இறை நேசர்களாக வாழுங்கள்




இறைநேசர்களாக வாழுங்கள்! அல்லது இறைநேசர்களுடன் வாழுங்கள் 

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏ ۝ } -[ سورة الأحزاب [33]– الآية 70] – صدق الله العظيم / قال رسول الله ﷺ «، أوصاني خليلي صلَّى اللهُ عليه وسلَّم بخصالٍ مِن الخيرِ: ( أوصاني بألَّا أنظُرَ إلى مَن هو فوقي وأنْ أنظُرَ إلى مَن هو دوني وأوصاني بحبِّ المساكينِ والدُّنوِّ منهم وأوصاني أنْ أصِلَ رحِمي وإنْ أدبَرتْ وأوصاني ألَّا أخافَ في اللهِ لومةَ لائمٍ وأوصاني أنْ أقولَ الحقَّ وإنْ كان مُرًّا وأوصاني أنْ أُكثِرَ مِن قولِ: لا حولَ ولا قوَّةَ إلَّا باللهِ فإنَّها كنزٌ مِن كنوزُ الجنَّةِ ، »‏‏ ( رواه صححه ابن حبان )… [إلخ], الى آخره, أو كما عبر الرسول صلى الله عليه وسلم


♣ முன்னுரை: المقد مة INTRODUCTION & துவக்கவுரை:- ♣

 நாமெல்லாம் அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [شعبان] ஷஃபான் மாத‌த்தின் இரண்டாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

 நாமெல்லாம் ரமலானுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம். இன்னும் புனித ரமலான் மாதத்தை அடைய 25 நாட்களே உள்ளன. புனித البراءة பராஅத் இரவையும் நாம் அடைய உள்ளோம் 


✍🏻 அன்புள்ளவர்களே! பராஅத் இரவுடைய அன்றைய நாளில் நம் பள்ளியில் நடைபெறும் அனைத்து அமல்களிலும் நம் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டு அந்நாளை அமல்களின் மூலம் அலங்கரிப்போமாக!.


♣ [நமது பெற்றோர்களின் கப்ருகளை தினசரி ஜியாரத் செய்வோம்.] :- ♣

✍🏻 அன்புள்ளவர்களே! நமது பெற்றோர்கள் ஹயாத்தோடு இருக்கும் பொழுது அவர்களுக்கு செய்ய வேண்டிய எல்லாக்கடமைகளையும் செம்மையாக, சீராக, செய்து விடுகிறோம், ஆனால்; அவர்கள் மவ்த் ஆகிவிட்டால் அவர்களை அடக்கம் பண்ணிய நாளோடு அவர்களின் சந்திப்பு தொடர்பை நிறுத்தி விடுகிறோம். இப்படி செய்வது ஒரு உண்மையான முஃமீனுக்கு அழ‌கல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

நமது பெற்றோர்கள் நமக்கு நல்ல உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் கொடுத்து நம்மை நல்ல முறையில் வளர்த்தார்கள். இன்னும் நாம் இன்றைக்கு இவ்வளவு தூரம் நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறோமே இந்த நல்ல நிலைமைக்கு வந்ததற்கு முக்கிய காரணம் நம்முடைய பெற்றோர்கள் ஆவார்கள். அவர்களை நாம் மறந்து வாழலாமா ? அவர்கள் நம் கண்ணை விட்டு மறைந்தாலும் கல்பை விட்டு மறையாத அளவுக்கு நாம் அவர்களை கல்பினுள் நிலைத்திருக்க செய்ய வேண்டும்.

அதற்க்குத்தான் இஸ்லாம் கப்ரு ஜியாரத் எனும் நற் அமலை நமக்கு கற்றுத்தந்துள்ளது. அவ்வமலை அனு தினமும் நாம் செய்வதோடு நம்மை விட்டும் பிரிந்த நம் பெற்றோர்களை அனு தினமும் அவர்களை சந்தித்து அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்தித்து கொண்டிருக்க வேண்டும்.!!

நம்மை விட்டும் பிரிந்த நம் பெற்றோர்கள் எனது பிள்ளைகளில் எவரேனும் ஒருவர் ஒரு நன்மையை எனக்காக அமல் செய்து சேர்த்து வைக்கமாட்டார்களா? என நம்மிடமிருந்து நன்மையை எதிர்பார்துக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் நாம் அவர்களை கபூர் ஜியார‌த் செய்யும்போது அவர்கள் நம்மளை பார்த்து சந்தோஷப்படுவார்கள். நாம் அவர்களுக்காக வேண்டி யாசின் ஓதிய துஆ செய்கின்ற பொழுது அவர்கள் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். நாமும் அவருடைய கபூருக்கருகில் நின்று துஆ செய்யும் பொழுது, அல்லாஹ்வும் அந்த துஆவை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகின்றது. ஆக இந்த அமலை இடைவிடாது தொடர்ந்து செய்வோமாக!!. 

✍🏻 அன்புள்ளவர்களே! கபூர் ஜியாரத் எனும் இந்த அமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் தந்து கொண்டிருக்கிறது. இந்த அமலை நாம் வருடத்தில் ஒருமுறை மட்டுமே [ ஷஃபான் 15 ல் பராஅத் இரவில்] செய்து வருகிறோம். ஆனால் இவ்வமலை நாம் அனைவரும் அனுதினமும் செய்ய வேண்டிய ஒரு அமலாக; ஒரு உயர்ந்த நம் பெற்றோருக்கு நன்மையை சேர்த்து வைக்கக்கூடிய ஒரு பண்பாக இருக்கிறது இதனை இஸ்லாம் ஆதரித்து அதிக நன்மையை இருவருக்கும் வழங்குகிறது.

ஆக நமது பெற்றோர்களின் கப்ருகளை தினசரி ஜியாரத் செய்து தன் பெற்றோருக்காக தினசரி நன்மைகளை சேர்த்து வைப்போமாக!.. அதனடிப்படையில் கப்ர் ஜியாரத்தின் அவசியமும் அதன் ஒழுங்கு முறைகளும் பற்றி இஸ்லாம். என்ன கூறுகிறது என்பதனைப்பற்றி இன்றைய ஜுமுஆவின் உரையின் மூலம் முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்……

பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன் ✍என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى Allah says in the Qur’an: ♣

【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள‌ குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.

