Skip to main content

அல்லாஹ் நம்மை நேசிக்கனும்


யா அல்லாஹ்! நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்ற தேர்தலில்  நல்ல பிரதிநிதிகள் வெற்றி பெரும் பாக்கியத்தை தந்தருள்வாயாக! ஆமீன். என துஆ செய்தவனாக!… எனது ஜுமுஆ குறிப்புரையை எழுத‌ ஆரம்பம் செய்கிறேன்.

【♣ துவக்கவுரை: المقد مة INTRODUCTION:-♣】

அல்லாஹ்வின் ﷻ பேரருளால்  [ ذو القعدة]   துல்கஅதா மாதத்தின்  முதல் வார‌  ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்

✍🏻 அல்லாஹ் ﷻ நம்மை நேசிக்கணும். சம்பந்தமாக A TO Z வரை தெரிந்து கொள்வோம் வாருங்கள்……

அல்லாஹ் ﷻ  எந்த இபாத்தை செய்தால் நம்மை நேசிப்பானோ? அப்படிபட்ட அமலை மவ்த் வரைக்கும் செய்யக்கூடிய பாக்கியத்தை & வாய்ப்பை & சந்தர்பத்தை அல்லாஹ் ﷻ  நம்மனைவருக்கும் தந்தருள் புரிவானாக ! ஆமீன்..

✍🏻, பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன்  ﷻ  நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  ✍🏻  என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்..

  • ✍🏻 அன்புள்ளவர்களே!  நாம் அல்லாஹ்வை  ﷻ நேசிக்கணும் சம்பந்தமாக‌ பயான்  கேட்பதினால் அல்லாஹ்  ﷻ என்ற வார்தையை அதிகமாக பயன்படுத‌ப்படும். அதனால் அல்லாஹ்வை   ﷺ என்ற வார்த்தை எங்கெல்லாம். பயன்படுத‌ப்படுகிறதோ அங்கெல்லாம் அல்லாஹ்வின் [ﷻ – الله جل جلاله] என்ற புகழாரத்தை சொல்லுங்கள்…

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى ♣

【அல்லாஹ் ﷻ நேசிக்கும் 12 நபர்கள்.】


✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ் ﷻ குர்ஆனில் 12 நபர்களை நேசிக்கிறேன் என்பதாக சான்றிதழ் கொடுத்துள்ளான். அந்த 12 நபர்களில் ஒரு [குணமாவது] நபராவது நாம் இருக்கிறோமா? என தனக்குத் தானே பரிசோதனை செய்து. திருந்தி வாழ முயர்சிப்போம் வாருங்கள்..!!

அல்லாஹ் ﷻ  குர்ஆனில் 12 நபர்களை நேசிக்கிறேன் என வாக்கு கொடுத்ததை நாமும் நம் வாழ்வில் அந்த 12 குணங்களோடு வாழ்ந்து நம் வாழ்வை முழுமையாக அல்லாஹ் நேசம் பெற்ற வாழ்வாக வாழ முயற்சிப்போம் + பயிற்சி எடுப்போமாக!.

  1. اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். 2:195, 3:134, 3:148, 5:13,
  2. اِنَّ اللّٰهَ يُحِبُّ  التَّوَّابِيْنَ  நிச்சயமாக அல்லாஹ் பாவங்களைவிட்டு மீள்பவர்களை  நேசிக்கிறான் 2:222. 
  3. وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏  நிச்சயமாக அல்லாஹ் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான்  2:222. 
  4.  وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கிறான். 3:76, 9:4, 9:7, 
  5. وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏ அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கிறான். 3:146.
  6. اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏  நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். 3:159
  7. اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கிறான்.5:42, 49:9, 60:8, 
  8. وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوا وَّاَحْسَنُوْا‌ ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏ ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். 5:93.
  9.  اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِهٖ صَفًّا அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கிறான். 61:4.
  10. அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர் பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ((ﷺ )) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது: (அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன 1. அறிவாற்றல் 2. நிதானம்.  முஸ்லிம் 25
  11. அன்சாரிகள் தொடர்பாக நபி ((ﷺ)) அவர்கள் கூறுகையில், “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்கமாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று குறிப்பிட்டார்கள்.  முஸ்லிம் 129
  12. அல்லாஹ்வின் தூதர் ((ﷺ) அவர்கள், “அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்” முஸ்லிம் 5673.

【1. அல்லாஹ் ﷻ முஹ்ஸின்களை நன்மை செய்வோரை நேசிக்கிறான்:-.】

اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். 2:195, 3:134, 3:148, 5:13,

✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ் ﷻ முஹ்ஸின்களை [நன்மை செய்வோரை] நேசிப்பதினால் நம் ரசூல் ﷺ அவர்கள் ஸஹாபாக்களுக்கு எந்த ஒரு உலக‌ தேவையாக இருந்தாலும் அவர்களை அமல்களின் பக்கம் திருப்பி விடுவார்கள்..

 عَنِ السَّائِبِ عَنْ عَلِيٍّ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ لَمَّا زَوَّجَهُ فَاطِمَةَ بَعَثَ مَعَهَا بِخَمِيلَةٍ وَوِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ وَرَحَيَيْنِ وَسِقَاءٍ وَجَرَّتَيْنِ، فَقَالَ عَلِيٌّ ؓ لِفَاطِمَةَ ؓ ذَاتَ يَوْمٍ: وَاللهِ لَقَدْ سَنَوْتُ حَتَّي لَقَدْ اشْتَكَيْتُ صَدْرِي قَالَ: وَقَدْ جَاءَ اللهُ أَبَاكِ بِسَبْيٍ فَاذْهَبِي فَاسْتَخْدِمِيهِ، فَقَالَتْ: وَأَنَا وَاللهِ قَدْ طَحَنْتُ حَتَّي مَجِلَتْ يَدَايَ فَأَتَتِ النَّبِيَّ ﷺ، فَقَالَ، مَا جَاءَ بِكِ أَيْ بُنَيَّةُ؟ قَالَتْ: جِئْتُ لِأُسَلِّمَ عَلَيْكَ وَاسْتَحْيَتْ أَنْ تَسْاَلَهُ وَرَجَعَتْ فَقَالَ: مَا فَعَلْتِ قَالَتْ: إِسْتَحْيَيْتُ أَنْ أَسْاَلَهُ فَأَتَيْنَاهُ جَمِيعاً، فَقَالَ عَلِيٌّ ؓ: يَارَسُولَ اللهِﷺ لَقَدْ سَنَوْتُ حَتَّي اشْتَكَيْتُ صَدْرِي وَقَالَتْ فَاطِمَةُ ؓ: قَدْ طَحَنْتُ حَتَّي مَجِلَتْ يَدَايَ وَقَدْ جَاءَكَ اللهُ بِسَبْيٍ وَسَعَةٍ فَأَخْدِمْنَا، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: وَاللهِ لاَ أُعْطِيكُمَا وَأَدَعُ أَهْلَ الصُّفَّةِ تُطْوَي بُطُونُهُمْ لاَ أَجِدُ مَا أُنْفِقُ عَلَيْهِمْ وَلكِنِّي أَبِيعُهُمْ وَأُنْفِقُ عَلَيْهِمْ أَثْمَانَهُمْ، فَرَجَعَا فَأَتَاهُمَا النَّبِيُّ ﷺ وَقَدْ دَخَلاَ فِي قَطِيفَتِهِمَا إِذَا غَطَّيَا رُؤُوسَهُمَا تَكَشَّفَتْ أَقْدَامُهُمَا وَإِذَا غَطَّيَا أَقْدَامَهُمَا تَكَشَّفَتْ رُؤُوسُهُمَا فَثَارَا، فَقَالَ: مَكَانَكُمَا ثُمَّ قَالَ: أَلاَ أُخْبِرُكُمَا بِخَيْرٍ مِمَّا سَاَلْتُمَانِي؟ قَالاَ: بَلَي، فَقَالَ: كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ جِبْرِيلُ ^ فَقَالَ: تُسَبِّحَانِ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَتَحْمَدَانِ عَشْرًا وَتُكَبِّرَانِ عَشْرًا وَإِذَا أَوَيْتُمَا إِلَي فِرَاشِكُمَا فَسَبِّحَا ثَلاَثاً وَثَلاَثِينَ وَاحْمَدَا ثَلاَثاً وَثَلاَثِينَ وَكَبِّرَا أَرْبَعاً وَّثَلاَثِينَ، قَالَ: فَوَ اللهِ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: فَقَالَ لَهُ ابْنُ الْكَوَاءِ: وَلاَ لَيْلَةَ صِفِّينَ؟ فَقَالَ: قَاتَلَكُمُ اللهُ يَا أَهْلَ الْعِرَاقِ نَعَمْ، وَلاَ لَيْلَةَ صِفِّينَ. رواه احــمــد:١ /١٠٦

ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸாயிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களை எனக்குத் திருமணம் செய்து வைத்த பொழுது, ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுடன் ஒரு போர்வை, பேரீச்ச ஓலைகளால் நிரப்பப்பட்ட ஒரு தோல் தலையணை, இரு திருகைகள், ஒரு தோல் துருத்தி, இரு குடங்கள் ஆகியவைகளை அனுப்பி வைத்தார்கள்”. ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் நான், பாத்திமா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் மீது ஆணையாக! கிணற்றிலிருந்து வாலியால் நீர் இறைத்து, இறைத்து எனது நெஞ்சில் வலி உண்டாகிவிட்டது. உமது தந்தையிடம் சில கைதிகளை அல்லாஹ் அனுப்பி வைத்துள்ளான். அவர்களிடம் சென்று பணியாளர் ஒருவரைக் கேட்டுவாரும்!” என்று கூறினேன். ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள் நான் திருகையில் மாவு அரைத்து, அரைத்து எனது கையிலும் தழும்பு உண்டாகிவிட்டது” எனக் கூறினார்கள், அவர்கள் நபியவர்களின் சமுகம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அருமை மகளே! என்ன காரியமாக வந்தீர்?” என்று கேட்டார்கள். ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள், ஸலாம் சொல்வதற்காக வந்தேன்” என்று சொல்லிவிட்டு, வெட்கத்தினால் வந்த நோக்கத்தைச் சொல்லாமல் வீடு திரும்பிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சென்று வந்ததைப் பற்றி நான் அவர்களிடம் வினவியதற்கு, வெட்கத்தினால் பணியாளரைக் கேட்கவில்லை’ என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து நபி (ஸல்) அவர்களின் சமுகம் வந்தோம். யாரஸூலல்லாஹ், கிணற்றிலிருந்து நீர் இறைத்து, இறைத்து எனது நெஞ்சில் வலி ஏற்பட்டுவிட்டது” என்று நான் சொல்ல, திருகை அரைத்து அரைத்து எனது கைகளில் தழும்பு ஏற்பட்டுவிட்டது. அல்லாஹ் தங்களிடம் கைதிகளை அனுப்பிவைத்துள்ளான், சிறிது வசதியையும் செய்துள்ளான். ஆகவே எங்களுக்கும் ஒரு பணியாளரைத் தாருங்கள்!” என்று ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள், வேண்டினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! திண்ணைத் தோழர்கள் பட்டினியாக இருந்ததினால் அவர்களின் வயிற்றில் சுருக்கத்தின் அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு கொடுக்க என்னிடம் வேறு எதுமில்லை. அதனால், இந்த அடிமைகளை விற்று அப்பணத்தைத் திண்ணைத் தோழர்களுக்குச் செலவிடுவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இருவரும் திரும்பி வந்துவிட்டோம், (அன்று) இரவில் நாங்கள் இருவரும் சிறிய கம்பளியொன்றில் படுத்திருந்தோம். அக்கம்பளியால் தலையை மூடினால் கால்பகுதி திறந்துகொள்ளும். கால் பகுதியை மூடினால் தலைப்பகுதி திறந்து கொள்ளும், அச்சமயம் எதிர்பாராதவிதமாக நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நாங்கள் இருவரும் உடனடியாக எழுந்து கொள்ள முயன்றோம், அப்படியே படுத்திருங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, பிறகு நீங்கள் என்னிடம் வேளையாள் கேட்டீர்கள், அதைவிடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் சொல்லித்தரட்டுமா?” எனக் கேட்டார்கள். அவசியம் அறிவியுங்கள்! என்றோம், ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் சில கலிமாக்களை எனக்குக் கற்றுத் தந்தார்கள். நீங்கள் இருவரும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை அல்லாஹு அக்பர் என்று ஓதி வாருங்கள். உறங்கும் போது 33 முறை சுப்ஹானல்லாஹ், 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 34 முறை அல்லாஹு அக்பர் என்று சொல்லி வாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் இக்கலிமாக்களைக் கற்றுத் தந்த நாளிலிருந்து, இதை ஓதி வருவதை என்றும் நான் விட்டதில்லை”[அஹ்மத்].

عَنْ عَبْدِ اللهِ بْنِ سَلْمَانَ رَحِمَهُ اللهُ أَنَّ رَجُلاً مِنْ أَصْحَابِ لنَّبِيِّ ﷺ حَدَّثَهُ قَالَ: لَمَّا فَتَحْنَا خَيْبَرَ أَخْرَجُوا غَنَائِمَهُمْ مِنَ الْمَتَاعِ وَالسَّبْيِ فَجَعَلَ النَّاسُ يَبْتَاعُونَ غَنَائِمَهُمْ فَجَاءَ رَجُلٌ، فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ لَقَدْ رَبِحْتُ رِبْحاً مَارَبِحَ الْيَوْمَ مِثْلَهُ أَحَدٌ مِنْ أَهْلِ هذَا الْوَادِي قَالَ: وَيْحَكَ وَمَا رَبِحْتَ؟ قَالَ: مَازِلْتُ أَبِيعُ وَأَبْتَاعُ حَتَّي رَبِحْتُ ثَلاَثَمِائَةِ أُوقِيَّةٍ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: أَنَا أُنَبِّئُكَ بِخَيْرِ رَجُلٍ رَبِحَ، قَالَ: مَا هُوَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: رَكْعَتَيْنِ بَعْدَ الصَّلاَةِ. رواه ابوداؤد باب في التجارة في الغزو، رقم:٢٦٦٧. مختصر سنن ابي داود للمنذري.

ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ஸல்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக, ஸஹாபி ஒருவர் என்னிடம் கூறினார், நாங்கள் கைபர் போரில் வெற்றியடைந்த சமயம், மக்கள் தத்தமது ஙனீமத் பொருட்களை வெளியே எடுத்தார்கள், அவற்றில் கைதிகளும் சாமான்களும் இருந்தன, அவர்கள் ஒருவருக்கொருவர் வாங்கவும், விற்கவும் ஆரம்பித்தனர். (ஒவ்வொருவரும் தமக்குத் தேவையானவற்றை வாங்கவும் தேவையில்லாதவற்றை விற்கவும் செய்தனர்) அதற்குள் ஒரு ஸஹாபி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து, யாரஸூலல்லாஹ்! இன்று நான் செய்த வியாபாரத்தில் யாருக்கும் கிடைக்காத அளவு லாபம் எனக்குக் கிடைத்தது” என்றார். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஆச்சரியத்துடன், எவ்வளவு லாபம் அடைந்தீர்?’ என்று வினவினார்கள். நான் சாமான்களை வாங்கவும், விற்கவும் செய்ததில் முன்னூறு ஊகியா வெள்ளி லாபமாகக் கிடைத்தது’ என்று அந்த ஸஹாபி கூறினார். நான் உமக்கு இதைவிட அதிகம் லாபம் பெறும் மனிதரைப் பற்றித் அறிவிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யாரஸூலல்லாஹ்! அது என்ன லாபம்?’ என்று அவர் கேட்டார், அது பர்ளுத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத் நபில் தொழுவது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவூத்)

குறிப்பு:- ஓர் ஊகியா என்பது நாற்பது திர்ஹங்கள், ஒரு திர்ஹம் என்பது சுமார் 3 கிராம் வெள்ளியைக் கொண்டது, இதன்படி 300 ஊகியா என்பது ஏறக்குறைய 3600 கிராம் வெள்ளிக்குச் சமம்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَي اْلاَسْلَمِيِّ ؓ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ فَقَالَ: مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَي اللهِ أَوْ إِلَي أَحَدٍ مِنْ خَلْقِهِ فَلْيَتَوَضَّأْ وَلْيُصَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ لْيَقُلْ: لاَ إِلهَ إِلاَّ اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللّهُمَّ إِنِّي أَسْئَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ أَسْئَلُكَ أَلاَّ تَدَعَ لِي ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضاً إِلاَّ قَضَيْتَهَا لِي، ثُمَّ يَسْأَلُ اللهَ مِنْ أَمْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ مَاشَاءَ فَإِنَّهُ يُقَدَّرُ. رواه ابن ماجه باب ماجاء في صلوة الحاجة رقم:١٣٤٨. قال البوصيري: قلت: رواه الترمذي من طريق فائد به دون قوله: ثُمَّ يَسْاَلُ اللّهَ مِنْ أَمْرِ الدُّنْيَا. الي اخره ورواه الحاكم في المستدرك باختصار وزاد بعد قوله: وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْعِصْمَةَ مِنْ كُلِّ ذَنْبٍ.وله شاهد من حديث انس رواه الاصبهاني ورواه ابويعلي الموصلي في مسنده من طريق فائدة به …،مصباح الزجاجة:١ /٢٤٦

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள், எவருக்கேனும் ஏதேனும் தேவை ஏற்பட்டால், அத்தேவை அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அல்லது படைப்பினங்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அவர் உளூச் செய்து இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, (لاَ إِلهَ إِلاَّ اللّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللّهُمَّ إِنِّي أَسْئَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ أَسْئَلُكَ أَلاَّ تَدَعَ لِي ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضاً إِلاَّ قَضَيْتَهَا لِي) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரியவன் யாருமில்லை, அவன் மிகவும் சகிப்புத் தன்மையுடையவன், சங்கைக்குரியவன், அல்லாஹ் எல்லாக் குறைகளைவிட்டும் தூய்மையானவன். மகத்தான அர்ஷின் அதிபதி. அகிலத்திற்கெல்லாம் இரட்சகனான அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்’. யாஅல்லாஹ், நான் உன்னிடம் உன் ரஹ்மத்தைத் கட்டாயமாக்கும் எல்லாக் காரியங்களையும் உன்னுடைய பிழை பொறுத்தலை உறுதியாக்குபவற்றையும் கேட்கிறேன். எல்லா நன்மையிலும் பங்கையும் பாவத்திலிருந்து பாதுகாப்பையும் கேட்கிறேன். எனது எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே! எந்தக் கவலையையும் நீக்காமல் விடாதே! உனக்குப் பொருத்தமாக உள்ள எனது எந்தத் தேவையையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!” என்று துஆச் செய்தபின் அல்லாஹ்விடம் இம்மை, மறுமையின் எந்தக் காரியத்தைக் கேட்டாலும் அது அவருக்குக் கிடைக்கும்” என்று எங்களிடம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். رواه ابن ماجه

عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللّٰهِؓ قَالَ جَاءَ رَجُلٌ إِلَي رَسُولِ اللّٰهِ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلاَ نَفْقَهُ مَا يَقُولُ حَتَّي دَنَا فَإِذَا هُوَ يَسْاَلُ عَنِ اْلإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللّٰهِؐ : خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ، قَالَ رَسُولُ اللّٰهِؐ : وَصِيَامُ رَمَضَانَ، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ، قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللّٰهِؐ الزَّكَاةَ قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ، قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللّٰهِ لاَ أَزِيدُ عَلَي هذَا وَلاَ أَنْقُصُ، قَالَ رَسُولُ اللّٰهِؐ : أَفْلَحَ إِنْ صَدَقَ. رواه البخاري باب الزكاة من الاسلام رقم:٤٦

