இறையில்லங்களைப் பாதுகாப்போம்

இறையில்லங்களைப் பாதுகாப்போம்


பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களின் சமுதாய வாழ்வின் ஒரு அத்தியாவசியமான, பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகும்.
இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் முதல் அம்சமாக இருப்பதும் இறையில்லம் தான்.

إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ
அல்லாஹ் கூறுகின்றான்:

உண்மையாகஅல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும்உடமைகளையும் சுவனத்திற்கு பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான்”.                                                 ( அல்குர்ஆன்:9:111 )

உலகில் வாழ்கிற போது இறையில்லத்துடன் ஓர் இறைநம்பிக்கையாளன் கொண்டிருக்கிற தொடர்பு என்பது உளப்பூர்வமானதாகவும்உயிரோட்டமானதாகவும் அமைந்து விடும் பட்சத்தில் அல்லாஹ்வின் அரியணையின் கீழ் நிழல் பெறுகிற பெரும் பேற்றை வழங்கி கௌரவிப்பதாக இஸ்லாம் உயர்த்திக் கூறுகிறது.

فعن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: ((سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: الْإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ))
البخاري (620)، ومسلم (1712).

அபூ ஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.

 நீதியான அரசன்அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்தவாலிபர்இறையில்லத்தோடு தனது இதயத்தை தொடர்புபடுத்திய மனிதர்இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்.

நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர்வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுதுகண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்அவ
முன்னுரிமை பெறும் அம்சம்.

இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் முதல் அம்சமாக இருப்பதும் இறையில்லம் தான்.

அல்லாஹ் தன் திருமுன் உறவாடிடவிண்ணுலகப் பயணத்திற்கு நபிகளாரை அழைத்துச் சென்ற போது பைத்துல் முகத்தஸ் எனும் புனித இறையில்லத்திற்கு அழைத்து வந்துபின்னர் அங்கிருந்து விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றதாக அல்குர்ஆனில் கூறுகின்றான்.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ ()
மிகத் தூய்மையானவன்தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகுதொலைவில் இருக்கிற மஸ்ஜிதுல் அக்ஸா வரையில்அதன் சுற்றுப் புறங்களை அவன் அருள்வளம் நிறைந்ததாய் ஆக்கியுள்ளான்.

எதற்காக அழைத்துச் சென்றானெனில்தன்னுடைய சான்றுகளை அவருக்கு காண்பிப்பதற்காகஉண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும்பார்ப்பவனாகவும் இருக்கின்றான்”.                              ( அல்குர்ஆன்:17:1 )
وفي يوم الاثنين 8 ربيع الأول سنة 14 من النبوة ـ وهي السنة الأولى من الهجرة نزل رسول الله صلى الله عليه وسلم بقباء .
وأقام رسول الله صلى الله عليه وسلم بقباء أربعة أيام : الاثنين والثلاثاء والأربعاء والخميس  وأسس مسجد قباء وصلى فيه، وهو أول مسجد أسس على التقوى بعد النبوة،

பெருமானார் {ஸல்அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற போது வழியில் குபா எனும் இடத்தில் நான்கு நாட்கள் தங்கினார்கள்.

நபித்துவத்தின் பதினான்காம் ஆண்டுஅதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8,9,10,11 (திங்கள் முதல் வியாழன் வரைஆகிய நாட்கள் தங்கினார்கள்.

அப்போதுஅல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் ஒரு பள்ளியை நிர்மாணித்து அங்கே ஐவேளை தொழகைகளை நிறைவேற்றினார்கள்குபாவில் நிர்மாணித்த அந்த இறையில்லம் தான் நபித்துவத்திற்குப் பிறகு இறைவனை வணங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் பள்ளியாகும்.

            ( நூல்அர்ரஹீக்குல் மஃக்தூம்பாடம்ஹிஜ்ரத்துன் நபீ {ஸல்}…)

தங்கியதென்னவோ நான்கு நாட்கள் தான்ஆனால்,ஓர் இறைநம்பிக்கையாளன் தனக்கான வாழ்வியல் நோக்கங்களில் பிரதானமானதாகமுன்னுரிமை தர வேண்டிய முதல் அம்சமாக இறையில்லம் தான் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்த உம்மத்துக்கு உணர்த்திக் காட்டினார்கள்.

