Skip to main content

பாக்கியம் நிறைந்த ஹஜ்ஜை பயனுள்ளதாக்குவோம் 17-05-2024


பாக்கியம் நிறைந்த ஹஜ்ஜினை பயனுள்ளதாக்குவோம்

✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால்  [ ذو القعدة ]   துல்கஅதா மாதத்தின் இரண்டாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

உலகம் முழுவதும் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் எனும் வணக்கத்தை நிறைவேற்றிட புனித கஅபாவை நோக்கி இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் செல்லக்கூடிய‌  நிலையில் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான  ‘ஹஜ்’ குறித்து சில விஷயங்ளை நாம் தெரிந்து கொள்வோமாக!.

கிழக்கே சீனா முதல் மேற்கே அமெரிக்கா வரை உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் மனித சமுதாயத்தைச் சார்ந்த எல்லா மனிதர்களும் நிறம், இனம், தோற்றம், பணம், பதவி போன்ற பாகுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட இடத்தில் , குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி, தங்களின் ஒரே இறைவனை ஒரே உடையில் மிகவும் எளிய தோற்றத்தில் வணங்கிடும் அமல் தான் ஹஜ்ஜுடைய அமலாகும்.

ஹஜ் மற்ற  இஸ்லாமிய வணக்கங்களை காட்டிலும் பல்வேறு தனித்துவங்களை கொண்டதாகும்.

✍🏻 அன்புள்ளவர்களே! இவ்வுலக வாழ்வில் அல்லாஹ் [ﷻ] ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்……..!!!

  • சிலருக்கு தாய் இல்லை……!!!
  • சிலருக்கு தந்தை இல்லை……!!!
  • சிலருக்கு இருவரும் இல்லை……!!!
  • சிலருக்கு திருமணமாகவில்லை……!!!
  • சிலருக்கு திருமண வாழ்வில் நிம்மதி இல்லை…….!!!
  • சிலருக்கு திருமணமானாலும் குழந்தை பாக்கியம் இல்லை………!!!
  • சிலருக்கு குழந்தை பிறந்தாலும் ஊனமுற்ற குழந்தை….!!!
  • சிலருக்கு திருமண உறவு பிரிந்து விவாகரத்தான நிலை……!!!
  • சிலருக்கு குடும்ப உறவுகளால் சிக்கல்….!
  • சிலருக்கு உடல்நிலை சிரியில்லாமல் நோன்பு வைக்க முடியவில்லை….!
  • சிலருக்கு பணம் இருக்குது ஆனால்; நிம்மதி இல்லை…..!
  • சிலருக்கு ஹஜ்ஜுக்கு போக வசதி வாய்ப்பு இருந்தாலும் போக முடிவதில்லை காரணம் அல்லாஹ் நாடவில்லை. 

[ஹஜ் என்றால் என்ன? ]

✍🏻 அன்புள்ளவர்களே! இது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். மக்கா சென்று வர பொருள் வசதியும், உடல் சக்தியும் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு தடவை புனித மக்கா சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவது கட்டாய கடமையாகும். 

[ஹஜ்-உம்ரா இவ்விரண்டிற்க்கும் என்ன வித்தியாசம்:-]

உம்ரா என்றால்:-  நாடுதல், சந்தித்தல், வழிபடுதல், என்பன சொற்பொருளாகும். புனித கஃபாவைத் தரிசித்து. இறைவனை வழிபடும் ஒரு வகையான சுன்னத்தான‌ வழிபாடு உம்ரா ஆகும்.

ஹஜ் என்றால்:- எனும் வழிபாட்டிற்க்கு குறிப்பிட்ட காலம் உண்டு. உம்ராவிற்க்கு கால நிர்ணயம் இல்லை. ஹஜ் செய்வது பர்ளு ஆகும்.

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى Allah says in the Qur’an: ♣

[அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும்  நிறைவேற்றுங்கள்]..

  وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ 

 அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும்  நிறைவேற்றுங்கள். [அல்குர்ஆன் 2:196]

 وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلً

அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும்.  [அல்குர்ஆன் 3:97]

  وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ‏ 

ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்; [அல்குர்ஆன் 22:27]

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم  The Prophet said 

[இஸ்லாம் ஐந்து காரியங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது’ ]..

عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏”‏‏.‏

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’  [ஸஹீஹுல் புகாரி  08]


திருக்குர் ஆன் ஹஜ்ஜின் மாதங்கள் என மூன்று மாதங்களை குறிப்பிடுகிறது.


الحج أشهر معلومات


ويروى عن ابن عباس إنها شوال وذو القعدة وعشر من ذي الحجة ، وعليه أبو حنيفة والشافعي وأحمد 


 ஹஜ் என்பது துல்ஹஜ் 8 முதல் 12 வரையிலான ஐந்து நாட்களில் நடை பெறக் கூடிய ஒரு வணக்கம் எனினும் ஹஜ்ஜுக்காக ஷவ்வால் முதலே – அதாவது ஈதுல் பித்ரு பெருநாளில் இருந்து ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முதல் நாள் வரை இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்பதால் சில மாதங்கள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.


 ஷவ்வால் மாதம் முதலே ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டலாம் என்றாலும் கூட தற்போது போக்குவரத்து வசதிகள் இலகுவாகிவிட்டதால் துல் கஃதா மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஹஜ்ஜின் அதிகாரபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன.


 இந்திய தலை நகர் தில்லியிலிருந்து மே 9 ம் தேதி முதல் விமானம் மதீனா தலை நகரை சென்று சேர்ந்து விட்டது. சுமார் முன்னூறு பயணிகள் அதில் புறப்பட்டன. ஜூம் 9ம் தேதி வரை விமானங்கள் இந்தியாவின் 10 விமான நிலையங்களில் இருந்து புறப்படும்.


 இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு 1,75 025 நபர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.40,020 பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும் 35,005 பேர் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாகவும் பயணமாகின்றன்னர்.  


வரும் ஞாயிற்றுக் கிழமை அதவாது 19 ம் தேதி முதல் தமிழகத்திலிரிந்து ஹஜ் பயணம் தொடங்குகிறது .


இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்து 600 ஹாஜிகள் ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்கின்றனர். அவர்களது பயணம் மே 26 ம் தேதியிலிருந்து ஆரம்பமாகின்றனது.


 அனைத்து பயணிகளுடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் கபூல் செய்வானாக! இலேசாக்கி வைப்பானாக!


 இந்த ஆண்டு ஹஜ்ஜை இலேசானதாகவும் பாதுகாப்பானதாக அல்லாஹ் ஆக்கியருள் வானாக!


 நம் அனைவருக்கும் அல்லாஹ் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக!


 ஹஜ் பயணம் ஆசைப்படுவோருக்கு கிடைக்க கூடியது.


அளவு கடந்த ஆசையிலும் ஆர்வத்திலும் நிறைவேற்றப்படக் கூடியது.

 இதில் பல சிரமங்கள் இருந்தாலும். இதன் மீது மக்களுக்கு உள்ள ஆர்வமும் ஆசையுமே இதை மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு நற்செயலாக இன்று வரை நிலைக்க வைத்திருக்கிறது.


 ஹஜ்ஜில் முஸ்லிம் சமூதாயம் ஆரவம் காட்டுகிற வரை கியாமத் நாள் வராது


 முந்தைய காலத்தில் ஹஜ்ஜுக்கான பயணம் மிக சிரம்மானதாக இருந்தது. இவ்வளவு வசதிகள் இருக்க வில்லை.


பொருளாதாரத்திலும் போக்குவரத்திலும்.


 தப்ஸீர் ஜலாலைனின் ஓரக்குறிப்பில் (ஹாஷியாவில்) ஒரு செய்தி இடம் பெற்றிருக்கிறது. சிலர் கூறுகின்றனர், நாங்கள் எங்களுடைய தாடி கருத்திருக்கும் போது புறப்பட்டோம். மக்காவிற்கு வந்து சேர்ந்த போது தாடி வெளுத்துவிட்டது.  


 அதே போல 1930 ல் பெட்ரோல் வளம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்புவரை அரபு நாட்டின் நிலவரம் மிகவும் ஏழ்மையானதாகவே இருந்தது.


 அன்றைய காலத்தின் ஒரு ஹஜ் பயணி கூறுகிறார். நாங்கள் ஓரிட்த்தில் இளைப்பாற இறங்கினோம். ரொட்டி சுடுவதற்கு ஆயத்தமானோம். அப்போது அங்கு மிகவும் பசித்த கோலத்தில் ஒரு மனிதரைக் கண்டோம். அவரை விருந்துக்கு அழைத்தோம். அவர் தண்ணீர் கேட்டார். கொடுத்தோம். ரொட்டிக்கு தயாராக வைத்திருந்த மாவை ஒரு பிடி எடுத்து அந்த தண்ணீரில் அவர் கலந்து குடித்தார். பிறகு சொன்னார். இனி நான் ரொட்டி தயாராகும் வரை காத்திருக்க முடியும்.


 ஆப்கானிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் கூறினார். நாங்கள் தர்பூசனி கொண்டு செல்வோம். அந்த தர்பூசனியில் சாப்பிட்டது போக மீத மிருக்கிற அதன் மேல் பகுதியை வீசி எறிந்தால் அரபு நாட்டு சிறுவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள். அவர்களுடைய தாய்மார்கள் அதை சமைத்து பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள்.


ஒரு தடவை ஒரு சிறுவருக்கு நாங்கள் ஒரு துண்டு தர்பூசணி கொடுத்தோம். அதை சாப்பிட்ட அந்த சிறுவர், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த தர்பூசணி எங்களுக்கு கிடைத்திருக்காது என்றார்.


 நினைத்துப் பார்க்கவே இதயத்தை கனக்கச் செய்கிற இது போன்ற சூழ்நிலையில் தான் பல நூறு ஆண்டுகளாக ஹஜ் பயணம் நடை பெற்றிருக்கிறது.


 அப்போது பயணம் செய்தோர் மிகுந்த ஆசையோடும் ஆர்வத்தோடும் பயணம் செய்துள்ளனர்.


  பாகிஸ்தானின் பெருமைக்குரிய ஆன்மீக சொற்பொழிவாளர் நக்ஷபந்திய்யா தரீக்காவின் குருநாதர் பீர் துல்பிகார் சாஹிப் அவர் சந்தித்த ஒரு அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.


