Skip to main content

நோன்பினை அலங்கரிப்போம்

 நோன்பினை அலங்கரிப்போம்!! ஆரோக்கியமா{க்]குவோம்!!!.
📚 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 📚

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

ம் நோன்பினை அலங்கரிப்போம்!! ஆரோக்கியமா{க்}குவோம்!!! அதாவது;

✍🏻ந‌ம் நோன்பினை அலங்கரிப்போம்:- பொதுவாக நாம் எல்லோரும்; அழகாக இருப்பதையும், அழகிய செயலையும், விரும்புவோம். அது போல்; நம்முடைய ரப்பு  இந்நோன்பின் மூலம் நம்மிடம்  அழகிய செயல்களை /அமல்களை எதிர்பார்க்கிறான். அதற்குத்தான் ந‌ம் நோன்பினை அமல்களால் அலங்கரிப்போம் என்றும்,

✍🏻ஆரோக்கியமாகுவோம்:- நாம் நோற்கின்ற நோன்பில் நிறைய மருத்துவகுண‌ங்கள் நிறம்பியுள்ளன. நோன்பு நோற்பதினால் நம் உடல்; நம் உள்ளம்  ஆரோக்கியமாகிறது. அதற்குத்தான்ஆரோக்கியமாகுவோம் என்றும்

✍🏻 ஆரோக்கியமாக்குவோம்:- நோன்பு நோற்கிற நாம் தீமை /பாவம்  செய்து அந்நோன்பினை மாசுபடுத்தாமல், நோய் என்கிற பாவம் அதிகம் செய்யாமல் அந்நோன்பினை பாதுகாத்து ஆரோக்கியமாக்குவோமாக!!!சம்பந்தமாக‌  ஜுமுஆ குறிப்புரை] 

அல்லாஹ்வின் ﷻ பேரருளால்  [ رمضان  ]   ரமளான் மாதத்தின் முதல் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

  • இந்த மாதமும் புனிதமானது [ரமளான் மாதம்]
  • இன்றைய நாளும் புனிதமானது [வெள்ளிக்கிழமை]
  • இந்த இடமும் புனிதமானது [பள்ளிவாசல்]
  • இந்த நேரமும் புனிதமானது [ஜுமுஆவுடைய நேரம்]
  • இதனோடு சேர்ந்து நாமும் புனிதமான நோன்பை வைத்துள்ளோம்.
  • இதனையெல்லாம் ஒன்று சேர்ந்து நமக்கு கிடைத்திருப்பது மிகப்பெரும் பாக்கிமல்லவா?

ஆக‌ கடந்த சில நாட்களாக அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து வருகிறோம். இன்னும்  மீதமுள்ள எல்லா நோன்புகளையும்இதர வணக்கவழிபாடுகளையும் எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாகஆமீன்!!. என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன். 

✍🏻 2023 – ஆண்டு ரமளான் நம்மிடம் வந்துள்ளது அதனை எப்படியெல்லாம் அமல் செய்து அழ‌காக்கப்போறோம்… & அலங்கரிக்க‌ப்போறோம்…

✍🏻 இப்புனித ரமளானில் அமல் செய்யும் வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும்போது அதனை  எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? சம்பந்தமாகவும்;

✍🏻 ஸஹாபாக்கள் – நல்லடியார்கள் – சூஃபியாக்கள் – தனக்கு அமல் செய்யும் வாய்ப்புகள் கிடைத்த போது அவ்வாய்ப்புகளை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள்! சம்பந்தமாகவும் இன்றைய ஜுமுஆ உரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى ♣

 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் [அல்குர்ஆன் 2:183]

وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۚ  ۙ‏

(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.. [அல்குர்ஆன் 56:10.]

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏”‏‏.‏

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ﷺ அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’  [ஸஹிஹ் புஹாரி 8] 

 عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ، الصِّحَّةُ وَالْفَرَاغُ

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு (புஹாரி6412) 

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

【காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:-

 நாம் பள்ளியில் படிக்கும் போது; நாம் நல்லமுறையில் படிக்க வேண்டும் என்பதற்க்காக ந‌ம் ஆசிரிய பெருந்தகை அவர்கள் அடிக்கடி  நமக்கு “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழியை உபதேசிப்பதை நாம் கேள்விபட்டிருப்போம்.

【காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:-】நெற்கதிர்களை அறுத்து அதனைக் களத்தில் அடித்துப் பதரினைப் போக்கக் காற்றுவீசும்போது தூற்றுதல் வேண்டும். அவ்வாறு தூற்றினால் பதறினைக் காற்று அடித்துத் தூரத்தில் கொண்டு சென்று போட்டுவிடும். நல்ல நெல்மணிகள் தனியாக ஒதுங்கும்.

காற்றடிக்காத போது நெல்லைத் தூற்றினால் பதரானது அப்படியே நல்ல நெல்மணிகளுடன் கலந்து அப்படியே இருக்கும். அதுபோலவே மனிதன் வாய்ப்புகள் இருக்கும்போது கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

நோன்பு காலங்களில் அதிக நன்மை பெற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தாவிட்டால் நம்மை போல் அல்லாஹ்வின் அருளை விட்டும் துரமானவன் யாரும் இருக்க முடியாது. ஆக இதுவரை தவறில் மூழ்கி இருந்தோம். இனி இறைதவத்தில் மூழ்கிடுவோம்.

