Skip to main content

தியாகத் திருநாள் வந்தது.. நம்மை நல்லிணக்கத்தோடு வாழச் செய்தது…..!!! 21-06-2024



✍🏻 அன்புள்ளவர்களே!  அல்லாஹ்வின் ﷻ பேரருளால்   [ ذو الحجة ]   துல்ஹஜ் மாதத்தின் மூன்றாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் .

✍🏻 அன்புள்ளவர்களே!    போன வாரம்  சிறப்பான முறையில் தியாக் திருநாளை [ عيد الاضحى] கொண்டாடினோம். அந்நாள் போல் எந்நாளும் அல்லாஹ் நம்மை மகிழ்ச்சியாக வைப்பானாக! ஆமீன்.  كلُّ عام وأنتم بخير، تقبَّل الله منَّا ومنكم صالح الأعمال

✍🏻 அன்புள்ளவர்களே!    அன்றாட வாழ்வில் மனிதன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறான். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் சில வேளை அவனுக்குப் பிரச்சனைகள் எழுகிறது. ஒரே தெருவில் வசிக்கின்ற அண்டை வீட்டாருடனும் சில பிரச்சனைகளை அவன் சந்திக்க நேரிடுகிறது. நெருங்கிப் பழகும் நண்பர்கள், நம்மிடம் வியாபாரம் செய்யும் நுகர்வோர் இன்னும் இது போன்று பலதரப்பட்டவர்களிடம் அடிக்கடி பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

இந்நேரங்களில் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக யாரும் முன் வராவிட்டால் சில நேரங்களில் தன்னுடைய சுய நினைவை இழந்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட சிந்திக்காமல் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன.

தினந்தோறும் பிரச்சனைகளைச் சந்திக்கின்ற நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அமைப்புக்கள் முதன் முத­லாக‌ இணக்கத்தை ஏற்படுத்தவே முனைகின்றன. இதனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்தச் செயல் மனிதர்களுக்கு மிகவும் பலன் / பயன்  தருவதால் இஸ்லாம் இணக்கத்தை ஏற்படுத்துவதை வ­யுறுத்திச் சொல்கிறது.

சச்சரவுகள் தோன்றும் போது, ‘நாம் ஏன் இந்த‌ சிக்க­ல்களில் மாட்டிக் கொள்ள வேண்டும்?’ என்று நினைத்து ஒதுங்கிக் கொள்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

இறைவனை நம்பியவர்கள் இவர்களைப் போன்று சுயநலம் கொண்டவர்களாக இல்லாமல் பிறர் நலம் பேணும் பொதுநலம் கொண்டவர்களாகத் திகழ வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாமியர்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனால் இந்த உலகத்தில் பயன் ஏற்படுகிறதோ இல்லையோ! மறு உலக வாழ்வில் பயன் கிடைக்குமா? என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

நல்­லிணக்கத்தை ஏற்படுத்துவதால் இந்த உலகத்தில் நன்மை கிட்டாவிட்டாலும் மறுமை நாளில் நிச்சயம் இதற்குக் கூலி ­ உண்டு என்று கூறி இஸ்லாம் இதில் ஆர்வமூட்டுகிறது. 

  • வாருங்கள்! அவற்றின் சிறப்புகளை அறிந்து நம் வாழ்வினை தியாக வாழ்வாக ஆக்குவோம்.
  • பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

[அல்லாஹ் [ﷻ] விரும்பும் சமாதானம்  :-]

♣ [அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى] ♣

【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள‌ குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.

✍🏻 அன்புள்ளவர்களே!  அல்லாஹ் [ﷻ] எந்நேரமும் சமாதானத்துடனும் / சமாதானம் செய்து வாழ்வதையே விரும்புகிறான். கீழ் காணும் இறைவசனம் நபித் தோழர்களுக்கிடையே பிரச்சனைகள் எழுந்தபோது தான் அருளப்பட்டது

قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لَوْ أَتَيْتَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ. فَانْطَلَقَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَكِبَ حِمَارًا، فَانْطَلَقَ الْمُسْلِمُونَ يَمْشُونَ مَعَهُ، وَهْىَ أَرْضٌ سَبِخَةٌ، فَلَمَّا أَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِلَيْكَ عَنِّي، وَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ. فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مِنْهُمْ وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَطْيَبُ رِيحًا مِنْكَ. فَغَضِبَ لِعَبْدِ اللَّهِ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَشَتَمَا، فَغَضِبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا أَصْحَابُهُ، فَكَانَ بَيْنَهُمَا ضَرْبٌ بِالْجَرِيدِ وَالأَيْدِي وَالنِّعَالِ، فَبَلَغَنَا أَنَّهَا أُنْزِلَتْ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا}

நபி ﷺ அவர்களிடம், ‘‘தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறப்பட்டது. நபி ﷺ அவர்கள் அவரிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம் களும் நபி ﷺ அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவரை நபி ﷺ அவர்கள் சென்றடைந்தபோது அவர், ‘‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கழுதையின் துர் நாற்றம் எனக்குத் தொல்லை தந்துவிட்டது” என்று கூறினார்.

அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்” என்று கூறினார்.

அப்துல்லாஹ்வுக்காக அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏச, அன்சாரியும் ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும் கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது, ‘‘இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால், அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்” (49:9) எனும் வசனம் அருளப்பட்டது என்ற செய்தி எங்களுக்கு எட்டியது.

وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَا‌ۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ‌ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். [அல்குர்ஆன் 49:09]  

[ سورة الحجرات [49]– الآية 10] {إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحمُونَ ۝ } 

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.  . [அல்குர்ஆன் 49:10]  

இறை நம்பிக்கை உடையோர் சகோதரர்கள். அவர்களுக்கு மத்தியில் சமரசம் செய்யுங்கள் என்ற 49-10 ஆவது வசனம் இறை விசுவாசிகள் சகோதரரர்கள். அவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டால் இரு பிரிவினரையும் சேராத பொது மனிதர் சமரசம் செய்து வைக்க இவ்வசனம் இயம்ப அடுத்த 49-11 ஆவது வசனம் சண்டை ஏற்படும் காரணங்களைக் கூறி அக்காரணங்களைத் தவிர்க்க, அறிவுறுத்துகிறது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ ۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.  [அல்குர்ஆன் 49:11]  

அரபு நாட்டில் வாழ்ந்த பனீதமீம் கிளையினர் அவர்களை உயர்வாகவும் மற்றவர்களை மட்டமாகவும் மதிப்பவர். அவர்கள் பிலால் (ரலி), ஸல்மான் (ரலி), அம்மார் (ரலி), கப்பாப் (ரலி), ஸுஹைப் (ரலி) முதலில் ஏழைத் தோழர்களை ஏளனமாக எண்ணி நகையாடுவர். மாநபி (ஸல்) அவர்களின் மனைவியரில் அன்னை உம்மு ஸல்மா (ரலி) குள்ளமானவர். மற்ற மனைவியர் அவர்களைக் குட்டைப் பெண் என்று கேலி செய்வர். இத்தகைய கேலி கிண்டல்களைக் கூறுவது கூடாது என்று கூறுகிறது.

மேற்குறிப்பிட்ட திய செயல்கள் செய்வதின் மூலம் நல்லிணக்கம் நலிவுறுகிறது. ஆதலால் அதனை தவிர்க்க.

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ ؕ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.

மேற்குறிப்பிட்ட 49-12 ஆவது வசனம் புறம் பேசுவதும் கூடாது என்று கூறுகிறது. புறம் பேசுவது ஒற்றுமையை குலைக்கும்.

ஒற்றுமை குலைந்தால் வேற்றுமை பெருகும். நல்லிணக்கம் நலிவுறும். நாடும் வலிவும் பொலிவும் இழக்கும். ஓரணியில் திரள்வது ஒற்றுமையாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்து நபி வழியில் நல்லிணக்கத்தோடு நல்லவாழ்வு வாழ்வோம்.

♣ [நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم] ♣‏”‏‏.

[நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது ஓர் உண்ணதமான அமல்  :-]

قال رسول الله ﷺ «عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاَةِ وَالصَّدَقَةِ ‏”‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ ‏”‏ صَلاَحُ ذَاتِ الْبَيْنِ فَإِنَّ فَسَادَ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ »‏‏ ( رواه جامع الترمذي 2509 )

நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள். (அபூதாவூத்: 4919)

[நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நபிகள் நாயகம் ﷺ அவர்கள் :-]

✍🏻 அன்புள்ளவர்களே!     நபி பட்டம் பெறுவதற்கு முன்னரே முஹம்மது நபி ﷺ அவர்கள் அரபி சமூகங்களுக்கு இடையே நிலவிய கருத்து மோதல்களையும் மோதல்களினால் உண்டான விளைவுகளையும் பிளவின் விளைவாய் தோன்றிய பகையையும் நீக்கி போக்கி அமைதியை ஏற்படுத்தினார்கள் சுற்றுபுற ஒற்றுமையால் சூழலைச் சுகமானதாக ஆக்கினார்கள்.