♣ இறைநேசர்களாக வாழ ! இறைநேசர்களுடன் தொடர்பை அதிகப்படுத்துங்கள். [இறைநேசர்களின் கப்ர்களை ஜியாரத் செய்யுங்கள்.] :- ♣

【வலிமார்களோடு அல்லாஹ் [ﷻ] இருக்கிறான்.】

✍🏻 அன்புள்ளவர்களே! வலிமார்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வோடு தொடர்பில் இருந்தார்கள் அதனால் அல்லாஹ் அவர்களோடு இருந்தான்..

فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْن

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். 2:152.

 عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ يَقُولُ اللهُ تَعَالي: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فيِ مَلأٍ خَيْرٍ مِّنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعاً وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعاً تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعاً وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً. رواه البخاري باب قول الله تعالي ويحذركم الله نفسه:٦/٢٦٩٤, طبع دار ابن كثير بيروت

என் அடியான் என்னைப்பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே அவனுடன் நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும் போது நான் அவனுடன் இருக்கிறேன், அவன் என்னை (தன்) மனதில் நினைத்தால் நானும் அவனை மனதில் நினைக்கிறேன், என்னைப் பற்றிச் சபையில் நினைவு கூர்ந்தால் அச்சபையைவிடச் சிறந்த மலக்குகளின் சபையில் நானும் அவனைப் பற்றி நினைவு கூறுகிறேன், என் அடியான் என் பக்கம் ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் ஒரு முழம் அவன் பக்கம் நெருங்கி வருகிறேன், அவன் என் பக்கம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்குகிறேன், அவன் என் பக்கம் நடந்து வந்தால், நான் அவன் பக்கம் ஓடி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 7536 )

ஒருவர் எந்த அளவு மிக அதிகமாக நல் அமல்கள் மூலம் என் நெருக்கத்தைப் பெறுகிறாரோ, அதைவிட அதிகமாக எனது கிருபை, உதவியுடன் அவர் பக்கம் நான் கவனம் செலுத்துகிறேன் (கருணை காட்டுகிறேன்) என்பதாம்.

【நபிமார்கள், வலிமார்கள் உயிரோடு இருக்கிறார்களா?】

ஆம், நபிமார்கள், வலிமார்கள் அவர்களின் கப்ருகளில் இன்றும் ஹயாத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

*இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். [2:154]

 وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ‌ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ‏

*அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். [3:169]

* நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது. [மிஷ்காத் – 120 ]

மவ்த் என்றால் என்ன? இஸ்லாமியத்தில் மவ்த் என்பது நிர‌ந்தர இல்லாமையைக் குறிப்பத‌ல்ல. மாறாக, அழியக்கூடிய இந்த உலகத்தைவிட்டு அழியாத மறுஉலகிற்கு இடம்பெயர்ந்து செல்லுதல் என்பததுதான் ஆழமான கொள்கையாகும். அதனால்தான், இறந்துவிட்ட ஒருவரின் மவ்த் செய்தியை நாம் சொல்லுகின்றபோது. ‘தாருல் ஃபனாவை விட்டும் தருல் பகாவிற்கு’ (அழியக்கூடிய உலகைவிட்டும் அழியாத உலகிற்க்கு) சென்றுவிட்டார் என்கிறோம். எனவே, மவ்த் என்பது ஒரு வாழ்க்கையின் முடிவும் மற்றொரு வாழ்க்கையின் தொடக்கமும் ஆகும். மவ்த் நிர‌ந்தர இல்லாமையைக் குறிப்பத‌ல்ல என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஆழமாக தங்களது நெஞ்சிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும். 

【அவர்களின் வாழ்வு உன்னதமானது…】

எந்த அமலையும் அது சின்னது தானே என எண்ணி கை விடமாட்டாங்க . எந்த தீயதையும் அது மக்ரூஹ தானே என எண்ணி செய்ய மாட்டாங்க .

【நபி[வலி]மார்களை லேசாக கருதாதே.…】

நம் முன்னால் வாழ்ந்த சமுதாய மக்கள் அவர்களுக்கு வந்த இறைத்தூதரை நாமும் மனிதர்கள் தாம் ,அவர்களும் மனிதர்கள் தாம் எனவும் ,நாமும் உண்ணுகின்றோம் , உறங்குகின்றோம் . அவர்களும் உண்ணுகிறார்கள் , உறங்குகிறார்கள் எனவும் சமப்படுத்தி தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள் . அவர்களுக்கும் , தங்களுக்கும் மலை போல வித்தியாசங்கள் உண்டாகி இருந்ததை அவர்கள் குருட்டுத் தன்மையால் அறிந்திருக்கவில்லை ..

 وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰٓى اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا‏

மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. 17:94

مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ

(தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார். 23:33

وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَاْكُلُ الطَّعَامَ وَيَمْشِىْ فِى الْاَسْوَاقِ‌ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ‏

 மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?” 25:7

قَالُوْا مَاۤ اَنْـتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَىْءٍۙ اِنْ اَنْـتُمْ اِلَّا تَكْذِبُوْنَ‏

(அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள். 36:15

இவ்வசனங்களிலும், 21:3, 23:47, 26:154, 26:186 ஆகிய வசனங்களிலும் இது தொடர்பாக‌ அல்லாஹ் பேசுகிறான்.

【நபி[வலி]மார்களை லேசாக கருதியவனின் நிலை…】

اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِيْنَ مَرَّةً فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் – நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் – இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.9:80.

وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ‏

அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள். 9:84.

நபிமார்களை சாதரணமாக எண்ணி அவர்களை பின்பற்றாமல் வாழ்ந்தவர்களுக்கு இந்த நிலை என்றால் . அது போல நாமும் வலிமார்களை சாதரணவர்களாக பார்த்தால் நம் நிலை என்னவாகும். என்பதை பாருங்கள்.

