நாமும் இறை நேசர் ஆகலாம்
அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ ربيع الآخر ] ரபி[ع]உல் ஆகிர் மாதத்தின் முதல் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களை நேர்வழிப்படுத்தவும் அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துக் கூறவும் உலகிற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதர்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைத்தான். இவ்வாறே ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் முதற் கொண்டு அனைத்து நபிமார்களும் இறைவனின் தூதர்களாக அகிலத்தில்னணம தோன்றினார்கள்.ஞஅவர்கள் தங்கள் சமூகத்தாருக்கு சத்தியத்தை இனம் காட்டி அசத்தியத்தை ஒழித்தார்கள். மக்களை இறைவன் அளவில் மீள வைத்தார்கள்.
நபிமார்கள் அனைவருக்கும் முத்திரையாக, அனைத்து நபிமார்களுக்கும் தலைவராக, அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகிலத்தில் அவதரித்தார்கள். அண்ணலாரின் வருகையால் அகிலத்தில் இருள் இன் ஒழிந்தது. ஈமானிய ஒளிக்கீற்று பூமி முழுக்க படர ஆரம்பித்தது. மூட நம்பிக்கைகள் மண்ணில் புதைந்தது. அழகிய கலாச்சாரங்களின் விதைகள் மண்ணில் தூவப்பட்டது. மனிதர்களிடையே இருந்த தீய பழக்கவழக்கங்கள் மங்கியது. அவர்களிடையே நல்ல பழக்கவழக்கங்கள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
அல்லாஹ் யார் என்றும் அவனது ஆற்றல்கள், அவனது வல்லமைகள் என்னவென்றும் உணரப்பட்டது அண்ணல் நபியின் வருகையால் தான். அதுவரை அநியாயக்காரர்களையும், தீயவர்களையும் மட்டுமே சுமந்து வந்த இப்பூமி நல்லோர்களையும் உயர்ந்தவர்களையும் சுமக்க ஆரம்பித்தது பூமான் நபியின் வருகையால் தான். மிருகங்களை விட மோசமாக வாழ்ந்தவர்கள் மனிதர்களாகவும் மனிதப்புனிதர்களாகவும் உலகில் உலா வரத் தொடங்கியது உம்மி நபியின் வருகையால் தான். உயர்ந்த குலம், தாழ்ந்த குலம், என்றும் மேல்ஜாதி, கீழ்ஜாதி, என்றும் ஏற்றத்தாழ்வுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் ஜாதிகளை மறந்து குலம் கோத்திரங்களை மறந்து அனைவரும் உற்ற தோழர்களாக உயிர் கொடுக்கும் நண்பர்களாக மாறியது தூய நபியின் வருகையால் தான்.
நபியின் வருகை உலகத்தின் போக்கையே மாற்றியது என்று சொன்னால் மிகையாகாது. மாநபி (ஸல்) அவர்கள் அகிலத்தில் ஏற்படுத்திய மாற்றங்களின் கனம் அந்தளவு அமைந்திருந்தது.அந்த நபியின் வருகைக்குப் பின்னால் சத்தியத்தை நிலை நிறுத்துவதற்காக மாநபி (ஸல்) அவர்கள் செய்த அந்தத்தூய பணியை அவர்கள் இடத்தில் இருந்து செய்வதற்காக வந்த தியாகிகள் தான் வலிமார்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்கள்.
இறைவனுக்கு கட்டுப்பட்டு, இறைதூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை அனுவளவும் பிசகாமல் பின்பற்றி, தன் வாழ்நாளில் ஒரு நிமிடம் கூட தவற விடாமல் திருக்குர்ஆனின் சீர்மிகு போதனைகளை நெஞ்சில் ஏந்தி இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தூயவர்கள் தான் வலிமார்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்கள்.
இன்றைக்கு ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் மேலே கூறப்பட்ட கண்ணோட்டத்தில் நாம் சிந்தித்தால் வலிமார்களில் முதன்மைப் பெற்றவர்கள் நபி ஸல் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதலின் கீழ் வளர்ந்த வார்த்தெடுக்கப்பட்ட அருமை ஸஹாபாக்கள் தான். வலிமார்களுக்கென்று என்ன அடையாளத்தை என்ன இலக்கணத்தை மார்க்கம் சொல்கிறதோ அவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள் ஸஹாபாக்கள். அதனை அடுத்து அதே இலக்கணங்களோடு உலகில் தோன்றியவர்கள் அனைவரும் வலிமார்கள் தான்.
ஆக இப்போது வலிமார்களின் சிறப்புகளையும், நல்லோர்களின் தொடர்புகள் வைப்போம் நல்லடியாராக வாழ்வோம் பற்றி முழுமையாக அறிந்து வாழ்கையே வணக்கமாக ஆக்கும் முயற்சிகளை இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்….
- பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:-قال الله تعالى ♣
【வலிமார்களின் குணங்களும் & ரப்பு அவர்களுக்கு கொடுக்கும் பரிசுகளும்】
! இறைநேசர்கள் என்றால் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தருகிற நல்லறங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் வெறுப்பைப் பெற்றுத்தருகிற தீய செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொண்டிருப்பார்கள் என்று இமாம் முல்லா அலிகாரீ (ரஹ்) வர்கள் தங்களின் ஷரஹ்ஃபிக்ஹூல் அக்பர் எனும் நூலில் (பக்கம் 95-ல் ] குறிப்பிடுகிறார்கள்..
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63
64] لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (62)
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.(63)
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை – இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும். (அல்குர்ஆன்: 10:62,63,64)
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். [5:56.]
بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ
அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். [3:76.]
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ۖ ۚ
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். 8:2.
و لقوله تعالى : ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. [8:34]
- எனவே எல்லா நபிமார்களும் அவ்லியாக்களே !
- எல்லா ஸஹாபாக்களும் அவ்லியாக்களே !
- நான்கு இமாம்களும் அவ்லியாக்களே !
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
【வலிமார்களின் சிறப்புகள் & அடையாளங்கள்…】
عن سعيد بن جبير، عن ابن عباس قال: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَلَا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ ؟ قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ”
யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்.
حديث إبن ماجه 4109 والإمام أحمد 27601 عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ
உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி (ஸல்) கேட்டார்கள் . ஆம் சொல்லுங்களே என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ் (ஆகிரத்) நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல் சொன்னார்கள் என்பதாக அஸ்மா (ரலி) அறிவிக்கிறார்கள் . [இப்னு மாஜா 4109]
عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ: {أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ} (رواه ابوداود)
உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ்வின் அடியார்களில் இறைத்தூதர்களும் தியாகிகளும் பொறாமைப்படும் அடியார்கள் சிலர் இருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரோ! அவர்கள் யார்? என்று கூறுங்களேன் என்றனர். அதற்கு, அவர்களுக்கிடையே உறவுமுறைகளோ கொடுக்கல் வாங்கலோ இல்லாதிருந்தும் அல்லாஹ்வுக்காகவே ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். (மறுமையில்) பிரகாசமான முகத்துடன் ஒளியிலான மேடைகளில் அவர்கள் இருப்பார்கள். மக்கள் அஞ்சும்போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் துயரப்படும்போது அவர்கள் துயரப்படவுமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அறிந்துக்கொள்! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த அச்சமும் இராது. அவர்கள் துயரப்படவுமாட்டார்கள்’ என்ற இந்த வசனத்தை ஓதினார்கள்.’ (அபூதாவூது 3527)
【வலிமார்களின் அந்தஸ்து…】
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். புகாரி:6502
1) هذا الحديث أصل في باب ولاية الله تعالى وهو أعظم وأصح حديث خاص بأولياء الله تعالى .
2) هذا حديث قدسي كبير الشأن :لما اشتمل عليه من أمور عظام توصل إلى درجة الوِلاية الحقة .
யார் என்னுடைய நேசர்களை பகைத்துக் கொள்கிறார்களோ அவர்களோடு போர் செய்வதாக ரப்புல் ஆலமீன் எச்சரிக்கிறான்.