فإن أول عمل قام به النبي صلى الله عليه وسلم عندما قدم إلى المدينة المنورة هو بناؤه لمسجده الشريف في المكان الذي بركت فيه ناقته، وكان ملكاً ليتيمين فاشتراه النبي صلى الله عليه وسلم وأقام عليه المسجد، وكان يعمل فيه بنفسه مع أصحابه الكرام، وقد بدأ بناء المسجد في ربيع الأول سنة واحد من الهجرة بعد وصول النبي صلى الله عليه وسلم مباشرة، كما جاء في كتاب "الرحيق المختومللمباركفوري وغيره.

மதீனா வந்த பின்னரும் கூட மஸ்ஜிதுன் நபவீயை நிர்மாணிப்பதில் அண்ணலார் காட்டிய அக்கறை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு தேர்ந்தெடுத்த இடம் இரண்டு அநாதை இளைஞர்களுக்கு சொந்தமானதுஅந்த இடத்தை விலைக்கு வாங்கி நபி {ஸல்அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயை நிர்மாணித்தார்கள்.

அந்த இடத்தை வாங்குவதற்கான விலையை பனூ நஜ்ஜார் கோத்திரத்தார்கள் எந்த வித பிரதிபலனும் நோக்காமல் கொடுத்தார்கள்.

              ( நூல்அர்ரஹீக்குல் மஃக்தூம்பாடம்ஹிஜ்ரதுன் நபி {ஸல்}.. )

அண்ணலாரின் அடிச்சுவட்டில் அப்படியே பின்பற்றிய, நேர்வழி நின்று ஆட்சி செய்த கலீஃபாக்களும் இஸ்லாமிய எல்லைகள் விரிவடைகிற போதெல்லாம் முதலாவதாக அங்கே இறையில்லம் அமைப்பதற்கே முன்னுரிமை கொடுத்து வந்தார்கள்.

احتطّ عتبة مكان الأبلّة مدينة البصرة، وعمّرها وبنى مسجدها العظيم..
ولبث عتبة مكانه يصلي بالناس، ويفقههم في دينهم، ويحكم بينهم بالعدل، ويضرب لهم أروع المثل في الزهد والورع والبساطة...

ஃகலீஃபா உமர் (ரலிஅவர்கள் பாரசீகத்தை வென்றெடுக்க இறுதியாக அனுப்பிய படைப்பிரிவுக்கு உத்பா இப்னு ஃகஸ்வான் (ரலிஅவர்களை தளபதியாக நியமித்தார்கள்.

பாரசீகர்களின் இராணுவத் தளமான உபுல்லாவின் கோட்டையைக் கைப்பற்றி, வெற்றியை பதிவு செய்தது உத்பா (ரலி) அவர்களின் தலைமையிலான முஸ்லிம் அணியினர்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்கள்.

அதில் உடனடியாக அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும்  உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி ஆட்சியின்  தலைமையிடமாகவும் அமைக்க வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

உத்பா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.

பஸ்ரா எனும் நகரை உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத் தலைமையிடத்தையும் உருவாக்கினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய அரசின் முதல் ஆளுநராக நியமித்தார்கள்.

அங்கேயே உத்பா (ரலி) அவர்கள் முதல் இமாமாகவும் பரிணமித்தார்கள்.

                              ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}..... )

ஆக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், அவர் தம் அருமைத் தோழர்களும் இறையில்லத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தை மேலே கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இறையில்லத் தொடர்பு! சன்மானமும்.... சோபனமும்....