 பாகிஸ்தானில் ஒரு மாடு மேய்ப்பாளர். பால கறந்து கொடுத்து பிழைப்பை நட்த்திக் கொண்டிருந்தார் .அவர் ஹஜ்ஜு செய்ய ஆசைப்பட்டார். கண்ணில் படுகிற ஒவ்வொரு வரிடமும் நான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பார். அது ஒரு வகையான பைத்தியம் போல இருக்கும். ஆனால் அவர் அப்படி ஆள் கிடையாது.


 ஹஜ்ஜுக்கு செல்ல பாஸ்போர்ட் வைத்திருக்கிறாயா என்றால் இல்லை என்பார், டிக்கட்டிற்கு காசு வைத்திருக்கிறாயா என்று கேட்டால் இல்லை என்பார் ஆனால் நான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.


 ஹஜ்ஜுக்கு புறப்பட்ட ஒருவரிடம் எப்படிப் பயணமாவது என்று கேட்டார். அவர் சொன்னார். லாஹூரிலிருந்து கராச்சிக்கு இரயிலில் செல்வேன். அங்கே துறை முகம் இருக்கிறது. ஹஜ் ஆபீஸ் இருக்கிறது அங்கிருந்து கப்பலில் ஜித்தா செல்வேன். அங்கிருந்து மக்கா செல்வேன் என்று கூறினார்.


இதை கவனமாக கேட்டுக் கொண்ட அந்த மாட்டுக்காரர் லாஹூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். டிக்கட் எடுக்காமே ரயில் பெட்டியில் ஏறினார். அவரை கவனித்த ரயில்வே காட் நீங்கள் டிக்கெட் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார் நான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்பதை தவிர வேறு எதுவும் அவர் சொல்லவில்லை அந்த காட் அவர் மீது இரக்கப்பட்டு நீங்கள் இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்வதாக இருந்தால் அதற்கு டிக்கெட் பெற வேண்டும் சரி என்னோடு என்னுடைய பெட்டியில் வந்த அமர்ந்து கொள் என்று சொல்லி அமர வைத்தார். அங்கிருந்து அவர் கராச்சி நகரத்திற்கு சென்றார் அங்கு அவர் ஹஜ்க்கு செல்லக்கூடிய அலுவலகத்திற்கு சென்று அதை நோட்டமிட்டார் எல்லோரும் பாஸ்போர்ட் மற்றும் டிக்கட் சகிதம் கப்பலில் ஏறுவதை பார்த்தார். இந்த கப்பலில் எப்படி ஏறுவது என்று யோசித்தார்.


அங்கு போர்ட்டர்கள் பயணிகளின் சாமாண்களை கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போர்ட்டர் யூனிபார்ம் அணிந்தவர்களை அதிகாரிகள் செக் செய்யாமல் அனுமதிப்பதை பார்த்தார். ஒரு போர்டரிடத்திலே உங்களுடைய ஆடையை எனக்குத் தாருங்கள் நான் உங்களுக்கு பதிலாக சாமான்களை கப்பலுக்குள் எடுத்துச் செல்கிறேன் கடைசியில் இந்த ஆடையை உங்களுக்கு அனுப்பி விடுகிறேன் என்று சொன்னார்


 அவ்வாறே அந்த போர்டடர் ஒப்புக்கொண்டார். ஓரிரு முறை கப்பலுக்குள் சரக்குக்ளை எடுத்துச் சென்ற இவர் கடைசியில் கப்பலுக்கு தங்கி யூனிபார்மை மற்றொருவர் மூலமாக கொடுத்தனுப்பி விட்டார்.


 கப்பலில் ஒருவரிடம் அவர் நட்பு ஏற்படுத்திக் கொண்டார் அவரிடத்தில் ஜித்தா துறைமுகம் வரும்போது எனக்கு சொல்லுங்கள் என்று சொன்னார். இரவு நேரத்தில் கப்பல் ஜித்தா துறை முகத்தை அடைந்த்து. உறங்கிக் கொண்டிருந்த அவரை அந்த நண்பர் எழுப்பி இதோ வந்துவிட்டது என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் ஜித்தா துறைமுகத்திற்கு அருகிலே அவர் கடலில் குதித்தார் அவரை எழுப்பி விட்ட நண்பருக்கு மிகவும் கவலையாகி விட்டது உறங்கிக் கொண்டிருந்தவரை நாம் எழுப்பி விட்டோம் அவர் கடலில் குதித்து விட்டாரே என்ன ஆகுமோ என்று அவர் பதறினார் ஆனாலும் ஒன்று செய்ய முடியவில்லை.


 கீழே விழுந்தவர் தட்டு தடுமாறி கரையில் வந்து ஒதுங்கினார் சிறிது நேரம் மயக்கமற்றிருந்தவர் எழுந்து பார்த்தபோது கரையில் பயணிகளை பரிசோதிக்கப்படுவதும் அவர்கள் உள்ளே அனுப்பப்படுவதும் தெரிந்தது. அதைச் சுற்றி வேலி கட்டப்பட்டிருந்தது.


 அந்த வேலிக்கு அருகிலே துறைமுக அதிகாரியின் வீடு இருந்தது அந்த வீட்டை அ அவர் எட்டிப்பர்த்த வீட்டுக்கு உள்ளே இரண்டு பேர் ஒரு மாட்டிலிருந்து பால் கறப்பதற்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த மாட்டிடம் அவர்களால் பால் கறக்க முடியவில்லை


 அந்தப் பணியாளர்களை கை தட்டி அழைத்த அவர் பணியாளர்களிடத்தில் செய்கையால் என்னை அனுமதித்தால் நான் பால் கறந்து தருகிறேன் என்று சொன்னார் அந்த வீட்டின் எஜமானி இதை பார்த்துக் கொண்டிருந்தார் அவருடைய குழந்தைகளுக்கு சீக்கிரம் பால் தேவைப்பட்டது அதனால் தன்னுடைய கணவரிடத்திலே சொல்லி இந்த நபரை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


 இவர் அனுமதிக்கப்பட்டார்/ அவர் உள்ளே சென்று தனக்கு தெரிந்த வித்தை பயன்படுத்தி அந்த மாட்டிடம் இருந்து வழக்கத்திற்கு அதிகமான பாலை கலந்து கொடுத்தார் அந்த வீட்டு எஜமானிக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது.அவர் மக்காவில் இருந்த அவருடைய தந்தைக்கு இந்த செய்தியை சொல்லி அனுப்பினார்


 அவருடைய தந்தைக்கு மக்காவில் ஒரு பெரிய மாட்டுத் தொழுவம் இருந்தது அவர் மாட்டுக்காரரை என்னிடத்தில் அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார் அதன்படி இந்த நபர் மக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு சென்று அவர் பால் கறந்த போது அவர்களுக்கு முன்பு கிடைத்தை விட அதிகப்படியான பால் மிக சீக்கிரத்தில் கிடைத்துவிட்டது இதை கண்டு ஆச்சரியமடைந்த அந்த முதலாளி நீ இங்கேயே தங்கிக் கொள் என்று கூறினார் அதற்கு அவர் நான் ஹஜ் செய்ய வேண்டும் என்றார் திரும்பத் திரும்ப ஹஜ் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை கேள்விப்பட்ட அந்த முதலாளிக்கு இவருடைய மனோநிலை புரிந்து விட்டது நான் உன்னை ஹஜ் செய்ய ஏற்பாடு செய்கிறேன் நீ அதற்குப் பிறகு இங்கே தங்கிக் கொள் என்றார் அப்போது அவர் என்னுடைய குடும்பம் லாஹூரில் இருக்கிறதே என்றார் அவ்வளவுதானே உன் குடும்பத்தை நான் இங்கே வரவழைக்கிறேன் என்று சொல்லி அந்த முதலாளி அவருடைய குடும்பத்தை அங்கு வரவழைத்தார். அந்த ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் அந்த மாட்டுக்கார்ர் ஹஜ்ஜு செய்தார்.


அவர் கஃபாவில் தவாபு செய்த போது கப்பலில் அவருக்கு ஜித்தா துறை முகம் வந்து விட்டது என்று அடையாளம் காட்டிய நபர் அவரைப் பார்த்தார். ஆச்சரியமடைந்து மகிழ்ச்சியாக அவரை சந்தித்த அவர் அவரிடம் விபரம் கேட்டார். வெளியே வாருங்கள் என்று சொல்லி அவரை அழைத்துச் சென்ற மாட்டுக்கார்ருக்காக வெளியே ஒரு கார் காத்திருந்தது. அந்த காரில் நண்பரை அழைத்துச் சென்று நடந்த விபரங்களை கூறிய மாட்டுக்காரர் நான் கஃபாவுக்கு வர ஆசைப்படுவதை கண்ட எனது முதலாளி இந்த காரையும் எனக்கு தந்து விட்டார் என்று கூறினார்.


ஹஜ்ஜுக்கு ஆசைப்படுகிறவர்களுக்கு அல்லாஹ் எப்படியாவது அந்த வாய்ப்பை வழங்கிவிடுகிறான். அவர்களின் ஆசைக்கு ஏற்ப மேலும் அதிகமான நல்ல வாய்ப்புக்களையும் வசதிகளையும் அல்லாஹ் செய்து கொடுக்கிறான் என்பது இந்த நிகழ்வின் கருத்தாகும்.

இது போன்ற ஆச்சரியகரமான ஏராளமான வரலாறுகளை தன்னகத்தோ கொண்டது தான் ஹஜ்ஜு.

 ஹஜ் கஃபாவை காணும் ஆர்வத்தோடும் அல்லாஹ்வின் மீதான் ஆசையோடும் நிறைவேற்றப்பட வேண்டிய வணக்கம்.

 நம்முடைய முன்னோர்கள் இப்படித்தான் மிக சிரம்மான அந்த வணக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்

 இப்போது வசதி வாய்ப்புக்கள் அதிகரித்து விட்டதால் ஹஜ் மற்ற பயணங்களை போன்ற ஒரு பயணம் போல ஆகிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது. அல்லாஹ் பாதுகாக்கட்டும்.

ஹஜ் என்ற வார்த்தைக்கு القصد ஒன்றை நாடிச் செல்லுதல் என்று பொருள். ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் அல்லாஹ்வை நாடிச் செல்கிறார்கள். 