பாருங்கள் ! குளவி, தேனீ இந்த இரு ஜந்துக்களும் ஒரே இடத்திலிருந்தே – அதாவது மலர்களிலிருந்தே மதுவை அருந்துகின்றன. ஆனால் குளவியிலிருந்து விஷ எச்சிலும் , தேனீயிலிருந்து மதுரமான தேனும் உற்பத்தியாகின்றன .

இருவகை மான்கள் புல்லையும் , தண்ணீரையும் தான் அருந்துகின்றன . ஒரு வகையிலிருந்து வெறும் புழுக்கையும் , விட்டையும் மற்ற வகையிலிருந்து கஸ்தூரியும் உண்டாக்கவில்லையா ?

இருவித நாணல்கள் ஆற்றங்கரையிலிருந்து ஒரே வித தண்ணீரை தான் அருந்துகின்றன . அவற்றுள் ஒன்று மூங்கிலாகின்றது . மற்றது இன்பரசத்துடன் கரும்பாகின்றது .இவ்விதம் எத்தனையோ உதாரணங்கள் கூறலாம் .

இன்னும் பாருங்கள் ! ஒருவன் உண்ணுகின்றான் . அவனில் நின்று வெறும் அசுத்தமே உருவாகின்றது . மற்றோருவரும் உண்ணுகிறார் . அது முற்றிலும் இறைவனின் ஜோதியாக (நூர்) மாறுகின்றது . தீயவன் உண்ணுகின்றான் . அதிலிருந்து கோபம் , பொறாமை முதலியன உண்டாகின்றது . நல்லவர் உண்ணுகிறார் . அதன் மூலம் இறை ஜோதிப் பிரகாசமும், ஞானமும், தெய்வீகக் காதலும் உண்டாகின்றன .

நற்கருமங்கள் புரியும் நல்லவர் சுத்தமான ,வளமான நிலமாக இருக்கிறார் . தீய காரியங்களில் தலையிடும் கெட்டவர் உபயோகமற்ற உவர் நிலமாக இருக்கிறார் . முந்தியவர் பரிசுத்தவானாக இருக்கிறார் . பிந்தியவர் துஷ்டராக , அசுரராக இருக்கின்றார் . தோற்றத்தில் அவ்விருவருடைய உருவமும் ஒன்று போலவே ஓத்திருந்த போதிலும் என்ன ?

மேலும் பாருங்கள் ! மதுரமான நல்ல தண்ணீரும் , கரிப்பான உப்புத் தண்ணீரும் பார்வைக்கு ஒன்று போலவே இருக்கின்றன . ஆனால் , நாவில் வைத்து ருசி பார்த்தற்கப்பால் தான் இரண்டிற்கும் வித்தியாசம் தெரிய வருகின்றது . அனுபவித்து அறிபவனைத் தவிர வேறு எவரும் அந்த நீரின் தன்மையை அறிய மாட்டான் . அப்படிப்பட்ட அனுபவசாலிகளையே நீ தேடி அடைதல் வேண்டும் . ஏனெனில் , அவர்களே கசப்பு நீரையும் , மதுர நீரையும் பிரித்தறிவார்கள் . பதார்த்தங்களின் சுவையை ருசித்தறிபவரைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் . தேனையும், மெழுகையும் எப்படி வேறுபடுத்தி அறிய முடியும் ? ” .

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم The Prophet ﷺ said: ♣

【ஜியாரத் செய்யுங்கள். …】

مَنْ حَجَّ وَلَمْ يَزُرْنِيْ فَقَدْ جَفَانِيْ

யார் ஹஜ் செய்து, என்னை ஜியாரத் செய்யவில்லையோ நிச்சயமாக அவர் என்னை வெறுத்துவிட்டார்.

مَنْ زَارَنِيْ بَعْدَ مَمَاتِيْ فَكَأَنَّمَا زَارَنِيْ فِيْ حَيَاتِيْ

நான் மரணித்ததற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்பவர் நான் உயிருடன் இருக்கும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

مَنْ زَارَنِيْ وَزَارَ أَبِيْ إِبْرَاهِيْمَ فِيْ عَامٍ وَاحِدٍ ضَمِنْتُ لَهُ عَلَى اللهِ الْجَنَّةَ

ஒரே வருடத்தில் என்னையும் எனது தந்தை இப்ராஹீம் அவர்களையும் ஜியாரத் செய்தவருக்கு அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

مَنْ زَارَ قَبْرِيْ وَجَبَتْ لَهُ شَفَاعَتِيْ

என்னுடைய கப்ரை ஜியாரத் செய்தவருக்காக என்னுடைய பரிந்துரை கடமையாகிவிட்டது.

ஜியாரத்தினால் இரண்டு விதமான‌ நன்மைகள் கிடைக்கினறன.

أنه يذكرني الآخرة
فإذا رجعت عنهم لم يغتابوا عني

قال خاتم اآلآصم : من مر بالمقابر فلم يفكر لنفسه ولم يدع لهم فقد خان نفسه وخانهم

وهكذا فإن زيارة المسلم للقبور، تجعل المسلم يتخفف من حياته الدنيا، فيقف في القبور وقفة نظر واعتبار، يتدبر أحوال أهل القبور حينما كانوا في الدنيا يتحركون ويعملون، أما الآن فهم لا يقدرون على شيء من ذلك، وإنما يحاسبون على ما قدموا.. ثم ينتبه المسلم ويتفكر في ذاته، فهو عما قريب سيصبح من أهلها، ولذلك فهو يعاهد نفسه على فعل الصالحات في الدنيا، ليدخرها ليوم الحساب، ثم يودع القبور، وقد حظي بقدر من الشفافية يعينه على التزود من الأعمال الصالحة.

ஜியாரத்தினால் கப்ரில் இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள். மரணம் என்பது ஒரு மனிதனின் அழிவல்ல. மரணத்திற்குப் பின் மண்ணறை வாழ்வு உண்டு.

حَدَّثَنِي نَافِعٌ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ قَالَ اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَهْلِ الْقَلِيبِ فَقَالَ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا فَقِيلَ لَهُ تَدْعُو أَمْوَاتًا فَقَالَ مَا أَنْتُمْ بِأَسْمَعَ مِنْهُمْ وَلَكِنْ لَا يُجِيبُونَ

கப்ரை கடந்தால் அவருக்கு சலாம் சொல்லுங்கள் என பெருமானார் சொன்னார்கள். கப்ரில் இருப்பவர்கள் கேட்கிறார்கள். 

