கடன் எனும் கடமையை கண்ணியப்படுத்துவோம்
கடன் எனும் கடமையை கண்ணியப்படுத்திடுவோம்!!!
துல் ஹஜ் மாதத்தின் மூன்றாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் .
”நீரின்றி அமையாது உலகு” என்று சொல்வது போல் ”கடனின்றி அமையாது மனித வாழ்வு” என்று அடித்துச் சொல்லலாம். ஆம்! மனித வாழ்வு அந்த அளவுக்குக் கடன் எனும் கடலால் சூழப்பட்டு, சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. .
தர்மத்தை விட கடன் கொடுப்பது சிறந்தது. தர்மம் கேட்பவன் தன் தேவைக்காக கேட்பான்; கடன் கேட்பவனோ அவசர தேவைக்காக அவசியத்தால் நிர்ப்பந்த நிலையில் உடனடி உதவி கோருபவன்..
கடன் கொடுப்பதன் மூலம் மனித நேயம் மலருகிறது. ஒரு மனிதரின் பிரச்சினை கடன் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது.
ஒரு மனிதன் வாழ்க்கையில் இன்னல்படுகிறான் என்றால் அவனுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய கைங்கரியமே கடனுதவி ஆகும். ஒரு மனிதனுக்கு கடனுதவி வழங்கினால் அவனது சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
ஆனால், இன்று. கொடுப்பவருக்கும்- வாங்குபவருக்கும் மத்தியில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்ப்படுத்துவதையும், பிரச்சினைகள் ஏற்பட்டு கோர்ட் படியேறுவதையும், சில வேளைகளில் கொலையில் போய் முடிவதையும் பார்க்கிறோம்.
இதற்கு அடிப்படை காரணம் கொடுக்கல் – வாங்கலில், இவர்கள் இஸ்லாமிய வழிமுறையை கடைபிடிப்பதில்லை. இஸ்லாம் இதற்கும் ஒரு அற்புதமான வழியை காட்டுகிறது.
- கடன் கொடுப்பதின் சிறப்புகளை பற்றியும்,
- கடன் கொடுக்க சக்தியிருந்தும் கடனை அடைக்காதவரின் இழிவைப் பற்றியும்,
- கடன் சம்பந்தமாக அண்ணல் நபி ﷺ அவர்களின் அனுகுமுறைகளைப் பற்றியும், கடன் சம்பந்தமாக வரும் இறைவசனங்களைப் பற்றியும்,
- இஸ்லாமியக் கடன் சம்பந்தமாக வரும் மார்க்க பிக்ஹ் சட்டங்களைப் பற்றியும், இன்றைய ஜூமுஆ பேருரையில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
அல்லாஹூ சுப்ஹானஹூதஆலா நம் அனைவரையும் கடனில்லாமல், போதுமொன்ற மன நிறைவோடும், இருப்பதைகொண்டு திருப்தி அடையும் பாக்கியத்தையும், ஒரு அவசரத்திற்க்கு கடன் வாங்கினாலும் அக் கடனை விரைவில் திருப்பி அடைக்கும் பாக்கியத்தையும், தந்தருள்புரிவானாக!ஆமீன். என துஆ செய்தவனாக எனது ஜூமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்..
ஒருவன் பட்டினி கிடக்கிறான் என்றால் அது அவனது உடலை பாதிக்கும், வலிமையை குறைக்கும். ஆனால் அவன் உள்ளத்தால் எத்தகைய பாதிப்பும் அடையமாட்டான். ஒரு வேளை இல்லையென்றால் அடுத்த வேளை அவனுக்கு உணவு கிடைத்து விடும். அவன் ஆரோக்ய நிலையைப் பெற்று விடுவான். ஆனால் கடன்? அது தனிமனிதனோடு முடியும் பிரச்சனையல்ல. அவன் பாதிக்கப்படுவான். அந்த பாதிப்பு உலவியல் ரீதியாக நிகழ்வதால் மனம் உடல் என்று ஒருங்கிணைந்து பாதிப்பின் தாக்கம் விரியும். அவனை சார்ந்தோரும் பாதிக்கப்படுவார்கள். குடும்பம் இருந்தால் மனைவி - குழந்தைகள் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் அது பாதிக்கும்.