அல்லாஹ் மட்டுமே நமக்கு எல்லாமும் ஆனவன். அவன் மட்டுமே தர முடிந்தவன். நாம் அனைவரும் அவனிடமே கேட்டுப் பெற வேண்டியவர்கள் என்தை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்திக் கொள்ளும் அற்புதமான ஒரு வாய்ப்பு ஹஜ்,

உமர் ரலி அவர்களின் பேரர் சாலிம் பின் அப்துல்லாஹ் தவாப் செய்து கொண்டிடுருந்தார். அன்றைய உமய்யா பேரரசர் – ஹிஷாம் பின் அப்துல் மலிக் அப்போது அங்கு இருந்தார். அரசர் சாலிமிடம் உங்களுக்கு என்ன வேனும். கேளுங்கள் என்றார். சாலிம் வேறெதுவும் சொல்ல வில்லை. இது அல்லாஹ்வின் ஆலயம் இங்கு அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்பதை உணர்த்து கிற வகையில் பல் யஃபுதூ ரப்ப ஹாதல் பைத்தி என்ற ஆயத்தை ஓதிக் காட்டினார்.

தவாபிற்கு பிறகு அரசர் கஃபாவிற்கு வெளியே காத்து நின்றார். சாலிம் ரஹ் வெளியே வந்த போது அரசர் கேட்டார். இப்போது கேளுங்கள் உங்களுக்கு என்ன வேண்டு ?

சாலிம் கேட்டார். . தீனையா துன்யாவையா ?நான் எதை உங்களிடம் கேட்க ?

அரசர் சொன்னார். தீன் உங்களிடம் இருக்கிறது. துன்யாவில் என்ன வேண்டும் கேளுங்கள் என்றார்.

சாலிம் சொன்னார். உலகின் சொந்தக்காரனான ரப்பிடமே நான் துன்யாவை கேட்ட்தில்லை உலகில் எதுவும் சொந்தமில்லாத உங்களிடம் நான் என்ன கேட்பேன்.

 قال ابن عيينة : دخل هشام الكعبة ، فإذا هو بسالم بن عبد الله ، فقال : سلني حاجة . قال : إني أستحيي من الله أن أسأل في بيته غيره . فلما خرجا قال : الآن فسلني حاجة ، فقال له سالم : من حوائج الدنيا أم من حوائج الآخرة ؟ فقال : من حوائج الدنيا . قال : والله ما سألت الدنيا من يملكها ، فكيف أسألها من لا يملكها .

 நமக்கு எல்லாம் தருகிற சக்தி படைத்த ஒரே சக்தியிடம் செல்கிறோம் என்ற உணர்வு ஒவ்வொரு ஹாஜிக்கும் வரவேண்டும்.

எந்த ஒரு ஹாஜியும் இதை உணர்ந்து கொள்ளும் போது அவருக்கு ஹஜ்ஜின் மீது ஏற்படுகிற ஆசை பேராசையாகிவிடும்..  

 இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள ஹாஜிகள் நம்முடைய முன்னோர்கள் ஹஜ்ஜில் வெளிப்படுத்திய ஆர்வத்தை எண்ணிப்பார்த்து தம்முடைய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 கிடைப்பதற்கரிய பாக்கியம் கிடைத்திருக்கிறது என்ற ஆசையோடு ஹஜ் பயணத்திற்கு தயாராக வேண்டும்.

 அப்படி ஹஜ்ஜை நிறைவேற்றினால் இந்த ஹஜ் பயணம் அவர்களுக்கு சொர்க்கத்தை பெற்றுத்தரும்

[புனித ஹஜ் செய்வதின் சிறப்புகள்:]

[அமல்களில் சிறந்தது]

26- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ،أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : حَجٌّ مَبْرُورٌ.

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள். புகாரி 26

[அன்று பிறந்த பாலகர்]

வேறெந்த அமலுக்கும் கிடைக்காத பாக்கியம்.

1521- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ قَالَ : سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ : مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ.

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 1521

[சுவனமே பரிசு]

[இலகுவாக சுவனம் பெற ஹஜ் பாக்கியம் ஒன்றே போதும்.]

1773- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ.

“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை” புகாரி 1773

[பெண்களின் ஜிஹாத்]

1520- حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ ، حَدَّثَنَا خَالِدٌ ، أَخْبَرَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ ، عَنْ عَائِشَةَ ، أُمِّ الْمُؤْمِنِينَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللهِ نَرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ أَفَلاَ نُجَاهِدُ قَالَ : لاََ لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள். புகாரி 1520

[தவிடுபொடியாகும் தவறுகள்]

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ وَأَبُو مَعْنٍ الرَّقَاشِىُّ وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ كُلُّهُمْ عَنْ أَبِى عَاصِمٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – حَدَّثَنَا الضَّحَّاكُ يَعْنِى أَبَا عَاصِمٍ – قَالَ أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ حَدَّثَنِى يَزِيدُ بْنُ أَبِى حَبِيبٍ عَنِ ابْنِ شَمَاسَةَ الْمَهْرِىِّ قَالَ حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ وَهُوَ فِى سِيَاقَةِ الْمَوْتِ. فَبَكَى طَوِيلاً وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ. فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِنِّى قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلاَثٍ لَقَدْ رَأَيْتُنِى وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- مِنِّى وَلاَ أَحَبَّ إِلَىَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الإِسْلاَمَ فِى قَلْبِى أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلأُبَايِعْكَ. فَبَسَطَ يَمِينَهُ – قَالَ – فَقَبَضْتُ يَدِى. قَالَ « مَا لَكَ يَا عَمْرُو ». قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ. قَالَ « تَشْتَرِطُ بِمَاذَا ». قُلْتُ أَنْ يُغْفَرَ لِى. قَالَ « أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلاَمَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ ». وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَىَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَلاَ أَجَلَّ فِى عَيْنِى مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلأَ عَيْنَىَّ مِنْهُ إِجْلاَلاً لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لأَنِّى لَمْ أَكُنْ أَمْلأُ عَيْنَىَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِى مَا حَالِى فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلاَ تَصْحَبْنِى نَائِحَةٌ وَلاَ نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِى فَشُنُّوا عَلَىَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِى قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّى.

அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள். [முஸ்லிம் 173]

[சிறப்பு விருந்தினர்]

2893- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : الْغَازِي فِي سَبِيلِ اللهِ ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ ، وَفْدُ اللهِ ، دَعَاهُمْ ، فَأَجَابُوهُ ، وَسَأَلُوهُ ، فَأَعْطَاهُمْ.

“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இப்னுமாஜா 2884

[இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்]

1266- حَدَّثَنَا قُتَيْبَةُ ، حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَيُّوبَ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ ، أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ ، وَلاَ تُحَنِّطُوهُ ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا.

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரின் கழுத்தை முறித்துவிட்டார். (அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்: ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்ம லப்பைக்…) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்’ எனக் கூறினார்கள்.  புகாரி 1266, முஸ்லிம் 2092

[ரமளானில் ஒரு ஹஜ்]

3098 – وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّىُّ حَدَّثَنَا يَزِيدُ – يَعْنِى ابْنَ زُرَيْعٍ – حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهَا أُمُّ سِنَانٍ « مَا مَنَعَكِ أَنْ تَكُونِى حَجَجْتِ مَعَنَا ». قَالَتْ نَاضِحَانِ كَانَا لأَبِى فُلاَنٍ – زَوْجِهَا – حَجَّ هُوَ وَابْنُهُ عَلَى أَحَدِهِمَا وَكَانَ الآخَرُ يَسْقِى عَلَيْهِ غُلاَمُنَا. قَالَ « فَعُمْرَةٌ فِى رَمَضَانَ تَقْضِى حَجَّةً. أَوْ حَجَّةً مَعِى ».

உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.  முஸ்லிம் 2201

[சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்]

2638 – أَخْبَرَنِى مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ عَنْ شُعَيْبٍ عَنِ اللَّيْثِ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنِ ابْنِ أَبِى هِلاَلٍ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « جِهَادُ الْكَبِيرِ وَالصَّغِيرِ وَالضَّعِيفِ وَالْمَرْأَةِ الْحَجُّ وَالْعُمْرَةُ ».

முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸயீ 2579

[தல்பியாவின் சிறப்பு]

836 – حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا مِنْ مُسْلِمٍ يُلَبِّى إِلاَّ لَبَّى مَنْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتَّى تَنْقَطِعَ الأَرْضُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا ».

எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  திர்மிதீ 758

[தவாஃபின் சிறப்பு]

2956- حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ ، عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ رَسُول اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يَقُولُ : مَنْ طَافَ بِالْبَيْتِ ، وَصَلَّى رَكْعَتَيْنِ ، كَانَ كَعِتْقِ رَقَبَةٍ.

யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இப்னுமாஜா 2947

[சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்]

961- حَدَّثَنَا قُتَيْبَةُ ، قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنِ ابْنِ خُثَيْمٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الحَجَرِ : وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا ، وَلِسَانٌ يَنْطِقُ بِهِ ، يَشْهَدُ عَلَى مَنْ اسْتَلَمَهُ بِحَقٍّ. هَذَا حَدِيثٌ حَسَنٌ.

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதீ 884

[மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு]

1727- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ نَافِعٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللهِ قَالَ اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللهِ قَالَ وَالْمُقَصِّرِينَ .وَقَالَ اللَّيْثُ : حَدَّثَنِي نَافِعٌ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ مَرَّةً ، أَوْ مَرَّتَيْنِ. قَالَ وَقَالَ عُبَيْدُ اللهِ ، حَدَّثَنِي نَافِعٌ وَقَالَ فِي الرَّابِعَةِ وَالْمُقَصِّرِينَ.

நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள்; உடனே, தோழர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்…’ என்றனர். (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தபோது தோழர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்…’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் மூன்றாவது முறையாகவும் அதைக் கூறியபோது ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக!)’ எனக் கூறினார்கள்.  புகாரி 1727

[ஜம் ஜம் தண்ணீரின் சிறப்பு:]

6513 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ قَالَ

قَالَ أَبُو ذَرٍّ خَرَجْنَا مِنْ قَوْمِنَا غِفَارٍ وَكَانُوا يُحِلُّونَ الشَّهْرَ الْحَرَامَ فَخَرَجْتُ أَنَا وَأَخِى أُنَيْسٌ وَأُمُّنَا فَنَزَلْنَا عَلَى خَالٍ لَنَا فَأَكْرَمَنَا خَالُنَا وَأَحْسَنَ إِلَيْنَا فَحَسَدَنَا قَوْمُهُ فَقَالُوا إِنَّكَ إِذَا خَرَجْتَ عَنْ أَهْلِكَ خَالَفَ إِلَيْهِمْ أُنَيْسٌ فَجَاءَ خَالُنَا فَنَثَا عَلَيْنَا الَّذِى قِيلَ لَهُ فَقُلْتُ لَهُ أَمَّا مَا مَضَى مِنْ مَعْرُوفِكَ فَقَدْ كَدَّرْتَهُ وَلاَ جِمَاعَ لَكَ فِيمَا بَعْدُ. فَقَرَّبْنَا صِرْمَتَنَا فَاحْتَمَلْنَا عَلَيْهَا وَتَغَطَّى خَالُنَا ثَوْبَهُ فَجَعَلَ يَبْكِى فَانْطَلَقْنَا حَتَّى نَزَلْنَا بِحَضْرَةِ مَكَّةَ فَنَافَرَ أُنَيْسٌ عَنْ صِرْمَتِنَا وَعَنْ مِثْلِهَا فَأَتَيَا الْكَاهِنَ فَخَيَّرَ أُنَيْسًا فَأَتَانَا أُنَيْسٌ بِصِرْمَتِنَا وَمِثْلِهَا مَعَهَا – قَالَ – وَقَدْ صَلَّيْتُ يَا ابْنَ أَخِى قَبْلَ أَنْ أَلْقَى رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- بِثَلاَثِ سِنِينَ. قُلْتُ لِمَنْ قَالَ لِلَّهِ. قُلْتُ فَأَيْنَ تَوَجَّهُ قَالَ أَتَوَجَّهُ حَيْثُ يُوَجِّهُنِى رَبِّى أُصَلِّى عِشَاءً حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ أُلْقِيتُ كَأَنِّى خِفَاءٌ حَتَّى تَعْلُوَنِى الشَّمْسُ. فَقَالَ أُنَيْسٌ إِنَّ لِى حَاجَةً بِمَكَّةَ فَاكْفِنِى. فَانْطَلَقَ أُنَيْسٌ حَتَّى أَتَى مَكَّةَ فَرَاثَ عَلَىَّ ثُمَّ جَاءَ فَقُلْتُ مَا صَنَعْتَ قَالَ لَقِيتُ رَجُلاً بِمَكَّةَ عَلَى دِينِكَ يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ. قُلْتُ فَمَا يَقُولُ النَّاسُ قَالَ يَقُولُونَ شَاعِرٌ كَاهِنٌ سَاحِرٌ. وَكَانَ أُنَيْسٌ أَحَدَ الشُّعَرَاءِ. قَالَ أُنَيْسٌ لَقَدْ سَمِعْتُ قَوْلَ الْكَهَنَةِ فَمَا هُوَ بِقَوْلِهِمْ وَلَقَدْ وَضَعْتُ قَوْلَهُ عَلَى أَقْرَاءِ الشِّعْرِ فَمَا يَلْتَئِمُ عَلَى لِسَانِ أَحَدٍ بَعْدِى أَنَّهُ شِعْرٌ وَاللَّهِ إِنَّهُ لَصَادِقٌ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ. قَالَ قُلْتُ فَاكْفِنِى حَتَّى أَذْهَبَ فَأَنْظُرَ. قَالَ فَأَتَيْتُ مَكَّةَ فَتَضَعَّفْتُ رَجُلاً مِنْهُمْ فَقُلْتُ أَيْنَ هَذَا الَّذِى تَدْعُونَهُ الصَّابِئَ فَأَشَارَ إِلَىَّ فَقَالَ الصَّابِئَ. فَمَالَ عَلَىَّ أَهْلُ الْوَادِى بِكُلِّ مَدَرَةٍ وَعَظْمٍ حَتَّى خَرَرْتُ مَغْشِيًّا عَلَىَّ – قَالَ – فَارْتَفَعْتُ حِينَ ارْتَفَعْتُ كَأَنِّى نُصُبٌ أَحْمَرُ – قَالَ – فَأَتَيْتُ زَمْزَمَ فَغَسَلْتُ عَنِّى الدِّمَاءَ وَشَرِبْتُ مِنْ مَائِهَا وَلَقَدْ لَبِثْتُ يَا ابْنَ أَخِى ثَلاَثِينَ بَيْنَ لَيْلَةٍ وَيَوْمٍ مَا كَانَ لِى طَعَامٌ إِلاَّ مَاءُ زَمْزَمَ فَسَمِنْتُ حَتَّى تَكَسَّرَتْ عُكَنُ بَطْنِى وَمَا وَجَدْتُ عَلَى كَبِدِى سُخْفَةَ جُوعٍ – قَالَ – فَبَيْنَا أَهْلُ مَكَّةَ فِى لَيْلَةٍ قَمْرَاءَ إِضْحِيَانَ إِذْ ضُرِبَ عَلَى أَسْمِخَتِهِمْ فَمَا يَطُوفُ بِالْبَيْتِ أَحَدٌ وَامْرَأَتَيْنِ مِنْهُمْ تَدْعُوَانِ إِسَافًا وَنَائِلَةَ – قَالَ – فَأَتَتَا عَلَىَّ فِى طَوَافِهِمَا فَقُلْتُ أَنْكِحَا أَحَدَهُمَا الأُخْرَى – قَالَ – فَمَا تَنَاهَتَا عَنْ قَوْلِهِمَا – قَالَ – فَأَتَتَا عَلَىَّ فَقُلْتُ هَنٌ مِثْلُ الْخَشَبَةِ غَيْرَ أَنِّى لاَ أَكْنِى. فَانْطَلَقَتَا تُوَلْوِلاَنِ وَتَقُولاَنِ لَوْ كَانَ هَا هُنَا أَحَدٌ مِنْ أَنْفَارِنَا. قَالَ فَاسْتَقْبَلَهُمَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبُو بَكْرٍ وَهُمَا هَابِطَانِ قَالَ « مَا لَكُمَا ». قَالَتَا الصَّابِئُ بَيْنَ الْكَعْبَةِ وَأَسْتَارِهَا قَالَ « مَا قَالَ لَكُمَا ». قَالَتَا إِنَّهُ قَالَ لَنَا كَلِمَةً تَمْلأُ الْفَمَ. وَجَاءَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حَتَّى اسْتَلَمَ الْحَجَرَ وَطَافَ بِالْبَيْتِ هُوَ وَصَاحِبُهُ ثُمَّ صَلَّى فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ أَبُو ذَرٍّ. فَكُنْتُ أَنَا أَوَّلُ مَنْ حَيَّاهُ بِتَحِيَّةِ الإِسْلاَمِ – قَالَ – فَقُلْتُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ « وَعَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ ». ثُمَّ قَالَ « مَنْ أَنْتَ ». قَالَ قُلْتُ مِنْ غِفَارٍ – قَالَ – فَأَهْوَى بِيَدِهِ فَوَضَعَ أَصَابِعَهُ عَلَى جَبْهَتِهِ فَقُلْتُ فِى نَفْسِى كَرِهَ أَنِ انْتَمَيْتُ إِلَى غِفَارٍ. فَذَهَبْتُ آخُذُ بِيَدِهِ فَقَدَعَنِى صَاحِبُهُ وَكَانَ أَعْلَمَ بِهِ مِنِّى ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ قَالَ « مَتَى كُنْتَ هَا هُنَا ». قَالَ قُلْتُ قَدْ كُنْتُ هَا هُنَا مُنْذُ ثَلاَثِينَ بَيْنَ لَيْلَةٍ وَيَوْمٍ قَالَ « فَمَنْ كَانَ يُطْعِمُكَ ». قَالَ قُلْتُ مَا كَانَ لِى طَعَامٌ إِلاَّ مَاءُ زَمْزَمَ . فَسَمِنْتُ حَتَّى تَكَسَّرَتْ عُكَنُ بَطْنِى وَمَا أَجِدُ عَلَى كَبِدِى سُخْفَةَ جُوعٍ قَالَ « إِنَّهَا مُبَارَكَةٌ إِنَّهَا طَعَامُ طُعْمٍ ». فَقَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِى فِى طَعَامِهِ اللَّيْلَةَ. فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبُو بَكْرٍ وَانْطَلَقْتُ مَعَهُمَا فَفَتَحَ أَبُو بَكْرٍ بَابًا فَجَعَلَ يَقْبِضُ لَنَا مِنْ زَبِيبِ الطَّائِفِ وَكَانَ ذَلِكَ أَوَّلَ طَعَامٍ أَكَلْتُهُ بِهَا ثُمَّ غَبَرْتُ مَا غَبَرْتُ ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « إِنَّهُ قَدْ وُجِّهَتْ لِى أَرْضٌ ذَاتُ نَخْلٍ لاَ أُرَاهَا إِلاَّ يَثْرِبَ فَهَلْ أَنْتَ مُبَلِّغٌ عَنِّى قَوْمَكَ عَسَى اللَّهُ أَنْ يَنْفَعَهُمْ بِكَ وَيَأْجُرَكَ فِيهِمْ ». فَأَتَيْتُ أُنَيْسًا فَقَالَ مَا صَنَعْتَ قُلْتُ صَنَعْتُ أَنِّى قَدْ أَسْلَمْتُ وَصَدَّقْتُ. قَالَ مَا بِى رَغْبَةٌ عَنْ دِينِكَ فَإِنِّى قَدْ أَسْلَمْتُ وَصَدَّقْتُ. فَأَتَيْنَا أُمَّنَا فَقَالَتْ مَا بِى رَغْبَةٌ عَنْ دِينِكُمَا فَإِنِّى قَدْ أَسْلَمْتُ وَصَدَّقْتُ. فَاحْتَمَلْنَا حَتَّى أَتَيْنَا قَوْمَنَا غِفَارًا فَأَسْلَمَ نِصْفُهُمْ وَكَانَ يَؤُمُّهُمْ إِيمَاءُ بْنُ رَحَضَةَ الْغِفَارِىُّ وَكَانَ سَيِّدَهُمْ. وَقَالَ نِصْفُهُمْ إِذَا قَدِمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- الْمَدِينَةَ أَسْلَمْنَا. فَقَدِمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- الْمَدِينَةَ فَأَسْلَمَ نِصْفُهُمُ الْبَاقِى وَجَاءَتْ أَسْلَمُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِخْوَتُنَا نُسْلِمُ عَلَى الَّذِى أَسْلَمُوا عَلَيْهِ. فَأَسْلَمُوا فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ ».

அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  முஸ்லிம் 4520

ஜம் தண்னீரை பிஸ்மி சொல்லி மூன்று மிடரில் குடித்து விட்டு பிறகு துஆ கேட்டால் அது ஏற்கப்படும்.

 جابر بن عبد الله يقول سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول:”«مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ» -سنن ابن ماجه

ஜம் ஜம் தண்ணீரைக் குடித்து விட்டு ஓதும் ஒரு துஆவை இப்னு அப்பாஸ் ரலி கூறினார்கள்.

وروي عن ابن عباس : أنه إذا شرب من ماء زمزم قال : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ  .

ஜம் ஜமை குடித்து விட்டு கேட்கப் பட்ட பல துஆக்கள் அங்கீகரிக்கப் பட்டதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஒரு மனிதர் இதை சோதித்துப் பார்த்தார்.

حكى الدينوري عن الحميدي قال : كنا عند سفيان بن عيينة فحدثنا بحديث ماء زمزم لما شُرب له ، فقام رجل من المجلس ثم عاد فقال : يا أبا محمد : أليس الحديث الذي حدثتنا في ماء زمزم صحيحاً ؟ قال : نعم . قال الرجل : فإني شربت الآن دلواً من زمزم على أنك تحدثني بمائة حديث ، فقال سفيان : اقعد فقعد ، فحدّثه بمائة حديث .

قول ابن القيم رحمه الله معلقاً: ‘وقد جربت أنا وغيري من الاستشفاء بماء زمزم أموراً عجيبة، واستشفيت به من عدة أمراض فبرأت بإذن الله،

‘حُكي عن شيخ الإسلام أبي الفضل بن حجر رحمه الله أنه قال: ‘شربت ماء زمزم لأصل إلى مرتبة الذهبي في الحفظ’ قال: فبلغها، وزاد عليها

قال ابن عساكر رحمه الله: أن الخطيب البغدادي ذكر أنه لما حجَّ شرب من ماء زمزم ثلاث شربات، وسأل الله ثلاث حاجات:

فالحاجة الأولى: أن يحدِّث بتاريخ بغداد بها.

الثانية: أن يملي الحديث بجامع المنصور.

الثالثة: أن يدفن عند بشر الحافي, فقضى الله له ذلك

மற்றவர்கள் பல நன்மைகளை கேட்டார்கள். கேட்டதெல்லாம் கிடைத்த்து . ஆனால் உமர் ரலி அவர்கள் என்ன கேட்டார்கள் தெரியுமா ?

 وقال ابن عيينة: ‘قال عمر بن الخطاب رضي الله عنه: اللهم إني أشربه لظمأ يوم القيامة

மறுமையில் தாகம் எடுக்க கூடாது என்று கேட்டார்கள்.

[அதிகபடியான கேள்வி ஆபத்தை தரும்:-]

وعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ قَدْ فُرِضَ عَلَيْكُمُ الْحَجُّ فَحُجُّوا» فَقَالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ؟ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ: ” لَوْ قُلْتُ: نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ ” ثُمَّ قَالَ: ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْء فدَعُوه “.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டு நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகி விடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள் என்று விடையளித்தார்கள்.  முஸ்லிம் 2380.

[“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’’]

✍🏻 அன்புள்ளவர்களே! நெற்கதிர்களை அறுத்து அதனைக் களத்தில் அடித்துப் பதரினைப் போக்கக் காற்றுவீசும்போது தூற்றுதல் வேண்டும். அவ்வாறு தூற்றினால் பதறினைக் காற்று அடித்துத் தூரத்தில் கொண்டுசென்று போட்டுவிடும். நல்ல நெல்மணிகள் தனியாக ஒதுங்கும்.

காற்றடிக்காத போது நெல்லைத் தூற்றினால் பதரானது அப்படியே நல்ல நெல்மணிகளுடன் கலந்து அப்படியே இருக்கும். அதுபோலவே மனிதன் வாய்ப்புகள் இருக்கம்போது கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

ஹஜ் எனும் பாக்கியத்தில் அதிக நன்மை பெற ஒரு வாய்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தாவிட்டால் நம்மை போல் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவர் யாரும் இருக்க முடியாது.ஆக இதுவரை தவறில் மூழ்கிஇருந்தோம். இனி இறைதவத்தில் மூழ்குவோம்.

சிலருக்கு ஹஜ்ஜுக்கு போக வசதி வாய்ப்பு இருந்தாலும் போக முடிவதில்லை. ஆனால் அல்லாஹ் எனக்கு ஹஜ் செய்யும் பாக்கியம் கொடுத்துள்ளான்.என நினைத்து கவனமாக & பேணுதலாக ஹஜ்ஜின் அமல்கள செய்ய வேண்டும். ஹஜ்ஜை விட்டுப் பிரிந்தபிறகுதான் நாம் யோசிக்கின்றோம் ஐயோ! நான் ஹஜ்ஜுடைய நாட்களை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டேனே! அடுத்து ஹஜ்ஜுடைய பாக்கியம் பெற நான் உயிருடன் இருப்பேனா? என்று கூட எனக்குத் தெரியவில்லையே ! என்று புலம்பித் திரியாமல் செய்யும் போதே திருந்த செய்ய வேண்டும். ஹஜ்ஜின் நாட்களை சிறப்பாகப் பயன்படுத்துவோம்.

[அன்புள்ள ஹாஜிகளே! மார்க்க ஞானம் மிக மிக‌ அவசியம்:-]

‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 2:197]

அல்லாஹ் கூறும் தக்வா வர வேண்டுமெனால் மார்க்க ஞானம் அவசியமாகும்.

✍🏻 அன்புள்ளவர்களே!  நமது ஹஜ்ஜீன் ஒவ்வொரு செயல்களும் இபாதத்துகளாக மாற்றி அமைத்துக் கொள்வதற்கு மார்க்க கல்வி மிக மிக அவசியமானதாகும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ “‏ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னுமாஜா,  229

இந்த ஹதீஸிர்க்கு விளக்கமாக மாமேதை இமாம் கஜ்ஜாலி [ரஹ்] அலைஹி அவர்கள் கூறுவதாவது:

ஒருவர் புதிதாக கடை திறக்க போகிறார் என்றால், அவர் கடையின் வியாபாரம் சம்பந்தமாக ஹலால்‍- ஹராம் -கொடுக்கல்- வாங்கல்- கடன்- போன்ற இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக கற்ற பிறகுதான் கடையை திறக்க வேண்டும்.

அது போல ஒரு ஆணோ, பெண்னோ ஹஜ் செய்வதாக இருந்தால்- மஹ்ரம்‍- ஹஜ்ஜின் பர்ளுகள், ஹஜ்ஜின் வாஜீபுகள், ஹஜ்ஜின் ஸூன்னத்துகள், ஹஜ்ஜின் முஸ்தஹப்கள், ஹஜ்ஜின் ஹராம்கள், ஹஜ்ஜின் மக்ரூஹ்கள், ஹஜ்ஜின் ஒழுக்கங்கள், ஹஜ்ஜில் ஓதப்படும் ஸூன்னத்தான துஆக்கள் ஆகியவைகளை மனனம் செய்வது கல்வி கடமையாகி விடுகிறது.

இவைகலேல்லாம் கற்ற பிறகுதான் ஹஜ் செய்ய வேண்டும்.

[ஹஜ் எனும் இறுதி இறைத்தேர்வு:-]-

✍🏻 அன்புள்ளவர்களே! நாம் பள்ளிக்கூடத்தில் பரிச்சை எழுத போகும் போது நல்ல படித்தால்தான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் எழுதமுடியும். அது போல் ஹஜ் எனும் பிராட்டிக்கல் தேர்வு எழுத போற நாம் இப்போதே ஹஜ் எனும் தேர்வில் தேர்ச்சி பெறும் வழிகளை கற்க்க முயற்சிக்க வேண்டும்.

[ஓரே கடமை- இறுதிக் கடமை- கழா செய்யமுடியாத கடமை -கவனம் தேவை ஜீ:-]

✍🏻 அன்புள்ளவர்களே! ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ‘ஹஜ்’ பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

 இஸ்லாத்தின் அடிப்படையான ஐந்து கடமைகளில், நான்கு கடமைகள்  விடுபட்டால் கழா செய்யலாம். அக் கடமைகளில் குறை & பிழை இருந்தால் குற்றப்பரிகாரம் செய்யலாம் ஆனால் ஹஜ்ஜை கழா செய்ய முடியாது. ஹஜ்ஜை முடித்து விட்டு வந்த‌ பிறகு அதற்க்கு குற்றப்பரிகாரமும் கிடையாது. ஆதலால் அதிக கவனம் தேவை.

வாருங்கள் விபரமாக பேசலாம்:-

1] ஈமான் [கலிமா]

நமது ஈமான் பழையதாகும், அதனை திரும்பவும் கலிமா சொல்லி புது பித்துக் கொள்ளலாம். அது தான் அதற்குரிய பரிகாரமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : جَدِّدُوا إِيمَانَكُمْ قِيلَ: يَارَسُولَ اللّٰهِؐ وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا؟ قَالَ: أَكْثِرُوا مِنْ قَوْلِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ. رواه أحمد

“உங்களுடைய ஈமானைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது “யா ரஸூலல்லாஹ்! எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது?’’ என்று கேட்கப்பட்டது “லா இலாஹ இல்லல்லாஹ்’ (என்ற கலிமா)வை அதிகமாகக் கூறிக்கொண்டே இருங்கள்!’’  (முஸ்னத் அஹ்மத்)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ وَهْوَ مُؤْمِنٌ ‏”‏‏.‏ وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ، إِلاَّ النُّهْبَةَ‏.‏

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொளளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான். [ஸஹீஹுல் புகாரி  6772]

2] தொழுகை:-

தொழுகையில் தவறு நடந்தால் அதற்குரிய பரிகாரம்:-

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் அவர்கள் கூட்டியோ குறைத்தோ தொழவைத்துவிட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (கூட்டினார்களா அல்லது குறைத்தார்களா என்பதில்) சந்தேகம் எனக்குத் தான்.-

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப் பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். ஆகவே, உங்களில் ஒருவர் (தொழுகையில்) மறந்துவிட்டால் அதே இருப்பில் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு (கிப்லாவை நோக்கித்) திரும்பி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு சஜ்தாக்கள் செய்தார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் 996]

தொழுகையை விட்டால் கழா செய்ய வேண்டும்:-

ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும். [ஸஹீஹ் முஸ்லிம் 1217]

3]  நோன்பில் தவறு நடந்தால் அதற்குரிய பரிகாரம்:-

عن ابن عباسٍ قال: فرض رسولُ الله – صلَّى الله عليه وسلم – زكاةَ الفِطْر طُهْرةً للصَائم مِن اللغو والرَّفثِ وطُعْمةً للمساكينَ، مَنْ أدَّاها قبلَ الصَّلاة، فهي زكاةٌ مقبولةٌ، ومن أدَّاها بعدَ الصَّلاة، فهي صَدَقةٌ من الصَّدقات

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.  அபூதாவூத் 1609

நோன்பை விட்டு விட்டால் கழா செய்ய வேண்டும்:-

اَيَّامًا مَّعْدُوْدٰتٍؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ؕ

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும். [2:184]

4] ஜகாத்:-.

