உடல் ஆரோக்கியம் நோயாளிகள் இறை பொருத்தம் 16-08-2024
✍🏻✍🏻 ஜுமுஆ குறிப்புரையின் தலைப்பின் விளக்கம்:– ‘உடல் ஆரோக்கியம் + நோயாளிகள் = இறை பொருத்தம்…….!!!
அதாவது:- 1️⃣. “உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களை விடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது”. அது சம்பந்தமாக “ஜுமுஆ குறிப்புரை””…
【♣ துவக்கவுரை: المقد مة INTRODUCTION ♣】
அல்லாஹ்வின் ﷻ பேரருளால் ஸஃபர் மாதத்தின் இரண்டாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் .
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பர். அது உண்மை தான். “உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களை விடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது” ஒரு மனிதனிடம் எத்துணை செல்வங்கள் இருந்த போதிலும் அவனிடம் ஆரோக்கியம் இல்லை யென்றால் அத்தனை செல்வங்களாலும் அவன் விரும்பிய அளவு மன நிறைவாகப் பயனடையப் போவதில்லை. வைத்தியமும் பத்தியமும் தன் செல்வங்களை அனுபவிப்பதில் அவன் முன் முட்டுக் கட்டையாக வந்து நிற்கும். சுக வாழ்வை இஸ்லாம் இறைவனின் அளப்பரிய அருட்கொடையாகப் பார்க்கிறது.
செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வாகும்..
நிழலின் அருமை வெயிலில் அவதியுறுபவனுக்குத்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் நோயாளிகளிடம் கேட்டால்தான் நோயற்ற வாழ்வின் அருமையும் பெருமையும் புரியும்.
பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தும் தங்களைப் பீடித்துள்ள நோய்களின் காரணத்தால் தாங்கள் விரும்பியதை உண்டு அனுபவிக்க முடியாத அவஸ்தையை அவர்களிடம் கேட்டால் மனம் வெதும்பி அது பற்றி விவரிப்பார்கள்.
விரும்பியதை உண்டு மகிழ முடியாது என்பது மட்டுமல்ல, நோயினால் விரும்பிய செயல்களை ஆற்றவும் இயலாது போகும். எனவேதான் இஸ்லாமும் நோயற்ற வாழ்வை பெரும் பாக்கியம் என்று சொல்கிறது.
இன்றைக்கு நோயில்லா வாழ்க்கை என்பது பகல் கனவு என்று கருதுமளவு அரிய விஷயமாகி விட்டது. புதிது புதிதாய் பல நோய்கள் தோன்றுகின்றன. நமது முன்னோர்கள் கண்டிராத, அறிந்திராத பல நோய்களுக்கு இன்றைய சமுதாயம் ஆளாகியிருக்கிறது. ஊரெங்கும் பெருகும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் அதில் சிகிச்சை பெறுவதற்காக மொய்க்கும் கூட்டத்தையும் காணும்போது முற்காலத்தைவிட தற்காலத்தில் நோய்கள் பெருகியிருப்பதை அறியலாம்.
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்பார்கள். அதுபோல உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் எல்லா அமல்களும் செய்ய முடியும் எனவே நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு இஸ்லாம் கூறும் அழகிய வழிகளை இக்கட்டுரை உங்களுக்கு உதவிபுரியும் என்ற நன்னோக்கோடு தொகுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் [ﷻ] இந்த மனித சமுதாயத்திற்கு எண்ணற்ற அருட் கொடைகளை செய்திருக்கிறான். அல்லாஹ்வின் [ﷻ] அருட்கொடைகளில் உள்ளதுதான் உடல் ஆரோக்கியம். அவற்றைப் பற்றி விரிவாக நாம் பார்ப்போம் வாருங்கள்.
ஆக அல்லாஹ் [ﷻ] நம் அனைவருக்கும் ஈருலகிலும் “நேயற்ற வாழ்வையும் குறைவற்ற உடல் ஆரோக்கியமான செல்வத்தையும் தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை ஆரம்பம் செய்கிறேன்.
- பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ✍
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣
[உண்மையான முஃமின்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும் என பயந்து வாழ்வார்கள்.
ஒருவர் தனக்கு கொடுத்த ஆரோக்கியத்தை சரியாக பயன்படுத்தாமல் , அதை நாசமாக்கினால் மறுமையில் அதற்கும் விசாரனை உண்டு என்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். {அல்குர்ஆன்102:8}
اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். {அல்குர்ஆன் 36:65}
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
[“ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்”:-]
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ ” شعب الإيمان
‘உனக்கு, “ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்”’ என நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசமாக கூறினார்கள். அவை:
- முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்.
