிவாரணப் பணியில் ஈடுபடுவதில்லை. எது எப்படியிருந்தாலும் நடுநிலையாளர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி நல்ல சிந்தனை தான் என்றும் கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்கள் இதுபோன்ற நிவாரணப் பணிகளிலும் மீட்புப்பணியிலும் ஆர்வமாக பங்கெடுப்பதற்குக் காரணம் அவர்களுடைய இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியும் அருமையான போதனைகளும் தான் காரணம், என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதற்கு சரித்திரமே சான்று.


ஒருவர் தொடர்ந்து நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகியவற்றிற்குக் கட்டுரைகள் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவரை யாரும் பாராட்டுவதில்லை. வாழ்த்துவதில்லை. அதனால் அவர் சோர்ந்து போகிறார். “என்னத்த எழுதி, என்ன செய்ய?” என்று எண்ணுகிறார். எழுதுவதில் ஒரு சடைவும் சோம்பலும் ஏற்படுகிறது. அதனால் எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறார். இந்த நேரத்தில் அவரைச் சந்திக்கிற நாம், “என்ன ஐயா, இப்போதெல்லாம் உங்கள் கட்டுரைகளைப் பத்திரிகைகளில் காணமுடியவில்லையே. ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? நன்றாகத் தானே எழுதி வந்தீர்கள்? நான் உங்களுடைய கட்டுரைகளைத் தவறாமல் வாசித்துவிடுவேன். மிகச் சிறந்த கருத்துகளை உங்கள் கட்டுரைகளில் எழுதி வருகின்றீர்கள். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள் ஐயா” என்று சொன்னால், சோர்ந்து போய்க்கிடந்த அவரது உள்ளம் துள்ளிக் குதித்து எழுந்து எழுதத் தொடங்கிவிடும்.

ஒருவர் பிறருக்கு உதவிகளைச் செய்துகொண்டே இருப்பார். திடீரென அதை நிறுத்திவிடுவார். ஏதாவது கசப்பான அனுபவம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். அவரிடம் உதவிகளைப் பெற்றவனே அவருக்கு உபத்திரவம் செய்திருக்கலாம். அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவர் உதவி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். அவரைச் சந்திக்கிற நாம், “என்ன ஐயா, இப்போதெல்லாம் உங்கள் வீட்டிற்கு உதவி தேடி யாரும் வருவதில்லையே? யாரையும் உங்கள் வீட்டுக்குமுன் பார்க்க முடியவில்லையே? என்னாயிற்று?” என்று கேட்டால் அவரது கசப்பான அனுபவங்களை நம்மிடம் கூறுவார்.

அதைக் கேட்கும் நாம், “அட விடுங்க ஐயா! மனிதர்களே அப்படித்தான். நாம் இவர்களிடம் நன்றியையோ பிரதிபலனையோ எதிர்பார்க்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியதை செய்துகொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் அதற்கான நற்கூலியை ஈருலகிலும் உங்களுக்குத் தருவான். நீங்க கவலைப்படாதீங்க. நீங்க தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டே இருங்க” என்று சொல்லிவிட்டு வந்தால் அவரது மனம் மாறும். புத்தெழுச்சி பெறும். அடுத்தடுத்து அவர் உதவிகளைச் செய்யத் தொடங்கிவிடுவார்.

ஒருவர், தம் வீட்டிற்கு யார் வந்தாலும் உணவுண்ணச் செய்யாமல் அனுப்பமாட்டார். இதனால் ஏழைகள் பலர் பயன்பெற்று வந்தனர். திடீரெனச் சில நாள்களாக அதைச் செய்யாமல் விட்டுவிட்டார். என்ன காரணம் தெரியவில்லை. அவரைச் சந்திக்கின்ற நாம் அவரது சேவையின் தேவையையும் அதனால் ஏற்படுகின்ற பயன்களையும் அவரிடம் எடுத்துக் கூறி, “தொடர்ந்து செய்யுங்கள் ஐயா” என்று ஆர்வமூட்டும்போது அவரும் ஆவலோடு செய்யத் தொடங்குவார்.