روى الشيخان في صحيحيهما أن عثمان بن عفان - رضي الله عنه - أراد بناء المسجد، فكره الناس ذلك، وأحبوا أن يدعه، فقال عثمان - رضي الله عنه -: سمعت النبي - صلى الله عليه وسلم - يقول: ((مَنْ بَنَى مَسْجِدًا - قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ - بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ))
البخاري (431)، ومسلم (829).
உஸ்மான் (ரலிஅவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் மதீனாவின் ஒரு பகுதியில் இறையில்லத்தை எழுப்புவதற்கு விரும்பிய போதுஅப்பகுதியின் மக்கள் அதற்கு விரும்பவில்லை.

அப்போதுவிரும்பாத அம்மக்களை அழைத்துஉஸ்மான் (ரலிஅவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.. “எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இறையில்லத்தைக் கட்டுவாரோஅவருக்காக அல்லாஹுதஆலா சுவனத்தில் மாளிகை ஒன்றைக் கட்டுகின்றான்” என்று கூறினார்கள்.                                ( நூல்புகாரிமுஸ்லிம் )

روى أبو هريرة أنه - عليه الصلاة والسلام - قال: ((أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا)).

அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உலகில் எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் இறையில்லங்களாகும்மிக வெறுப்பான இடம் கடைவீதிகளாகும்” என்று நபி {ஸல்அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கின்றேன்.                ( நூல்முஸ்லிம் )

وقال - عليه الصلاة والسلام -: ((مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنْ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ))"
அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் காலைமாலை இறையில்லத்திற்குச் செல்கின்றாரோஅவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசரிப்பு செய்ய அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான்காலையோமாலையோ அவர் எத்தனை முறை இறையில்லத்துக்குச் சென்றாலும் அத்தனை முறையும் அவருக்கு அந்த ஏற்பாடு செய்யப்படுகின்றது” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள். ( நூல்புகாரி )

فعن أبي هريرة - رضي الله عنه - قال: قال - عليه الصلاة والسلام -: ((مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ، ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ؛ كَانَتْ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً، وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً))
10 مسلم (1070).
அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் வீட்டிலிருந்து உளூ செய்து விட்டுபின்னர் இறையில்லத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைகளில் ஏதேனுமொரு கட்டளையை நிறைவேற்ற நடந்து செல்வார் எனில்அவரின் ஒவ்வொரு எட்டிற்கும் இரண்டு விதமான சன்மானம் வழங்கப்படுகின்றன. 1. அவரின் ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. 2. அவருக்கு சுவனத்தின் ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகின்றது” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.      ( நூல்முஸ்லிம் )

عن أبي الدرداء 
 رضي الله عنه – قال
: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: ((المسجد بيت كل تقي، وتكفل الله
 لمن كان المسجد بيته بالروح والرحمة، والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة

அபுத்தர்தா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லம் என்பது இறையச்சமுள்ள ஒவ்வொருவரின் இனிய இல்லமாகும்எவருடைய இல்லம் இறையில்லமாக ஆகிவிடுமோஅவருக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவும்தன் அருளைப் பொழியவும்சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதில் கடக்கவும்தன் திருப்பொருத்தத்தை அளிக்கவும்மேலான சுவனத்தைத் தரவும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள். ( நூல்தப்ரானீ )

وأخرج الإمام أحمد أيضا عن معاذ بن جبل رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال إن الشيطان ذئب الإنسان كذئب الغنم ، يأخذ الشاة القاصية والناحية ، فإياكم والشعاب ، وعليكم بالجماعة والعامة والمسجد }

முஆத் இப்னு ஜபல் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஆடுகளை வேட்டையாடும் ஓநாயைப் போன்றுமனிதனை வேட்டையாடும் ஓநாய் ஷைத்தான் ஆவான்மந்தையை விட்டும் தனித்திருக்கிற ஆட்டையே ஓநாய் பிடித்துக் கொள்கின்றதுஅது போன்றே ஷைத்தானும் ஆவான்.

ஆகவேதனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்கூட்டாக இருப்பதுபொதுமக்களுடன் சேர்ந்து இருப்பதுஇறையில்லத்தில் இருப்பது ஆகியவற்றை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள். (நூல்:அஹ்மத்)

وفي الترمذي عن النبي صلى الله عليه وسلم أنه قال :
إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان ; لأن الله يقول : { إنما يعمر مساجد الله الآيةقلت : رواه الترمذي كما قال شيخ الإسلام من حديث أبي سعيد الخدري رضي الله عنه وقال : حديث حسن غريب ، ورواه ابن ماجه وابن خزيمة وابن حبان في صحيحيهما والحاكم من طريق دراج أبي السمح عن أبي الهيثم عن أبي سعيد وقال الحاكم صحيح الإسناد .

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர்இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள்” என்று கூறிய மாநபி {ஸல்அவர்கள் “அல்லாஹ்வின் மீதும்மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களேஇறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர்” என அல்லாஹ் கூறியுள்ளான்என்று நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.                      ( நூல்திர்மிதீ )


عن ابن عباس أن امرأة كانت تلقط القذى من المسجد فتوفيت ، فلم يؤذن النبي - صلى الله عليه وسلم - بدفنها ، فقال النبي - صلى الله عليه وسلم - : " إذا مات لكم ميت فآذنوني " وصلى عليها وقال :
 " إني رأيتها في الجنة [ لما كانت ] تلقط القذى من المسجد " .
 .
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெண்மணி மாநபி {ஸல்அவர்களின் பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அகற்றி வந்தார்ஒரு நாள் அப்பெண்மணி இறந்து விட்டார்அவரை அடக்கம் செய்த விவரத்தை நபித்தோழர்கள் அண்ணலாருக்குத் தெரிவிக்கவில்லை.

அண்ணலாருக்குத் தெரிய வந்த போது “உங்களில் ஒருவர் இறந்து விட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கூறிய அண்ணலார்பிறகு அப்பெண்மணிக்காக ஜனாஸா தொழுகை தொழுதார்கள்.

பின்னர்தோழர்களை நோக்கி “இப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்து வந்த காரணத்திற்காக சுவனத்தில் இருந்ததை நான் பார்த்தேன்” என்று நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.              ( நூல்தப்ரானீ )


وأخرج الإمام أحمد رضي الله عنه عن أبي هريرة رضوان الله عليه عن النبي صلى الله عليه وسلم قال {
إن للمساجد أوتادا الملائكة جلساؤهم ، إن غابوا يفتقدوهم ، وإن مرضوا عادوهم ، وإن كانوا في حاجة أعانوهم } .

அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்திற்கென முளைக்கம்புகள் இருக்கின்றனஎவர்கள் இறையில்லத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றார்களோஅவர்களுடன் வானவர்கள் அமர்கின்றனர்.

பள்ளியில் அவர்களை காணவில்லை என்றால்வானவர்கள் தேடுகின்றனர்மேலும்அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்கின்றனர்ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு வானவர்கள் உதவுகின்றனர்” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.                            ( நூல்அஹ்மத் )

حدثنا محمد بن العلاء حدثنا حسين بن علي عن زائدة عن هشام بن عروة عن أبيه عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب

அன்னை ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் வாழும் பகுதிகளில் இறையில்லங்களை அமைத்திட உத்தரவிட்டார்கள்மேலும்அவைகளை சுத்தமாகவும் நறுமணம் கமழும் இடமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்கள்”. ( நூல்:அபூதாவூத்)

ஆக ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் நீங்காத அருட்கொடையாக, ஈருலக வாழ்க்கையின் உயர்வுக்கும் ஆதாரமாக இருக்கிற ஓர் உயர்ந்த அங்கம் தான் இறையில்லம் எனும் பள்ளிவாசல் ஆகும்.

இறையில்லத்தின் விஷயங்களில் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்மேலும் பாதுகாத்திடவும் வேண்டும்” என கூறுகின்றனர்.

நாம் மதிக்கின்ற ஒன்றுநாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்பபடுத்தப்படுமானால்நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ
مسلم: كتاب الإيمان

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... “அல்லாஹ்வின் தூதரேஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்எனக் கேட்டார்.

அதற்கு அண்ணலார் “உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.

நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள் நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்”  என்றார்கள்.

”அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது... ”நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர்”என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

சரிநான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?”  என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார் ”அவன் நரகவாதியே!” என்று பதில் கூறினார்கள்.                                                                                      (  நூல்: முஸ்லிம் )

உலக வாழ்வின் அலங்காரம் என்றும், சோதனை என்றும் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் வர்ணிக்கப்படுகிற பொருளாதாரத்தைப் பாதுகாக்கவே போராட அனுமதி இருக்கிறது எனும் போது அல்லாஹ்விற்கு உரிய, இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் மகத்துவத்தையும், மாண்பையும் ஏற்படுத்துகிற இறையில்லத்தை மீட்பதில் எந்தளவு ஒரு முஃமின் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.


அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட இடத்தை இணைவைப்போர் ஆக்கிரமிப்பதும்இடிப்பதும் தகாதஅடாத செயலாகும்மாபெரும் அநீதியாகும்.

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வுடைய இல்லங்களில் அவனுடைய நாமத்தைத் துதி செய்வதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயற்சி செய்பவனை விட மகா அநியாயக்காரன் யார்?”                              (அல்குர்ஆன்:2:114)

அல்லாஹ்வை ஸஜ்தா செய்த இடத்தை மீட்க உளத்தூய்மையோடு நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் அல்லாஹ் நிரம்ப நற்கூலிகளை வழங்கிடுவான்.

எனவேஅநீதிக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் தான் ஓர் இறை நம்பிக்கையாளன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.  அது தான் ஈருலகிலும் அவனை வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் செல்லும்.

தன்னை அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளும் போதுஅவன் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை.  யாருடைய சூழ்ச்சியும் அவனை ஒன்றும் செய்திடாது.

ஏனெனில்,  அல்லாஹ் கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ()
 “இறை நம்பிக்கை கொண்டவர்களே!  உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்.  நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது.”                                                                                                                    (அல்குர்ஆன்:5:105)

அப்படியே நாம் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டாலும்நம் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்போமேயானால் அல்லாஹ் நம்மை நிலைப்படுத்தி வைப்பான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ ()
அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கையாளர்களேநீங்கள் அல்லாஹ்விற்கு உதவி புரிந்தால் அவனும் உங்களுக்கு உதவி புரிவான்மேலும்உங்களுடைய பாதங்களையும் நிலைப்படுத்தி வைப்பான்”.     ( அல்குர்ஆன்:47:7 )


நாம் வசிக்கும் இந்த இந்திய திருநாடு பன்முகத் தன்மை கொண்ட நாடு.

இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் இந்த தேசத்தில் எங்கும் எப்போதும் தாக்கப்படலாம், காவல்துறையால் கைது செய்யப்படலாம், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படலாம், பசுக்குண்டர்களால் கொல்லப்படலாம், ராம் பக்தர்களால் தாக்கப்படலாம், முஸ்லிம்களின் அடையாளங்கள் மாற்றப்படலாம், அழிக்கப்படலாம், பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம், வீடுகளும், கடைகளும், நிறுவனங்களும் சூறையாடப்படலாம், முஸ்லிம்களின் சட்டங்கள் நிராகரிக்கப்படலாம், லவ்ஜிஹாதி, தீவிரவாதி, தேசவிரோதி என பெயர் சூட்டி அழைக்கப்படலாம், தேவை ஏற்பட்டால் சட்டமியற்றி நாட்டை விட்டே வெளியேற்றப்படலாம் எனும் சூழல் தற்போது அதிகரித்து வருகின்றது.

இந்த தேசத்தின் உயர்வுக்கும், விடுதலைக்கும் உயிராலும், உடலாலும்,உணர்வுகளாலும் மாபெரும் அர்ப்பணிப்பை பங்களிப்பை அளித்த ஓர் ஒப்பற்ற சமூகமான முஸ்லிம் சமூகம் இன்று சமநீதி கேட்டு நீதிமன்ற வாயிற்படிகளில் காத்து நிற்கின்ற அவலங்களை உலக சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

நம்முடைய நாடு நீதிக்கு பெயர் பெற்ற நாடு.