வசதி வாய்ப்பை பொருத்து அமையும்.

ஜகாத் கொடுக்க வசதி வாய்பு இல்லா விட்டால் அவர் ஜகாத் கொடுக்க தேவையில்லை, அடுத்த வருடம் அல்லாஹ் [ﷻ] வசதி வாய்ப்பை கொடுத்தால் அப்போது அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்..

5] ஹஜ்:

ஆனால் புனித ஹஜ் என்பது நம் ஆயுளில் ஒருமுறைதான். கழா செய்யமுடியாது. ஊருக்கு வந்த பிறகு குற்றப்பரிகாரமும் கிடையாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ قَدْ فُرِضَ عَلَيْكُمُ الْحَجُّ فَحُجُّوا» فَقَالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ؟ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ: ” لَوْ قُلْتُ: نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ ” ثُمَّ قَالَ: ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْء فدَعُوه “. ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டு நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகி விடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்என்று விடையளித்தார்கள். [முஸ்லிம் 2380]

[ஹஜ் எனும் பயண சோதனையை சாதனையாக்குவோம்:]

✍🏻 அன்புள்ளவர்களே! நம் ஹஜ்ஜில் நீண்ட பயணம், கூட்டம், நெரிசல், சுய‌ தேவைகள் நீறைவேற்றுதலில் தாமதம், போன்ற சிரமங்கள் இருந்தால் நாம் அதனை அல்லாஹ்வுக்காக பொருந்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவோம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ،

‘பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது.[புகாரி 1804]

 عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي قَالَ ‏ “‏ لاَ تُسَافِرِ الْمَرْأَةُ يَوْمَيْنِ إِلاَّ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ‏.‏ وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِ

நபி(ஸல்) அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களைக் கூறினார்கள்.
1. இரண்டு நாள்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ, மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினரோ துணையாக இல்லாமல் பயணம் செய்யக்கூடாது.
2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது.
3. ஸுப்ஹுத் தொழுதததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸர் தொழுததிலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழக்கூடாது.
4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன்னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர் பார்த்து) பயணம் மேற்கொள்ளக்கூடாது. [புகாரி 1197]

சிறப்பு விருந்தினர்:-

2893- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : الْغَازِي فِي سَبِيلِ اللهِ ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ ، وَفْدُ اللهِ ، دَعَاهُمْ ، فَأَجَابُوهُ ، وَسَأَلُوهُ ، فَأَعْطَاهُمْ.

“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [இப்னுமாஜா 2884]

[அன்புள்ள ஹாஜிகளே!! ஹஜ் செய்யுமுன் உறவை முறித்தவர்களிடம் இணக்கமாகுங்கள்:-] 

✍🏻 அன்புள்ளவர்களே! நாம் ஹஜ் செய்வதின் முக்கிய நோக்கம் நம் பாவங்கள் மன்னிக்கப் பட வேண்டும். அன்று பிறந்த பாலகர் போல தாயகம் திரும்பி பாவமற்று பரிசுத்தமாக வாழத்தான் ஹஜ் செய்கிறோம்.

இப்போமும் உறவுகளை முறித்து பாவங்களை சம்பாதித்து ஹஜ் போயிட்டு வந்த பிறகும் அதே பாவத்தை [தீமையை] செய்தால் நாம் ஹஜ் செய்தது என்ன பயன். சற்று சிந்தியுங்கள்.

நெருங்கிய, ரத்த பந்தங்களை கூப்பிடுங்கள் சந்தோஷமாக ஹஜ் செய்யுங்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ ‏”‏‏.‏

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். [புகாரி 5985] 

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் ‘சற்று பொறு’ என்றான். ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்றது உறவு. ‘இது உனக்காக நடக்கும்’ என்றான் அல்லாஹ்.

(இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக் குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள். [புகாரி :7502)

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَصِلْ رَحِمَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ‏”‏‏.‏

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்”(புகாரி 6138)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ ‏”‏‏.‏

“ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று”  (புகாரி-6076)

எனவே நாம் நம் உறவினர்களைப் பேணி ஹஜ் செய்வோம். அல்லாஹ்வின் அன்பிற்குரிய அடியார்களாகுவோம்.

[அன்புள்ள ஹாஜிகளே! நம் ஹஜ்ஜை அலங்கரிக்க ஒரு ப்ளான் [ஸ்கெட்ஜ்] போடுங்க:- ]

✍🏻 அன்புள்ளவர்களே! நாம் இப்போது ஒரு வீடு கட்டப்போகிறோம் என்றால் முதலில் ப்ளான் போடுவோம். இந்த ரூம் இத்தனை அடி, இன்னொரு ரூம் இத்தனை அடி என ப்ளான் போட்டு கணக்கு பார்த்து தான் வீடு கட்டுவோம். அப்படி கட்டினால்தான் வீடு அழகாகும். வீடும் ஒரு அமைப்பாக இருக்கும். ப்ளான் இல்லாமல் கட்டினால் வீடு கோனல்மானலாக, அசிங்கமாக, பணம் வீண்விரயமாக, காலம் வீணாகி விடும். பிறகு வருத்தப்பட வேண்டியதாகி விடும்.

சிலருக்கு ஹஜ்ஜுக்கு போக வசதி வாய்ப்பு இருந்தாலும் போக முடிவதில்லை. ஆனால் அல்லாஹ் [ﷻ] எனக்கு ஹஜ் செய்யும் பாக்கியம் கொடுத்துள்ளான்.என நினைத்து கவனமாக & பேணுதலாக ஹஜ்ஜின் அமல்களை செய்ய வேண்டும். ஹஜ்ஜை விட்டுப் பிரிந்த பிறகுதான் நாம் யோசிக்கின்றோம் ஐயோ! நான் ஹஜ்ஜுடைய நாட்களை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டேனே! அடுத்து ஹஜ்ஜுடைய பாக்கியம் பெற நான் உயிருடன் இருப்பேனா? என்று கூட எனக்குத் தெரியவில்லையே ! என்று புலம்பித் திரியாமல். செய்யும் போதே திருந்த செய்ய வேண்டும். ஹஜ்ஜின் நாட்களை ப்ளான் போட்டு சிறப்பாகப் பயன்படுத்துவோம்.

ஹஜ் எனும் பாக்கியத்தில் அதிக நன்மை பெற ஒரு வாய்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தாவிட்டால் நம்மை போல் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவர் யாரும் இருக்க முடியாது.

[உதாரணத்திற்க்கு ஒரு வரைபடம்:-]

✍🏻 அன்புள்ளவர்களே! இப்படி ப்ளான் போட்டு அமல் செய்தால் நமது பணம், நேரம், எதுவும் வீண்விரயமாக ஆகாது. எந்த ஒரு அமலும் விடுபடாது.

ஜுமுஆ முபாரக் தகவல்.

இந்த ப்ளான் மூலம் நாம் அடுத்து எந்த அமல் எங்கு செய்ய வேண்டும், எந்த நேரத்தில் எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து நம் சுய‌ தேவைகளை முன் பின் ஆக்கி கொள்ளலாம்.

இந்த ப்ளான் மூலம் ஹஜ்ஜுடைய நாட்களில் ஒரு அமல் கூட மறக்காமல் & விடுபடாமல் செய்ய உதவியாக இருக்கும்.

இந்த ப்ளான் மூலம் நம் ஹஜ்ஜின் நாட்கள் பயனுள்ளதாக இருந்தது. என மன‌ மகிழ்வு கொள்ள உதவும். ETC….

அல்லாஹ் நமக்கு கொடுத்த ஹஜ் பாக்கியத்தை அருட்கொடையாக கருதி , நேரங்களையும் அமல்களையும் பரக்கத்தாக செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

haj2

ஹஜ் கிரியைகள் ஆரம்பம் முதல் இறுதிவரை;

  1. இஹ்ராம் அணிதல்

2. தவாஃபுல் குதூம் 7 சுற்றுகள்

3.ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தல்

4.. பிறை 8-ல் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த பிறகு மினா செல்லுதல்

5. பிறை 9 காலை சூரியன் உதித்த பிறகு அரஃபா செல்லுதல்

6. பிறை 10 இரவில் முஸ்தலிஃபாவில் தங்குதல்

7. பிறை 10 பகலில் ஜம்ரத்துல் அகபாவில் மட்டும் கல் எறிதல்.

8. குர்பானி மற்றும் தலைமுடி மழித்தல் (தடுக்கப்பட்ட வற்றில் தாம்பத்யம் தவிர அனைத்தும் அனுமதியாகிறது))

9. தவாஃபுல் இஃபாளா (முடித்துவிட்டால் இஹ்ராமினால் தடுக்கப்பட்டவை அனைத்தும் அனுமதியாகிறது)

10. பிறை 11,12, 13 சூரியன் உச்சி சாய்ந்த பிறகு 3 ஜம்ராவிலும் கல் எறிதல்

11. தவாஃபுல் விதா.

haj

[அன்புள்ள ஹாஜிகளே!! உங்கள் தோழாமை நல்லதாக இருக்கட்டும்:-]

தமிழ் பழமொழியில் :”பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்”என்பார்கள். அது போல நாமும் மணக்க வேண்டுமெனால் நல்லவர்களின் நட்போடு நம் ஹஜ் பயணம் கழிய வேண்டும்.