ஹஜ்ரத் தல்ஹதிப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நஜ்து பகுதியைச் சார்ந்த ஒருவர், தலைவிரிகோலமாக நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். (தூரமாக இருந்ததால்) நாங்கள் அவரது பேச்சின் மெல்லிய ஓசையைத் தான் கேட்க முடிந்தது. அவரது பேச்சைத் தெளிவாக விளங்க முடியவில்லை. அதற்குள், அவர் அருமை நபி (ஸல்) அவர்களுக்கு சமீபத்தில் வந்து, “இஸ்லாம் (உடைய அமல்கள்)’ பற்றிக் கேட்டார் என்பதை விளங்கிக் கொண்டோம். நபி (ஸல்) அவர்கள் (அவருடைய கேள்விக்குப் பதில் அளிக்கையில்) “இரவு, பகலில் ஐந்து (பர்ளான) தொழுகைகள்’’ என்றார்கள். அவர், “இதுவல்லாமல் வேறு தொழுகைகள் ஏதேனும் என் மீது பர்ளா? (கடமையா?)’ என்று வினவியதற்கு, “இல்லை! ஆயினும், நஃபில் தொழ விரும்பினால், தொழுது கொள்ளலாம்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் “ரமளான் உடைய நோன்பு கடமை’ என்று கூறினார்கள். “இதைத் தவிர வேறு நோன்பு என் மீது கடமையா?’’ என்று வினவ, “இல்லை! ஆயினும் நீர் விரும்பினால் நஃபில் நோன்பை நோற்றுக் கொள்ளலாம்’’ என்றார்கள். (இதன் பிறகு) நபி (ஸல்) அவர்கள், ஸகாத்தைப் பற்றி கூறினார்கள். “ஸகாத் அல்லாமல் வேறு ஏதேனும் தர்மம் என் மீது கடமையா?’ என்று வினவ, “இல்லை ஆயினும் நீர் விரும்பினால் நஃபிலான தர்மம் செய்து கொள்ளலாம்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் வின் மீது ஆணை! இந்த அமல்களைவிட எதையும் நான் அதிகப்படுத்தவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்’ என்று சொல்லியவராகத் திரும்பிச் சென்றுவிட்டார். “இவர் உண்மை சொல்லியிருந்தால், வெற்றியடைந்துவிட்டார்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 46 رواه البخاري

ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபி (ஸல்) அவர்கள், ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன்’என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்’என்று பதிலளித்தார்கள். புகாரீ 1149, முஸ்லிம் 4497

#ஒரு_முறை எம்பெருமானார் கண்மணி ரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அண்ணவர்கள்,,,

#தனது அருமை மகளான ஃபாத்திமா ரலியல்லாஹூஅன்ஹா அவர்கள் அண்ணவர்களின் வீட்டிற்க்கு சென்றிருந்தார்கள்….!!!

#அப்பொழுது ஹசன் (ரலியல்லாஹூ அன்ஹூ), ஹுசைன் (ரலியல்லாஹூ அன்ஹூ ) விளையாடிக் கொண்டிருந்தார்கள்…!!

#பெருமானார் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அண்ணவர்கள் சிறுவரான தம் அருமை பேரர் ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை அழைத்து,,,

#நீ_சிறந்தவறா? நான் சிறந்தவறா? எனக் கேட்டார்கள்…!!

இதைப் பார்த்து கொண்டிருந்த அன்னை ஃபாத்திமா ரலிரலியல்லாஹூ அன்ஹா அண்ணவர்கள்,,,

தன் மகன் என்ன பதில் சொல்லப் போகிறார்,,,என ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்…!!

#உடனே,,,,, #சிறுவரான ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹூ அண்ணவர்கள்,,,

நான் தான் சிறந்தவர்,,எனக் கூறினார்கள். உடனே எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அது எப்படி என்று தன் பேரனிடம் கேட்டார்கள்…!!

#அறிவின் தலைவாயில் அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் அருமை மகனார் ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்…!!

○ #எங்கள்_பாட்டனார் நபிகள் பெருமானார்,, ஈருலக இரட்சகர் ,,உங்கள் பாட்டனார் என்ன நபியா?

○ #எங்கள் தாயார் காத்தமுன் நபியின் மகள்,, உங்கள் தாயார் என்ன காத்தமுன் நபியின் மகளா?

#என்னுடைய தாயார் சுவனத்தின் தலைவி , உங்கள் தாயார் என்ன சுவனத்தின் தலைவியா?

#எனக்_கேட்டு,,,

யார் சிறந்தவர்கள் என தாங்களே சொல்லுங்கள் என பெருமானார் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் இடமே கேட்டார்கள்….!!

#அவர்களின் சிறிய வயதில் அந்த அறிவை பார்த்து பெருமானார் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அண்ணவர்கள் தம் பேரனை நெஞ்சோடு அணைத்து முத்தம் கொடுத்தார்கள்…!!

தன் அருமை பேரன் ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு நீர் சிறந்தவரே என்று மகிழ்வோடு சொன்னார்கள்..!!

சிறு வயதிலே ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹூ அண்ணவர்களின் ஞானத்தைப் பாருங்கள்…!! சுவனத்து இளைஞர்களின் தலைவர் என கண்மணி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் போற்றபட்டவர்கள்…!! (நூல்; அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா வாழ்க்கை வரலாறு)

【2. அல்லாஹ் ﷻ பாவங்களைவிட்டு மீள்பவர்களை  நேசிக்கிறான்:-】

اِنَّ اللّٰهَ يُحِبُّ  التَّوَّابِيْنَ  நிச்சயமாக அல்லாஹ் பாவங்களைவிட்டு மீள்பவர்களை  நேசிக்கிறான் 2:222. 

அல்லாஹ் ﷻ நாம் அனைவரும் பாவங்கள் செய்யாமல் பரிசுத்தமாக வாழ்வதை விரும்புகிறான். அதற்காகத்தான் ஒரு நாளைக்கு 5 நேர தொழுகையை கடமையாக்கினான். மற்ற எல்லா நல் அமல்களும் [ஓளு, ஸதகா, நோன்பு, திக்ர், குர்ஆன் ஓதுதல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல் Etc…] போன்றவைகாள் நம் பாவங்களை அழிக்கும் [அழிரப்பராக] மருந்தாக விளங்குகிறது..

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

【 ““நிச்சயமாக மனிதன் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி இருக்கின்றான்:-】

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்.[முஸ்லிம் 395]

عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ. رواه الترمذي وقَالَ: هذا حديث غريب باب في استعظام المُؤْمِنِ ذنوبه

ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் பாவம் செய்பவர்களே! பாவம் செய்பவரில் சிறந்தவர் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்பவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّي تَعْلُوَ قَلْبُهُ وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللهُ (كَلاَّ بَلْ سكتة رَانَ عَلي قُلُوبِهِمْ مَاكَانُوا يَكْسِبُونَ۞) (المطففين:١٤) رواه الترمذي وقَالَ:هذا حديث حسن صحيح باب ومن سورة ويل للمطففين رقم:٣٣٣٤

அடியான் ஒரு பாவம் செய்துவிட்டால், அவன் உள்ளத்தில் ஒரு கறுப்புப் புள்ளி ஏற்படுகிறது. பிறகு அவன் அப்பாவத்தை விட்டும் அல்லாஹுதஆலா விடம் பாவமீட்சி பெற்றுவிட்டால் (அக்கரும்புள்ளி மறைந்து) உள்ளம் தூய்மையடைந்து விடுகிறது. அந்தப் பாவத்திற்குப் பிறகு தவ்பா, இஸ்திகுஃபார் செய்யாமல் மேலும் அதிகமாகப் பாவம் செய்தால் உள்ளத்தின் கருமை மேலும் அதிகரிக்கிறது. இறுதியில் உள்ளம் முழுதும் கறுத்துவிடுகிறது. இந்தத் துருவைப் பற்றித் தான் அல்லாஹுதஆலா  ( كَلاَّ بَلْ سكتة رَانَ عَلي قُلُوبِهِمْ مَاكَانُوا يَكْسِبُونَ ) அவர்கள் சம்பாதித்த (தீவினையின் காரணமாக) அவர்களின் உள்ளங்களின் மீது துரு ஏறிவிட்டது (அல்முதஃபிபீன்:14) என்ற ஆயத்தில் குறிப்பிட்டுள்ளான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

عَنْ أَبِي بَكْرِنِ الصِّدِّيقِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَإِنْ عَادَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً. رواه ابوداؤد باب في الاستغفار رقم:١٥١٤

தன் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொண்டிருப்பவர் பாவங்களில் நிலைத்திருப்பவராகக் கருதப்படமாட்டார். ஒரு நாளைக்கு அவர் எழுபது முறை பாவம் செய்தாலும் சரியே” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

தெளிவுரை:- எந்தப் பாவத்திற்குப் பிறகு கைசேதமும், இனி பாவம் செய்யாமல் இருப்பேன் என்று உறுதியான எண்ணமும் இருக்குமோ அது மன்னிக்கத் தக்கதாகும். அப்பாவம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தாலும் சரியே!.   (பத்லுல் மஜ்ஹூத்)

【3. அல்லாஹ் ﷻ தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான்:- 】

وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏  நிச்சயமாக அல்லாஹ் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான்  2:222.