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை பற்றிக் கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பானாக” என்றும் கூறினாள். பிறகு அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம். அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை உண்டு” எனக் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற எந்தத் தொழுகையிலும் அடக்கத்தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை. (புகாரி 1372. )

【கப்ர் ஜியாரத் செய்வதின் அவசியம் …】

✍🏻 அன்புள்ளவர்களே!‘ ஜியாரத் زيارة என்றால் என்ன? ஸியாரத் زيارة என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். அதாவது தன் பெற்றோருக்காக நன்மையை சேர்த்து வைக்க வேண்டும். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தனக்கும் ஒரு நாள் மரணம் இருக்கிறது. தானும் இவ்வாறு அடக்கப்படுவோம். தாமும் இவ்வாறு செயல்படுத்தப்படுவோம் என்ற ஒரு சிந்தனையை கண் முன்னால் பிராட்டிக்கலாக‌ காட்டுகிறது இந்த மண்ணறை. ஆதலால்தான் மண்ணறைகளுக்குச் சென்று வர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ كُنْتُ نَهَيْتُكُمْ ‏”‏ ‏.‏ فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ أَبِي سِنَانٍ ‏.‏ رواه مسلم

அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். (முஸ்லிம் 3995)

أنَّ عائشةَ أقبلَتْ ذاتَ يومٍ مِنَ المقابِرِ ، فقلتُ لها : يا أمَّ المؤمنينَ مِنْ أَيْنَ أَقْبَلْتِ ؟ قَالَتْ : مِنْ قَبْرِ عبدِ الرحمنِ بنِ أبي بكرٍ ، فقُلْتُ لَها : أليسَ كانَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ نَهى عنْ زيارَةِ القبورِ ؟ قالتْ : نَعَمْ : ثُمَّ أمَرَ بزيارتِها . وفي رواية عنها أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ رخَّصَ في زيارَةِ القبورِ .

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளை சந்தித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்கு சென்றுவரக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடை செய்திருந்தார்கள். பிறகு அவற்றை சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள். ஹாகிம் (1327)

✍🏻 அன்புள்ளவர்களே! நம் மார்க்கம் முஸ்லிம்களின் மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருதல். அது இருவருக்கும் நன்மையான செயல் எனக்கூறுகிறது.

 ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ:السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً. مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ وَأَتَاكُمْ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) பகீஉல் ஃகர்கத் பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன. ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப் போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோரை நீ மன்னிப்பளிப்பாயாக!) முஸ்லிம் 1773.

மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இறை மறுப்பாளர்களாகவும், இணை வைப்பாளர்களாகவும் இருந்தால் அவர்களின் மண்ணறைகளைப் பார்த்துவிட்டு மட்டும் வருவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடாது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்! என்று கூறினார்கள். முஸ்லிம் 1777

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمِ النَّبِيلُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகின்றன. திர்மிதி 1054

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் வரவழைத்துக் கொள்வதற்குப் பெயர்தான் ஸியாரத் என்பது.

【கப்ர் ஜியாரத் செய்வது ஒரு சுன்னத்தான அமல். …】

ஜியாரத் எதற்காக ? ஜியாரத்தின் முதல் நன்மை நமக்கே!

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ “‏ زُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الآخِرَةَ ‏». (سنن ابن ماجة

இதயம் கடுகடுத்து கண்ணீர் வராத நிலைக்கு ஆளானால் 4 காரியங்களை ஆற்றினால் மென்மையாகும்.

1. حضور مجالس الصالحين
2. ذكر الموت
3. مشاهدة المستحضرين
4. زيارة القبور

وقال أحد الصالحين: إذا ضاقت بك الأمور فعليك بزيارة القبور، فزيارة القبور ترقق القلوب وتذكر الآخرة،

ஜியாரத் மறுமையை நினைவூட்டுகிறது, இங்கே அடங்கியிருப்பவர்கள் பலசாலிகளாக! தலைவர்களாக! பணக்காரர்களாக! வாழ்ந்தவர்கள்தான். நாமும் நாளை இங்கு வரவேண்டியவர்கள்தான் என்ற சிந்தனை வாழ்க்கைய பண்படுத்தும். இன்னும் சொல்வதானால் ஆரோக்கியமான நிலையில் வாழ்க்கையை பண்படுத்த இதைப்போல வேறு பள்ளிக்கூடம் வேறு இல்லை.

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் வரவழைத்துக் கொள்வதற்குப் பெயர்தான் ஸியாரத் என்பது.

【கப்ர் ஜியாரத் செய்வதின் ஒழுங்கு முறைகள் …】

✍🏻 அன்புள்ளவர்களே! நம் இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்கக்கூடிய மார்க்கம் மனித வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் ஒழுக்கம் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் மனிதர்களுக்கு வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்க வரவில்லை மாறாக கொள்கை, வழிபாடுகள் சட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உயர்வான ஒழுக்கத்தை மக்களுக்கு போதித்து ஒழுக்கத்துடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதும் அவரின் வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதனடிப்படையில் கப்ர் ஜியாரத் செய்வதின் ஒழுங்கு முறைகளைப்பற்றி தெரிந்து கொள்ள்லாம் வாருங்கள்.

♦ இஸ்லாத்தின் பார்வையில் கப்றுகளை ஸியாரத்து செய்வது ஆண், பெண் இரு பாலாருக்கும் சுன்னத்தும், முஸ்தஹ்பும் ஆகும். ஜியாரத் செய்வது உயர்ந்த சுன்னத்தான காரியம். ஆண்களுக்கு ஏகோபித்த முறையில் நன்மையான காரியம் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) கூறியுள்ளார்கள். அதே போலவே ஜியாரத் பெண்களுக்கும் ஆகுமான நன்மையான காரியமே. ஆனால் ஜியாரத்தின் போது அந்நிய ஆண்களுடன் எவ்வித திரைகளுமில்லாமல் கலந்து விடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி கலக்கும் நிலை இருந்தால் பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது.