நஃபிலான வணக்கங்களால் ஒரு மனிதன்எப்படிப்பட்ட இறைநெருக்கத்தை பெற முடியும்.என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
இறைநேசர்களை பகைத்துக்கொள்பவரோடு அல்லாஹ் போரிடுகிறான் என்ற நபிமொழிக்கு விளக்கம் கூறுகிற இபுனு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் இந்தவாசகம் இறைநேசர்களை நேசிப்பவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்ற கருத்தை தருவதாக குறிப்பிடுகிறார்கள்.
கட்டாயக்கடமைகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகு மேலதிகமாக வணக்க வழிபாடுகளில் தொடாந்து ஈடுபட்டு வந்தால் அது இறைவனின் நெருக்கத்தை பெற்றுத் தருகிறது என்ற கருத்தை இந்நபிமொழி குறிப்பிடுகிறது.இது ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத விஷயம் அல்ல. முதலாளிக்கு விசுவாசமாகவும் அக்கறையாக சற்று அதிகப்படியாக உழைக்கிற ஊழியர் முதலாளிக்கு நெருக்கமாகி விடுவதும், அவரது அந்த நெருக்கத்தின் விளைவாக மற்றவர்களுக்கு கிடைக்காத சில சலுகைகளையும் மரியாதையையும் அவர் பெறுவதும் எதார்த்தமே!
இது போலவே இறைவனுக்குப் பணிந்து அவனிட்ட கட்டளைகளை முழுமனதோடு நிறைவேற்றி இதயச்சுத்தியோடு வாழ்பவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவாகளாக இறைவனை நேசிப்பவாகளாக இறைவனால் நேசிக்கப்படுகிறவாகளாக ஆகிறார்கள். அப்போது பல புதிய சிறப்புக்களை அவர்கள் பெறுகிறார்கள். இந்நபி மொழியை விளக்கிச் சொல்வதற்கு தத்துவப் பேரறிஞர் ஜலாலுத்தீன் ரூமி பயன்படுத்தும் உவமை மிக அழகானது.
இரும்புக் கொல்லர்கள் இரும்பை நெருப்பில் போட்டு காய்ச்சுகிற போது நெருப்பில் தோயத்தோய இரும்பு நெருப்பு கட்டியாக மாறி விடுகிறது. இரும்பு இரும்பாகவே இருக்கிறது. நெருப்பு நெருப்புகவே இருக்கிறது ஆனாலும் தன்னில் திழைத்துக்கிடக்கிற இரும்பை நெருப்பு தன்னுடையதாக்கிக் கொள்வது போலவே அல்லாஹ் தன்னில் ஆவமும் அச்சமும் கொண்டு தோய்ந்து விடுகிற மனிதாகளுக்கு தனது நெருக்கத்தை வழங்குகிறான். அதன்பயனாக சில சந்தர்ப்பங்களில் ஆச்சாயமான செயல்ககள் அவர்களிடமிருந்து வெளிப்படலாம். நன்றாக கவனிக்க வேண்டும். இறைநேசர் எனபர் இறைவனின் நெருக்கத்தை பெற்றார் என்பதுதான் பெரிதே தவிர அவர் அற்புதங்களை செய்யும் ஆற்றல் பெற்றாரா? என்பது முக்கியமல்ல.
இஸ்லாமிய அடிப்படையில் இறை நேசராவது சித்தராவது போலவோ முனிவராவது போலவோ கிருத்தவத்தில் புனிதவராவது போலவோ அல்ல. குடும்பத்தை துறந்து வாழவ்வதோ காடு மலைகளில் கடும்தவம் புரிவதோ இஸ்லாம் குறிப்பிடும் இறைநேசத்திற்கு தேவையற்றவை. தூய எண்ணத்தோடு மார்க்கத்ததை பின்பற்றி வாழ்ந்து அல்லாஹ்வே வாழ்வில் மிகமுக்கியமானவன் என்ற உணர்வை கனவிலும், நினைவிலும் கைவரப்பெறுபவர் எவரோ அவரே இஸ்லாமிய பார்வையில் இறைநேசராகிவிடுவார்.
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் உம்மத்தில் உள்ள வலிமார்கள் ஏனைய நபிமார்களின் உம்மத்தில் உள்ள வலிமார்களை விடவும் உயர்வாக வைத்துள்ளான். இதை பின்வரும் அல்குர்ஆன் ஆயத்தின் மூலம் எங்கள் செய்கு நாயகம் அவர்கள் விளக்கிக் கூறினார்கள்
كُنْتُمْ خَيْرَاُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ “மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்” (ஸூரா ஆல இம்ரான்: 110)
ثلاث من حفظهن فهو وليي حقا ، ومن ضيعهن فهو عدوي حقا : الصلاة ، والصيام ، والجنابة
தொழுகை. நோன்பு. கடமையான குளிப்பு. ஆகிய மூன்று விஷயத்தை யார் பேணி பாதுகாத்தாரோ அவர் என்னுடைய நேசர். யார் அதை வீணாக்கினாரோ .அவர் என்னுடைய விரோதி. என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [நூல். கன்சுல் உம்மால். பாகம்.1. பக்கம். 44]
ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் நடத்தி வந்த தவச்சாலையில் மாணவராக ஒருவர் வந்து சேர்ந்தார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் இருந்த அவர் திடீரென ஒரு நாள் நான் போகிறேன் என்று கூறிய போது ஏன் போகிறீர்கள் என ஷைகு அவர்கள் கேட்க.. இத்தனை வருடங்களில் உங்களிடம் ஒரு கராமத்தைக் கூட நான் பார்க்கவில்லை. என்று அவர் தயங்கிய படி கூறினார். அப்போது ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் கூறினார்கள். என்னோடு தங்கியிருந்த இத்தனை வருடங்களில் ஏதாவது ஒரு நாளில் இமாம், ஜமாஅத்தை நான் விட்டதையோ,அல்லது தக்பீர் தஹ்ரீமா எனக்கு தவறியதையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க, இல்லை என்று அவர் பதில் கூறினார். அப்போது ஷைகு அவர்கள் இதை விட பெரிய கராமத் என்ன வேண்டும் என்றார்களாம்.
நாகூர் ஷாகுல் ஹமீது (ரஹ்) அவர்கள் தன் வளர்ப்பு மகனுடன் மூன்று நாள் பேச வில்லை. காரணம் அவர் ஒரே ஒரு வக்தில் தக்பீர் தஹ்ரீமா தவற விட்டார் என்பதுக்காக .
【வலிமார்களைப் பற்றி பெரியோர்களின் முது மொழிகள்.…】
” வலியுல்லாஹவை நேசிக்கின்றவன் , அவர்களது திருச்சன்னிதானத்தில் இருக்கையில் அவர்களை மறந்து ஒரு வினாடியேனும் இருக்காதே ! ஜாக்கிரதை! ” என்று ஷெய்கு ஸஃதீ ஷீறாஸி رضي الله عنه அவர்கள் ‘போஸ்தானில்’ எச்சரித்துள்ளார்கள் .
“உயிரோடு இருக்கையிலோ ! உலகத்தை விட்டு மறைந்த பின்னரோ அல்லாஹ்வின் வலி இடத்தில் சொற்ப நேரமாயினும் இருப்பது அமல்களில் மேலானது ” என்று ஸாலிஹீன்களில் சிலருக்கு நபி பெருமானார் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் கனவில் காட்சி அளித்து கூறியுள்ளார்கள் என்பதாக அல்லாமா ஷஹாபுத்தீன் இப்னு ஷுஜாயி رضي الله عنه அவர்கள்’ரிஸாலா – இதுபாத்து – கராமாத்தில் – அவ்லியா ‘ நூலில் , 232 – வது பக்கத்தில் சொல்லியுள்ளார்கள் .
மேலும் இதை ‘ஹதீகத்துன் -னதிய்யா – பீ ஷரஹில் தரீக்கில் முஹம்மதிய்யா ‘ என்ற நூலின் 2-ஆம் பாகம் , 81-வது பக்கத்தில் அல் இமாம் ஷெய்கு அப்துல் கனி நாபிலிஸி رضي الله عنه அவர்கள் அறிவித்துள்ளார்கள் .
【வலிமார்களோடு அல்லாஹ் [ﷻ] இருக்கிறான்.】
வலிமார்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வோடு தொடர்பில் இருந்தார்கள் அதனால் அல்லாஹ் அவர்களோடு இருந்தான்..
فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْن
நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். 2:152.
عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ يَقُولُ اللهُ تَعَالي: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فيِ مَلأٍ خَيْرٍ مِّنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعاً وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعاً تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعاً وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً. رواه البخاري باب قول الله تعالي ويحذركم الله نفسه:٦/٢٦٩٤, طبع دار ابن كثير بيروت
என் அடியான் என்னைப்பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே அவனுடன் நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும் போது நான் அவனுடன் இருக்கிறேன், அவன் என்னை (தன்) மனதில் நினைத்தால் நானும் அவனை மனதில் நினைக்கிறேன், என்னைப் பற்றிச் சபையில் நினைவு கூர்ந்தால் அச்சபையைவிடச் சிறந்த மலக்குகளின் சபையில் நானும் அவனைப் பற்றி நினைவு கூறுகிறேன், என் அடியான் என் பக்கம் ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் ஒரு முழம் அவன் பக்கம் நெருங்கி வருகிறேன், அவன் என் பக்கம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்குகிறேன், அவன் என் பக்கம் நடந்து வந்தால், நான் அவன் பக்கம் ஓடி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 7536 )
ஒருவர் எந்த அளவு மிக அதிகமாக நல் அமல்கள் மூலம் என் நெருக்கத்தைப் பெறுகிறாரோ, அதைவிட அதிகமாக எனது கிருபை, உதவியுடன் அவர் பக்கம் நான் கவனம் செலுத்துகிறேன் (கருணை காட்டுகிறேன்) என்பதாம்.
【நபிமார்கள், வலிமார்கள் உயிரோடு இருக்கிறார்களா?】
ஆம், நபிமார்கள், வலிமார்கள் அவர்களின் கப்ருகளில் இன்றும் ஹயாத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ
*இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். [2:154]
وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ
*அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். [3:169]
* நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது. [மிஷ்காத் – 120 ]
மவ்த் என்றால் என்ன? இஸ்லாமியத்தில் மவ்த் என்பது நிரந்தர இல்லாமையைக் குறிப்பதல்ல. மாறாக, அழியக்கூடிய இந்த உலகத்தைவிட்டு அழியாத மறுஉலகிற்கு இடம்பெயர்ந்து செல்லுதல் என்பததுதான் ஆழமான கொள்கையாகும். அதனால்தான், இறந்துவிட்ட ஒருவரின் மவ்த் செய்தியை நாம் சொல்லுகின்றபோது. ‘தாருல் ஃபனாவை விட்டும் தருல் பகாவிற்கு’ (அழியக்கூடிய உலகைவிட்டும் அழியாத உலகிற்கு) சென்றுவிட்டார் என்கிறோம். எனவே, மவ்த் என்பது ஒரு வாழ்க்கையின் முடிவும் மற்றொரு வாழ்க்கையின் தொடக்கமும் ஆகும். மவ்த் நிரந்தர இல்லாமையைக் குறிப்பதல்ல என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஆழமாக தங்களது நெஞ்சிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்.
【அவர்களின் வாழ்வு உன்னதமானது…】
எந்த அமலையும் அது சின்னது தானே என எண்ணி கை விடமாட்டாங்க . எந்த தீயதையும் அது மக்ரூஹ தானே என எண்ணி செய்ய மாட்டாங்க .
【நபி[வலி]மார்களை லேசாக கருதாதே.…】
நம் முன்னால் வாழ்ந்த சமுதாய மக்கள் அவர்களுக்கு வந்த இறைத்தூதரை நாமும் மனிதர்கள் தாம் ,அவர்களும் மனிதர்கள் தாம் எனவும் ,நாமும் உண்ணுகின்றோம் , உறங்குகின்றோம் . அவர்களும் உண்ணுகிறார்கள் , உறங்குகிறார்கள் எனவும் சமப்படுத்தி தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள் . அவர்களுக்கும் , தங்களுக்கும் மலை போல வித்தியாசங்கள் உண்டாகி இருந்ததை அவர்கள் குருட்டுத் தன்மையால் அறிந்திருக்கவில்லை ..
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰٓى اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا
மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. 17:94
مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ
(தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார். 23:33
وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَاْكُلُ الطَّعَامَ وَيَمْشِىْ فِى الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?” 25:7
قَالُوْا مَاۤ اَنْـتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَىْءٍۙ اِنْ اَنْـتُمْ اِلَّا تَكْذِبُوْنَ
(அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள். 36:15
இவ்வசனங்களிலும், 21:3, 23:47, 26:154, 26:186 ஆகிய வசனங்களிலும் இது தொடர்பாக அல்லாஹ் பேசுகிறான்.
【நபி[வலி]மார்களை லேசாக கருதியவனின் நிலை…】
اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِيْنَ مَرَّةً فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் – நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் – இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.9:80.
وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள். 9:84.
நபிமார்களை சாதரணமாக எண்ணி அவர்களை பின்பற்றாமல் வாழ்ந்தவர்களுக்கு இந்த நிலை என்றால் . அது போல நாமும் வலிமார்களை சாதரணவர்களாக பார்த்தால் நம் நிலை என்னவாகும். என்பதை பாருங்கள்.
பாருங்கள் ! குளவி , தேனீ இந்த இரு ஜந்துக்களும் ஒரே இடத்திலிருந்தே – அதாவது மலர்களிலிருந்தே மதுவை அருந்துகின்றன . ஆனால் குளவியிலிருந்து விஷ எச்சிலும் , தேனீயிலிருந்து மதுரமான தேனும் உற்பத்தியாகின்றன .
இருவகை மான்கள் புல்லையும் , தண்ணீரையும் தான் அருந்துகின்றன . ஒரு வகையிலிருந்து வெறும் புழுக்கையும் , விட்டையும் மற்ற வகையிலிருந்து கஸ்தூரியும் உண்டாக்கவில்லையா ?
இருவித நாணல்கள் ஆற்றங்கரையிலிருந்து ஒரே வித தண்ணீரை தான் அருந்துகின்றன . அவற்றுள் ஒன்று மூங்கிலாகின்றது . மற்றது இன்பரசத்துடன் கரும்பாகின்றது .இவ்விதம் எத்தனையோ உதாரணங்கள் கூறலாம் .
இன்னும் பாருங்கள் ! ஒருவன் உண்ணுகின்றான் . அவனில் நின்று வெறும் அசுத்தமே உருவாகின்றது . மற்றோருவரும் உண்ணுகிறார் . அது முற்றிலும் இறைவனின் ஜோதியாக (நூர்) மாறுகின்றது . தீயவன் உண்ணுகின்றான் . அதிலிருந்து கோபம் , பொறாமை முதலியன உண்டாகின்றது . நல்லவர் உண்ணுகிறார் . அதன் மூலம் இறை ஜோதிப் பிரகாசமும் , ஞானமும் ,தெய்வீகக் காதலும் உண்டாகின்றன .
நற்கருமங்கள் புரியும் நல்லவர் சுத்தமான ,வளமான நிலமாக இருக்கிறார் . தீய காரியங்களில் தலையிடும் கெட்டவர் உபயோகமற்ற உவர் நிலமாக இருக்கிறார் . முந்தியவர் பரிசுத்தவானாக இருக்கிறார் . பிந்தியவர் துஷ்டராக , அசுரராக இருக்கின்றார் . தோற்றத்தில் அவ்விருவருடைய உருவமும் ஒன்று போலவே ஓத்திருந்த போதிலும் என்ன ?
மேலும் பாருங்கள் ! மதுரமான நல்ல தண்ணீரும் , கரிப்பான உப்புத் தண்ணீரும் பார்வைக்கு ஒன்று போலவே இருக்கின்றன . ஆனால் , நாவில் வைத்து ருசி பார்த்தற்கப்பால் தான் இரண்டிற்கும் வித்தியாசம் தெரிய வருகின்றது . அனுபவித்து அறிபவனைத் தவிர வேறு எவரும் அந்த நீரின் தன்மையை அறிய மாட்டான் . அப்படிப்பட்ட அனுபவசாலிகளையே நீ தேடி அடைதல் வேண்டும் . ஏனெனில் , அவர்களே கசப்பு நீரையும் , மதுர நீரையும் பிரித்தறிவார்கள் . பதார்த்தங்களின் சுவையை ருசித்தறிபவரைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் . தேனையும், மெழுகையும் எப்படி வேறுபடுத்தி அறிய முடியும் ? ” .