  • ஆள் பாதீ ஆடை பாதி.
  • சுத்தம் ஈமானில் பாதி.. ﷻ

عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ ﷺ عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَاسْتِنْشَاقُ الْمَاءِ، وَقَصُّ اْلاَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ اْلإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ، قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌؒ : وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ. رواه مسلم باب خصال الفطرة رقم:٦٠٤

பத்து காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது:

  1. மீசையைக் கத்தரிப்பது,
  2. தாடியை வளர்ப்பது,
  3. மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது),
  4. மூக்கில் தண்ணீர் செலுத்திச் சுத்தம் செய்வது,
  5. நகம் வெட்டுவது,
  6. விரல்களின் இணைப்புகளையும் (அதேபோல் உடலில் அழுக்குப் படியும் இடங்களையும்) உதாரணமாக காது, மூக்குத் துவாரங்கள் போன்றவை களைப் பேணுதலாகக் கழுவது,
  7. தோள் புஜத்துக்குக் கீழ் உள்ள முடியைப் பிடுங்குவது,
  8. தொப்புளுக்குக் கீழுள்ள முடியைச் சிரைப்பது,
  9. மல, ஜலம் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்வது ஆகியனவாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இவற்றில் பத்தாவது காரியம் என்னவென்பதை நான் மறந்துவிட்டேன் பத்தாவது காரியம்
  10. வாய் கொப்பளிப்பதாக இருக்கும் என எண்ணுகிறேன்’ என்று ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஜ்ரத் முஸ்அப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம்)

 عَنْ عَبْدِ اللهِ الصُّنَابِحِيِّ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ، فَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ حَتَّي تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ حَتَّي تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ، فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّي تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ حَتَّي تَخْرُجَ مِنْ تَحْتِ أَظَفْارِ رِجْلَيْهِ، ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَي الْمَسْجِدِ وَصَلاَتُهُ نَافِلَةً لَهُ.   رواه النسائي باب مسح الاذنين مع الراس …رقم:١٠٣ 

 (وَفِي حَدِيثِ طَوِيلٍ) عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ السُّلَمِيِّ ؓ وَفِيهِ مَكَانَ (ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَي الْمَسْجِدِ وَصَلاَتُهُ نَافِلَةً): فَإِنْ هُوَ قَامَ فَصَلَّي، فَحَمِدَ اللهَ وَأَثْنَي عَلَيْهِ، وَمَجَّدَهُ بِالَّذِي هُوَ لَهُ أَهْلٌ، وَفَرَّغَ قَلْبَهُ لِلّهِ، إِلاَّ انْصَرَفَ مِنْ خَطِيئَتِهِ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ. رواه مسلم باب اسلام عمرو بن عبسة ١ رقم:١٩٣٠

முஃமினான அடியான் உளூச் செய்யும் சமயம் வாய் கொப்பளித்ததும் அவனுடைய வாயின் அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகிறது. மூக்கை (நாசித்துவாரத்தை)ச் சுத்தம் செய்ததும் மூக்கின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகிறது, முகத்தைக் கழுவியதும் முகத்தின் பாவங்கள் கழுவப்பட்டு கண் இமை முடிகளின் வேரிலிருந்து வெளியேறிவிடுகிறது. கைகளைக் கழுவியதும் கைகளின் பாவங்கள் கழுவப்பட்டு நகங்களின் கீழிருந்து வெளியேறிவிடுகிறது. தலைக்கு மஸஹ் செய்ததும் தலையின் பாவங்கள் கழுவப்பட்டுக் காதுகளிலிருந்து வெளியேறிவிடுகிறது. கால்களைக் கழுவியதும் கால்களின் பாவங்கள் கழுவப்பட்டுக் கால் விரல் நகங்களின் கீழிலிருந்து வெளியேறிவிடுகிறது. பிறகு, அவர் பள்ளிக்குச் செல்வதும் தொழுவதும் அவருக்கு அதிகப்படியான(சிறப்பிற்குக் காரணமான)தாக இருக்கும்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதை ஹஜ்ரத் அப்துல்லாஹ் ஸுனாபிஹீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உளூச் செய்துவிட்டுத் தொழ நின்று அல்லாஹ்வின் தகுதிக்கேற்றவாறு அவனைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தியும் உயர்தன்மையைக் கூறியும் தனது உள்ளத்தை (அனைத்துச் சிந்தனைகளிலிருந்தும்) வெறுமையாக்கி அல்லாஹ்வின் பால் சிந்தனை செலுத்தித் தொழுதால், அவர் தொழுது முடித்ததும் அன்று பிறந்த பாலகனை போன்று பாவங்களிலிருந்து தூய்மையடைந்துவிடுகிறார்” என்று ஹஜ்ரத் அம்ரிப்னு அபஸா ஸுலமி (ரலி) அவர்களின் வாயிலாக மற்றொர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 தெளிவுரை:- உளூவினால் உடல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. தொழுகையினால் உள்ளம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன என்று சில ஆலிம்கள் முதல் ஹதீஸுக்கு விளக்கம் கூறுகிறார்கள்.  (கஷ்ஃபுல் முஙத்தா)

【4. அல்லாஹ் ﷻ (தனக்கு) அஞ்சி நடப்போரை  நேசிக்கிறான்:- 】

 وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கிறான். 3:76, 9:4, 9:7,

  اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு. 67:12.

 وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ‌ۚ‏

தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. 55:46.

وَقَالَ تَعَالي: (إِنَّ الْمُتَّقِينَ فِي جَنّتٍ وَّعُيُونٍ ۞ آخِذِينَ مَاآتهُمْ رَبُّهُمْ ط إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذلِكَ مُحْسِنِينَ ۞ كَانُوا قَلِيلاً مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُونَ ۞ وَبِالْأَسْحَارِهُمْ يَسْتَغْفِرُونَ۞). الذريت:١٨-١٥

நிச்சயமாக (ரப்பை) அஞ்சியோர் சொர்க்கச் சோலைகளிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள், அவர்களுடைய ரப்பு அவர்களுக்குக் கொடுத்ததை (மகிழ்வுடன்) ஏற்றுக் கொண்டவர்களாக (இருப்பார்கள்) நிச்சயமாக அவர்கள் இதற்குமுன் (உலகில்) நன்மை செய்கிறவர்களாக இருந்தார்கள். இரவில் குறைவாகத் தூங்குகிறவர்களாக அவர்கள் இருந்தார்கள், இன்னும் அவர்கள் விடியற்காலை நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுகிறவர்களாகவும் (இருந்தார்கள்) (அத்தாரியாத்:15–18)

 عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سُئِلَ رَسُوْلُ اللهِ ﷺ عَنْ اَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ،قَالَ: تَقْوَي اللهِ وَحُسْنُ الْخُلُقِ ، وَسُئِلَ عَنْ اَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، قَالَ: الْفَمُ وَالْفَرْجُ. رواه الترمذي وقال: هذا حديث صحيح غريب، باب ما جاء في حسن الخلق، رقم:٢٠٠٤

மக்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைய வைக்கக் கூடிய காரியங்கள் எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, தக்வா, (அல்லாஹுதஆலாவை பயப்படுவது) மற்றும் நற்குணம்” என்று சொன்னார்கள். மக்களை அதிகமாக நரகத்தில் நுழைய வைக்கக் கூடிய செயல் எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, நாவு மற்றும் மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகித்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

ஒரு உஸ்தாது தனது மாணவர்களின் ஈமானை சோதிப்பதற்காக ஆளுக்கொரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து எவரும் பார்க்காத இடத்தில் அறுத்துக் கொண்டு வாருங்கள் என அனுப்பினார். அனைத்து மாணவர்களும் அறுத்துக்கொண்டு வந்தனர். ஒரேயொரு மாணவர் மட்டும் அறுக்காமல் அப்படியே பழத்தைக் கொண்டு வந்தார். ஆசிரியர் ஏன் என கேட்டபோது “உஸ்தாது அவர்களே! எவரும் பார்க்காத இடம் எங்கும் இல்லை. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என மாணவர் சொன்னார். இந்த மாணவரின் தக்வா அவரை வாழ்க்கையில் உயர்வு பெற வழிகோலியது.

ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சியில் அவர்கள் இரவில் நகர் வலம் வந்த போது, ஒரு வீட்டில் தாய் தனது மகளிடம் “பாலில் தண்ணீர் ஊற்று” என சொல்கிறார். ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூர்ந்து கேட்கிறார்கள். மகள் சொல்கிறாள் “பாலில் தண்ணீர் ஊற்றக் கூடாது என்பது ஜனாதிபதி உமரின் கட்டளை!” தாய் சொல்கிறார் “இந்த நடுநிசி இரவில் உமர் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? தண்ணீர் ஊற்று” மகள் உடனே சொல்கிறார் “ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு பார்க்காவிட்டாலும் என்னையும், உன்னையும் படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எப்படி தண்ணீர் ஊற்றுவது? இப்பெண்ணின் தக்வா அப்பெண்ணை ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகளாக உயர்த்தியது.

வரலாற்றில் ஒரு ஆட்டிடையன் சம்பவம் மிகவும் பிரபல்யமானது. காட்டில் ஒரு ஆட்டிடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். பிரயாணம் செய்த ஒரு பெரியவர் ஆட்டிடையனிடம் “ஒரு ஆடு விலைக்கு கொடு, பணம் தருகிறேன், உணவு சமைத்து உனக்கு உண்ணவும் தருகிறேன்” என்றார். அதற்கு ஆட்டிடையன் “ஆடுகள் எனது எஜமானனுக்குச் சொந்தமானவை. அவரின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது” இதைக் கேட்ட பெரியவர் “எனக்கு ஒரு ஆடு விற்று விடு. எஜமானன் கேட்டால் ஆட்டை ஓநாய் அடித்து தின்று விட்டது எனக் கூறிவிடு” என்றார். உடனே அந்த ஆட்டிடையன், “பொய் சொல்வதா? அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான்” எனக் கூறி தர மறுத்துவிட்டார். இவரது தக்வா ஆட்டு மந்தைக்கே அவரை சொந்தக்காரனாக்கியது.