கடனை அடைக்க முடியாத சூழ்நிலை வரும் போது கண்டபடியான பேச்சுக்கும் செவி கொடுக்க வேண்டிய நிலை முதலில் உருவாகி பின்னர், அது மானத்தையும் இறுதியில் உயிரையும் கூட வாங்கி விடும்.
முன் காலத்தில் மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி – 2078.அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى
கடன் கொடுப்பதின் சிறப்புகள்:-
ஒரு சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அந்த அடியானுக்கு அல்லாஹ் அருளாசி புரிகிறான் என்பதை எடுத்துறைக்கிறது குர்ஆனின் 5:93. ஆவது வசனம்.
وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
“”நிச்சயமாக அல்லாஹ் நன்மை [உதவி] செய்பவர்களை நேசிக்கிறான்!”
، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “” الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ““
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவருக்கு அநீதியிழைக்கவும்மாட்டார்; அவரை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும்மாட்டார். எவர் தம் சகோதரரின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டி ருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கி றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங் களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கி றாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். (புகாரி 2442)
“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள். [அஹ்மத்]
(رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض بثمانية عشر، فقلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة سنن ابن ماجة
ஸதகா செய்தால் பத்து மடங்கு நன்மையும்,கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு நன்மையும் வழங்கப்படும் என்று சுவனத்தின் வாசலில் எழுதப்பட்டிருந்ததை நான் மிஃராஜ் இரவில் பார்த்தேன்.கடன் ஸதகாவை விட சிறந்ததா?என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள்,தர்மம் கேட்பவன் தன்னிடம் இருந்தாலும் கேட்பான்.ஆனால் கடன் கேட்பவன் தனக்கு தேவையான போது மட்டும் தான் கேட்பான் என்று பதில் கூறினார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَلَاُدْخِلَـنَّكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ
அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; 5:12.
مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِيْمٌ ۚ
அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு. (அல்குர்ஆன்: 57:11)
اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் – அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.(அல்குர்ஆன்: 57:18)
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْؕ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் – அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்(அல்குர்ஆன்: 64:17)
இவ்வசனங்களில் (2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுக்குமாறு கூறப்படுகிறது.
அல்லாஹ்வுக்குக் கடன் கொடுத்தல் என்பது ஏழைகளுக்குக் கடன் கொடுத்தல் , தேவையுள்ள மனிதர்களுக்கு கொடுத்து உதவுதல் என்பதாகும்.
‘மக்களுக்கு வழங்கப்படும் கடன், இறைவனுக்கு வழங்கப்படும் அழகிய கடன்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
அல்லாஹ்வுக்குக் கடன் கொடுத்தல்கூடுதல் தகவல் அரபியில்:-
مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِيْمٌ ۚ
وَقِيلَ فِي الْآيَةِ اخْتِصَارٌ مَجَازُهُ: مَنْ ذَا الَّذِي يُقْرِضُ عِبَادَ اللَّهِ وَالْمُحْتَاجِينَ مِنْ خَلْقِهِ كَقَوْلِهِ تَعَالَى: ﴿ إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ ﴾، [الْأَحْزَابِ: 57]، أَيْ: يُؤْذُونَ عِبَادَ اللَّهِ، كَمَا جَاءَ فِي الْحَدِيثِ الصَّحِيحِ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يا ابن آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عندي»
وقوله عزّ وجلّ: يُقْرِضُ اللَّهَ، أَيْ: يُنْفِقُ فِي طَاعَةِ اللَّهِ قَرْضًا حَسَنًا
يحث تعالى عباده على الإنفاق في سبيله ، وقد كرر تعالى هذه الآية في كتابه العزيز في غير موضع .
وقوله : ( قرضا حسنا ) روي عن عمر وغيره من السلف : هو النفقة في سبيل الله . وقيل : هو النفقة على العيال.
கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் தெரிய வேண்டியவை:-
இன்று கொடுக்கல் -வாங்கலில் பெரும்பாலும் நம்மவர்கள் எழுதி வைத்துக்கொள்வதில்லை.மேலும், கடன் கொடுக்கும்போது சாட்சிகளும் வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான். அல்லாஹ் கூறுகின்றான்;
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ؕ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْيَكْتُبْ ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰىؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் – அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன் (அல்குர்ஆன் :2:282)
மேற்கண்ட வசனத்தின் இறுதி வரியை பாருங்கள் ”அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்” ஆக கொடுக்கல்- வாங்கலில் பல பிரச்சனைகள் வரும் என்பதற்க்காக நமக்கு அழகிய ஆயத்தை இறக்கியுள்ளான்.
மேற்கண்ட வசன வழிமுறைப்படிதான் நம் கூட பிறந்தவர்களுக்கு கூட கடன் கொடுக்கல் –வாங்கல் செய்ய வேண்டும். எனென்றால் அதில்,
- அல்லாஹ்வின் வாக்குறுதி இருக்கிறது.
- நம் கொடுக்கல்- வாங்கலில் நன்மை இருக்கிறது.
- நம் கொடுக்கல்- வாங்கலில் பாதுகாப்பு இருக்கிறது.
இல்லையெனில் அதில்,
- தோல்வி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
- ஏமாற்றம் இருக்கிறது.
- நிம்மதியை இழக்க நேரிடும்.
- Etc… [இது போன்று இன்னும் நிறையாய் உள்ளது.]
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم
கடனை விட்டும் பாதுகாப்புத் தேடல் துஆ:-
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
அல்லாஹ்ஹும்மஹ்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்.
பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக. [திர்மிதி 3563]
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்
பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆத்திக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். [புகாரி 6369]
கடனை நிறைவேற்றும்போது கடன் கொடுத்தவருக்காக:-
“ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْوَفَاءُ وَالْحَمْدُ ” .
பாரகல்லாஹு லக ஃபீ அஹ்லிக வமாலிக
பொருள் : அல்லாஹ் உமது குடும்பத்திலும் உமது செல்வத்திலும் அபிவிருத்தி செய்வானாக! [நஸஈ 4683]
கடன் சம்பந்தமாக தனி அத்தியாமே உள்ளன:-
கடன் என்கிற அமல் எவ்வளவு முக்கியமானதென்றால்; ஸஹீஹுல் புகாரியில் 43- ஆவது அத்தியாயத்தில் கடன் சம்பந்தமாக ஒரு தனி அத்தியாமே உள்ளன.
கடன் யாருக்கு கொடுக்கவேண்டும்:-
நம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்துவிடக்கூடாது. அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று [3] சாரார் உண்டு.
- “கல்வி-மருத்துவம்-உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.
- “மது- சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.
- “ஊர் மெச்சவேண்டும் என்பதற்க்காக ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, இதுபோன்ற இன்னும் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் கொள்கைக்கு மாறுபட்ட & பித்அத்தான காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.
இவர்களில் முதல் சாரார் மட்டுமே நாம் கடன் வழங்க தகுதியானவர்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். [5:2]
அடமான பொருளை வாங்கிக்கொண்டு கடன் கொடுத்தல் சிறந்தது:-
;وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُواْ كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ تَكْتُمُواْ الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் – எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது – இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். [2:283]
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ يَهُودِيٍّ طَعَامًا وَرَهَنَهُ دِرْعَهُ.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் ﷺ அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள். [புஹாரி, 2513]
கடனை பாதியாக குறைப்பதற்க்கு கிடைக்கும் நன்மை:-
கடன் கொடுத்தவர் கஷ்டத்தில் இருந்தால், கடனை பாதியாக குறைப்பது; அவகாசம் அளிப்பது; தள்ளுபடி செய்வது.
عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى ” يَا كَعْبُ بْنَ مَالِكٍ، يَا كَعْبُ ”. قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ. قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” قُمْ فَاقْضِهِ ”.