【வலிமார்கள், வலிமார்களாக ஆனது எப்படி? நாமும் வலிமார்களாக ஆக என்ன செய்வது ? 】
கீழ் கண்ட இறைவசனங்களின் படி கொஞ்சம் கூட பிழையில்லாமல் வாழ்ந்தவர்கள் தாம் வலிமார்கள்.
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ۖ ۚ
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். 8:2.
الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;) 3:191.
فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ ۚؕ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. 4:103.
الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான் 3:134
لَـيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். 5:93.
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ ۚ
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. 7:55.
الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.10:63
【இறை நேசர்களின் வாழ்வினிலிருந்து படிப்பினை.】
உண்மையான முஃமின்களைப் பொருத்தவரை அவர்களின் வாழ்வின் நோக்கம் இறைப்பொருத்தத்தைப் பெறுவது தான் எனவே நம்முடைய முன்மாதிரிகளாக இறை நேசர்கள் திகழ்கிறார்கள்….
மனிதன் படைக்கப் பட்ட நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத் தான் என படைப்பின் தத்துவத்தை மனிதகுலத்திற்கு இறை நேசர்கள் ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
【வலிமார்கள் என்ன செய்தார்கள்.? 】
இந்த நல்லடியார்கள் நமக்குஇறையச்சத்தையும் இறைத்தூதரின் மீது பற்றையும் மார்க்கத்தின் மீது பிடிப்பையும் உருவாக்கினார்கள். தாம் வாழ்ந்த காலத்தில் மக்களை நல்வழிப்டுத்த அதிக முயற்சி செய்தார்கள்.
- * மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள்.
- * முஸ்லிம்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லிக் கொடுத்தார்கள்.
- * அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற வழி காட்டினார்கள்.
- * சமூக சீர்திருத்தப் பணிகள் பலவற்றை திறம்படச் செய்தார்கள்.
- * அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள்.
- * அக்கிரமச் சக்திகளுக்கு எதிராக போராடினார்கள்.
【இறைநேசச் செல்வர்களின் வரலாற்றை வாசிப்பது 】
அல்குர்ஆனில் அல்லாஹ் சுமார் 1000 வசனங்களின் மூலம் முன்னோர்களான நபிமார்கள், அவர் தம் சமுதாயத்தினர் வரலாறு குறித்தும், ஸாலிஹீன்களான இறைநேசர்கள் குறித்தும் எடுத்துக் கூறுகின்றான்.
சில சமயம் வரலாற்றை துவங்குகிற போதும், சில நேரம் வரலாற்றை முடிக்கிற போதும் திண்ணமாக, இவ் வரலாற்றில் அறிவுடையோருக்கு நல்ல பல சான்றுகளும், படிப்பினைகளும் இருப்பதாகக் கூறுகின்றான்.
”கஹ்ஃப் குகை வாசிகள், மர்யம் அலைஹிஸ்ஸலாம், லுக்மான் அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவையில் இருந்த நல்லடியார், மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார், துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம், யாஸீன் சூராவில் கூறப்படும் இளைஞரான இறைநேசர், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா அலைஹிஸ்ஸலாம், சூரா மஆரிஜில் கூறப்படும் அஸ்ஹாபுல் உஃக்தூத்” என ஈமானில் ஏற்றத்தையும் தாக்கத்தையும் உண்டு பண்ணுகிற இறைநேசர்களின் வாழ்க்கையை அல்லாஹ் குர்ஆனில் கூறி வாசிக்கத் தூண்டுகின்றான்.
இறைநேசர்களின் வரலாறுகளை வாசிப்பதால் மாசடைந்த நம் இதயங்கள் தூய்மை பெறுகின்றன.
ஈமானின் நிலை உயர்வை அடைகின்றன. நல் அமல்களின் தரம் ஏற்றம் பெறுகின்றன.
【இறை நேசர்களால் இந்த சமுதாயம் பெற்ற நன்மைகள் என்ன? 】
பொதுவாக இறைநேசர்களின் மீதான பற்றையும் மரியாதையையும் நினைவு கூர்ந்து அவர்களுடைய அறிவுரைகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் தங்கள் மகனுக்கு செய்த உபதேசம் உலகம் முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான
உபதேசமாகும். அல்லாஹ்வை மட்டும் வணங்கு, அல்லாஹ்விற்கு இணைவைக்காதே , சகமனிதர்களைப் பார்த்து முகத்தை திருப்பாதே, பெருமை அடிக்காதே, கர்வம் கொள்ளாதே ,சப்தத்தை உயர்த்தாதே, நடுநிலையை பேணு. இதில் எந்த ஒன்று எவரிடத்தில் இல்லையோ அவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான், மாறாக வெறுப்பான் என்று முத்தாய்ப்பான உபதேசங்களைக் கூறினார்கள்.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18)
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். 31:18
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ (19)
”நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடை பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்). 31:19
மனிதர்களில் சிலர் இப்படியும் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதை நன்கறிந்த இறைவன் தன் தூதர் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக அவர்களின் மகனுக்கு மேற்காணும் அறிவுரைகளை கூறச் செய்து அதை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளிய இறுதி வேதம் திருமறைக்குர்ஆனிலும் இடம் பெறச் செய்தான். .
இங்கே ஒரு தகவலை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்களில் மிகச் சிறந்தவர் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) அதன் பிறகு மற்ற நபிமார்கள் அதன் பிறகு நமது நபியின் தோழர்களான சஹாபாக்கள் அதன் பிறகு இறைநேசர்கள் என்பதே சிறப்பிற்குரிய மனிதர்களைப் பற்றிய நமது கொள்கையாகும். அந்த அடிப்படையில் நபித்தோழர்களான சஹாபாக்கள் அனைவரும் மிக உயர்ந்த இறைநேசர்கள் ஆவர். நபித்தோழர்களுக்குப் பின் வந்த எந்த இறைநேசரும் சஹாபாக்களின் அந்தஸ்தஸ்திற்கு ஈடானவர்கள் அல்ல.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்களிடம் முஆவியா (ரலி) சிறந்தவரா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) சிறந்தவரா என்று கேட்கப்பட்டது . இமாம் ஷாபி (ரஹ்) கூறினார். முஆவியா (ரலி) யின் குதிரையின் குளம்படி மண்ணுக்கு கூட உமர் பின் அப்துல் அஜீஸ் ஈடாக முடியாது.
எனவே அவ்லியாக்கள் எனப்படும் இறைநேசர்களின் அந்தஸ்து நபித்தோழர்களின் அந்தஸ்திற்கு கீழ் தான் என்பதையும், இறைநேசர்கள் தங்களுடைய மார்க்க் சமூகப் பணியினால் தான் சமூகத்தின் கவனத்திற்கு வந்தார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. இந்த நல்லடியார்கள் நமக்கு இறையச்சத்தையும் இறைத்தூதரின் மீது பற்றையும் மார்க்கத்தின் மீது பிடிப்பையும் உருவாக்கினாகள். தாம் வாழ்ந்த காலத்தில் மக்களை நல்வழிப்படுத்த அதிக முயற்சி செய்தார்கள்.
أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: مَرُّوا بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ» ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ: «وَجَبَتْ» فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا وَجَبَتْ؟ قَالَ: «هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا، فَوَجَبَتْ لَهُ الجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا، فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ»
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது என்றார்கள்.
மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது எனக் கூறினார்கள். உமர் (ரலி) எது உறுதியாகி விட்டது? எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள் எனக் கூறினார்கள். [புகாரி1367. ].
【வலிமார்கள் என்ற இறை நேசர்களின் வல்லமை.. 】
இறை நேசர்களான வலிமார்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களைக் கொடுக்கின்றான். அதற்கு கராமத் என்று சொல்லப்படும். இவ்வாறு அல்லாஹ்வினால் வழங்கப்படும் வலிமார்களின் கராமத்தை கொள்கை தவறியவர்களே மறுக்கிறார்கள். ஆகவே கராமத் உண்மை என நம்பிக்கை கொள்வது முஸ்லிமின் மீது அவசியமாகும்.