சமீபத்தில் ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி வை சந்திர சூட் 2019 நவம்பர் மாதம் பாபரீ மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்குவது மிக சிக்கலாக இருந்ததாகவும் நல்ல தொரு தீர்ப்பை வேண்டி  கடவுளை பிரார்த்தனை செய்ததாகவும் வெளிப்படையாக கூறினார்.
பாபரீ மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு நீதியின் அடிப்படையிலானது இல்லை என்பதை அப்பட்டமாக ஒப்புக் கொள்வதாக அவரது வாக்குமூலம் இருந்தது.

முகலாய சக்ரவர்த்தி பாபரின் ஆட்காலத்தில் கட்டப்பட்ட மூன்று பெரிய பள்ளிவாசல்களில் ஒன்று அயோத்தியில் உள்ள பாபரீ மஸ்ஜித் – அது 1992 ம் ஆண்டு இந்துத்துவ தீவிரவாதிகளால் இடிக்கப்ட்டது. அங்கு இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இன்னொரு பள்ளிவாசல் பானிபட் நகரில் உள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று. இந்தியாவின் இதயம் என்று உத்திரப்பிரதேசத்திற்கு ஒரு பெயர் உண்டு.

உத்திரப்பிரதேச முஸ்லிம் சமூகம் அங்கே பன்னெடுங்காலமாக பிரச்சினைகளை மட்டுமே எதிர் கொண்டு வருகிறது.

பாபரி மஸ்ஜித் பிரச்சினை முதற் கொண்டு தற்போது வரை இந்தியாவின் மாநிலம் ஒன்றில் ஒரு சமூகம் தொடர்ந்து அதிகமான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும், உயிரிழப்புகளையும், கைதுகளையும் சந்தித்து வருகிறது என்றால் அது உத்திரப் பிரதேச மாநிலத்தில் தான்.

மூன்றாவது பெரிய பள்ளிவாசல் தான் *உத்தரபிரதேசம் சம்பல்* மாவட்டம் சாந்தவுசி நகரில் உள்ள  *ஷாஹி ஜும் ஆ பள்ளிவாசல்* ஆகும். *16 ம் நூற்றண்டை சேர்ந்த அந்த பள்ளிவாசல்  5 நூறு வருடங்கள் பழமையானதாகும்*.  

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின்  என்பவர் இந்த நவம்பர் மாதம்  19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். “சம்பல் மாவட்டம் சந்தவுசி நகரில் ஹரிஹர் கோயில் இருந்தது. முகலாயர் காலத்தில் இந்தக் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு ஷாஹி ஜமா மசூதி கட்டப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும்” என கோரினார்.

இந்த மனுவை  நீதிபதி ஆதித்யா சிங் அன்றைய தினமே விசாரித்தார் பள்ளிவாசலில் அன்றைய தினமே ஆய்வு நடத்த உத்தரவிட்டார். இதற்காக வழக்கறிஞர் ரமேஷ் ராகவ் தலைமையில் ஒரு குழுவையும் அவர் அன்றே நியமித்தார்., வரும் 29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்தக் குழுவினர் அன்றைய தினமே முதல்கட்ட ஆய்வை தொடங்கினர்.

எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தன.

எதிர் தரப்பினர் எந்த கருத்தையும் முன் வைக்க வாய்ப்பே வழங்கப்பட வில்லை.
இந்த வழக்கையும் ஆய்வையும் அப்பகுதியிலிருந்த முஸ்லிம்கள்  சற்றும் எதிர்பார்க்கவில்லை.   

நவம்பர் 24 ம் தேதி இரண்டாவதாகவும் அங்கு ஆய்வு செய்ய ஆய்வுக்குழ்வினர் வந்த போது அங்கு கூடிய முஸ்லிம்கள் அதை எதிர்த்தனர்.