- நோய் வருமுன் உடலாரோக்கியத்தையும்.
- வறுமை வருமுன் செல்வநிலையையும்’
- அதிக வேலை பழுக்கள் வருமுன் ஓய்வு நேரத்தையும்.
- மரணம் வருமுன் வாழ்க்கையையும் இப்னு அப்ஷையா 34319 شعب الإيمان للبيهقي رقم الحديث: 9573
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ، الصِّحَّةُ وَالْفَرَاغُ ”.
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு {புகாரி 6412}
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تَزُولُ قَدِمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعِ خِصَالٍ: عَنْ عُمُرُهِ فِيمَا أَفْنَاهُ؟ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ؟ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ؟ وَعَنْ عَلِمهِ مَاذَا عَمِلَ فِيهِ؟ ” المعجم الكبير للطبراني
‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை:
- தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
- தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?
- செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்?அதை எவ்வாறு செலவழித்தான்?
- பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தான்? (திர்மிதீ 2341)
[இஸ்லாமும் ஆரோக்கியமும்!:–]
இஸ்லாம் இந்த ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ ”. فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ ” فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ ”. فَشَدَّدْتُ، فَشُدِّدَ عَلَىَّ، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجِدُ قُوَّةً. قَالَ ” فَصُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ وَلاَ تَزِدْ عَلَيْهِ ”. قُلْتُ وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ ” نِصْفَ الدَّهْرِ ”. فَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபி (அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!’ என்றார்கள். நூல்: புகாரி (1975)
அதிகமாக நோன்பு என்ற வணக்கத்தை செய்தவரை அழைத்து நபி ஸல் அவர்கள் பாராட்டவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்கத்தின் பெயரால் தன்னுடைய ஆரோக்கியத்தை கெடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ ” مَا هَذَا الْحَبْلُ ”. قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ ”.
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்க. அதற்கு மக்கள், ‘இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கர்ந்து விட வேண்டும்’ என்று கூறினார்கள். புகாரி 1150
அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு நிகழச்சியும் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلاَ يَقْعُدَ وَلاَ يَسْتَظِلَّ وَلاَ يَتَكَلَّمَ وَيَصُومَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ ”.
நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்’ என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்’ என்றார்கள். புகாரி 6704
ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாக நேர்ச்சை செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்பதை இந்த நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
மனித உடல்நலனிற்கு கேடு விளைவிக்கும் காரியங்களை ஆரம்பத்திலேயே விலக்கியது இஸ்லாம். [உதாரணமாக] மலஜலம் அடக்குவது.
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ “مسند أحمد
“உணவு தயாராக இருக்கும் சூழ்நிலையிலும் இரு கேடானவைகள் [மலம், சிறுநீர்] முட்டிக்கொண்டிருக்கும் போதும் உங்களில் ஒருவர் தொழவேண்டாம்” என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அஹ்மத்
மலம் சிறுநீர் அடக்கினால் முழங்கால் வலி தலைவலி உடல் சோர்வு முகசோர்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலையில் சீக்கிரம் விழிக்க வேண்டும் என்றால் இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும். அதனால்தான் இரவில் அனாவசியமாக விழித்திருப்பதை நபி [ஸல்] அவர்கள் தடுத்துள்ளார்கள்.
عَنْ أَبِي بَرْزَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا» صحيح البخاري
568. அபூ பர்ஸா (ரலி) அறிவித்தார். ‘நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.’ ஸஹீஹுல் புஹாரீ.
நாம் சரியாக தூங்காவிட்டால் ரத்தக்கொதிப்பு, மனச்சோர்வு, கண்களை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, கண் சிவப்பு, கோபம், கை, கால் நடுக்கம், தூக்கம் இடையில் கலைந்தவுடன் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, கொட்டாவி, கண், மூக்கு மற்றும் வாய் பாதையில் ஒரு வறட்சி, உச்சந்தலையில் சூடான சட்டியை கவிழ்த்து வைத்தது போன்ற உணர்வு, கண்ணை சுற்றியுள்ள பகுதிகள் வீங்கி, கன்னங்கள் ஒட்டிப் போதல், அல்சர், தலைவலி மற்றும் பலவித உடல் உபாதைகளும் சுறுசுறுப்பின்மையும் உண்டாகின்றன.
[உண்மையான முஃமின்கள் துஆ- வில் முதலில் ஆரோக்கியத்தை கேட்பார்கள்:–]
ஆரோக்கிய வாழ்வை அல்லாஹ்விடம் கேட்போம்...