அல்லாஹ் அவனை நேசம் கொள்கின்ற இறை நேசர்களுக்கு அற்புதங்களைக் கொடுக்கிறான். அதன் மூலம் பல அரிய நிகழ்வுகளும், அசாத்தியமான நிகழ்வுகளும் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. விஷத்தை உண்டும் சாகாத நிலை, மரணித்தவரை துஆச் செய்து எழுப்பும் நிலை, மயக்க மருந்தில்லா அறுவைச் சிகிச்சை போன்ற அசாத்தியாமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
அபூ தர்தா ரழி அவர்களிடம் வேலை செய்து வந்த பணிப்பெண் திடீரென ஒருநாள் நீங்கள் மனிதரா அல்லது வேறு இனத்தைச் சார்ந்தவரா என தனது எஜமானரான அபூதர்தா ரழி அவர்களிடம் கேட்டாள். இக்கேள்வி மூலம் ஆச்சரியம் அடைந்த அபூதர்தா ரழி அவர்கள் ஏம்மா இவ்வாறு கேட்கிறாய்? எனக் கேட்டார்கள். அதற்கவள் நான் உங்களுக்கு நாற்பது நாட்கள் விஷம் கலந்த உணவைப் பரிமாறுகிறேன். அதனால் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையே அதனால் தான் நீங்கள் மனிதரா? இல்லையா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது எனக் கூறினாள்.
இதைக் கேட்ட அபூதர்தா ரழி அவர்கள் நான் காலையிலும்! மாலையிலும்!!
بسم الله الذي لا يضر مع اسمه شيئ فى الارض ولا في السماء وهو السميع العليم
என்ற துஆவை நான் ஓதி வருகிறேன். அதனால் இந்த உலகில் எவ்வித தீங்கும் ஏற்படாது என பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இறை நல்லடியார்களுக்கு மட்டுமே இந்நிலை ஏற்படுகிறது. அதனால் தான் தாக்கும் தன்மை கொண்ட விஷத்தாலும் அவர்களைத் தாக்க முடியவில்லை.
உடலில் ஏற்பட்ட ஏதாவது நோயினால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் போது அதற்கு மயக்க மருந்து கொடுப்பது மருத்துவரின் பணியாகும். ஆனால் அந்த மயக்க மருந்தின் தேவையும் இறை நல்லடியார்களுக்கு இருப்பதில்லை.
பனூ உமய்யாக்களின் ஆறாவது கலீபாவான வலீத் இப்னு அப்துல் மலிக் அவர்கள் உர்வதுப்னு ஜுபைர் ரஹ் அவர்களை விருந்திற்கு அழைப்புக் கொடுத்தார்கள். சென்ற இடத்தில் உர்வதுப்னு ஜுபைர் அவர்களின் காலில் ஒரு நோய் ஏற்பட்டது. அதனால் அவர்களின் காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அறுவைச் சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல மயக்க மருந்து எனக்கு அவசியமில்லை. நான் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எனது காலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுங்கள் எனக் கூறினார்கள். அவர்கள் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருக்கும் போது அவர்களின் கால் அகற்றப்பட்டது.
இது போன்ற அசாத்திய நிகழ்வுகள் வலிமார்கள் என்ற இறை நேசர்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஏனெனில் அல்லாஹ்வை அவர்கள் நினைப்பதில் பேரானந்தம் அடைகிறார்கள். அப்பேரானந்தம் இது போன்ற வேதனைகளை மறைத்து விடுகிறது.
இறந்த மனிதன் மீண்டும் உயிர் பெற சாத்தியமில்லை. ஆனால் இறை நேசர்களான வலிமார்கள் அல்லாஹ்விடம் கையேந்தும் போது மரணிதவர் கூட எழும்பி விடுகிறார்.
அனஸ் ரழி அவர்களும் மற்றும் சில நபித்தோழர்கள் ஒரு நோயுண்ட வாலிபரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது அவ்வாலிபருக்கு அல்லாஹ் மரணத்தைக் கொடுத்து விட்டான். அருகிலிருந்த நபித்தோழர்கள் அவ்வாலிபரின் கண்களை கசக்கி மூடிவிட்டு, அவரின் ஆடையைக் கொண்டு அவரை போர்திவிட்டு வந்தார்கள்.
பிறகு அவ்வாலிபரின் தாயாரிடம் உங்கள் மகன் இறந்து விட்டார் என்ற செய்தியைச் சொன்னதும், “அல்லாஹ்வே உன்னையே நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். உனது தூதருக்காக எனது ஊரை விட்டு புலம் பெயர்ந்திருக்கிறேன். எனது மகனின் மரணம் எனக்கு மிகப்பெரும் இழப்பாகிவிட்டது. எனவே எனது துயரத்தைப் போக்குவாயாக” என வருத்தமுடன் இரு கரம் ஏந்தி துஆச் செய்தாள். அதன் பிறகு அவரின் முகத்தில் மூடியிருந்த துணி திறக்கப்பட்டது. அவ்வாலிபர் உயிர்ப் பெற்றெழுந்தார். அவர் எங்களுடன் உணவருந்தினார். நாங்களும் உணவருந்தினோம் என அனஸ் ரழி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது போன்ற மறுக்கப்படா துஆவிற்கு சொந்தக்காரர்களாக வலிமார்கள் இருக்கின்றனர். எனவே இது போன்ற நல்லவர்களுக்கு வழங்கப்படும் அற்புதங்களை நம்பிக்கை கொள்ளும் நல்லவர்களாக நம்மையும், நம் சந்ததியினரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன்!
【முக்கிய வலிமார்கள் சிலரின் வாழ்க்கைக் குறிப்பும் அவர்கள் ஆற்றிய சேவைகளும். 】
【1) முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ்). 】
வலிமார்களுக்கெல்லாம் தலைவர் என்று போற்றப்படும் அப்துல்காதிர் ஜீலானி ( ரஹ்) அவர்கள் அபூசாலிஹ் ஸய்யித் மூஸா ( ரஹ்) உம்முல்கைர் ஃபாத்திமா ( ரஹ்) தம்பதிகளின் திருமகனாக ஹிஜ்ரி 470 ரமளான் பிறை 1. கி.பி 1078 மார்ச் 19 ம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் ஜீலான் என்ற ஊரில் பிறந்தார்கள்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்தார்கள். 9 வயதில் குர்ஆனை மனனம் செய்தார்கள். பிறகு மேற்படிப்புக்காக பக்தாத் சென்றார்கள்.
பக்தாத் சென்ற கௌசுல் அஃலம் ( ரஹ்) அவர்கள் பல்லாண்டுகள் ஹதீஸ். பிக்ஹ் கலைகளை கற்றுத் தேர்ந்தார்கள். பின்பு இறைஞானக் கல்வியை கற்க விரும்பி ஷைகு என்னும் குருவை தேடி அழைந்தார்கள். இறுதியில் அபுல்கைர் ஹம்மாத் ( ரலி) அவர்களின் சீடராகி மூன்று வருடங்கள் இறைஞான கல்வி கற்றார்கள்.
அவருடைய காலத்தில் அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உலகில் முஸ்லிம்கள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்த காலம் அது. கல்வி, கலை, அறிவியல்,மருத்துவம். என முக்கியத்துறைகள் அனைத்திலும் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினார்கள். மற்றவர்கள் தமது தேவைகளுக்காக முஸ்லிம் நாடுகளையே நம்பியிருந்த காலம் அது.
அங்கே இரண்டு வகையான தீமைகள் பெருகி வந்தன.
- அறிவியல் துறையில் முன்னேறிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மார்க்கத்தின் உயிரோட்டமான ஆன்மீக சிந்தனைகளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருந்தார்கள். படிப்பறிவு மேலோங்கி பக்தி குறைந்து கொண்டிருந்த்து.