♦ மிஷ்காத்தின் விரிவுரையான‌ “ல‌ம்ஆத்” என்ற‌ நூலில் இமாம் அப்துல் ஹ‌க் முஹ‌த்திக் திஹ்ல‌வி ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி எழுதுகின்றார்க‌ள். “ஜியார‌த் செய்யும் போது முடிந்த‌ள‌வு மையித்தை க‌ண்ணிய‌ப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகும். குறிப்பாக‌ சாலிஹான‌ ந‌ல்ல‌டியார்க‌ளை ஜியார‌த் செய்யும் போது உள்ளும், புற‌மும் ஒழுக்க‌மும், வெட்க‌மும் க‌லந்த‌ நிலையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். ஜியார‌த்து செய்ப‌வ‌ரின் ஒழுக்க‌ம், ப‌க்தி, அட‌க்க‌ம் ஆகியவற்றினடிப்படையில் தான் கபுறாளிகளின் உதவிகள் கிட்டும்.

♦ இருபாலருக்கும் ஜியாரத் ஜாயிஸ் என்பதற்கு குர்ஆன், ஹதீஸில் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக இறைத்தூதர்கள், இறைநேசச்செல்வர்கள் மஜார்களை தரிசிப்பது பாக்கியம் நிறைந்த நடைமுறையாகும். இவ்வாறே இப்னு ஷிஹாபு ரமலீ ரஹ்மதுல்லாஹி அலைஹிமா போன்ற மார்க்க மேதைகள் ஆய்ந்தறிவிப்புச் செய்துள்ளனர்.

♦ ஜியாரத் ஒரு சுன்னத்தான பல்வேறு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமல்தான். ஜியாரத் தூய அன்பிலும் மரியாதையிலும் செய்யப்பட வேண்டும். இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் அல்லாஹ்வின் நல்லடியார்கள். இவர்களது பரகத் நமக்கு வேண்டும். என்ற தெளிவான நம்பிக்கை இருக்க வேண்டும். அல்லாஹ்வை பயப்படாத ஜியாரத் அர்த்தமற்றது.

♦ஜியாரத் செய்யும் போது வுழு செய்து சுத்தமாக செல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஜியாரத் வழிமுறையை நமக்கு காட்டிய சுன்னத்தான காரியமே.

♦ ஜியாரத் செய்யும் போது துஆ ஓதிச்செல்ல வேண்டும் “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று ஓத வேண்டும்.

பொருள் : அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.

♦ மரணித்த கப்றாளிகளுக்கான குர்ஆன் அல்லது குர்ஆனின் இதயம் யாஸீன், மற்றும் ஏனைய சூறாக்களை அவ்விடத்தில் ஓதி அந்த நன்மைகளை அவர்களின் பக்கம் சேர்த்து வைக்க வேண்டும்.

♦ அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களை முன்னிலைப்படுத்தி எமது தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட வேண்டும் “எனது ஹக்கில் துஆ செய்யுங்கள், மேலும் எனக்கு உதவி செய்யுங்கள் அல்லது வலிமார்கள் பொருட்டினால் இறைவனிடம் உதவி தேடுதல் எது எப்படி இருந்தாலும் இதுவெல்லாமே வஸீலாதான் ஆகவே யதார்தத்தில் உதவி செய்வது அல்லாஹ்தான் இந்த வலிமார்கள் பொருட்டால் உதவி செய்கின்றான்.

♦ அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய நபிமார்கள், வலிமார்கள், ஷூஹதாக்களின் கப்றுகளாக இருந்தால் அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால், அருள் எனும் பரக்கத் நாடி அக்கப்றுகளை முத்தமிடல் வேண்டும்.

♦(இபாதத்) என்ற நோக்கத்துடன் கப்ருகளுக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது ஷிர்க் ஆகும், (கண்ணியம் – மரியாதை) என்ற நோக்கத்துடன் கப்ருகளுக்கு ஸஜ்தா தஃழீம் செய்வது கூடாது ஹராமாகும். எது எப்படி இருந்தாலும் கப்றுகளுக்கு ஸஜ்தா செய்வது கூடாது.

♦ ஜியாரத் செய்யும் போது கப்ருகளை சுற்றி வளம்வருவது கூடாது ஆகவே தவாப் என்பது அல்லாஹ்வின் இறையில்லம் கஃபதுல்லாஹ்வை மாத்திரம்தான் சுற்றி வளம் வர வேண்டும்.

♦ ஆண், பெண் இருபாலரும் ஜியார‌த் செய்யும் போது உள்ளும், புற‌மும் ஒழுக்க‌மும், வெட்க‌மும் க‌லந்த‌ நிலையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். ஜியார‌த்து செய்ப‌வ‌ரின் ஒழுக்க‌ம், ப‌க்தி, அட‌க்க‌ம் என்பவற்றை கடைபிடிக்க வேண்டும்.

♦ ஆண், பெண் இருபாலரும் ஒழுக்கமான இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த ஆடம்பெரிய ஆடைகளை அணியாமல் தக்வா எனும் ஆடையை அணிந்து வர வேண்டும்.

♦ ஜியாரத் செய்ய வரும் பெண்கள் ஆகுமாக்கப்பட்ட ஒரு ஆண் துணையுடன் அதாவது (தந்தை, கனவர், சகோதரர்) ஆகியோருடன் வரவேண்டும்.

♦ பெண்கள் ஜியாரத் செய்ய வரும் போது வீதிகளில் அண்ணிய ஆண்களின் அடாவடித்தனம், அண்ணிய ஆண்களின் பித்னாக்களை பயந்தால் வெளியில் செல்லாமல் வீட்டிலே இருக்க வேண்டும்.

♦ ஜியாரத் செய்யும் இடங்களில் மரியாதைமிகு மார்க்கமேதைகளை அழைத்து பல்வேறு தலைப்புகளில் பயான் பண்ணவைத்து இறைநேசச் செல்வர்களின் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும்.