– عَنْ أَوْسَطَؒ قَالَ: خَطَبَنَا أَبُو بَكْرٍ فَقَالَ: قَامَ رَسُولُ اللّٰهِؐ مَقَامِي هذَا عَامَ اْلاَوَّلِ وَبَكَي أَبُو بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ: سَلُوا اللّٰهَ الْمُعَافَاةَ أَوْقَالَ الْعَافِيَةَ فَلَمْ يُؤْتَ أَحَدٌ قَطُّ بَعْدَ الْيَقِينِ أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ أَوِالْمُعَافَاةِ. رواه احمد
“ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு முறை பிரசங்கம் நிகழ்த்தும் போது, “கடந்த வருடம் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் நிற்கும் இதே இடத்தில் (பிரசங்கம் செய்ய) நின்றிருந்தார்கள்’’ என்று கூறி அழ ஆரம்பித்தார்கள். பிறகு “அல்லாஹ்விடம் சுகத்தைக் கேளுங்கள். ஏனேனில், இறை நம்பிக்கைக்குப் பிறகு சுகத்தைவிட சிறந்த பாக்கியம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை’’ (முஸ்னத் அஹ்மத்)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ اْلاَذَانِ واْلإِقَامَةِ، قَالُوا: فَمَاذَا نَقُولُ يَارَسُولُ اللهِ؟ قَالَ: سَلُوا اللهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ. رواه الترمذي
பாங்குக்கும், இகாமதுக்குமிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படுவதில்லை, (ஒப்புக் கொள்ளப்படுகிறது)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ்! நாங்கள் எதைக் கேட்க வேண்டும்?” என ஸஹாபாக்கள் கேட்டனர். அல்லாஹ்விடம் இம்மை, மறுமையின் சுகத்தைக் கேளுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (திர்மிதீ)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ ” سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ” . ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ . قَالَ ” فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِي الآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ ”
நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் [அல்லாஹ்விடம் கேட்பதற்கு] எந்தப் பிரார்த்தனை சிறந்தது? எனக்கேட்டு ஒருவர் வந்தார். அவருக்கு அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; இம்மையிலும், மறுமையிலும் உனக்கு சுகம் கிடைக்க உனது இறைவனிடம் பிரார்த்தனை செய். என்றார்கள். அவர் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் வந்து இதே கேள்வியைக் கேட்ட போதும் இதே பதிலைத்தான் திரும்பத் திரும்ப அவருக்கு அண்ணலார் [ஸல்] அவர்கள் கூறி உனக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம் வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய் என்று சொன்னார்கள். திர்மிதி ; 3512
தினமும் காலை, மாலை நபி [ஸல்] அவர்கள் செய்த பிரார்த்தனை.
قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، أَنَّهُ قَالَ لأَبِيهِ يَا أَبَةِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّعَافِنِي فِي بَصَرِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ تُعِيدُهَا ثَلاَثًا حِينَ تُصْبِحُ وَثَلاَثًا حِينَ تُمْسِي . فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ .
யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக..! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக..! எனது பார்வையில் சுகத்தைத் தருவாயாக..! இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள். அபூதாவூது 5090
ஒருவர் தன்னுடைய ஆரோக்கியதிற்காக அல்லாஹ்விடம் முதலில் பிரார்ததனையும் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்” என்று கூறினார். அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) “அல்லாஹ் [ﷻ] தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) “உன்னால் அதைத் தாங்க முடியாது”. அல்லது “உன்னால் அதற்கு இயலாது” என்று கூறிவிட்டு, நீ “இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான். (முஸ்லிம் 5216)
அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இறைவனிடம் ஆரோக்கியத்தை கேட்டு பிரார்த்தனை செய்யக்கூடாதா? என்று கேட்டார்கள் என்று திர்மிதீயின் மற்றொரு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
இதை ஏதோ ஒரு தடவை இரண்டு தடவை இப்படி வலியுறுத்திப்பார்கள் என்று நினைத்து விடக்கூடாது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் இதை வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.
ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு “அல்லஹும்மஃக்பிர் லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ” எனும் இந்த வாக்கியங்களைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி கட்டளையிடுவார்கள். (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!) முஸ்லிம் (5228)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ” (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக” என்றார்கள். இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, “இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை” என்று சொன்னார்கள். முஸ்லிம் (5229)
மக்களுக்கு கட்டளையிட்டது மட்மில்லாமல நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்டுள்ளார்கள்.
“அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஅமத்திக்க, வ தஹவ்வுலி ஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ சகத்திக்க” என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது. (பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), முஸ்லிம் (5289)
இந்த நபிமொழிகள் மூலம் இஸ்லாம் ஆரோக்கியத்திற்க வழங்கியுள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.
[உண்மையான முஃமின்கள் வலிமையானவர்களாக இருப்பார்கள்:– !!!]
இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன் பலமான இறை நம்பிக்கையாளனே! எனவே பலமான இறை நம்பிக்கையாளனாக இருப்பதற்கு ஆரோக்கியம் அவசியம். அந்தஆரோக்கியத்திற்கு ஆசைப்படவேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும்.
الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே” என்பதைச் சுட்டும்) “லவ்” எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். முஸ்லிம் (5178)
[ஆரோக்கியமாக வாழ!! அளவோடு உண்ணுவோம்.. !!!:–]
ஆரோக்கிய நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால்!! நாம் அதிகம் பேண வேண்டியது நமது வயிற்றைத்தான். நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், அருந்தக்கூடிய பானங்களும் வயிற்றினுள் சென்று அதை செரிமானமாக்கி நமது உடலுக்குத் தேவையான சக்திகளை பெறக்கூடிய வேலைகளைச் செய்வது நமது வயிறுதான். பல மிஷின்கள் சேர்ந்து செய்யக்கூடிய மிகப்பெரிய வேலைகளை நமது வயிற்றில் இருக்கக்கூடிய இயந்திரங்கள் செய்து முடிக்கின்றன. அவைகள் நம் கற்பனைக்கு எட்டாத காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் செய்து கொண்டிருப்பது வல்ல இறைவன் நம் மீது புரிந்த மிகப்பெரிய கருணை (அல்ஹம்துலில்லாஹ்) எல்லாப்புகளும் இறைவனுக்கே!
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ»
மிகவும் பேணிப் பாதுகாக்க வேண்டிய வயிற்றுக்குள் கண்டதையும் சாப்பிட்டு அல்லது அளவுக்கதிகமாக சாப்பிட்டு, அதன் காரணமாக நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூற, நபித்தோழர் மிக்தாம் இப்னு மஃதி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ஆதமின் மகன் வயிறை விடக் கெட்ட ஒரு பையை நிரப்புவதில்லை. ஆதமுடைய மகனின் முதுகெலும்பை நிமிர்த்துவதற்கு சில கவளம் உணவே அவனுக்குப் போதுமானது! அவசியமானால் அவனுடைய வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், மற்றொரு பகுதி தண்ணீருக்காகவும், பிரிதொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் (காலியாக) இருக்கட்டும். ( திர்மிதீ)
மேற்கூறப்பட்ட நபிமொழியின் படி உணவு உண்ணும் சமயத்தில் நமது வயிற்றை மூன்று பகுதிகளாக ஆக்கிக் கொண்டு, அதை நடைமுறைப்படுத்தி வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “வயிறுதான் நோயின் பிறப்பிடம்” என்று கூறியுள்ளார்கள். “அளவோடு உண்டு வாழ்ந்தால் நோய்கள் பல அகன்றுவிடும். சுவாசம் சரளமாக இயங்கும், விரைவாக செரிமானமாகும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், விஷயங்களை நன்கு கிரகிக்கும் ஆற்றலை உண்டாக்கும், மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துடன் சீராக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் மிதமிஞ்சிய உணவு, அறிவைக் குறைத்து சிந்தனையை மழுங்கடிக்கச் செய்துவிடும். வேலைகளிலும், படிப்பிலும் சோர்வை ஏற்படுத்தும் தூக்கத்தை அதிகமாக்குவதோடு, காலப்போக்கில் நரம்புகளுக்கு தளர்ச்சியை உண்டாக்கிவிடும். செரிமானமாகத் தாமதமாகும். (ஜீரணமாகாமல் வயிறு மற்றும் உள்ளுறுப்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்) எல்லாவற்றுக்கும் மேலாக படைத்த இறைவனை வணங்கும் விஷயத்தில் சோம்பலை உண்டாக்கும். சில சமயம் கடமையான தொழுகைகளை நிறைவேற்றுவதை விட்டும் நம்மை மறக்கடிக்கச் செய்துவிடும். எனவே, “மிதமான உணவே சிறந்த வைத்தியன்” என்பதற்கிணங்க உணவு உண்ணும் விசயத்தில் ஒரு வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
[இரண்டாம் பகுதி – நோயாளிகளைப் பற்றி பேச ஆரம்பிக்கிறது:– ….].
சோதனைகளைப்பற்றி அல்லாஹ் [ﷻ] குறிப்பிடும்போது, اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ “உங்களில் யார் அழகிய நற்கருமங்கள் செய்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே நாம் உங்களை சோதிக்கின்றோம்” (அல்குர்ஆன் 67:2) என்று கூறுகின்றான். இந்த இறைவசனத்திலிருந்து மனிதன் ஏன் சோதிக்கப்படுகிறான் என்பது தெளிவாகின்றது. மனிதன் எந்தச் சூழலிலும் மனம் தளராது நற்காரியங்கள் செய்கின்றனரா என்பதை அல்லாஹ் [ﷻ] பார்க்க விரும்புகிறான்.