அவர்களை கலைந்து செல்ல காவல் துறை உத்தரவிட்டது. கலை ந்து செல்லாத அவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் ஷஹீதாகியுள்ளனர். பலர் காயம் பட்டுள்ளனர். காவலர்களும் பலர் காயமடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக மக்கள் பிரதிநிகள் உட்பட சுமார் 30 பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரிய அக்கிரமம் என்ன வென்றால் 500 ஆண்டுகள் தாங்கள் தொழுகை நடத்திய இடத்திற்காக நியாயம் கேட்டு போராடிய  மக்களை கலவரக்காரர்களாக அரசு சித்தரிக்கிறது. மீடியாக்களும் அதை ஒத்து ஊதுகின்றன.

மக்கள் மீது கட்டுங்காத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

துப்பாக்கி சூடு கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. நியாயம் கேட்டு போராடிய 5 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளது. கேள்வியாக்கப்பட வில்லை.     

வழக்கு பதிவான அன்றைய தினமே ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதியின் நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை.

இந்த அப்பட்டமான அநீதி குறித்து ஒரு சரியான கண்டனத்தை இது வரை எந்த அரசியல் கட்சியும் உறுதியாக பதிவு செய்யவில்லை.

பாதிப்புக்குள்ளான பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் செல்வதை டிசம்பர் 1 வரை அரசு தடை செய்திருக்கிறது. இணையதள சேவையை முடக்கியிருக்கிறது.

*இறையில்லங்களைத் தொடர்ந்து இறைநேசர்களின் இடங்களிலும் அராஜகம்*
*(சர்ச்சைக்குள்ளாகும் அஜ்மீர் தர்கா)*

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா இந்து ஆலயம் என்பதால் தொல்லியல்த்துறை ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அஜ்மீர் தர்கா சிவன் கோவிலின் மீது கட்டப்பட்டதாக உள்ளூர் நீதிமன்றம் வெளியிட்ட நோட்டீஸ் சர்ச்சையை கிளப்பியது.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் உள்ளிட்ட இஸ்லாமிய வழிப்பாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் இந்து ஆலயமாக இருந்தது என இந்து அமைப்புகள் கூறி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா உள்ளது. இந்த தர்காவை இந்து ஆலயம் என்று கூறும் மஹாரான பிரதாப் சேனா அமைப்பு தர்காவில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஹஜ்மீர் தர்காவில் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் இந்துக்களின் ஸ்வஸ்தி குறியீடு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதற்கு மறுப்பு தெரிவிக்கும் தர்கா நிர்வாகம் ஆதாரமற்றை கூற்றை இந்து அமைப்பு முன்வைப்பதாக பதிலளித்துள்ளது. இந்து அமைப்பு கூறுவதுபோல் தர்காவில் எந்த ஸ்வஸ்தி குறியீடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் இந்நான்கு உரிமைகளும் இந்த தேசத்தால் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றதே தவிர நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அதிலும் குறிப்பாக பன்நெடுங்காலமாகவே இந்திய தேசத்தின் நீதித்துறையின் செயல்பாடு கவலை அளிப்பதாகவே அமைந்துள்ளது.

 சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிரான நிலைப்பாடு, வழக்குகளின் முடிவில் வழங்கப்படும் தண்டனை என அத்தனையும் முஸ்லிம்களின் நலனுக்கு எதிராகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.


நீதி வழங்கும் நீதிபதிகள் சட்டப்புத்தகத்தை பார்த்தும், சாட்சிகளை விசாரித்தும், ஆய்வு செய்தும் தீர்ப்பளிக்கின்றார்களா? இல்லை மனம் போன போக்கில் தீர்ப்பளிக்கிறார்களா? என்பதை முஸ்லிம்களுக்கெதிரான வழக்குகளில் அவர்கள் அளித்த தீர்ப்புகளே சான்றுபகர்கின்றன.

இந்தியாவில் நீதி என்பது சமாதியாக்கப்பட்டுவரை அப்பட்டமாக இது காட்டுகிறது.