ஓர் இளைஞர் போட்டித் தேர்வுகளுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர். அவர் எழுதிய தேர்வுகளில் தோற்றுப் போய்விட்டார். சோகத்தில் உள்ளார். அடுத்து எழுதலாமா, வேண்டாமா என்ற இருநிலையில் உள்ளார். இந்நேரத்தில் அவரைச் சந்திக்கிற நாம், அந்த இளைஞரை உற்சாகப்படுத்தி, “தோல்விதான் வெற்றியின் முதற்படி. இந்தத் தடவை தோற்றால் என்ன, அடுத்த தடவை வெற்றிபெறுவதற்கான நல்வாய்ப்பு உனக்கு இருக்கிறது. தொடர்ந்து படி. அடுத்த தடவை கூடுதல் கவனத்துடன் எழுது” என்று ஆர்வமூட்டினால், நிச்சயமாக நம் வார்த்தைகள் அந்த இளைஞருக்கு ஒரு புதுத்தெம்பூட்டும். நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இப்படிப் பல்வேறு மனிதர்கள் பற்பல கோணங்களில் சோர்ந்து போயிருக்கலாம். அவர்களைச் சந்திக்கிற நாம் அவர்களின் உள்ளுணர்வுகளைத் தூண்டி, தட்டியெழுப்பிவிட்டால் அவர்கள் தம் பாதையில் தொடர்ந்து பயணிக்க உதவியாக இருக்கும். அதுவே நாம் செய்யும் நல்லறமாகும்.

நிவாரணத் தொகை வழங்கிய வள்ளல் நபி:

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு மக்காவில் ஒரு நேரம் பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு அம்மக்களின் மீது இரக்கம் ஏற்பட்டது. அவர்களின் துயர் துடைப்பதற்காக 500 தங்கக் காசுகளை மக்காவுக்கு நிவாரணத் தொகையாக அனுப்பி வைத்தார்கள். மக்கா காஃபிர்கள் முஸ்லிம்களுக்கு எவ்வளவு கடுந்துயரத்தைக் கொடுத்தார்கள்? என்பது பற்றி சரித்திரம் படித்தவர்கள் அறியாமல் இருக்க முடியாது.


தொழும்போது ஒட்டகக் குடல்களை தூக்கி போட்டார்கள். கல்லாலும் சொல்லாலும் அடித்தார்கள். மூன்று வருட காலமாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் ஊர்விலக்கம் செய்து வைத்தார்கள். குழந்தைகளின் கதறலில் கூட இரக்கமில்லாமல் நடந்து கொண்டார்கள். கடைசியாக ஊரை விட்டும் வெளியேற வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள். எனினும், இப்பொழுது அந்த மக்களுக்குத் தான் பஞச்மும் வறுமையும் ஏற்பட்டிருக்கிறது. நபி (ஸல்) அவர்கஅந்த பஞ்சம் பீடித்த மக்களைப் பார்த்து இவர்களுக்கு இதுவும் வேணும். இனியும் வேணும், என்று சொல்லவில்லை.


அந்த மக்களின் மீது இரக்கம் வந்தது. ஐநூறு தங்கக் காசுகளை அனுப்பி வைத்தார்கள். (கரீபோங்கா வாலீ) இதேபோன்று இன்று இந்த வெள்ளத்தில் மாற்றுமதத்தவர்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும் அவர்களுக்கும் முஸ்லிம்கள் உதவி செய்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படக் கூடிய ஒரு கூட்டம் அவர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஒரு கூட்டம் நாட்டில் இருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரையும குறை கூறிவிட முடியாது.