- ஆன்மீக வாதிகள் என்று அறியப்பட்டோர் ஷரீஅத்தின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த இரண்டு சூழ்நிலைகளையும் அடியோடு மாற்றினார் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)
ஞானம் மிக்க அவரது உபதேசங்கள் மனித உள்ளங்களை தட்டி எழுப்பி மார்க்கத்தின் பாதைக்கு அழைத்து வந்தன.கணக்கிலடங்காதோர் அவரால் நேர் வழி பெற்றனர். அவரது உரையை கேட்க ஒரு சமயம் பக்தாது நகருக்கு 90 ஆயிரம் பேர் திரண்டதாக வரலாறு சொல்கிறது. அந்த சபையை பற்றி ஆச்சரியமூட்டும் வகையில் பேசப்படுகின்றன.ஏராளமானோர் அவரது பேச்சில் திருந்தினர்.அதனால் மக்கள் அவரை பேராசானாக போற்றினர். ஒரு முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மனப் போக்கை மார்க்கத்தை நோக்கி திருப்பியதால் தான் அவர் முஹ்யுத்தீன் என்று அழைக்கப்பட்டார்.
【சிக்கலுக்கு தீர்வு தந்த செம்மல்:】
மாபெரும் மாமேதைகளால் கூட தீர்வு காண முடியாத பல சிக்கலான சட்டப்பிரச்சனைகளுக்கும் மகான் முஹ்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி ( ரஹ்) அவர்கள் எளிதாக தீர்ப்பு வழங்கும் திறன் பெற்றிருந்தார்கள்.
ஒரு மனிதர் விநோதமான சத்தியம் ஒன்றைச் செய்துவிட்டார். உலகிலே எவரும் செய்ய முடியாத வணக்கத்தை நான் நிறைவேற்றத் தவறினால் என் மனைவியை மூன்று தலாக் சொன்னவனாவேன். என்பதே அந்த சத்தியம். இது சாத்தியமாகாது எனவே அவர் மனைவி முத்தலாக்தான் என்று எல்லா மேதைகளும் தீர்ப்புக் கூறினார்கள். கடைசியாக இம்மாமேதையிடம் இக்கேள்வி வந்தது. இதில் ஏன் தடுமாற்றம். அந்த மனிதனை புனித மிகு பைத்துல்லாஹ்வை தன்னந்தனியாக 7 சுற்று தவாஃப் செய்யச் சொல்லுங்கள். அவரது சத்தியம் நிறைவேறும் மனைவியும் தலாக் ஆகமாட்டாள் என்று உடனே பதில் சொன்னார்கள். இந்த பதிலைக் கேட்டு இராக்கின் உலமாக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். ( தவாப் செய்ய எப்போதும் நெருக்கடி இருக்கும் தன்னந்தனியாக தவாஃப் செய்வது என்பது யாரும் செய்யாத அமலாகும்.)
இவர்கள் தனது 91 ம் வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 கி.பி 1166 பிப்ரவரி 14 அன்று திங்கட்கிழமை பக்தாதில் வஃபாத் ஆனார்கள்.
【2) புளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள்.】
வரலாற்று ஆசிரியர்களால்,ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்..
فضيل بن عياض، أبو على، أحد الأقطاب، ولد بخراسان، بكورة أبيورد، وقدم إلى الكوفة وهو كبير، فسمع بها الحديث. ثم تعبد وانتقل إلى مكة، وجاور بها، إلى أن مات، سنة سبع وثمانين ومائة. وأفرد ابن الجوزى ترجمته بالتأليف.
وكان شاطراً، يقطع الطريق بين أبيورد وسرخس. وسبب توبته أنه كان يعشق جارية، فبينما هو ذات يوم يرتقى الجدران إليها، إذ سمع تالياً يتلو: )ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق( فقال: ” بلى!. والله يارب! قد آن ” . فرجع، فآواه الليل إلى خربة، فإذا فيها رفقة، فقال بعضهم: ” نرتحل ” . وقال بعضهم: ” حتى نصبح، فان فضيلا على الطريق ” . فآمنهم، وبات معهم.
ورجع إلى خربة فبات بها فسمع سفارا يقولون: خذوا حذركم إن فضيلا أمامكم يقطع الطريق، فأمنهم واستمر على توبته حتى كان منه ما كان من السيادة والعبادة والزهادة، ثم صار علما يقتدى به ويهتدى بكلامه وفعاله
ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள். தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள். ஆனால் ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள்.
[பயங்கரத் திருடர்]
தாரீகி திமிஷ்க் எனும் நூலின் ஓர் அறிவிப்பில், இவர்களைப் பற்றி ஒரு நிகழ்வு பதியப்பட்டுள்ளது.
ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.
இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம்.
எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம்.
எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். என்று பேசிக் கொண்டார்கள்.
தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார்.
அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார்
வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள்
இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.
ஆம்! நாம் மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே!
ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார்.
காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ? என்றார்கள்
நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல். இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். [நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48, பக்கம் – 384]
என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.
இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்
ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.
திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.
اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْؕ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?
எனும் 57-ம் அத்தியாயத்தின் 16- ம் வசனத்தை கேட்டதும்
இதோ வந்துவிட்டேன் என் இறைவா?
இதோ உருகிவிட்டேன் என் இறைவா?
இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா?
என் பாவங்களை மன்னித்துவிடு! என் – குற்றங்களை பொறுத்து விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா,ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார், [நூல்- ஸியரு அஃலாமின் நுபலா, பாகம்-13, பக்கம்-59எண்-3793]
【3) காஜா முயீனுத்தீன் சிஷ்தி ( ரஹ்).】
குத்புல் ஹிந்த் ( இந்தியாவின் வலிமார்களின் தலைவர்) என்று போற்றப்படும் காஜா முயீனுத்தீன் ( ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை 14 கி.பி 1116 ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை காலை குராசான் என்ற ஊரில் பிறந்தார்கள்.
சிறுவயதிலேயே தாயை இழந்த அவர்கள் தனது 15 ம் வயதில் தந்தையையும் இழந்தார்கள்.
ஷைகு உஸ்மான் ஹாரூனி அவர்களின் ஆன்மீக மாணவராகி இரண்டு ஆண்டு காலம் ஆன்மீக கல்வி கற்றார்கள்.
பின்பு தீனை எத்திவைப்பதற்காக இந்தியா வந்தவர்கள் டெல்லியிலிருந்து அஜ்மீருக்கு சென்ற ஒரே பிரயாணத்தில் இவர்களின் ஆன்மீக உரையால் 80 ஆயிரம் நபர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
【4) அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்).】
அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்) அவர்கள் தம் தவமடத்தில் திங்கள் வியாழன் தவிர ஏனைய நாட்கள் ஃபிக்ஹு, தப்ஸீர், ஹதீது
ஆகியவற்றைத் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். திங்களும், வியாழனும் லுஹர் தொழுகைக்குப்பின் நாற்காலியில்
அமர்ந்து மக்களுக்கு உபதேசம் பண்ணுவார்கள். லட்சக்கணக்கான மக்கள் அந்த உபதேசம் கேட்டு நன்மை அடைவார்கள். ரிபாயி நாயகம் அவர்கள் தன் முரீத் அப்துஸ் ஸமீஉ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுக்கு எழுதிய அறிவுரைகள் ‘ஹிகமுர் ரிபாயி’ என்னும் பெயருடன் விளங்குகின்றன.
【நல்லோர்களின் தொடர்புகள் வைப்போம்! நல்லடியாராக வாழ்வோம்!! 】
يُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (119)
“ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்(தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு ) இருங்கள்”.(9:119) என்னும் திருவசனமும் வலியுறுத்துகிறது.
இவ்விடத்தில் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு ) இருங்கள் இருங்கள் என்பது சூஃப்பியாக்கள், நல்லடியார்களையே குறிக்கிறது.
قال القرطبي : وقيل: الصَّادِقِينَ هم الذين استوت ظواهرهم وبواطنهم. قال ابن العربي: وهذا القول هو الحقيقة والغاية التي إليها المنتهى فإن هذه الصفة يرتفع بها النفاق في العقيدة والمخالفة في الفعل.
இந்த வசனத்தில் தக்வாவை வலியுறுத்தும் அல்லாஹ் இந்த வசனத்திலேயே அதற்கான வழிமுறையையும் சொல்கிறான்.
தக்வாவிற்கான வழி : நல்லவர்களுடன் இருத்தல் – நல்லவர்களைப் படித்தல் அவர்களின் இயல்பை பழகுதல் பயபக்தியுடைய மனிதர்களுடன் பழகுகிற போது அவர்களது வரலாற்றைப் பார்க்கிறபோது எது தக்வா என்பது புரியும்.