கஃபு இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி ﷺ அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து ‘கஃப் இப்னு மாலிக்! கஃபே’ என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். ‘பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி ‘எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.[புஹாரி 471]
கடன்காரருக்கு அவகாசம் அளித்தல் (அல்லது) தள்ளுபடி செய்தலின் நன்மைகள்:-
وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் – (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். 2:280.
عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ “ مَاتَ رَجُلٌ، فَقِيلَ لَهُ قَالَ كُنْتُ أُبَايِعُ النَّاسَ، فَأَتَجَوَّزُ عَنِ الْمُوسِرِ، وَأُخَفِّفُ عَنِ الْمُعْسِرِ، فَغُفِرَ لَهُ ”. قَالَ أَبُو مَسْعُودٍ سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. புஹாரி,எண் 2391
கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு:-
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ. فَقَالَ “ دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ”.
நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு” என்று கூறினார்கள்” [புஹாரி,2401]
திரும்பக் கொடு! அதையும் நிரம்பக் கொடு:-
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، تَقَاضَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَغْلَظَ لَهُ، فَهَمَّ أَصْحَابُهُ، فَقَالَ ” دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَاشْتَرُوا لَهُ بَعِيرًا، فَأَعْطُوهُ إِيَّاهُ ”. وَقَالُوا لاَ نَجِدُ إِلاَّ أَفْضَلَ مِنْ سِنِّهِ. قَالَ ” اشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி ﷺ அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘(அவரை தண்டிக்க வேண்டாம்;)விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்‘ என்று கூறினார்கள். [புகாரி 2390, முஸ்லிம் 3003]
நபி ﷺ அவர்கள் கடன் கொடுத்தவருக்குரிய அந்த உரிமையை வழங்கி விட்டு, வாங்கிய கடனைத் திரும்ப வழங்குகின்றார்கள். அதையும் திருப்தியாக நிரம்பவே வழங்குகின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் இந்தச் செயலில் ஒவ்வொரு கடனாளிக்கும் அழகிய முன்மாதிரியும் உரிய பாடமும் படிப்பினையும் இருக்கின்றன.
கடனை உடனே நிறைவேற்றுதல்:-
கடன் வாங்கியவருக்குக் கொஞ்ச நாளில் ஒரு வசதி வந்து விடும். அப்படி ஒரு வசதி வந்ததும், அவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தாமதப் படுத்துவதை நாம் பார்க்கிறோம்.
قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لَوْ كَانَ لِي مِثْلُ أُحُدٍ ذَهَبًا، مَا يَسُرُّنِي أَنْ لاَ يَمُرَّ عَلَىَّ ثَلاَثٌ وَعِنْدِي مِنْهُ شَىْءٌ، إِلاَّ شَىْءٌ أُرْصِدُهُ لِدَيْنٍ ”. رَوَاهُ صَالِحٌ وَعُقَيْلٌ عَنِ الزُّهْرِيِّ.
உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. [புகாரி 2389, முஸ்லிம் 1654]
தன்னிடம் உஹது மலை அளவுக்குத் தங்கம் கிடைத்தால் அதில் கடனை அடைப்பதற்காக மட்டும் தீனாரை எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தையும் தர்மம் செய்து விடுவேன் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் வசதி வரும் போது கடனுக்கு என்றுள்ள தொகையை ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் வழி காட்டுகின்றார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ ”.
‘செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!’ [புகாரி 2287, 2288, 2400, முஸ்லிம் 2924]
வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும்.
கையில் வசதி வந்த பின்பும் கடனை அடைக்க முன் வராத கடன் பட்டவர், கடன் கொடுத்தவருக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ”.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். (புகாரி 2442)
கடன் ஓர் அமானிதம்:-
நிச்சயமாகக் கடன் ஓர் அமானிதம் என்பதை நம்மில் யாரும் மறுக்க முடியாது.
اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:58)
அமானிதங்களை ஒப்படைத்து விட வேண்டும் என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகின்றான்.