(முன் காலத்தில்) ஒருவர், வரம்பு மீறி (தீய செயல் புரிந்து) வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தன் மகன்களை அழைத்து, ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு, என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவிற்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்’ என்று கூறினார். அவர் இறந்துவிட்டபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே அல்லாஹ், பூமியை நோக்கி, ‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்று சேர்’ என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்றபோது அல்லாஹ், நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான். அவர், ‘என் இறைவா! உன் அச்சம் தான் இப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டியது’ என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளித்தான். புகாரி 3481. 

عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: لَمَّا خَلَقَ اللّٰهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ: اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لاَ يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلاَّ دَخَلَهَا، ثُمَّ حَفَّهَا بِالْمَكَارِهِ ثُمَّ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لاَ يَدْخُلَهَا أَحَدٌ قَالَ: فَلَمَّا خَلَقَ اللّٰهُ تَعَالَي النَّارَ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لاَ يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلَهَا، فَحَفَّهَا بِالشَّهَوَاتِ ثُمَّ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ وَجَلاَلِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لاَ يَبْقَي أَحَدٌ إِلاَّ دَخَلَهَا. رواه ابوداؤد باب في خلق الجنة والنار:٤٧٤٤

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ் சொர்க்கத்தைப் படைத்த பின் “சொர்க்கத்தை பார்த்துவாருங்கள்!’’ என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் சொன்னான். அவர்கள் சென்று பார்த்துவிட்டுத் வந்து, “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! இச்சொர்க்கத்தைப் பற்றி யார் கேள்விப்பட்டாலும் இதில் நுழைந்துவிடுவார்’ என்றார்கள், அதை அடைந்து கொள்ள முழு முயற்சி செய்வார், பிறகு அல்லாஹ் அதைச் சிரமங்களைக் கொண்டு மூடினான், ஏற்று நடப்பது மனதிற்கு சிரமத்தைத் தரக் கூடிய ஷரீஅத் சட்டங்கள் [இறையச்சம்] என்னும் கட்டுப்பாட்டைக் கொண்டு மூடிவிட்டான். பிறகு, “ஜிப்ரஈலே! இப்பொழுது சென்று பார்ப்பீராக!’ என்று சொன்னான், அவர்கள் சென்று பார்த்தார்கள், பார்த்தபின், “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! அதில் யாரும் நுழையமாட்டார்களோ என பயப்படுகிறேன்’ என்றார்கள். அதன் பிறகு, அல்லாஹ் நரகத்தைப் படைத்தபொழுது ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “ஜிப்ரயிலே! நரகத்தைப் பார்த்துவாரும்!’’ என்று சொன்னான், பார்த்தபின் அவர்கள், அல்லாஹ் விடம், “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணை! இதைப் பற்றி எவர் கேள்விப்படுவாரோ அவர் அதில் நுழைவதை விட்டும் தன்னைத் தற்காத்துக் கொள்வார், அதைவிட்டும் தப்பிக்க முயற்சி மேற்கொள்வார்’’ என்று சொன்னார்கள். அதன் பிறகு, அல்லாஹ் நரகத்தை மன இச்சைகளால் சூழச் செய்து, “ஜிப்ரஈலே, இப்போது சென்று பாருங்கள்!’’ என்று சொன்னான். அவர்கள் போய்ப் பார்த்தார்கள், திரும்ப வந்து, “எனது இரட்சகா! உனது கண்ணியத்தின் மீது ஆணை! உனது உயர்ந்த அந்தஸ்த்தின் மீது ஆணையாக! “இதில் யாரும் நுழையாமல் தப்பமுடியாது என்று அஞ்சுகிறேன்’ என்றுரைத்தார்கள்.

【5. அல்லாஹ் ﷻ பொறுமையாளர்களை நேசிக்கிறான்:- 】

وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏ அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கிறான். 3:146.

பொறுமையை பற்றி பேசப்படும் தமிழ் பழமொழிகள்:

  • 1] பொறுமை கடலினும் பெரிது. 
  • 2] பொறுமை தன்னையும் எதிரியையும் காக்கும்.
  • 3]  பொறுமை புகழ் தரும்.
  • 4] பொறுமை புண்ணியத்துக்கு வேர்; 
  • 5] பொறுமை பெருமைக்கு அழகு.
  • 6] ஒரு நிமிடப் பொறுமை பத்து ஆண்டுகளுக்கு நன்மை
  • 7] பொறுமை கசப்புத் தான். ஆனால் அதன் கனி இனிப்பானது
  • 8] பொறுமையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் எப்போதும் நமக்கு நன்மையே விளையும்.
  • 9] பொறுத்தார் பூமி ஆள்வார். என இன்னும் ஏராளமாக உள்ளது.

[பொறுமை தரும் வெற்றி:-]

✍🏻 அன்புள்ளவர்களே! பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம்.

நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் உடனே பலன் கிடைத்து விடுவதில்லை. பலன் கிடைக்கும் வரைக் காத்திருப்பதே பொறுமை ஆகும்.

நாம் விதையை விதைத்த உடனே நமக்குப் பழங்கள் கிடைத்து விடுவதில்லை. விதை முளைத்து மரமாகிப் பூத்துக் குலுங்கிப் பின்தான் பழங்கள் தருகின்றன.

ஒரு விதை மரமாகிப் பயன் கொடுக்கப் பல மாதங்கள் ஆகலாம். ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு காத்திருப்பவனுக்குத்தான் கனிகள் கிடைக்கும்.

நம்முடைய இலக்கு நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்தும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகக் கூடாது. பொறுமையுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பயணம் என்பது 100 கி.மீ வேகத்தில் செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாக மட்டும் இருக்காது.

சில சமயங்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த 10 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய பாதையாகவும் இருக்கலாம்.

நமது வாகனம் 100 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கலாம். நாமும் திறமையான வாகன ஓட்டியாக இருக்கலாம். ஆனாலும் பாதை நம்மை 10 கி.மீ வேகத்தைவிடக் கூட்டமுடியாமல் செய்து விடும். அப்போது நமக்குத் தேவை பொறுமை.

இந்தப் பாதையை நாம் மெதுவாகதான் கடந்தாக வேண்டும் என்ற பொறுமையும், சற்றுத் தூரத்தில் இந்தப் பாதை நெடுஞ்சாலையுடன் சேர்ந்துவிடும் என்ற புரிதலும்தான் நம்மை வெற்றியாளராக மாற்றும்.

பாதை கடினமானதாக இருக்கின்றது என்று பயணத்தில் இருந்து விலகுபவர்கள் இலக்கை அடைய முடியாது.

நிறையப் பேருக்குத் தம்முடைய முயற்சியைக் கைவிடும்போது வெற்றி இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பது தெரியாமல் போய்விடுகின்றது.

பொறுமை இல்லாத காரணத்தால் நிறையப்பேர் இலக்கிற்கு மிக அருகில் வந்ததும் இலக்கை அடையாமல் போகிறோம்.

ஓட்டப்பந்தயத்தில் இலக்கிற்கு அருகில் இருக்கும்போதுதான் நமக்கு மிகவும் களைப்பாகவும், வலிப்பதுமாகவும் நமது ஓட்டம் இருக்கும். நம் மனதை இலக்கின்மீது வைக்க வேண்டும். வலியின் மீதுஅல்ல.

வாழ்க்கைப் பயணம் என்பது நேர்கோட்டுப் பாதையில் செல்லும் பயணம் அல்ல. அது நிறைய திருப்பங்கள் நிறைந்த பயணம்.

நாம் நீண்ட தூரம் பயணம் செய்து களைப்படைந்து இருக்கலாம். கூடவே நமது வெற்றி மிகஅருகில் அடுத்த திருப்பத்தில் காத்திருக்கலாம்.

எனவே பொறுமையுடன் பயணம் செய்வோம் வெற்றியை அடைந்தே தீருவோம்.

நம்முடைய முயற்சியில் மட்டுமல்ல பிறருடன் பழகும்போதும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்போர் என அனைவரிடமும் அவர்களது சிறுசிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் அவைகளைப் பொறுத்துக் கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஐந்து விரல்களில் ஒன்றுகூட மற்றொன்றைப் போல் இருப்பதில்லை. மனிதர்களும் அப்படித்தான் ஒவ்வொருவரும் ஒருவிதம். இதைப்புரிந்து கொண்டு பொறுமையுடன் ஒவ்வொருவரையும் அணுகினால் அனைவரும் நம் வெற்றிக்குத் துணை புரிவார்கள்.

நம் மனதில் அமைதி, நம் செயல்களின் விளைவுகளைப் பொறுமையுடன் கண்காணித்தல், மற்றவர்களுடன் நிதானமாகப் பழகுதல் ஆகியவை நம்மிடமிருந்தால் வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி ஓடிவரும்.

[மூஸா நபி மட்டும் பொறுமையாக இருந்திருந்தால்:-….]