மனிதனுடைய மகிழ்ச்சியை நிம்மதியை தொலைக்க கூடிய காரியங்களில் மிக முக்கியமானது. அவனுக்கு வருகிற வியாதிகளாகும் வலி நிறைந்த இந்த நோயின்போது உடையாத உள்ளங்கள் வேண்டும்.
மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான். அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப்படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது!
நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்! அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்.
முதலில் நோய் ஏன் வருகிறது? பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும்! கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரை ஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது. அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்!
இஸ்லாம் வெறும் ஆன்மீகத்தை மட்டும் கூறக்கூடிய மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் முழு வாழ்க்கைத் திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கமாகும். மனித சமுதாயத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும். சமுதாய நலன்களை முக்கியப்படுத்துவதிலும், மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் நோயாளியை உடல் நலம் விசாரித்தல் பற்றி இஸ்லாம் கூறும் ஒழுக்கங்களையும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.வாருங்கள்..
[நோயுற்ற ஒரு முஸ்லிம் சகோதரரின் உடல் நலம் விசாரித்தல் கடமையாகும்:–]
ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டு விடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது. நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ ”.
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். புகாரி 1240
பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள். புகாரி (5649)
وعن أبي هريرة رضي الله عنه قَال: قَالَ رسولُ الله صلى الله عليه وسلم : “إنَّ اللهَ عز وجل يَقُولُ يَومَ القِيَامَةِ: يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدنِي! قَالَ: يَا رَبِّ، كَيْفَ أعُودُكَ وَأنْتَ رَبُّ العَالَمِينَ؟!، قَالَ: أمَا عَلِمْتَ أنَّ عَبْدِي فُلاَناً مَرِضَ فَلَمْ تَعُدْهُ! أمَا عَلِمْتَ أنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَني عِنْدَهُ! يَا ابْنَ آدَمَ، اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمنِي! قَالَ: يَا رَبِّ، كَيْفَ أطْعِمُكَ وَأنْتَ رَبُّ العَالَمِينَ؟! قَالَ: أمَا عَلِمْتَ أنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلانٌ فَلَمْ تُطْعِمْهُ! أمَا عَلِمْتَ أنَّكَ لَوْ أطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي! يَا ابْنَ آدَمَ، اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي! قَالَ: يَا رَبِّ، كَيْفَ أسْقِيكَ وَأنْتَ رَبُّ العَالَمينَ؟! قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ! أمَا عَلِمْتَ أنَّكَ لَوْ سَقَيْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي”-؟” ((رواه مسلم))
நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் [ﷻ] (மனிதர்களை அழைத்து) ‘ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?’ என கேட்பான். அப்பொழுது அடியான், ‘என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!’ என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் [ﷻ] ‘என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான். ‘ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?’ என்று அல்லாஹ் [ﷻ] கேட்பான். அதற்கு அடியான் ‘என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!’ என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் [ﷻ] ‘என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?’ என்று கூறுவான். ‘ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை’ என்று அல்லாஹ் [ﷻ] கூறுவான். அதற்கு அடியான். ‘என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்’ என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், ‘என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?’ என்று கூறுவான். முஸ்லிம் 5021 ரியாளுஸ்ஸாலிஹீன் 896.
[உண்மையான முஃமின்கள் நோய் என்ற சோதனையை சாதனையாக மாற்றுவார்கள்:–]
[நோயாளிகளாக இருப்பதின் நன்மைகள்:–]
عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا أَحَبَّ اللهُ قَوْماً اِبْتَلاَهُمْ، فَمَنْ صَبَرَ فَلَهُ الصَّبْرُ وَمَنْ جَزِعَ فَلَهُ الْجَزَعُ. رواه احمد ورجاله ثقات مجمع الزوائد: ٣/١١
ஏதேனும் ஒரு கூட்டத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்க நாடினால் அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்திச் சோதிப்பான், எவர் பொறுமை கொள்வாரோ அவருக்குப் பொறுமை (யின் கூலி) எழுதப்படுகிறது; எவர் பொறுமை கொள்ள வில்லையோ அவருக்குப் பொறுமையின்மை எழுதப்படுகிறது” (பிறகு அவர் அழுது புலம்பிக் கொண்டிருப்பார்) (முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ ؓ وَعَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَايُصِيبُ الْمُسْلِمُ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حَزَنٍ وَلاَ أَذًي وَلاَ غَمٍّ حَتَّي الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ. رواه البخاري باب ماجاء في كفارة المرض
ஒரு முஸ்லிமுக்கு களைப்போ, நோயோ, கவலையோ, துக்கமோ, சோர்வோ ஏற்படுமேயானால் அவருக்கு ஏதேனும் முள் தைத்து விட்டாலும் கூட, அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரது பாவங்களை மன்னித்துவிடுவான்” (புகாரி 5641, 5642 )
عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَامِنْ مُسْلِمٍ يُشَاكُ شَوْكَةً فَمَا فَوْقَهَا، إِلاَّ كُتِبَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَمُحِيَتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ. رواه مسلم باب ثواب المؤمن فيما يصيبه من مرض..
எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு முள் தைத்துவிட்டால் அல்லது அதைவிட குறைந்த நோவினை ஏற்பட்டாலோ அதற்குப் பகரமாக அல்லாஹுதஆலாவிடம் அவருக்கு ஒரு பதவி எழுதப்படுகிறது. அவரது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது . (முஸ்லிம் 2572 )
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا يَزَالُ الْبَلاَءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّي يَلْقَي اللهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في الصبر علي البلاء
உண்மை விசுவாசிகளான ஆண், பெண்களில் சிலர் மீது அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து சோதனைகளும் நோய்களும் வந்து கொண்டே இருக்கும். சில சமயம் உயிர் மீது, சில சமயம் பிள்ளைகள் மீது, சில சமயம் செல்வத்தின் மீதும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும் அதன் காரணமாக அவருடைய பாவங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் இறுதியில் அவர் மரணித்த பிறகு ஒரு பாவம் கூட இல்லாத நிலையில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பார் . (திர்மிதீ 2399)
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ اللهَ يَقُولُ: إِذَا ابْتَلَيْتُ عَبْداً مِنْ عِبَادِي مُؤْمِناً، فَحَمِدَنِي عَلَي مَاابْتَلَيْتُهُ فَأَجْرُوا لَهُ كَمَا كُنْتُمْ تُجْرُونَ لَهُ وَهُوَ صَحِيحٌ. رواه احمد والطبراني في الكبير والاوسط كلهم من رواية اسماعيل بن عياش عن راشد الصنعاني وهو ضعيف في غير الشاميين وفي الحاشية: راشد بن داؤد شامي فرواية اسماعيل عنه صحيحة مجمع الزوائد :٣ /٣٣
ஒரு முஃமினான என் அடியார்களில் எவரையேனும் (ஏதேனும் சிரமம், நோய் முதலியவைகளைக் கொண்டு) நான் சோதிக்கும் பொழுது, அவன் என் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட சிரமத்தைக் கண்டு (பொறுமையுடன்) என்னைப் புகழ்ந்தால், இவர் ஆரோக்கியமாக இருந்தபோது செய்து வந்த செயல்களுக்குரிய கூலியை நீங்கள் எழுதி வந்ததைப்போல அனைத்து அமல்களின் நன்மையையும் அப்படியே எழுதிவிடுங்கள்” (என நான் மலக்குகளுக்கு கட்டளையிடுகிறேன்) என்று அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் குத்ஸியை ஹஜ்ரத் ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
[நோயாளியை நலன் விசாரிப்பதின் சிறப்புகள்:–]
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهُ ﷺ: مَنْ عَادَ مَرِيْضًا اَوْ زَارَ اَخًا لَهُ فِي اللهِ، نَادَاهُ مُنَادٍ اَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّاْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب.