போன வருட நோன்பு நம்மை விட்டுப் பிரிந்த பிறகு தான் நாம் யோசிக்கின்றோம் ஐயோ! நான் ரமழான் மாதத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டேனே! எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு நான் உயிருடன் இருப்பேனா? என்று கூட எனக்குத் தெரியவில்லையே ! என்று புலம்பித் திரிகின்றோம்.  போன காலம் போய்விட்டது  இப்போது எம்மை ரமழான் மாதம் வந்தடைந்துள்ளது. எனவே ரமழானை சிறப்பாகப் பயன்படுத்துவோம்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற இப்பழமொழி ஓர் அழகிய கருத்துக்கள் நிறைந்த‌ பழமொழியாகும். இப்பழமொழி நமக்கு 2 விதமான செய்திகளை / பாடங்களை கற்றுத்தருகிறது. அதாவது

  1. வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை நாம் நமது நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  2. ”காற்றுள்ள போதே” [இந்த உடலில் மூச்சுக் காற்று இருக்கும் போதே] தூற்றிக்கொள் [நல்ல செயல்களை செய்ய வேண்டும்] என்பதாகும்.

இந்த உலகில் சாதனையாளர்கள்‍ தலைசிறந்த கல்வியாளர்களிடம் சென்று நீங்கள் எப்படி வாழ்கையில் முன்னேரினீர்கள்? என்று கேட்டுப்பாருங்கள். அதற்க்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில்; நாங்கள் எங்கள் வாழ்கையில் முன்னேற ஒரு சந்தர்ப்பம் / வாய்ப்பு கிடைத்தது அதனை பயன்படுத்தினோம் அதனால் முன்னேரினோம் என்று கூறுவார்கள். அது போல நாமும் ஈறுலக வாழ்விலும் முன்னேர நமக்கு கிடைக்கும் இந்த ரமலான் எனும் சந்தர்ப்பம் / வாய்ப்புகளை அமல் செய்வதின் மூலமாக முன்னேரிடுவோமாக!

【அமல் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் உடனே அதனை செய்திடு:-…】

 நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட.. முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிறுத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான்.

காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள்; அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான். ஒருவர் ந‌ஃபிலான தொழுகையை  தொழாதவராக இருப்பார்; தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே ந‌ஃபிலான தொழுகையை தொழுதிட வேண்டும்.

அப்பறமா தொழுவோம்! .. நாளைக்கு தொழுவோம் .. என்று சொல்லி நமக்கு நாமே ஏமாத்தி கொள்ள கூடாது.

நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும்.

இன்னாருக்கு இன்னத் தேவைக்காக இவ்வளவு பணம் / பொருள் கொடுத்து உதவிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே தாமதிக்காமல் கொடுத்து உதவிட வேண்டும்.

【நம் நபியிக்கு நன்மை செய்ய‌ வாய்ப்பு கிடைத்ததும் உடனே அதனைவிரைவு படுத்திய‌ செயலை பாருங்கள்!:-】

நம் நபியிடம் (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று இருந்தது. அது தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்ததும் [அதை பிறகு செய்யலாம் என்று எண்ணாமல்] உடனே தாமதிக்காமல் அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தார்கள்.

 عَنْ عُقْبَةَ، قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ “” ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ “”

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ புகாரி (851)

【ஸஹாபாக்களுக்கு நன்மை செய்ய‌ வாய்ப்பு கிடைத்ததும் உடனே அதனைவிரைவு படுத்திய‌ செயலை பாருங்கள்!:-】

ஒரு ஸஹாபி உஹுதுப் போர் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நான் அதில் சீக்கரம் கலந்து கொள்ள வேண்டும். ஷஹீதின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆசை அவர் மீது அதிகமாக இருந்தது. [கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று தாமதிக்க வில்லை] 

جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا قَالَ “” فِي الْجَنَّةِ  فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ.

உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். புகாரி (4046)

عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ أَعْرَابِيّاً أَتَي النَّبِيَّؐ فَقَالَ: دُلَّنِي عَلَي عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: تَعْبُدُ اللّٰهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمُ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَي هذَا، فَلَمَّا وَلَّي قَالَ النَّبِيُّؐ : مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَي رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَي هذَا. رواه البخاري 

“கிராமவாசி யொருவர், அருமை நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் திருத்தூதரே, என்னைச் சுவனத்தில் நுழையச் செய்யும் செயலைக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார். “அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பீராக! பர்ளுத் தொழுகைகளை நிலை நிறுத்துவீராக! பர்ளான ஸகாத்தை நிறைவேற்றுவீராக! ரமளான் மாதம் நோன்பு வைப்பீராக!’ என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி, “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை! (தாங்கள் கூறிய அமல்களை சொன்னபடி செய்து வருவேன்) இவற்றில் எதையும் அதிகரிக்கமாட்டேன்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். “யாரேனும் சுவனவாசியைக் காணவிரும்பினால் இவரைக் கண்டு கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5983)

  • ஸஹாபாக்களிடத்தில் மது ஹராம் என்று சொன்னதும் மது ஆறு தெருவில் ஓடியது.
  • ஸஹாபாக்களிடத்தில் வட்டி ஹராம் என்று சொன்னது அவ்வட்டியை உடனே தள்ளுபடி செய்தனர் 
  • செல்வந்த ஸஹாபாக்கள் ஏழை ஸஹாபாக்கள் ஸதகா நன்மை பெற போட்டி போட்டனர்
  • இவற்றையெல்லாம் ஸஹாபாக்கள் பின்னாடி [காலம் தாழ்தி] செய்வோம் என்று சொல்லவில்லை உடனே செய்தார்கள். ரப்பின் பொருத்தம் பெற்றார்கள்

【நமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்தால் கிடைக்கும் தண்டைனைகள்:-】

✍🏻 இன்றைய காலையில் நாம் சுப்ஹு தொழுகையை தவற விட்டோம் என்றால் அந்த தொழுகை + அதே நன்மை + அந்த நேரத்தில் கிடைக்குமா?  நேரம் போக… போக.. அடுத்தடுத்த நேரத்தின் நன்மைகளையே பெற முடியும். ஆதலால் கிடைத்த நேரத்தில் அமல்கள் செய்வோமாக?

【நமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்த அபூதாலிப்:-】

عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لِعَمِّهِ : قُلْ لاَ إِلهَ إِلاّ اللهُ، أَشْهَدُ لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ، قَالَ: لَوْ لاَ أَنْ تُعَيِّرَنِي قُرَيْشٌ يَقُولُونَ: إِنَّمَا حَمَلَهُ عَلي ذلِكَ الْجَزَعُ لأَقْرَرْتُ بِهَا عَيْنَيْكَ، فَأَنْزَلَ اللهُ: (إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلكِنَّ اللهَ يَهْدِي مَنْ يَشَآءُ۞) الآية. رواه مسلم 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை (அபூதாலிப் அவர்களிடம், அவரது மரண நேரத்தில்) தாங்கள் லாஇலாஹ இல்லல்லாஹு” என்ற கலிமா சொல்லிவிடுங்கள், நான் கியாமத் நாளில் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன்” என்று சொன்னபோது, அபுதாலிப் மரணத்திற்குப் பயந்து கலிமாச் சொல்லிவிட்டாரென்று குறைஷியர்கள் குத்திப் பேசுவார்கள் என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால், நிச்சயமாக நான் கலிமாச் சொல்லி உம்முடைய கண்களைக் குளிரவைத்துவிடுவேன்” என்று கூறினார். அப்பொழுது, (إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلكِنَّ اللهَ يَهْدِي مَنْ يَشَآءُ) நபியே, நீங்கள் விரும்புபவர்களுக்கு நேரான வழியைக் கொடுக்க முடியாது, அல்லாஹுதஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான்” என்ற ஆயத்தை அல்லாஹுதஆலா இறக்கி வைத்தான்”. (முஸ்லிம்)

【நமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்த ஹாஜி:-】

وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَمْنَعْهُ مِنَ الْحَجِّ حَاجَةٌ ظَاهِرَةٌ أَوْ سُلْطَانٌ جَائِرٌ أَوْ مَرَضٌ حَابِسٌ فَمَاتَ وَلَمْ يَحُجَّ فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا» . رَوَاهُ الدَّارمِيّ

எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளை அல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லது கிருஸ்துவனாக மரணிக்கட்டும். திர்மிதி  812

【பிற்காலத்தில் யோசித்து வருந்தும் முன் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திடு..】

நோன்பு எனும் பாக்கியத்தில் அதிக நன்மை பெற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தாவிட்டால் நம்மை போல் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவர் யாரும் இருக்க முடியாது. 

சிலருக்கு நோன்பு வைக்க வசதி வாய்ப்பு இருந்தாலும் நோன்பு வைக்க முடிவதில்லை. ஆனால் அல்லாஹ் எனக்கு நோன்பு வைக்கும் பாக்கியம் கொடுத்துள்ளான். என நினைத்து கவனமாக & பேணுதலாக நோன்பின் அமல்களை செய்ய வேண்டும். நோன்பு முடிந்த‌ பிறகுதான்  யோசிக்கின்றோம் ஐயோ! நான் நோன்பை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டேனே! அடுத்து நோன்பை பெற நான் உயிருடன் இருப்பேனா? என்று கூட எனக்குத் தெரியவில்லையே ! என்று புலம்பித் திரியாமல். செய்யும் போதே திருந்த செய்வோமாக!.

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். {அல்குர்ஆன் 63:10.}

وَلَوْ تَرٰٓى اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًـا اِنَّا مُوْقِنُوْنَ‏

மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் – ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்). {அல்குர்ஆன் 32:12.}

[நாம் இந்த நோன்பின்  மூலம் ரப்பை அடைவோம்:-]

 قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ. وَالصِّيَامُ جُنَّةٌ

‘‘ஆதமுடைய மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும். ஆனால், நோன்பைத் தவிர! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். (புகாரி 1904) 

[நாம் நம் நோன்பினை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்:-]

நாம் இப்போது ஒரு வீடு கட்டப்போகிறோம் என்றால் முதலில் ப்ளான் போடுவோம். இந்த ரூம் இத்தனை அடி, இன்னொரு ரூம் இத்தனை அடி என ப்ளான் போட்டு கணக்கு பார்த்து தான் வீடு கட்டுவோம். அப்படி கட்டினால் தான் வீடு அழகாகும். வீடும் ஒரு அமைப்பாக இருக்கும். ப்ளான் இல்லாமல் கட்டினால் வீடு கோனல்மானலாக, அசிங்கமாக, பணம் வீண்விரயமாக, காலம் வீணாகி விடும். பிறகு வருத்தப்பட வேண்டியதாகி விடும்.

அது போல நம் நோன்பினை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் சமபந்தமாக  ஒரு ப்ளான் [ஸ்கெட்ஜ்] போட  போட வேண்டும்.

[நாம் இந்த நோன்பின் தஹஜ்ஜத் தொழுகையின் மூலம் அலங்கரிப்போம்:-]

நாம் ஸஹருக்கு எழும்போது 15 நிமிடத்திற்க்கு முன்னால் எழுந்து தொழுவோம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: رَحِمَ اللهُ رَجُلاً قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّي ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّي فَإِنْ أَبَي نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ.