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ‏.‏ فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ قَامَ مُوسَى النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ‏.‏ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ‏.‏ قَالَ يَا رَبِّ وَكَيْفَ بِهِ فَقِيلَ لَهُ احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ فَإِذَا فَقَدْتَهُ فَهْوَ ثَمَّ، فَانْطَلَقَ وَانْطَلَقَ بِفَتَاهُ يُوشَعَ بْنِ نُونٍ، وَحَمَلاَ حُوتًا فِي مِكْتَلٍ، حَتَّى كَانَا عِنْدَ الصَّخْرَةِ وَضَعَا رُءُوسَهُمَا وَنَامَا فَانْسَلَّ الْحُوتُ مِنَ الْمِكْتَلِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا، فَانْطَلَقَا بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمِهِمَا فَلَمَّا أَصْبَحَ قَالَ مُوسَى لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى مَسًّا مِنَ النَّصَبِ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ‏.‏ فَقَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ إِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ ـ أَوْ قَالَ تَسَجَّى بِثَوْبِهِ ـ فَسَلَّمَ مُوسَى‏.‏ فَقَالَ الْخَضِرُ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ فَقَالَ أَنَا مُوسَى‏.‏ فَقَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ‏.‏ قَالَ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ أَنْتَ، وَأَنْتَ عَلَى عِلْمٍ عَلَّمَكَهُ لاَ أَعْلَمُهُ‏.‏ قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا، وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ لَيْسَ لَهُمَا سَفِينَةٌ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، فَكَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمَا، فَعُرِفَ الْخَضِرُ، فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ، فَجَاءَ عُصْفُورٌ فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ فِي الْبَحْرِ‏.‏ فَقَالَ الْخَضِرُ يَا مُوسَى، مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ كَنَقْرَةِ هَذَا الْعُصْفُورِ فِي الْبَحْرِ‏.‏ فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ‏.‏ فَقَالَ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ‏.‏ فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا‏.‏ فَانْطَلَقَا فَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ، فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ مِنْ أَعْلاَهُ فَاقْتَلَعَ رَأْسَهُ بِيَدِهِ‏.‏ فَقَالَ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ـ قَالَ ابْنُ عُيَيْنَةَ وَهَذَا أَوْكَدُ ـ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا، فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ‏.‏ قَالَ الْخَضِرُ بِيَدِهِ فَأَقَامَهُ‏.‏ فَقَالَ لَهُ مُوسَى لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا‏.‏ قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ ‏”‏‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَوَدِدْنَا لَوْ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا ‏”‏‏.‏

(ஹிள்ரு (அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா அலை அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா’ என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு(ரலி), நபி(ஸல்) கூறினார்கள் என அறிவித்தாவது: (இறைவனின்) தூதராகிய மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ‘மக்களில் பேரறிஞர் யார்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ‘இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்’ என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் ‘என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?’ என்று கேட்டார்கள். ‘கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா(அலை) தம் பணியாளரிடம், ‘இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?’ என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும் வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் ‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விடடேன்’ என்றார். ‘(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்’ என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் ‘உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?’ என்று கேட்டார்கள். ‘நான்தான் மூஸா’ என்றார்கள். ‘இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?’ என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்!’ என்று கூறினார்கள். ‘உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?’ என்று கேட்டார்கள். ஹிள்ரு (அலை) அவர்கள், ‘நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார். அதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!’ என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள். 

ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், ‘மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்’ என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் ‘நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?’ என்று கேட்டார்கள். ‘மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்’ என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் ‘யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?’ என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் ‘மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?’ என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் ‘நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!’ என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், ‘இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்’ என்று கூறிவிட்டார்கள்.’ 

(இச்சம்பவத்தை) நபி (ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) ‘மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள்’ என ஸயீது இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்கள். [ஸஹிஹ் புஹாரி 122.]

【6. அல்லாஹ் ﷻ தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை  நேசிக்கிறான்:-】

اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏  நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். 3:159

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَتَوَكَّلُونَ عَلَي اللّٰهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا تُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصاً وَتَرُوحُ بِطَاناً. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب في التوكل علي الله، رقم:٢٣٤٤

“நீங்கள் அல்லாஹ்வின் மீது முறையாக (தவக்குல்) பரஞ்சாட்டுவீர்களாயின் பறவைகளுடைய (ரிஸ்க்) தேவைகள் நிறைவேற்றப்படுவது போல், உங்களுடைய தேவைகளும் நிறைவேற்றப்படும். அப்பறவைகள் அதிகாலையில் பசித்த நிலையில் வெளியேறுகின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பதாவது: “ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் நஜ்து நாட்டுக்கருகில் நடைபெற்ற ஒரு போரில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்கள். போர் முடிந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். ஸஹாபாக்கள் அனைவரும் நண்பகல் நேரத்தில் முள் செடிகள் நிறைந்த ஒரு காட்டை அடைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அங்கு ஓய்வெடுக்கத் தங்கினார்கள். மற்ற ஸஹாபாக்கள் ஆங்காங்கே மரநிழலைத் தேடிச் சென்றுவிட்டார்கள். தமது வாளை மரக்கிளையில் தொங்கவைத்துவிட்டு நபி (ஸல்) அவர்களும் ஒரு மரத்திற்குக் கீழே ஓய்வெடுத்தார்கள். நாங்களும் சிறிது நேரம் (மரங்களுக்குக் கீழே) உறங்கினோம். திடீரென ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (அவ்விடத்தை நாங்கள் சென்று பார்த்த போது) அங்கே நபி (ஸல்) அவர்களின் அருகில் ஒரு காபிர் கிராமவாசி இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவன் எனது வாளை உருவிக் கொண்டான். நான் விழித்ததும் இவன் கையில் எனது வாள் உருவிய நிலையில் இருக்கக் கண்டேன். “என்னிடமிருந்து உம்மைக்காப்பவன் யார்?’ என்று என்னிடம் கேட்டான். நான் “அல்லாஹ்!’ என்று மூன்று முறை கூறினேன்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிராமவாசியை தண்டிக்கவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

عَنْ أَبِي مَالِكِ نِ اْلاَشْعَرِيِّ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ فَلْيَقُلْ: اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لْيُسَلِّمْ عَلَي أَهْلِهِ. رواه ابوداؤد باب مَايَقُولُ الرجل اذا دخل بيته.

ஒருவர் தம் வீட்டில் நுழையும் போது, (اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا) யா அல்லாஹ்! வீட்டினுள் நுழைவது, மற்றும் வீட்டிலிருந்து வெளியேறுவதின் நலவை உன்னிடம் நான் கேட்கிறேன். நான் வீட்டில் நுழைவதையும் வெளியேறுவதையும் என்னுடைய நன்மைக்குக் காரணமாக ஆக்குவாயாக! அல்லாஹுதஆலா வின் பெயராலேயே நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம் அல்லாஹுதஆலா வின் பெயராலேயே வீட்டைவிட்டு வெளியேறினோம். எங்கள் இரட்சகனாகிய அல்லாஹுதஆலா வின் மீதே நாங்கள் தவக்குல் (நம்பிக்கை) வைத்தோம்’ என்ற துஆவை ஓதியபின், வீட்டாருக்கு ஸலாம் கூறிவிட்டு நுழையவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

【7. அல்லாஹ் ﷻ நீதிமான்களை நேசிக்கிறான்:- 】

اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கிறான்.5:42, 49:9, 60:8, 

அல்லாஹ் ﷻ இந்த உலகத்தில் எல்லோரிடத்திலும் நீதியோடு இருப்பதை விரும்புகிறான்.

சாட்சி சொல்வதில் நீதம்:-

وَقَالَ تَعَالي: (وَلاَ تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ۞). البقرة:٤٢

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்பகரா:42)

وَقَالَ تَعَالى: (يآيُّهَا الَّذِيْنَ امَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلّهِ وَلَوْ عَلَى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَاْلاَقْرَبِيْنَ ج اِنْ يَكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّهُ اَوْلى بِهِمَا قف فَلاَ تَتَّبِعُوا الْهَوَى اَنْ تَعْدِلُوْا ج وَاِنْ تَلْوُوْا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا۞).(النساء:١٣٥)

நம்பிக்கையாளர்களே, நீதியில் நீங்கள் நிலைத்திருப்பவர்களாக – அல்லாஹ்விற்காக (உண்மையைக் கொண்டு) சாட்சி கூறுபவர்களாக இருங்கள்; (அச்சாட்சி, உங்களுக்கோ, அல்லது (உங்களின்) பெற்றோருக்கோ இன்னும் (உங்களின்) உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரி (நீங்கள் எவருக்கு எதிராக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராக இருந்தாலும் அல்லது வறியவராக இருந்தாலும் (சரியே), ஏனேனில் அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில் உங்களைவிட) மிக மேலானவன்; எனவே, நீதி செய்வதை விட்டு (உங்கள்) மனோ இச்சையை நீங்கள் பின்பற்றாதீர்கள்; மேலும் நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினாலும், அல்லது (சாட்சியம் கூறாது) நீங்கள் புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் செய்கின்றவற்றை அறிந்தவனாக இருக்கிறான். (அந்நிஸா:135)

அர்ஷின் நிழல் பெற்றுத் தரும் நீதம்:-

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ” سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ، إمام عادل وشاب نشأ في عبادة الله ، ورجل قلبه معلق بالمساجد ، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله . ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ، ورجل ذكر الله خالياً ففاضت عيناه ” متفق عليه

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான். அவர்கள்,

  • 1. நீதியுள்ள அரசன்,
  • 2. அல்லாஹ்வுடைய வணக்கத்தில் வாலிபத்தைக் கழித்த வாலிபன்,
  • 3. எந்நேரமும் பள்ளியில் உள்ளத்தை லயிக்கச் செய்தவர்,
  • 4. அல்லாஹ்வுக்காகவே நேசம் கொண்டு அவனுக்காகவே ஒன்று கூடி அவனுக்காகப் பிரியும் இரு நபர்கள்,
  • 5. உயர் குலத்தைச் சேர்ந்த அழகிய பெண் ஒருத்தி தன்பால் அழைக்க, நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று கூறியவர்,
  • 6. தனது இடக்கரத்திற்குத் தெரியாத நிலையில் தானம் செய்தவர்,
  • 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்தியவர். புகாரி – 6806  

நபியின் நேர்மை: ஒரு முறை ஒரு பெரிய குடும்பத்து பெண் திருடிவிட்டாள், அவளுக்கு தண்டனை வழங்க வேண்டும். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி வந்து நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரையாக அந்த பெண்ணிற்கு மன்னிப்பு கொடுக்கச் சொல்லி வேண்டினார். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தை தான் இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது “ என் மகள் பாத்திமா (ரலி) திருடினாலும் கை வெட்டப்படும்”.

உயர்ந்த குலத்து பெண் ஒருத்தி திருடியபோது அவருக்காக பலரும்நபிகள் ஸல் அவர்களிடம் பரிந்துரை செய்தபோது ”என் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார்கள். புகாரி3475.

தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும்.

வியாபாரத்தில் நீதம்:-

 عَنْ اَبِيْ سَعيْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلتَّاجِرُ الصَّدُوْقُ الْاَمِيْنُ، مَعَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاءِ. رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء في التجار …

முழு உண்மையுடனும், நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்யும் வியாபாரி, நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (உயிர்த் தியாகி) களுடன் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

عَنْ رِفَاعَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِنَّ التُّجَّارَ يُبْعَثُوْنَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا، اِلاَّ مَنِ اتَّقَي اللهَ وَبَرَّ وَصَدَقَ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في التجار …. 

அல்லாஹ்வை அஞ்சி பேணுதலைக் கடைப்பிடித்து, (மோசடி, சூழ்ச்சியில் ஈடுபடாமல்) நல்லது செய்து, (தன் வியாபாரம், கொடுக்கல் வாங்கலில் மக்களுடன் நன்னடத்தை மேற்கொண்டு சத்தியத்தின் மீது நிலைத்து நின்று வியாபாரம் செய்த) வியாபாரிகளைத் தவிர மற்ற வியாபாரிகள் கியாமத் நாளன்று பாவிகளாக எழுப்பப்படுவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ரிஃபாஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ مَرَّ عَلَي صُبْرَةِ طَعَامٍ، فَاَدْخَلَ يَدَهُ فِيْهَا، فَنَالَتْ اَصَابِعُهُ بَلَلاً، فَقَالَ: مَا هذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ قَالَ: اَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُوْلَ اللهِﷺ قَالَ: أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّيْ. رواه مسلم، باب قول النبي ﷺ من غشنا فليس منا، 

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் ஒரு தானியக் குவியலைக் கடந்து சென்ற போது, தமது புனிதமான கரத்தை அக்குவியலுள் நுழைத்ததும், கையில் ஈரத்தை உணர்ந்தார்கள்.இந்த ஈரம் எப்படி வந்தது?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அந்தத் தானிய வியாபாரியிடம் கேட்டதற்கு. யாரஸூலல்லாஹ், மழையில் தானியம் நனைந்துவிட்டது” என்றார் அவர். நனைந்த தானியத்தை, அதை வாங்குபவர் பார்க்கும்படி குவியலின் மேற்பகுதியில் ஏன் நீர் மாற்றவில்லை? எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல” (என்னைப் பின்பற்றுபவரில் உள்ளவரல்ல) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

قَالَ اللهُ تَعَالي: (وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَ ۞ الّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَي النَّاسِ يَسْتَوْفُوْنَ ۞ وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَزَنُوْهُمْ يُخْسِرُوْنَ ۞ اَلاَ يَظُنُّ اُولئِكَ اَنَّهُمْ مَبْعُوْثُوْنَ ۞ لِيَوْمٍ عَظِيْمٍ ۞ يَوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِيْنَ۞). (المطففين:6-1)

(எடையிலும் அளவிலும்) குறைவு செய்கிறவர்களுக்குக் கேடு உண்டாவதாக! அவர்கள் எத்தகையோரென்றால், மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குவார்கள், ஆனால் அவர்களுக்குத் தாங்கள் அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைவு செய்(து நஷ்டமுண்டாக்கு)வார்கள்.நிச்சயமாக தாம் (இறந்த பின்) எழுப்பப்படுவோர் என்பதை அவர்கள் உறுதி கொள்ளவில்லையா? மகத்தான ஒரு நாளில், (மண்ணறைகளை விட்டும்) மனிதர்கள் அகிலத்தாரின் ரப்பின் முன் எழுந்து நிற்கும் நாளில். (அல்முதஃப்ஃபிஃபீன்:1-6)

【8. அல்லாஹ் ﷻ  நேசிக்கிறான்:-】

لَـيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوا وَّاَحْسَنُوْا‌ ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். 5:93

عَنْ عَلِيٍّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يَا أَهْلَ الْقُرْآنِ! أَوْتِرُوا فَإِنَّ اللهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ. رواه ابوداؤد باب استحباب الوتر رقم:١٤١٦

குர்ஆன் உடையவர்களே! (முஸ்லிம்களே!) நீங்கள் வித்ரு’ தொழுகையைத் தொழுது வாருங்கள். ஏனென்றால், அல்லாஹ் வித்ரு’ ஆக இருக்கிறான். அவன் வித்ரு தொழுபவர்களை நேசிக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

தெளிவுரை:- ஒற்றைப்படை எண்ணுக்கு வித்ரு’ என்று சொல்லப்படும். அல்லாஹ் வித்ரு’ ஆக உள்ளான் என்பதன் பொருள் அவனுக்கு இணையாக யாருமில்லை என்பதாகும். வித்ரு தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பதும், வித்ரு தொழுவதை அல்லாஹ் நேசிப்பதற்குக் காரணமாகும்.   (மஜ்மஃ பிஹாருல் அன்வார்)

عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ يَرْضَي لَكُمْ ثَلاَثاً وَيَسْخَطُ لَكُمْ ثَلاَثاً، يَرْضَي لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئاً وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعاً وَلاَ تَفَرَّقُوا وَأَنْ تَنَاصَحُوا مَنْ وَلاَّهُ اللهُ أَمْرَكُمْ وَيَسْخَطُ لَكُمْ قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ.nرواه احمد:٢ /٣٦٧

அல்லாஹுதஆலா உங்களுடைய மூன்று காரியங்களை நேசிக்கிறான். மூன்று காரியங்களை வெறுக்கிறான்.

  • 1. நீங்கள் அல்லாஹுதஆலாவை வணங்குவதையும், அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பதையும்,
  • 2. (தனித்தனியாகிச்) சிதறிப் போகாமல் எல்லோரும் ஒருமித்து அல்லாஹுதஆலாவின் ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாகப் பிடித்துக் கொள்வதையும்,
  • 3. அல்லாஹுதஆலா உங்கள் மீது எவரை பொறுப்பாளியாக நியமித்துள்ளானோ அவருடன் மனத்தூய்மை, விசுவாசம், அவர் நலனை நாடுவதையும் அல்லாஹுதஆலா விரும்புகிறான்.
  • 1. நீங்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதையும்,
  • 2. பொருளை விரயம் செய்வதையும்,
  • 3. அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும் வெறுக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்னத் அஹ்மத்)

【9. அல்லாஹ் ﷻ அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ அவர்களை நேசிக்கிறான்:-】

اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِهٖ صَفًّا அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கிறான். 61:4.

وعن أبي أمامة صدي بن عجلان الباهلي، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ “‏ليس شئ أحب إلى الله تعالى من قطرتين وأثرين‏:‏ قطرة دموع من خشية الله، وقطرة دم تهراق في سبيل الله، وأما الأثران‏:‏ فأثر في سبيل الله تعالى، وأثر في فريضة من فرائض الله تعالى‏”‏ ‏(‏‏(‏رواه الترمذي‏.‏وقال حديث حسن‏)‏‏)‏‏

இரண்டு துளிகள் இரண்டு அடையாளங்கள் ஆகியவற்றைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது எதுவும் இல்லை.1 அல்லாஹ்வுக்கு பயந்து வடிக்கும் கண்ணிர் துளிகள். அல்லாஹ்வின் வழியில் சிந்திய ரத்த துளிகள். திர்மிதி 1669

【10. அல்லாஹ் ﷻ விரும்பும் 1.அறிவாற்றல் 2. நிதானம்:-. 】

அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர் பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது: (அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன 1. அறிவாற்றல் 2. நிதானம்.  முஸ்லிம் 25

【11. அல்லாஹ் ﷻ விரும்பும் அன்சாரி ஸஹாபாக்கள்:-.】

அன்சாரிகள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்கமாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று குறிப்பிட்டார்கள்.  முஸ்லிம் 129

【12. அல்லாஹ் ﷻ விரும்பும் மூன்று நபர்:-】

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்” முஸ்லிம் 5673.

 【ஸஹாபாக்கள் அல்லாஹ் ﷻ வை  நேசித்த விதங்கள்:- 】

அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்’ என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!’ எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார். புகாரி 1461. 

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, ‘நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்’ என்றார்கள். மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?’ என்று தமக்குள் (‘இன்னாரிடம் கொடுப்பார்கள்’ என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ்லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) ‘அலீ எங்கே?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அலீ அவர்களுக்குக் கண் வலி’ என்று சொல்லப்பட்டது. எனவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரண்டு கண்களிலும் தம் எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வலி நீங்கிட) பிரார்த்தித்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். ‘அவர்கள் நம்மைப் போன்று (இறைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்’ என்று அலீ அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்’ என்று கூறினார்கள். புகாரி 3009. 

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.3:31.