நல்லவர்களின் நட்போடு நாம் ஹஜ் செய்யும் போது அவர் நமக்கு ஊக்கம் தருவார், ஆர்வ படுத்துவார், தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

தீய‌வர்களின் நட்போடு நாம் ஹஜ் செய்யும் போது கடைகளுக்கு போக, சுத்தி பாக்க, நல்லா தூங்க என நம் ஹஜ் கேள்வி குறியாகி விடும்.

عَنِ ابْنِ عَبَّاسؓ قَالَ: قِيلَ: يَارَسُولَ اللهِﷺ أَيُّ جُلَسَائِنَا خَيْرٌ؟ قَالَ: مَنْ ذَكَّرَكُمُ اللهَ رُؤْيَتُهُ وَزَادَ فِي عَمَلِكُمْ مَنْطِقُهُ وَذَكَّرَكُمْ بِاْلآخِرَةِ عَمَلُهُ.

ஹஜ்ரத் இப்னுப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் எவருடன் சேர்ந்திருப்பது சிறந்தது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, எவரைப்பார்த்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் ஞாபகம் வருமோ, எவருடைய பேச்சால் உங்கள் அமலில் முன்னேற்றம் உண்டாகுமோ, எவருடைய அமலால் உங்களுக்கு மறுமையின் சிந்தனை வருமோ அவருடன் அமர்ந்திருங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)

[அன்புள்ள ஹாஜிகளே!! அர்ஷின் நிழல் கிடைக்க அதிகமாக தனிமையில் அழுங்கள்:-]

عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ وَّشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْـمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَّجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّي لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللهَ خَالِياً فَفَاضَتْ عَيْنَاهُ. رواه البخاري باب الصدقة باليمين رقم:١٤٢٣

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான். அவர்கள், 1. நீதியுள்ள அரசன், 2. அல்லாஹ்வுடைய வணக்கத்தில் வாலிபத்தைக் கழித்த வாலிபன், 3. எந்நேரமும் பள்ளியில் உள்ளத்தை லயிக்கச் செய்தவர், 4. அல்லாஹ்வுக்காகவே நேசம் கொண்டு அவனுக்காகவே ஒன்று கூடி அவனுக்காகப் பிரியும் இரு நபர்கள், 5. உயர் குலத்தைச் சேர்ந்த அழகிய பெண் ஒருத்தி தன்பால் அழைக்க, நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று கூறியவர், 6. தனது இடக்கரத்திற்குத் தெரியாத நிலையில் தானம் செய்தவர், 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்தியவர். (புகாரி 6806)

عَنْ أَبِي أُمَامَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَي اللهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ: قَطْرَةٌ مِّنْ دُمُوعٍ مِّنْ خَشْيَةِ اللهِ وَقَطْرَةُ دَمٍ تُهْرَاقُ فِي سَبِيلِ اللهِ وَأَمَّا اْلاَثَرَانِ فَأَثَرٌ فِي سَبِيلِ اللهِ وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِّنْ فَرَائِضِ اللهِ.

இரு துளிகளை விடவும், இரு அடையாளங்களைவிடவும் அல்லாஹ்விடம் பிரியமானவை வேறு எதுமில்லை. ஒன்று, அல்லாஹ்வின் அச்சத்தால் சிந்திய கண்ணீர்த் துளி, மற்றோன்று, அல்லாஹ்வின் பாதையில் சிந்திய ரத்தத்துளி. இரு அடையாளங்களாவன: ஒன்று, அல்லாஹ்வின் பாதையில் ஏற்பட்ட அடையாளம், (புழுதியின் காரணமாக அல்லது காயத்தின் காரணமாக ஏற்பட்ட வடு), மற்றோன்று, அல்லாஹ்வின் கடமைகளில் ஒன்றை நிறைவேற்றும் போது ஏற்பட்ட அடையாளம் (ஸஜ்தாவின் அடையாளம் அல்லது ஹஜ்ஜுப் பயணம் போன்றவைகளில் ஏற்பட்ட அடையாளம்)” என்று நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ 1669)

[அன்புள்ள ஹாஜிகளே!! உங்களின் பயணம் முழுவது திக்ருடைய பயணமாகட்டும்:-]

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَيْسَ يَتَحَسَّرُ أَهْلُ الْجَنَّةِ عَلَي شَيْءٍ إِلاَّعَلَي سَاعَةٍ مَرَّتْ بِهِمْ لَمْ يَذْكُرُو اللهَ فِيهَا

உலகில் அல்லாஹ்வை திக்ரு செய்யாமல் கழிந்த நேரத்தைப் பற்றியே தவிர வேறு எதைப் பற்றியும் சுவர்க்கவாசிகள் கைசேதப்பட மாட்டார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபரானீ, பைஹகீ, ஜாமிவுஸ்ஸஙீர்)

 عَنْ جَابِرِ بنِ عَبْدِ اللهِ َؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ: لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ طَعَامِهِ قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ.

ஒருவர் தம் வீட்டில் நுழைந்தால், தாம் நுழையும் போதும், சாப்பிடும் போதும் அல்லாஹுதஆலாவை திக்ரு செய்தால், இங்கு உங்களுக்கு இரவு தங்கவும் இடமில்லை, இரவு உணவும் இல்லை’ என்று ஷைத்தான் (தன் சகாக்களிடம்) கூறுகிறான். அவர் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹுதஆலாவை திக்ரு செய்யவில்லையென்றால், இங்கு உங்களுக்குத் தங்க இடத்தையும், இரவு உணவையும் பெற்றுக் கொண்டீர்கள்!’ என்று ஷைத்தான் (தன் சகாக்களிடம்) கூறுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

[அன்புள்ள ஹாஜிகளே! தீய செயல் வேண்டாம்… தக்வா வேண்டும்:]

  اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏

ஹஜ்(ஜுடைய காலம் அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. மேலும், நீங்கள் ஏதேனும் நன்மை செய்தால் அதனை அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கின்றான். மேலும், நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித் துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். எனவே நல்லறிவுடையோரே! எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! [அல்குர்ஆன் 2:197.]

[ஹஜ்ஜூ செய்ய பிறரை தூண்டுபவருக்கும் அழகிய கூலி கிடைக்கிறது.]

 عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.

எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமஸ்வூத் பத்ரீ  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் , திர்மிதீ 2671 )

[ஏழைகளின் ஹஜ்...]

✍🏻 அன்புள்ளவர்களே! ஒரு ஏழை ஹஜ் செய்ய நிய்யத் வைக்கிறார். ஆனால் அவர் ஹஜ் செய்ய வசதியில்லை. அவரின் அழகிய நிய்யத்திற்காக‌ அழகிய கூலி கிடைக்கிறது.

 قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ،

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. [புகாரி 01]

 عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ ‏ “‏ إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً ‏”‏‏.‏

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:  அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான். [புகாரி 6491]

 عَنْ أَبِي أُمَامَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَي صَلاَةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ، وَمَنْ خَرَجَ إِلَي تَسْبِيحِ الضُّحَي لاَ يُنْصِبُهُ إِلاَّإِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِالْمُعْتَمِرِ، وَصَلاَةٌ عَلَي إِثْرِ صَلاَةٍ لاَ لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ. رواه ابوداود باب ما جاء في فضل المشي الي الصلوة، رقم:٥٥٨

 எவர் தமது வீட்டிலிருந்து உளூச் செய்துவிட்டு பர்ளுத் தொழுகையை நாடி வெளியேறுகிறாரோ, அவருக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜிக்குச் செல்பவரின் நன்மையைப் போன்று கிடைக்கிறது. எம்மனிதர், ளுஹாத் தொழுகைக்காகச் சிரமமெடுத்துத் தம் இடத்தைவிட்டு வெளியேறுகிறாரோ, அவருக்கு உம்ரா செய்பவருக்கு சமமான நன்மை கிடைக்கிறது. ஒரு தொழுகைக்கு பிறகு எவ்வித வீண் வேலையும் செய்யாமல், எந்த பயனற்ற பேச்சும் பேசாமல், மறுதொழுகையை நிறைவேற்றுவது, உயர் பதவிகளுக்குரிய ஏட்டில் எழுதப்படுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் 558)

[ஹாஜியார் பட்டம் :]

✍🏻 அன்புள்ளவர்களே! தன் புனித ஆலையத்தை தேடி வந்தவர்களுக்கு அன்று பிறந்த‌ பாலகனாக தாயகம் திரும்பும் மனிதருக்கு கிடைக்கும் பரிசுதான் ஹாஜியார் பட்டம்.

[தியாகத் தன்மை வர வேண்டும்:-] 

இந்த ஹஜ் கடமை அதைச் செய்வோரிடம் தியாகத்தை எதிர்பார்க்கின்றது. இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, அன்னை ஹாஜறா ஆகியோரது தியாகத்தை நினைவூட்டும் பல அம்சங்கள் ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகின்றது. எனவே இந்த ஹஜ் கடமையைச் செய்யும் ஹாஜிகள் தம்மிடம் தியாகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

[கொள்கை உறுதியை ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும்:-] 

✍🏻 அன்புள்ளவர்களே! இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, அன்னை ஹாஜறா ஆகியோரது கொள்கை உறுதியைப் பறைசாட்டும் நிகழ்வாகவும் ஹஜ் திகழ்கின்றது. அல்லாஹ் அறுக்கச் சொன்னதும் மகன் என்று பாராமல் தந்தை அறுக்கத் துணிகின்றார். மகனும் எந்த மறுப்போ, தயக்கமோ இன்றி அந்தக் கட்டளைக்குப் பணிகின்றார். அல்லாஹ் சொன்னதைச் செய்வது என்பதிலும், அதில் சுய விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதிலும் எத்தகைய கொள்கை உறுதியுடன் இந்தக் கோமான்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஹஜ் செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் இந்தக் கொள்கை உறுதியைத் தம் மனதில் ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும்.

ஹஜ் செய்யும் ஹாஜிகளிடம் ஹஜ் என்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படும் இயல்பை வளர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமல் வெறுமனே சென்றோம்-வந்தோமென்று இருந்தால் அந்த ஹஜ்ஜின் நிலை குறித்தே சிந்திக்க வேண்டியதாகி விடும்.