ஒருவர் இரவில் எழுந்து தஹஜ்ஜத் தொழுதுவிட்டுத் தன் மனைவியையும் எழுப்புகிறார், அவளும் எழுந்து தொழுகிறாள் (தூக்கம் மிகைத்து) அவள் எழவில்லையென்றால், அவள் முகத்தில் லேசாகத் தண்ணீரைத் தெளித்து எழுப்பிவிடும் மனிதர் மீது அல்லாஹ் அருள் புரிவானாக! அவ்வாறே, ஒரு பெண் இரவில் எழுந்து தஹஜ்ஜத் தொழுதுவிட்டுத் தன் கணவரை எழுப்பினாள், அவரும் எழுந்து தொழுதார், அவர் எழவில்லையென்றால், அவர் முகத்தில் லேசாகத் தண்ணீரைத் தெளித்து எழுப்பிவிடும் பெண்மணியின் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக!” [ அபூதாவூத் 1308)

عَنْ جَابِرٍؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْاَلُ اللهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَذلِكَ كُلَّ لَيْلَةٍ.

“நான் நபி ﷺ அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

– أَفْضَلُ الصِّيامِ، بَعْدَ رَمَضانَ، شَهْرُ اللهِ المُحَرَّمُ، وأَفْضَلُ الصَّلاةِ، بَعْدَ الفَرِيضَةِ، صَلاةُ اللَّيْلِ

கடமையான தொழுகைகளுக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்.” ( முஸ்லிம்-2157 )

عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَي كُلَّ لَيْلَةٍ إِلَي سَمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقي ثُلُثُ اللَّيْلِ اْلآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْاَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ له؟

ஒவ்வொரு இரவிலும் மூன்றிலொரு பகுதி எஞ்சியிருக்கும்போது நம்முடைய இரட்சகன் உலக வானத்திற்கு இறங்கி, என்னிடம் துஆக் கேட்பவர் யார்? அவர் துஆவை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் கேட்ப்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்பவர் யார்? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன்” என்று கூறுகிறான்,  (புகாரி 1145)

[நாம் இந்த நோன்பினை  ஒழுவோடு இருப்பதின் மூலம் அலங்கரிப்போம்:-]

عَنْ أَبِي أُمَامَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: أَيُّمَا رَجُلٍ قَامَ إِلَي وُضُوءِهِ يُرِيدُ الصَّلاَةَ، ثُمَّ غَسَلَ كَفَّيْهِ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ كَفَّيْهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ لِسَانِهِ وَشَفَتَيْهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ سَمْعِهِ وَبَصَرِهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ إِلَي الْمِرْفَقَيْنِ وَرِجْلَيْهِ إِليَ الْكَعْبَيْنِ سَلِمَ مِنْ كُلِّ ذَنْبٍ هُوَ لَهُ وَمِنْ كُلِّ خَطِيئَةٍ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ، قَالَ: فَإِذَا قَامَ إِليَ الصَّلاَةِ رَفَعَ اللهُ بِهَا دَرَجَتَهُ وَإِنْ قَعَدَ قَعَدَ سَالِماً. رواه احمد:٥ /٢٦٣

ஒருவர் தொழ நாடி உளூச் செய்ய எழுந்து தன் இரு கைகளை மணிக்கட்டுவரை கழுவியதும் அவருடைய உள்ளங்கைகளின் பாவங்கள் தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்துவிடுகின்றன. பிறகு வாய் கொப்பளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சுத்தம் செய்ததும் அவரது நாவு, உதடுகளின் பாவங்கள் தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்துவிடுகின்றன. அடுத்து, முகத்தைக் கழுவியதும் அவருடைய காது, மற்றும் கண்களின் பாவங்கள் தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்துவிடுகின்றன. அடுத்து கைகளை முழங்கைவரையும் கால்களைக் கணுக்கால்மொளி வரை கழுவியதும் அன்று பிறந்த பாலகனைப் போன்று தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் தூய்மையாகிவிடுகிறார். இனி, தொழ நின்றதும் அல்லாஹ் அந்தத் தொழுகையில் அவரது தகுதியை உயர்த்துகிறான், (தொழுகையில் ஈடுபடாமல்) உட்கார்ந்திருந்தாலும் பாவங்களிலிருந்து தூய்மையாகி உட்கார்ந்திருக்கிறார்” (முஸ்னத் அஹ்மத் 21764]

[நாம் இந்த நோன்பினை குர் ஆனை ஓதுவதின் மூலம்அலங்கரிப்போம்:-]

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ. رواه الترمذي

உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக் கொள்பவரும், கற்றுக் கொடுப்பவரும் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ 2907)

عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لأَبِي ذَرٍّ: عَلَيْكَ بِتِلاَوَةِ الْقُرْآنِ وَذِكْرِ اللهِ فَإِنَّهُ ذِكْرٌ لَّكَ فِي السَّمَاءِ وَنُورٌ لَّكَ فِي اْلاَرْضِ. (وهو جزء من الحديث) رواه البيهقي

அபூதரே, குர்ஆன் ஓதுவதையும் அல்லாஹ்வை திக்ர் செய்வதையும் பேணுதலாகச் செய்து வருவீராக! இந்த அமலால் வானத்தில் உம்மைப் பற்றி நினைவுகூரப்படும். மேலும், இது பூமியில் உமக்கு ஹிதாயத்தின் (நேர்வழியின்) ஒளியாகும்”  (பைஹகீ)

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ حَرْفاً مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلكِنْ اَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ. رواه الترمذي

குர்ஆனை ஓதுபவருக்கு ஓர் எழுத்துக்கு பகரமாக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை பத்து நன்மைகளுக்குச் சமமாகும். அலிஃப், லாம், மீம் அணைத்தும் சேர்ந்து ஓர் எழுத்து என நான் சொல்லவில்லை. ஆயினும் அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்து”  (இவை மூன்று எழுத்துகளாயின. எனவே முப்பது நன்மைகள் கிடைக்கும்). (திர்மிதீ 2910 )