புனித கஃபாவை புனரமைத்து கட்டி ஹஜருல் அஸ்வத் கல்லைக் கஃபாவில் பதிக்கும் வாய்ப்பைத் தங்களுக்கே தர வேண்டும் என்று ஒவ்வொரு குல பிரிவினரின் தலைவர்களும் உரிமை கோரி மோதல் உண்டாக இருந்தது. காலையில் முதலில் கஃபாவிற்கு வந்த இளைஞர் முஹம்மது நபி ﷺ அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஒற்றுமையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்க உத்தம நபி ﷺ அவர்கள் ஒரு துணியில் ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து அனைவரும் அத்ததுணியைப் பிடித்து கஃபாவில் கல்லைப் பதித்து ஒற்றுமையின் வெற்றியை அந்த அரபியர்களுக்கு புரிய வைத்தார்கள்.

நபித்துவம் பெற்று இறைதூதை எடுத்துறைத்து ஏக இறை கொள்கையை ஏற்றவர்களுக்கு இடையில் அவர்கள் எக்குலம் எப்பிரிவினர் ஆயினும் அனைவரும் ஏற்ற தாழ்வற்ற ஒரே சமுதாயம் ஆக ஒன்றுபட்டு வாழ வழி வகுத்தார்கள். மதீனாவிற்குச் சென்ற பின்னும் மக்கா மதீனா வாசிகளை ஒன்றுபட்டு வாழ செய்தார்கள். அவர்களுக்கு இடையில் திருமண உறவுகளும் உண்டாயின.

اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً  ‌ۖ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ‏

” நீங்கள் அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரே வகுப்பினரே. உங்கள் அனைவருக்கும் இறைவன் ஒருவனே. அவனையே வணங்குங்கள்” என்று கூறும் குர்ஆனின் 21-92 ஆவது வசனப்படி ஒருவனே இறைவன் என்ற ஒரே கொள்கையைத்தான் ஆதி நபி ஆதம் முதல் இறுதி நபி முஹம்மது ﷺ வரை அனைவரும் போதித்த கொள்கை ஒற்றுமையை வலியுறுத்தி நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதே.

பிரியமான‌ நபி ﷺ அவர்கள் பிரிவினைக்குரிய காரணிகளைக் கண்டு களைந்தார்கள். கருத்து மோதல்கள் பிணக்குகள் ஏற்பட்டால் அதனை நீக்கும் வழியறிந்து நீக்கி அவர்களை ஒர் நேர்கோட்டில் கொள்கையில் ஒன்றிணைந்தார்கள். வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் ஊறுபடும் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்.

அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்து கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விட வேண்டாம். விரோதிகளான உங்கள் இதயங்களில் அன்பையும் பிணைப்பையும் உண்டாக்கினான் என்ற 3-103 ஆவது வசனம் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் பகைவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது இணக்கமாக இருப்பதை இயம்புகிறது. மீண்டும் 8-46 ஆவது வசனம், ” அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள், பிணங்காதீர்கள். பிணக்கம் துணிவை இழந்து துன்பப்பட வைக்கும்” என்று பிணங்கி பிரிவதன் பேராபத்தை எச்சரிக்கிறது.

[சண்டை சச்ரவுகளை தீர்த்து வைப்பது ஓர் நன்மையான செயல்:-]

✍🏻அன்புள்ளவர்களே!   சண்டை சச்ரவுகளை தீர்த்து வைப்பது ஓர் நன்மையான செயலாகும். நபி ﷺ அவர்கள் காலத்தில் மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் நபி ﷺ அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்கள். இதற்கு ஏராளமான நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன. 

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، قُبَاءٍ اقْتَتَلُوا حَتَّى تَرَامَوْا بِالْحِجَارَةِ، فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ “” اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ “”.

குபா’வாசிகள் தமக்கிடையே சண்டையிட்டுக்கொண்டனர்; ஒருவர் மீதொருவர் கற்களை வீசிக்கொள்ளுமளவுக்கு அவர் களது சண்டை இருந்தது. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ‘‘நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைப்போம்” என்று கூறினார்கள். [புகாரி 2693)

பனூ அம்ரு பின் அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி ﷺ அவர்கள் புறப்பட்டார்கள். [புகாரி (1201)

நபி ﷺ அவர்களின் பேரனும் அலீ (ரலி­) அவர்களின் மகனுமான ஹசன் (ரலி­) அவர்கள் அலீ (ர­லி) அவர்களின் மரணத்திற்குப் பின் சில மாதங்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். இக்காலத்தில் ஹசன் (ர­லி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் முஆவியா (ரலி­) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் திரண்டது.

தன் சமுதாய மக்கள் இரு பெரும் திரளாகத் திரண்டிருப்பதைக் கண்ட ஹசன் (ரலி­) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை முஆவியா (ரலி­) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். மக்களுடைய நலனுக்காக, தான் வகித்த ஜனாதிபதி பதவியைத் துறந்தார்கள். இவரின் மூலம் இந்த சமுதாயத்தில் சீர்திருத்தம் ஏற்படும் என்பதை நபி ﷺ அவர்கள் ஏற்கனவே உணர்த்தினார்கள். ஹசன் (ரலி) அவர்களிடம் இருந்த இந்த உயரிய பண்பு நம் எல்லோரிடமும் இருந்து விடுமேயானால் பிரச்சனைகளுக்கும் சச்சரவுகளுக்கும் வேலையே இல்லை.