எவர் நோயாளியை நலன் விசாரிக்க அல்லது தன் முஸ்லிம் சகோதரரை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால், நீங்கள் பரக்கத் பெற்றுவிட்டீர்கள், உங்கள் நடையும் பரக்கத் பொருந்தியது. மேலும் உங்களுடைய தங்குமிடத்தை நீங்கள் சொர்க்கத்தில் ஆக்கிக் கொண்டீர்கள்!” என்று உரத்த குரலில் ஒரு மலக்கு அறிவிப்புச் செய்கிறார்” .(திர்மிதீ 2008)
عَنْ ثَوْبَانَ ؓ مَوْلَي رَسُوْلِ اللهِ ﷺ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ عَادَ مَرِيْضًا لَمْ يَزَلْ فِيْ خُرْفَةِ الْجَنَّةِ، قِيْلَ: يَارَسُوْلَ اللهِﷺ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ؟ قَالَ: جَنَاهَا. رواه مسلم باب فضل عيادة المريض
எவர் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்கிறாரோ, அவர் சொர்க்கத்தின் குர்ஃபா”வில் இருப்பார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! சொர்க்கத்தின் குர்ஃபா” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அது சொர்க்கத்தில் பறிக்கப்பட்ட பழம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்ற ஹதீஸை நபி (ஸல்) அவர்களால் உரிமைவிடப்பட்ட அடிமை ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [முஸ்லிம் 5020 )
நீங்கள் நோயாளியிடம் சென்றால், அவரிடம் உங்களுக்காக துஆச் செய்யக் கூறுங்கள். ஏனேனில், அவரது துஆ மலக்குகளின் துஆவைப் போல” (ஒப்புக்கொள்ளப்படுகிறது) (இப்னுமாஜா 1441)
[உண்மையான முஃமின்கள் நோயாளிகளை சந்திக்கும் போது நடந்து கொள்ளும் முறைகள்:–]
عن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم قال : “تَمامُ عِيادَةِ المَريضِ أن يَضَعَ أحَدُكُم يَدَهُ عَلى جَبهَتِهِ
நலம் விசாரிப்பின் முழுமையாகிறது உங்களில் ஒருவர் நலம் விசாரிக்கும் போது நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீது தனது கையை வைத்து விசாரிக்க வேண்டும் என்றார்கள் [ ஹதிஸ்].
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُعَوِّذُ بَعْضَ أَهْلِهِ، يَمْسَحُ بِيَدِهِ الْيُمْنَى وَيَقُولُ “ اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا ”.
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். தம் வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து, ‘அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று பிரார்த்தித்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!) (புகாரி 5743)
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ ـ يَعُودُهُ ـ قَالَ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ قَالَ لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ. فَقَالَ لَهُ “” لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ “”
நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால், (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தி விடும்’ என்று கூறுவார்கள். புகாரி (3616)
[உண்மையான முஃமின்கள் கூறுவார்கள் அபூபக்ர் (ரலி- அன்ஹு) அவர்களைப் போன்று நாங்களும் ஆகுவோம் என்று:–]
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهُ ﷺ: مَنْ اَصْبَحَ مِنْكُمُ اْليَوْمَ صَائِمًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنِ اتَّبَعَ مِنْكُمُ اْليَوْمَ جَنَازَةً؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ اَطْعَمَ مِنْكُمُ اْليَوْمَ مِسْكِيْنًا؟ قَالَ اَبُوْبَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ عَادَ مِنْكُمُ اْليَوْمَ مَرِيْضًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَااجْتَمَعْنَ فِي امْرِيءٍ اِلَّا دَخَلَ الْجَنَّةَ. رواه مسلم باب من فضائل ابي بكر الصديق
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இன்று உங்களில் யார் நோன்பு நோற்றார்?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டபோது, நான் நோற்றேன்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.இன்று ஜனாஸாவில் கலந்துகொண்டவர் உங்களில் யார்? என்று கேட்க, நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று மிஸ்கீனுக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். இன்று உங்களில் நோயாளியை நலன் விசாரித்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்” என பதிலளித்தார்கள். எவரிடத்தில் இந்தக் காரியங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ, அவர் நிச்சயம் சுவர்க்கம் செல்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 4758 )
[உண்மையான முஃமின்கள் எல்லா சமுதாய நண்பர்களிடமும் நோய் நலம் விசாரிப்பார்கள்:–]
✍🏻 அன்புள்ளவர்களே! நோயாளிகளை நோயாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர் என்ன சாதி? அவர் என்ன மதம்? அவர் நிறம் என்ன? அவர் மொழி என்ன? அவர் ஏழையா? அவர் பணக்காரரா? அவர் சிறியவரா? அவர் பெரியவரா? என்றெல்லாம் பார்க்கக்கூடாது. இத்தகைய உயர்ந்த பண்பாட்டை உத்தம நபி (ஸல்) அவர்கள் உலகத்தாருக்கு கற்றுத்தருகிறார்கள்.
عن أنس رضي الله عنه قال: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبيَّ صلى الله عليه وسلم فَمَرِضَ، فَأتَاهُ النَّبيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأسِهِ، فَقَالَ لَه: «أسْلِمْ» فَنَظَرَ إِلَى أبِيهِ وَهُوَ عِنْدَهُ؟، فَقَالَ: أَطِعْ أَبَا القَاسِمِ، فَأسْلَمَ، فَخَرَجَ النَّبيُّ صلى الله عليه وسلم وَهُوَ يَقُول: «الحَمْدُ للهِ الَّذِي أنْقَذَهُ منَ النَّارِ». [صحيح] – [رواه البخاري]” . رواه البخاري
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்’ என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ”நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!” என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி 1356)
முஸ்லிம் அல்லாத ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவரையும் சென்று சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் உயர் பண்பாடாகும்.