[நாம் இந்த நோன்பினை அதிகமாக திக்ர் செய்வதின் மூலமாக‌  அலங்கரிப்போம்:-]

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قُلْتُ: يَارَسُولَ اللهِﷺ مَا غَنِيمَةُ مَجَالِسِ الذِّكْرِ؟ قَالَ: غَنِيمَةُ مَجَالِسِ الذِّكْرِ اَلْجَنَّةُ اَلْجَنَّةُ. رواه احمد

யாரஸூலல்லாஹ்! திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலியும், வெகுமதியும் என்ன?” என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், கேட்டதற்கு, திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலி சொர்க்கம்தான்! சொர்க்கம்தான்!” என பதிலளித்தார்கள்” (முஸ்னத் அஹ்மத் 6488 )

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ قَالَ: آخِرُكَلِمَةٍ فَارَقْتُ عَلَيْهَا رَسُولَ اللهِﷺ قُلْتُ يَارَسُولَ اللهِﷺ أَخْبِرْنِي بِأَحَبِّ اْلاَعْمَالِ إِلَي اللهِ؟ قَالَ: أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِّنْ ذِكْرِ اللهِ. رواه ابن السني في عمل اليوم والليلة رقم: ٢ وقَالَ المحقق: اخرجه البزار كما في كشف الاستار ولفظه: قُلْتُ يَارَسُولَ اللّهِ أَخْبِرْنِي بِأَفْضَلِ اْلاَعْمَالِ وَأَقْرَبِهَا إِلَي اللّهِ. الحديث وحسن الهيثمي اسناده في مجمع الزوائد

ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்ற சமயம் கடைசியாக கேட்டது, எல்லா அமல்களிலும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமல் எது?’ என்று கேட்டேன். மற்றோர் அறிவிப்பில், ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், அனைத்திலும் சிறந்த, அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தைப் பெற்றுத்தருகின்ற செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள்’ என்று கேட்டதாக உள்ளது. அல்லாஹ்வின் திக்ரால் உமது நாவு நனைந்திருக்கும் நிலையில் நீ மரணிப்பது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(தன் வாழ்நாளில் அதிகம் திக்ரில் ஈடுபட்டிருந்தால் தான் இந்நிலை சாத்தியமாகும்). ( மஜ்மஉஸ்ஸவாயித்)

[நாம் இந்த நோன்பினை ஐந்து நேரம் இமாம் ஜமாத்தோடு தொழுவதின் மூலம் அலங்கரிப்போம்:-]

يا أيُّها النَّاسُ قد أظلَّكم شهرٌ عظيمٌ ، شهرٌ فيهِ لَيلةٌ خَيرٌ من ألفِ شهرٍ ، جعلَ اللَّهُ صيامَهُ فريضةً ، وقيامَ لَيلِهِ تطَوُّعًا ، ومَن تقرَّبَ فيهِ بخَصلةٍ منَ الخيرِكانَ كمَن أدَّى فريضةً فيما سِواهُ ، ومَن أدَّى فريضةً كانَ كمَن أدَّى سبعينَ فريضةً فيما سِواهُ ، وَهوَ شهرُ الصَّبرِ ، والصَّبرُ ثَوابُهُ الجنَّةُ ، وشهرُ المواساةِ ، وشهرٌ يُزادُ فيهِ رزقُ المؤمنِ ، ومَن فطَّرَ فيهِ صائمًا كانَ مَغفرةً لذُنوبِهِ وعتقَ رقبتِهِ منَ النَّارِ ، وَكانَ لهُ مثلُ أجرِهِ مِن غيرِ أن يُنتَقَصَ مِن أجرِهِ شيءٌ ، قالوا : يا رسولَ اللَّهِ ليسَ كلُّنا يجدُ ما يُفطِّرُ الصَّائمَ ، قال : يُعطي اللَّهُ هذا الثَّوابَ مَن فطَّرَ صائمًا علَى مَذْقةِ لبنٍ أو تمرةٍ ، أو شربةِ مِن ماءٍ ، ومَن أشبعَ صائمًا سقاهُ اللَّهُ مِن الحَوضِ شربَةً لا يظمأُ حتَّى يدخلَ الجنَّةَ ، وَهوَ شهرٌ أوَّلُهُ رحمةٌ ، ووسطُهُ مغفِرةٌ ، وآخِرُهُ عتقٌ منَ النَّارِ ، فاستَكْثِروا فيهِ مِن أربعِ خصالٍ : خَصلَتانِ تُرضونَ بِهِما ربَّكم ، وخَصلَتانِ لا غِنًى بِكُم عنهُما ، أمَّا الخَصلَتانِ اللَّتانِ تُرضونَ بِهِما ربَّكم : فشَهادةُ أن لا إلَهَ إلَّا اللَّهُ ، وتستغفرونَهُ ، وأمَّا الخَصلَتانِ اللَّتانِ لا غِنًى بِكُم عنهُما : فتَسألونَ الجنَّةَ ، وتَعوذونَ منَ النَّارِ
المزيد..

ரமழான் மாதத்தில் செய்யப்படும் ஒரு பர்ளுக்கு ஏனைய மாதங்களில் செய்யப்படும் எழுபது பர்ளுவின் நன்மை கிடைப்பதாக ஹதீஸுகளில் வந்துள்ளது. [ ஸஹிஹ் இப்ன் குஸைமா 1887]

எனவே முடிந்த வரை பர்ளான தொழுகைகளை ஒழுங்காக இமாம் ஜமாஅத்துடன் தொழ முயற்சிக்க வேண்டும். இதனால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்.

عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ ؓ أَنَّهُ سَمِعَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: الصَّلَوَاتُ الْخَمْسُ كَفَّارَةٌ لِمَا بَيْنَهَا، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلاً كَانَ يَعْتَمِلُ فَكَانَ بَيْنَ مَنْزِلِهِ وَمُعْتَمَلِهِ خَمْسَةُ أَنْهَارٍ، فَإِذَا أَتَي مُعْتَمَلَهُ عَمِلَ فِيهِ مَا شَاءَ اللهُ فَأَصَابَهُ الْوَسَخُ أَوِ الْعَرَقُ فَكُلَّمَا مَرَّ بِنَهَرٍ اِغْتَسَلَ مَا كَانَ ذلِكَ يُبْقِي مِنْ دَرَنِه، فَكَذلِكَ الصَّلاَةُ كُلَّمَا عَمِلَ خَطِيئَةً فَدَعَا وَاسْتَغْفَرَ غُفِرَ لَهُ مَا كَانَ قَبْلَهَا.

ஐந்து நேரத் தொழுகைகள், அதற்கு இடைப்பட்ட நேரங்களுக்குப் பரிகாரம் ஆகும், (ஒரு தொழுகையிலிருந்து மறு தொழுகைவரை ஏற்படும் சிறிய பாவங்கள் அந்தத் தொழுகையின் பரக்கத்தினால், மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஒருவருக்குத் தொழிற்சாலை ஒன்று உள்ளது, அதில் அவர் பணிபுரிகிறார், அவருடைய தொழிற்சாலைக்கும், வீட்டுக்கும் இடையே ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. தொழிற்சாலையில் வேலை செய்வதால், அவரது உடலில் அழுக்குப் படிகிறது, அல்லது வியர்வை வருகிறது. பிறகு, வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒவ்வோர் ஆற்றிலும் குளித்துவிட்டுச் செல்கிறார் (இவ்வாறு பலமுறை குளிப்பதால் அவருடைய உடலில் அழுக்கு இருக்காது). இதேபோன்று தான் தொழுகையும், ஏதேனும் பாவம் செய்துவிடும்போது, துஆ, இஸ்திஃபார் செய்வதால், தொழுகைக்கு முன்னால் நிகழ்ந்த எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்” (பஸ்ஸார்,)

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَادَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، وَالْمَلاَئِكَةُ تَقُولُ: اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، مَالَمْ يَقُمْ مِنْ صَلاَتِهِ أَوْ يُحْدِثْ.

உங்களில் ஒருவர் தொழுகைக்காக எதிர்பார்த்திருக்கும் வரை அவர் தொழுகையின் நன்மையைப் பெற்றுக் கொண்டிருப்பார், மலக்குகள் அவருக்காக யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக, இவர் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்து கொண்டிருப்பார்கள், (தொழுகைக்குப் பிறகும்) தொழுத இடத்தில் உளூவுடன் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், மலக்குகள் அவருக்காக இதே துஆவை செய்து கொண்டிருக்கின்றனர்” (புகாரி 3229)

[நாம் இந்த நோன்பினை சுன்னத்தான நபிலான தொழுகைகளை அதிகமாக‌ தொழுதலின் மூலம் அலங்கரிப்போம்:-]

، ومَن أدَّى فريضةً كانَ كمَن أدَّى سبعينَ فريضةً فيما سِواهُ

ரமழான் மாதத்தில் செய்யப்படும் ஒரு நபிலான வணக்கத்துக்கு ஏனைய மாதங்களில் செய்யப்படும் ஒரு பர்ளுவின் நன்மை கிடைப்பதாக ஹதீஸுகளில் வந்துள்ளது. [ஸஹிஹ் இப்ன் குஸைமா 1887]

எனவே இந்த மாதத்தில் நிறைய நபிலான சுன்னத்தான தொழுகைகளை தொழுது கொள்ள வேண்டும்.

عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ صَابَرَ عَلَي اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَي اللهُ لَهُ بَيْتاً فِي الْجَنَّةِ، أَرْبَعاً قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ.

எவர் பன்னிரெண்டு ரக்அத்துகள் நியமாகத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை எழுப்புவான், ளுஹருக்கு முன் நான்கு ரக்அத், ளுஹருக்குப் பின் இரண்டு ரக்அத், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்”  (நஸாயீ 1797 )

[அபூபக்ர் ஸித்திக் (ரலி] அவர்களைப்போல‌ 24* 7 – ஆக ஸாலிஹான அமல் செய்வோம்!:-]

 நாம் நோன்பு அல்லாத காலங்களில்   ஜனாஸாவில் கலந்துகொள்வது, மிஸ்கீனுக்கு உணவளிப்பது, நோயாளியை நலன் விசாப்பது என  எல்லா அமல்களையும் செய்யுவோம் ஆனால் இந்த நோன்பு காலங்களில் நோன்பையும் வைத்துக்கொண்டு கீழுள்ள எல்லா அமல்களையும் ஒரு சேர செய்து அபூபக்கர் ரலி அன்ஹூ அவர்களை போல் நாமும் அந்த தரஜாவை அடைவோமாக‌!.

: مَنْ اَصْبَحَ مِنْكُمُ اْليَوْمَ صَائِمًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنِ اتَّبَعَ مِنْكُمُ اْليَوْمَ جَنَازَةً؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ اَطْعَمَ مِنْكُمُ اْليَوْمَ مِسْكِيْنًا؟ قَالَ اَبُوْبَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ عَادَ مِنْكُمُ اْليَوْمَ مَرِيْضًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَااجْتَمَعْنَ فِي امْرِيءٍ اِلَّا دَخَلَ الْجَنَّةَ.