பூவுடன் சேர்ந்தால் நார் மணக்கும் என்பார்கள், குதிரை, ஒட்டகம், ஆடு இவைகளுடன் பழகும் மனிதனிடம் இவைகளின் சுபாவம் வருவது இயற்கையே! குதிரை வளர்ப்பவரிடம் பெருமை இருக்கும். ஆட்டுடன் பழகுபவரிடம் பணிவும், பொருமையும் இருக்கும். அதனால் தான் நபிமார்கள் அனைவர்களையும் அல்லாஹ் ஆடுமேய்க்கச்செய்தான். எனவே எவ்வளவு கற்றாலும் நல்லோர்களின் தொடர்பு இல்லையெனில் கரைசேர முடியாது.
இமாம் சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர். அவர்கள் கூறுகிறார்கள். அபூ ஹாஷிம் சூபி ரஹ் அவர்களின் தொடர்பு எனக்கு கிடைக்காவிட்டால் முகஸ்துதியின் நுனுக்கங்களை பற்றி நான் தெரிந்திருக்க முடியாது.
இமாம் அபூ ஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அது மட்டும் கிடைக்காவிட்டால் நான் அழிந்திருப்பேன் என்று கூறுகிறார்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் இமாம் பிஷ்ர் ஹாஃபி ரஹ் அவர்களின் தோழமையில் பலகாலம் கழித்தார்கள். பிஷ்ர் ரஹ் மக்களிடம் சாதாரணமான மனிதர்தான்.
இமாம் அஹ்மத் ரஹ் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அவ்வழியாக இமாம்பிஷ்ர் ரஹ் அவர்கள் வருவதை பார்த்து இமாம் அஹ்மத் ரஹ் எழுந்து நின்றார்கள்.மாணவர்கள் காரணம் கேட்ட போது- நான் வேதம் படித்த ஆலிம். அவர் அல்லாஹ்வை படித்த ஆரிஃப் என்று பதில் சொன்னார்களாம்.
அவ்வளவு ஏன்? இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தங்களின் கிதாபில் – நான் கவாஜா அபூ அலி ரஹ் அவர்களின் தொடர்பில் ஆண்மீக பயிற்சி பெற்றேன். என்று கூறுகிறார்கள்.இறைநேசர்களின் அடையாளம் கண்டு கொள்வது எப்படி? அவர்களை பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வர வேண்டும்.
عن سعيد بن جبير، عن ابن عباس قال: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَلَا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ ؟ قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ”
யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்.
அருளிலார்க்கு அவ்வுலகில்லை பொருளிலார்க்கு இவ்வுலகில்லை எனவே பொருளை தேடுவதற்கு நாம் பல வழிகளில் முயலுவதைப் போன்றே அருளைப் பெறுவதற்கும் பல வழிகளில் முயலுவதே அறிவுடமையாகும்.
அருளை பெறுவதற்கு தொழுகை. நோன்பு. ஜகாத். ஹஜ் போன்ற இறைக் கடமைகள் பிரதான வழிகளாகும். அதற்கு வேறு பல கிளைச் சாலைகளும் உள்ளன. அவற்றுள் நல்லோரின் சகவாசத்தைப் பெறுவது என்பதும் ஒரு கிளைச் சாலையாகும்.
ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கங்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான். “பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்” என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது
நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.
நல்லாருடன் சற்று நேரம் வெறுமனே தங்கியிருப்பதன் நன்மையை நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் உவமை கூறி விளக்குகிறார்கள்.
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ، وَكِيرِ الْحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً ”.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“ நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய். [புகாரி 5534 ]
எனவேதான் இப்படியும் ஒரு நபிமொழி உண்டு ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவன் நண்பனை பார்க்க வேண்டும் அவன் நல்லவனாக இருந்தால் இவனும் நல்லவனாகவே இருப்பான் அவன் தீயவனாக இருந்தால் இவனும் தீயவனாகவே இருப்பான் என்று சொல்வார்கள்.
ஒரு நாள் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் பஜ்ருத் தொழுகையில் சூரத்துர் ரூம் என்ற அத்தியாயத்தை ஓதினார்கள். இடையில் அவர்கள் ஓதுவது தடைபட்டது. தொழுகை முடிந்ததும் அவர்கள் மக்களை நோக்கி சிலருக்கு என்ன கேடு! முறையாக ஒளூச் செய்யாது நம்முடன் கலந்து தொழுகிறார்கள். நான் ஓதும்போது தடைபடுவதற்கு அவர்களே காரணம் என்று கடிந்துரைத்தார்கள் (நூல்: நஸயீ)
இந்த நபி மொழி ஓர் உண்மையைப் பிரகடனப் படுத்துகிறது. ஒளூ முறையாகச் செய்யாதிருத்தல் என்ற தீமை முன்னால் இருப்பவரின் சிந்தனையைத் தடுமாறச் செய்கிறதென்றால் நல்லாரின் நன்னடத்தை அவரருகில் அமர்ந்திருப்போரின் சிந்தனையை நேரிய வழியில் திருப்பாதிருக்குமா?
தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையை தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.
وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74:45)
நம்மை நாமே சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொண்டாலும் பல நேரங்களில் மனம்போன போக்கில் சென்று விடுகிறோம். தவறான முடிவுகளையும் எடுத்துவிடுகிறோம். ஆனால் நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்மை பாதுகாத்து விடுவான்.
நபிமார்கள் நல்வழியை மக்களுக்கு போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாக பெற்றிருக்க வேண்டும்.
அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித்தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார். [புகாரி (7198)
நட்பு என்பது இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு மறுமையில் பெரும் நன்மையையும். பெற்றுத் தருகிறது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவருடன் மறுமையில் நாம் இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்முடைய நேசத்திற்குரியவர் அதிகமான நற்செயல்களை செய்து நாம் அவர் செய்த நல்லறங்களைப் போல் செய்யாவிட்டாலும் அவருடன் இருக்கும் சிறப்பை இறைவன் நமக்குத் தருவான். எனவே நம்மை விட அதிக நன்மை புரிபவர்களுடைய நட்பை நாம் தவறவிடுவது மாபெரும் கைசேதம். நல்லோர்களின் நட்பு இவ்வளவு பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் என்பதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
[இறையன்பை பெற்றவர்களுடன் இணைந்து கொள்ளும்போது நமது குறையும் நிறைவாகி விடும் அதிசயத்தைக் கீழ் வரும் நிகழ்வில் காணலாம்].
عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ، يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ. قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهْوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ، وَيُكَبِّرُونَكَ، وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ. قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْكَ. قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً، وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا، وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا. قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا، وَأَشَدَّ لَهَا طَلَبًا، وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً. قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنَ النَّارِ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا، وَأَشَدَّ لَهَا مَخَافَةً. قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ. قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلاَئِكَةِ فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ. قَالَ هُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ “”. رَوَاهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ وَلَمْ يَرْفَعْهُ. وَرَوَاهُ سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“ அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள் “ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?“ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன், அதற்கு அவ்வானவர்கள் உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்“ என்று கூறுகின்றனர். அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?“ என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?“ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்“ என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?“ என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்“ என்று பதிலளிப்பார்கள். இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?“ என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)“ என்று பதிலளிப்பார். இறைவன், “அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?“ என்று கேட்பான் வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்“ என்பர். அப்போது இறைவன், “எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்“ என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்“ என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்“ என்று கூறுவான். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது. [புகாரி 6408]
عن حنظلةَ الأسيدي رضي الله عنه، وكان مِن كُتَّابِ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ- قال: لَقِيَنِي أَبُو بَكْرٍ، فَقالَ: كيفَ أَنْتَ يا حَنْظَلَةُ؟ قالَ: قُلتُ: نَافَقَ حَنْظَلَةُ، قالَ: سُبْحَانَ اللهِ! ما تَقُولُ؟ قالَ: قُلتُ: نَكُونُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يُذَكِّرُنَا بالنَّارِ وَالْجَنَّةِ حتَّى كَأنَّا رَأْيُ عَيْنٍ، فَإِذَا خَرَجْنَا مِن عِندِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، عَافَسْنَا الأزْوَاجَ وَالأوْلَادَ وَالضَّيْعَاتِ، فَنَسِينَا كَثِيرًا، قالَ أَبُو بَكْرٍ: فَوَاللَّهِ إنَّا لَنَلْقَى مِثْلَ هذا، فَانْطَلَقْتُ أَنَا وَأَبُو بَكْرٍ حتَّى دَخَلْنَا علَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، قُلتُ: نَافَقَ حَنْظَلَةُ، يا رَسُولَ اللهِ، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَما ذَاكَ؟ قُلتُ: يا رَسُولَ اللهِ، نَكُونُ عِنْدَكَ، تُذَكِّرُنَا بالنَّارِ وَالْجَنَّةِ حتَّى كَأنَّا رَأْيُ عَيْنٍ، فَإِذَا خَرَجْنَا مِن عِندِكَ، عَافَسْنَا الأزْوَاجَ وَالأوْلَادَ وَالضَّيْعَاتِ، نَسِينَا كَثِيرًا، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بيَدِهِ، إنْ لَوْ تَدُومُونَ علَى ما تَكُونُونَ عِندِي وفي الذِّكْرِ، لَصَافَحَتْكُمُ المَلَائِكَةُ علَى فُرُشِكُمْ وفي طُرُقِكُمْ، وَلَكِنْ يا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً، ثَلَاثَ مَرَّاتٍ. (رواه مسلم)
(ஒரு நாள்) அபூபக்ர் ( رضي الله عنه) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன்.