[உண்மையான முஃமின்கள் நோயாளிகளிடம் மென்மையான நடந்துகொள்வார்கள்:–]
عَنْ عَائِشَةَ ؓ زَوْجِ النَّبِيِّ ﷺ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: يَاعَائِشَةُ! اِنَّ اللهَ رَفِيْقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيُعْطِيْ عَلَي الرِّفْقِ مَا لاَ يُعْطِيْ عَلَي الْعُنْفِ وَمَا لاَ يُعْطِيْ عَلَي مَاسِوَاهُ. رواه مسلم.
ஆயிஷாவே! அல்லாஹுதஆலா (தானும்) மென்மையான சுபாவமும், இரக்கமும் உடையவன். (அடியார்களும் தங்களுக்கிடையே) மென்மை யாகவும், இரக்கமாகவும் பழகுவதை அவன் விரும்புகிறான். அல்லாஹுதஆலா மென்மையில் எந்த கூலி, நன்மை, நோக்கங்களில் வெற்றி முதலியவற்றை கொடுப்பானோ, அவற்றைக் கடினத் தன்மையில் கொடுப்ப தில்லை, (மென்மையைத்தவிர வேறு எதிலும் கொடுப்பதில்லை)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்முல் முஃமினீன் ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5055)
நோயாளியை நலம் விசாரிப்பதாகச் சொல்லிக் கொண்டு ‘வளவள’ வென பேசிக் கொண்டிருப்பதையோ, அவருடைய ஓய்வுக்கும், அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துவதையோ அண்ணலார் தடுத்துள்ளார்கள்.
“நோயாளியிடம் அதிக நேரம் அமராமல் இருப்பது, சத்தமும், கூச்சலும் போடாமல் இருப்பது நபி வழியாகும்”
[உண்மையான முஃமின்கள் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறுவார்கள்:–]
எவரேனும் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பத்தில் சிக்குண்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்” (திர்மிதீ 1602)
عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قاَلَ: مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّيْ اَخَاهُ بِمُصِيْبَةٍ اِلاَّ كَسَاهُ اللهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ. رواه ابن ماجه باب ماجاء في ثواب من عزي مصابا
எந்த ஒரு முஃமின் துன்பத்தில் சிக்கிய முஃமினான சகோதரருக்குப் பொறுமையையும் ஆறுதலையும் கூறி அவரைத் தேற்றுவாரோ அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அவருக்குக் கண்ணியம் என்னும் ஆடையை அணிவிப்பான்” (இப்னுமாஜா 1601)
[உண்மையான முஃமின்கள் கடுமையான நோயின் காரணத்தினால் மரணத்தை விரும்பிடமாட்டார்கள்:–]
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ لاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ، فَإِنْ كَانَ لاَ بُدَّ فَاعِلاً فَلْيَقُلِ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي ”
உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும். புகாரி (5671.)
[உண்மையான முஃமின்கள் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு கலிமாவை நினைவுபடுத்துவார்கள்:–]
«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ»
உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்” (“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள். (முஸ்லிம் 1672.)
[துன்பம் நேரும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை:–]
உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், “அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் “அபூசலமாவைவிட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்துவந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)” என்று கூறினேன். ஆயினும், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி… என்று நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பி, தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்” என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 1674..)
எந்த நோயானாலும் அதற்குக் கருஞ்சீரகத்தில் நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர! – . முஸ்லிம் 4452.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً» صحيح البخاري
5678. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ
நோயாளிக்கு ஆறுதல் கூறுவதுடன், அவர் வசதியற்றவராக இருந்தால், அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதும் நலம் விசாரித்தலில் அடங்கும். அவருடைய நோயின் காரணமாகக் குடும்பம் வறுமையில் இருக்குமேயானால், அவருடைய குடும்பத்தினருக்கும் உதவும்படி இஸ்லாம் அறிவுறுத்துகிறது. நோயாளிக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் இனிய பண்பாடாகும்.
ஆக அல்லாஹ் [ﷻ] நம் அனைவருக்கும் ஈருலகிலும் “நேயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் தந்தருள்வானாக!!! ஆமின்
【 சபதம் எடுங்கள்】
இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் ஆகும் வரைக்கும் ஆரோக்கியத்தோடு வாழுவோன். ஆரோக்கியம் பெற எந்நேரமும் பிரார்திப்பேன் , என்று உறுதி மொழியேற்போமாக! !
ஆக அல்லாஹ் ﷻ அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்.
✍🏻✍🏻 நன்றியுரை:-
எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் ﷻ இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் ﷻ மிக்க அறிந்தவன்.