♦ அவர்களுடைய இறைபக்தியையும், ஈமானிய உறுதியையும், தன்னலமற்ற சேவைகளையும் எடுத்தரைத்து அவர்கள் பாதையில் மக்களை நடக்கச் செய்ய வேண்டும்.

【இறைநேசச் செல்வர்களின் வரலாற்றை வாசிப்பது 】

✍🏻 அன்புள்ளவர்களே! நாம் வலிமார்களின் கப்ருகளை ஜியாரத் செய்யும் பொழுது அவர்களின் வரலாற்றை தெரிந்து நம் தக்வாவை / தியாகத்தை / ஈமானை வழுப்படுத்திட வேண்டும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் சுமார் 1000 வசனங்களின் மூலம் முன்னோர்களான நபிமார்கள், அவர் தம் சமுதாயத்தினர் வரலாறு குறித்தும், ஸாலிஹீன்களான இறைநேசர்கள் குறித்தும் எடுத்துக் கூறுகின்றான்.

சில சமயம் வரலாற்றை துவங்குகிற போதும், சில நேரம் வரலாற்றை முடிக்கிற போதும் திண்ணமாக, இவ் வரலாற்றில் அறிவுடையோருக்கு நல்ல பல சான்றுகளும், படிப்பினைகளும் இருப்பதாகக் கூறுகின்றான்.

”கஹ்ஃப் குகை வாசிகள், மர்யம் அலைஹிஸ்ஸலாம், லுக்மான் அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவையில் இருந்த நல்லடியார், மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார், துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம், யாஸீன் சூராவில் கூறப்படும் இளைஞரான இறைநேசர், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா அலைஹிஸ்ஸலாம், சூரா மஆரிஜில் கூறப்படும் அஸ்ஹாபுல் உஃக்தூத்” என ஈமானில் ஏற்றத்தையும் தாக்கத்தையும் உண்டு பண்ணுகிற இறைநேசர்களின் வாழ்க்கையை அல்லாஹ் குர்ஆனில் கூறி வாசிக்கத் தூண்டுகின்றான்.

இறைநேசர்களின் வரலாறுகளை வாசிப்பதால் மாசடைந்த நம் இதயங்கள் தூய்மை பெறுகின்றன.

ஈமானின் நிலை உயர்வை அடைகின்றன. நல் அமல்களின் தரம் ஏற்றம் பெறுகின்றன.

【 பெற்றோரின் மரணத்திற்குப் பின் பிள்ளைகளின் உரிமைகள்:- 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களே! நமது பெற்றோர்கள் ஹயாத்தோடு இருக்கும் பொழுது அவர்களுக்கு செய்ய வேண்டிய எல்லாக்கடமைகளையும் செம்மையாக, சீராக, செய்து விடுகிறோம், ஆனால்; அவர்கள் மவ்த் ஆகிவிட்டால் அவர்களை அடக்கம் பண்ணிய நாளோடு அவர்களின் சந்திப்பு தொடர்பை நிறுத்தி விடாமல் எந்நாளும் அவர்களின் தொடர்பில் இருந்து அவர்களுக்கு நன்மைகளை சேர்த்துவைப்போமாக!!. 

பெற்றோர் மரணித்தால் உடனே பிள்ளைகள் அவர்களை அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டும். அத்துடன் குளிப்பாட்டுதல், கபனிடுதல், ஜனாஸா தொழுகை நடத்துதல், கப்ரில் அடக்கம் செய்தல் போன்றவையனைத்தும் பிள்ளைகள் மீது கடமையாகும். அதில் எல்லா வகையான ஸுன்னத்துக்களையும், முஸ்தஹப்புகளையும் பேணுதல் அவசியம். அதன் காரணமாக மைய்யித்திற்கு நன்மை ரஹ்மத், விஸ்தீரணம் போன்றவை உண்டென்று ஆதரவு வைக்க வேண்டும்.
தமது பெற்றோருக்காக எப்போதும் அவர்களின் பாவமன்னிப்புக்காக துஆ செய்தல் மிகவும் அவசியம்.
நற்கிரிகைகள், தானதர்மங்கள் செய்து அதன் நன்மையை பெற்றோருக்கு எத்தி வைக்க வேண்டும். இயன்ற வரை இதிலே எவ்விதக் குறையும் வைக்கக் கூடாது. நாம் தொழும் போதெல்லாம் அவர்களுக்காக தொழுவதும், தாம் நோன்பு நோற்கும் தோறும் அவர்களுக்காக நோன்பு நோற்றும் அதன் நன்மைகளை பெற்றோர் மற்றும் எல்லா முஸ்லிம்களுக்கும் ஹதியா செய்தல் அவசியமாகும். இதில் அனைவருக்கும் சம அளவுக்குரிய நன்மையே கிடைக்கும். குறைவு ஏதும் ஏற்படாது.
பெற்றோர் மீது கடன் சுமை ஏதேனும் இருப்பின் அதனை பிள்ளைகள் விரைவில் தீர்க்க முயல வேண்டும். அதன்றி பிள்ளைகள் தமது உழைப்பிலிருந்து அக்கடனை தீர்த்து வைப்பதில் ஈருலகிலும் தனக்கு மிகுந்த பிரயோஜனமுண்டு என்பதையறிய வேண்டும். 
பெற்றோர் மீது பர்ளான கடமைகள் ஏதும் மீதமிருந்தால் இயன்றவரை அதனை நிறைவேற்ற வேண்டும். அல்லது முயற்சியாவது செய்ய வேண்டும்.
உதாரணமாக பெற்றோர் ஹஜ்ஜுச் செய்யாது அக்கடமை அவர்கள் மீது மீதமிருந்தால் அதனை தாமோ,அல்லது மற்றவர் மூலமோ பெற்றோருக்குப் பகரமாக ஹஜ்ஜுச் செய்ய வேண்டும். ஜகாத்,(ஏழைவரி), கொடுக்காது அக்கடமை பாக்கியிருந்தால் பெற்றோருக்குப் பகரமாக தாம் அதனைக் கொடுக்க வேண்டும். தொழுகை, நோன்பு போன்றவை பெற்றோர் மீது ‘களாவாக’ இருப்பின் பிள்ளைகள் அதற்குக் ‘கப்பாரா’ கொடுக்க வேண்டும். இவ்வாறே எல்லா ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு நன்மையானதைச் செய்ய முயலுதல் மிகவும் அவசியம்.