நபி ﷺ அவர்கள் ஒருமுறை (உரை நிகழ்த்தும் போது) மக்களை நோக்கியும் மற்றொரு முறை ஹஸன் (ர­லி) அவர்களை நோக்கியும் ”இந்த எனது புதல்வர் தலைவர் ஆவார். முஸ்­லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்கவிருக்கிறான் என்று கூறிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். [புகாரி (2704)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتٍ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، فَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ “” يَا كَعْبُ “”. فَقَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ. فَقَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” قُمْ فَاقْضِهِ “”.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர் களின் காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அதைக் கேட்டு விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅபே!’ என்றழைத் தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” ﷺ என்று பதிலளித்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ‘பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு’ என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூற, இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் எழுந்து சென்று அவரது கடனை அடையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் .* [ஸஹீஹ் புகாரி : 2710.]

[இணக்கத்திற்காக இரகசியம் பேசலாம்:-]

✍🏻அன்புள்ளவர்களே!  இரகசியமாக மக்கள் பேசுகின்ற பெரும்பாலான பேச்சுக்களில் எந்த விதமான நன்மையும் இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது. தேவையற்ற விஷயங்களை இரகசியமான முறையில் பேசுவதை வெறுக்கவும் செய்கிறது.

ஆனால் இருவருக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இரகசியம் பேசலாம் என்று அனுமதி தருகிறது. அத்துடன் இல்லாமல் இந்தச் செயலை சுயலாபங்களுக்காக இல்லாமல் அல்லாஹ்விற்காகச் செய்தால் மகத்தான பரிசும் கிடைப்பதாக குர்ஆன் நற்செய்தி கூறி இந்தச் செய­ல் ஆர்வமூட்டுகிறது.

لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِ‌ ؕ وَمَن يَّفْعَلْ ذٰ لِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்­லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூ­லியை வழங்குவோம். (அல்குர்ஆன் 4:114)

தர்மம் என்றால் வறியவர்களுக்குப் பொருளுதவி செய்வது மாத்திரம் தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு வகையில் நம் மூலம் பிறருக்கு நன்மை கிடைக்குமானால் அதுவும் தர்மம் தான்.

பிரச்சனைக்கு நியாயமான முறையில் தீர்ப்பளிப்பது மக்களுக்குப் பலன் தருவதால் நபியவர்கள் இதைத் தர்மம் என்று கூறியுள்ளார்கள். இச்செயலை எல்லோரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நமக்களித்துள்ள மூட்டுகளுக்குத் தர்மம் செய்வதைக் கடமையாக்கி, இச்செயல் புரிவதன் மூலம் அந்தக் கடமையை நிறைவேற்ற முடியும் என்று நபி ﷺ  அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.

قَالَ ابْنُ أَبِي شَيْبَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ ‏”‏ ‏.

எல்லா நல்லறமும் தர்மமே. [முஸ்லிம் 1831]

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ النَّاسِ صَدَقَةٌ

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமாகும். (புகாரி 2707)

மார்க்கத்தில் நோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களுக்கு ஏராளமான சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வணக்கங்களை விட மக்களுடைய பிரச்சனைகளை சரிசெய்வது சிறந்தது என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

قال رسول الله ﷺ «عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاَةِ وَالصَّدَقَةِ ‏”‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ ‏”‏ صَلاَحُ ذَاتِ الْبَيْنِ فَإِنَّ فَسَادَ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ »‏‏ ( رواه جامع الترمذي 2509 )

‘‘நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கேட்டார்கள். மக்கள் ”ஆம்! அறிவியுங்கள்” என்று கூறினார்கள். ”(அது) மக்களுடைய பிரச்சனைகளை சீர் செய்வதாகும். மக்களுக்கிடையே குழப்பத்தை விளைவிப்பது (நன்மைகளை) அழித்து விடும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். : திர்மிதி (2433)

[நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொய் சொல்லலாம்:-]

✍🏻அன்புள்ளவர்களே!  மார்க்கம் பொய் சொல்வதை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் காரியமாக எச்சரிக்கிறது. நல்­ணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒருவன் பொய் சொன்னால் அது பொய்யாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது.

عُقْبَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “” لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، فَيَنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا “”.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம்) நல்லதை (புனைந்து) சொல்­ மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன். [புகாரி 2692)

[இறைவனின் மன்னிப்பு கிடைக்க நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்:-]

✍🏻அன்புள்ளவர்களே!   சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் பிரிந்து வாழும் சகோதரர்களுக்கு இறைவனுடைய மன்னிப்பு கிடைப்பதில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இந்த மோசமான நிலையி­ருந்து சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கிறார்கள். இறைவனுடைய மன்னிப்பு என்ற பாக்கியத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்ததற்காக அவருக்கும் இறைவனுடைய மன்னிப்பு கிடைக்கிறது.  

عَنْ أَبِي صَالِحٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، رَفَعَهُ مَرَّةً قَالَ ‏ “‏ تُعْرَضُ الأَعْمَالُ فِي كُلِّ يَوْمِ خَمِيسٍ وَاثْنَيْنِ فَيَغْفِرُ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ الْيَوْمِ لِكُلِّ امْرِئٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلاَّ امْرَأً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ ارْكُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا ارْكُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا ‏”‏ ‏.‏

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணைவைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. ‘இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்!’ என்று சொல்லப்படும். [முஸ்­லிம் 4653)

[விட்டுக் கொடுத்தாலே நல்­லிணக்கம் ஏற்படும்:-]

✍🏻அன்புள்ளவர்களே!    பிரச்சனையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வலுவானவராகவும் மற்றொருவர் வலுவற்றும் இருந்தால் பலம் படைத்தவரிடம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கும்படி வ­யுறுத்தி இருவருக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இருவரில் ஒருவர் தனக்குரியதை விட்டுக் கொடுத்தால்தான் இணக்கம் ஏற்படும். இருவரும் தனக்குரியதில் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தால் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்லும். இதற்கு எந்த ஒரு தீர்வையும் காண இயலாது. நபி (ஸல்) அவர்கள் இது போன்ற நிலையில் இந்த வழிமுறையை கடைப்பிடித்துள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும் படியும் மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர் ”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, ”நன்மை(யானச் செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், ”நான் தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். கடன் வாங்கிய) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார். [ புகாரி (2705)

என் தந்தை உஹதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப் பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள் என் தந்தைக்கு கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் (நபி ﷺ அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்து விட்டார்கள்.  [புகாரி (2601)

நான் நபி ﷺ அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் மற்றொருவரை கயிற்றால் இழுத்து வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனைக் கொன்று விட்டார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ”நீ அவரைக் கொன்றீரா?” என்று கேட்டார்கள். (குற்றவாளியை கொண்டு வந்தவர்) ”இவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் நான் ஆதாரத்தை அவருக்கெதிராக சமர்பிக்கிறேன்” என்று கூறினார். (கொன்றவர்) ”ஆம் நான் அவரைக் கொன்றேன்” என்று கூறினார். நபியவர்கள் ”எவ்வாறு அவரைக் கொன்றாய்?” என்று கேட்டார்கள்.

‘‘நானும் அவரும் பேரீச்ச மரத்தின் இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையில் இருந்த) கோடாரியால் உச்சந் தலையில் அடித்து விட்டேன். அவர் இறந்து விட்டார். (திட்டுமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ”உன்னை விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான பொருள் ஏதும் உன்னிடம் உள்ளதா?” என்று கேட்டார்கள். (கொன்றவர்) அவர், ”என்னுடைய கோடாரி மற்றும் ஆடையைத் தவிர வேறு எந்தப் பொருளும் எனக்கு இல்லை” என்று கூறினார். நபியவர்கள், ”உனது சமுதாயம் (நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்து) உன்னை வாங்குவார்கள் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவர், ”என்னுடைய சமுதாயத்திடம் இதை விட நான் அற்பமானவன்” என்று கூறினார். உடனே நபியவர்கள் (அவர் கட்டப்பட்டிருந்த) கயிற்றை (வந்தவரிடம்) எறிந்து, ”இவரை நீ பிடித்துக் கொள்!” என்று கூறினார்கள். அவரை அம்மனிதர் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்ற போது, ”அவரை இவர் (பழிவாங்குதல் அடிப்படையில்) கொன்று விட்டால் இவரும் அவரைப் போன்றாவார்” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டு விட்ட) அவர் திரும்பி வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் அவரைக் கொன்று விட்டால் நானும் அவரைப் போன்றாகி விடுவதாக நீங்கள் கூறியது எனக்கு எட்டியது. (இவ்விஷயத்தில்) நான் உங்கள் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், ”அவர் உனது பாவத்துடனும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும் திரும்புவதை நீர் விரும்புகிறீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ”அல்லாஹ்வின் நபியவர்களே! ஆம் அது அவ்வாறே ஆகட்டும்!” என்று கூறினார். நபி ﷺ அவர்கள் ”அப்படியானால் அந்தக் குற்றவாளி (உன்னால் மன்னிக்கப்பட்டு) இவ்வாறு (உயிருடன்) இருக்க வேண்டும்” எனக் கூறினார்கள். ஆகையால் அவர் குற்றவாளியின் வழியில் குறுக்கிடாமல் விட்டு விட்டார்.  [முஸ்­லிம் (3470)