அதற்கு அபூபக்ர் (( رضي الله عنه) ) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்” என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறினார்கள். [முஸ்லிம் 5305]
நல்லோர்களின் அவையில் அமர்ந்திருக்கும்போது ஏற்படும் நல்ல மாற்றத்திற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு தேவையிருக்காது.
【நல்லோரை நேசிப்பதும் நல் அமலே! 】
நல்லோரின் சகவாசம் நன்மை பயப்பதைப்போன்றே நல்லோரை நேசிப்பதும் நல்ல அமல் என்பதை நபி மொழிகள் நன்குணர்த்துகின்றன.
3529- ٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ يَغْبِطُهُمُ الأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ تَعَالَى)).قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ. قَالَ: ((هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلاَ أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لاَ يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلاَ يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ)). وَقَرَأَ هَذِهِ الآيَةَ: {أَلاَ إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ}
இறை அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் நபிமார்களுமல்லர் ஷுஹதாக்களுமல்லர் ஆனால் நபிமார்களும். ஷுஹதாக்களும் அவர்களை( அவர்களின் அந்தஸ்தை பார்த்து ரோஷம் கொள்வர் ) பெருமையாக கருதுவர் என நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் நவின்றார்கள். அப்போது அன்னாரின் நண்பர்கள் யாரசூலல்லாஹ் யார் அவர்கள்? என்று எங்களுக்கு அறிவிப்பீர்களாக! என்றார்கள். தங்களுக்கிடையேயுள்ள உறவின் காரணமாகவோ. அல்லது கொடுக்கல் வாங்கலின் காரணமாகவோ அல்லாமல் இறைவனின் தொடர்புக்காக அன்பு செலுத்தக்கூடியவர்கள் அவர்கள். அவர்களின் முகங்கள் பிரகாசமாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீதிருப்பார்கள். மக்களெல்லாம் பயப்படும் சந்தர்ப்பங்களில் இவர்கள் பயப்படமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் வேளைகளில் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் நவின்று “அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா கவ்புன் அலைஹிம் வலாஹும் யஹ்ஸனூன் ” என்ற திருவசனத்தை ஓதிக் காட்டினார்கள் (நூல்: அபூதாவூத்)
ஒரு வரை நேசிக்கிறோம் என்றால் அவரோடு பேசுவதற்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும்.
இன்றைய குடும்ப பிரச்சனைகளுக்கான ஒரு முக்கியக் காரணம்.
குடும்பத் தலைவர்கள் மனைவியோடு அல்ல்து பிள்ளைகளோடு பேச நேரம் ஒதுக்காமல் இருப்பது என மனநல மருத்துவர்கள்கூறுகிறார்கள்.
ஒருவர் தனது மனைவிக்கு உடல் நலம் இல்லை என பல மருத்துவர்களிடமும் சென்றார். கடைசியில் ஒரு அனுபவசாலி இருவரிடமும் தனித்தனியாக விசாரனை செய்து விட்டு கணவரிடம் கூறினார் . உங்கள் மனைவியை எளிதாக குணப்படுத்தி விடலாம். நீங்கள் தினசரி கால் மணி நேரம் அவருக்கு ஒரு பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். என்ன பயிற்சி டாக்டர் ? எவ்வளவு செலவாகும்! யாரிடம் செல்ல வேண்டும் ? என்றார் கணவர்.
மருத்துவர் சொன்னார் இது ஒரு பைசா செலவில்லாத பயிற்சி. நீங்கள் உங்கள் மனைவியுடன் உட்கார்ந்து தினமும் ஒரு கால் மணி நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு மாதத்தில் மாற்றத்தைப் பார்க்கலாம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு இடையிலும் அஸர் தொழுகைக்குப் பின் அனைத்து மனைவிமார்களிடமும் சென்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
அன்பானவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது போல மகிழ்ச்சியும் ஆறுதலும் நெருக்கத்தை பெறுவதும் வேறெதிலும் இல்லை.
அல்லாஹ்வோடு அத்தகைய உறவை பராமரிக்க ஒரே வழி இறை நேசர்களை சந்தித்து பேசுவதாகும்.
【நாம் ஏன் வலிமார்களாக ஆகக் கூடாது? (முயற்சிப்போமாக ) 】
நம் வாழ்வில் அதிக நன்மைகள் செய்தால் நாமும் வலிமார்கள்தான்..
நம் வாழ்வில் போட்டி போட்டு அமல் செய்ய வேண்டும்..
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள். [முஸ்லிம் 1865. ]
【அர்ஷின் நிழல் பெற வலிமார்களாக வாழுவோம்…】
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ” سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ، إمام عادل وشاب نشأ في عبادة الله ، ورجل قلبه معلق بالمساجد ، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله . ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ، ورجل ذكر الله خالياً ففاضت عيناه ” متفق عليه
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான். அவர்கள், 1. நீதியுள்ள அரசன், 2. அல்லாஹ்வுடைய வணக்கத்தில் வாலிபத்தைக் கழித்த வாலிபன், 3. எந்நேரமும் பள்ளியில் உள்ளத்தை லயிக்கச் செய்தவர், 4. அல்லாஹ்வுக்காகவே நேசம் கொண்டு அவனுக்காகவே ஒன்று கூடி அவனுக்காகப் பிரியும் இரு நபர்கள், 5. உயர் குலத்தைச் சேர்ந்த அழகிய பெண் ஒருத்தி தன்பால் அழைக்க, நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று கூறியவர், 6. தனது இடக்கரத்திற்குத் தெரியாத நிலையில் தானம் செய்தவர், 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்தியவர். [புகாரி – 6806 )
【 வலிமார்களோடு நாளை மறுமையில் இருப்போமாக! 】
✍🏻 அன்புள்ளவர்களே! ஒரு நாட்டு அரபி , நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் சமூகம் வந்து யா ரஸூலல்லாஹ் ! கியாமத்து நாள் எப்போது ? என்று கேட்ட போது ,கண்மணி நாயகம் அவர்கள் அவரை நோக்கி அதற்காக நீ என்ன சேகரித்து வைத்திருக்கிறாய் ? என்று வினவினார்கள் .
அப்போது அவர் , “அல்லாஹ்வையும் , அல்லாஹ் உடைய ரஸூலையும் உகப்பு வைத்திருக்கிறேன் .மற்றபடி நான் தொழுகை நோன்பு இவற்றில் அதிகம் சேகரம் செய்ய்யவில்லை ” என்றார் .
அப்போது நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் (அல் மர்உ – மஅமன் அஹப்ப) “மனிதன் யார் யாரை உகந்தானோ அவர்களோடேயே ஆகியிருப்பான் ” என்று கூறினார்கள் .
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள். [நூல்: புகாரீ 5703)
எனவே, இறை நேசர்களை மதித்து, இறை நெறுக்கத்தைப் பெற்று நாளை மறுமையில் இறைநேசர்களோடு சுவனம் செல்லும் நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புறிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.!