மார்க்கத்துடைய ஷரீஅத் சட்டம் அனுமதிக்கும் வண்ணம் பெற்றோர் ‘வஸிய்யத்'(இறுதி உபதேசம்) செய்திருப்பின் முடிந்தவரை அதை நிறைவேற்ற முயல வேண்டும். ஷரீஅத்துடைய சட்டப்படி தம் மீது அவசியமில்லாத ஒன்றாயிருப்பினும் கூட அது தமக்கு நன்மை செய்யுமென்று எண்ணிச் செய்ய வேண்டும்.
உதாரணமாக, எவரேனும் பெரியார்கள், வாரிசுகள் உரிமையற்ற அன்னியர்கள் போன்றோருக்கு வஸிய்யத் செய்திருப்பின் அதனை வாரிசுகளின் அனுமதியின்றி கொடுப்பது ஷரீஅத்துடைய சட்டப்படி கொடுப்பது கூடாது. இருப்பினும் பெற்றோரது இறுதி உபதேசங்களை பிள்ளைகள் ஏற்று அவர்களின் மனத்திருப்திக்கா ஆத்ம சாந்திக்காக நிறைவேற்றுதல் கூடும்.

பெற்றோரின் மரணத்துடைய மறைவுக்குப் பின்பும் கூட அவர்கள் செய்து கொடுத்த சத்தியங்கள், வாக்குத்தத்தம் போன்றவைகளைக் காப்பாற்ற வேண்டும்.

உதாரணமாக, இறப்புத் தருவாயில் தன் பிள்ளையிடம், நீ இன்ன நபருடைய வீட்டிற்குப் போகக் கூடாதென்றோ, அல்லது இன்ன மனிதருடன் சேரக் கூடாதென்றோ, சத்தியம் செய்து கூறியிருப்பின் அதை பிள்ளைகள் ஏற்று நடக்க வேண்டும். அவர்கள் தான் தற்போது நம்மிடம் இல்லையே! ஆதலால் நாம் அவர்களின் சத்தியத்தைக் காப்றாற்ற வேண்டிய அவசியமில்லை என்று எண்ணி, மேற்படி பெற்றோரின் சத்தியத்தை முறித்தல் கூடாது. மாறாக பெற்றோர் உயிரோடிருக்கும் தருணத்தில் எவ்வாறு அவர்களது பேச்சைக் கேட்டு பிள்ளைகள் நடந்து கொள்வரோ, அவ்வாறே அவர்களது இறப்புக்குப் பின்னரும் நடந்து கொள்ளல்மிக மிக அவசியம். ஷரீஅத்திற்கு முரணான செயல்களாயிருப்பின் அதனைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. மார்க்கம் அனுமதிக்கத் தக்க விஷயங்களாக பெற்றோர்களது சத்தியங்கள் இருப்பின் அவைகளை நிறைவேற்றி பிள்ளைகள் தமது பெற்றோரின் திருப்தியைப் பெற முயல வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தமது பெற்றோரின் கப்ரை ஜியாரத்துச் செய்ய போக வேண்டும். அங்கு சென்று சப்தத்துடன் ஸூறா யாசீனை ஓதி அதன் நன்மையை அவர்களது ஆன்மாவுக்கு (ரூஹுக்கு) சேர்த்து வைக்க வேண்டும். சப்தமிட்டு ஏன் ஓத வேண்டுமெனில், நீங்கள் அவ்வாறு ஓதுவததை அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மைய்யித்துக்கள் கேட்கின்றனர் என்பதாலும், அவர்களுக்கு தம் இறைவனைக் குறித்து உண்டான அறிவு மென்மேலும் விரிவடைவதால் இவ்வாறு சப்தமிட்டு ஓத வேண்டும். அவசரமான அலுவல் நிமித்தம் தமது பெற்றோர்களது கப்ருகள் உள்ள ஸ்தலத்தை கடக்க நேரிட்டால் கண்டிப்பாக அங்கு ஒரு வினாடியேனும் தாமதித்து ஸலாமும் பாத்திஹாவும் ஓதி விட்டுச் செல்லுதல் மிகவும் அவசியம்.
தமது பெற்றோரது உறவினர்களுடன் வாழ்நாள் முழுவதும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.
பெற்றோரது நண்பர்களுடன் பிள்ளைகளும் நட்புறவு கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அந்த நண்பர்களுக்கு மதிப்பும் கண்ணியமும் தர வேண்டும்.
எப்போதும் எவர் பெற்றோரைப் பற்றியும் தாழ்வாக எண்ணவோ, பேசவோ கூடாது.
பிள்ளைகள் ஏதேனும் ஷரீஅத்திற்குப் புறம்பான விலக்கப்பட்ட பெரும் பாவங்கள் போன்ற காரியங்களை செய்து அதன் காரணமாக கப்ரிலுள்ள தமது பெற்றோர்களுக்கு கஷ்டம் கொடுத்தல் கூடாது. ஏனெனில் பிள்ளைகளது ஒவ்வோர் செயலும் அவரது பெற்றோர்களுக்கு உடனுக்குடன் அவ்வப்போது எடுத்துக் காண்பிக்கப்படுவதால் பிள்ளைகள் நன்மையான காரியங்களை செய்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களின் முகமும் பிரகாசிக்கத் தலைப்படுகின்றது. அவ்வாறின்றி பிள்ளைகள் பாவம் செய்தால் அதன் காரணத்தால் பெற்றோர் துக்கமடைகின்றனர். அத்துடன் அவர்களது உள்ளத்தில் ஒருவித வேதனையும் வலியும் உருப் பெறுகின்றது. பெற்றோர் இறந்து கப்ரில் அடக்கப்பட்ட பின்னரும் அவர்களது மனதில் வலியை வேதனையை ஏற்படுத்துவது பிள்ளைகளுக்கு உகந்த செயலல்ல என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.
எனவே இரக்கமுடையோனும் மன்னிக்கிறவனுமான இறைவன் தனது ஹபீபாகிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் முஸ்லிம்களனைவரும் நன்மையான செயலை செய்வதற்கு தவ்பீக் என்னும் அருள் பாலிப்பானாக! நம்மை பாவங்களை விட்டும் காப்பானாக! நமது முன்னோர்களின் (பெற்றோர்களின்) கப்ருகளை பிரகாசமுடையதாக்கி மனமகிழ்ச்சியைத் தந்தருள்வானாக. அவனே மாபெரும் தத்துவமுடையவன். அவனே தேவையற்றவன்.