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் நபி ﷺ அவர்கள் நல்­லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பரிந்துரை செய்கிறார்கள். எனக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறி அவர்கள் ஒதுங்கி விடவில்லை. இவ்வாறு அவர்கள் பரிந்துரைக்கும் போது சிலர் அதை ஏற்றுக் கொண்டார்கள்; சிலர் மறுத்து விட்டார்கள்.

இது போன்ற இடங்களில் பலம் பொருந்தியவர்கள் சற்று விட்டுக் கொடுத்தால் தான் சுமூகமான நிலை ஏற்படும். நம்மிடத்தில் கஞ்சத்தனம் மேலோங்கியிருந்தால் இந்த மோசமான தன்மை நம்மை இணக்கமாக விடாது. இணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் கஞ்சத்தனம் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும். எனவே தான் அல்லாஹ் ‘சமாதானம் சிறந்தது’ என்று சொல்­ விட்டு, கஞ்சத்தனம் கொள்ளக் கூடாது என்றும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்றும் பின்வரும் வசனத்தில் அறிவுறுத்துகிறான்.

وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَاۤ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا‌ ؕ وَالصُّلْحُ خَيْرٌ‌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ‌ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏

சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:128)

[ கணவன் – மனைவி பிரச்சனைகளுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்:-]

✍🏻அன்புள்ளவர்களே!   கணவன் மனைவிக்கு மத்தியில் அதிகமாகப் பிரச்சனைகள் ஏற்படுவதால் இங்கும் சமாதானப்படுத்துதல் அதிகம் தேவைப்படுகிறது. இன்றைக்குப் பல குடும்பங்களில் பிரச்சனைகள் பெரிதாவதற்குக் காரணமாக மூன்றாவது ஆள் இருக்கிறார். இவர்கள் தம்பதியினருக்கிடையே பிரச்சனைகளை எழுப்பாமல் இருந்தாலே சமாதானப்படுத்துவதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும்.

இருவருக்கு மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டால் மூன்றாவது நபர் வந்து தான் நல்­ணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூன்றாவது ஆள் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் இணக்கமாகிக் கொண்டால் அவர்களும் நல்­ணக்கத்தை உருவாக்கிய நல்லவர்களின் பட்டிய­ல் வந்து விடுவார்கள். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்­ணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:35)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:128)

நபி ﷺ அவர்களின் காலத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் நபியவர்கள் அதில் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முனைந்திருக்கிறார்கள்.

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று சொல்லப்படும். அவர் (பரீரா தன்னைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி ﷺ அவர்கள் அப்பாஸ் (ர­லி) அவர்களிடம், ”அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்து விட்ட போது) நபி ﷺ அவர்கள், ”முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா, ”அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு கட்டளை இடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி ﷺ அவர்கள், ”(இல்லை!) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்” என்றார்கள். அப்போது பரீரா ”(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார். [புகாரி (5283)

வலீத் பின் உக்பாவின் மனைவி நபி ﷺ அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! வலீத் என்னை அடிக்கிறார்” என்று முறையிட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள் ”நபியவர்கள் எனக்கு பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்’ என்று நீ அவரிடம் கூறு!” என்று சொன்னார்கள். (இதன் பிறகு) சிறிது காலம் கூட கழியவில்லை. மறுபடியும் திரும்பி வந்து, ”அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை” என்று கூறினார். உடனே நபி ﷺ அவர்கள் தன்னுடைய ஆடையின் ஒரு பகுதியை அப்பெண்ணிடம் கொடுத்து ”மீண்டும் அவரிடம் நபியவர்கள் எனக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள்’ என்று கூறு” என்றார்கள். சிறிது காலம் கூட கழியவில்லை. அதற்குள் அப்பெண்மணி மறுபடியும் வந்து, ”அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை” என்று கூறினார். நபி ﷺ அவர்கள் தமது இரு கைகளையும் உயர்த்தி, ”இறைவா! வலீதை நீ பார்த்துக் கொள்! அவர் எனக்கு (அளித்த வாக்குறுதியை) நிறைவேற்றவில்லை” என்று இரண்டு முறை கூறினார்கள். [அஹ்மத் (1236)

மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படுகிறது. இதைத் தீர்த்து வைப்பதற்காக நபியவர்கள் ﷺ முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களது பரிந்துரையை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்க மறுத்து விடுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் பல நிகழ்ந்தாலும் தன்னுடைய மரியாதையை நபியவர்கள் பெரிதுபடுத்தாமல், பிரச்சனைகள் வெடிக்கும் போது அங்கே நல்லி­ணக்கத்தை அவர்கள் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை.