[அன்புள்ள ஹாஜிகளே! ஸவ்ர்’ மலைக்குகையை பார்க்கும் போது தக்வா வர வேண்டும்:-] 

عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَارِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِأَقْدَامِ الْقَوْمِ، فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ، لَوْ أَنَّ بَعْضَهُمْ طَأْطَأَ بَصَرَهُ رَآنَا‏.‏ قَالَ ‏ “‏ اسْكُتْ يَا أَبَا بَكْرٍ، اثْنَانِ اللَّهُ ثَالِثُهُمَا ‏”‏‏.‏

(ஹிஜ்ரத் பணயித்தின்போது வழியில்) நபி(ஸல்) அவர்களுடன் நான் (‘ஸவ்ர்’ மலைக்குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால் நம்பை; பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?’ என்று சொன்னேன். (நபி(ஸல்) அவர்கள், ‘அமைதியாயிருங்கள்; அபூ பக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)’ என்று கூறினார்கள். புகாரி 3922.

[அன்புள்ள ஹாஜிகளே! முகஸ்துதி வேண்டாம் இக்லாஸ் வேண்டும்:]

[முகஸ்துதியி (புகழ்விரும்புதலி) ன் இழிவு:]

 شَدَّادِ بْنِ اَوْسٍؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ صَلَّي يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ صَامَ يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ تَصَدَّقَ يُرَائِيْ فَقَدْ اَشْرَ

மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தொழுதாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் நோன்பு நோற்றாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தர்மம் செய்தாரோ, அவர் நிச்சயமாக இணைவைத்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

தெளிவுரை:- எவர்களுக்குக் காட்டவேண்டுமென்பதற்காக அமல் செய்தாரோ, அவர்களை அல்லாஹுதஆலாவுக்கு இணையாக ஆக்கிவிட்டார். இந்நிலையில் இந்த அமல்கள் அல்லாஹுதஆலாவுக்காக இல்லாமல் எவர்களுக்கு காட்டவேண்டும் என்று செய்தாரோ அவர்களுக்காக ஆகிவிடுகிறது. இதைச் செய்தவர் நன்மைக்குப் பதிலாக வேதனைக்கு உரியவராகிவிடுகிறார் என்பதாம்.

عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اَوَّلَ النَّاسِ يُقْضي يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ، رَجُلٌ اُسْتُشْهِدَ،فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعْمَتَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيْكَ حَتَّي اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ جَرِيْءٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَاَ الْقُرْآنَ، فَاُتِيَ بِهِ، فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَاْتُ فِيْكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ وَلكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ، وَقَرَاْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئئٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ وَاَعْطَاهُ مِنْ اَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيْلٍ تُحِبُّ اَنْ يُنْفَقَ فِيْهَا اِلاَّ اَنْفَقْتُ فِيْهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ، فَسُحِبَ عَلي وَجْهِهِ، ثُمَّ اُلْقِيَ فِي النَّارِ.

கியாமத் நாளில், முதன்முதலாக தனக்குப் பாதகமான தீர்ப்பை பெறுபவர்களில் அல்லாஹ்வுடைய பாதையில் உயிரிழந்தவரும் ஒருவர், அல்லாஹுதஆலாவுக்கு முன் அவரைக் கொண்டுவரப்படும், அவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான், அவரும் அதை ஒப்புக் கொள்வார்.இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன செய்தாய்?” என்று அல்லாஹுதஆலா கேட்பான். நான் உன்னுடைய பொருத்தத்திற்காகப் போரிட்டு உயிரிழந்தேன்” என்பார். நீ பொய் சொல்கிறாய், மக்கள் உன்னை வீரனேன்று சொல்லவேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்று அல்லாஹுதஆலா கூறுவான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார். இரண்டாவது மனிதர், மார்க்கக் கல்வி கற்று பிறருக்கும் கற்பித்தவர். மேலும், குர்ஆன் ஓதியவர், அவர் அல்லாஹுதஆலாவின் முன் கொண்டுவரப்படுவார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துரைப்பான், அவரும் ஒப்புக்கொள்வார். இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹுதஆலா அவரிடம் கேட்பான். நான் உனது பொருத்தத்திற்காக மார்க்கக் கல்வி கற்று, பிறருக்கும் கற்பித்தேன், உனது பொருத்தத்திற்காகவே சிறப்புமிகு குர்ஆனை ஓதினேன்” என்பார் அவர். நீ பொய் சொல்கிறாய்! மக்கள் உன்னை ஆலிம் என்று சொல்லவேண்டும் என்பதற்காக இல்மைக் கற்றாய். மக்கள் உன்னை காரீ என்று சொல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆனை ஓதினாய், அது அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு, அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் தூக்கியெறியப்படுவார். மூன்றாவது மனிதர் செல்வந்தர், அவருக்கு அல்லாஹுதஆலா உலகில் மிகுந்த செல்வம் கொடுத்திருந்தான், மேலும், அனைத்து வசதிகளையும் வழங்கியிருந்தான், அவர் அல்லாஹுதஆலாவுக்கு முன் கொண்டுவரப்படுவார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான். அவர் அதை ஒப்புக் கொள்வார். இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹ் கேட்பான், நீ செலவழிக்கச் சொன்ன வழிகளிலெல்லாம் நீ கொடுத்த பொருளை உன் பொருத்தத்திற்காகச் செலவிட்டேன்” என்று சொல்வார். நீ பொய் சொல்கிறாய் மக்கள் உன்னைக் கொடை வள்ளல் எனச் சொல்லவேண்டும் என்பதற்காக நீ செலவழித்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 عَنْ عَبْدِ اللهِ بْنِ قَيْسِ نِ الْخُزَاعِيِّؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ قاَمَ رِيَاءً وَسُمْعَةً لَمْ يَزَلْ فِيْ مَقْتِ اللهِ حَتَّي يَجْلِسَ.

பிறர் பார்க்க வேண்டும் அல்லது புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு எவர் நல்ல காரியத்தில் ஈடுபடுவாரோ, அவர் அந்த எண்ணத்தை விடாதவரை அல்லாஹுதஆலாவின் கடும் வெறுப்புக்கு ஆளாகி இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் குஸாயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தப்ஸீர் இப்னுகஸீர்)

[ஹஜ்ஜில் உளத்தூய்மை மிக அவசியம்.]

ஹஜ் கடமையைப் பற்றி கூறப்படும் வசனம் லில்லாஹி وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلً என்று தான் துவங்குகிறது.

உளத்தூய்மை இல்லாமல் ஹஜ் செய்பவர்களின்எண்ணிக்கை கடைசி  காலத்தில் பெருகும் என்பதைப்பற்றியும்

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا (97ال عمران) عن أنس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم يأتي على الناس زمان يحج أغنياء الناس للنزاهة وأوساطهم للتجارة وفقراؤهم للمسألة وقراؤهم للسمعة والرياء (كنز العمال)

தன்னுடைய அமலைப்பற்றி தானே பெருமைப்பட்டுக்கொள்வது மனிதனை  நாசமாக்கும் செயல்களில் ஒன்றாகும்.

عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” ثَلَاثٌ مُهْلِكَاتٌ شُحٌّ مُطَاعٌ وَهَوًى مُتَّبَعٌ وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ، وَثَلَاثٌ مُنْجِيَاتٌ خَشْيَةُ اللهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ، وَالْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَكَلِمَةُ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ (بيهقي)

ஹாஜியிடம் நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற ஆதரவும், அதே நேரத்தில் நம்முடையஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆகி விடுமோ  என்ற அச்சமும் இருக்க வேண்டும். இத்தகையவர் தன் அமலைப்பற்றி  பெருமைப்பட மாட்டார்.

[அன்புள்ள ஹாஜிகளே!! சபதம் எடுங்கள்:- ]

✍🏻 அன்புள்ள ஹாஜிகளே!! நாம் அல்லாஹ்வின் [ﷻ] புனிதமான இல்லமான கஃபத்துல்லாஹ்விற்க்கு வந்திருக்கிறோம். வந்தது மட்டுமல்லாமல் ஒரு சபதம் எடுக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. நான்  அல்லாஹ்வின் ஒரு கட்டளையை எனது மவ்த் வரைக்கும் நிறைவேற்றுவேன். என சபதம் எடுத்து மவ்த் ஆகும் வரைக்கும் செய்தால்தான் நம் ஹஜ் உயிருள்ள ஹஜ்ஜாகும்.

உதாரண‌மாக: தக்வாவோடு இருப்பேன். இக்லாஸோடு இருப்பேன். இஹ்ஸாஸோடு இருப்பேன். குர்ஆனிலிருந்து  தினமும்1 ஜூஸ்வு ஒதுவேன். தினமும் குர்ஆனிலிருந்து  1 வசனத்தை கற்ப்பேன். என்பதாக சபதம் எடுக்க வேண்டும்.

✍🏻 அன்புள்ள ஹாஜிகளே!! நாம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் புனிதமான இல்லமான ரவ்ளா ஷரிஃபிற்க்கு வந்திருக்கிறோம். வந்தது மட்டுமல்லாமல் ஒரு சபதம் எடுக்க வேண்டும்.

உதாரண‌மாக: இனிமேல் நான் சாப்பிடும் போது சுன்னத்தாக சாப்பிடுவேன். தூங்கும் போது சுன்னத்தாக தூங்குவேன். கழிவறைக்கு போகும் போது சுன்னத்தாக போகுவேன். ஆடை- தண்ணிர் அருந்தும் போது சுன்னத்தாக அருந்துவேன். என்பதாக சபதம் எடுக்க வேண்டும். 

குறிப்பு : நம்மால் முடிந்த, நமது சக்திக்கு தகுந்த சபதமாக எடுத்து மவ்த் வரை நிறைவேற்ற வேண்டும்.

நாம் ஆசையில் பெரிய சபதத்தை எடுத்து நம்மால் செய்ய முடியவில்லையே என வருந்தக்கூடாது.

عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَىُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتِ الدَّائِمُ‏.‏

நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘குறைந்த செயலாக இருந்தாலும் தொடர்ந்து செய்யும் அமல்’ என்று விடையளித்தார்கள். (புகாரி 1132)


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்….

✍ இன்னும் சொல்ல வேண்டியது நிறைவாய் உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன்  வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ர‌ப்பில் ஆலமீன். .  (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ)            

ஆக அல்லாஹ் இவ்வுலகில் வாழும் நம் முஸ்லிம் சமுதாயத்தினரின் தீய அவபெயர்களை விட்டும் நம் அனைவரையும் பாதுகாத்து அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்

✍🏻✍🏻நன்றியுரை:- 

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்