திருக்குர்ஆனின் 23:8, 70:32 ஆகிய வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அமானிதங்களை நிறைவேற்றுவார்கள். என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அமானிதங்களை நிறைவேற்றுவது ஈமானிய பண்புகளில் உள்ளதாகும். இந்தப் பண்புயாரிடம் இல்லாமல் ஆகி விடுகின்றதோ அவர் இறை நம்பிக்கையாளர் என்ற பட்டியலிலிருந்து விலகி நயவஞ்சகர் பட்டியலில் சேர்ந்து விடுகின்றார். அமானிதத்தை நிறைவேற்றாமல் நம்பிக்கைத் துரோகம் செய்வதை முனாஃபிக்குகளின் பண்புகளில் ஒன்றாக நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்.
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ”.
‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’ என்று இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்’ [புகாரி 33]
நம்மில் பெரும்பாலோர் கடனை ஓர் அமானிதமாகவே கருதுவது கிடையாது. அதனால் அதைத் திரும்பக் கொடுப்பதைப் பற்றிக் கவலைப் படுவதும் கிடையாது. கடன் வாங்கியவர் தான் கடன் கொடுத்தவர் போல் நடந்து கொள்வார். வாங்கிய கடனைப் பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யாது சட்டை காலரை உயர்த்தி விட்டு நடமாடுவார்.
மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றுள்ள நயவஞ்சகரின் பண்புகளில் மூன்று பண்புமே கடன் வாங்கியவரிடம் குடி கொண்டு விடுகின்றன.
கடன் வாங்கி மோசடி செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை:–
கடன் வாங்குபவர் கடனை திரும்ப செலுத்திட வேண்டும் எனும் நோக்கத்தில் கடன் பெற வேண்டும். ஏமாற்றும் நோக்கத்திலோ, பாதி செலுத்தி விட்டு மீதியை ஏமாற்ற வேண்டும் நோக்கத்தில் கடன் பெறக்கூடாது. கடன் வாங்கும்போது நடந்து கொள்வதை விட சிறந்த முறையில் கடனை திருப்பிக் கொடுக்கும்போது நடந்து கொள்ள வேண்டும்.
ஏமாற்றுப் பேர்வழிகள் ஏமாற்றுவதற்காகவே கடனை வாங்கி அக்கடனை திரும்பக் கொடுப்பதில்லை, அவர்களுடைய எண்ணத்திற்குத் தக்க அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதில்லை.
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ ”.
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். (புகாரி 2387)
எவ்வளவு பொருத்தமாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்று பாருங்கள். இவர்கள் கடனை வாங்கி ஆட்டையை போடுவதால் உண்மையில் கடன் வாங்கி திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் கேட்பவர்களும் பாதிக்கப்பட்டு விடுகின்றார்கள்.
திரும்பக் கொடுக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டே ஒரு பொருளை வாங்குவதற்குப் பெயர் கடன் அல்ல! அது மோசடியாகும்.
மவ்தான கடனாளியின் முதற்கடமை:-
இறந்தவருக்குக் கடன் இருந்தால் கடனைக் கொடுத்த பிறகே தன் சொத்துக்களைப் பங்காளிகள் பங்கிட வேண்டும்” என்று பாங்காய் பகர்கிறது.
يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 4:11.
இறந்தவரின் சொத்தை பங்கு வைக்கும் முன் அவரின் கடனை நிறைவேற்றச் சொல்கிறது. தகப்பனின் சொத்துக்கு பங்கு கேட்கும் மகன் அவரின் கடனுக்கு முதலாவதாக பொறுப்பெடுக்கச்சொல்கிறது,காரணம் கடன் அவரை மறுமையில் சிறைபிடிக்கும்
ஷஹீதும்- கடனாளியும்:-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلاَّ الدَّيْنَ ” .
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம் ]
கடன் வாங்குவர்களுக்கு இந்த ஹதீஸ் ஓர் எச்சரிக்கையாகும். ஷஹீதை விட உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் யாரும் இருக்க முடியாது. இத்தகைய பெரிய தகுதியைப் பெற்றவருக்கும் கடன் வாங்கியதன் காரணத்தால் அல்லாஹ் பாவத்தை மன்னிக்கமாட்டான் என்று நபி ﷺ அவர்கள் கூறிவிட்டார்கள். அதாவது கடன் கொடுத்தவர் மன்னிக்காத வரை சுவர்க்கத்தில் ஷஹீது, நுழைய முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு கடன் விஷயத்தில் நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
கடனாளிக்கு தொழுகை நடத்த மறுத்த நபி صلى الله عليه وسلم அவர்கள்:-
நாங்கள் நபி ﷺ அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதரே! இதற்கு தொழவையுங்கள் என்றனர் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்றனர். இவர் ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று கேட்டபோது அதற்கும் இல்லை என்றனர். நபி ﷺ அவர்கள் அந்த மையித்துக்கு தொழ வைத்தார்கள்.