இன்று உங்களில் யார் நோன்பு நோற்றார்?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டபோது, நான் நோற்றேன்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.இன்று ஜனாஸாவில் கலந்துகொண்டவர் உங்களில் யார்? என்று கேட்க, நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று மிஸ்கீனுக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். இன்று உங்களில் நோயாளியை நலன் விசாரித்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்” என பதிலளித்தார்கள். எவரிடத்தில் இந்தக் காரியங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ, அவர் நிச்சயம் சுவர்க்கம் செல்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1865.)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۙ‏

நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும். (திருக்குர் ஆன் 18:107.)

[நாம் இந்த நோன்பினை 24 மணி நேரமும் இறை சிந்தனையின் மூலம் அலங்கரிப்போம்:-]

 عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ يَقُولُ اللهُ تَعَالي: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْس وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فيِ مَلأٍ خَيْرٍ مِّنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعاً وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعاً تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعاً وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً. رواه البخاري باب قول الله تعالي ويحذركم الله نفسه:٦/٢٦٩٤, طبع دار ابن كثير بيروت

என் அடியான் என்னைப்பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே அவனுடன் நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும் போது நான் அவனுடன் இருக்கிறேன், அவன் என்னை (தன்) மனதில் நினைத்தால் நானும் அவனை மனதில் நினைக்கிறேன், என்னைப் பற்றிச் சபையில் நினைவு கூர்ந்தால் அச்சபையைவிடச் சிறந்த மலக்குகளின் சபையில் நானும் அவனைப் பற்றி நினைவு கூறுகிறேன், என் அடியான் என் பக்கம் ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் ஒரு முழம் அவன் பக்கம் நெருங்கி வருகிறேன், அவன் என் பக்கம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்குகிறேன், அவன் என் பக்கம் நடந்து வந்தால், நான் அவன் பக்கம் ஓடி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்  (புகாரி 7536 )

ஒருவர் எந்த அளவு மிக அதிகமாக நல் அமல்கள் மூலம் என் நெருக்கத்தைப் பெறுகிறாரோ, அதைவிட அதிகமாக எனது கிருபை, உதவியுடன் அவர் பக்கம் நான் கவனம் செலுத்துகிறேன் (கருணை காட்டுகிறேன்) என்பதாம்.

[நாம் இந்த நோன்பினை 30*24=720 மணி நேரத்தையும் அமல் செய்து பயனாக்குவதின் மூலம் அலங்கரிப்போம்:-]

நாம் ரமளான் மாதத்தில் எல்லா நேரங்களையும் நல் அமல்களால் அழகாக்குவோமாக‌.!

 عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ، الصِّحَّةُ وَالْفَرَاغُ 

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு {புகாரி 6412}

[நாம் இந்த நோன்பினை 30 * 24= 720 மணி நேரம் பள்ளியில் இருந்து அமல் செய்வதின் மூலம் அலங்கரிப்போம்:-]

عَنْ أَبِي سَعِيدٍ الخدري رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَتَعَاهَدُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالإِيمَانِ ، فَإِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ : ( إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ ) الآيَةَ ) رواه الترمذي (2617) ، وأحمد في مسنده (27325)

அதிகமாகப் பள்ளிக்குச் செல்பவரைக் கண்டால் அவர், ஈமான் உள்ளவர் என்று சாட்சி சொல்லுங்கள் (إِنَّمَا يَعْمُرُ مَسجِدَ اللّهِ مَنْ آمَنَ بِاللّهِ وَالْيَوْمِ اْلآخِرِ) அல்லாஹ் வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டவர்களே பள்ளிகளைச் செழிப்பாக்கி வைப்பார்கள்” என்று அல்லாஹ் கூறியுள்ளான், என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத் 27325, திர்மிதீ 2617 ]

[நாம் இந்த நோன்பில் அதிகமாக‌ துஆக்கள் கேட்பதின் மூலம் அலங்கரிப்போம்:-]

புனித ரமலானில் துஆக்கள் ஒப்புக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கிறது. ஆதலால் அதிகமாக துஆ செய்வோம்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ துஆ என்பது அதுவே ஒரு வணக்கம் தான். ( திர்மிதி 3371 .)

.وَقَالَ صلى الله عليه وسلم: أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكثِرُوا الدُّعَاءَ.

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்  [முஸ்லிம் 744]

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” دعوةُ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ “. رَوَاهُ مُسلم

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் [ முஸ்லிம் 4912 , 5280]

ورد في فضل دعاء الصائم وأنه مستجاب: ما روى الترمذي (2526) عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال : ثَلَاثٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ، الإِمَامُ العَادِلُ، وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ، وَدَعْوَةُ المَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الغَمَامِ، وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ، وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ وصححه الألباني في “صحيح الترمذي” .

وعند أحمد (8030) : وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ

மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நீதமான தலைவர், பாதிக்கப்பட்டவனின் துஆ, நோன்பாளியின் துஆ பாதிக்கப்பட்டவனின் துஆ,   [ திர்மிதீ 1828]

[நாம் இந்த நோன்பில் அதிகமாக பாவமன்னிப்பு தேடுதலின் மூலம் அலங்கரிப்போம்:-]

புனித ரமலானில் அதிகமாக பாவமன்னிப்பு   தேடுவோமாக!.

عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ. 

ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் பாவம் செய்பவர்களே! பாவம் செய்பவரில் சிறந்தவர் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்பவர்” (திர்மிதீ 2499)

-عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍؓ يَقُولُ: قَالَ النَّبِيُّ ﷺ: طُوبَي لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اِسْتِغْفَارًا كَثِيرًا

தன் அமல்களின் பட்டோலையில் (கியாமத் நாளன்று) அதிகமாக பாவமன்னிப்புத் தேடுவதை பதிவு செய்யப்பட்டிருக்கும் மனிதருக்கு சுபச் செய்திகள்”  (இப்னு மாஜா 3818 )

 عَنْ أَبِي بَكْرِنِ الصِّدِّيقِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَإِنْ عَادَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً

தன் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொண்டிருப்பவர் பாவங்களில் நிலைத்திருப்பவராகக் கருதப்படமாட்டார். ஒரு நாளைக்கு அவர் எழுபது முறை பாவம் செய்தாலும் சரியே” (அபூதாவூத் 1514)

عَنِ الزُّبَيْرِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ أَحَبَّ أَنْ تَسُرَّهُ صَحِيفَتُهُ فَلْيُكْثِرْ فِيهَا مِنَ اْلاِسْتِغْفَارِ

எவருடைய அமல்களின் பட்டோலை (கியாமத் நாளில்) தன்னை மகிழ்விக்க வேண்டுமென விரும்புபவாரோ அவர் அதிகமாக பாவமன்னிப்புத் தேடவும்”  ( والبيهقي في ((شعب الإيمان)) (648)

ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்குரிய மாதமாகும். இதில் பல சந்தர்ப்பங்களிலும் பல நேரங்களிலும் அல்லாஹ் லட்சக்கணக்கான மக்களை மன்னிக்கிறான். உதாரணமாக – ஒவ்வொரு நாளும் இப்தாரின்போது, லைலதுல் கத்ர் இரவில். ஸஹர் நேரத்தில் எனவே மாதம் முழுவதும் எல்லா நேரங்களிலும் நிறைய பாவ மன்னிப்பு தேட வேண்டும்.

[நாம் இந்த நோன்பில் ஸகாத் கடைமையானவர்கள் ஸகாத் கொடுப்பதின் மூலம் அலங்கரிப்போம்:-]

ஸகாத் கடைமையானவர்கள் இந்த ரமழான் மாதத்தில் அவற்றை ஒழுங்காக கணக்கிட்டு கொடுக்க முயற்சிக்க வேண்டும். ரமழானில் எல்லா அமல்களுக்கும் பல மடங்கு அதிகம் நன்மை கிடைப்பதால் ஸகாத்தையும் இம்மாதம் கொடுப்பதை பலர் விரும்புகின்றனர். உண்மையில் அது நல்ல விஷ‌யமாகும்.

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். 9:60.

[நாம் இந்த நோன்பில் வசதி உள்ளவர்கள் உம்ரா செய்தலின் மூலம் அலங்கரிப்போம்:-]

“” فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ “”. أَوْ نَحْوًا مِمَّا قَالَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்” என்றோ, அல்லது அதைப் போன்றோ கூறினார்கள். [ புஹாரி 1782]  

[நாம் இந்த நோன்பினை நோன்பாளிகளுக்கு  நோன்பு திறக்கச் செய்தலின் மூலம் அலங்கரிப்போம்:-]

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا رواه الترمذي وقال حديث حسن صحيح.

“யாராவது நோன்பாளியை நோன்பு திறக்க வைப்பாராயின் அந்த நோன்பாளிக்கு கிடைத்த கூலியை போன்றே கிடைக்கும். இதனால் அந்நோன்பாளியின் கூலியில் எதுவும் குறைந்து விடாது. [திர்மதி, 807 ]

[நாம் இந்த நோன்பினை நோற்பதின் மூலம் சுவனத்தில் இடம்பிடிப்போம்:-]

عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ، فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ “”

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார் கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் எழுவார் கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்; அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு யாரும் நுழையமாட்டார்கள் [ புஹாரி 1896]  

[முதல் பத்தில் அதிகமாக ஓதிடுவோம்!] 

اللهم ارحمنا برحمتك يا ارحم الراحمين

“Allahummarhamni bi’rahmatika ya arhamar raahimeen

அல்லாஹும் மர்ஹம்னா Bபிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்”

ரமளான் மாதத்தில் நம்மில் பலர் சினிமா, சீரியல் பார்ப்பதை விட்டு விடுகின்றோம். ஏனெனில் நோன்பின் போது பொய்யான காரியங்களில் ஈடுபட்டால் எந்தப் பலனும் இல்லை என்று நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

‘யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.’ [ஸஹிஹ் புஹாரி 1903] 

 எனென்றால்! உண்ணாமல் பருகாமல் இருப்பது மாத்திரம் நோன்பல்ல! தீய நடவடிக்கைகளை முற்றிலுமாக விட்டொழிப்பது தான் நோன்பின் நோக்கம் என்று மேற்கண்ட‌ நபிமொழி உணா்த்துகின்றது.

ரமளான் மாதம் முடிந்து விட்டால் மீண்டும் சினிமா சீரியல் என்று சென்று விடுகின்றோமே! இது சரியா? நபி ﷺ அவர்கள் ரமளானில் மட்டும் தான் பொய்யான காரியங்களை விட்டு தடுத்துள்ளார்களா? இல்லையே! எல்லா நாட்களிலும் பொய்யான காரியங்கள் தடுக்கப்பட்டவை தான் என்பதைச் சிந்தித்து மற்ற நாட்களிலும் அவற்றை விட்டு விலகியிருப்போம். இன்னும் எத்தனையோ நன்மையான காரியங்களை ரமளானில் மட்டும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் செய்வோம். அது போல் அனைத்துத் தீமைகளை விட்டும் ரமளானில் மட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் விலகியிருப்போம்.

மேற் சொன்னவாறு என் நோன்பினை அமல்களின் மூலமாக‌ அலங்கரிக்க போம் 

அல்லாஹ் ﷻ  அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன். 

وآخر دعوانا أن الحمد لله رب العالمين

வஸ்ஸலாம் 

Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்