சில ஹதீதுகளும், அதைக் கொண்டு பெறப்படும் சட்டங்களும்…

ஒரு அன்சாரி நபித் தோழர் அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் வந்து, நாயகமே! பெற்றோர் இறந்தபின் அவர்களுக்காக நான் செய்ய வேண்டிய கடமை ஏதேனும் என்மீது உள்ளதா? என்று வினவ, அதற்கு நபியவர்கள், ஆம்! உம்மீது நான்கு கடமைகள் உள்ளன. அவை:

அவர்களுக்காக நீர் தொழுது அதன் நன்மையை அவர்கள் மீது எத்திவைக்க வேண்டும்.
அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவர்களது ஹக்கில் நீர் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.
அவர்கள் தமது மரணத்தருவாயில் உமக்குச் செய்த இறுதி உபதேசங்களை நீர் பேணி நடக்க வேண்டும்.
அவர்களது நண்பர்களு;ககுக் கண்ணியமளித்து, அவர்கள் உமக்கு உறவுமுறை இல்லாவிடினும் அவர்களது உறவினர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும். அவர்களது மரணத்திற்குப் பின் அவர்களுக்கு நன்மையானவற்றை சேர்த்து வைக்க வேண்டும். (இப்னு நஜ்ஜார், பைஹக்கி, அபீதாவூத், இப்னு மாஜா)
【 சபதம் எடுங்கள்】.

✍🏻 அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து எனது மவ்த் வரைக்கும் எனது பெற்றோர் ஹயாத்தோடு இருக்கும் போதும் – அவர்கள் மரணித்த பின்பும், அவர்களுக்கு செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுவேன். ஒவ்வொரு அமல்களிலும் இறை பொருத்தம் பெற முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என்று.. சபதம் எடுங்கள்

ஆக அல்லாஹ் அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்.

✍🏻✍🏻நன்றியுரை:- تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا ويشرح صدورنا

“‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!!ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-

எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா.
உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-
உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் +919487007358 & ٩٩٤٢٤٠٧٣٥٨ . நான் விவசாயி..

மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபி
உதவியாசிரியர்:-
உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் +918754089943.

இக்கட்டுரை வெளி வர மஷ்வரா [அலோசனை] தந்த அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும் பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ கைரன்.

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ


✍🏻✍🏻 எனக்கு இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை எழுத ஊக்கமும், உறுதுணையும், ஒத்துழைப்பும் தந்த ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உஸ்தாதுக‌ளுக்கும் & திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை உலமா நண்பர்களுக்கும். ஜஸாகல்லாஹ். வஸ்ஸலாம். ✍🏻✍🏻

நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.
ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே குறிப்புரையாக தரப்படுகின்றன, இவற்றை அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.
நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் இணையதள முகவரி

https://vellimedaikal.wordpress.com/
நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் இமெயில் முகவரி

bayanpdf@gmail.com
உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ

ஜஸாகல்லாஹ். ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உலமாக்கள். வஸ்ஸலாம்
நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் முகநூல் முகவரி

https://www.facebook.com/profile.php?id=100009486147372

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் Google + முகவரி

https://plus.google.com/u/0/105334692200015285184

உங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்வு செய்ய கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க..

https://vellimedaikal.wordpress.com/2016/10/02/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை/

SHARE THIS:
TwitterFacebook
Loading...
RELATED
சிறைவாசிகளுக்கு சிறகுகள் முளைக்க பிரார்த்தனை செய்வோம்.
12/09/2022
Liked by 1 person
அறிவிப்பு செய்திகள்…
02/02/2020
கஷ்டமே ரப்புக்கு இஷ்டம்!!!
03/06/2021
Liked by 1 person
PUBLISHED BY

ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புரைத்தளம்… موقع خطب الجمعة
✍🏻 ✍🏻 தாங்கள் எங்களது ஜுமுஆ பயான் குறிப்புரைகளை WhatsApp / Telegram - ல் பெற தங்களின் WhatsApp / Telegram நம்பரிலிருந்து +919942407358 - என்ற WhatsApp / Telegram எண்ணுக்கு j-bayan என டைப் செய்து. ஒரு Message அனுப்புங்கள். உஸ்தாத். ✍🏻 ✍🏻 தாங்கள் எங்களது ஜுமுஆ பயான் குறிப்புரைகளை இமெயில் முகவரியில் பெற தங்களுடைய இ-மெயில் முகவரியிலிருந்து bayanpdf@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தங்களின் பெயர். ஸனது. போன் நம்பர் இம்மூன்றையும் டைப் செய்து / எழுதி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🤝🏻🌹நல்லது உஸ்தாத் பாரகல்லாஹ். 💐 View all posts by ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புரைத்தளம்… موقع خطب الجمعة 

Posted on21/12/2022Authorஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புரைத்தளம்… موقع خطب الجمعة
3 thoughts on “இறைநேசர்களாக வாழுங்கள்! அல்லது இறைநேசர்களுடன் வாழுங்கள்!!..”
COMMENT NAVIGATION
OLDER COMMENTS
Pingback: 2023- ஆம் வருட ஜுமுஆ குறிப்புரைகள் விபரம். – ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறி�
COMMENT NAVIGATION
OLDER COMMENTS
Leave a comment
Post navigation
PREVIOUS
Previous post:
“தேச ஒற்றுமை மாநாடு – 2023…!!!”
NEXT
Next post:
ஈமானில் உறுதியென்றால்? இப்படி இருக்கணும்…
Create a free website or blog at WordPress.com.

Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்