பின்பு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டு தொழவைக்கச்சொன்னபோது நபி ﷺ அவர்கள் இவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது –ஆம்!.என்றனர்.இவரின் கடனை நிறைவேற்ற ஏதும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று நபி ﷺ அவர்கள் கேட்டபோது,ஆம் மூன்று தீனார்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறியபோது அவருக்கும் நபி ﷺ அவர்கள் தொழ வைத்தார்கள்.
பின்பு மூன்றாவது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது.
அவர் மீது கடன் உள்ளதா? என்று கேட்டபோது ஆம்! என்று பதில் கூறினர். அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர் தன் கடனை நிறைவேற்ற வேறு ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்று பதில் கூறினார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே தொழவைத்துக் கொள்ளுங்கள்.என்றார்கள்.அப்போது அந்த சபையில் இருந்த அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்கள் தொழவையுங்கள்.இவர் கடனுக்கு நான் பொருப்பேற்றுக்கொள்கிறேன். என்றதும் -நபி ﷺ அவர்கள் தொழவைத்தார்கள். – புகாரி.
அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருநாள் நபி ﷺ அவர்கள் என்னை சந்தித்தபோது- அபூ கதாதாவே! நீ வாக்களித்த அந்த கடனை நிறைவேற்றிவிட்டாயா?என்று கேட்டார்கள். அதற்கு நான் ஆம்!நிறைவேற்றிவிட்டேன் என்றதும் இப்போது இப்போது தான் அந்த மையித்தின் தோள் குளிர்ந்தது என்றார்கள்.
عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِجَنَازَةٍ، لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ ” هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ ”. قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ ” هَلْ عَلَيْهِ مَنْ دَيْنٍ ”. قَالُوا نَعَمْ. قَالَ ” صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ”. قَالَ أَبُو قَتَادَةَ عَلَىَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ. فَصَلَّى عَلَيْهِ.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. ‘இவர் கடனாளியா?’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் ‘இல்லை!” என்றனர். அவருக்கு நபிصلى الله عليه وسلم அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இவர் கடனாளியா?’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்!” என்றனர். நபி صلى الله عليه وسلم அவர்கள் ‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!” என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!” என்று கூறியதும் அவருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகை நடத்தினார்கள். [புஹாரி, 2295]
وفي جامع الترمذي بسند صحيح عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من فارق الروحُ الجسدَ وهو برئ من ثلاث دخل الجنة من الكبر،والغلول،والدين
உடலை விட்டும் உயிர் பிரிந்து விட்ட ஒருவர் பெருமை,மோசடி,கடன் இந்த மூன்றை விட்டும் நீங்கியிருந்தால் மட்டுமே சுவனம் நுழைவார் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
وفي رواية الحاكم ( إن صاحبكم حُبس على باب الجنة بدين كان عليه
கடனுக்காக சுவனத்தின் வாசலில் உங்கள் தோழர் ஒருவர் தடுக்கப்பட்டிருக்கிறார் என்று நபியின் சொல் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி ﷺ அவர்கள் உட்கார்ந்திருந்தபோது பல ஜனாஸாக்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.அப்போது தங்களின் பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி, பின்பு தாழ்த்திவிட்டு, தங்களின் கையை நெற்றியில் வைத்து- சுப்ஹானல்லாஹ்!என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கிவிட்டது! என்றார்கள்.