*இறையில்லங்களைப் பாதுகாக்க வேண்டும்*

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், எவரேனும் ஒருவர் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அதுவெ இறையச்சம் நிறைந்திருக்கிற இதயத்திற்குச் சான்றாகும்.” (அல்குர்ஆன்:22:32)

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் “இறையில்லத்தின் விஷயங்களில் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும், மேலும் பாதுகாத்திடவும் வேண்டும்” என கூறுகின்றனர்.


உயர்வான பள்ளிவாசல்களின் அந்தஸ்துகளை பற்றி அல்லாஹ்வை விவரிக்கிறது நாம் இங்கு சுற்று கவனிக்க கடமைப்பட்டிருக்கின்றோம் 

நாளை மறுமை நாளில் அல்லாஹ் கேட்பானாம் என்னுடைய அண்டை வீட்டார்கள் எங்கே என்று அப்போது மலக்குகள் வியப்படைந்த நிலையில் அல்லாஹ்விடத்தில் கேட்பார்களாம் யா அல்லாஹ் உனக்கு யார் அண்டை வீட்டார் உனக்கு அண்டு விட்டார்கள் இருக்கிறார்களா என்பதாக மலக்குமார்கள் அல்லாஹ்விடத்திலே கேட்பார்கள் அதற்கு அல்லாஹ் இவ்வாறு பதிலளிப்பான் ஆம் எனக்கு அந்த விட்டார்கள் இருக்கிறார்கள் அவர்கள் யார் என்றால் என்னுடைய பள்ளியை பரிபாலித்து பாதுகாத்து வந்தவர்கள் அவர்கள் தான் என்னுடைய அண்டை வீட்டார்கள் என்பதாக அல்லாஹ் கூறுவானாம் சங்கைக்குரியவர்களே சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டு இருக்கின்றோம் 

ஒரு கணவன் தன் மனைவியை பார்த்து இந்த உலகத்தில் நீ எந்த மூலையில் இருந்தாலும் உனக்கு தலாக் என்பதாக கூறி விடுகின்றார் இந்த விஷயத்தை சற்று எதிர்பார்க்காத அந்த மனைவி என் கணவர் என்னை தலாக் விடாமல் இருக்க வேண்டும் என்றால் நான் மரணித்தாக வேண்டும் அல்லது வேறு வழியில்லை என்று மிகப்பெரிய மார்க்க சட்ட நிபுணர்களிடத்திலே ஓடோடி செல்கின்றார் என் கணவர் இந்த உலகத்தில் நீ எங்கிருந்தாலும் தலாக் என்பதாக கூறுகின்றார் நான் என் கணவரை விட்டு பிரிய விரும்பவில்லை நான் இப்போது என்ன செய்வது என்பதாக கேட்கும் சமயத்திலே மார்க்க சட்ட நிபுணர்கள் கூறுகின்றார்கள் நீங்கள் மஸ்ஜிதிலே சென்று அமர்ந்து கொள்ளுங்கள் என்பதாக கூறுகின்றார்கள் இது கேட்டு வியப்புற்ற அந்த பெண்மணி மஸ்ஜிதும் இந்த உலகத்தில் தானே இருக்கின்றது பிறகு எப்படி என்று கேட்கும் சமயத்திலே
 அதற்கு அழகாக பதில் அளிக்கின்றார்கள் இந்த உலகத்தில் மஸ்ஜிதுகள் என்பது உலகம் சார்ந்ததல்ல அழிக்கப்படக்கூடிய விஷயங்களில் இருந்து அப்பாற்பட்ட ஒன்றாக இருந்து கொண்டிருக்கின்றது மஸ்ஜிதுக்கும் அல்லாஹ்வுடைய அரசுக்கும் ஒரு நேரடியான தொடர்பு இருக்கின்றது என்பதாகில் விளக்கம் தருகின்றார்கள் மஸ்ஜித் என்பது உலகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதுதான் நமது இஸ்லாமிய கொள்கை கோட்பாடாக இருந்து கொண்டிருக்கின்றது.

வல்லோன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
இறையில்லங்களைப் பாதுகாப்பாக! இந்திய முஸ்லிம்களுக்கு இனிய வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025