முஸ்லிம்களின் உதவிகளை பெற்றுக் கொண்ட மாற்று மதத்தவர்களும் மனதார வாழ்த்தினார்கள். இக்கட்டான பிரசவ சமயத்திலும் முஸ்லிம்களின் உதவியினால் குழந்தைக்கு சேதாரமின்றி அழகான பெண்குழந்தை பெற்றெடுத்ததும் தங்களுக்கு உதவிய ஒரு முஸ்லிமான ஆணுடைய பெயரை வைப்பதற்கு ஒரு தம்பதியினர் முன்வந்திருக்கிறார்கள், என்றால் அவர்கள் எப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கியிருந்திருப்பார்கள்? என்பதை உணர முடிகிறது. முஸ்லிம்கள் இவ்வாறு தங்களின் பக்கம் ஈர்ப்பதற்காக அரசியல் நோக்கத்தில் தான் இவ்வாறு செய்கிறார்கள், என்று சிலர் கூறுகின்றனர். எனினும், இது போன்ற விமர்சனம் எல்லா காலத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அதை கண்டுகொள்ளத் தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு நிவாரணத் தொகையை அனுப்பி வைத்த சமயத்திலும் கூட அதுவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அபூஸுஃப்யான் முஹம்மத் (ஸல்) மக்காவுடைய ஏழைகளையும் வாலிபர்களையும் ஏமாற்றி நமக்கு எதிராக நிறுத்த நினைக்கிறார், என்று கூறினார்.

【 இம்மழைக்காலத்தில் உடலை பேணுதல் அவசியம்.!!! .】

   மழைக்காலம் வந்ததும் பல்வேறு நோய்கள் படை எடுத்து வந்து விடுகின்றன. அவற்றில் காய்ச்சல்களுக்கே ஒரு பெரிய பட்டியல் உண்டு. டெங்கு, மலேரியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், சிக்குன் குனியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

காய்ச்சல்கள் அல்லாமல் வாந்தி, பேதி, காலரா, கண் நோய், மஞ்சள் காமாலை என்று இதர நோய்களின் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது. இதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசும் தனிநபர்களும் எடுக்க வேண்டும்.

மழைக்காலங்களில் வீடுகள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் நீர் காரணமாக அவை கொசு வளர்க்கும் பண்ணைகளாகி விட்டன.

இந்த நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் இது அல்லாஹ் ஒருவனால் தான் முடியும்.

“உங்களை இதிலிருந்தும், மற்ற எல்லாத் துன்பங்களிலிருந்தும் அல்லாஹ்வே காப்பாற்றுகிறான். பின்னரும் நீங்கள் இணை வைக்கிறீர்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்:6:64)

اللّهُـمَّ إِنِّـي أسْـأَلُـكَ العَـفْوَ وَالعـافِـيةَ في الدُّنْـيا وَالآخِـرَة

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க அல்ஆஃபியத்த ஃபித்துன்யா வல்ஆகிரா

(யா அல்லாஹ்! இவ்வுலகிலும் மறுமையிலும் எனக்கு சுகத்தைத் தருவாயாக!) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பார்கள். [முஸ்னத் அஹ்மத் 4554]

சிலர் எழுதுவதைக் கைவிட்டிருக்கலாம். சிலர் கவிதை எழுதுவதைக் கைவிட்டிருக்கலாம். சிலர் பிறருக்கு உதவி செய்வதை நிறுத்தியிருக்கலாம். சிலர் ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். சிலர் சமூகச் சேவைகள் செய்வதை நிறுத்தியிருக்கலாம். சிலர் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் சோர்ந்து போயிருக்கலாம். சிலர் படிப்பில் தேக்கமடைந்து துவண்டு போயிருக்கலாம். இப்படி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக இருக்கலாம். அவர்களை நம்முடைய நல்வார்த்தைகள் மூலமும் நல்வாழ்த்துகள் மூலமும் தூண்டிவிட்டால் அவர்கள் உற்சாகமடைந்து, தம் பணிகளைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கும் நன்மை. செய்யத் தூண்டிய நமக்கும் நன்மை.