மறுநாள் நபி ﷺ அவர்களை சந்தித்து அதற்கான விளக்கம் கேட்டபோது- அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஒருவர்,மீண்டும் உயிர் பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு,மீண்டும் உயிர்பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு, இப்படி மூன்று தடவை அல்லாஹ்வின் பாதையில் தன் உயிரை தியாகம் செய்தாலும் அவர் மீது கடன் இருந்தால் அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழைக்கமாட்டான் என்று வஹி இறங்கியது என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
இதற்காகத்தான் நபி ﷺ அவர்கள் கடனை விட்டும் அதிகமாக அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.
கடனும் வட்டியும்:-
இன்று அவசர தேவை என்றும், நிர்பந்தம் என்றும், சர்வ சாதரணமாக வங்கியில் குறைந்த வட்டி என்பதற்க்காகவும் வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள்.
இதெனால் நம்மிடம்
- பேணுதல் குறைந்து விடுகிறது.
- இன்று அவசர தேவை. நாளை வியாபாரம் ஆசை.
- அல்லாஹ் ரசூலுக்கு மாற்றமாக செய்து, மறைமுகமாக தீமையை சம்பாதிக்கிறோம்.
- ஸஹாப்பாக்களை விட நாம் ஏழையா? அப்படி வாங்க வேண்டுமா?
“வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ‘இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்'” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[ முஸ்லிம் 3258]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)
فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)’ (அல்குர்ஆன் 2:279)
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)
وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ” اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ ”. قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ ” الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ
நபி ﷺ அவர்கள், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?’ என்று கேட்டார்கள். நபி ﷺ அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)’ என்று கூறினார்கள். [புஹாரி 6857]
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
‘இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
‘அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!’ எனக் கூறினார்கள்.’ [புஹாரி 2085]
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி ﷺஅவர்கள் சபித்தார்கள். [புஹாரி 5347]
‘ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்’ என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: தாரகுத்னீ)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு). திர்மிதி, நஸயீ)
மென்மையாக நடத்தல்:-
மென்மையாக நடத்தல் என்பது பிறரது அன்பையும் நட்பையும் பெறவும், இருக்கும் அன்பையும் நற்பையும் வளர்க்கவும் சிறந்த வழியாகும்.
கடுகடுத்த முகமும், கடும் போக்கும் இருக்கும் நட்பையும் இழக்கச் செய்யும் என்பதைக் கவனத்திற்கொள்வோம்.
எனவே மென்மையான போக்கைக் கையாள்வோமாக!
கடனிலிருந்து விடுபட:-
கடன் சுமை, கடனிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனையை நபி ﷺ அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து நபித்தோழர் அபு ஸயீத் (ரலி) தெரிவிப்பதாவது:
ஒரு நபித்தோழரின் பெயர் அபு உமாமா (ரலி). இவர் ஒரு தடவை பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். இதைக்கண்ட நபி ﷺ அவர்கள் ‘அபு உமாமாவே! தொழுகை இல்லாத நேரத்தில் பள்ளியினுள் அமர்ந்துள்ளரே, என்ன விஷயம்?’ என விசாரித்தார்.
அதற்கு அவர் ‘இறைத்தூதரே! எனது கவலைகளும், கடன் சுமைகளும் தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்தது’ என விவரித்தார்.
அதற்கு நபி ﷺ அவர்கள் ‘நான் உமக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத்தருகிறேன்; அதை நீர் காலையிலும், மாலையிலும் ஓதிவந்தால், இறைவன் உமது கவலையை போக்கி, உமது கடனை நிறைவேற்ற வழி வகை செய்வான்’ என அரபு மொழியில் அந்த பிரார்த்தனையை கூறினார்கள்.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அதன் பொருள்: ‘இறைவா, நான் உன்னிடம் கவலை, தூக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கோருகிறேன்’ என்பதாகும்.
இந்த பிரார்த்தனையை அபு உமாமா (ரலி) காலையிலும், மாலையிலும் ஓதி வந்தார். இறைவன் அவரின் கவலையையும், கடனையும் போக்கினான். (அபூதாவூத் 1330)
கடன்பட்டவர்கள் இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்துவந்தால் கவலையும், கடன் சுமையும் தீரும்.