[தியாகத் திருநாள் வந்தது.. நம்மை நல்லிணக்கத்தோடு வாழச் செய்தது…..!!! :-]

✍🏻அன்புள்ளவர்களே!   இப்ராஹிம் நபியின் தியாக வாழ்வை பறைசாற்றும் முகமாக  கடந்த வாரம் பெருநாள் கொண்டாடினோம். அதில் தங்களின் குர்பானி பிராணியின் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஒன்றைத் தமது குடும்பத்திற்காக வைத்துக் கொண்டு, இரண்டாவதை தமது சண்டையுள்ள உறவினர்களுக்கும், மூன்றாவதை ஏழைகளுக்கும் கொடுத்து வந்தோம் இதுவே ஒர் சிறந்த நல்லிணக்க முறையாகும். அதுமட்டுமல்லாது குர்பானி கறியை மாற்று மத சகோதரர்களுக்கு வழங்கலாமா ? ஆம் தாரளமாக வழங்கலாம்.. எனென்றால் அதில்தான் மத நல்லிணக்கம் அதிகமாக உள்ளது.

وعن ابن عمر ـ رضي الله عنهما ـ قال: الضحايا والهدايا: ثلث لك، وثلث لأهلك، وثلث للمساكين.

وَيُسْتَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْ أُضْحِيَّتِهِ وَيُطْعِمَ مِنْهَا غَيْرَهُ، وَالْأَفْضَلُ أَنْ يَتَصَدَّقَ بِالثُّلُثِ وَيَتَّخِذَ الثُّلُثَ ضِيَافَةً لِأَقَارِبِهِ وَأَصْدِقَائِهِ، وَيَدَّخِرَ الثُّلُثَ، وَيُطْعِمَ الْغَنِيَّ وَالْفَقِيرَ جَمِيعًا، كَذَا فِي الْبَدَائِعِ وَيَهَبُ مِنْهَا مَا شَاءَ لِلْغَنِيِّ وَالْفَقِيرِ وَالْمُسْلِمِ وَالذِّمِّيِّ، كَذَا فِي الْغِيَاثِيَّةِ.

பொதுவாக குர்பானிக்காக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவன் உண்பதும், பிறருக்குக் கொடுப்பதும் முஸ்தஹப். எனினும் அதனை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒன்றை தர்மம் செய்வதும், ஒரு பாகத்தை உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்குவதும், ஒரு பாகத்தை தனக்காக வைத்துக்கொள்வதும் நல்லது. ஏழை, பணக்காரன், முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடின்றிக் கொடுக்கலாம். [நூல் : கியாதிய்யா, பக்கம் 333. பதாவா ஹிந்தியா. பாகம் .5. பக்கம். 300]

عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ ﷺقَالَ: مَازَالَ جِبْرِيْلُ يُوْصِيْنِيْ بِالْجَارِ حَتَّي ظَنَنْتُ اَنَّهُ سَيُوَرِّثُهُ

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வந்ததும் தமது வீட்டாரிடம் நமது அண்டை வீட்டாரான யஹுதியின் வீட்டிற்கு கொடுத்தனுப்புனீர்களா? என மூன்று முறை கேட்டு விட்டு நபி ﷺ அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் “என்னிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்து சொல்லிய வண்ணம் இருந்தார். எங்கே அண்டை வீட்டாருக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள் என்று கூறிவிடுவார்களோ எனும் எண்ணுமளவிற்கு” என்று. ( திர்மிதீ )

குர்பானி கறியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஹனபி மதஹபின் படி கொடுப்பது கூடும்.

[போர்க்களங்களில் கூட எதிரிகள் நல்லிணக்கதிற்கு வந்தால் அதையே ஏற்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. …!!! :-]

وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 8:61)

அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 4:90)

நம்மை வெறுப்பவர்களைக் கூட நண்பர்களாக மாற்ற முயற்சிக் வேண்டும். அவர்களுடன் சேர்ந்து வாழ முயல வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. .

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ وَقَالَ سُفْيَانُ لَمْ يَرْفَعْهُ الأَعْمَشُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا “”.

பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர். மாறாக, உறவு முறிந்தாலும் உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.  ( புகாரி 5991)

[கொள்கையை ஏற்க்காதவர்களுடன் நல்லிணக்கம்:-]

✍🏻அன்புள்ளவர்களே! நபிகளார் தமது இருபத்தைந்தாம் வயதில் அல்அமீன் (நன்னம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பெயரை ஊர் மக்களால் சூட்டப்பெற்றார்கள் என்பதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பொது மக்களுக்கு பொது சேவை செய்து நல்லிணக்கதோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. இப்படியாக நபிகளார் அனைத்து மத சகோதரர்களிடமும், தொப்புள் கொடி உறவுகளிடமும் நல்லிணக்கத்தோடுதான் நடந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல நபிகளாரிடமும் மற்ற சமுதாய மக்கள் அவ்வாறு தான் நடந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

இன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட. நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை மதித்து நடக்கும் போதுதான் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மதித்து நடப்பார்கள். இதில் நாம் வேறுபாடு காட்டுவதற்கு என்று ஒன்றும் இல்லை. இஸ்லாம் அப்படி எந்தவொரு இடத்திலும் சிறுவேறுபாட்டை கூறவும் இல்லை. சமூக நல்லிணக்கத்துடன் இருக்கும் எந்தச் சமுதாயமும் தோல்வியை சந்தித்ததாக வரலாறு இல்லை. வாருங்கள் தீய பிரிவினைகளை அகற்றுவோம், தூய இணைப்புகளை போற்றுவோம்.

لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 60:8)

أَخْبَرَتْنِي أَسْمَاءُ ابْنَةُ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ أَتَتْنِي أُمِّي رَاغِبَةً فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم آصِلُهَا قَالَ “” نَعَمْ “”. قَالَ ابْنُ عُيَيْنَةَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهَا {لاَ يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ}

நபி ﷺ அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி ﷺ அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்‘ என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, இந்த (60:8) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார்.  [புகாரி (5978)

✍🏻அன்புள்ளவர்களே!  இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உரிமையை, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவற்றை ஒரு முஸ்லிம் நிறைவேற்றி சமய நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உலகில் இஸ்லாம் வழங்கிய மத உரிமை, மத சுதந்திரம், மத சகிப்புத்தன்மை போன்ற சமய நல்லிணக்க ஊக்குவிப்புகளை வேறெந்த மதமும் இந்தளவு பேணியதில்லை.

இஸ்லாம் வகுத்தளித்துள்ள நெறிகளில் சமய நல்லிணக்கமும் ஒன்று. இதைப் பயபக்தியுடன் கடைப்பிடித்தாக வேண்டிய கடமை உணர்வு அனைத்து முஸ்லிம்களுக்கும் உண்டு. சமய நல்லிணக்கம் பேணுவதை மனித நேயக்கோட்பாடாகவும் மார்க்க நெறியாகவும் இஸ்லாம் வகுத்துள்ளது.

சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து சமயப் பிணக்கு உருவாகக் காரணம் என்ன? யாருடைய தெய்வம் சிறந்தது? பெரியது என்கிற முரட்டு வாதம்தான் காரணம். இந்தப் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அழகானதொரு தீர்வை இஸ்லாம் கண்டுள்ளது.

சமயத்தலைவர்களுக்கிடையே பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாகப் பார்ப்பவர்களே உண்மையான முஸ்லிம்கள். முந்தைய சமயங்கள் சமர்ப்பித்த வேதங்களையும், அதற்காக உழைத்த மதத் தலைவர்களையும் போற்றிய மார்க்கம், இஸ்லாம். 1436 ஆண்டுகளுக்கு முன்பு அதை உண்மைப்படுத்தியது, அன்றைய உலகில் வரலாறு காணாத சமய நல்லிணக்கமாகும்.

ஒருவரின் மத நம்பிக்கையை இன்னொருவர் மீது திணிப்பது இஸ்லாமிய கொள்கையின்படி கூடாது. சமய நல்லிணக்கத்திற்கு எதிரான மதத் திணிப்பை  இஸ்லாம் ஒருபோதும் ஏற்றதில்லை.

لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” (திருக்குர் ஆன்–109:6)

‘‘(இஸ்லாமிய) மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை.’’ (திருக்குர் ஆன்–2:256)

‘‘விரும்புபவர் (சத்தியத்தை) நம்பட்டும். விரும்பாதோர் நிராகரித்து விடட்டும்’’ (திருக்குர் ஆன்–18:29)

சமய நல்லிணக்க பாதுகாவலர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சமயப் பாதுகாப்பும், ஆலயங்களின் பாதுகாப்பும் வழங்கி, சமய சார்பற்ற அரசை நிறுவி, சமய நல்லிணக்கம் தழைக்க அரும்பாடுபட்டார்கள்.

தானத்தில் சிறந்த தானம் நிதானம் / சமாதானம். என்று சொல்லுவார்கள்  நம் மூத்தோர்கள். அப்படிப்பட்ட நிதானம் / சமாதானத்தை  அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் நலவாக்கி தந்தருள் புரிவானாக!  !!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன். (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ)


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்