 عَنْ عَائِشَةَؓ قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَي النَّبِيِّؐ فَقَالَ: يَارَسُولَ اللّٰهِؐ إِنَّكَ لاَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَحَبُّ إِلَيَّ مِنْ أَهْلِي وَمَاِلي وَأَحَبُّ إِلَيَّ مِنْ وَلَدِي، وَإِنِّي لاَكُونُ فِي الْبَيْتِ فَأَذْكُرُكَ فَمَا أَصْبِرُ حَتَّي آتِيَ فَأَنْظُرَ إِلَيْكَ، وَإِذَا ذَكَرْتُ مَوْتِي وَمَوْتَكَ عَرَفْتُ أَنَّكَ إِذَا دَخَلْتَ الْجَنَّةَ رُفِعْتَ مَعَ النَّبِيِّينَ، وَإِنْ دَخَلْتُ الْجَنَّةَ خَشِيتُ أَنْ لاَ أَرَاكَ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ النَّبِيُّؐ شَيْأً حَتَّي نَزَلَ جِبْرِيْلُ ^ بِهذِهِ الْايَةِ (وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُولَ فَأُولئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصّلِحِينَ ج وَحَسُنَ أُولئِكَ رَفِيقاً۞). تفسير ابن كثير:١ /٥٣٥

ஹஜ்ரத்  ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஸஹாபி யொருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சமூகத்தில் வந்து, “யா ரஸூலல்லாஹ்! என் உயிரை விடவும் தங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். என் மனைவியை விடவும் என் செல்வத்தை விடவும் தங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். என் பிள்ளைகளை விடவும் தங்களை அதிகமாக நேசிக்கிறேன். நான் வீட்டில் இருக்கும் போது தங்களின் ஞாபகம் வந்து விட்டால், அதன்பின் என்னால் இருப்பு கொள்ள முடிவதில்லை. உடனே நான் (ஓடோடி) வந்து தங்களை பார்த்து விடுகின்றேன். (அதன் பிறகே என் மனம் நிம்மதியடைகின்றது.) எனது மரணத்தையும், தங்களது மரணத்தையும் (அதற்குப் பின்னுள்ள நிலைகளையும்) நான் நினைத்துப் பார்க்கையில் – (மறுமையில்) தாங்கள் சுவனத்தில் நுழைந்ததும் மற்ற நபிமார்களுடன் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள் என்பதையும் நான் உணருகின்றேன். ஆனால் நான் சுவனத்தில் நுழைந்தாலும் (மிக சாதாரண அந்தஸ்தில் இருப்பேன். அந்நேரத்தில் தங்களின் நினைவு வந்தவுடன்) தங்களை காண முடியாதோ என்று நான் அஞ்சுகின்றேன் என்று கூறினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் (அப்பொழுது) எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்குள் கீழ்க்காணும் இறைவசனம் இறங்கியது “எவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவனது) ரஸூலுக்கும் வழிப்பட்டு நடக்கின்றனரோ, அத்தகையோர் – அல்லாஹ் எவர்களின் மீது அருள் புரிந்துள்ளானோ அத்தகைய நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்களுடன் (சுவனத்தில்) இருப்பார்கள்- இவர்கள்தாம் அழகிய தோழர்கள்.’’(அந்நிஸா:69) تفسير ابن كثير:١ /٥٣٥

عَنِ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ عَنْ أَبِيْهِ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا ذَهَبَ ثُلُثَا اللَّيْلِ قَامَ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ! اُذْكُرُوا اللهَ اُذْكُرُوا اللهَ جَاءَتِ الرَّاجِفَةُ تَتْبَعُهَا الرَّادِفَةُ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ قَالَ أُبَيٌّ فَقُلْتُ: يَارَسُولَ اللهِﷺ إِنِّي أُكْثِرُ الصَّلاَةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلاَتِي؟ قَالَ: مَا شِئْتَ قَالَ قُلْتُ: اَلرُّبُعَ؟ قَالَ: مَاشِئْتَ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ: فَالنِّصْفَ؟ قَالَ: مَاشِئْتَ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قَالَ: قُلْتُ: فَالثُّلُثَيْنِ؟ قَالَ: مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ: أَجْعَلُ لَكَ صَلاَتِي كُلَّهَا؟ قَالَ: إِذاً تُكْفي هَمَّكَ وَيَغْفَرُ لَكَ ذَنْبُكَ. رواه الترمذي وقَالَ:هذا حديث حسن صحيح باب في الترغيب في ذكرالله …رقم:٢٧٥٤

உபையிப்னு கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், யாரஸூலல்லாஹ், நான் தங்கள் மீது அதிகமாக ஸலவாத் ஓத விரும்புகிறேன். நான் துஆ, திக்ரு செய்யும் நேரத்தில் ஸலவாத்துக்காக எவ்வளவு நேரத்தை நிர்ணயிப்பது?’ என்று கேட்டேன். நீர் விரும்பிய அளவு” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். யாரஸூலல்லாஹ், நான்கிலொரு பகுதி நேரம்?’ என்றேன். நீர் எவ்வளவு விரும்புவீரோ அவ்வளவு அதிகப்படுத்தினால் உமக்கு நல்லது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், பாதி நேரம் ஒதுக்கட்டுமா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். மூன்றில் இரு பகுதிகள் ஒதுக்கவா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது என்றார்கள். என் நேரம் முழுவதையும் தங்கள் மீது ஸலவாத் சொல்ல நிர்ணயித்துக் கொள்கிறேன்” என்றேன். அப்படிச் செய்தீரென்றால், அல்லாஹுதஆலா  உமது சகல கவலைகளையும் தீர்த்துவைப்பான், உமது பாவமும் மன்னிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

【அல்லாஹ் ﷻ வின் நேசத்தை பெற ஸஹாபாக்களின் தியாகம்:- 】

மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் [அல்லாஹ்வின் நேசத்தை பெற‌] மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும், ‘வேண்டாம்’ என்றே பதிலளித்தார்கள். நான், ‘மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)’ என்று கேட்டேன். அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்’ என்று கூறினார்கள். அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. புகாரி 2742. 

【அல்லாஹ் ﷻ வின் நேசத்தை பெற ஸஹாபாக்களின் இபாதத்:- 】

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! [அல்லாஹ்வின் நேசத்தை பெற‌]  நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!’ என்றார்கள். புகாரி 1975.. 

【அல்லாஹ் ﷻ வின் நேசமே!  மலக்குகளின் சுவாசம்!! 】

அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. புகாரி 3209. 

‘(இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)’ என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்’ என்று கூறினார்கள். புகாரி 6170. 

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் உமர்(ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே! புகாரி 3688.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ‘அப்துல்லாஹ்’ என்றொருவர் இருந்தார். அவர் ‘ஹிமார்’ (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், ‘இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்’ என்று கூறினார்கள். புகாரி 6780..

【தொழுகையின் மூலம் அல்லாஹ் ﷻ வின் நேசம் பெற்ற ஸகாபாக்கள்:-】

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், ‘ஏனெனில், அந்த பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள். புகாரி 7375. முஸ்லிம் 1481.

【 அல்லாஹ் ﷻ வின் நேசம் பெற ஒவ்வொரு நேரமும் பிரார்திப்போம்:-】

عَنْ مُعَـاذِ بْنِ جَبَلٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ أَخَذَ بِيَدِهِ وَقَالَ: يَا مُعَاذُ وَاللهِ إِنِّي لأُحِبُّكَ فَقَالَ: أُوصِيكَ يَا مُعَاذُ! لاَ تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ تَقُولُ: اَللّهُمَّ أَعِنِّي عَلَي ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ. رواه ابوداؤد

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் முஆது (ரலி) அவர்களின், கரங்களைப் பிடித்துக் கொண்டு முஆதே, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உம்மை நேசிக்கிறேன்”. மேலும், நீர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் (اَللّهُمَّ أَعِنِّي عَلَي ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ) யா அல்லாஹ்! நான் உன்னை திக்ரு செய்யவும், உனக்கு நன்றி செலுத்தவும் நல்ல முறையில் உன்னை வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக! என்று ஓதிவருவதை நீர் விட்டுவிட வேண்டாம்” என உமக்கு உபதேசிக்கிறேன்” என்று கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (அபூதாவூத்)

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். முஸ்லிம் 93

【நம் பிள்ளைகளுக்கு இறை நேசம் கிடைக்க துஆ செய்ய வேண்டும்:-.】

நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘பொடிப் பையன் எங்கே?’ என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களின் புதல்வர் ஹஸன்(ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி(ஸல்) அவர்கள் இப்படித் தம் கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹஸன்(ரலி) அவர்களும் இவ்வாறு தம் கையை விரித்த படி (நபி (ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்த பிறகு அலீயின் புதல்வர் ஹஸன்(ரலி) அவர்களை விட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமானவராக இருக்கவில்லை. புகாரி 5884.

நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, ‘இறைவா! நான் இவ்விருவரையும்  நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக’ என்று கூறினார்கள். புகாரி 3747.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அதிகமாகத் தம் குடும்பத்தாரை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குழந்தை) இப்ராஹீம் மதீனாவின் மேட்டுப் பாங்கான கிராமப்பகுதியில் பாலூட்டி வளர்க்கப்பட்டு வந்தார். (அங்கிருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லும் போது அவர்களுடன் நாங்களும் செல்வோம். அவர்கள் வீட்டுக்குள் நுழைவார்கள். அப்போது வீட்டுக்குள் புகை மூட்டப்பட்டிருக்கும். குழந்தையின் பால்குடித் தந்தை (அபூசைஃப்) கொல்லராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டுத் திரும்புவார்கள். முஸ்லிம் 4635.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் (தடை செய்யப் பட்டதை முன்பு) உட்கொண்டதால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால், அவர்கள் (இறைவனை) அஞ்சி, (முழுமையாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பின்னரும் (இறைவனை) அஞ்சி இறைநம்பிக்கை(யில் நிலையாக இருந்து)கொண்டு, பின்னரும் (இறைவனை) அஞ்சி நன்மை செய்திருக்க வேண்டும். (இவ்வாறு) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்” (5:93) எனும் இந்த இறைவசனம் முழுமையாக அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “நீங்களும் அவர்களில் ஒருவர்தான்” என்று கூறினார்கள். முஸ்லிம் 4855.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்” என்றார்கள். முஸ்லிம் 5144..

【 சபதம் எடுங்கள்:-】

✍🏻 அன்புள்ளவர்களே!! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும் இறை நேசத்தோடு வாழ்வேன். இறை நேசம் ஒவ்வொரு அமல்களிலும் பெற முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என்று..

ஆக அல்லாஹ் இவ்வுலகில் வாழும் நம் முஸ்லிம் சமுதாயத்தினரின் தீய அவபெயர்களை விட்டும் நம் அனைவரையும் பாதுகாத்து அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்….

இறைவன் இந்த சமுதாயத்தை கிரிக்கெட் என்ற படுகுழியில் விழுவதில் இருந்தும் காப்பாற்றி கரை சேர்ப்பானாக!! ஆமீன்.


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்