கடனை விட்டும் பாதுகாப்பு தேடுங்கள் :
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ ”. فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ ” إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ ”. وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
‘இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபி ﷺ அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள். ‘தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி ﷺ அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்’ என்று நபி ﷺ அவர்கள் விளக்கமளித்தார்கள். (புகாரி 832)
கடன் என்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் அதைவிட்டும் அல்லாஹ்வின் தூதர் ﷺ பாதுகாப்பு தேடியதால் நாமும் அந்த கடனை விட்டு பாதுகாப்பு தேடுவதன் மூலம் கடன் வாங்கும் அந்தப் பாதையை நம்மால் முடிந்த வரை அடைத்து விட வேண்டும்.
【 கடன் வேண்டாம். போதுமென்ற மனம் வேண்டும்】
போதுமென்ற மனம் இல்லத்தினால் அதிகமாக கடன் வாங்கி கஷ்டப்பட வைக்கிறது.
வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். [புகாரி 6446 & 6447]
قال محمد بن فرحان سمعت خالي عبد الوهاب يقول: كنت جالسا عند الجنيد أيام الموسم وحوله جماعة كثيرون من العجم والمولدون. فجاء إنسان بخمسمأة دينار. ووضعها بين يديه. وقال تفرقها على هؤلاء الفقراء فقال: ألك غيرها؟ فقال: نعم لى دنانير كثيرة. فقال: أتريد غير ما تملك؟ فقال: نعم فقال له الجنيد: خذها فإنك أحوج إليها منا ولم يقبلها. (الكتاب: رسالة القشيرية صفحة: 291)
முஹம்மது இப்னு ஃபர்ஹான் என்பவர் தன்னுடைய மாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூற தான் கேட்டதாக கூறுகிறார்: நான் ஜுனைதுல் பகுதாதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அது அறுவடை காலமாக இருந்தது.
அன்னாரைச் சுற்றி நிறைய அரபுமக்களும் ,அரபு அல்லாத மக்களும் இருந்தனர்.
அதுசமயம் ஒரு மனிதர் ஐனூறு தங்க காசுகளை கொண்டு வந்து அன்னாருக்கு முன்னால் வைத்து “இந்த காசு இங்கே உள்ள ஏழைகளுக்கு பங்கு வைத்து கொடுங்கள்” என்றார்.
அப்போது ஜுனைதுல் பகுதாதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அவரிடம் “உன்னிடம் இதை தவிர மற்ற தங்க காசுகள் உள்ளனவா?” என்று வினவினார்கள்.
அதற்கு அவர் “ஆம் என்னிடம் நிறைய தங்க காசுகள் இருக்கிறது” என்றார்.
அப்போது ஜுனைதுல் பகுதாதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “இப்போது உன்னிடம் இருக்கும் தங்க காசுகளை விட வேறு (அதிகமான) தங்க காசுகள் வேண்டும் என விரும்புகிறாயா? என்று வினவினார்கள்.
அதற்கு அந்த மனிதர் “ஆம்” என்றார்.
அப்போது அந்த மனிதரிடம் ஜுனைதுல் பகுதாதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “இந்த காசுகளை நீயே வைத்துக்கொள். எங்களை விட நீயே இந்த காசுகளின் பக்கம் அதிகம் தேவையுள்ளவனாக இருக்கின்றாய்” என்று கூறி அந்த காசுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.
கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன்:-
கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.
துாக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக்கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து கடைசி பையன் கேட்டான் “அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?”
திவாலாகிப் போனவர் யார் ?
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ” . قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ . فَقَالَ ” إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ ” .
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள். [முஸ்லிம் ]
✍🏻✍🏻நன்றியுரை:-
“ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.
.أرسل هذه الرسالة إلى أحبابك كلهم
نسأل اللهَ العلي القدير أن يُعلِّمَنا ويفقهنا في ديننا، وأن يجعلنا هداةً مهتدين، ومن العلماء الراسخين، والصلاة والسلام على أشرف المرسلين، سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، والحمد لله ربِّ العالمين.
****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******
✍ இன்னும் சொல்ல வேண்டியது அதிகமாக உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன் வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்……