சிலர் தாமும் நன்மை செய்வதில்லை. பிறரையும் நன்மை செய்யத் தூண்டுவதில்லை. வெறுமனே வீணாக இருப்பார்கள். இதுபோன்ற மனிதர்களை முன்வைத்தே இறைவன் இவ்வாறு கூறுகிறான்: ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டவுமாட்டான். (107: 3) وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏


ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டுதல் என்பது ஒரு குறியீடுதான். அதுபோன்று எத்தனையோ நற்செயல்கள் இருக்கின்றன. அவற்றைச் செய்யுமாறு உரியோரை நாம் தூண்ட வேண்டும். தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அச்செயல்களைச் செய்யுமாறு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதனால் அவர்கள் அவற்றைச் செய்யத் தொடங்குவார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு நன்மை கிடைப்பதோடு சமுதாய மக்களுக்கும் மிகப்பெரும் பயன்கள் உண்டாகும். தூண்டிய நமக்கும் நன்மை உண்டு என்பதில் ஐயமில்லை.


عَنْ اَنَسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلدَّالُّ عَلَي الْخَيْرِ كَفَاعِلِهِ، وَاللهُ يُحِبُّ اِغَاثَةَ اللَّهْفَانِ. رواه البزار


நற்செயலுக்கு வழிகாட்டுபவருக்கு, நற்செயல் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும், சிரமப்படுபவருக்கு உதவி செய்வதை அல்லாஹுதஆலா விரும்புகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பஸ்ஸார், தர்ஙீப்)


【 மக்தப் மாணக்கர்களுக்கு…!!.】

! 【 மழைக்காலத்தில் ஓதும் துஆ】 தற்போது மழைக்காலமாக இருப்பதினால் மழைக்காலத்தில் ஓத வேண்டிய சுன்னத்தான சில துஆக்கள் உள்ளன. அவைகளை நம் பள்ளி போடில் எழுதி போடப்பட்டுள்ளது. அதை கொஞ்சம் கொஞ்ச‌மாக மனனம் செய்ய முயற்சிப்போமாக! ஆமீன். 

தற்போது மழைக்காலமாக இருப்பதினால்

  • மழை வேண்டும் போது ஓதும் துஆ,
  • மழை பொழியும் போது ஓதும் துஆ,
  • மழை பொழிந்த பின் ஓதும் துஆ   
  • தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது

என கீழ்கண்ட துஆவை மஸ்ஜித்   போர்டில் எழுதி ஞாபக &  விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் . இதன் மூலம் ஹிதாயத் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

 【 மழை வேண்டும் போது】

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مُرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்ம அஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன் மரீஃஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜிலின்

பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழிய செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏறபடுத்தாத விரைவான தாமதமாகாத மழையை பொழியச் செய்வாயாக!.  அபூதாவுத்

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا

அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா,

பொருள் : யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக!  புகாரி, 

اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ

அல்லாஹும்மஸ்கி இபாதக வ பஹாயிமக வன்ஷுர் ரஹ்மதக வ அஹ்யீ பலதகள் மய்யித

பொருள் :யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளை பரப்புவாயாக! வறண்டு கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக!அபூதாவுத்

【 மழை பொழியும் போது 】

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! [புகாரி]

【 மழை பொழிந்த பின் 】

مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ முதிர்னா பி ஃபள்லிலில்லாஹி வரஹ்மதிஹி

பொருள் : அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது. [புகாரி, முஸ்லிம்]

【தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது】

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வள்ளிராபி வல் அவ்திய(த்)தி வ மனாபிதிஷ் ஷஜரி.

பொருள் : யா அல்லாஹ்! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. [புகாரி, முஸ்லிம்]

சபதம் எடுங்கள்…

இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும் மழையை சேமித்து, மழைக்காலத்தில் சிரமப்படுவோருக்கு உதவிடுவேன் என்று.. ..  எல்லாம் வல்ல அல்லாஹ் ﷻ  அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்.  (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ) ****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******  வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025